Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் பதவிக் காலம் பற்றி அரசியல் சாசனத்தினது 46வது சரத்தின் 2வது பிரிவு சொல்வது .....

Featured Replies

பிரதமர் பதவிக் காலம் பற்றி சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் அரசியல் சாசனத்தினது 46வது சரத்தின் 2வது பிரிவு சொல்வது .....

46.
(1) The total number of–
(a)  Ministers of the Cabinet of Ministers shall not exceed thirty; and
(b)  Ministers  who  are  not  members  of  the  Cabinet  of  Ministers  and  Deputy  Ministers  shall  not,  in  the  aggregate, exceed forty.

(2)  The   Prime   Minister   shall   continue   to   hold   office   throughout  the  period  during  which  the  Cabinet  of  Ministers  continues  to  function  under  the  provisions  of  the  Constitution  unless he -
(a)  resigns  his  office  by  a  writing  under  his  hand addressed to the President; or
(b)  ceases to be a Member of Parliament.

http://www.parliament.lk/files/pdf/constitution.pdf

  • தொடங்கியவர்

மகிந்த ராஜபக்சவின் பயங்கரவாதக் கும்பல் முன்பைப் போலவே நீதித்துறையையும் நீதிமன்றையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால், தாங்கள் கடத்தி கொலை செய்து கொள்ளையடித்த பண பலத்தால் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடிந்தால், போர்க்குற்றவாளி மகிந்த பிரதமராக தொடர்ந்து சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத்தை மேலும் முன்னெடுக்கலாம்.

அதே நேரத்தில், மைத்திரி இறந்தால் அல்லது (மகிந்த ராஜபக்சவின் பயங்கரவாதக் கும்பலால்) கொலை செய்யப்பட்டால், மகிந்த சர்வ பலமுள்ள இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்க முடியும்.

மைத்திரி தனக்குத் தானே குழிபறித்துக் கொண்டாரா என்பது சில காலத்தில் விளங்கும்.

  • தொடங்கியவர்

பக்கசார்பற்ற முறையில் நாளை அறிவிப்பேன் – சபாநாயகர் அறிவிப்பு!

karu.jpg

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாகவும். அது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடவுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, சட்ட ஆலோசனைகளின் படி அமையும் என சபாநாயகரின் ஊடகப்பிரிவு சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பக்கசார்பற்ற முறையில் தனது நிலைப்பாடு அமையும் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/பக்கசார்பற்ற-முறையில்-நா/

  • தொடங்கியவர்

மஹிந்தவை பிரதமராக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியீடு

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்துள்ளதாக அரசாங்கம் வர்த்தமானி மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

DqdojSVXcAAEc31.jpg

Edited by போல்

  • தொடங்கியவர்

 

பிரதமரை விலக்க ஜனாதிபதி பாவித்த அஸ்திரம்
================≠============
இலங்கை அரசிலமைப்பின் 46 (2) சர்த்து  படி, பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று ரணில் விக்ரமசிங்க உட்பட பலர் தெரிவித்திருக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமல் இல்லை. 

ஆனால் ....

அதே 46 சர்த்துக்கு அமைய கபினட் உறுப்பினர்கள் 30 ஐ விட அதிகரிக்க முடியாது என்றும், குறித்த கபினட் நடைமுறையில் இருக்கும்வரைதான் 46(2) பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு  வரையரை செய்துள்ளது. 

ஆனால் தற்போதைய கபினட் உறுப்பினர்களின் எண்ணிக்கை "இரண்டு கட்சிகளை" கொண்ட தேசிய அரசாங்கம் என்பதை வரையறுத்து அதிகரிக்கப்பட்டது. இந்த இரு கட்சிகளில் ஒரு கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகும் போது, தேசிய அரசாங்கம் கலைகிறது. அதையொத்து (அதிகரிக்கப்பட்ட) கபினட்டும் கலைகிறது. 

UPFA தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுகிறோம் என்று தனது செயலாளர் ஊடாக முதலில் அறிக்கைவிடுத்தது. தேசிய அரசாங்கம் கலைக்கப்படும் என்றால், நடைமுறையில் இருந்த கபினட்டும் தானாக கலைந்துவிடும். 

கபினட் கலைந்தவுடன் அரசியமைப்பின் 42(4) இற்கு அமைய, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று கருதும் ஒரு பாராளுமன்ற உருப்பினரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வந்துவிடுகிறது. 

இந்த துரும்பையே ஜனாதிபதி பாவித்துள்ளார்.

  • தொடங்கியவர்

3 முக்கிய சிறுபான்மை கட்சிகள் மந்திர ஆலோசனையில்! முடிவு விரைவில்...

நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த 3 முக்கிய கட்சிகள் முக்கிய பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளன.

manof.jpg

அந்த வகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய சிறுபான்மைக் கட்சிகள் இந்த முக்கிய பேச்சுவார்த்தையில் தனித்தனியாக ஈடுபட்டுள்ளன.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து எவ்வாறு முங்கொடுப்பது தொடர்பான பேச்சில் 3 கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் 5 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் 7 உறுப்பினர்களும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் 6 உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்தனர்.

