Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் கடூழிய சிறை

Featured Replies

ஞனாசார தேரருக்கு எதிரான தீர்ப்பு இன்று

 

 

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாக கூறி, அவ­ருக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று மேன் முறை­யீட்டு நீதி­மன்­றினால் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது. 

ganasara.jpg

மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி பிரீத்தி பத்மன் சூர­சேன, அர்­ஜுன ஒபே­சே­கர ஆகியோர் முன்­னி­லையில் இந்த  தீர்ப்பு இன்று வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

இந் நிலையில் நேற்று திடீ­ரென சுக­வீ­ன­முற்ற பொது பலசேனா செய­லாளர் கல­கொட அத்தே ஞா­ன­சார தேரர், ஸ்ரீ ஜய­வர்­தனபுர வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­க­ளுக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

கல­கொட அத்தே ஞானசார தேர­ருக்கு இதற்கு முன்னர் சிறு­நீ­ரகப் பிரச்­சினை கார­ண­மாக இரு முறை சத்­திர சிகிச்சை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில்  ஏற்­பட்ட சுக­வீன நிலையைக் கருத்தில் கொண்டே அவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­ட­தா­கவும்  பொது பலசேனா அமைப்பு தெரி­வித்­தது.    நேற்று ஞான­சார தேர­ருக்கு வைத்­தி­ய­சா­லையில் பல பரி­சோ­த­னைகள்  முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் இன்று சத்­திர சிகிச்­சை­யொன்­றுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டலாம் என  வைத்­தி­ய­சாலை தகவல்கள் தெரி­வித்­தன.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 25 ஆம் திகதி ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணை­களின் இடைநடுவே கலகம் ஏற்­ப­டுத்தும் வண்ணம் நடந்­து­கொண்டு நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாக அப்­போது ஹோமா­கம பிர­தான நீதி­வானும் தற்­போ­தைய கொழும்பு பிர­தான நீதி­வா­னு­மா­கிய ரங்க திஸா­நா­யக்க ஊடாக  ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மேன்முறை­யீட்டு நீதி­மன்றில் முறை­யி­டப்பட்­டி­ருந்­தது.

இது தொடர்பில்  நீன்ட விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்த நிலையில் முறைப்­பாட்­டாளர் தரப்பு, பிர­தி­வாதி தரப்பு, சாட்சி விசா­ர­ணை­களும் தொகுப்­பு­ரை­களும் நிறை­வ­டைந்­துள்ள நிலை­யி­லேயே தீர்ப்பு இன்று அறி­விக்­கப்­படவுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/38037

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ரவுடித் தேரருக்கு மொத்தமா 19 வருசம். ஒன்றாக 6 வருசம் உள்ள போகணும் தீர்வை.

  • தொடங்கியவர்
ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் கடூழிய சிறை
 

image_3118978990.jpgநீதிமன்றத்தை அவமதித்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வண. கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு குற்றச்சாட்டுகளிலும், அவர் குற்றவாளியென, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (08) தீர்மானித்தது.

அதனடிப்படையில், அவருக்கு 6 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஞானசார-தேரருக்கு-6-வருடங்கள்-கடூழிய-சிறை/175-220043

 

 

 

ஞானசார தேரர் குற்றவாளி ; 6 வருட கடூழியச் சிறை - நீதிமன்றம் தீர்ப்பு

 

 

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளியாகக் கண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு 6 வருட கடூழியச்சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

sfwsf.jpg

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 4 குற்றப்பத்திரிகைகளுக்கும் அதாவது நீதிமன்றத்தை  அவமதித்தமை, சிரேஷ்ட சட்டவாதியை அவமதித்தமை, நீதிமன்ற கட்டளைக்கு அடிபணியாமை, சுயாதீன நீதிமன்ற கட்டமைப்புக்கு அழுத்தம் கொடுத்தமை போன்றவற்றில் குற்றமிழைத்திருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

அதன்படி அவருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

 

குறித்த வழக்கு விசாரணை இன்றையதினம் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணதிலக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. . 

 

அப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட நிலையில், அந்த வழக்கு விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் இன்று ஞானசாரருக்கு எதிரான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

ஞானசாரரை அழைத்து வர- மருத்துவமனைக்கு விரைந்துள்ள சிறை அதிகாரிகள்!!

