Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

293 கோடி லாபம் பெறும் நிறுவனத்திடம், வெறும் 2 கோடி பெற்ற மாகாணசபை..

Featured Replies

293 கோடி லாபம் பெறும் நிறுவனத்திடம், வெறும் 2 கோடி பெற்ற மாகாணசபை..

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


வடமாகாணசபையின் பங்களிப்புடன் கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள யூலிப்பவர், பீற்றாபவர் நிறுவனங்களின் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்பில் வடமாகாணசபையில் கடுமையான விவாதம் இடம்பெற்றுள்ளது.

 

வடமாகாணசபையின் 130வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில்,

2014ம் ஆண்டு யுலிப்பவர், பீற்றாபவர் ஆகிய நிறுவனங்கள் பளை பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ஒன்றை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றை வடமாகாண சபையுடன் செய்துள்ளது.

இது தொடர்பாக அப்போது நான் சபையில் உரையாற்றும்போது குறித்த ஒப்பந்தம் வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்படவில்லை. என்பதை சுட்டிக்காட்டியதுடன் வெளிப்படைத் தன்மையுடன் செய்யப்பட்டிருந்தால் வணிக நிறுவனங்களுக்குரிய சமூக கடப்பாட்டு நிதியை பெற்றிருக்கலாம். என கூறியிருக்கிறேன்.

மேலும் முன்னாள் பேரவை செயலக செயலாளர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இயலாது. அவருக்கு அதற்கான அதிகாரம் இல்லை. என்பதையும் கூறியிருந்தேன்.

ஆனால் வடமாகாணசபை சட்டத்தின்படி அவர் கையொப்பமிடலாம். அங்கு வடமாகாணசபை செயலாளர் என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. என கூறினார்கள். ஆனால் மாகாணசபை நிறைவேற்று செயற்பாடுகள் தொடர்பாக  பிரதம செயலாளரே கையொப்பமிடவேண்டும். அதனை முதலமைச்சர் அறிந்திருக்கவில்லை.

மேலும் வடமாகாணசபை சட்டம் என ஒருசட்டம் இலங்கையில் எங்கும் இல்லை. பின்னர் அந்த ஒப்பந்தத்தில் கொள்கைரீதியான மாற்றங்களை செய்யாமல் அப்போதிருந்த ஆளுநர்  அந்த ஒப்பந்தத்தை மீள்வரைபு செய்தார். இந் நிலையில் 2016ம் ஆண்டு கண்காய்வு அறிக்கையில் நான் முன்னர் கூறியதற்கும் மேலதிகமாக சில தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து  வடமாகாணசபை வணிக நிறுவனங்களுக்கான சமூக கடப்பாட்டு நிதியாக 20 வருடங்களுக்கு 430 மில்லியன் ரூபாய் நிதியை பெறுகிறது. அதாவது முதல் 10 வருடங்களுக்கு 10 மில்லியன் ரூபாய் நிதியும், அடுத்த 10 வருடங்களுக்கு 23 மில்லியன் ரூபாய் நிதியும் கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் 2 வருடங்கள் மின்சார சபைக்கு மின்சாரத்தை வழங்கியமைக்காக 2933.8 மில்லியன் ரூபாய் நிதியை பெற்றுள்ளது. அதாவது 293 கோடி ருபாயை பெற்றுள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் மாகாணசபைக்கு கிடைக்கும் நிதி அற்பமானது. இதற்கு மேலாக கணக்காய்வு அறிக்கையில் குறித்த நிறுவனங்களுடன் மாகாணசபை செய்துள்ள ஒப்பந்தத்தில் பிரதம செயலாளர் கையொப்பமிட்டிருக்கவில்லை. காற்றாலை அமைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள காணி நோக்கம் குறிப்பிடப்பட்டு காணி ஆணையாளரிடமிருந்து அனுமதி பெறவில்லை.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முன்னர் மாகாணசபையின் அனுமதி பெறப்படவில்லை. மாகாணசபையின் பெயர் அல்லது அது சார்பாக கையொப்பமிட்ட ஒப்பந்தத்திற்கு சபை அனுமதி பெறப்படவில்லை. என்பன போன்ற சில அவதானங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை ஒரு பக்கம் இருக்க வடமாகாணசபையில் இருந்து இந்த ஒப்பந்தத்தை செய்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் அப்போதைய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் போன்றவர்கள் இந்த நிறுவனம் ஆரம்பிக்க முன்னர் அவர்களிடமிருந்து சாத்தியகூற்று  அறிக்கையினை பெற்றிருக்கவேண்டும். அதனடிப்படையில் அவர்களது மூலதனம், உற்பத்தி செலவு, உற்பத்தி செய்யப்படும் மின் வலுவின் அளவு, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை கணித்திருக்கலாம்.

