Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேரள பேரழிவில் 370 பேர் பலி 700 க்கும் அதிகமானோர் மாயம்

Featured Replies

கேரள பேரழிவில் 370 பேர் பலி 700 க்கும் அதிகமானோர் மாயம்

10-3ba6593d3b1ebabb8481e22593bf01af0ff66b12.jpg

 

கேரள மாநி­லத்தில் பெய்து வரும் கன­ மழை கார­ண­மாக ஏற்­பட்ட நிலச்­ச­ரி­வுகள் மற்றும் வெள்­ளப்­பெ­ருக்கில் சிக்கி இது­வரை 370க்கும் மேற்­பட்டோர் உயி­ரி­ழந்­துள்­ள­தோடு நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் காணாமல் போயுள்­ளனர். முப்­ப­டை­யினர் அங்கு தொடர்ந்து  மீட்பு பணி­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.    

கட­வுளின் சொந்த நாடு என்று கரு­தப்­பட்டு வந்த கேரள மாநிலம், தற்­போது வர­லாறு காணாத மழை வெள்­ளத்தால் தத்­த­ளித்து வரு­கி­றது. ஏறத்­தாழ 100 ஆண்­டு­களில் பெய்­யாத மழை இப்­போது பெய்­துள்­ள­தோடு இந்­திய மதிப்பில் சுமார் ரூ.19 ஆயி­ரத்து 500 கோடி அள­வுக்கு சேதங்கள் ஏற்­பட்டு உள்­ள­தாக தக­வல்கள் கூறு­கின்­றன.

கடந்த ஒரு வாரத்­துக்கும் மேலாக கேர­ளாவில் பெய்து வரும் கன­மழை கார­ண­மாக 14 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் நேற்று 10 மாவட்­டங்­க­ளுக்கு ஆரஞ்சு எச்­ச­ரிக்­கையும் 2 மாவட்­டங்­க­ளுக்கு மஞ்சல் எச்­ச­ரிக்­கையும் விடுக்­கப்­பட்­டுள்­ளது. அங்கு பாரிய அளவில் பொருட் சேதம், உயிர்ச்­சேதம் என்­பன தொடர்ந்து நடை­பெற்று வரு­வ­தோடு முழு கேர­ளாவும் நீரில் மூழ்­கி­யுள்­ளது.

இவ் பேர­ழி­வினால் நேற்று மதியம் வரை 370 க்கும் அதி­க­மானோர் பலி­யாகி உள்­ளனர். 700க்கும் அதி­க­மானோர் காணாமல் போய் இருக்­கி­றார்கள். 1 இலட்சம் பேர் இருப்­பி­டங்­களை இழந்து முகாம்­களில் தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர். 2 கோடிக்கும் அதி­க­மானோர் வெள்­ளத்தில் சிக்கி தவித்து வரு­கி­றார்கள். அவர்கள் உணவு, குடி­நீ­ரின்றி பல்­வேறு இடங்­களில் நீரில் தத்­த­ளித்து வரு­வ­தா­கவும், உத­விக்­காகக் காத்­தி­ருப்­ப­தா­கவும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. செயற்கை கோள்கள் மூலம் மாய­மான மக்­களை தேடும் பணி­களும் தொட­ரு­கின்­றன. இந் நிலையில் கேர­ளாவில் மழை படிப்­ப­டி­யாக குறையும் என்று கூறப்­பட்­டுள்­ளது. இதனால் காணாமல் போன­வர்­களை மீட்கும் பணி தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. முப்­ப­டை­யினர் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடு­பட்டு வரு­கின்­றனர். வேறு மாநி­லங்­களில் இருந்து உணவு, குடிநீர் என்­பன விமா­னங்கள் மற்றும் கப்பல்கள் மூலமாக கேரளாவுக்கு கொண்டுவரப்படுகிறது. மத்திய மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் கேரளாவுக்கு தொடர்ந்து நிதி உள்ளிட்ட நிவாரண உதவிகளை செய்து வருகின்றன.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-20#page-1

  • தொடங்கியவர்

கேரள வெள்ளம்: கொச்சி கடற்படை விமான தளத்தில் வந்திறங்கும் உள்நாட்டு விமானங்கள்

கொச்சி விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கொச்சிக்கு வரும் உள்நாட்டு விமானங்கள் கொச்சியிலுள்ள ஐஎன்எஸ் கருடா கப்பற்படை விமான தளத்தில் வந்திறங்க ஆரம்பித்துள்ளது.

விமானம்படத்தின் காப்புரிமைHTTPS://TWITTER.COM/INDIANNAVY

இது குறித்து இந்திய கப்பற்படையின் செய்தித்தொடர்பாளருக்கான ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த பத்து நாட்களாக பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த வெள்ளத்தில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அதன் சுற்றுசுவர்கள் உடைந்து தண்ணீர் வெளியேறும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்டு 22ஆம் தேதி வரை கொச்சி சர்வதேச விமான நிலையம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொச்சி விமான நிலையத்தில் வெள்ள நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், விமான நிலையத்தின் ஓடுபாதை, வாகனங்கள் செல்லும் பாதை போன்ற பகுதிகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், கொச்சி விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை வரும் 26ஆம் தேதி மதியம் இரண்டு மணிவரை செயல்படாது என்று அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் வெள்ளம்: "ஆகஸ்டு 26 வரை கொச்சி விமான நிலையம் செயல்படாது"படத்தின் காப்புரிமைNDRF OFFICIALS

தற்போதைய நிலவரம் என்ன?

பருவமழை பெய்வது குறைந்துள்ளதால், வெள்ளப்பெருக்கால் பெரும் பாதிப்புக்குள்ளான கேரளாவில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மீட்புபணிபடத்தின் காப்புரிமைNDRF OFFICIALS

இன்னும் சில பகுதிகளில் வெள்ளம் காணப்பட்டாலும், இந்திய வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கையை விலக்கியுள்ளது,

வீடுகளின் கூரைகளில் தங்கியிருக்கும் மக்களை இந்திய விமானப்படை ஹெலிகாப்படர் மூலம் தூக்கி மீட்டு வருகின்றன. சென்றடைய முடியாத இடங்களில் உணவுப் பொருட்களை வானில் இருந்து போட்டு வருகின்றனர்.

350க்கு மேலானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோரை இன்னும் சென்றடைய முடியாத நிலை காணப்படுகிறது.

செங்கனூரில் 5 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதால் அதிக மீட்புப் ணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்குள்ள நிலைமையை தொலைக்காட்சியில் விவரித்த உள்ளூர் எம்.எல்.ஏ. சாஜி செரியன் மனம் உடைந்து அழுதார்.

கேரளா வெள்ளம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகொச்சியில் வெள்ளம் நிறைந்த பகுதி ஒன்றில் விமானம் மூலம் மீட்கப்படும் சிறுவர் .

