Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் ஸ்காபுரோ பெரிய சிவன் ஆலய மண்டபத்தில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர்ச்சனத்துக்கு சொல்ல வேண்டியதை ஏன் கனடாவுக்கு வந்து எல்லாரும் சொல்லீனம்? :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு சிங்களவரா அல்லது தமிழரா? நடை உடையை பார்க்க  ஒரு தினிசா இருக்கு. சிங்கள கலாசாரம் மெல்ல மெல்ல தமிழரை ஆக்கரமிப்பது இவரில் தெரிகிறது. அசிங்கமாக கழுத்தை இறுக்கியபடி இவர் அணிந்திருக்கும் மேலாடைபோல்  தமிழர் எவரும் அணிவதை நான் முன்னர் பார்த்ததில்லை. தமிழ் பெண்களும் அழகான தமிழ் கலாசார முறையில் சேலை உடுத்துவதை கைவிட்டு தென்னிலங்கை பெண்கள்போல் உடுத்த விரைவில் மாறிவிடுவார்களோ தெரியவில்லை. 

யாழ்.மாநகர முதல்வருக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுவரவேற்பு

b5aa8ed46c64eb5ac312bb4e4042301e?s=48&d=

கனடாவுக்கு சென்றுள்ள யாழ் நகர முதல்வருக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுவரவேற்பு அளித்துள்ளது.

கனடா சென்றுள்ள யாழ். மாநகர முதல்வர் ரொறன்டோ மேயர்,மற்றும் மார்க்கம் மேயர் ஆகியோருடன் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.இதன்போது யாழ்ப்பாண தாநகரத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்தநிலையில் கனடா தமிழ்தேசியக்கூட்டமைப்பு யாழ்.மாநகர முதல்வருக்கு பொது வரவேற்பு அளித்து அவரை கௌரவப்படுத்தியுள்ளது.

41325014_10161027192980454_607512674793241351740_10161027192045454_717264553665341372576_10161027191105454_593549409696441375511_10161027191075454_409306106380341382384_10161027192340454_373387498465341398333_10161027191385454_180364252492541409147_10161027192825454_385531454499741439658_10161027192185454_688345408855441445897_10161027191455454_246466010227141445899_10161027193060454_418068134298941484382_10161027192940454_552987080134541490568_10161027192435454_535631621091041527345_10161027191055454_5480608724756

http://www.newsuthanthiran.com/2018/09/10/யாழ்-மாநகர-முதல்வருக்கு-2/

போரால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான, நகராக உருவாக்க உறுதி பூண்டுள்ளேன்! ரொறன்ரோவில் யாழ் நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சூளுரை!

 

“யாழ்ப்பாணநகர் நீண்டகாலமாகத் தமிழர்களின் கலாசார தலைநகராக இருந்து வருகிறது.அந்தநகரத்தின் முதல்வராக நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். மாநகர சபைக்குள் நுழையமுன்னர் கட்சி அரசியலை மறந்துவிட்டு மக்கள் சேவையை மட்டும் மனதில் கொண்டு உள்நுழையுமாறு எல்லோரையும் கேட்டுக் கொண்டேன்.
யாழ்ப்பாண நகரை ஒரு தூய்மையான, அழகான, பொலிவான நகராக மாற்றி அமைக்க நான் உறுதிபூண்டுள்ளேன். அதற்குப் புலம்பெயர் தமிழரின் உதவியும் தேவை.போரினால் அழிவுண்ட மாநகர சபைக் கட்டடத்தை ஐக்கியநாடுகள் மேம்பாட்டு நிறுவனத்தின் நிதியுதவியோடு மீளக் கட்டி எழுப்ப இருக்கிறோம்” இவ்வாறு கனடாவுக்கு வருகை தந்திருந்த யாழ்ப்பாண நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அவர்களுக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளித்த பொதுவரவேற்பில் கலந்து கொண்டு பேசியபோது குறிப்பிட்டார்.

இந்தப் பொது வரவேற்பு நிகழ்ச்சி கடந்த செப்தெம்பர் 08 ஆம் நாள் மாலை ரொறன்ரோ பெரிய சிவன் கோயில் மண்டபத்தில் இடம்பெற்றது. நகர முதல்வருக்கு ரோசா மாலை, பட்டுச் சால்வை, பொன்னாடை போர்த்தப்பட்டன.

welcome-to-Mayer-2.jpg

கனடா தேசியப் பண், தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல்களை கனடா தமிழ்க் கல்லூரி மாணவிகள் பாடினார்கள். அகவணக்கத்தின் பின்னர் வரவேற்புநடனம் இடம்பெற்றது. அதனை அனுசா திருமாறன் ஆசிரியையின் மாணவி துளசி சபேசன் அழகாக வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துணைத்தலைவர் வி.எஸ். துரைராசா வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமையுரையை தலைவர் வேலுப்பிள்ளை தங்கவேலு ஆற்றினார்.

