Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவைச் சமாளிக்க அபிவிருத்திச் செயலணியா?

Featured Replies

சிங்கள ஆட்சியாளர்கள் காலத்துக்கு காலம் நம்மை ஏமாற்றுகின்றனர் என்பது தெரிந்த உண்மை.
எனினும் அந்த ஏமாற்றங்களைப் புரிந்து கொள்ளாமல் நம் அரசியல் தலைமை நடந்து கொள்கிறதா? என்றால் இல்லை. தமிழ் அரசி யல் தலைமைக்கும் தெரிகிறது எனும்போது தனித்து தமிழ் மக்கள்தான் ஏமாறுகிறார்கள் என்பது நிஜமாகிறது.

இதை நாம் கூறும்போது, சிங்கள ஆட்சி யாளர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் நம் தமிழ் அரசியல் தலைமை எதற்காக அரசாங்கத்துடன் இணைகிறது என்ற கேள்வி எழும்.

இங்குதான் நேர்மையான அரசியல் தலை வர்களின் பஞ்சத்தை தமிழினம் அனுபவிக்கின்றது எனக் கூறிக் கொள்ள முடியும்.

ஆம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இரண்டு கோடி ரூபாய் இலஞ்சமாக வழங்கப்பட்டது என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

அவர் கூறியது சரி; பிழை என்பதற்கப்பால், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவ சக்தி ஆனந்தன் தான் சார்ந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தலைக்கு இரண்டு கோடி ரூபாயை இலஞ்சமாகப் பெற் றுக் கொண்டனர் எனக் கூறும்போது,

அதனை நிறுதிட்டமாக நிராகரிப்பது சம்பந் தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை யாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் குற்றச்சாட்டை கவனத்தில் எடுக்காததுபோல் கூட்டமைப்பு நடந்து கொண்டது.

இதன் அடுத்த கட்டமாக, கூட்டமைப்பு செல் வாக்கையும் பணத்தையும்தான் எதிர்பார்க் கிறது என வடக்கு மாகாண முதலமைச்சர் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக் களை பார்க்கும்போது, அபிவிருத்திச் செய லணியில் பங்குபற்றுவதன் பின்னணி என்ன வாக இருக்கும் என்ற ஊகங்கள் தவிர்க்க முடியாததே.

அதாவது அபிவிருத்திச் செயலணியில் பங் கேற்பது என்பது உண்மையில் அபிவிருத்தி கருதியதாக இருந்தாலும் குற்றச்சாட்டுக்களும் செயலணியின் போக்கும் பாதகமாக இருக் கும்போது, உண்மையான சிந்தனையும் ஐய வினாவுக்கு உட்படவே செய்யும்.

எதுவாயினும் அபிவிருத்திச் செயலணி இலங்கை அரசை ஜெனிவாவில் காப்பாற்று வதற்கானது என்று தமிழ்ப் பற்றாளர்கள் கூறிக் கொள்ளும் அதேநேரம், வடக்கு கிழக்கு அபி விருத்தியில் படையினரும் பங்கேற்பதால் அவர்கள் மீதான போர்க்குற்ற விசாரணை என்பது அர்த்தமற்றதாகி; இலங்கைப் படையினர் தமிழ் மக்களுக்காக மிகப்பெரும் அபி விருத்திப் பணிகளை முன்னெடுக்கின்றனர் என்பதாக நிலைமை மாறும்.

இதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திச் செயலணியில் பங்கேற்கிறது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

தவிர, சின்னஞ்சிறு பிள்ளைகளிடம் உங்கள் அப்பா ஆனந்தசுதாகரனை விடுதலை செய் வேன் என்று உறுதியளித்த ஜனாதிபதி அத னைச் செய்யவில்லை எனும்போது, சம்பந்த ருக்கு வழங்கிய அபிவிருத்தி என்ற உத்தர வாதத்தை மட்டும் நிறைவேற்றுவார் என்று எப்படி நம்ப முடியும் என்ற கேள்வியை முன்வைப்போர்,

ஜனாதிபதியைப் பொறுத்தவரை குழந்தைகளும் முதியவர்களும் ஒரே நிலைதான் எனத் தெரிகிறது என்கின்றனர். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=16839&ctype=news