இந் நிலையில் அமைச்சர் மனோகணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/43292

  • தொடங்கியவர்

மக்கள் ஆணையை ஜனாதிபதி தவறாக பயன்படுத்தி விட்டார் - ஜயம்பதி விக்ரமரட்ன

jayampathi.jpg

பிதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டதாக குறிப்பிடும் விடயம் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கிய மக்களின் ஆணையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறாக பயன்படுத்தி விட்டதாகவும் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பிற்கு முரணாக பிரதமர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்று குறிப்பிடுபவர்கள் அரசியலமைப்பினை முழுமையாக ஆராயவில்லை என்றே குறிப்பிட வேண்டும். இவ்விடயத்தில் அரசியலமைப்பு  அரசியல் தேவைக்காக  மாற்றயமைக்கப்பட்டு விட்டது . 19 ஆவது அரசியலமைப்பின் 42 ஆம் அத்தியாயம் இவ்விடயங்கள் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவினை பெறுபவரை ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும்.  இதனை   42 ஆம் அத்தியாயத்தின்  4 ஆம் பிரிவு குறிப்பிடுகின்றது. பதவி நீக்கம் தொடர்பில்  46 (2) பிரிவு குறிப்பிடுகின்றது  அதாவது  பாராளுமன்றத்தின்  அமைச்சரவை செயற்படும் வரையில்  பிரதமர் ஒருவர்   பதவி வகிக்க முடியும்,  பதவி காலத்தில்  அவரே தன்விருப்பின் பெயரில் பதவி  விலகலாம்,  அல்லது பாராளுமன்றத்தில்  நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை கொண்டு வந்து அதனை நிறைவேற்றும் பட்சத்தில் பதவி விலக முடியும் என்றே 19 ஆவது  திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்விடத்திலும்  பிரதமராக நியமித்தவரே பதவி நீக்கம் செய்யலாம் என்று  குறிப்பிடுவில்லை. 18 ஆம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள  விடயங்களை கருத்திற் கொண்டு வாதிடுபவர்கள் சுயநினைவு அற்றவர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

இந் நிலையில் பிரதமரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரமோ, இடைப்பட்ட காலத்தில் அமைச்சரவையினை கலைக்கும் அதிகாரமோ ஜனாதிபதிக்கு கிடையாது. தற்போது இடம்பெற்ற விடயங்கள் இடம்பெற கூடாது என்பதற்காகவே பாராளுமன்றம் அதிக அதிகாரமுடையதாக மாற்றியமைக்கப்பட்டது என்றார்.  

ஜனநாயகத்திற்கான சட்டத்திரணிகள் அமைப்பினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/43393

  • கருத்துக்கள உறவுகள்

சட்டப் பேராசிரியர் பீரிஸ் ஆலோசனை கேட்டால்... இப்படி தானே ஆகும்.

  • தொடங்கியவர்
9 hours ago, Nathamuni said:

சட்டப் பேராசிரியர் பீரிஸ் ஆலோசனை கேட்டால்... இப்படி தானே ஆகும்.

பெரும்பாலான (90% ஆன) சட்டத்தரணிகள் இலங்கையிலுள்ள படிப்பறிவில்லாத மக்களைவிட மூடர்களாவே இருக்கிறார்கள். அதில் பீரிஸ் முதல் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி சட்டத்தரணிகள் அனைவரும் அடக்கம்.

  • தொடங்கியவர்

பிரதமர் பதவிநீக்கம் செல்லுபடியாகுமா? – சிங்களத்தில் உள்ளதே இறுதியானதென்கிறார் ஜீ.எல்.பீரிஸ்

இலங்கை அரசியல் யாப்பின் 48(1)இன் அடிப்படையில் ஜனாதிபதியால் பிரதமரை பதவிநீக்க முடியுமென பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பின் சிங்கள மொழிமூலத்தில் இவ்விடயம் தெளிவாக காணப்படுவதாகவும், ஆங்கிலத்தில் இவ்விடயம் குறிப்பிடப்படவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சிங்கள மொழிமூலமான அரசியல் யாப்பே இலங்கையில் உத்தியோகபூர்வமானதென பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள பிரதமர் செயலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்ற வழக்காடல்களிலும் ஏதேனும் தெளிவுபடுத்தல்கள் தேவைப்படும் போது அவர்கள் சிங்கள மொழியில் உள்ளவற்றையே அதிகாரபூர்வமாக கருதுவதாக பீரிஸ் குறிப்பிட்டார். அந்தவகையில், ஜனாதிபதியின் தீர்மானம் அரசியல் யாப்பிற்கு உட்பட்டதென அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய பிரதமர் தெரிவானது அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தவிர்க்க முடியாத விடயம் என்றும் காலத்தின் தேவையென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/பிரதமர்-பதவிநீக்கம்-செல்/

  • 2 weeks later...
On 10/27/2018 at 2:03 AM, போல் said:

மைத்திரி தனக்குத் தானே குழிபறித்துக் கொண்டாரா என்பது சில காலத்தில் விளங்கும்.

இப்ப விளங்கிட்டு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.