அதன்படி வணிக நிறுவனங்களுக்கான சமூக கடப்பாட்டு நிதியை நிர்ணயம் செய்திருக்கவேண்டும். முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டதைபோல் மின்சார சபையிடமும், சுற்றுசூழல் அதிகாரசபையிடமும் அவர்கள் அங்கீகாரம் பெற்றிருந்தார்கள் எனவே தங்களால் எதுவும் செய்ய முடியாமல்போனது என்றால் எதற்காக அவசர.. அவசரமாக இரவில் முதலமைச்சருடைய வீட்டில் வைத்து ஒப்பந்தத்தை செய்து அதில் பேரவை செயலகத்தின் செயலாளரை கையொப்பமிட செய்தீர்கள்?

மேலும் 19.12.2014ம் திகதி அமர்வில் ஐங்கரநேசன் உரையாற்றும்போது காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஊடாக முதலமைச்சர் அ ந்த காற்றாலைகளை அமைப்பதற்கான காணியை 20 வருடங்களுக்கு வழங்கியுள்ளார். எனக்கூறியுள்ளார்.

குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் எல்லா அனுமதிகளையும் பெற்றுக்கொண்டே இங்கு வந்தது என்றால் எதற்காக நீங்கள் காணி கொடுத்தீர்கள்? மேலும் ஐங்கரநேசன் அப்போது உரையாற்றுகையில் சில இடங்களை நாங்கள் கொஞ்சம் அமைதியாகச் செய்யவேண்டிய தேவை உள்ளது என கூறினீர்கள். உண்மைதான் நீங்கள் எல்லாவற்றையும் மிக இரகசியமாகவே செய்துள்ளீர்கள். நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம் என்றார்.

தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் உரையாற்றுகையில், மாகாணசபை உருவாக்கப்பட்ட சில மாதங்களில் பளையில் ஒரு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் உருவாக்க முயற்சிக்கப்படுகிறது. அதற்காக தென்னிலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு எங்களுடைய அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பமிடுகிறார்கள் என எனக்கு தகவல் கிடைத்தது. அதனை நான் முதலமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு சென்றபோது அது தொடர்பாக நிபுணர்களின் கருத்துக்களை பெறுமாறு முதலமைச்சர் எனக்கு கூறினார்.

அதற்கமைய நான் சில நிபுணர்களை அணுகி கருத்துக்களை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மூவர்ணப்படங்களுடன் அப்போதைய அமைச்சர் ஐங்கரநேசனின் செய்தி ஊடகங்களில் வந்திருந்தது.  அந்த செய்தி வடமாகாணத்திற்கு வரும் பாரிய முதலீட்டை அமைச்சர் ஐங்கரநேசன் பார்வையிட்டார் என அந்த செய்தி அமைந்திருந்தது.

இங்கே நான் கேட்பது மின்சாரசபையின் கீழ் உள்ள பல கம்பனிகள் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க தயாராக இருந்தார்கள். அதுவும் இந்த யூலிப்பவர், பீற்றாப்பவர் ஆகிய நிறுவனங்கள் மின்சாரத்திற்கு அறவீடு செய்யும் நிதியிலும் பார்க்க மிக குறைவான நிதியில் செய்ய தயாராக இருந்தார்கள். அப்படி இருக்கையில் எந்த கேள்வி கோரலும் இல்லாமல்  தனியே இந்த நிறுவனத்திற்கு மட்டும் கொடுக்கப்பட்டது எப்படி? மிகப்பெரியளவில் வருமானம் பெறும் நிறுவனத்திடமிருந்து எமது மக்களுக்குக்கிடைத்த நன்மைகள் என்ன? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கருத்து கூறுகையில், வெளிப்படை தன்மை பற்றி பேசும்போது கண்காய்வு அறிக்கையை இந்த சபையில் எடுக்கவேண்டாம். என முதலமைச்சர் எமக்கும் சபைக்கும் கடிதம் எழுதியதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம்.  ஐங்கரசேன் எனக்கும் சக உறுப்பினர் எஸ்.சுகிர்தனுக்கும் கூறினார் 2 பெட்டிகள் நிறைய காசு கொண்டுவந்தார்கள் அப்பன் என. அதேபோல் 40 மில்லியன் ரூபாய் செலுத்தி தனது மகளை எப்படி வெளிநாட்டில் படிக்கவைத்தார்? அதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளன என்றார்.

