Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

கத்துக்குட்டிகளை 116 ஓட்டத்துக்குள் அடக்கிய பாகிஸ்தானுக்கு வெற்றியிலக்கு 117

 

 
 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் ஹொங்கோங் அணி பகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்களுக்கு நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காமல் 37 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 116 ஓடத்தை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

paki1.jpg

14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியான பாகிஸ்தான் மற்றும் ஹொங்கோங் அணிகளுக்கிடையிலான போட்டி டுபாயில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஹொங்கோங் அணியின்  தலைவர் அனுஸ்மன் ராத் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

அதன்படி ஹொங்கொங் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்டக் காரர்களாக நிஜாக்கத் கான் மற்றும் அணித் தலைவர் அனுஸ்மன் ராத் ஆகியோர் களமிங்கினர்.

இவர்கள் இருவரது ஜோடி 4.3 ஓவர்களுக்கு மாத்திரமே தாக்குப் பிடித்தது. அதன்பின்னர் நிஜாக்கத் கான் 13 ஒட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து பாபர் ஹயத் களமிங்கி ஆடிவர அணியின் ஓட்ட எண்ணிக்கை 32 ஆக இருக்கும்போது அனுஸ்மன் ராத் 19 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிறிஸ்டோபர் கார்ட்டரும் 2 ஓட்டத்துடன் ஹசன் அலியுடைய பந்தில் ஆட்டமிழக்க இதையடுத்து பாபர் ஹயத்தும் 7 ஓட்டத்துடன் ஷெர்தாப் கானின் சுழலில் சிக்கி வெளியேறினார். அவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கானும் வந்த வேகத்திலேயே இரண்டு பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு ஷெர்தாப் கானின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அதற்கிணங்க ஹெங்கொங் அணி 16.3 ஓவர்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 44 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறி ஆடி வந்தது.

அடுகளத்தில் கின்சித் ஷா மற்றும் அலிஸ் கான் ஆகியோரும் துடுப்பெடுத்தாடி வந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து  நிதானமாக ஆடி வர அணியின் ஓட்ட எண்ணிக்கை சற்று அதிகரித்தது. அதன்படி இந்த ஜோடி 73 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களை பெற அணியின் ஓட்ட எண்ணிக்கை 95 ஆக இருந்தது.

எனினும் 30.2 ஆவது ஓவரில் அணி 97 ஓட்டங்கள‍ை பெற்றிருக்கும் போது அலிஸ் கான் உஷ்மான் கானினுடைய பந்து வீச்சில் 27 ஓட்த்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற அடுத்தடுத்து வந்த ஸ்காட் மெக்கெச்சினி, தன்வீர் அப்சல் எதுவித ஓட்டத்தையும் பெறாது உஷ்மான் கானுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக ஹொங்கொங் அணி 37 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 116 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு வெற்றியிலக்காக 117 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. 

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் உஷ்மான் கான் 7.3 ஓவர்களுக்க மூன்று விக்கெட்டுக்களையும், ஷெர்தாப் கானின் மற்று ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் அஷ்ரப் 4 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

http://www.virakesari.lk/article/40525

  • Replies 111
  • Views 11.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கத்துக்குட்டிகளுக்கு கற்றுக்கொடுத்த பாகிஸ்தான் இலகுவாக வெற்றியிலக்கை கடந்தது

 

 

ஹொங்கொங் அணிக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 117 என்ற இலகுவான வெற்றியிலக்கை எளிதாக கடந்தது.

paki2.jpg

14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியான பாகிஸ்தான் மற்றும் ஹொங்கோங் அணிகளுக்கிடையிலான போட்டி டுபாயில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஹொங்கோங் அணியின்  தலைவர் அனுஸ்மன் ராத் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணி பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ளத் தெரியாமல் 37.1 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

hong.jpg

117 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான இமாம்-உல்-ஹக் மற்றும் பகர் சமான் ஆகியோர் பொறுமையாக ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கை மெதுவாக அதிகரித்தனர்.

இருப்பினும் இந்த ஜோடி 41 ஓட்டங்களை பெற்றிருந்தபோது 8.1 ஆவது ஓவரில் பகர் சமான் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற அடுத்ததாக பாபர் ஆசாம் களமிங்கி இமாமுடன் இணைந்து ஆடி வந்தார்.

இருவருமாக இணைந்து 52 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது பாபர் ஆசாம் இஷான் கானுடைய பந்து வீச்சில் 33 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

அதனால் பாகிஸ்தான் அணி 20.2 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பாபர் ஆசாமின் வெளியேற்றத்தை தொடர்ந்து மலிக் களமிறங்கி துடுப்பெடுத்தாடி வர, ஆரம்ப துடுப்பாட்டக்காரராக களமிறங்கிய இமாம் 69 பந்தில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்ததுடன் 50 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார். இதையடுத்து மலிக் நான்கு ஓட்டத்தை விளாச பாகிஸ்தான் அணி 23.4 ஓவரில் 120 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.

பந்து வீச்சில் ஹொங்கோங் அணி சார்பாக இஷான் கான் 8 ஓவர்களுக்கு 34 ஓட்டங்கள‍ை கொடுத்து இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக பகிஸ்தான் அணி சார்பில் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றிய உஷ்மான் கான் தெரிவுசெய்யப்பட்டார்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின், அபுதாபியில் நாளை மாலை இலங்கை நேரப்படி 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/40529

  • தொடங்கியவர்

லசித் மாலிங்கவுக்கு நல்வரவு

malinga-11-696x463.jpg
 

ஆசிய கிண்ணத்தின் முதல் போட்டியில் டுபாயில் இலங்கை அணி பங்களாதேஷை சந்தித்தபோது, ஓர் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அணிக்கு திரும்பிய லசித் மாலிங்கவுக்கு அது முக்கியமான போட்டியாக இருந்தது. இதனால் இந்தப் போட்டியில் லசித் மாலிங்க மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தமை போட்டியை விறுவிறுப்பாக முக்கிய காரணமாக இருந்தது.

இதற்கு முன்னர் கடைசியாக 2017 செப்டெம்பர் 3 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிரான போட்டியிலேயே மாலிங்க இலங்கை அணிக்காக ஆடினார். அதாவது 377 நாட்கள் அவர் இலங்கை ஒருநாள் அணிக்காக ஆடாமல் இருந்துள்ளார். இந்த காலப்பிரிவில் இலங்கை அணி 18 போட்டிகளில் விளையாடி அதில் 12 போட்டிகளில் தோற்று 6 ஆட்டங்களில் மாத்திரம் வெற்றியீட்டியுள்ளது.

 

இந்த நிலையில், நேற்றைய போட்டியின் முதல் ஓவரிலேயே அணியில் தனது தேவையை நிரூபித்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய மாலிங்க தனது 10 ஓவர்களுக்கும் 23 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது கடந்த நான்கு ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் மாலிங்கவின் சிறந்த பந்துவீச்சாகும். இதற்கு முன் 2014 மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் 56 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

எனினும், அவர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 17 தடவைகள் 4 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இலங்கை அணிக்கு இது மிகக் குறை

lanka-3.jpg

262 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலெடுத்தாட வந்த இலங்கையின் ஆரம்பவரிசை, மத்தியவரிசை, பின்வரிசை என எந்த வீரரும் சொபிக்காத நிலையில் 124 ஓட்டங்களுக்கே சுருண்டது.

பங்களாதேஷுக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணி பெற்ற மிகக் குறைவான ஓட்டங்கள் இதுதான். இதற்கு முன்னர் 2009ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி டாக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்ததே மோசமான பதிவாக இருந்தது.   

 

பங்களாதேஷின் சிறந்த வெற்றி

bangladesh.jpg

பங்களாதேஷ் அணி 137 ஓட்டங்களால் பெற்ற வெற்றி அந்த அணி வெளிநாட்டு மண்ணில் பெற்ற மிகச் சிறந்த வெற்றியாகும். பங்களாதேஷ் அணி இதனை விடவும் அதிக ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிகளை பெற்றபோதும் அதுவெல்லாம் சொந்த மண்ணில் பெற்ற வெற்றிகளாகும்.

