Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்போதும் உங்களுடனேயே இருப்போம் சம்பந்தனுக்கு உறுதியளித்த மோடி

Featured Replies

எப்போதும் உங்களுடனேயே இருப்போம்

சம்பந்தனுக்கு உறுதியளித்த மோடி

 
 
SL-MPs-Modi-1-1-780x405.jpg
 
The Prime Minister, Shri Narendra Modi with a delegation led by the Speaker of the Sri Lankan Parliament, Mr. Karu Jayasurya, in New Delhi on September 10, 2018.

 

 

இலங்கை எமது அயல்நாடு. அங்கு மீண்டும் போர் ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டோம். எம்மை நம்புங்கள். நாம் எப்போதும் உங்களுடனேயே இருப்போம். இலங்கை அரசு காலதாமதமின்றி அரசியல் தீர்வைக் காணவேண்டும். இதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி தனக்கு உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
 
இலங்கை நாடாளுமன்றக் குழுவினர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்தக் குழுவில் இரா.சம்பந்தனும். இடம்பெற்றிருந்தார். கடந்த திங்கட்கிழமை, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை இந்தக் குழுவினர் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.
சந்திப்புக்களை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் சந்திப்புத் தொடர்பில் ‘உதயன்’ வினவியது.
 
அவர் உதயனுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில்,
 
இந்தியத் தலைமை அமைச்சருடனான சந்திப்பில் பல விடயங்கள் குறித்துப் பேசினோம். அதில் அரசியல் தீர்வு தொடர்பில் நான் அதிகம் பேசினேன்.
 
ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இலங்கையில் தொடரும் இனப் பிரச்சினைக்கு இன்னமும் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. இனப் பிரச்சினை இனிமேலும் தொடரக் கூடாது. 70 ஆண்டுகளில் சுமார் 30 ஆண்டுகள் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. இனப் பிரச்சினையால்தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டார்கள். இதன்போது மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள், பேச்சுகள் மூலம் மட்டுமே காலத்தை இழுத்தடித்தன. இதனால் அரசியல் தீர்வு எட்டாக்கனியாகவே இருந்தது.
 
30ஆண்டு கால ஆயுதப் போரால், எமது வடக்கு கிழக்கு மாகாணங்கள் சின்னாபின்னமாக்கப்பட்டன. தமிழர் தாயகம் அரச படைகளின் தாக்குதல்களினால் பேரழிவைச் சந்தித்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆயிரக் கணக்கானவர்கள் அங்கவீனமாக்கப்பட்டார்கள். பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். போர் முடிவுக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. அபிவிருத்தி மாத்திரம் ஓரளவு இடம்பெற்று வருகின்றது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்வதில் இந்திய அரசு பெரும் உதவிகளை வழங்கி வருகின்றது. அதற்கு நன்றிகளைக் கூறுகின்றோம். அபிவிருத்தி நடவடிக்கைகள் மாத்திரம் இடம்பெற்றாலும் தீர்வைப் பெறும் முயற்சியில் தற்போதைய அரசு ஈடுபடுகின்றது என்பதைச் சொல்லி வைக்க விரும்புகின்றோம். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு இந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.
 
இதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். ஏனினும் இனவாதிகள் இதனைக் குழப்பியடிக்க முயற்சிக்கின்றனர். புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான யோசனைகளை முன்வைப்பதற்கு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் நாமும் இடம்பெற்றுள்ளோம். தீர்வுக்கான தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை கூட்டமைப்பு சமர்பித்துள்ளது. வழிநடத்தல் குழுவானது இடைக்கால அறிக்கையை அரசமைப்பு நிர்ணய சபைக்கு சமர்பித்துள்ளது.
இதன் பின்னர் வழிநடத்தல் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவானது சமர்பித்துள்ள அரசமைப்புக்கான நகல் வரைவு, திருத்தங்கள் மேற்கொள்ளப்ப்படாமல் அரசியல் நிர்ணய சபையான நாடாளுமன்றத்துக்குச் சமர்பிப்பதற்கு இறுதியாக நடைபெற்ற வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
புதிய அரசமைப்பு உருவாகும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது. எனினும் இந்த விடயத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா உள்பட பன்னாட்டுச் சமூகம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும். அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய அரசு அதிக அக்கறை செலுத்த வேண்டும். வடக்கு கிழக்கு மக்கள் இந்தியாவை நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் எங்களைக் கைவிடமாட்டீர்கள் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கின்றது. புதிய அரசமைப்பில் நிரந்தர அரசியல் தீர்வையே எதிர்பார்க்கின்றோம். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் அந்தத் தீர்வு அமையவேண்டும்.
 