இந்த மீட்பு பணிகளுக்கு தங்களின் படகுகளை மீனவர்கள் தந்து உதவி வருவதாக தற்போது கேரளாவிலுள்ள பிபிசியின் யோகிதா லிமாயே தெரிவித்திருக்கிறார்.

கடந்த 10 நாட்களுக்கும் மேல் கொச்சியில் மிகக்கடுமையாக இருந்த மழைப்பொழிவு குறைந்துள்ளது.

இடுக்கி, திருச்சூர், கண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

https://www.bbc.com/tamil/india-45249039

  • தொடங்கியவர்

வெள்ளத்தில் மூழ்கிய தாய் மண்... கேரள மக்களுக்காக ரூ.50 கோடியை வாரிவழங்கிய அபுதாபி பில்லினியர்

 

கனமழையால் உருக்குலைந்துள்ள கேரளாவுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 50 கோடி கொடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர். கேரள நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் தனி பங்களிப்பு இவருடையதுதான்.

ஷம்சீர்
 

அபுதாபியில் இயங்கிவரும் பிரபல வி.பி.எஸ் ஹெல்த் கேர் என்னும் பெரு நிறுவனத்தின் சேர்மன் ஷம்சீர் வயாலில் (Shamsheer Vayalil). கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட இவர், அபுதாபியில் பெரும் பணக்காரர்களில் ஒருவர். இவரின் சொத்து மதிப்பு 1.7 பில்லியன் டாலர். தன் தாய்மண்ணில் மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உடைமைகளை இழந்து தவிப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஷம்சீர், நிவாரண நிதியாக ரூபாய் 50 கோடி கொடுத்துள்ளார். நிவாரண நிதி கொடுத்தது மட்டுமன்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீட்டெடுக்கத் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார். கேரள மக்களின் தற்போதைய தேவை வீட்டு வசதி, சுகாதாரம் மற்றும் கல்வி தான். இவை மூன்றையும் அவர்களுக்கு மீட்டுத் தர என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் என்று ஷம்சீர் தெரிவித்துள்ளார். 

 

 

ஷம்சீர்
 

ஷம்சீர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், `கேரளாவுக்கு இது மிகவும் கடினமான தருணம். கடந்த ஒரு மாதமாகவே மழையில் தத்தளித்து வருகிறது. கேரள மக்கள் அனைவரும் தங்கள் உடைமைகள் அனைத்தும் இழந்து நிற்கின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டியது நம் கடமை. ஓணம், பக்ரீத் என கேரள மக்களுக்கு எந்தக் கொண்டாட்டமும் இந்தாண்டு இல்லை. துவண்டு போயுள்ள அவர்களை கைகொடுத்து தூக்குவது நம் அனைவரின் கடமை. 

 

 

துயரத்தில் ஆழ்ந்துள்ள கேரளாவுக்காக 50 கோடி ரூபாய் வழங்க உள்ளேன். ரூ.50 கோடி மக்களின் அடிப்படைத் தேவைகளான வீட்டு வசதி, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்காகச் செலவழிக்கப்படும். மக்களுக்கு நிவாரண நிதி சரியாக சென்று சேருவதை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளேன். அவர்கள் என் செயற்திட்டத்தைச் செயல்படுத்துவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

https://www.vikatan.com/news/india/134647-nri-billionaire-donates-rs-50-crore-to-kerala-floods.html

கேரளாவுக்கு ரூ.700 கோடி வழங்கியது ஐக்கிய அரபு எமிரேட்! - பினராயி விஜயன் உருக்கம்

 

கேரள மாநிலத்தின் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து ஆலோசிக்க வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

அரபு எமிரேட்ஸ்
 

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய கனமழை இரண்டு வாரங்களுக்கு மேலாகப் பெய்து மாநிலத்தை வெள்ளக் காடாக மாற்றியது. தற்போது மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் வரும் 25-ம் தேதி வரை லேசான மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை குறைந்துள்ளதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் தங்கள் வீடுகளைப் பார்க்கச் செல்கின்றனர். வீடுகளில் தேங்கியிருக்கும் மழை நீர் சற்று வடியத் தொடங்கியுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய வீடுகள்தான் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக பினராயி விஜயன் அறிவித்தார். வரலாறு காணாத இந்த சேதத்தால், கேரள கனமழையை தீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. 

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன்,  `மீட்பு நடவடிக்கை, மறு சீரமைப்புப் பணிகள், நிவாரணம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டம் கூட்ட ஆளுநருக்கும் பரிந்துரை செய்துள்ளேன்’ என்று தெரிவித்தார். மேலும், ஐக்கிய அரபு எமிரேட் அளித்த நிவாரண நிதி குறித்துப் பேசிய பினராயி,  `வெள்ள பாதிப்புகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட் ரூ.700 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

முன்னர், ஐக்கிய அரபு எமிரேட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மேக்தம் கேரள வெள்ளம் குறித்து பகிர்ந்த ட்விட்டர் பதிவில்,  `ஐக்கிய அரபு நாடுகளின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு கேரள மக்களின் பங்கு அதிகம். தற்போது வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவுக்கு சிறப்பு உதவி செய்வது மிக அவசியம்’ என குறிப்பிட்டிருந்தார். 

கேரளாவுக்காக ஐக்கிய அரபு எமிரேட் அரசு மட்டுமன்றி  அங்கு வசிக்கும் தொழிலதிபர்களும் தொடர்ந்து நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். #UAEStandsWithKerala  என்னும் ஹேஷ்டாக்கின் கீழ் ஐக்கிய அரபு எமிரேட் வாழ் இந்தியர்களுக்கு கேரள மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

https://www.vikatan.com/news/world/134654-uae-to-donate-rs-700-crore-for-kerala.html

  • தொடங்கியவர்

கேரளாவுக்கு ரூ.2600 கோடி சிறப்பு நிதித் தொகுப்பு தேவை: மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கோரிக்கை

 
pinarayi-1

கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில ஊடகங்களுக்கு பேட்டி அளித்த காட்சி

கேரள மாநிலத்தில் பெய்த பெருமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 223 பேர் பலியாகியுள்ளனர், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகள், உடைமைகளை இழந்துள்ளனர். ஆதலால், மத்திய அரசிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 600 கோடி சிறப்பு நிதித் தொகுப்பு தேவை என்று முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த 10 நாட்களாக மழை கொட்டித் தீர்த்தது. 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி இதுவரை 223க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், ஏராளமானோரைக் காணவில்லை. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடு, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

மாநிலத்தில் மீட்புப் பணியில் முப்படை வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்பு படையினர், மீனவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர். இருந்தும் பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் இருப்பதால், மீட்புப் பணியில் சிக்கல் நீடிக்கிறது. இதற்கிடையே பல்வேறு மாநிலங்களில் இருந்து நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநிலத்தின் வெள்ளச்சேதம், அடுத்து செய்யவேண்டிய புனரமைப்பு, கட்டமைப்புப் பணிகள் குறித்து ஆலோசிக்க இன்று கேரள அமைச்சரவை கூட்டம் நடந்தது.

