Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்…

October 23, 2018

 

IMG-20181022-WA0105.jpg?resize=800%2C533

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் “ஞானலிங்கம்” – ஸ்ரீ ஞானலிங்கேஸ்வரர் ஸ்தாபிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டப வாயிலில் அமைந்துள்ள பழமையான மேடையில் குறித்த சிவலிங்கம் பிரதிஸ்டை செய்ய்யப்பட்டுள்ளது. 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யும் விம்பஸ்தானம் நிகழ்வு நடைபெற்று; அன்றைய தினமே மாலை எண்ணெய்காப்பு சாத்தப்பட்டது.

தொடர்சியாக 22.10.2018 திங்கட்கிழமை அன்று ஸ்ரீ ஞானலிங்கேஸ்வரருக்கான மகா கும்பாபிசேக நிகழ்வி சிறப்புற நடைபெற்றது. மகா கும்பாபிசேக நிகழ்வுகள் சாகித்ய சிரோன்மணி யாழ் நயினை சிவஸ்ரீ. வை.மு.ப. முத்துக்குமாரசாமி சிவாசாரியாரினால் மேற்கொள்ளப்பட்டது. கல்லூரி இந்து இளைஞர் சபையினரால் குறித்த நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பான முறையில் கல்லூரி அதிபர் ஆசிரியர், மாணவர்கள், பழைய மாணவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் நெறிபிறழ்வாக உருமாறி வருகின்றனர் என்ற கருத்து நிலவும் தருணத்தில்; பாடசாலைகளில் இவ்வாறான நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். குறித்த சிவலிங்கத்தினை மாணவர்கள் மலர் தூவி, நீர் அபிசேகம் செய்து வழிபடும் வகையில் அமையப்பெற்றுள்ளது. இவ்வாறாக எமது தொன்மையான சைவ சமய மரபுகளைப் பாதுகாத்து இளைய சந்ததியினருக்கு வழங்கும் நடவடிக்கையாகே ஈழத்தில் இது பார்க்கப்படுகின்றது; ஒரு சைவ பாடசாலையின் முன்மாதிரியான நடவடிக்கையாகும்.

IMG-20181022-WA0022.jpg?resize=800%2C533

 

http://globaltamilnews.net/2018/100415/

5 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் நெறிபிறழ்வாக உருமாறி வருகின்றனர்

5 hours ago, கிருபன் said:

கல்லூரி இந்து இளைஞர் சபையினரால் குறித்த நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பான முறையில் கல்லூரி அதிபர் ஆசிரியர், மாணவர்கள், பழைய மாணவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

யாழ் இந்துக் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் ஒழுக்கமற்றவர்களாக இருக்கும் வரையில் தற்கால மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த முடியாது.

மேலும் சிவலிங்கத்தை தாபிக்க வேண்டிய இடம் பாடசாலை மண்டபத்தின் மேடை இல்லை.

இதன் மூலம் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்களுக்கு அடிப்படை அறிவு அறவே  இல்லை என்பது வெளிப்படுகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

யாழ் இந்துக் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் ஒழுக்கமற்றவர்களாக இருக்கும் வரையில் தற்கால மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த முடியாது.

மேலும் சிவலிங்கத்தை தாபிக்க வேண்டிய இடம் பாடசாலை மண்டபத்தின் மேடை இல்லை.

இதன் மூலம் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்களுக்கு அடிப்படை அறிவு அறவே  இல்லை என்பது வெளிப்படுகிறது.

 

அதெப்படி ஒருவர் பிழையென கருத்தினால் மற்றவர்களை குற்றம் சாட்ட முடியும் ??

பல பாடசாலைகளில் சரஸ்வதி சிலையுண்டு ஏன் அவர் மட்டும் தான் கல்வியை வழங்குகிறாரா  இல்லையே கற்பிக்கும் ஆசிர்யருக்கும் சிலை வைக்கத்தானே வேண்டும் நல்ல ஆசிரியர்களுக்கு 

அதிபர் ஆசிரியர் பழைய மாணவர்களுக்கு அடிப்படை அறிவில்லையென்ற முதல் ஆள் நீங்கதான் ஹாஹா பாவம் (SLPS) Srilanka Principal Service:grin:

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்…

இவ்வாறாக எமது தொன்மையான சைவ சமய மரபுகளைப் பாதுகாத்து இளைய சந்ததியினருக்கு வழங்கும் நடவடிக்கையாகே ஈழத்தில் இது பார்க்கப்படுகின்றது; ஒரு சைவ பாடசாலையின் முன்மாதிரியான நடவடிக்கையாகும்.

இந்து சமயம் வடமொழியைக் கொண்டு ஆராதிக்கும் மரபைக் கொண்டது.

சைவ சமயம் தமிழ்மொழியைக் கொண்டு ஆராதிக்கும் மரபைக் கொண்டது.

இதில் எந்தச் சமயத்தின் மரபுகளைப் பாதுகாத்து இளைய சந்ததியினருக்கு வழங்குவார்கள்... ????? 

  • கருத்துக்கள உறவுகள்

இதைக் கேளுங்கள் சைவம் பற்றியும் லிங்கம் பற்றியும் அம்மா அருமையாக சொல்கின்றார். முதல் 7 நிமிடமாவது கேளுங்கள்......!

படிக்காமல் சரஸ்வதியை கும்பிட்டாலும், உழைக்காமல் லட்சுமியை  கும்பிட்டாலும் கல்வியும் கிடைக்காது செல்வமும் கிடைக்காது. அவலும், சுண்டலும் மட்டுமே கிடைக்கும். ஆகவே மாணவர்கள் தமது திறமையிலும், உழைப்பிலும் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் 

சாமி சிலையும் சிவலிங்கமும் சும்மா பக்கத்தில்  அலங்காரத்திற்கு வேண்டுமென்றால்  இருக்கட்டும். பரவயில்லை மாணவர்களும் ஆசிரியர்களும் தேவையற்ற விடயங்களில் கவனத்தை சிதைக்காது  தமது திறமையில் ல் நம்பிக்கை வைத்து உழைத்தால் மட்டுமே உயர்வு உண்டு. 

18 hours ago, suvy said:

இதைக் கேளுங்கள் சைவம் பற்றியும் லிங்கம் பற்றியும் அம்மா அருமையாக சொல்கின்றார். முதல் 7 நிமிடமாவது கேளுங்கள்......!

இவர்  கூறுவது அனைத்துமே அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள். கிறிஸ்த்தவம் இஸ்லாம் போன்ற மற்றய மதங்களை போலவே இதுவும் அதே மடைத்தனதான மதப்பரப்புரை தான். தமிழ் சைவம் என்று கூறிவிட்டு அரைவாசிக்கு  உபயோகிப்பது வடமொழிச்சொற்கள். 

அன்பே சிவம்  என்று கூறுகிறார். பாண்டிய மன்னனின் உதவுயுடன் சமணர்களையும் பெளத்தர்களையும் ஆயிரக்கணக்கில் கழுவில் ஏற்றி  கொலை செய்த சம்பந்தர் போதித்ததும் இதே அன்பு மதம்  தானா?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.