அந்த அணி இதற்கு முன்னர் வெளிநாட்டு மண்ணில் பெற்ற சிறந்த வெற்றி 2013 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயுக்கு எதிராக புலவாயோவில் 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.

மறுபுறம் இது இலங்கை அணியின் மூன்றாவது மிக மோசமான தோல்வியாகும். 2002 ஆம் ஆண்டு பாகஸ்தானுக்கு எதிராக 217 ஓட்டங்களால் பெற்ற தோல்வியும், 1986ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 193 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற தோல்விகளுமே இதனை விடவும் மோசமாகும்.   

குசல் மெண்டிஸை துரத்தும் துரதிஷ்டம்

mendis-3.jpg

பங்களாதேஷுக்கு எதிரான போட்டி குசல் மெண்டிஸின் 50ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியாகும். அவர் 2016 ஜுன் 16 ஆம் திகதியே அயர்லாந்துக்கு எதிராக தனது அறிமுக ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.

இதன்படி இலங்கை அணிக்காக 50 ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடும் 46 ஆவது வீரராக குசல் மெண்டிஸ் பதிவானார்.

இதுமட்டுமல்லாது குசல் மெண்டிஸ் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் முதல் முறையாகவே இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார். அதாவது இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வரும் 52 ஆமவர் மெண்டிஸ் ஆவார்.

 

 

எனினும், அவர் முகம்கொடுத்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். குசல் மெண்டிஸ் கடைசியாக ஆடிய 21 ஒருநாள் போட்டிகளில் ஐந்து தடவைகள் பூஜ்யத்திற்கு ஆட்டமிழந்திருப்பதோடு ஒரு அரைச்சதம் கூட இல்லாமல் 267 ஓட்டங்களையே பெற்றுள்ளார். அதாவது இந்தக் காலத்தில் போட்டி ஒன்றில் சராசரியான 14 ஓட்டங்களே பெற்றுள்ளார்.

23 ஆண்டுகள் காத்திருந்த பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில் போட்டி ஒன்றில் ஆடுவது கடந்த 23 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக அந்த அணி இங்கு 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கியது. அதாவது ஆசிய கிண்ணத்திற்கான பங்களாதேஷ் குழாத்தில் இருக்கும் அபூ ஹைதர் (22), மொசதிக் ஹொஸைன் (22), முஸ்தபிசுர் ரஹ்மான் (22), நஸ்முல் ஹொஸைன் ஷன்டோ (20), மஹதி ஹஸன் (20) அப்போது பிறந்திருக்கவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.   

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ரதி said:

ஆனாலும் நேற்று இலங்கை இப்படி தோத்து இருக்கக் கூடாது 

பாசம் பொங்கி வழியுது. :27_sunglasses:

  • தொடங்கியவர்

எலும்பு முறிவுடன் தமிம் இக்பால் ஆடியது ஏன்?

 

 
tamim

தமிம் இக்பால். | ஏ.பி.

ஆசியக் கோப்பை முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக பேட் செய்த போது பந்தில் கையில் அடிவாங்கி எலும்பு முறிவு போடப்பட்ட நிலையில் கடைசியில் முக்கிய கட்டத்தில் தமிம் இக்பால் இறங்கி ஒரு கையில் ஆடியதால் முஷ்பிகுர் ரஹிம் 32 ரன்களைக் கூடுதலாகச் சேர்த்தது வங்கதேச வெற்றியைத் தீர்மானித்தது.

இந்நிலையில் கையில் பேண்டேஜுடன் தான் ஏன் இறங்கினேன் என்பதை அவர் ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போவுக்குத் தெரிவித்ததாவது:

 

“பவுலர் ஓடி வரும் போது அந்த 10 விநாடிகளி தைரியமாக அடைந்தேன். ஸ்டேடியத்தில் ரசிகர்களின் ஆரவாரம் என்னை உத்வேகமூட்டியது. நான் அவுட் ஆகியிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது கூட நடந்திருக்கலாம். ஆனால் அந்தத் தருணத்தில் நான் என் நாட்டுக்காகவும் அணிக்காகவும் கடமையாற்றுவதை லட்சியமாகக் கொண்டிருந்தேன்.

அடிபட்ட கை பின்னால்தான் இருந்தது, ஆனால் ஆடும்போது முன்னால் தானாகவே வந்தது, பந்தை விட்டிருந்தால் என் கையைப் பதம் பார்த்திருக்கும்.

மோர்டஸா என்னிடம் நான் இறங்க வேண்டுமென்று கூறிய போது அவர் ஜோக் அடிக்கிறார் என்றே நினைத்தேன். கடைசி ஓவராக இருந்தால் நான் களமிறக்கப்படலாம் என்ற திட்டமிருந்தது. நான் ஸ்ட்ரைக்கில் இல்லாமல் ஸ்டாண்ட் கொடுத்திருப்பேன்.

ரூபல் ஹுசைன் கிரீசில் இருந்த போது நான் கால்காப்பைக்கட்டி தயாரானேன். என் வாழ்க்கையில் முதல் முறையாக எனக்கு கிளவ்வை ஒருவர் மாட்டி விட இன்னொருவர் அப்டமன் கார்டை மாட்டிவிட்டார். மொமினுல் ஹக் என் கால்காப்புகளைக் கட்டிவிட்டார்.

முஸ்தபிசுர் அவுட் ஆனவுடன் எனக்கு 2வது எண்ணம் இல்லை, களமிறங்கினேன். இறங்கும் போது கூட முடியுமா? என்றனர் நான் முடியும் என்று உறுதியாகக் கூறியே இறங்கினேன்.

அந்த ஒரு பந்தில் அவுட் ஆகாமல் அடிபடாமல் தப்பித்தால் அடுத்த ஓவரில் முஷ்பிகுர் அடிக்கும் 5-10 ரன்கள் அணிக்கு உதவலாம் என்ற எண்ணமே இருந்தது. ஆனால் நான் அந்த ஒரு பந்தை ஆடுவேன் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 32 ரன்கள் எதிர்முனையில் வந்தது. முஷ்பிகுர் அசாதாரணமாக ஆடினார்.

இவ்வாறு கூறினார் தமிம் இக்பால்.

https://tamil.thehindu.com/sports/article24964937.ece

  • தொடங்கியவர்

ஆப்கானிஸ்தானுடான போட்டி அழுத்தங்களைக் கொடுக்கும் – மெதிவ்ஸ்

 

 

angelo-3-696x463.jpg
 

ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டி சவால்மிக்கதாக இருக்கும் எனவும், ஆசிய கிண்ணத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமாயின், அந்த அணியுடன் இன்று (17) நடைபெறவுள்ள தீர்மானமிக்க போட்டியில் அனைத்து வீரர்களும் சகலதுறையிலும் பிரகாசிப்பது அவசியமாகும் எனவும் இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கைக்கு வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தை ஏற்படுத்தும் போட்டியாகவும் இது அமையும் என அவர் தெரிவித்தார்.

 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்றுமுன்தினம் (15) ஆரம்பமாகிய 14ஆவது ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் மிக மோசமான தோல்வியைச் சந்தித்த இலங்கை அணி, ஆசியக் கிண்ணத்தில் நிலைத்திருக்க வேண்டும் எனின், இன்று நடைபெறவுள்ள இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடன் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் காணப்படுகிறது.  

அடிப்படையில் ஆப்கானிஸ்தானுடனான போட்டிக்கான ஆயத்தம் குறித்து முதல் போட்டியின் பின்னர் வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவிக்கும் போதே மெதிவ்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இதொடர்பில் மேலும் கூறுகையில்,

”இந்தப் போட்டி எமக்கு வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் நிச்சயம் எமக்கு நிறைய அழுத்தங்களை சந்திக்க வேண்டிவரும். ஆனால் அந்தப் போட்டியை வென்றால் தான் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்ய முடியும். ஒரு நாள் எமக்கு நன்றாக இருந்தாலும், அடுத்த நாள் மிகவும் மோசமாக இருக்கலாம். ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், அடுத்த போட்டியில் நிறைய அழுத்தங்களை சந்திக்க வேண்டி வரும் என போட்டி ஆரம்பமாவதற்கு முன் நான் சொல்லியிருந்தேன்.

