Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எலி மீது ஆனை

Featured Replies

  • தொடங்கியவர்

சமயங்கள் சொல்லும் தத்துவங்கள் வேறு சமய நம்பிக்கை வேறு என்று பாகுபடுத்த முடியும் என்றே கருதுகின்றேன்.. உலகில் உள்ள எல்லா மதங்களும் தத்துவங்களைக் கொண்டுள்ளன.. எனினும் பலர் தத்துவங்களை அடிப்படையாக வைத்து மதத்தை நம்புவதில்லை.. அப்படி நம்புவர்கள் உண்மையில் மதங்கள் சொல்லும் வழிப்படி ஒழுகுபவர்களாக இருக்கவேண்டும்.. எத்தனை பேர் அப்படி உள்ளனர்? மதங்களின் வழிப்படி நடக்காதோர் ஏன் மதநம்பிக்கையை இறுக்கிப் பிடிக்கின்றனர் (உ.ம். புத்தமதத்தின்படி நடந்து கொள்ளாத சிங்களவர் ஏன் புத்தமதத்தை இறுக்கிப் பிடிக்கின்றனர்)?

கடவுள் நம்பிக்கை உணரப்படவேண்டியது என்பதில் நான் உடன்படுகின்றேன். எந்த ஒரு

விடயத்தையும் நம்புவதற்கு போதிய ஆதாரம் தேவை. சில விடயங்களில் ஆதாரம் என்பது

நாம் அனைவரும் பார்;க்கக் கூடியதாக நம் கண் முன்னே உள்ளது. ஆனால் கடவுளைப்

பொறுத்தவரை உணர்ந்தால் மட்டுமே அந்த ஆதாரம் நமக்குக் கிடைக்கும்.

இக்ருத்தோடு எனக்கு பு+ரண உடன்பாடு. இதனால் தான் பிரச்சாரம் செய்து மதம்

மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

இனி, மத தத்துவங்களின் பிரகாரம் நடக்காதோர் ஏன் மதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்ற

உங்களது கேள்வி. இது ஆராயப்படவேண்டிய ஒன்று. நான் நினை;கின்றேன், கடவுளை

உணர்ந்தவர்கள் அதனால் தாம் அடைந்த நன்மைகளை நினைவில் வைத்திருக்கின்றார்கள்.

அதைத் துறந்து விட அவர்கள் தயாரில்லை. ஆனால் அந்நம்பிக்கைக்கு உரிய விலையைக்

கொடுக்க அவர்கள் தயாரில்லை. "அல்லாக்குப் பகிடியும் விளங்காது வெற்றியும் விளங்காது"

என்ற நகைச்சுவை தான் ஞாபகத்திற்கு வருகின்றது.

இன்னுமொரு வகையில் பார்ப்போமேயாயின், ஒரு குழந்தையின் பெற்றோர் அக்குழந்தைக்கு

முற்றிலும் எப்போதும் நன்மையே செய்கின்றனர். அதன் நன்மைக்கே பாடு படுகின்றனர்.

குழந்தையும் பெற்றோர் மூலம் தான் பெறக்கூடியன எல்லாவற்றையும் கொடுத்து வைத்தது

போல எடுத்துக் கொள்கின்றது. எனினும் குழந்தைக்குத் தீது என நினைத்துப் பெற்றோர்

அதன் நடவடிக்கைகள் எதற்கேனும் தடைபோட்டால் மட்டும் குழந்தை முறைக்கிறது.

பெற்றோரை வெறுப்பதாகக் கூறுகிறது. தனது பெற்றோர் தனக்கு எப்போதும் நல்லதே செய்வர்

என்பததை குழந்தை அறிந்திருந்தும், தனது விருப்பப்படி விடயங்கள் நடவாது தடைபடின் அது

பெற்றோர் சொல் தட்டுகிறது. பெற்றோர் குழந்தையைக் காட்டிலும் பலம் அதிகம் உடையவர்கள்

தான். குழந்தையின் பு+ரண நலன் விரும்பிகள் தான். இருப்பினும் குழந்தையை எப்போதும்

பெற்றோரால் கட்டுப்படுத்த முடிவதில்லை.

என்னைப் பொறுத்தவரை, உங்களின் கேள்விக்கான பதிலையும் நான் இந்த அடிப்படையில் தான் அணுகுகின்றேன் .