அந்தக் கூட்டத்துக்குப் பின், முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

மாநிலத்தில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளத்தால் இதுவரை ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. 224-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கிறார்கள்.

13 மாவட்டங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை இழந்துள்ளனர், அடிப்படைக் கட்டமைப்புகள் சிதைந்துள்ளன. மற்ற மாநில அரசுகள், தனிநபர்கள், குழந்தைகள், நிறுவனங்கள் என நிதியுதவி அளித்து வருகின்றன. மாநிலம் சுயமாக ரூ.10 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு நிதி திரட்ட முடியும்.

மாநிலத்தின் வெள்ளச் சேதங்களை இரு மத்திய அமைச்சர்களும், பிரதமரும் பார்வையிட்ட பின் ரூ. 680 கோடி நிதி உதவி அறிவித்துள்ளனர். ஆனால், இந்த நிதி போதாது. சிறப்பு நிதித்தொகுப்பாக மாநிலத்தின் கட்டமைப்புப் பணிக்காக ரூ.2,600 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.

மாநிலத்தின் மறுகட்டமைப்புப் பணிக்காக ஐக்கிய அமீரக நாடு ரூ.700 கோடியை அளிப்பதாக உறுதியளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜயத் அல் நாஹ்யன் பிரதமர் மோடியிடம் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.

மேலும், கேரள மாநிலத்தில் மக்கள் பெற்றுள்ள வேளாண் கடனை ஒரு ஆண்டுக்குப் பின் மீண்டும் செலுத்துமாறு வங்கிக்கூட்டமைப்பு குழு முடிவு செய்துள்ளது.

மாநிலம் முழுவதும் 3,200 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10.78 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள். 2.12 லட்சம் பெண்கள் உள்ளனர்.

மழையின் வேகம் கடந்த 2 நாட்களாக படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனால், எர்ணாகுளம், திருச்சூர், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கொல்லம் மாவட்டங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. வீடுகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.

ரயில்வே சேவை பெரும்பாலான இடங்களில் தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், வீடுகளில் இருக்கும் கழிவுகளையும், சேறுகளையும் அகற்றி மீண்டும் மக்கள் குடியேறுவது என்பது மிகப்பெரிய சவாலான பணியாக இருக்கிறது.

நூற்றாண்டிலேயே இல்லாத மழையால் ஏற்பட்ட சேதங்கள், பாதிப்புகள், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வரும் 30-ம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக்கூட்ட ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/india/article24745025.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

  • கருத்துக்கள உறவுகள்

 

யார் சொன்னது பி ஜே பி யை சேர்ந்தவர்கள் கேரளாவுக்கு உதவி செய்ய வில்லை என்று ? அவர்களுக்கு தெரியும் எப்போது எதை கொடுப்பது என்று

 

கேரள வெள்ள பாதிப்பில் உள்ள மக்களுக்கு காலாவதியான ஜூஸ் பொருட்கள் வழங்கிய பதாஞ்சலி நிறுவனம் 1f620.png

 

 

  • தொடங்கியவர்

கேரள பேரழிவை உலகம் முழுக்க கொண்டு சென்ற இசைப்புயல்

AR-Rahuman.png?resize=800%2C419
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள பேரழிவை உலகம் முழுக்க கொண்டு சென்றுள்ளார். கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 368 பேர் உயிர் இழந்துள்ளதுடன் அதிகமானோரைக் காணவில்லை என்பதுடன் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

வெள்ளப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், உலகம் முழுவதும் இருந்து உதவிகள் கிடைக்கப்பெற்று வருகின்ற போதிலும் மேலதிக உதவிகள் தேவைப்படுகின்றன.இந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்திவரும் ஏ.ஆர்.ரகுமான், லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘முஸ்தபா… முஸ்தபா…’ என்ற பாடலைப் பாடிய அவர் அந்தப் பாடலை முடிக்கும்போது, ‘கேரளா… கேரளா… டோண்ட் வொரி கேரளா… காலம் நம் தோழன் கேரளா…’ என பாடியுள்ளார்.

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில் இதன்மூலம் உலக அளவில் கேரளாவின் துயரம் கொண்டு செல்லப்பட்டு உதவிகள் பெருமளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

AR-Rahuman-2.png?resize=480%2C464AR-Rahuman-6.jpg?resize=800%2C417

http://globaltamilnews.net/2018/92235/

  • தொடங்கியவர்

நிவாரண முகாமை சுத்தம் செய்துவிட்டு வெளியேறிய மக்கள்!

 

43510-720x450.jpg

கேரளாவில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேறும் போது அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ளனர்.

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அந்த மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் கேரளாவிற்கு சர்வதேச அளவிலிருந்து தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மீட்பு பணிகளில் மீன் விற்று கல்லூரி சென்ற பெண் ஒரு லட்சம் ரூபா நிதி உதவி தொகையினை வழங்கியது, அமைச்சர்கள் பலர் களத்தில் இறங்கி உதவி செய்து வருவது என பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் தினந்தோறும் நடந்தேறி வருகின்றது.

அந்த வகையில் கேரளாவின் கொங்கரிபிள்ளி அரசு பள்ளியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டவர்கள், அங்கிருந்து வெளியேறும் போது அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு வந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

http://athavannews.com/நிவாரண-முகாமை-சுத்தம்-செ/

  • தொடங்கியவர்

''வருங்காலத்தில் கேரளா தொடர்ந்து பேரிடர்களை சந்திக்கும்'' - சூழலியலாளர் சுகதாகுமாரி

பிரமிளா கிருஷ்ணன்பிபிசி தமிழ்
''வரும்காலங்களில் கேரளா தொடர்ந்து பேரழிவுகளை சந்திக்கும்'' சுற்றுச்சூழல்வாதி சுகதாகுமாரிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

''பிரகிருதி திருச்சடிக்கும்''(இயற்கை திருப்பியடிக்கும்) இரண்டே வார்த்தைகளில் கேராளா வெள்ளம் பற்றி பட்டென பதில் தருகிறார் பிரபல கேரள கவிஞர் மற்றும் சூழலியலாளர் சுகதாகுமாரி(84).

1980-களில் கேரளாவின் முக்கிய காடான அமைதி பள்ளத்தாக்கில் (silent valley) புனல்மின் நிலையம் அமைப்பதற்கு எதிராக சுகதாகுமாரி எழுதிய 'மரத்தின் சுதுதி' என்ற கவிதை போரட்ட கீதமாக உருவெடுத்தது.

கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக கவிதைகள் வாயிலாகவும், அறப் போரட்டங்கள் வாயிலாகவும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீவிரமாக பேசிவரும் சுகதாகுமாரி, வரும் காலங்களிலும் கேரளா இது போன்று தொடர்ந்து பேரழிவுகளை சந்திக்கும் என்கிறார்.

இந்தியாவின் தென்பகுதியில் உள்ள இந்த சிறிய மாநிலம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாது என நம்பிக்கை குறைந்தவராக பேசுகிறார்.