 

 

bbs-4.jpg

 
 

பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 ஆண்டுகளில் அனுபவிக்கும் படி 19 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனினும் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட ஞானசார தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளி என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதேவேளை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை, உடனடியாக சிறைச்சாலை பொறுப்பில் எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்தத் தகவலை அறிவிக்க ஞானசார தேரர் சிகிச்சைபெறும் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனைக்கு நீதிமன்ற அதிகாரிகள் சிலர் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://newuthayan.com/story/13/ஞானசாரரை-அழைத்து-வர-மருத்துவமனைக்கு-விரைந்துள்ள-சிறை-அதிகாரிகள்.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Nathamuni said:

ரவுடித் தேரருக்கு மொத்தமா 19 வருசம். ஒன்றாக 6 வருசம் உள்ள போகணும் தீர்வை.

 

  • தொடங்கியவர்

நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு: ஞான­சார தேர­ருக்கு 19 வருட கடூ­ழிய சிறை

01MAIN08082018Page1Image0016-c4119af6f934088e5ff030a988094d01ac8e7e02.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)

- 6 வரு­டங்­களில் அனு­ப­விக்க உத்­த­ர­விட்­டது மேன்முறை­யீட்டு மன்றம்; ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெறும் அவரை உடன் பொறுப்­பேற்க வெலிக்­கடை சிறை அத்­தி­யட்­ச­ருக்கும் பணிப்பு -

 

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லா ளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாக கூறி தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில்,

அனைத்து குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் அவரை குற்­ற­வா­ளி­யாக கண்ட மேன்முறை­யீட்டு நீதி­மன்றம், 19 வருட சிறைத் தண்­டனை விதித்து நேற்று  தீர்ப்­ப­ளித்­தது.   

நீதி­மன்ற அவ­ம­திப்பு உள்­ளிட்ட நான்கு குற்­றங் கள் தொடர்பில் விதிக்­கப்­பட்ட இந்த 19 வருட சிறைத் தண்­ட­னையை 6 வரு­டங்­களில் அனு­ப­விக்க இதன்­போது மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ப்ரீத்தி பத்மன் சூர­சேன மற்றும் ஷிரான் குண­ரத்ன ஆகியோர் அடங்­கிய நீதி­ப­திகள் குழு கட்­ட­ளை­யிட்­டது.  

இந் நிலையில், குற்­ற­வா­ளி­யான ஞான­சார தேரர் சுக­வீனம் கார­ண­மாக ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர வைத்­தி­ய­சா­லையில் 5 ஆம் இலக்க சிகிச்சை அறையில் சிகிச்சைப் பெறு­வ­தாக அவ­ரது சட்­டத்­த­ரணி, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மனோ­கர டி சில்வா மன்­றுக்கு தெரி­யப்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து, உட­ன­டி­யாக அங்கு சென்று அவரை பொறுப்­பேற்­கு­மாறு வெலிக்­கடை சிறை அத்­தி­யட்­ச­ருக்கு மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ப்ரீத்தி பத்மன் சூர­சேன மற்றும் ஷிரான் குண­ரத்ன ஆகியோர் அடங்­கிய நீதி­ப­திகள் உத்­த­ர­விட்­டனர்.

2016 ஆம் ஆண்டு ஜன­வரி 25 ஆம் திகதி ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணை­களின் இடை நடுவே, கலகம் ஏற்­ப­டுத்தும் வண்ணம் நடந்­து­கொண்டு நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாக , அப்­போது ஹோமா­கம பிர­தான நீதி­வானும் தற்­போ­தைய கொழும்பு பிர­தான நீதி­வா­னு­மா­கிய ரங்க திஸா­நா­யக்க ஊடாக ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் முறை­யி­டப்­பட்­டி­ருந்­தது.

இது தொடர்பில் நீண்ட விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்த நிலையில், முறைப்­பாட்­டாளர் தரப்பு, பிர­தி­வாதி தரப்பு சாட்சி விசா­ர­ணை­களும் தொகுப்­பு­ரை­களும் நிறை­வ­டைந்த நிலையில் இது குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்­கப்­பட்­டது. இவ்­வ­ழக்கின் தீர்ப்பு வழங்­கப்­ப­டு­வ­தை­யொட்டி நேற்று புதுக்­கடை உயர் நீதி­மன்ற கட்­டிடத் தொகு­திக்கு விஷேட பொலிஸ் பாது­காப்பு அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பாலித்த பனாமல் தெனி­யவின் நேரடி கண்­கா­ணிப்பில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒரு­வரின் கீழ் இந்த விஷேட பாது­காப்பு ஒழுங்­குகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.

 முற்­பகல் 10.05 இற்கு இது குறித்த வழக்கு, தீர்ப்­புக்­காக விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போது, குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்த ஞான­சார தேரர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மனோ­கர டி சில்­வாவும் சட்ட மா அதிபர் சார்பில் அரசின் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரி­யவும் மன்றில் பிர­சன்­ன­மா­கினர்.