இதனை மறுதலித்த மாகாணசபை உறுப்பினர் ஐங்கரநேசன் நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல. என்னுடைய மகளை எங்கே படிக்கவைக்கவேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன்.  அதை குறித்து கவலைப்படவேண்டாம். நான் எப்படி பணம் செலுத்தினேன் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது என்றால் அதனை இப்போதே வெளிப்படுத்துங்கள். மேலும் 2 பெட்டி நிறைய காசு கொண்டுவந்தார்கள் என நான் எப்போதும் எங்கேயும் கூறவில்லை என்றார்.

தொடர்ந்தும் உறுப்பினர் அஸ்மின் உரையாற்றுகையில், தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விபரங்களை வெளியிடவேண்டும். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தங்கள் சொத்து விபரங்கள் குறித்து வெளிப்படுத்தவேண்டும். இந்த இடத்தில் நான் கேட்கிறேன் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் தங்கள் சொத்து விபரங்களை வெளியிடவேண்டும் என கூறினார்.

தொடர்ந்து ஐங்கரநேசன் உரையாற்றும்போது தென்னிலங்கையில்  சகல அனுமதிகளையும் பெற்று வந்தவர்கள் அவர்கள் விரும்பும் நிதியையே தருவார்கள். அதனை நாங்கள் கட்டாயப்படுத்த முடியவில்லை. ஏற்கனவே தென்னிலங்கையில் இருந்து ச கல அனுமதிகளையும் பெற்றுக் கொண்டுவந்து வடக்கில் தொழிற்சாலைகளை உருவாக்கியவர்கள் வடமாகாண மக்களுக்கு கொடுத்த வணிக நிறுவனங்களுக்கான சமூக கடப்பாட்டு நிதி எவ்வளவு என்பதை பார்க்கவேண்டும் என கூறினார்.

தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில் தென்னிலங்கையில் அனுமதி பெற்றார்கள் என்றால்  எதற்காக காணிகளை வழங்கினீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில், 2 வருடத்தில் 293 கோடி ரூபாய் மிகை லாபம் பெறும் நிறுவனத்திடமிருந்து 2 கோடி ருபாயை வருடம் ஒன்றுக்கு பெறுவது பிழை. வணிக நிறுவனங்களுக்கான சமூக கடப்பாட்டு நிதி என்பது அந்த நிறுவனங்களின் இலாபத்தில் இருந்து ஒரு விகிதாரசத்தை பெறவேண்டுமே தவிர அவர்கள் கொடுப்பதை பெறுவதல்ல என்றார்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக விவசாய அமைச்சின் கருத்து பெறவேண்டும் என உறுப்பினர் ஐங்கரநேசன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும், முதலமைச்சருடைய வேண்டுகோளுக்கு இணங்கவும் இந்த விடயம் அடுத்த சபை அமர்வில் எடுத்துக்  கொள்ளப்படவுள்ளது.

http://globaltamilnews.net/2018/93465/

  • தொடங்கியவர்

காற்­றாலை நிறு­வ­னத்­து­டன் இர­க­சிய ஒப்­பந்­தம் ஏன்?