இயற்கையின் சமநிலையை குலைத்துவிட்டோம்

''கேரளாவில் உள்ள ஒவ்வொரு ஆறும், மலையும் நாசமாகிவிட்டபின் இந்த நாடு எப்படி கடவுளின் சொந்த நாடாக இருக்கும் என்று கேள்விஎழுப்புகிறார் அவர். இடுக்கி மலையில் பாருங்கள். மலைகள் மீது பெரிய வீடுகள், கேளிக்கை விடுதிகள் கட்டப்பட்டது. தற்போது மலையின் ஒரு பகுதியே நிலச்சரிவில் அழிந்துவிட்டது. இதை எப்படி சரி செய்வீர்கள்? இந்த சிறிய மாநிலத்தில் எத்தனை இயற்கை வளம் நசிந்துபோனது? 44 நதிகள் இங்குள்ளன. பல நதிகள் ஆலைக்கழிவு, வீட்டுக்கழிவுகளை சுமந்து, நோய்வாய்ப்பட்டுப்போனது. முடிந்தமட்டும் மணலை தோண்டி நதிகளின் ரத்தநாளங்களை துண்டித்தாகிவிட்டது. இதை சரிசெய்ய முடியுமா?,'' என்று அடுக்கடுக்காக கேள்விகளை வைக்கிறார்.

சுகதாகுமாரி Image captionசுகதாகுமாரி

''பல ஆண்டுகளாக நாம் மிகவும் கொடுத்துவைத்தவர்களாக இருந்தோம். இதுவரை இதுபோல வெள்ளம், நிலநடுக்கம், மதச்சண்டைகள், போர் என எதுவுமற்ற அமைதியான மாநிலமாக கேராளா இருந்து வந்தது. அதனால்தான் அது கடவுளின் சொந்த தேசமாக இருந்தது. தற்போது எல்லாமே மாறிவருகிறது. இயற்கையின் சமநிலையை நாம் குலைத்துவிட்டதால் நாம் நிலைகுலைந்து நிற்கிறோம்,'' என்றார்.

வடநாட்டில் ஏற்பட்டது போல பட்டினிச்சாவுகள் கேரளாவில் நடக்கவில்லை. வறட்சி ஏற்படவில்லை. ஆனால் ஆடம்பரமாக வாழவிரும்புகிற காரணத்தால் கேரளா மக்கள் தங்களுக்கான சவக்குழிகளை அவர்களே வெட்டிக்கொள்கிறார்கள் என்கிறார் சுகதாகுமாரி.

இயற்கை அன்னை காளியாக மாறிவிட்டாள்

''இயற்கை நமக்கு உயிர்கொடுத்தாள். அவள் அன்னை. ஆனால் தொடர்ந்து நாம் சுயநலம் மிக்கவர்களாக, அவளுக்கு ஆலைக்கழிவுகளைக் கொண்டு நஞ்சூட்டி, நதிகளை பாழ்படுத்தி, அவளது உடலை துண்டாடி நாசப்படுத்தும்போது அவள் மகாகாளியாக மாறி நம் உயிரை எடுத்துச்செல்கிறாள். வெள்ளம் வரும்போது சதுப்புநிலக்காடுகள் மற்றும் நெல்வயல்கள் மட்டுமே அந்த நீரை உள்வாங்கிக்கொள்ளும் திறன் கொண்டவை. தற்போது அந்த நிலங்களில் வீடுகளும்,வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டிடங்கள், ஷாப்பிங் மால்கள், எஸ்டேட்களும் அமைத்துவிட்டதால், இயற்கை பாழானது.''என்கிறார்.

''வரும்காலங்களில் கேரளா தொடர்ந்து பேரழிவுகளை சந்திக்கும்'' சுற்றுச்சூழல்வாதி சுகதாகுமாரிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கேரளாவுக்கு கிடைத்த தண்டனையாக மட்டும் இதைப்பார்க்காமல் ஒவ்வொருவரும் செய்த பிழையை நினைத்துபார்க்கவேண்டும் என்று கூறும் அவர், ''இந்த அழிவை நாம் சந்தித்திருக்கிறோம். தற்போது வந்த வெள்ளம் வெறும் மழை அல்ல. மலைப்பகுதி, இடை நாடு, கடல் நாடு என்ற மூன்று விதமான நிலப்பகுதிகளாக அமைந்துள்ள இந்த சிறிய நிலப்பகுதிகள் பெரும்பாலும் நகரங்களாக மாறிவிட்டதால், இதுவரை பாய்ந்துவந்த நதியின் தடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. குறைந்தபட்சம் வெள்ள நீர் வடிவதற்காவது நாம் இடம் அளித்திருக்கவேண்டும்,'' என்கிறார்.

சுவடில்லாமல் காணமல் போன இடங்கள்

கேரளாவில் தான் பிறந்துவளர்ந்த பல இடங்கள் தற்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டன என்று கூறும் சுகதாகுமாரி, ''நெய்யார் நதியில் என் சகோதரிகளுடன் விளையாடிய கரையோரம் இன்று இல்லை. தற்போது ராணுவம் வந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும்நிலை ஏற்பட்டுவிட்டது. எர்ணாகுளம் மாவட்டம் முழுவதுமே நசிந்துவிட்டது. தற்போது இது தொழில் நகரமாகிவிட்டது. நதிகளை மாசுபடுத்திவிட்டு குடிநீருக்கு தவிக்கிறோம். ராஜீவ் காந்தி பிரதமாராக இருந்த காலத்தில், ஆரன் முல்லாவில் விமான நிலையம் அமைவதாக இருந்தது. உச்சநீதிமன்றம் சென்று போராடி நிறுத்தினோம். கணக்கில்லாமல் பல இடங்களில் மலைகள், நீர் ஊற்றுகள், காடுகள், ஓடைகள் இருந்த சுவடே இல்லை.''

''வரும்காலங்களில் கேரளா தொடர்ந்து பேரழிவுகளை சந்திக்கும்'' சுற்றுச்சூழல்வாதி சுகதாகுமாரிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தற்போது ஏற்பட்ட வெள்ளம் 1924ல் ஏற்பட்ட வெள்ளம் போன்றது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வெள்ளம் 1924ல் ஏற்பட்ட வெள்ளத்தோடு ஒப்பீடு செய்யகூடாத ஒன்று என்கிறார் சுகதாகுமாரி. ''அப்போது இத்தனை கட்டிடங்கள் இல்லை.அணைகள் இல்லை. வெள்ளம் முடிந்தவரையில் அதன் போக்கில் சென்று கடலை அடைந்தது. தற்போது எல்லா ஆக்கிரமிப்புகளும் வெள்ளதில் அடித்துச்செல்லப்பட்டன. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்று இருந்த நிலைமையை விட தற்போதைய நிலைமை மோசமடைந்துள்ளது,'' என்கிறார்.