Edited by Innumoruvan

எல்லாம் சரிதான்!

புராணக் கதைகளின் நேரடி விளக்கப்படி கொண்டாடப்படுகின்ற விழாக்களையும் சடங்குகளையும் எப்பொழுது நிறுத்தப் போகிறீர்கள்?

என்றைக்கோ மனிதனுக்கு அறிவில்லாத காலத்தில் இந்தக் கதைகள் சொல்லப்பட்டது என்றால், இன்றைக்கும சமயப் பாடப் புத்தகங்களில் எதற்காக இவைகள் கற்பிக்கப்படுகின்றன?

ஆதிகால மனிதனின் அறிவுதான் இப்பொழுதும் உங்களுக்கு இருக்கிறது என்று சொல்லப் போகிறீர்களா?

உண்மையில் இது போன்ற விளக்கங்களை கொடுப்பதற்கு வெட்கப்பட வேண்டும்

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு விடயத்தைப் புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறில்லை.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

இங்கு ஆதிபகவன் எனப்படுவது இறைவனே என முதலில் விளக்கங்கொடுக்கப்பட்டு காலம்காலமாக படித்து வந்தோம். ஆனால் ஆதிபகவன் என்று சொல்லப்படுவது எமது அறிவையே ஆகும் என விளக்கவுரை எழுதியவர்கள் இல்லையா. இதுகள் எல்லாம் பழங்கதை. ஆனால் ஒரு விடயத்தைப் பற்றிய prior information ஐ விலத்தி ஆராய்வது ஒன்றும் புதிதல்ல என்று சொல்லவந்தேன்.

இன்றைக்கு மேலை நாடுகளில் எமது புராணக்கதைகளை ஆராய்ந்து புதுப் புது விளக்கங்கள் கொடுக்கிறார்கள். புதுப்புது விடயங்கள் கண்டு பிடிக்கிறார்கள். அலசுகிறார்கள்.

இந்த வகையிலேயே இன்னுமொருவனின் அலசல் இருந்தது. இதற்காக புராணக்கதைகளினை பின்பற்றுபவரின் ஒரு பிரதிநிதியாக அவரை உருவகித்து நீங்கள் செய்யும் விவாதம் நகைப்புக்கிடமானது. இதில் யாரும் வெட்கப்பட எதுவுமில்லை.

இந்த விளக்கங்கூட இல்லாதவர்கள் எல்லாம் தங்களுக்குத் தாங்களே பகுத்தறிவுப்பட்டங் கட்டிக்கொண்டு அலைகிறார்கள்

அறிவுக்கு பொருந்தாத புராணக்கதைகளை கிண்டலடிக்கும் பொழுது, மத நம்பிக்கை உள்ளவர்கள் பொதுவாக கொடுக்கின்ற விளக்கத்தைத்தான் "இன்னுமொருவன்" செய்திருக்கிறார்.

இப்படியான விளக்கங்களை கேட்டுக் கேட்டு புளித்துப் போய்விட்டது.

என்னுடைய கேள்வி இதுதான்!

இந்தப் புராணக் கதைகள் மனிதர்களுக்கு அறிவில்லாத காலத்தில் உருவாக்கப்பட்டது என்றால், இதற்காக இன்றைக்கும் இந்தப் புராணங்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது?

புராணங்களை அடிப்படையாகக் கொண்ட விழாக்களும் சடங்குகளும் பெரும் பணத்தையும் நேரத்தையும் விரயமாக்கி நடத்தப்படுகின்றன?

இதன் மூலம் இந்துக்களுக்கு இன்னும் அறிவு வரவில்லை என்று சொல்வது போல் அல்லவா இவைகள் இருக்கின்றன? இதைத்தான் வெட்கக்கேடானது என்று நான் சொல்கிறேன்.

"இன்னுமொருவன்" போன்று பலர் சொல்லுகின்ற விளக்கங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இவைகளை எப்பொழுது நடைமுறைக்கு கொண்டுவரப் போகிறீர்கள்?

நீங்கள் சொன்ன அவ்வளவு விடயங்களையும் (புராணங்களை அடிப்படையாகக் கொண்ட விழாக்களும் சடங்குகளும் ) புராணக்கதைகளின் வாசனையே இல்லாத பாமரனும் செய்கிறான் என்றால் என்ன அர்த்தம்? புராணக்கதை என்ற கருவைத் தாண்டி பிரச்சனையின் மூலம் வேறெங்கோ போய்விட்டது என்பது தானே? இனி புராணக்கதைகளை இவற்றுக்குக் காரணமாக ஆராய்வது தேவையற்றது தானே?