கேள்வி எழுப்­பு­கி­றார் தவ­ராசா

images-22.jpg
 

பளை காற்­றாலை நிறு­வ­னத்­து­டன் இர­க­சி­ ய­மாக ஒப்­பந்­தம் ஏன் செய்­யப்­பட்­டது? சபை ­யின் அனு­ம­தி­யில்­லா­ம­லும், அமைச் ச­ர­வை­யின் அனு­மதி பெறப்­ப­டா­ம­லும் இந்த ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டது. இத­ னால் மாகாண சபைக்கு கிடைக்க வேண்­டிய பெரு­ம­ளவு வரு­மா­னம் இழக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா சுட்­டிக்­காட்­டி­னார்.
வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

மக்­கள் நலன் பாதிப்பு

மாகா­ணப் பொதுக் கணக்­காய்­வுக் குழு­வின் ஓர் உறுப்­பி­னர் என்ற முறை­யில் இந்த முடிவை நாம் எடுத்­த­தற்­கு­ரிய கார­ணத்தை முத­லில் சபைக்­குத் தெளி­வு­ப­டுத்த விரும்­பு­கின்­றேன். கணக்­காய்வு அறிக்­கை­யில் கூறப்­பட்ட ஏனைய அவ­தா­னிப்­பு­க­ளு­டன் ஒப்­பி­டும் போது, அவை பெரும்­பா­லும் நிர்­வாக ரீதி­யான, கணக்­கி­யல் ரீதி­யான மற்­றும் கணக்­காய்­விற்­குத் தேவை­யான ஆவண முன்­வைப்­பு­கள் தொடர்­பா­னது.

இந்த விட­யம் வடக்கு மாகாண மக்­க­ளின் நலன்­களை நேர­டி­யா­கப் பாதித்­தி­ருக்­கும் ஓர் விட­யம் என்ற முறை­யி­லேயே அவ்­வா­றான ஓர் முடி­வுக்கு பொதுக்­க­ணக்­காய்­வுக் குழு வந்­தது.

ஐங்­க­ர­நே­ச­னா­லும், முத­ல­மைச்­ச­ரா­லும் ஆட்­சே­ப­னை­க­ளா­கக் கூறப்­பட்ட கார­ணங்­க­ளி­னை­யும் கருத்­திற் கொண்­டு­தான் இந்த விட­யம் தொடர்­பாக நான் உரை­யாற்ற விரும்­பு­கின்­றேன்.
பளை­யில் காற்­றா­லையை நிறு­விய நிறு­வ­னத்­தி­னால் மாகாண சபைக்கு வழங்­கப்­ப­டு­வது சி.எஸ்.ஆர். என்று சொல்­லப்­ப­டும் வணிக நிறு­வ­னங்­க­ளிற்­கு­ரிய சமூ­கக் கடப்­பாடே அன்றி அது ஓர் மாகாண வாடகை அல்ல.

அந்­தத் தனி­யார் நிறு­வ­னங்­கள் ஏற்­க­னவே இலங்கை மின்­சார சபை­யின் அனு­ம­தி­யை­யும், சுற்­றுச் சூழல் அதி­கார சபை­யின் அனு­ம­தி­யி­னை­யும் பெற்­று­விட்­டுத்­தான் எங்­க­ளி­டம் வந்­தார்­கள். இந்­தக் குத்­த­கை­யினை யாருக்கு வழங்­கு­வது என்­ப­தனை நாம் தீர்­மா­னிக்க முடி­யா­த­வர்­க­ளாக இருந்­தோம்.

அதே­போன்று முத­ல­மைச்­ச­ரி­னால் எனக்­குப் பிர­தி­யி­டப்­பட்டு அவைத் தலை­வ­ருக்கு எழு­தப்­பட்ட கடி­தத்­தில் மாகா­ணப் பொதுக் கணக்­காய்­வுக் குழு கணக்­காய்­வுத் தலைமை அதி­ப­தி­யின் அறிக்கை தொடர்­பாக மாகாண அதி­கா­ரி­க­ளி­னால் அளிக்­கப்­ப­டும் பதில்­க­ளை­யும் கவ­னத்­தி­லெ­டுத்து கலந்­து­ரை­யா­டா­மல் இந்த விட­யம் தொடர்­பாக சபை­யில் பேசு­வது பொருத்­த­மா­ன­தாக அமை­யாது எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

2014ஆம் ஆண்டு என்ன சொல்­லப்­பட்­டது?

2014ஆம் ஆண்டு ஜூல்­ப­வர், பீற்றா பவர் நிறு­வ­னங்­க­ளு­டன் பளை­யில் காற்­றாலை மின்­னுற்­பத்தி நிலை­ய­மொன்­றினை ஆரம்­பிப்­ப­தற்­கான ஒப்­பந்­தம் வட மாகாண சபை­யு­டன் செய்­யப்­பட்­டது. இந்த ஒப்­பந்­தம் தொடர்­பாக 2014ஆம் ஆண்டு டிசெம்­பர் 4ஆம் திகதி சபை­யில் நான் உரை­யாற்­றி­யி­ருந்­தேன்.