கேரளா தற்போது சந்தித்துள்ள பேரிடரில் இருந்து மீண்டு வந்தாலும், இயற்கையை பாதுகாக்க மறந்தால் மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து சந்தித்துக்கொண்டே இருக்கும் என்று ஆதங்கத்தில் பேசினார். அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு இடப்பக்கம் மாட்டிவைத்திருக்கும் அமைதிப் பள்ளத்தாகின் பெரிய புகைப்படம் காற்றில் அசைந்தபடி இருந்தது.

பெருமூச்சோடு அவரது கவிதையை நமக்கு வாசித்துக்காட்டினார். ஆகஸ்ட் மாத வெள்ளத்தில் கேரளா மக்களுக்கு நேர்ந்த அவலத்தை அது பேசியது.

https://www.bbc.com/tamil/india-45261753

  • தொடங்கியவர்

கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி ஏற்கப்படுமா? - முடிவெடுக்கவில்லை மத்திய அரசு

 

 

 
20alsam2--ChengGIH4IBQ403jpgjpgjpg

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செங்கனூர் பகுதி

கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்பையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ள நிலையில், அதனை ஏற்க மத்திய அரசின் அனுமதி தேவை. இந்த விஷயத்தில் மத்திய அரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 
 

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 67 ஹெலிகாப்டர்கள், 24 சரக்கு விமானங்கள், 548 மோட்டார் படகு கள் மீட்புப் பணியில் பயன்படுத்தப் படுகின்றன. மத்திய அரசு ரூ.600 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது. பல மாநிலங்களும் நிதியுதவி அளித்துள்ளன.

மாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 8 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் 8 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 8,000 வீடுகள் இடிந்துள்ளன. 26,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 40,000 ஹெக்டேர் பயிர்கள் அழுகியுள்ளன. 134 பாலங்கள் இடிந்துள்ளன. 16,000 கி.மீ. சாலைகள் சேதமடைந்துள்ளன. ரூ.21,000 கோடிக்கும் அதிகமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு தரப்பினரும், நிவாரணப் பொருட்கள், நிதியுதவி செய்து வருகின்றனர். மத்திய அரசின் சார்பில் 600 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் செய்ய முன் வந்துள்ளது.

இதனை அந்நாட்டு துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷித் உறுதிப்படுத்தியுள்ளார். ஐக்கிய அரசு அமீரகத்தில் ஏராளமான கேரள மக்கள் பணி புரிந்து வருவதால் அவர்களின் துயரில் பங்கு கொள்வதாக அவர் தெரிவித்து இருந்தார்.

ஆனால் இந்த நிதியுதவியை கேரள அரசு தானாக பெற முடியாது. வெளிநாடுகளில் இருந்து யார் நிதி பெற வேண்டும் என்றாலும், வெளியுறவு அமைச்சகத்தின் முறையான அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமின்றி வெளிநாடுகள் சார்பில் அளிக்கப்படும் இதுபோன்ற நிதியை பெறுவதற்கு மத்திய அரசு கொள்கை முடிவு எடுப்பது மிகவும் அவசியம்.

மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே கேரள அரசால் இந்த நிதியை பெற்றுக் கொள்ள முடியும்.இதற்கு முன்பு இயற்கை பேரிடர் நடந்தபோது பல சமயங்களில் வெளிநாடுகள் நிதி அளிக்க முன் வந்தன. அப்போது மத்திய அரசு அதனை ஏற்க மறுப்பு தெரிவித்தது.

2004-ம் ஆண்டு சுனாமி பாதிப்பு ஏற்பட்டபோது அமெரிக்க நிதியுதவி அளிக்க முன்வந்தது. அப்போதைய மத்திய அரசு அதனை ஏற்க மறுத்ததாக அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ரோன் சென் குறிப்பிடுகிறார். எந்த ஒரு பேரிடரையும் எதிர்கொண்டு சமாளிக்கும் நிலைமை இந்தியாவுக்கு இருப்பதால் வெளிநாட்டு நிதி தேவையில்லை என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

ஆனால் தேவையை கருதி சில சமயங்களில் வெளிநாட்டு நிதி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சியாம் சரண் கூறுகையில் ‘‘வெளிநாடுகளில் இருந்து பேரிடர் காலங்களில் நிதி பெறுவதற்கு என தனியாக விதிமுறைகள் ஏதும் இல்லை. எனினும் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் கிடைத்தால் நிதியை பெற்றுக் கொள்ளலாம்’’ எனக் கூறியுள்ளார்.

மாலத்தீவு, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் கேரள வெள்ள பாதிப்புக்கு நிதியுதவி அளிக்க முன் வந்துள்ள நிலையில் இந்த விஷயத்தில் மத்திய அரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை என வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://tamil.thehindu.com/india/article24750561.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

கேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த ரூ.700 கோடியை ஏற்க இந்தியா மறுப்பு: வெளிநாட்டு நிதியை ஏற்க வேண்டாம் என இந்திய தூதரகங்களுக்கு அறிவுரை

 

 
thJPG

கேரளாவின் வெள்ள நிவாரணத் துக்காக ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்த ரூ.700 கோடி நிதியுத வியை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளது.

வெளிநாடுகளின் நிதியுதவியை ஏற்க வேண்டாம் என்று அனைத்து இந்திய தூதரகங்களுக்கும் இ-மெயில் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் அந்த மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி யது. ஒட்டுமொத்தமாக ரூ.21,000 கோடிக்கும் அதிகமாக பொரு ளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. கேரளாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தை அதிதீவிர இயற்கைப் பேரிடராகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அரசு சார்பில் கேரள வெள்ள நிவாரணத்துக்காக ரூ.700 கோடி வழங்கப்படும் என்று அந்த நாட்டு அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த நிதியுதவியை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

கடந்த 2004-ம் ஆண்டில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சுனாமி தாக்கியது. அப்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதியுதவி வழங்க முன்வந்தன. அதனை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது. அன்று முதல் இன்றுவரை இயற்கை பேரிடர்களின்போது வெளிநாட்டு நிதியுதவியை ஏற்பது இல்லை என்ற கொள்கையை மத் திய அரசு கடைப்பிடித்து வருகிறது.

கடந்த 2005 காஷ்மீர் நிலநடுக் கம், 2014-ல் காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளம், கடந்த 2013-ல் உத்தரா கண்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ள பாதிப்புகளின்போதும் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நிதியுதவி வழங்க முன்வந்தன. அவற்றை மத்திய அரசு ஏற்கவில்லை.

இதே அணுகுமுறையில் கேரள வெள்ள நிவாரணத்துக்காக ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்த ரூ.700 கோடி நிதியுதவியை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளிநாடு களில் செயல்படும் அனைத்து இந்திய தூதரகங்களுக்கும் மத்திய அரசு சார்பில் இ-மெயில் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், "கேரள வெள்ள நிவாரணத் துக்காக நிதியுதவி அளிக்க முன் வரும் நாடுகளுக்கு நன்றி கூறுங்கள். அதேநேரம் அந்த நாட்டின் நிதியுதவியை ஏற்க வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறிய போது, "ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சிக்கு கேரள மக்கள் அதிக மாக பங்களித்துள்ளனர். அதன் காரணமாகவே அந்த நாடு கேரளா வுக்கு அதிக நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது. அந்த நாட்டை வேறு நாடாக கருத முடியாது. இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்" என்று தெரிவித்தார்.

கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியபோது, மத்திய அரசிடம் ரூ.2000 கோடி கேட்டோம். ஆனால் ரூ.600 கோடி மட்டுமே அறிவித்துள்ளது. இந்தநிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியுதவியை மத்திய அரசு எதற்காக தடுக்க வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார்.

https://tamil.thehindu.com/india/article24757419.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • கருத்துக்கள உறவுகள்

லொறி லொறியா  விசுகோத்து , பால் பவுடர், அரிசி ,பருப்பு ,குடி தண்ணீர் .. எல்லாம் அனுப்பினம் எல்லாத்தையும் வாங்கி கொண்டு பட்டி, பாண்டி மகன்களை வச்சி செய்வதுதான் மலையாள அரசியல்வாதி களின்ர ஸ்ரைல் ..?

39913581_2279388928789969_32088577485989

இது புரியாமல் மனிதாபிமானம் பேசுவினம் .. ஒரெ டமாஸ்தான் ?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் லாரிகளில் நிவாரணப் பொருட்கள்; மறுபக்கம் கோழிக் கழிவுகளோடு தமிழகம் வரும் லாரிகள்

|  

 
things


கேரள மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறெந்த மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

ஊடகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகங்கள் என பல தரப்பில் இருந்தும் கோடிக்கணக்கான நிவாரணப் பொருட்கள் லாரிகள் மூலம் கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
lorry.JPG

இந்த நிலையில், கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு கோழிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சோதனைச் சாவடியில் இன்று காலை பிடிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் சோதனைச் சாவடியில் லாரி ஒன்றை சோதித்த காவல்துறையினர் அதில் கோழிக் கழிவுகள் இருப்பதை அறிந்து லாரியைப் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தில்லைராஜன் மற்றும் க்ளீனர் மாசானம் ஆகியோரையும் கைது செய்தனர்.

ஒரு பக்கம் லாரிகளில் நிவாரணப் பொருட்கள் சென்று கொண்டிருக்கும் போதே மறுபக்கத்தில் கோழிக் கழிவுகளை அனுப்பும் கேரள மாநிலம், தமிழகம் ஒன்றும் குப்பைத் தொட்டியல்ல.. அள்ளக் அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கைமாறு எதையும் எதிர்பாராமல் தங்களது தோழர்களுக்கு ஒரு இன்னல் நேரும் போது எண்ணற்ற வேறுபாடுகள் இருந்தாலும் அவை அனைத்தையும் மறந்து தோளோடு தோள் கொடுத்த தமிழகச் சகோதரர்களுக்கு கோழிக் கழிவுகளை பரிசளிக்கும் கேரள அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

கோழிக் கழிவுகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய மாநில அரசு முன் வர வேண்டும். எத்தனை லாரிகளைத்தான் தமிழகத்தால் பிடித்து வைக்க முடியும். கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டும் முறையைத் தடுக்க கேரள அரசு முன்வந்தால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

தமிழகத்துக்கு சொட்டு தண்ணீரைக் கொடுக்காத, நம்மை மனிதர்களாகக் கூட மதிக்காத, கோழிக் கழிவுகளைக் கொட்டும் கேரளாவுக்கு ஏன் நிவாரணப் பொருட்களை அனுப்புகிறீர்கள் என்று சமூக வலைத்தளங்களில் ஏராளமான செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அது எல்லாம் தமிழகர்களுக்கு பெரியதாக தெரியவில்லை. இந்த சமயம் நமது சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வளவே.. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது தமிழர்களுக்கு மிகச் சரியாகவே பொருந்துகிறது.
bus.jpg

அங்காளிகளும், பங்காளிகளும் அடித்துக் கொள்வார்கள். ஆனால் வெளியில் இருந்து ஒரு பிரச்னை என்றால் எல்லோரும் ஒன்றாக சேர்ந்துக் கொள்வார்கள். அதுபோலவே எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கேரளாவுக்கு ஒரு பிரச்னை என்றதும், உணவு பொருட்கள் போதுமான அளவுக்கு இருக்கிறது, வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்த தருணத்தில் கூட கழிவுகளை வழக்கம் போல தமிழகத்தில் கொட்டிக் கொண்டிருக்காமல் உங்கள் சகோதரர்கள் வாழும் பூமியும் இறைவன் வாழும் பூமிதான் என்பதை உணரும் தருணம் இது.
 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

லொறி லொறியா  விசுகோத்து , பால் பவுடர், அரிசி ,பருப்பு ,குடி தண்ணீர் .. எல்லாம் அனுப்பினம் எல்லாத்தையும் வாங்கி கொண்டு பட்டி, பாண்டி மகன்களை வச்சி செய்வதுதான் மலையாள அரசியல்வாதி களின்ர ஸ்ரைல் ..?

39913581_2279388928789969_32088577485989

இது புரியாமல் மனிதாபிமானம் பேசுவினம் .. ஒரெ டமாஸ்தான் ?

 

இந்த மல்லுகளுடன் இருபது வருடமாக பணிபுரிகிறேன்..  நம்மிடம் தனிப்பட்ட தொழில் நுட்பத்திறமையும், அதில் ஆளுமையும் இல்லாவிட்டால், பிற மொழிக்காரர்களை போட்டுப் பார்த்துவிடுவார்கள்..

அவர்களின் ஒவ்வொரு நிலையிலும், காரியத்திலும் சுயநலம் இருக்கும். கொஞ்சம் ஏமாந்து பழகினால் நமக்கே தெரியாமல் பறித்த குழிக்குள் நம்மை தள்ளி மூடிவிடுவர்கள்.. அவ்வளவு விஷம்..!

எவ்வித இரக்கமும் வரவில்லை. ஏனெனில் அனுபவம் அப்படி..! Sorry to say..

.

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்

கேரள வெள்ளம்: ''மக்கள் இந்த சூழலை எதிர்கொண்ட விதம் வியக்க வைக்கிறது''

 

கேரளா மெல்ல மெல்ல தனது இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. நிவாரண முகாம்களில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

கேரளா வெள்ளம்: இன்றைய நிலை என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இப்போதுள்ள சூழ்நிலையில் கேரளாவில் நோய் தொற்றை எதிர்ப்பதுதான் பெரிய சவாலாக இருக்கிறது என்கிறார் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர்.