ஆனால், பங்களாதேஷ் அணியுடனான போட்டியை வெற்றிக்கொண்டு தொடரில் முன்னிலை பெறுவதற்கு நாம் மேற்கொண்ட திட்டங்கள் நிறைவேறாமல் போனது கவலையளிக்கின்றது. நாம் விரைவாக போட்டியின் தன்மைக்கேற்ப விளையாட தயாராக வேண்டும். அத்துடன், அணியில் உள்ள பதினொரு வீரர்களும் தங்களது 100 சதவீத திறமைகளை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என தெரிவித்தார்.

 

இதேநேரம், பங்களாதேஷ் அணியுடனான முதல் போட்டியில் சந்தித்த தோல்வி குறித்து மெதிவ்ஸ் கருத்து வெளியிடுகையில்,  

தினேஷ் சந்திமால் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் உபாதைக்குள்ளான காரணத்தால் நாம் அணியில் ஒருசில மாற்றங்களை செய்தோம். அதற்காகவே டில்ருவன் பெரேராவை இறுதி பதினொருவரில் இணைத்துக் கொண்டோம். ஆனால், முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் மோசமான துடுப்பாட்டம் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.

அத்துடன், இந்தப் போட்டியில் எமது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எனினும், களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டம் என்பன மிக மோசமாக காணப்பட்டது. அதன் பின்னர் 262 ஓட்டங்களை நோக்கிய எமது துடுப்பாட்டத்தில் பாரிய சரிவு ஏற்பட்டது. ஓவ்வொரு வீரரரும் நின்று நிலைத்து துடுப்பெடுத்தாடவில்லை.

எனவே ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள போட்டியில் மூன்று துறைகளிலும் பிரகாசிக்க வேண்டும். ஒரு சிறிய தவறுவிட்டாலும், அது எமது வெற்றிக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டுமானால் அனைவரும் அதிகபட்ச ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

 

இந்த நிலையில், முதல் போட்டியில் லசித் மாலிங்கவின் அபார பந்துவீச்சின் உதவியால் முதல் மூன்று விக்கெட்டுக்கள் விரைவில் வீழ்த்தப்பட்டன. எனினும், முஸ்பிகுர் ரஹீமின் பிடியெடுப்பை தவறவிட்டது மற்றும் துடுப்பாட்டத்தில் மோசமாக விளையாடியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மெதிவ்ஸ் பதிலளிக்கையில்,

உண்மையைச் சொல்லப்போனால் லசித் மாலிங்க சிறப்பாக பந்துவீசி அணிக்கு நம்பிக்கை கொடுத்தாலும், களத்தடுப்பில் முக்கிய பிடிகளைத் தவறவிட்டது போட்டியின் போக்கை மாற்றியது. அதேபோல, 260 ஓட்டங்களை இந்த ஆடுகளத்தில் துரத்துவது மிக இலகுவானது. எனினும், எமது வீரர்களின் மோசமான துடுப்பாட்டமும் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை அணி டுபாயில் உள்ள .சி.சியின் கிரிக்கெட் பயிற்சி பாடசாலை மைதானத்தில் நேற்றைய தினம் (16) பயிற்சிகளை மேற்கொண்டிருந்தது. அத்துடன், தனது முதலாவது குழந்தைக்கு தந்தையான சுழற்பந்துவீச்சாளர் அகில தனன்ஜயவும் நேற்று மாலை நடைபெற்ற பயிற்சி முகாமில் இலங்கை அணியுடன் இணைந்துகொண்டார். எனவே, இன்று அபுதாபியின் ஷெய்க் சய்யத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் அவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆப்கான் சுழலில் சிக்கி வெளியேறுமா இலங்கை? - முதலில் துடுப்பெடுத்தாடுகிறது ஆப்கான்

 

 

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின்  மூன்றாவது போட்டி, இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளது. 

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கார் ஆப்கான் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். 

அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

srilanka1.jpg

பங்களாதேஷ் அணியுடன் நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்ததன் காரணமாக இப் போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் மாத்திரம் அடுத்த சுற்றுக்கு நுழைவதற்கான தகுதியை பெறும் இல்லையெனில் 14 ஆவது ஆசியக் கிண்ணத்துக்கான கனவை கைவிட்டு நாடு வந்து சேர வேண்டிய நிலை ஏற்படும். 

அத்துடன் கடந்த போட்டியில் முழுத் திறமையையும் வெளிப்படுத்திய லசித்  மலிங்க, இப் போட்டியிலும் தான் யார் என்பதை நிரூபிப்பார் என்பதில் ஐயம் இல்லை. 

இந் நிலையில் அகில தனஞ்சய இந்தப் போட்டியில் களமிறங்கவுள்ளமையானது இலங்கை அணிக்கு மேலும் வலுச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அஸ்கார் ஆப்கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரையில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசியக் கிண்ணத் தொடரில் கால் பதித்துள்ளது. பந்து வீச்சிலும் சரி, களத் தடுப்பிலும் சரி ஆப்கானிஸ்தான் அணி தனது முழுத் திறைமைய வெளிப்படுத்தும். 

காரணம் ஆப்கான் அணி தனது சுழற்பந்து வீச்சால் வியூகம் அமைத்து எதிரியை கதிகலங்க வைக்கும் திறன் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

மேலும் இப் போட்டியானது ஆசியக்கிண்ண வரலாற்றிலேயே இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் எதிர்கொள்ளும் முதல் போட்டி இதுவாகும். 

எது எவ்வாறிருப்பினும் இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றியீட்டினால் மாத்திரமே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பினை தக்க வைத்துக்கொள்ளும். இல்லையேல் ஆப்கானின் சுழலில் சிக்கி,  மீண்டும் மண்டியிட்டு நாடு திரும்ப வேண்டிய நிலை உருவாகும். 

http://www.virakesari.lk/article/40572

  • தொடங்கியவர்

 

40.png&h=42&w=42

225/6 * (47.1/50 ov)
 
  • தொடங்கியவர்

அடங்க மறுத்தவர்களை அடக்கி காட்டினார் திஸர ; வெற்றியிலக்கு 250

 

 
 

இலங்கைக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டியில் திஸர பெரேராவின் அற்புதமான பந்து வீச்சுக் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்று, வெற்றியிலக்காக இலங்கைக்கு 250 ஓட்டங்களை நிர்ணயித்தது.

thisara.jpg

அபுதாபயில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது.

அதற்கிணங்க ஆப்பாகானிஸ்தான் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக மெஹாமட் ஷஹ்சாத் மற்றும் இஷ்சனுல்லா ஜனாத் ஆகியோர் களமிறங்கினார். இவர்கள் இருவரினதும் நிதானமான ஆட்டத்தின் மூலமாக ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 45 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

sl1.jpg

ஷஹ்சாத் 26 ஓட்டத்துடனும், ஜனாத் 16 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். இருப்பினும் 11.4 ஆவது ஓவரில் அகில தனஞ்சயவினுடைய பந்து வீச்சில் ஷஹ்சாத் எல்.பி.டபிள்யூ. முறையில் 34 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா ஜனாத்துடன் ஜேடி சோர்ந்தாட ஒரு விக்கெட் இழப்பிற்கு அணி 100 ஓட்டங்களை கடந்தது.

sl2.jpg

இதற்கடுத்து இந்த ஜோடி 50 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஜனாத் அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் 45 ஓட்டத்துடன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து அரைசாதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். இவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய அணித் தலைவர் அஸ்கார் ஆப்கானும் ஒரு ஓட்டத்துடன் செஹான் ஜெயசூரியவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

akila.jpg

இவரின் வெளியேற்றத்தை தொடர்ந்து ஹஷ்மத்துல்லா ஷஹதி களமிறங்கி ஆடி வர, ஆப்கானிஸ்தான் அணி 30 ஓவர்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

34.2 ஓவர்களுக்கு அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 தொட, அடுத்த பந்தில்  ரஹ்மத் ஷா விளாசிய நான்கு ஓட்டத்துடன் அவர் 63 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் கடந்தார். 37.3 ஆவது ஓவரில் மலிங்கவின் பந்து வீச்சில் ரஹ்மத் ஷா அடித்தாட பிடியெடுப்புக்கான வாய்ப்பொன்று இலங்கைக்கு கைகூடி வந்தது. எனினும் அந்த பிடியெடுப்பினை தசூன் சானக்க நழுவ விட்டார்.