அப்­போதே நான் கூறி­யி­ருந்­தேன் இந்த ஒப்­பந்­த­மா­னது எவ்­வித வெளிப்­ப­டைத் தன்­மை­யும் இல்­லா­மல், இர­க­சி­ய­மா­கச் செய்­யப்­பட்ட ஒன்று. இந்த விட­யத்­தினை வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­டன் கையாண்­டி­ருந்­தால் வணிக நிறு­வ­னங்­க­ளிற்­கு­ரிய சமூ­கக் கடப்­பா­டாக கூடிய நிதி­யி­னைப் பெற்­றி­ருக்­க­மு­டி­யு­மென்று.

அப்­போ­தைய மாகாண சபைச் செய­லா­ள­ராக இருந்த கிருஷ்­ண­மூர்த்தி வட மாகாண சபை­யின் சார்­பாக அந்த ஒப்­பந்­தத்­தில் கையொப்­ப­மிட்­டுள்­ளார். அவ்­வா­றா­கக் கையொப்­ப­மி­டு­வ­தற்கு அவ­ரிற்கு எவ்­வித அதி­கா­ர­மும் இல்லை என­வும் குறிப்­பிட்­டி­ருந்­தேன்.

அதற்­குப் பதி­லு­ரைத்த முத­ல­மைச்­சர், இல்லை அப்­ப­டிச் சொல்ல முடி­யாது. ஏனென்­றால் அங்கு வடக்கு மாகாண சபை­யி­னு­டைய செய­லர் என்­று­தான் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது, வடக்கு மாகாண சபைச் சட்­டத்தை எடுத்­துப் பார்த்­தால் தெரி­யும், வட மாகாண செய­லர் கையெ­ழுத்து வைத்­தார், நீங்­கள் கூறு­வது போன்று அது பிழை­யென்று கூற முடி­யாது,எனக் குறிப்­பிட்­டி­ருந்­தார். மாகாண சபைச் செய­லர் இவ்­வா­றான ஒப்­பந்­தங்­க­ளில் கையொப்­ப­மி­டு­வ­தா­யின், அவ்­வா­றாக அவ­ரிற்கு அதி­கா­ர­ம­ளித்து மாகாண சபை தீர்­மா­ன­மொன்­றினை மேற்­கொண்­டி­ருத்­தல் வேண்­டும். சகல நிறை­வேற்­றுச் செயற்­பா­டு­கள் தொடர்­பான ஒப்­பந்­தங்­கள் தலை­மைச் செய­ல­ரி­னா­லேயே கையொப்­ப­மி­டப்­ப­டல் வேண்­டும். இதைக் கூடத் தெரி­யா­மல் இருந்­தி­ருக்­கின்­றார் முத­ல­மைச்­சர்.

நிதி இழப்பு

அதன் பின்பு ஆளு­நர் சந்­தி­ர­சிறி அந்த ஒப்­பந்­தத்தை மீள் பரி­சீ­லனை செய்து தலை­மைச் செய­ல­ரி­னால் அவ் ஒப்­பந்­தம் முறைப்­படி கையொப்­ப­மி­டப்­பட்­டது. ஆளு­நர் சட்ட ரீதி­யாக அந்த ஒபப்ந்­தத்தை மீள் வரைந்­தாரே அன்றி கொள்கை ரீதி­யான விட­யங்­க­ளில் மாற்­றங்­க­ளைச் செய்­ய­வில்லை.