இதற்கு மத்தியில் வெளிநாடுகள் அளிக்கும் நிதியை பெற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவின் வெள்ள நிவாரணத் துக்காக ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்த ரூ.700 கோடி நிதியுதவியை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அது போல, கேரள வெள்ள நிவாரணத்துக்காக நிதியுதவி அளிக்க முன் வரும் நாடுகளுக்கு நன்றி கூறுங்கள். அதேநேரம் அந்த நாட்டின் நிதியுதவியை ஏற்க வேண்டாம்" என்று தூதரகங்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

'வெளிநாட்டு நிதி'

இது தொடர்பாக இந்திய அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

"வெளிநாட்டு நிதிபெறும் விஷயத்தில் முந்தைய கொள்கைகளை அரசு பின்பற்றும், மீட்பு மற்றும் புனர்வாழ்வு தேவைகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், சர்வதேச நிறுவனங்கள் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கோ அல்லது இந்திய பிரதமர் நிவாரண நிதிக்கோ அனுப்பலாம்" என்று விளக்கம் கூறி உள்ளது.

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது Shaji

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது Shaji

சமூக ஊடகங்களில் இது காத்திரமான விவாதத்தை எழுப்பி உள்ளது. வெளிநாட்டிலிருந்து கட்சிகள் நிதி பெறலாம். ஆனால், பேரிடரில் சிக்கி தவிக்கும் ஒரு மாநிலம் நிதியினை பெறகூடாதா? என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கேரளா வெள்ளம்: இன்றைய நிலை என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களிடம், "ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சிக்கு கேரள மக்கள் அதிகமாக பங்களித்துள்ளனர். அதன் காரணமாகவே அந்த நாடு கேரளாவுக்கு அதிக நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது. அந்த நாட்டை வேறு நாடாக கருத முடியாது. இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்" என்று தெரிவித்தார்.

Presentational grey line

 

Presentational grey line

முன்னதாக, பிபிசிக்கு அளித்த நேர்காணலில் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், இந்த வெள்ள பாதிப்பினால் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏழு சதவீதத்துக்கும் கீழே குறையக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்திருந்தார்.

கடந்த முப்பது ஆண்டுகளாக இந்திய சராசரியான ஏழு சதவீத ஜிடிபி என்பதைக் காட்டிலும் அதிகமான வளர்ச்சியை கேரளா கொண்டிருந்தது. எட்டு சதவீதமாக இருந்த ஜிடிபி இந்த ஆண்டு சரிவை சந்திக்கும் என்று சந்தேகிக்கிறேன். அதிலும் ஏழு சதவீதிற்கும் குறைவாக இருக்கும். இந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட இழப்புகளின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.20,000 கோடியை எட்டும்,'' என்று பிபிசியிடம் அவர் குறிப்பிட்டார்.

'கேரள மக்களின் நிலை'

பொருளாதாரம் மற்றும் அரசியலை எல்லாம் கடந்து, அந்த மக்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய களத்தில் மீட்புப் பணியில் இருக்கும் தன்னார்வலர்களிடம் பேசினோம். கேரள மக்களின் மன உறுதி உண்மையில் வியக்க வைப்பதாக கூறுகிறார்கள் அவர்கள்.

கேரளா வெள்ளம்: இன்றைய நிலை என்ன?படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES

நிழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், இந்த கடினமான சூழலிலும் பதற்றப்படாமல் அவர்கள் சூழலை எதிர்கொண்ட விதம் ஆச்சர்யத்தை தருகிறது. ஆனால், எதிர்காலம் குறித்து அச்சம் அவர்களிடம் நிலவுவதையும் மறுக்க முடியாது என்கிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் நீர் வடிந்துவிட்டாலும், பத்தனம்திட்டா மாவட்டத்தின் நிலை இன்னும் மோசமாக இருப்பதாக கூறுகிறார் சுரேஷ்.

நம்பிக்கை ஒளிக் கீற்று

இப்போது வெயில் மட்டுமே அனைவருக்கும் இருக்கு ஒரே நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஒளிக்கீற்று மெல்ல தெரிய தொடங்கி இருப்பதாக கூறுகிறார் வயநாடு பகுதியில் நிவாரண பணியில் இருக்கும் ஆன்மன்.

ஆன்மன்படத்தின் காப்புரிமைFACEBOOK

வயநாட்டின் கல்பட்டா, பத்தேரி பகுதியில் லேசான வெயில் வரத் தொடங்கி இருந்தாலும், மோசமாக பாதிக்கப்பட்ட மானந்தவாடியில் நேற்றும் மழை பெய்ததாக கூறுகிறார் ஆன்மன்.

ஆன்மன், "இன்னும் அந்த பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் தினக்கூலிகள். முற்றும் முழுவதுமாக வாழ்வாதரத்தை இழந்து நிற்கிறார்கள். மீள் குடியேற்றம் என்பதுதான் பெரும்சவாலாக இருக்கப் போகிறது" என்கிறார் ஆன்மன்.

சமூக ஊடகத்தில் உதவிகளை ஒருங்கிணைத்து கொண்டிருக்கும் இனியன் ராமமூர்த்தி சக மனிதன் மீதான மக்களின் நேயம் நெகிழ வைப்பதாக கூறுகிறார்.

"இந்த பகுதி மக்களுக்கு இந்த தேவை என்று ஒரு செய்தி அனுப்பினால் போதும்; மக்கள் தங்களால் இயன்றதை எடுத்து கொண்டு வந்துவிடுகிறார்கள்" என்கிறார்.

பிற செய்திகள்:

https://www.bbc.com/tamil/india-45280620

  • தொடங்கியவர்

யுஏஇ ரூ.700 கோடி கொடுத்ததா? இல்லையா? - நீளும் சர்ச்சைகள்


 

 

was-kerala-offered-rs-700-crore-aid

 

 

கேரள மழை வெள்ள மீட்புப் பணிகளுக்கு யுஏஇ உண்மையிலேயே ரூ.700 கோடி கொடுத்ததா என்பதுதான் இப்போது மிகப்பெரிய சர்ச்சையாக இருக்கிறது.

கேரளத்தில் 100 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி அவை திறந்துவிடப்பட்டன. 14 மாவட்டங்களையும் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது. 320-க்கும் அதிகாமானோர் மழை வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

 

இந்த சூழ்நிலையில்தான் கேரள முதல்வர் நிதியுதவி கோரினார். பொதுமக்கள் தாராளமாக உதவுமாறு வேண்டினார். கேரள மக்களுக்கு துணை நிற்பதாக யுஏஇ பிரதமர் அறிவித்தார்.

பிரதமர் ஷேக் முகமது பின் ரசீது அல் மக்தூம் தனது ட்விட்டரில், "இந்தியாவின் கேரள மாநிலம் மிக மோசமான மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் இதில் மாண்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் வீடுகள் இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் உள்ளனர். பக்ரீத் திருநாள் வேறு நெருங்குகிறது. இந்த வேளையில் இந்தியாவில் இருக்கும் நமது சகோதரர்களுக்கு உதவ மறக்கக்கூடாது. யுஏஇ அரசாங்கம் இங்குள்ள இந்திய சமூகத்தினருடன் இணைந்து உதவிகளை மேற்கொள்ளும். உடனே ஒரு குழு அமைக்கிறோம். இந்தக் குழுவுக்கு தாராளமாக உதவிகளை அளிக்க வேண்டுகிறோம். யுஏஇ அரசின் வெற்றி மொழியில் கேரள சகோதரர்களுக்குப் பங்கு உண்டு. ஆகையால் அங்கே வாடுபவர்களுக்கு உதவும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது" எனப் பதிவிட்டார்.
இதற்கு நெகிழ்ச்சியுடன் கேரள முதல்வர் நன்றியும் தெரிவித்தார்.