ஒரு பிரச்சனைக்குத் தீர்வை அந்தப் பிரச்சனையின் நிகழ்கால வடிவில் அணுகுவதே சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் யானை முக்த்துடன் பெரிய ஆளாகத் தோற்றமளித்தாலும் உண்மையில் அவர் ஒரு எலியினால் காவப்படுமளவுக்குச் சிறியதோற்றமுடையவர். பிறக்கும்போதே அவருடைய எடை கால் றாத்தலுமில்லை;. நீளங்கூட நாலு அங்குலம்தான். இந்த விடயங்களைக் கருத்திலெடுக்காமல் பிள்ளையாரைப்பற்றிக் கதைப்பதில் எந்தக் கருத்துமில்லை. ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் சரியான தகவல்களுடன் வாருங்கள். அரைகுறை அறிவோடு ஆராயாதீர்கள்.

இந்து மதத்தின் பெயரில் நடப்பது சுரண்டலும், மோசடியுமே தவிர வேறில்லை.

இந்தச் சுரண்டல்களையும் மோசடிகளையும் நடத்துவதற்காக சிலர் புராணக் கதைகளை எழுதி அறிவில்லாத ஆதி மனிதர்களை ஏமாற்றி வந்தார்கள். சுரண்டி வந்தார்கள்.

அறிவு வந்து சிலர் கேள்வி கேட்ட பொழுது, அந்தப் புராணக் கதைகளுக்கு புதிய தத்துவங்களை கூற முற்படுகிறார்கள்.

இங்கே இரண்டு விடயங்கள் நடக்கின்றன.

ஒன்று, பெரும்பாலான மக்களிடம் இருந்து இந்தப் புராணக் கதைகளை மறைத்து வைத்து மரபு அடிப்படையில் அவர்களை வழிநடத்துவது (புராணம் அறியாத பாமரர்கள்)

மற்றது, புராணம் அறிந்து கேள்வி கேட்பவர்களுக்கு புதிய தத்துவக் கதைகளை கூறுவது. இதில் பெரும்பான்மையானவர்கள் "கடவுள் பயத்தை" கொண்டிருப்பதால் இந்தக் கதைகளின் மூலம் சமாதானம் ஆகி விடுவார்கள்.

இப்படி இருபுறமும் ஏமாற்றி சுரண்டலும் மோசடியும் தொடர்ந்து நடக்கின்றன.

இங்கே புராணக் கதைக்கு தத்துவ விளக்கங்கள் சொல்பவர்களது நோக்கம் சுரண்டல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதுதான்.

உண்மையில் அவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், இந்த விளக்கங்களை சாதரண மக்களுக்கு சொல்லி, புராணக் கதைகளின் மூலம் நடக்கின்ற சுரண்டல்களை தடுக்க முனைவார்கள்.

ஆனால் யாரும் அதை செய்வதில்லையே. புராணங்களை நாம் பழிக்கின்ற போது மட்டும் விளக்கங்களை தூக்கிக்கொண்டு ஓடி வந்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் யானை முக்த்துடன் பெரிய ஆளாகத் தோற்றமளித்தாலும் உண்மையில் அவர் ஒரு எலியினால் காவப்படுமளவுக்குச் சிறியதோற்றமுடையவர். பிறக்கும்போதே அவருடைய எடை கால் றாத்தலுமில்லை;. நீளங்கூட நாலு அங்குலம்தான். இந்த விடயங்களைக் கருத்திலெடுக்காமல் பிள்ளையாரைப்பற்றிக் கதைப்பதில் எந்தக் கருத்துமில்லை. ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் சரியான தகவல்களுடன் வாருங்கள். அரைகுறை அறிவோடு ஆராயாதீர்கள்.

குறை மாதத்தில் பிறந்துவிட்டாரோ! :lol: சாதாராணமாக 10 மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் 20 - 24 அங்குல நீளத்தில் பிறக்கின்றார்கள்... அறிவுபூர்வமான விளக்கங்களைத் தந்தால் நல்லது! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.