அதைத் தொடர்ந்து 40 ஓவர்களின் நிறைவில் ஆப்கானிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. ரஹ்மத் ஷா 66 ஓட்டத்துடனும் ஷஹதி 28 ஓட்டத்துடனும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினர்.

எனினும் அவர் 41.1 ஓவரில் 72 ஓட்டத்துடன் சாமரவின் பந்து வீச்சில் திஸர பெரேராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, ஓட்ட குவிப்பின் வேகம் குறைவடைந்தது. இந் நிலையில் 43.5 ஆவது ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுக்களை இழந்து 200 ஐ தொட 44.2 ஓவரில் திஸரவின் பந்தில் ஷஹதி 37 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மொஹமட் நாபியும் 15 ஓட்டத்துடன் மலிங்கவின் பந்து வீச்சில் திஸர பெரேராவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இவரையடுத்து களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரானும் 12 ஓட்டத்துடன் 47.5 ஆவது ஓவரில் திஸர பெரேராவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குல்பாடின் நாபியும் திஸரவின் பந்தில் அகிலவிடம் பிடிகொடுத்து 4 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய அத்தாப் ஆலம் தான் எதிர்கொண்ட முதல் பந்தையே ஆறு ஓட்டமாக மாற்றி அசத்திக் காட்ட, 49.4 ஆவது ஓவரில் திஸர பெரோ, ரஷித் கானை பொல்ட் முறையில் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்ற அடுத்து வந்த ரஹ்மானையும் திஸர பெரேரா பொல்ட் முறையில் ஆட்டமிழக்க வைத்து ஐந்தாவது விக்கெட்டையும் சுவீகரித்தார்.

இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்று இலங்கைக்கு வெற்றியிலக்காக 250 ஓட்டத்தை நிர்ணயித்தது.

sl3.jpg

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் திஸர பெரேரா ஐந்து விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய இரண்டு விக்கெட்டுக்களையும் லசித் மலிங்க, சாமர, செஹான் ஜெயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

http://www.virakesari.lk/article/40590

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மட்ச்சிலும் தோத்துடுவாங்களோ ?
 

  • தொடங்கியவர்

 

8.png&h=42&w=42

125/5 * (32/50 ov, target 250)
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இந்த மட்ச்சிலும் தோத்துடுவாங்களோ ?
 

அதேதான்.இனி வீட்ட போக வேண்டியது தான்.ரன் அவுட்டுக்கெல்லாம் மன்னிப்பு இல்லை.?

sri lanka   153/8 * (38.2/50 ov, target 250)

  • தொடங்கியவர்

பெட்டியை கட்டத் தயாரானது இலங்கை ; 91 ஓட்டத்தால் ஆப்கானிடம் சரண்

 

 
 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை 41.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 91 ஓட்டத்தினால் ஆப்கானிடம் சரணடைந்தது.

ad.jpg

14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டியான இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் 

அபுதாபியில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணியின்  தலைவர் அஸ்கார் ஆப்கான் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

அதற்கிணங்க ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணியின் சார்பில் ரஹ்மத் ஷா 72 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார். பந்து வீச்சில் இலங்கை அணியின் திஸர பெரேரா 55 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

250 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே எதுவித ஓட்டத்தையும் பெறாது விக்கெட்டை பறிகொடுத்து வழமையான தடுமாற்றத்தை தொடர ஆரம்பித்தது.

அதன்படி குசல் மெண்டீஸ் எதுவித  ஓட்டத்தையும் பெறாது முஜிபுர் ரஹ்மானுடைய பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆடடமிழந்தார். அடுத்து உபுல் தரங்கவுடன் ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டிசில்வா 23 ஓட்டங்களை பெற, அணியின் ஓட்ட எண்ணிக்கை 54 ஆக இருந்தபோது அவரும் அநாவசிய ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 16 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு துடுப்பெடுத்தாடி வந்தது. ஒரு பக்கத்தில் உபுல் தரங்கவும் மறு பக்கத்தில் அதிரடி ஆட்டக்காரரான குசல் பெரேராவும் ஆடிவர அணியின் ஓட்ட எண்ணிக்கை சுமூகமான நிலைக்கு திரும்பியது.

இருப்பினும் 20 ஆவது ஓவரை வீச ஆப்கானின் சுழல் புயல் ரஷித் கான் பந்தை கையில் எடுக்க அவரின் ஐந்தாவது பந்திலேயே குசல் பெரேரா 17 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரின் வெளியேற்றத்தை தொடர்ந்து அடுத்தபடியாக உபுல் தரங்கவும் 36 குல்பாடின் நாபியின் பந்து வீச்சில் அஸ்கரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸும் செஹான் ஜெயசூரியவும் ஜோடி சேர்ந்து ஆடிவர இலங்கை அணி 25.1 ஓவரில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை கடந்தது. 27.1 ஓவரில் செஹான் ஜெயசூரிய இரண்டு ஓட்டங்களை பெற்றுக் கொள்ள முயன்ற போது அநாவசியாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க திஸர பெரோரா ஆடுகளம் புகுந்து துடுப்பெடுத்தாடி வர 30 ஓவர்களுக்கு இலங்கை அணி ஐந்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து 116 ஓட்டங்களை பெற்று நிலைகுலைந்தது.

தொடர்ந்தும் 34. ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸும் ஆட்டமிழக்க இலங்கை அணி நாடு திரும்புவதற்கு பெட்டியை கட்டுவது உறுதியானது, அவரைத் தொடர்ந்து அடுத்து களமிறங்கிய தசூன் சானக்கவும் இரண்டு பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு முஜிபுர் ரஹ்மானுடைய பந்தில் டக்கவுட் ஆனார்.

அதற்கு அடுத்தபடியாக களமிறங்கிய அகில தனஞ்சயவும் இரண்டு ஒட்டத்துடன் 38.2 ஓவரில் குல்பாடின் நாபியின் பந்து வீச்சில் போல்ட்முறையில் ஆட்டமிழக்க, மலிங்க களமிறங்கி துடுப்பெடுத்தாடி வர இலங்கை அணி 40 ஓவர்களுக்கு 156 ஓடத்தை பெற, 40.2 ஆவது ஓவரில் திஸரவும் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ரஷித் கானுடைய சுழலில் சிக்கி மலிங்க ஆட்டமிழக்க, இலங்கை அணி 41.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 91 ஓட்டங்களினால் ஆப்கானிஸ்தானிடம் சரணடைந்தது.

aff1.jpg

அத்துடன் 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் முதல் அணி என்ற பெயரையும் பதித்துள்ளது.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முஜிபுர் ரஹ்மான், குல்பாடின் நாபி, மொஹமட் நாபி, ரஷித் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

நாளை துபாயில் நடைபெறவுள்ள 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40600

  • தொடங்கியவர்

தோனியின் பேட்டிங் நிலை என்ன? - ரோஹித் சர்மா சூசகம்

 

 
rohit%20sharma-dhoni

படம். | அகிலேஷ் குமார்.

நாளை ஹாங்காங் அணியுடன் இந்திய அணி ஆசியக் கோப்பை முதல் போட்டியில் களம் காண்கிறது. இதுவரை பாகிஸ்தான் ஹாங்காங்கையும் வங்கதேசம் இலங்கையையும் வீழ்த்தியுள்ளது. இன்று இலங்கை-ஆப்கான் அணிகள் விளையாடி வருகின்றன.

அதாவது 3, 4, 6-ம் இடங்களுக்கு பொருத்தமான வீரர்களைத் தேர்வு செய்து அந்த இடங்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும் என்று ரோஹித் சர்மா கூறியதை வைத்துப் பார்க்கும் போது தோனியின் நிலை 5ம் இடம் என்று ரோஹித் சர்மா சூசகமாகத் தெரிவிப்பதைக் காட்டியுள்ளது.