இந்த ஒப்­பந்­தம் தொடர்­பாக 2016ஆம் ஆண்டு கணக்­காய்வு அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்ட விட­யங்­க­ளில் என்­னால் ஏற்­க­னவே 2014ஆம் ஆண்­டில் இந்­தச் சபை­யில் எடுத்­துக்­காட்­டிய விட­யங்­க­ளுக்கு மேல­தி­க­மாக ஒரு முக்­கிய தரவு கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அந்­தத் தர­வா­னது காற்­றா­லை­கள் மூல­மான மின்­சார மின் பிறப்­பாக்­கிப் பொறி­களை உரு­வாக்­கு­வற்­குத் தனி­யார் நிறு­வ­னங்­க­ளு­டன் வட மாகாண சபைச் செய­ல­ரி­னால் கையெ­ழுத்­தி­டப்­பட்ட ஒப்­பந்­தத்­தின் பிர­கா­ரம் 20 ஆண்­டு­க­ளுக்கு வட மாகாண சபைக்­குக் கிடைக்­கும் சமூ­கக்­க­டப்­பாடு நிதி­யு­தவி ரூ. 430 மில்­லி­யன்.

அதா­வது முதல் பத்து ஆண்­டு­க­ளுக்கு ஆண்­டொன்­றுக்கு ரூ.20 மில்­லி­யன் ரூபா­வும், ஏனைய பத்து ஆண்­டு­க­ளுக்கு ஆண்­டொன்­றுக்கு ரூ.23 மில்­லி­ய­னும் ஆகும். ஆனால் 2014ஆம் ஆண்டு டிசெம்­ப­ரி­லி­ருந்து 2016ஆம் ஆண்டு டிசெம்­பர் வரை, இரண்டு ஆண்­டு­க­ளில் இலங்கை மின்­சார சபைக்கு மின்­சா­ரம் வழங்­கி­ய­மைக்­காக மின்­சார சபை­யி­னால் அந்த நிறு­வ­னங்­க­ளுக்­குக் கொடுக்­கப்­பட்ட தொகை ரூ.2 ஆயி­ரத்து 933.8 மில்­லி­யன் ஆகும்.

அனு­மதி பெறப்­ப­ட­வில்லை

அந்த அறிக்­கை­யின் ஏனைய முக்­கிய அவ­தா­னிப்­பு­க­ளான, இந்­தச் செயற்­றிட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான உடன்­ப­டிக்­கை­யில் வட மாகாண தலை­மைச் செய­லர் கையொப்­ப­மி­ட­வில்லை. இந்த நோக்­கத்­துக்­காக அரச காணி­யி­னைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­குக் காணி ஆணை­யா­ள­ரி­ட­மி­ருந்து அனு­மதி பெற்­றி­ருக்­க­வில்லை. இந்த உடன்­ப­டிக்­கை­யில் கையொப்­ப­மிட முன்­னர், மாகாண அமைச்­சர் சபை­யின் அனு­மதி பெறப்­ப­ட­வில்லை. வட மாகாண சபை­யி­னு­டைய பெயர் அல்­லது அது சார்­பாக கையொப்­ப­மி­டப்­பட்ட ஒப்­பந்­தத்­துக்கு சபை­யின் அனு­மதி பெற்­றி­ருக்­க­வில்லை.

இந்­தக் கணக்­காய்வு அறிக்­கை­யி­லி­ருந்து முக்­கி­ய­மாக நாம் கவ­னத்­தி­லெ­டுக்க வேண்­டிய விட­யம், இந்த ஒப்­பந்­தத்­தைச் செய்­த­தன் மூலம் வடக்கு மக்­க­ளுக்கு கிடைத்த நன்மை ஆண்­டுக்கு 20 மில்­லி­யன் பெறு­ம­தி­யா­னது. ஆனால் அந்த நிறு­வ­னம் ஈட்­டு­கின்ற வரு­மா­னம் ஆண்­டொன்­றுக்கு ஏறத்­தாழ ரூ. ஆயி­ரத்து 450 மில்­லி­யன். எனக்­குத் தெரிந்த வரை அந் நிறு­வ­னங்­க­ளிற்­கு­ரிய உற்­பத்­திச் செலவு காற்­றும், பரா­ம­ரிப்­புச் செல­வி­ன­மும் மட்­டுமே.