அதாவது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய அரசமைப்பு அமையவேண்டும். புதிய அரசமைப்பு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க முடியாது. தடுக்கவும் முடியாது. எனவே தீர்வு விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த விடயத்தில் நாங்கள் உங்களை தொல்லைப்படுத்துகின்றோம் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் தலைமை அமைச்சராகப் பதவியேற்றவுடன் எனது தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழு இங்கு வந்து உங்களை நேரில் சந்தித்தபோதும், அரசியல் தீர்வு விடயம் தொடர்பிலேயே அதிகம் பேசினோம். அதன்பின்னர் நீங்கள் இலங்கைக்கு இரு தடவைகள் வந்தபோதும், அரசியல் தீர்வு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தோம் என்று சொன்னேன்.
 
இதற்குப் பதிலளித்த இந்தியத் தலைமை அமைச்சர், இலங்கை எமது அயல்நாடு. அங்கு மீண்டும் போர் ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டோம். எம்மை நம்புங்கள். நாம் எப்போதும் உங்களுடனேயே இருப்போம். இலங்கை அரசு காலதாமதமின்றி அரசியல் தீர்வைக் காணவேண்டும். இதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. நான் தலைமை அமைச்சராகப் பதவியேற்று பின்னர் இரு தடவைகள் இலங்கைக்கு வந்தபோதும், அரச தலைவர் தலைமை அமைச்சரிடம், இதனை எடுத்துக் கூறியிருந்தேன். எனவே இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை இலங்கை உடன் காணவேண்டும். இலங்கையிலுள்ள அனைத்து மக்களும், ஒற்றுமையாக சமாதானமாக வாழவேண்டும். அதற்கான வழியை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும் – என்று பதிலளித்தார்.

https://newuthayan.com/story/10/எப்போதும்-உங்களுடனேயே-இருப்போம்.html

  • கருத்துக்கள உறவுகள்

திருநள்ளாறு நள தீர்த்தத்தில்.நீராடும் முன் கறுப்பு வஸ்திரம் அணிந்து நல்லெண்னை தேய்த்து 3 முறை தலை முழுகி எழ வேண்டும் . பின் அங்குள்ள கணபதி கோவிலில் தே ங்காய் உடைத்து தொழவேண்டும் பின் தர்ப்பண ஈஸ்வரனை மற்றும் அன்னை உமையவளை மன முறுகி வழிபாடு செய்ய வேண்டும் அதன் பிறகே பரிகார நெய் விளக்கு ஏற்ற செல்ல வேண்டும். பின் ஏழைகளுக்கு அன்ன தானம் .. இதை முறை மாற்றி செய்தால் தீய பலங்களே ஏற்படும் ( ? ) விலகாது.. ?

40 minutes ago, நவீனன் said:

எப்போதும் உங்களுடனேயே இருப்போம்

 சம்பந்தனுக்கு உறுதியளித்த மோடி 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இத தானே அவனும், சீனாக்காரனும், சொல்றான்.

இரு வீட்டாரும் சேர்ந்துபோய் திருமணப் பொருத்தம் பார்த்தால்...