 

இந்நிலையில் பேட்டிங் வரிசை உள்ளிட்டவை பற்றி ரோஹித் சர்மா வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

இந்திய பேட்டிங் வரிசையில் நம்பர் 3, 4, 6ம் இடங்களை வீரர்கள் பிடித்துக் கொள்ளலாம். கேதார், மணிஷ், ராயுடு அந்த இடங்களைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். இந்தத் தொடரில் நிறைய பேருக்கு வாய்ப்பு அளிக்கப் போகிறோம். குறிப்பாக இந்தத் தொடரில் பேட்டிங் வரிசை 4 மற்றும் 6ம் இடங்களில் இறங்கும் வீரர்களை நிரந்தர வீரர்களாக்க வேண்டிய தேவை உள்ளது.

ராயுடு, கேதார் ஜாதவ் அணியின் முக்கியமான வீரர்கல். இவர்கள் மீண்டும் அணியுடன் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. இவர்கள் இந்திய அணிக்கு போட்டிகளை வெற்றிப் பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்,

பவுலர்களை சுழற்சி முறையில் தேர்ந்தெடுப்பது பற்றி இப்போதைக்கு நான் சிந்திக்கவில்லை. பல்தரப்பட்ட மேட்ச் சூழ்நிலையில் தனிப்பட்ட பவுலர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறோம். அதே வேளையில் நிறைய பேருக்கு வாய்ப்பு அளிக்கவும் விரும்புகிறோம்.

இதில் சீரான முறையில் நன்றாக வீசுபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்குவோம். சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை எடுக்கும் வீரர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.

நிறைய பேர் இங்கிலாந்திலிருந்து வருவதால் இங்கு இருக்கும் உஷ்ணம் பெரிய சவால்தான். இப்போது 4 நாட்களாக இங்கு இருக்கிறோம்.

ஆம் சூழல் நினைப்பது போல் அவ்வளவு சுலபமல்ல. ஆனால் இப்போது ஆட்ட நேரம் அதில்தான் கவனம் செலுத்துவோம்.

இந்திய அணியின் கேப்டனாக பெரிய தொடரில் களமிறங்குகிறேன், எனக்கு உற்சாகமாகவும் உள்ளது பதற்றமாகவும் உள்ளது. எனக்கு அனைத்து வீரர்களிடமும் நல்ல பழக்கம் உள்ளது, நான் அவர்களைச் சரியாக புரிந்து கொள்கிறேன், இது அவசியமானது.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

https://tamil.thehindu.com/sports/article24969974.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

ஆசியக் கோப்பை: இலங்கையை வீட்டுக்கு அனுப்பியது ஆப்கான்; ஸ்பின்னில் மடிந்து அதிர்ச்சி

 

 
afghan

வெற்றி பெற்ற ஆப்கன் அணி மகிழ்ச்சியில். |ஏ.எப்.பி.

அபுதாபியில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் பி ஆட்டத்தில் முதலில் வங்கதேசத்திடமும் பிறகு நேற்று ஆப்கானிஸ்தானிடமும் தோற்று இலங்கை அணி அதிர்ச்சி வெளியேற்றம் கண்டது.

5 முறை ஆசிய சாம்பியன்களான இலங்கை 3 நாட்களில் ஆசியக் கோப்பையிலிருந்து வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 
 

தொடக்கத்திலிருந்தே ஆப்கான் அணி பாசிட்டிவ் மனநிலையில் இருந்தனர், டாஸ் வென்ற ஆப்கன் கேப்டன் அஸ்கர் தயங்காமல் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். நல்ல தொடக்கம் கண்டதோடு அந்த மந்தமான பிட்சில் 249 ரன்கள் என்ற மரியாதையான இலக்கை எட்டியது. பிறகு ஸ்பின்னர்களை வைத்து இலங்கையை 158 ரன்களுக்குச் சுருட்டி 91 ரன்களில் அபார வெற்றி பெற்று இலங்கையின் ஆசியக் கோப்பை கனவுகளைத் தகர்த்தது.

சூப்பர் 4 சுற்றுக்கு ஆப்கான், வங்கதேசத்துடன் தகுதி பெற்றது.

பேட்டிங்கில் படுமோசமாக தனக்குத் தானே இலங்கை அணி குழிதோண்டிக்கொண்டது, அதே போல் ஆப்கன் அணியின் அதிகபட்ச ஸ்கோரை எடுத்த ரஹ்மத் (72) கொடுத்த கேட்சை விட்டது, ஏகப்பட்ட மிஸ்பீல்டிங்குகள், ரன் அவுட் வாய்ப்புகளைக் கோட்டை விட்டது இலங்கை வீடுதிரும்ப காரணங்களாயின.

இலக்கை விரட்டும்போது எந்த ஒரு அர்த்தமும் அவர்களது பேட்டிங்கில் தெரியவில்லை, குசல் மெண்டிஸ் 2வது பந்தில் முஜீப் உர் ரஹ்மானின் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். அதன் பிறகே மோசமான ஷாட் தேர்வுகள், டிசில்வா, ஜெயசூரியா ஆகியோரது அகால ரன் அவுட்கள் இலங்கைக்கு ஆணியடித்தன.

நயீப், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், மொகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இலங்கை இன்னிங்ஸில் நம்பிக்கை தந்த இரண்டு கணங்கள், ஒன்று 2வது விக்கெட்டுக்காக தரங்கா, தனஞ்ஜயா 54 ரன்களைச் சேர்த்தது, இந்த கூட்டணி மோசமான ரன் அவுட்டினால் முடிந்தது, தனஞ்ஜய டிசில்வா 2வது ரன்னை ஓடியே தீருவேன் என்று அடம்பிடிக்க டிசில்வாவும் தரங்காவும் ஒரே முனையில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க ரன் அவுட் ஆனார் டிசில்வா.

பெரேரா 17 ரன்களில் ரஷீத் கானின் முதல் ஓவரிலேயே ஸ்வீப் ஆட முடியாத பந்தை ஆடி பவுல்டு ஆனார். தரங்கா உடனேயே தடவலான 36 ரன்களுடனும் டிசில்வா விக்கெட்டை எடுத்தும் (ரன் அவுட்டுக்கு இவரும் காரணம்) நயீப் பந்தை மிட் ஆஃப் கையில் கொடுத்து வெளியேறினார்.

ஜெயசூரியா ரன் அவுட்டுக்கு கேப்டன் மேத்யூஸ் பிரதான காரணமானார் மிட்விக்கெட்டில் அடித்த ஷாட்டுக்கு யெஸ், நோ என்று கபடி விளையாட ஜெயசூரியா ரன் அவுட் ஆனார் இலங்கை 108/5.

rahmat%20shahjpg

ரஹ்மத் ஷா. அரைசதம். | ஏ.பி.

 

மேத்யூஸ், பெரேரா மீட்க நினைக்கையில் 22 ரன்களில் மேத்யூஸ் லாங் ஆனில் கேட்ச் ஆகி வெளியேறினார். பெரேரா 28 ரன்களில் குல்பதின் நயீப் பந்தில் பவுல்டு ஆகி வெளியேற இலங்கை 156/9 என்று ஆனது. முன்னதாக ஷனகா, தனஞ்ஜயா சொற்ப ரன்களில் வெளியேறினர், மலிங்கா ரஷீத் கானிடம் எல்.பி. ஆகி வெளியேறினார். 41.2 ஓவர்களில் 158 ரன்களில் சுருண்டு ‘வீடு’பேறு எய்தியது.

மாறாக ஆப்கான் அணி பேட்டிங்கில் நிலையாக ஆடினர் தொடக்கத்தில் மொகமது ஷஜாத் (34), இசானுல்லா (45) முதல் விக்கெட்டுக்காக 57 ரன்களைச் சேர்த்தனர். இருவருமே தனஞ்ஜெயாவிடம் எல்.பி. ஆகி வெளியேறினர். 25 ஓவர்களில் 107/2 என்று கப்பல் திசைமாறாமல் சென்றது. கேப்டன் அஸ்கர் 1 ரன்னில் ஜெயசூரியாவிடம் எல்.பி.ஆக 108/3 என்று ஆனபோது இலங்கை நெருக்கத் தவறிவிட்டது. ரஹ்மத் ஷா அபாரமாக இன்னிங்சை கட்டமைத்தார், பரந்த களவியூகத்தில் சிங்கிள்களை, இரண்டுகளை எடுத்ததோடு அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்தார்.