 இந் நிலையில் வழக்­கி­லக்கம் வாசிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ப்ரீத்தி பத்மன் சூர­சேன குற்றம் சாட்­டப்­பட்­டவர் முன்­னி­லை­யா­கா­ததை அவ­த­னைத்து அவர் எங்கே என வின­வினார்.

 இதன்­போது குற்றம் சட்­டப்­பட்ட கல­கொட அத்தே ஞான­சார தேரர், ஸ்ரீ ஜய­வர்­தன புர வைத்­தி­ய­சா­லையின் 5 ஆம் இலக்க சிகிச்சை அறையில் சிகிச்சை பெறு­வ­தா­கவும், சிறு­நீ­ரக பிரச்­சினை தொடர்பில் அவர் இவ்­வாறு சிகிச்சைப் பெறு­வ­தா­கவும் மருத்­துவ அறிக்­கையை சமர்ப்­பித்து ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மனோ­கர டி சில்வா நீதி­ப­திக்கு அறி­வித்தார். இந் நிலை­யி­லேயே குற்றம் சட்­டப்­பட்­டவர் இல்­லா­ம­லேயே, அவ­ருக்கு எதி­ரான தீர்ப்பு தலைமை நீதி­பதி ப்ரீத்தி பத்மன் சூர­சே­ன­வினால் வாசிக்­கப்­பட்­டது.

அதன்­படி நீதி­மன்ற அவ­ம­திப்பு விவ­கா­ரத்தை மையப்­ப­டுத்தி சட்ட மா அதி­பரால் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த நான்கு குற்றச் சாட்­டுக்­களும் சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­வித்த நீதி­பதி, கல­கொட அத்தே ஞான­சார தேரர் குற்­ற­வாளி என முதலில் அறி­வித்தார்.

 2016 ஆம் ஆண்டு ஜன­வரி 25 ஆம் திகதி அல்­லது அதனை அண்­மித்த நாளொன்றில் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்ற தனக்கு சம்­பந்­தமே இல்­லாத வழக்­கொன்றில் ஆஜ­ராகி நீதி­மன்றின் கெள­ரவம், சட்­டத்தின் ஆட்­சிக்கு சவால் விடுத்­தமை ஊடாக மன்றை அவ­ம­தித்­தமை, பீ 74/7/10 எனும் வழக்கு ( எக்­னெ­லி­கொட காணாமல் அக்­கப்­பட்­டமை குறித்த வழக்கு ) விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது, அதனை வழி­ந­டத்­திய அரச சிரேஷ்ட சட்­ட­வாதி திலீப பீரிஸை அசிங்­க­மான வார்த்தைப் பிர­யோ­கங்­களைப் பயன்­ப­டுத்தி திட்டி அவ­மா­னப்­ப­டுத்­தி­யமை, நீதி­மன்றின் கட்­ட­ளைக்கு செவி­சாய்க்­காமை, நீதி­மன்ற சுயா­தீன தன்­மைக்கு சவால் விடுத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்கள் அர­சி­ய­ல­மைப்பின் 105 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக சட்ட மா அதி­பரால் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த நான்கு குற்­றச்­சாட்­டுக்­க­ளுமே சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பிக்­கப்­பட்­ட­தாக மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் நேற்று அறி­வித்­தது.

 அதன்­படி முத­லா­வது, இரண்­டா­வது குற்­றங்கள் தொடர்பில் ஞான­சார தேர­ருக்கு தலா 4 வருட கடூ­ழிய சிறைத் தண்­ட­னை­யையும், 3 ஆம் குற்­றத்­துக்கு 6 வருட கடூ­ழிய சிறைத் தண்­ட­னை­யையும், 4 ஆம் குற்­றத்­துக்கு 5 வருட கடூ­ழிய சிறைத் தண்­ட­னை­யு­மாக மொத்தம் 19 வருட கடூ­ழிய சிறைத் தண்­டனை விதித்து நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது. அதனை 6 வரு­டங்­களில் அனு­ப­விக்­கவும் இதன்­போது நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