நிர்ப்­பந்­தி­ருக்­க­வேண்­டும்

இந்த ஒப்­பந்­தத்­தைக் கைச்­சாத்­திட முன்­னர் தனி­யார் நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து அவர்­க­ளு­டைய சாத்­தி­யக்­கூற்று அறிக்­கை­யி­னைப் பெற்­றி­ருக்க வேண்­டும். சாத்­தி­யக்­கூற்று அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் அவர்­க­ளது மூல­த­னம், உற்­பத்­திச் செலவு, உற்­பத்தி செய்­யப்­ப­டும் மின் வலு­வின் அளவு, அதன் மூலம் கிடைக்­கும் வரு­மா­னம் என்­ப­வற்­றி­னைக் கருத்­தி­லெ­டுத்து வணிக நிறு­வ­னங்­க­ளின் சமூ­கக் கடப்­பா­டாக வட மாகாண மக்­க­ளின் நல­னிற்­காக இவ்­வ­ளவு தொகை­யினை செலுத்த வேண்­டு­மென நிர்ப்­பந்­தி­ருத்­தி­ருத்­தல் வேண்­டும்.

ஐங்­க­ர­நே­சன் கூறு­வது போன்று ஏற்­க­னவே மின்­சார சபை­யி­னா­லும், சுற்­றுச் சூழல் அதி­கார சபை­யி­னா­லும் அனு­மதி வழங்­கி­யுள்ள நிலை­யில் உங்­க­ளால் எது­வும் செய்ய முடி­யா­தென்­றால் நீங்­கள் எதற்­காக அவ­ச­ரம் அவ­ச­ர­மாக இரவு வேளை­யில் முத­ல­மைச்­ச­ரின் வதி­வி­டத்­தில் வைத்து இவ்­வா­றான ஒப்­பந்­தத்­தில் சபை­யின் செய­ல­ரைக் கொண்டு கையொப்­ப­மிட வைத்­தீர்­கள்?

எப்­படி அனு­ம­தித்­தீர்­கள் ?

அது மட்­டு­மல்ல ஐங்­க­ர­நே­சன், 2014ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதம் 19ஆம் திக­திய சபை அமர்­வில் உரை­யாற்­றும்­போது, இந்த ஒப்­பந்­தத்­தின் பிர­கா­ரம் 20 ஆண்­டு­க­ளுக்கு எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் அந்­தக் காணிக்­கான அனு­ம­தி­யினை வழங்­கி­யி­ருந்­தார், என்று குறிப்­பிட்­டுள்­ளார். யாரோ தீர்­மா­னித்து அனு­மதி வழங்­கிய விட­ய­மென்­றால் நீங்­கள் எதற்­கா­கக் காணி அனு­ம­தியை வழங்­கி­னீர்­கள்? எதற்­காக அவ­ச­ரம் அவ­ச­ர­மாக, இர­க­சி­ய­மாக ஒப்­பந்­தம் செய்­தீர்­கள்.
ஐங்­க­ர­நே­சன் அன்று மேலும் கூறி­ய­தா­வது, நாங்­கள் சில­வற்­றைச் சில நேரங்­க­ளில் கொஞ்­சம் அமை­தி­யா­கச் செய்ய வேண்­டிய தேவை­கள் எங்­க­ளுக்கு இருக்­கின்­றது. நாங்­கள் சில­வற்­றைக் குறிப்­பிட்ட காலம் வரை வெளி­யில் சொல்ல முடி­யாத நிலை உள்­ளது. இங்கு ஒரு நிறு­வ­னம் தொழிற்­ப­ட­லாம் அந்­தப் பணத்தை வந்து தென்­னி­லங்­கை­யில் சமூக வேலைத் திட்­டங்­க­ளிற்­குப் பயன்­ப­டுத்­த­லாம், என்­ப­தா­கும்.

ஆம், நீங்­கள் இர­க­சி­ய­மா­கத்­தான் எல்­லா­வற்­றி­னை­யும் செய்து முடித்­துள்­ளீர்­கள் என்­ப­தனை நான் ஏற்­றுக் கொள்­கின்­றேன்.

முத­ல­மைச்­சர் தனது கடி­தத்­தில் கணக்­காய்வு அறிக்­கைக்­கான மாகாண அதி­கா­ரி­க­ளின் பதில்­க­ளை­யும் கவ­னத்­தி­லெ­டுத்­துத்­தான் இது தொடர்­பா­கக் கலந்­து­ரை­யா­ட­லாம் எனக் கூறி­யி­ருந்­தார். கணக்­காய்வு அறிக்­கை­யி­லி­ருந்து ஒரு தர­வினை மட்­டுந்­தான் நான் எனது விவா­தத்­தின் முக்­கிய கருப்­பொ­ரு­ளாக எடுத்­தி­ருக்­கின்­றேனே தவிர, அந்த அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்ள ஏனைய விட­யங்­கள் யாவும் ஏற்­க­னவே 2014ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதத்­தில் இந்­தச் சபை­யில் என்­னால் பேசப்­பட்ட விட­யங்­க­ளா­கும் – என்­றார்.