எல்.பி.வாய்ப்பை நன்றாகக் கணித்த ரஹ்மத் ஷா, சாதுரியமாக நேர் பந்துகளை மட்டையை வீசாமல் தடுத்தாடினார். 44வது பந்தில்தான் முதல் பவுண்டரி அடித்தார் ரஹ்மத் ஷா. ஆனால் மிட் ஆன் மேல் தூக்கி பவுண்டரி அடித்து 63 பந்துகளில் அரைசதம் எடுத்தார். 90 பந்துகளில் 72 ரன்கள் எடுத்த ரஹ்மத் ஷா ரன் விகிதத்தை ஏற்ற நினைத்து சமீரா பந்தில் டீப்பில் கேட்ச் ஆனார்.

முடிவு ஓவர்களில் இலங்கை அணி கொஞ்சம் நன்றாக வீசினர், பெரேரா 9 ஓவர்களில் 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள். மலிங்கா அன்று 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார் நேற்று 10 ஓவர்களில் 66 ரன்கள் விளாசப்பட்டார். மொத்த ரன் விகிதமே 5 ரன்களுக்குக் குறைவு ஆனால் மலிங்கா கொடுத்த ரன்கள் ஓவருக்கு 6.6. ரஷீத் கான் 13 ரன்களுக்கு பிரமாதமாக ஆடினார், ஆனால் அவரை இன்னும் கொஞ்சம் முன்னால் களமிறக்கும் முயற்சியை ஆப்கான் மேற்கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமே.

மொத்தத்தில் ஒரு அருமையான முனைப்புடன் கூடிய வெற்றிக்கான கிரிக்கெட்டை ஆப்கான் ஆட, கேட்ச் ட்ராப், மிஸ்பீல்டிங், பேட்டிங்கில் ரன் அவுட்கள், தவறான ஷாட்கள் என்று இலங்கை அணி படுமோசமாக ஆடித் தோற்றது.

https://tamil.thehindu.com/sports/article24973845.ece

 

 

 

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - ஹாங்காங் இன்று மோதல்

rohit%202

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா :கோப்புப் படம்   -  படம்: கெட்டி இமேஜஸ்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

6 நாடுகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடை பெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஹாங்காங் அணியுடன் இன்று மோதுகிறது. இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் நாளை பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ள நிலையில் ஹாங்காங் அணிக்கு எதிரான இன்றைய மோதல் சிறந்த பயிற்சியாக இருக்கும் என கருதப்படுகிறது.

 

ஹாங்காங் அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஒருதலை பட்சமாகவே அமைந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹாங்காங் அணி 116 ரன்களில் சுருண்டிருந்தது. இதனால் வலிமை யான இந்திய அணிக்கு எதிரான இன்றைய ஆட்டமும் ஹாங்காங் அணிக்கு கடும் சோதனையாகவே இருக்கும். ஏதேனும் அதிசயம் நடைபெற்றால் மட்டுமே அவர் களால் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்துவதற்கான முன் னேற்றத்தை காண முடியும்.

இந்தத் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. பேட்டிங்கில் ரோஹித் சர்மாவுடன் ஷிகர் தவண், கே.எல்.ராகுல்,கேதார் ஜாதவ், அம்பதி ராயுடு, தோனி, ஹர்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். பந்து வீச்சில் புவனேஷ் வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுவேந் திரா சாஹல், குல்தீப் யாதவ் கூட் டணி சவால் கொடுக்க தயாராக உள்ளது. உலகக் கோப்பை தொட ருக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் ஆசிய கோப்பையில் மிடில் ஆர்டர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய அணி முயற்சிக்கக்கூடும்.

மேலும் தோனியின் பேட்டிங் வரிசை இந்தத் தொடரில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். கேதார் ஜாதவ் அல்லது மணீஷ் பாண்டே 6-வது இடத்தில் களறமிங்கும் பட்சத்தில் தோனி 5-வது வீரராகவும், ஹர்திக் பாண்டியா 7-வது வீரராகவும் விளையாட வாய்ப்பு உள்ளது.கே.எல்.ராகுல் 3-வது வீரராகவும், அம்பதி ராயுடு 4-வது வீரராகவும் இடம் பெறக்கூடும். இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு பாகிஸ்தானின் முகமது அமிர், ஹசன் அலி, உஸ்மான் கான் ஆகியோரைக் கொண்ட வேகக் கூட்டணி சவால் அளிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

இதில் ஹசன் அலியை தவிர மற்ற இருவரும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள். இத னால் இவர்களை சமாளிக்க இலங் கையைச் சேர்ந்த இடது கை ‘த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட்களை’ கொண்டு இந்திய அணிக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வலைப்பயிற்சியில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமதுவும் அதிகளவில் பயன் படுத்தப்பட்டுள்ளார். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில் பும்ராவுடன் இணைந்து செயல்பட உள்ளார்.

இதேபோல் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணியும் சிறிது கால இடைவேளைக்குப் பிறகு இணைந்து செயல்பட உள் ளது. இந்த சுழல் கூட்டணியை இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணி எதிர்கொண்டது இல்லை. இதனால் இவர்கள் நெருக்கடி கொடுக்கக் கூடும் என கருதப்படுகிறது. பாகிஸ் தான் அணியில் பேட்டிங்கில் பஹர் ஸமான், பாபர் அசாம், இமாம் உல் ஹக் ஆகியோர் நல்ல பார்மில் உள் ளனர். இவர்களுடன் அனுபவம் வாய்ந்த ஷோயிப் மாலிக் பலம் சேர்ப்பவராக உள்ளார்.

அணிகள் விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், அம்பதி ராயுடு, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், யுவவேந்திர சாஹல், ஷர்துல் தாக்குர், கலீல் அகமது.

ஹாங்காங்: அன்சுமன் ரத் (கேப்டன்), அய்ஸாஸ் கான், பாபர் ஹயாத், கேமரான் மெக்அலுசன், கிறிஸ்டோபர் கார்டர், இஷன் கான், இஷன் நவாஸ், அர்ஷத் மொகமது, கின்சிட் ஷா, நதீம் அஹ் மத், மெக்கேனி, தன்வீர் அஹ்மத், தன்விர் அஃப்ஸல், வாக்காஸ் கான், அஃப்தாப் ஹூசைன்.நேரம்: மாலை 5

https://tamil.thehindu.com/sports/article24974304.ece

  • தொடங்கியவர்

பலமிக்க இந்தியாவுக்கு சவால் விடுமா ஹொங்கொங்? - முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இந்தியா

 

இந்தியா மற்றும் ஹொங்கொங் அணிகள் மோதும் 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டி, இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் ஆரம்பமாகவுள்ளது.

rohith.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஹொங்கொங் அணித் தலைவர் அன்சுமன் ரத் முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தார்.

அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

ஆசியக் கிண்ணத் தொடர்களில் இதுவரை ஆறு முறை சம்பியனாக இருக்கும் இந்திய அணியை ஹொங்கொங் அணி எதிர்கொள்ளவுள்ள நிலையில் இப் போட்டி அவர்களுக்கு மிகவும் முக்கியமானதொரு போட்டியாக அமைந்திருக்கிறது.

காரணம் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முடிந்த பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் ஹொங்கொங் அணி தோல்வியைத் தழுவிக் கொண்டதனால் இதில் வெற்றியீட்டினால் மாத்திரமே அடுத்த சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பின பெறும்.

அவ்வாறு இல்லையெனில்  இலங்கைக்கு அணிக்கு அடுத்தபடியாக தொடரிலிருந்து ஹொங்கொங் அணியும் வெளியேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40652

  • தொடங்கியவர்

அடேய்... நீங்க முன்னாள் சாம்பியன்ஸ்டா: இலங்கை அணி தோல்வி குறித்து நெட்டிசன்கள் கிண்டல்

 

 
jnpng

அபுதாபியில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் பி ஆட்டத்தில் வங்க தேசத்திடமும் மற்றும் ஆப்கானிஸ்தானிடமும்  அடுத்தடுத்து தோல்வியுற்ற இலங்கை அணி ஆசியக் கோப்பையிலிருந்து வெளியேறியது.