யாழ்ப்பாணத்தில் பிரபலமான சோதிடர் ஒரு வர் இருந்தார். திருமணப் பொருத்தம் பார்ப் பதற்காகப் பலரும் அவரை நாடி வருவது வழக்கம்.
இவ்வாறு வருகிறவர்களிடம் அவர் முத லில் கேட்பது இரு வீட்டாரும் வந்திருக்கிறீர்களா என்பதுதான்.

மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் வந் திருந்தால் பொருத்தம் பார்க்காமலே திருமணம் செய்யலாம் என்று சொல்லி விடுவாராம் அந்த சோதிடர்.

இதுபற்றி சிலர் அவரிடம் வினவியபோது, பொருத்தம் பார்ப்பதற்கு ஆண், பெண் வீட்டார் சேர்ந்து வந்திருந்தால் அவர்களிடம் ஒற்றுமை இருக்கிறது. மனப்பொருத்தம் இருக்கிறது.
திருமணம் என்பது கிரகங்களின் பொருத் தத்தில் தங்கியிருக்கவில்லை. மனப் பொருத் தம் புரிந்துணர்வு என்பவற்றில்தான் திருமணத் தின் எதிர்காலமே தங்கியிருப்பதால், இருதரப் பும் சேர்ந்து பொருத்தம் பார்க்க வருகின்ற போது பொருத்தம் பார்க்காமலே திருமணம் செய்துவிடலாம் என்று கூறி விடுகிறேன் எனப் பதில் அளித்தாராம்.

அட, இந்த இடத்தில் திருமணப் பொருத்தம் எதற்கானது என்று நீங்கள் யாரேனும் கேட் டால், திருமணப் பொருத்தத்தில் ஏதேனும் தோசம் இருந்தால் அதை சோதிடரிடம் தனி யாகச் சென்று கேட்பதுதான் நல்லது.
இரு வீட்டாரும் சேர்ந்து சென்றால், சோதி டரிம் எதையும் கேட்க முடியாமல்போய்விடும்.

அதாவது மாப்பிள்ளையின் சாதகம் பற்றி பெண் வீட்டார் கேட்டால், அது ஆண் பகுதிக்கு மனக் கஷ்டத்தைக் கொடுக்கும். 
அதேபோல பெண்ணின் சாதகம் பற்றி ஆண் வீட்டார் விசாரித்தால், அது பெண் வீட்டுக்கு வெறுப்பை ஏற்படுத்தும்.

இதற்காகத்தான் தனித்தனியாகச் சென்று சோதிடரைச் சந்திப்பது சாதகப் பிரச்சினை களைச் சொல்லவும் தோச பரிகாரத்தை சோதி டரிடம் கேட்டறியவும் உதவும்.
இதை நாம் ஏன் சொல்கிறோம் என்றால், சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர், அமைச் சர்களான நிமால் சிறிபால டி சில்வா, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், றிசாத் பதியூதீன் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவொன்று டில்லிக் குச் சென்று அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.

இந்தக் குழுவில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரும் சென்றிருந்தாராயினும் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பிரதமர் மோடியிடம் அவர் குறிப்பிட்டு எதையும் கூற முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.
சபாநாயகர் இருக்கும்போது, சிங்கள - முஸ்லிம் அமைச்சர்கள் பிரசன்னமாகியிருக் கும் நிலையில், இலங்கை அரசாங்கம் தான் கூறிய உத்தரவாதம் எதனையும் நிறைவேற்ற வில்லை என்று எப்படிக் கூறமுடியும்.

ஆக, இவற்றைக் கூற முடியாமல் இருக்கும் போது சிங்கள தமிழ் முஸ்லிம் தரப்பினர் எல் லோரும் ஒன்றாக வந்திருப்பதால், பிரச்சினை கள் சமாளிக்கப்பட்டு விட்டன என்று பிரதமர் மோடி கருதுவாரேயன்றி, தமிழர் பிரச்சினை தொடர்வதாக அவர் நினைப்பதற்கான சந்தர்ப் பம் அறவே இல்லை என்பதுதான் யதார்த்தம். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=16909&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.