Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரின் இறுதிக்கால இரகசியங்களை நியூயோர்க்கில் போட்டுடைத்தார் மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரின் இறுதிக்கால இரகசியங்களை நியூயோர்க்கில் போட்டுடைத்தார் மைத்திரி

by in செய்திகள்

maithri-new-york-300x199.jpg

போரின் இறுதி இரண்டு வாரங்களில்,  விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த  திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சரத் பொன்சேகா போன்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர் என்று போட்டுடைத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று நியூயோர்க்கில், சிறிலங்கா சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.

‘போரின் இறுதி இரண்டு வாரங்களில், சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானத்தைப் பயன்படுத்தி கொழும்பு நகரில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

maithri-new-york.jpg

அதனால் தான், போர்க்காலத்தில் உயர்மட்டத் தலைவர்களாக இருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்றவர்கள் போரின் இறுதி இரண்டு வாரங்களிலும் நாட்டில் இருக்கவில்லை.

அவர்கள் நாடு திரும்பும் வரை, பதில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு என்னிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த-  இறுதிக் கட்டத்தில் இவர்கள் எல்லோரும் ஏன் நாட்டை விட்டு வெளியேறினர் என்பது எவருக்கும் தெரியாது. ஆனால் எனக்குத் தெரியும்.

எனவே, போரின் இறுதி இரண்டு வாரங்களில் என்ன நடந்தது என்பது ஏனையவர்களை விட எனக்குத் தெரியும்.

நான் தலைமை தாங்கிய சிறிலங்காவின் ஆயுதப்படைகள், போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்களைச் செய்யவில்லை. ஆனால் கடுமையாகப் போரிட்டன.

எனவே, சிறிலங்கா அதிபர் என்ற வகையில், போர்வீரர்களை, அவர்களுக்கு எதிரான மோசமான குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாக்க, எல்லாவற்றையும் செய்வேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.net/2018/09/28/news/33148

  • கருத்துக்கள உறவுகள்

போரின் இறுதிக்கால இரகசியங்களை நியூயோர்க்கில் போட்டுடைத்தார் மைத்திரி

யாரப்பா இந்தச் செய்திக்கு இப்படி ஒரு தலைப்பை கண்டுபிடித்து போட்டது.

கொத்தணிக்குண்டுகளை தமிழருக்குமேல் போட்டது சிறிலங்கா இராணுவம் என்பது அனைவரும் அறிந்த உண்மை அப்படியிருக்க விடுதலைப்புலிகள் போட திட்டமிட்டிருந்ததாக இவர் அடித்துக்கூறுகிறார். போரின் இறுதிநாட்களில் இலங்கை இராணுவம்  கொத்தணிக்குண்டுகளையும் அனல் அமுக்கக்குண்டுகளையும் வகை தொகையின்றி அள்ளியெறிந்தார்கள்.

ஆனால் இறுதிக்கட்ட போர் தனது வழிகாட்டலிலும் தலைமையிலும் தான் நடந்தது என்று சொல்வதால் தம்பி வசமாக சிக்கிக்கொண்டார்.
தமிழ் தரப்பு சரியான அரசியல் சாணக்கியத்துடன்  காய்நகர்த்தி செயற்பட்டால் இதை மட்டும் வைத்து மைத்திரியை போர் குற்ற விசாரணைக்கு கொண்டுசெல்ல  வேறு ஆதாரங்கள் தேவையில்லை.

சிங்களத்தலைவர்கள்  புலிகள் கொத்தணிக்குண்டுகளைப் போடுவார்கள் என்று அதற்குப் பயந்து வெளிநாடுகளுக்குப் போகவில்லை தாங்கள் போட்ட குண்டுகளால் ஏற்படப்போகும் மனித அழிவுகளுக்கு எதிர்காலத்தில் பொறுப்புக்கூற வேண்டிவரலாம் என்ற பயத்தில் போருக்கு ஆதரவளித்த இந்தியாவின் ஆலோசனையின்படி போரின் இறுதிக்கட்டத்தை வெளிநாடுகளில் கழித்தார்கள். இராணுவ புலனாய்வு தகவலின்படி புலிகள் கொத்தணிக்குண்டுகளை போட திட்டமிட்டிருந்தார்கள் என்று கூட சொல்லாமல் 100 விழுக்காடு உறுதிபடச்சொல்வதில் இருந்தே புரிகிறது இவர் சிறிலங்கா இராணுவத்தை காப்பாற்ற தன்னைக்கூட அற்பணிக்க தயங்கமாட்டார் என்பது.

இன்னுமா தமிழ் அரசியல்வாதிகள் சிறிலங்கா ஜனாதிபதியை இனப்பிரச்சினைக்கு தீர்வு தருவாரென்று  நம்புகிறார்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன திடீர் என்று கொத்தனிகுண்டு கொத்தனிகுண்டு என்று கதை சொல்றார் உண்மையில் புலி விரும்பி இருந்தால் எல்லைப்புறங்களில் இருந்த சிங்களவர்களை போட்டு தள்ளிக்கொண்டு போயிருக்கலாம் போரும் இன்னும் ஒரு இரு வருடங்கள் பிந்தள்ளபட்டிருக்கும் (அதே நேரம் தமிழர் தரப்பில் இன்னும் பாரிய அழிவுகள் கொடுமைகள் நடந்து இருக்கும் )ஆனால் தங்களிடம் இருந்த சிங்கள  கைதிகளை கூட கடைசி நேரத்தில் சுதந்திரமாய் விட்டவர்கள் இப்ப ஏன் புலியையும் சம்பந்தமில்லா கொத்தணி குண்டையும் இணைக்கிறார் ........

1 hour ago, vanangaamudi said:

இன்னுமா தமிழ் அரசியல்வாதிகள் சிறிலங்கா ஜனாதிபதியை இனப்பிரச்சினைக்கு தீர்வு தருவாரென்று  நம்புகிறார்கள்?

செம்புகளின் அலப்பறை தாங்க முயாமல் போகுது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தப்பிப் பிழைக்க வழியில்லாமல் முள்ளிவாய்க்காலில் இருந்தபோது பிளேனைக் கடத்தி கொத்தணிக் குண்டு போடத் திட்டம் போட்டார்கள் என்று புலுடா விடுகின்றார் மைத்திரி. ஆனால் இதுவும் செய்திதானே!

7 hours ago, vanangaamudi said:

போரின் இறுதி இரண்டு வாரங்களில்,  விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த  திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சரத் பொன்சேகா போன்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர்  என்று போட்டுடைத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிங்கள-பௌத்தர்களின் கற்பனை நூலான மகா பொய் வம்சத்தில் ஒரு அத்தியாயத்தை எழுதும் தகுதி நெல்லை பதுக்கி வியாபாரம் செய்த மாபியா கும்பலைச் சேர்ந்த இந்த மைத்திரிக்கும் இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.