5 முறை ஆசிய சாம்பியனான இலங்கை அணி வெளியேறியது குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.. அவற்றின் தொகுப்பு

 

KING  

‏இந்தியா இன்னும் ஆட கூட ஆரம்பிக்கல. அதுக்குள்ள இலங்கை டோர்னமென்ட்டை விட்டு வெளிய போய்டுச்சி.

சங்ககார,  தில்சன், ஜெயவர்தனே இவங்க போனதும் அந்த நாட்டைத் தூக்கி நிறுத்த யாருமே இல்லாம போய்டுச்சி .

சிவகாசிக்காரன்

‏பங்களாதேஷ் கிட்ட தோற்ற கையோட ஆப்கனிஸ்தான் கிட்டயும் தோற்றுப் போட்டாய்ங்க போலயே..

அடேய் இலங்கை அணி, நீங்க முன்னாள் சாம்பியன்ஸ்டா...

ℳя.மினி சில்ற

ஆப்கன் அணி பலம்புறதை விட இலங்கை அணி பலவீனமா இருக்குங்கிறது தான் உண்மை..

வெயில்

‏வாழ்ந்து கெட்ட கிரிக்கெட்  டீம் இலங்கை

oshan - ARVLOSHAN

‏இன்னும் எத்தனை தோல்விகள்?

இலங்கை அணி எந்தெந்த அணிகளிடம் இன்னும் தோல்வியடைவில்லை?

பிரகாஷ்ரெய்னா

‏World cup ஜெயித்த அணி என்றும் பாராமல் துவைத்து துவம்சம் செய்துவிட்டனர்

கோ. கார்த்திக் பாரதி

‏இலங்கையை முதல்ல வங்காள தேசம் தூக்கிப்போட்டு மிதி மிதின்னு மிதிச்சுது. இப்ப ஆப்கானிஸ்தான் வெளு வெளுன்னு வெளுத்துருச்சு. அடுத்து அந்த ஹாங்காங் அணியையும் விடுங்கடா அவிங்களும் அடிச்சுப் பழகட்டும்..

Stranger 

‏இந்தியாகாரன் ஓரு மேட்ச் கூட விளையாடலடா.

ஆனா நீங்க பெட்டிப் படுக்கைய கட்டிட்டீங்க

THANI ORUVAN      

‏#இலங்கை சோளமுத்தா  போச்சா. கொஞ்ச நஞ்ச வாயா பேசுன நீ. என்னா அடி.  அம்புட்டும் ஜோக்கர்ஸ்

Pablo

‏ஒரு காலத்துல மாஸா இருந்தயா நீ... இப்போ தாமாஷ் ஆயிட்ட..

https://tamil.thehindu.com/opinion/blogs/article24976496.ece

 

 

 

6.png&h=42&w=42

67/1 * (11.4/50 ov)
 
  • தொடங்கியவர்

தவான் தொடக்கி வைத்தாலும் முடித்து வைக்க எவரும் இல்லை ; ‍ஹொங்கொங்கிற்கு வெற்றியிலக்கு 286 

 

 
 

ஹொங்கொங் அணிக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டியில் தவானின் சதம் மற்றும் அம்பத் ராயுடுவின் அரை சதம் என்பவற்றின் துணையுடன் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டத்தை பெற்றுக் கொண்டது.

dawan5.jpg

அதன்படி நாணய சுழற்சியில் வெற்றயீட்டிய இந்திய அணி சார்பில் முதல் துடுப்பெடுத்தாட அணித் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர்.

இவர்கள் இருவரும் மாறி மாறி நான்கு ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை வேகமாக அதிகரித்தனர் அதன்படி இந்திய அணி 7.3 ஓவரில் 45 ஒட்டங்களை கடந்தது எனினும் 7.4 ஆவது பந்தில் அணித் தலைவர் ரோஹித் சர்மா 23 ஒட்டத்துடன் எஹ்சான் கானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து அம்பத் ராயுடு களம்புகுந்தாட ஹொங்கொங் அணியினருக்கு இந்திய அணியின் விக்கெட்டுக்களை வீழ்த்த வகுத்த  வியூகங்கள் அனைத்தும் தோற்றுப் போனது. அதற்கிணங்க 16 ஓவர்களின் போது இந்திய அணி ஒரு விக்கெட்டினை 86 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையிலிருந்தது.

தொடர்ந்தும் அதிரடி காட்டி வந்த தவான் 19.1 ஆவது ஒவரில் அரை சதம் விளாசி, 19.4 ஆவது ஓவரில் தவான் மேலும் ஒரு நான்கு ஓட்டத்தை பெற அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஐ கடந்தது. 

dawan1.jpg

25 ஆவது ஓவரில் இந்திய அணி 135 ஓட்டத்தை பெற்றுக் கொள்ள தவான் 75 ஓட்டத்துடனும் ராயுடு 39 ஓட்டத்துடனும் கத்துக் குடிக்களை பந்தாடி வந்தனர்.

26.4 ஆவது ஓவரில் இவர்கள் இருவருமாக இணைந்து 100 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததைத் தொடர்ந்து ராயுடு எதிர்கொண்ட 63 ஆவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை பெற்று அரை சதம் கடக்க, இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 ஐ கடந்தது.

raydu.jpg

29.2 ஆவது ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 162 இருக்கும்போது ராயுடு 60 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க தினேஷ் கார்த்திக் ஆடுகளம் நுழைந்து தவானுடன் கைகோர்த்தார். அதைத் தொடர்ந்து ஆரம்ப துடுப்பாட்டக்காரராக களமிறங்கி தொடர்ந்தும் அதிரடி காட்டி வந்த தவான் 105 பந்துகளை எதிர்கொண்டு 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 14 சதத்தை பூர்த்தி செய்தார்.

dawan4.jpg

தவான் மற்றும் தினேஷ் கார்த்திக் இணைந்து தொடர்ந்தும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 40 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டத்தை பெற்றது. எனினும் 40.4 ஆவது ஓவரில் தவான் 127 ஓட்டத்துடன் கின்சித் ஷாவுடைய பந்து வீச்சில் ஆட்டமிழக்க, களமிறங்கிய தோனியும் எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அதையடுத்து தினேஷ் கார்த்தக்கும் 33 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி 42.5 ஓவர்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இதேவேளை இவர்களின் ஆட்டமிழப்பை தொடர்ந்து புவனேஸ் குமார் மற்றும் யாதவ் ஜோடி சேர்ந்தாட அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகம் குறைவடைந்தது. அதன்படி 48.4 ஆவது ஒவரில் புவனேஷ் குமாரும் ஆட்டமிழக்க இந்திய அணி தனது 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

போட்டியில் அதிரடியான ஆட்டத்தை தவான் ஆரம்பத்தில் தொடக்கி வைத்தாலும் முடிவில் எவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தாததனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, ஹொங்கொங் அணிக்கு வெற்றியிலக்காக 286 ஓட்டத்தை நிர்ணயித்தது.

பந்துவீச்சில் ஹொங்கொங் அணி சார்பில் கின்சித் ஷா மூன்று விக்கெட்டுக்களையும், எஹ்சான் கான் இரண்டு விக்கெட்டுக்களையும், நவாஸ் மற்றும் அலிஸ் கான் ஒரு விக்கெட்டினையும்  வீழ்த்தினர்.

http://www.virakesari.lk/article/40677

 

19.png&h=42&w=42

80/0 * (12.6/50 ov, target 286)
 
  • தொடங்கியவர்

ஆசியக்கிண்ண கிரிக்கெட் படுதோல்வி – ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் மத்தியூஸ்

 

 

angelo-mathews.jpg

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வியடைந்த இலங்கை அணி மீது கடும் விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அணித்தலைவரான அஞ்சலோ மத்தியூஸ் ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் “எமது இந்தத் தோல்வி முழு நாட்டுக்கும் இழுக்கு. அதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நாம் சிறப்பாக விளையாடவில்லை. முதல் போட்டியிலும் நாம் 150 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தோம்.

இந்தப் போட்டியிலும் அவ்வாறே. துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காத காரணத்தாலேயே நாம் இந்தத் தோல்விகளை சந்தித்தோம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.