மழையால் கேரள மாநிலத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய ரூ.2,200 கோடி நிதியைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசிடம் கோரினார். ஆனால், மத்திய அரசோ ரூ.600 கோடி மட்டுமே ஒதுக்கியது. இந்தச் சூழலில்தான் ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி தருவதாக அறிவித்தது. பிரதமர் மோடியுடன் ஐக்கி அரபு அமீரகம் இளவரசர் முகம்மது பின் ஜயத் அல் நஹ்யன் தொலைப்பேசியில் பேசி நிதியுதவியைத் தெரிவித்தார் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
அப்போதுதான் நிதியுதவி அரசியலும் தொடங்கியது. 

கவனிக்கப்பட வேண்டிய பிரதமரின் ட்வீட்..

யுஏஇ பிரதமர் ஷேக் முகமதுவுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி ஒரு ட்வீட் அனுப்பியிருந்தார். அதில் கேரள மக்களின் துயரமான நேரத்தில் துணை நிற்பதாக கூறியிருப்பதற்கு மிகப்பெரிய நன்றி எனக் கூறியிருந்தார். அந்த ட்வீட் ஆகஸ்ட் 18-ம் தேதி பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், யுஏஇ உதவியை வெளியுறவு அமைச்சகம் இன்னும் உறுதி செய்யவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. லூலூ ஷாப்பிங் மாலின் உரிமையாளர் எம்.ஏ.யூசுப் அலிதான் யுஏஇ அரசின் உதவி குறித்து தன்னிடம் கூறியதாக கேரள முதல்வர் தெரிவித்தார். பக்ரித் வாழ்த்து சொல்ல யுஏஇ தலைமையை யூசுப் அலி சென்றபோது அவரிடம் நிதியுதவி குறித்து கூறியதாகவும் தெரிவித்தார்.  இதுகுறித்து பத்திரிகை செய்திகளுக்கு அறிவிக்கலாமா என கேட்ட பின்னரே தனது ட்விட்டர் பக்கத்திலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூறியதாக பினராயி கூறுகிறார். 

டெல்லியில் உள்ள யுஏஇ தூதரக அதிகாரிகளும் நிதியுதவி அளிப்பது குறித்து தங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளது. கேரள முதல்வரோ ரூ.700 கோடி நிதியுதவி அளிப்பதாக கூறியது உண்மைதான் என்று அடித்து கூறுகிறார். இந்த சர்ச்சை பூதாகரமாகி வருகிறது.

https://www.kamadenu.in/news/india/5162-was-kerala-offered-rs-700-crore-aid.html?utm_source=site&utm_medium=justin&utm_campaign=justin

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க கொடுக்கிற 700 வேண்டாம்! அரபு நாடு கொடுத்த உதவியை உதறிய மத்திய அரசு!

 
 
We will not accept the money provided by the Arabian United States
 
HIGHLIGHTS

கேரள வெள்ள நிவாரண நிதியாக 700 கோடி ரூபாயை ஐக்கிய அரபு அமீரகம் அளிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அந்த நிதியை மத்திய அரசு ஏற்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று கேரள மாநிலத்தில் பெருமழை பெய்யத் தொடங்கியது. அதன்பின், தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் பெருமழை தொடர்ந்தது. இதனால் கேரள மாநிலத்தின் பெரும்பகுதி நிலைகுலைந்தது. வயநாடு, பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட 12 மாவட்டங்கள் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதிலிருந்து மக்களை மீட்கும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில், அவர்களது புனர்வாழ்வுக்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது மாநில அரசு.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 20ஆயிரம் கோடி பொருளாதாரச் சேதம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது அம்மாநில அரசு. புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக, ரூ.2,600 கோடி நிதியுதவி அளிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுள்ளது. தற்போது வரை, மத்திய அரசானது கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

kerala.jpg

உலகம் முழுவதிலுமிருந்து கேரளாவிற்கு உதவிகள் குவிந்துள்ள நிலையில்,  ஐக்கிய அரபு அமீரகம் சாா்பில் கேரளாவிற்கு ரூ.700 கோடி அளவிற்கு நிதியாகவும், பொருளாகவும் உதவி செய்வதாக அந்நாட்டு அதிபா் ஷேக் கலிபா பின் ஜயீத் அல் நஹ்யான் அறிவித்ததும்.  “கேரள மாநிலமானது ஐக்கிய அரபு அமீரகத்துடன் சிறந்த உறவைக் கொண்டுள்ளது. கேரள சமூகத்துக்கு இரண்டாவது நாடாக அது விளங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த ஆதரவுக்கும், சகோதரத்துவத்துடன் அணுகுவதற்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார் முதல்வர் பினராயி விஜயன்

இதனையடுத்து நேற்று  செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதியை வழங்குவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக, அபுதாபி இளவரசரான ஷெய்க் முகம்மது பின் ஜயித் அல் நஹ்யன் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது நிதியுதவி குறித்துத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். கேரளாவுக்கு மாலத்தீவுகள் நாடு ரூ.35 லட்சம் அளிப்பதாகக் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் கேரளாவுக்கு உதவி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

UAE_3.jpg

இந்த நிலையில், கேரள வெள்ள நிவாரணம் தொடர்பாக வெளிநாடுகளின் சார்பாக அனுப்பப்படும் நிதியுதவிகளை மத்திய அரசு ஏற்காது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி, இதுவரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வத் தகவல் ஏதும் வரவில்லை என்று அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் எந்தவொரு நாடு மற்றும் பன்னாட்டு அமைப்புகளிடம் இருந்து நிதியுதவியைப் பெறுவதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. உத்தராகண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டபோது கூட, மத்திய அரசு வெளிநாட்டு அரசுகளின் உதவிகளை மறுத்ததாகத் தெரிவித்துள்ளனர் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள்.

2013ஆம் ஆண்டு உத்தராகண்ட் வெள்ளத்தின்போது ரஷ்ய நாடு அளிக்க முன்வந்த உதவிகளை இந்தியா ஏற்க மறுத்தது என்றும், அவசரகால நிவாரணங்களை அளிப்பதற்குப் போதுமான வசதிகள் இருப்பதாகத் தெரிவித்தது என்றும், இதற்கு உதாரணம் காட்டியுள்ளனர்.

https://tamil.asianetnews.com/india/we-will-not-accept-the-money-provided-by-the-arabian-united-states-pdusx5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.