https://newuthayan.com/story/10/காற்­றாலை-நிறு­வ­னத்­து­டன்-இர­க­சிய-ஒப்­பந்­தம்-ஏன்.html

 காற்­றாலைகள் சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை , பறவைகள் பெருமளவு கொல்லப்படும், சூழல் சமனிலை பாதிக்கப்படும் எமது பிரதேசத்திற்கு இவை மிகவும் அவசியம் தானா?

Biologists estimate that millions of birds are killed every year by wind turbines and the power lines and infrastructure that supports the wind energy industry. Photo by Marijs / Shutterstock

Bird collision with wind turbines © BirdLife Bulgaria

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற நிலம், கடல், ஆகாயம் சம்பத்தப்பட்ட ஒப்பந்தங்களில் மாதாந்த வாடகை அல்லது குத்தகை அறவிடப்படுவதுதில்லை. உதாரணத்துக்கு எண்ணைஅகழ்வை குறிப்பிடமுடியும். ஒப்பந்தத்தை காலவரைசெய்து குறித்த சில வருடங்களுக்கு ஒருமுறை மீள்பரிசீலனைசெய்து சொல்லப்பட்ட தொகையை மாற்றவும் அல்லது ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ளவும் பொறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும். சூழலை மாசுபடாமல் பாதுகாப்பதற்கான உத்தரவாதம் உறுதிசெய்யப்பட்டு அப்படி ஒன்று ஏற்படும்பட்சத்தில் தண்டனை அல்லது அபராதம் என்ன என்பதையும் தவறினால் ஆலையை இழுத்து மூடுவதற்குமான எச்சரிக்கை எழுத்து மூலம் வழங்கப்பட்டிருக்கும்.

காற்றாலைகளில் இயற்கைவளமாகிய காற்றுதான் மூலப்பொருள். மாறாக இவற்றிற்கு சொந்தக்காரரான அரசு (அரசின் பொருளாதார மூலதனங்களுக்கு பொறுப்பான நிறுவனம் ஒன்றின் ஊடாக)  இயற்கைவளங்களை மூலப்பொருளாக கொள்ளும் அனைத்து வணிக கட்டுமானங்களிலும்  அரசு குறைந்தது 51 வீதம் பங்குதாரராக இணைக்கப்பட்டு வரும் இலாபத்தில் 51 வீதத்தையும் மீதியாயுள்ள 49 வீத இலாபத்துக்கு உரித்துடைய சக நிறுவனத்திடமிருந்து வழமையான வருமானவரியையும் பெற்றுக்கொள்ளும். ஆனாலும் கணிசமான காலக்கட்டத்துக்கு இதுபோன்ற முதலீட்டை ஊக்கிவிப்பதற்கு வருமானவரியின் அளவை குறைந்ததும் முதலீட்டு வரியை தளர்த்தி அல்லது விலக்கியும் சக நிறுவனத்துக்கு உதவலாம்.

ஒப்பீட்டளவில் இயற்கைக்கு காற்றாலையால் வரும் தாக்கம் மிக மிக குறைவு. எரிபொருள் அல்லது அணுசக்கியினூடாக மின்சாரம் பெறப்படும்போது பல ஆயிரம் மடங்கு இயற்கை பாதிக்கப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலைநாடுகளில் ஆட்சியாளர்கள் எதிர்காலத்தில் மின்சாரத்தை முற்றிலும் சூரியஒளி நீர்வீழ்ச்சி காற்று கடலலை ஆகிய இயற்கை மூலப்பொருள் ஊடாக பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தானியங்களை வெளியே காயவிடும்போது காக்கையின் இறக்கை ஒன்றைக் கட்டிவிட்டால் காகங்கள் அந்தப்பக்கம் வராது. அதுபோல பறவைகள் காற்றாலை அருகே வராதிருக்கச் செய்யக்கூடிய வழிகளையும் ஆராய்ந்து கண்டு பொருத்திவிடலாமே.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.