தொடர்ந்து பேசிய மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்

welcome-to-Mayer-3.jpg

1.யுத்த காலத்தில் நாம் தனி நாடு கேட்டோம். இப்போது அதைக் கேட்கவில்லை. இப்போது கேட்பது ஒருமித்த நாட்டில் சுயநிர்ணய அடிப்படையில் எங்களை நாங்களே ஆளக்கூடிய அதிகாரப்பகிர்வு.

2. தேர்தல் பரப்புரையில்அரசியல்தீர்வையும், மீள்கட்டுமானம், மறுவாழ்வு, வாழ்வாதார மேம்பாடு,பொருளாதாரவளர்ச்சிஎன்பவற்றையே வலியுறுத்தினோம்.

3.தமிழ் மக்களின் ஒற்றுபட்ட பலமாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைபைச்சிதைப்பதன் மூலம் தமிழ்மக்களைக் கூறுபோட நினைப்பவர்களின் உள்நோக்கம் என்ன?. புலம் பெயர்ந்தோர் ஏன் அவர்களுக்குத் துணை போகிறார்கள்?

4. மாகாணமுதலமைச்சர் தன் கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல், கட்சிக்குள்ளேயே ஒற்றுமையைச் சிதைத்து மிக மோசமான நிருவாகச் சீர்கேடுகளை அனுமதித்த காரணத்தாலேயே நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் ததேகூ இன் செல்வாக்கு சரிந்து காணப்பட்டது.

5. யாழ் மாநகர சபையில் கட்சி பேதங்களை ஒதுக்கிவிட்டு அனைவரையயும் அரவணைத்து சிறப்பாகப் பணியாற்றுகின்றேன்.

6. யாழ்மாநகர சபைக்கு வந்து திரும்பிய நிதி, கிடப்பில் போடப்பட்ட நிதி புதிதாகக் கிடைக்கும் நிதி அனைத்தையும் முடியுமான வரை மீளப்பெற்று நகரை அபிவிருத்தி செய்யஇருக்கின்றேன்.

welcome-to-mayer-5.jpg

7. குரைப்பவர்களைப் பற்றிப்பொருட்படுத்தாமல்,விமர்சனங்களைக் கவனிக்காமல் எதுசரியோ அதனைச்செய்துகொண்டு எனது இலக்கை நோக்கிச் செல்கின்றேன்.

8. போருக்கானசூழ்நிலையை உருவாக்கிமீண்டும் தனி ஈழம் பெறலாம் என்ற ஒரு மாயையை ஒரு பகுதியினர் ஏற்படுத்துகிறார்கள். அது மக்களை மீண்டும் நிரந்தர அழிவிற்குள் தள்ளிவிடும்.இதனால்யார் நன்மை பெற விரும்புகிறார்கள்?

9.ததேகூ கேட்டுக்கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் சேர்க்கப்பட்டிருந்ததாலும் புதிய அரசியல்யாப்பு நிறைவேற2/3 பெரும்பான்மையைக் காட்டவேண்டி இருப்பதால் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தோம். அது தவிர அரசைக் காப்பாற்ற வேண்டிய தேவை எமக்கில்லை.

10. புதிய அரசியல் திட்டவரைவில் இருக்கும் முற்போக்கு அம்சங்கள் பற்றி யாரும் சொல்வதில்லை, ஊடகங்கள் எழுத்துவதே இல்லை. இருப்பதை இல்லை என்றும் இல்லாததை இருப்பதாகவும் வெறும் பொய்களை ஏன் திரும்பத் திரும்பக் கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்றார்.

welcome-to-Mayer-7.jpg

நன்றியுரையை நாதன் வீரசிங்கம் நல்கினார். பொது வரவேற்பு நிகழ்ச்சியை நல்லமுறையில் பரப்புரை செய்த தங்கதீபம், ஈழநாடு, செந்தாமரை,ஈழமுரசு, லங்காவண், ஈஸ்ட் எவ்எம் வானொலி, கீதவாணி, நேரடி ஒளிபரப்புச் செய்த கணபதி ரவீந்திரன், நடராசா முரளீதரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இரவு 9.30மணிக்கு நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறின.

http://www.newsuthanthiran.com/2018/09/14/போரால்-அழிவுற்ற-யாழ்ப்பா/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.