இந் நிலையில் நீதி­மன்றில் குற்­ற­வா­ளி­யான ஞான­சார தேரர் ஆஜ­ரா­காத நிலையில், அவர் வைத்­தி­ய­சா­லையில் உள்­ளதை காரணம் காட்­டியும், அவர் தீர்ப்­புக்கு எதி­ராக மேன் முறை­யீடு செய்­ய­வுள்­ளதை காரணம் காட்­டியும், தண்­டனை அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வதை தள்ளி வைக்­கு­மாறு ஞான­சார தேரரின் சட்­டத்­த­ரணி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மனோ­கர டி சில்வா நீதி­மன்றை கோரினார். எனினும் அந்த கோரிக்­கையை மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் முழு­மை­யாக நிரா­க­ரித்­த­துடன், உட­ன­டி­யாக ஸ்ரீ ஜய­வர்­தன புர வைத்­தி­ய­சா­லைக்கு சென்று ஞான­சார தேரரை சிறைச்­சாலை அதி­கா­ரிகள் பொறுப்­பேற்க வேண்­டு­மென வெலிக்­கடை சிறை அத்­தி­யட்­ச­ருக்கு மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் கட்­ட­ளை­யிட்­டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 25 ஆம் திகதி ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­ன­லி­கொட காணாமல் ஆக்­கப்­பட்­டமை குறித்த வழக்கு நீதி­மன்­றத்தில் நடந்­த­போது, ஞான­சார தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்­றுக்குள் அத்து மீறி­யி­ருந்தார். இதன் போது நீதி­மன்ற வளா­கத்தில் வைத்து பிரசாத் எக்­ன­லி­கொ­டவின் மனை­வியை அச்­சு­றுத்­தி­ய­தாக ஞான­சார தேரர் மீது பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. இத­னை­விட அன்­றைய தினம் பெரும் தொகை­யான பிக்­கு­க­ளுடன் ஞான­சார தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் உள் நுழைந்து நீதிவான் ரங்க திசா­நா­யக்­கவை நோக்கி விரல் நீட்டி இரா­ணு­வத்­தி­னரை பழி தீர்க்கும் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தாக தனது குரலை உயர்த்தி அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்தார்.

இதனால் அன்றை தினம் முழு­வதும் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றின் நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து நீதி­மன்றை அவ­ம­தித்­தமை, அரச அதி­கா­ரியின் கட­மைக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­யமை மற்றும் குறித்த வழக்கின் சாட்­சி­யா­ள­ரான எக்­னெ­லி­கொ­டவின் மனை­விக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் அவரை கைது செய்­யு­மாறு ஹோமா­கம நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இந் நிலையில் ஞான­சார தேரர், 2016 ஜன­வரி 26 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­ட­துடன் அவர் மீது குறித்த மூன்று குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் தனித்­த­னி­யாக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. இதில் நீதி­மன்றை அவ­ம­தித்­தமை தொடர்­பி­லான வழக்கு அப்­போ­தைய ஹோமா­கம நீதி­வானும் தற்­போது கொழும்பு மேல­திக நீதி­வா­னு­மா­கிய ரங்க திசா­நா­யக்­க­வினால் விசா­ர­ணைக்­காக மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டது.

இதன் போது குறித்த வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வதை தவிர்க்க மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் ஞான­சார தேரர் சார்பில் அடிப்­படை ஆட்­சே­ப­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த போதும் நீதி­மன்றம் அதனை நிரா­க­ரித்து வழக்கை விசா­ரணை செய்­தது. இவ்­வ­ழக்கில் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய ஆஜ­ரா­கி­யி­ருந்தார். ஞான­சார தேரரின் சார்பில் சட்­டத்­த­ர­ணி­யான மனோ­கர டி சில்வா வழக்கில் முன்­னி­லை­ய­கை­யி­ருந்தார்.

 இந் நிலை­யி­லேயே இதன் அனைத்து சாட்சி விசா­ர­ணை­களும் நிறைவு செய்­யப்­பட்டு நேற்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

முன்­ன­தாக இந்த நீதி­மன்ற அவ­ம­திப்பு சம்­ப­வத்­துடன் இணைந்­த­தாக நடந்த கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­டுள்ள ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம பிரதான நீதிவான் உதேஷ் ரணதுங்க, கடந்த ஜூன் 14 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தார்.

அத்தண்டனையை 6 மாதங்களில் அனுபவிக்க அவர் உத்தரவிட்டிருந்தார். அத்துடன் 3000 ரூபா அபராதமும்,அச்சுறுத்தப்பட்ட சந்யா எக்னெலிகொடவுக்கு 50 ஆயிரம் ரூபா நட்ட ஈடு செலுத்தவும் உத்தரவிட்ட நீதிவான், அபராதம் செலுத்தாமல் இருப்பின் மேலும் மூன்று மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் நட்ட ஈடு வழங்கப்படாது விடின் அத்தொகையை அபராதமாக அறவிடவும் அப்படி அபராதமாகவும் அத்தொகையை அவர் செலுத்த தவறினால் அது தொடர்பிலும் மூன்று மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் எச்சரித்தார். இது தொடர்பில் ஞானசார தேரர் மேன் முறையீடு செய்துள்ள நிலையில், அதில் அவர் பிணையில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-09#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.