களத்தடுப்பில் நாம் உயர் மட்டத்தில் செயற்படாவிட்டாலும் இரண்டு போட்டிகளிலும் எம்மால் 250 ஓட்டங்களை எட்டியிருக்க முடியும். ஆகவே, இந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைய துடுப்பாட்ட வீரர்களே காரணம்.” என மத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/ஆசியக்கிண்ண-கிரிக்கெட்-ப/

  • தொடங்கியவர்

 

19.png&h=42&w=42

167/0 * (33/50 ov, target 286)
 
  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவின் கிரிக்கெட் திமிரை.. பங்களாதேஷும் ஆப்கானிஸ்தானும் போதும்.. அடக்கிக்காட்ட.

எனி சொறீலங்கா இதிலும் சீனா.. இஸ்ரேல்.. ரஷ்சியா.. ஹிந்தியா.. பாகிஸ்தான்..அமெரிக்கா.. பிரிட்டன்.. ஜப்பான்.. அவுஸ்திரேலியா.. லிபியா.. கியூபான்னு.. போய் 15 நாடுகளில் இருந்து ஆளுக்கொருத்தரை இழுத்து வந்து ரீம் அமைச்சு.. தமிழர்களை கொல்லுறம் என்று நினைச்சுக் கொண்டு விளையாடினாலும்.. இப்படி ஒரு அவமானத் தோல்வியில் இருந்து சொறீலங்கா மீள முடியாது.

சொறீலங்கா.. ஆப்கானிஸ்தானிடம் தோற்று.. தொடரில் இருந்து அடித்து விரட்டப்பட்ட நாள்.. அந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். ?

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இந்தியாவிற்கு சாதகமான வகையில் அட்டவணை மாற்றியமைப்பு- பாகிஸ்தான் கேப்டன் ஆதங்கம்

 
அ-அ+

இந்தியாவிற்கு சாதகமான வகையில் போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் கேப்டன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். #AsiaCup2018 #INDvPAK

 
 
 
 
இந்தியாவிற்கு சாதகமான வகையில் அட்டவணை மாற்றியமைப்பு- பாகிஸ்தான் கேப்டன் ஆதங்கம்
 
இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளான துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான தொடக்க கால ஆட்டவணையில் இந்தியா சில போட்டிகளில் அபு தாபியில் விளையாடும் வகையில் இருந்தது.

அதன்பின் இந்தியாவின் அனைத்து போட்டிகளிலும் துபாயில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை மாற்றியமைக்கப்பட்டடு. இது இந்தியாவிற்கு சாதகமானது என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 

201809182047169661_1_Ahmed001-s._L_styvpf.jpg

இதுகுறித்து சர்பிராஸ் கூறுகையில் ‘‘போட்டி அட்டவணையை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இந்தியா ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் தோற்றாலும் கூட, தொடர்ந்து துபாயில் விளையாட முடியும். அபுதாபிக்கும் துபாயிக்கும் டிராவல் செய்யும் பிரச்சனை உள்ளது. 90 நிமிடங்கள் பயணம் செய்து, பின்னர் விளையாட வேண்டும். அதன்பின் ஒருநாள் இடைவெளியில் அடுத்த போட்டியில் களம் இறங்க வேண்டும்.

இது அனைத்து அணிகளுக்கும் ஒரே மாதிரியாக இருந்திருக்க வேண்டும். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏன் இதுபோன்று நினைத்தது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த பிரச்சனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கையில் எடுக்க வேண்டும்’’ என்றார்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/18204717/1192219/Asia-Cup-2018-Pakistan-captain-Sarfraz-Ahmed-hints.vpf

  • கருத்துக்கள உறவுகள்

19.png&h=42&w=42

178/2 * (37.1/50 ov, target 286)
இனி கொங்கொங் தோற்றாலும் பறவாய் இல்லை.இந்தியாவை உலுக்கி எடுத்தாச்சு.பாக்கிஸ்தான் ரீம் நம்மதியாக நித்திரை கொள்ளும்
  • தொடங்கியவர்

வீணானது கான் - அன்சுமன் ஜோடியின் போராட்டம் ; 26 ஓட்டத்தினால் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா

 

ஹொங்கொங் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி ஹொங்கொங் அணியை 259 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி 26 ஓட்டத்தினால் முதல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

hong1.jpg

 

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஹொங்கொங் அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இந்திய அணியை பணித்தது. இதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பாக தவான் 127 ஓட்டத்தையும், ராயுடு 60 ஓட்டத்தையும் தினேஷ் கார்த்திக் 33 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர். 

dawan5.jpg

286 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஹொங்கொங் அணிக்கு ஆரம்பமே அமோகமாக அமைந்தது. அதன்படி ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கிய நிஜாக்கத் கான் மற்றும் அணித் தலைவர் அன்சுமன் ரத் பலமான ஒரு அடித்தளத்தை பெற்றுக் கொடுத்தனர்.

இந்த ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சாளார்களை திணற விட 9.2 ஓவர்களுக்கு அணி 50 ஓட்டங்களை கடந்தது முதல் 10 ஓவர்களின் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 56 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

12 ஆவது ஓவருக்காக ஷர்டுல் தாகூர் பந்துப் பறிமாற்ற அந்த ஓவர் ஹொங்கொங் அணிக்கு மேலதிகமான ஓட்டங்களை அள்ளிக் கொடுத்தது. அதற்கிணங்க அந்த ஓவரில் ஷர்டுல் தாகூர், மூன்று நோபோல்களையும் ஒரு உதிரி ஓட்டம் அடங்கலாக அந்த ஓவரில் 17 ஓட்டங்களை அள்ளிக் கொடுக்க, அதே ஓவரில் நிஜாக்கத் கான் 45 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் கடந்தார்.

hong2.jpg

ஒரு கட்டத்தில் ஹொங்கொங் அணி 17.4 ஓவர்களுக்கு ஏதுவித விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்களை தொட்டது. நிஜாக்கத் கான் 59 ஓட்டத்துடனும் அணித் தலைவர்  அன்சுமன் ரத் 32 ஓட்டத்துடனும் ஆடி வந்தனர்.

28.2 ஆவது ஓவரில் அன்சுமன் ரத் 75 பந்துகளை எதிர்கொண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 7 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்ததுடன் 30.4 ஆவது பந்தில் நிஜாக்கத் கான் ஒரு நான்கு ஓட்டத்தை பெற்றுக் கொள்ள அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 ஐ தொட்டது.

hon2.jpg

இந் நிலையில் 34.1 ஓவரில் அன்சுமன் ரத் 73 ஓட்டத்துடன் குல்தீப் யாதவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதன்படி ஹொங்கொங் அணி 174 ஓட்டத்துக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. அன்சுமன் ரத் வெளியேற பாபர் ஹயத் ஆடுகளம் நுழைந்தார்.

92 ஓட்டத்துடன் ஆடிவந்த நிஜாக்கத் கான் கலீல் அமீட்டுடைய பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க ‍ஹொங்கொங் அணி தடுமாற ஆரம்பித்தது. மேலும் 39.1 ஓவரில் கிறிஸ்டோபர் கார்ட்டர் மூன்று ஓட்டத்துடன் கலீலுடைய பந்து வீச்சில் தோனியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து அதிரயாக ஆடத் தொடங்கிய பாபர் ஹயத்தும் 40.2 ஆவது ஓவரில் 18 ஓட்டத்துடன்  ஆட்டமிழக்க, ஹொங்கொங் அணி 199 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களை இழந்து இக் கட்டான நிலைக்கு போனது.

44.2 ஆவது ஓவரில் கின்சித் ஷாவும் சாஹலுடைய பந்து வீச்சில் தவானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த அலிஸ் கானும் சஹாலுடைய பந்தில் டக்கவுட் முறையில் ஆட்டமிழக்க ஹொங்கொங் அணி 228 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

50 ஓவர்களின் முடிவில் ஹொங்கொங் அணி 8  விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 26 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பினை இழந்தது. 

ind.jpg

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் சாஹல், கலீல் அஹமட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

ஆசியக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நா‍ளை மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/40687

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.