Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இராணுவம் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றது: இறுதி உரையில் ஐ.நா.ஆணையாளர்!

Featured Replies

இலங்கை இராணுவம் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றது: இறுதி உரையில் ஐ.நா.ஆணையாளர்!

 

al-hussain-735x400-720x450.jpg

இலங்கையின் வட.பகுதியில் இராணுவ மயமாக்கல் அதிகரித்து வருவதற்கு ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தனது கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் அவர், இலங்கை தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை அரசாங்கம் காணிகளை விடுவிப்பதற்கு அர்ப்பணிப்பை கொண்டிருக்கின்றபோதும் இராணுவம் அதற்குக் கீழ்படிய மறுத்து வருகின்றது.

இதனால், இடம்பெயர்ந்த அப்பாவி மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக இன்றுடன் பதவியிலிருந்து விலகும் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

மேலும் பல தசாப்தங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் தமது நிலங்களை விட்டு எழுப்பப்பட்ட மக்கள் இன்னமும் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில், சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/இலங்கை-இராணுவம்-தான்தோன்/

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்படிச் சொல்லுறார்... ஆனால்... வெளிநாட்டில இருக்கிற எம்மவர்களோ.. இப்ப எல்லாம்.. தாயகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு சொந்த மக்களை நோக்கி கைகாட்ட ஆரம்பித்து விட்டிருக்கிறார்கள். அதுதான் சிங்களவனின் ஆக்கிரமிப்பு நோக்கின்.. இன்னொரு வெற்றியாகும். 

எனி வெளிநாட்டு தமிழர்கள் சிங்கள இராணுவத்துக்கு ஆராத்தி எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ?

  • தொடங்கியவர்

“துயரத்தில் சிக்கியுள்ளவர்களின் வலுவற்ற நிலையை நான் யாழ்ப்பாணத்தில் உணர்ந்தேன்”

அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு பணிய மறுக்கின்றனர் படையினர்…

UN-Human-Rights.jpg?resize=720%2C450

 

இலங்கை இராணுவம் நிலங்களை பொது மக்களிடம் கையளிப்பது தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுக்கின்றது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் ராத் அல் ஹுசைன் எகனமிஸ்ட் சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் தெரிவித்துள்ளார்.

“துயரத்தில் சிக்கியுள்ளவர்களின் வலுவற்ற நிலையை நான் யாழ்ப்பாணத்தில் உணர்ந்தேன்” என தனது கட்டுரையில் குறிப்பிட்ட, ஐக்கியநாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் ராத் அல் ஹுசைன் யாழ்ப்பாணத்தில் பல தசாப்தங்களிற்கு முன்னர் படையினரிடம் தங்கள் நிலங்களை பறிகொடுத்த மக்கள் மிகவும் அடிப்படையான மற்றும் மோசமான நிலைமைகளின் கீழ் வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பொதுமக்களின் சொத்துக்கள் மற்றும் நிலங்களை விடுவிப்பது குறித்து அர்ப்பணிப்புடன் இருந்தாலும் படைத்தரப்பு அரசாங்கத்திற்கு அடிபணிய மறுக்கின்றது இதன் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்தும் துயரத்தில் சிக்குண்டுள்ளனர் எனவும் அவர் எழுதியுள்ளார்.

இதேவேளை மியன்மார் படையினரால் ரொகிங்யா இனத்தவர்கள் பாரிய படுகொலைகளை செய்யப்பட்டமை குறித்து சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை ஆணையாளர் சீனா அரசாங்கம் மியன்மார் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதையும், வழமைக்கு மாறாக அமெரிக்க ஜனாதிபதி ரொகிங்யா இனத்தவர்கள் குறித்து ஐநா பாதுகாப்பு சபையிலும் கூட கருத்து தெரிவிக்கவில்லை என ஐக்கியநாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் ராத் அல் ஹுசைன் சுட்டிக் காட்டியுள்ளார்.

http://globaltamilnews.net/2018/93696/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

அரசாங்கம் பொதுமக்களின் சொத்துக்கள் மற்றும் நிலங்களை விடுவிப்பது குறித்து அர்ப்பணிப்புடன் இருந்தாலும் படைத்தரப்பு அரசாங்கத்திற்கு அடிபணிய மறுக்கின்றது

ரெண்டும் வேறுவேறு போல கிடக்கு ..  பார்த்துப்பா .. எதாவது ராணுவ புரட்சி வந்திட போகுது.. ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.