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலுக்கு கொடுத்த காலக்கெடு வரும் மார்ச் இல் முடிகிறது. சர்வதேசத்தை தொடர்ந்தும் ஏமாற்ற  சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் தமது நிகழ்ச்சி நிரல்களை ஆரம்பித்துள்ளனர். அதற்காக தமிழின அழிப்பை தொடரும் பயங்கரவாதிகளான மைத்திரி, ரணில், மாரப்பன போன்ற பேர்வழிகள் தற்போது அடிக்கடி வடக்குக்கு பயணம் செய்கின்றனர். இந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் ஏமாற்று நாடகங்களுக்கு துணைபோக எட்டப்ப அரசியல் செய்யும் கைக்கூலிகள் சம்பந்தன், மாவை, சுமந்திரன், தமிழரசுக்கட்சி .... மீண்டும் களத்தில் இறங்கியுள்ளனர்.  

10 hours ago, Athavan CH said:

 

ஜெனிவாவைச் சமாளிக்க அபிவிருத்திச் செயலணியா?

நேர்மையான அரசியல் தலை வர்களின் பஞ்சத்தை தமிழினம் அனுபவிக்கின்றது

 

வேறு எதுக்கு சிங்கள அரசு குத்தி முறியப் போகுது?

  • தொடங்கியவர்

வடகிழக்கு செயலணி: பேரினவாத அரசை வெள்ளையடிக்கவா?

 

தமிழர் தாயகத்தின் மேம்பாட்டை உண்மையாகவே விரும்பும் எவரும் அதற்கான எந்தவொரு முயற்சிக்கும் தடையாக இருக்க மாட்டார்கள்.
ஆனால் ‘தமிழ் மக்களுக்கான நலத்திட்டங்கள்’ என்ற பெயரில் இலங்கை ஆட்சியாளர்களின் கபடத்தனமான மேலாதிக்க அரசியல் பொருளாதார நலன்களை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தொடர்பாக நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

180822%2BMyliddy%2Bharbour%2Binauguration


தமிழர் நலனுக்காக எத்தனை குழுக்கள், செயலணிகள்,திட்டங்கள். அத்தனையும் கசப்பான பட்டறிவையே எமக்குத் தந்து சென்றன.

எமது பகுதியின் மேம்பாட்டுக்குத் தேவையான கட்டமைப்புக்கள் ஏலவே
நிறைய உள்ளன. அவற்றை வலுப்படுத்துவதன் மூலம் சிறப்பாகச் செய்ய முடியும். உண்மையில் இங்கு தேவைப்படுவது ஆட்சியாளரின் மனமாற்றமே. இதுவரையான நல்லாட்சி அந்த நம்பிக்கையை எமக்குத் தரவில்லை
எதிர்காலத்திலும் அதற்கான வாய்ப்பில்லை.

அரச தலைவரின் செயலணியில் எமது தலைவர்கள் பங்கெடுப்பதன் மூலம் ஒப்பீட்டு ரீதியில் இலங்கை அரசு அடையப் போகும் நன்மைகளே (முக்கியமானவை தமிழர் நலனுக்கு எதிரானவை) அதிகம்.

உறுப்பினர்களின் தனிப்பட்ட அரசியல் நலன்,வழமையான திட்டங்களை பெரியளவில் பரப்புரை செய்வது,தவிர்க்க முடியாத ஒரு தரப்பாக இராணுவத்தை மாற்றுவது, ஆக்கிரமிப்புக்களுக்கு சட்ட
வலுவைப் வழங்குதல்,காலங்கடத்துதல் போன்றவற்றுக்கு அப்பால் எதுவும் இருக்கப் போவதில்லை.

இதை உணரும் நிலையிலும் இப்போது எம்மவர்கள் இல்லை.
தலைக்கு மேல் வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன?

அற நனைந்தவனுக்கு கூதலுமில்லை குளிருமில்லை.
 

https://www.tamilnaatham.org/2018/08/Kandiah-Arunthavabalan.html

  • கருத்துக்கள உறவுகள்
On 8/30/2018 at 4:23 AM, Athavan CH said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இரண்டு கோடி ரூபாய் இலஞ்சமாக வழங்கப்பட்டது என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

கையூட்டு அரசியல் அங்கிட்டும் இருக்கா ?  ரெல் மீ ..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.