Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடரங்கு வேளையில் நடைபெறும் கொடூரம்! -(தேசியன்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லாருக்கும்

உங்கள் உள்ளக்கிடக்கைகளை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

ஆரம்ப காலத்தில் புலிகள் மறைந்திருந்து தாக்கிவிட்டு ஒடி விடுவார்கள்

அப்பொழுது நடந்த ராணுவ அட்டூளியத்தை எல்லாரும் இது தான் ஆரம்பம் என்று ஏற்றுக்கொன்டோம்

ஆனால் இப்பொழுது விமானத்தில் குண்டு போடும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்

இன்னும் ஏன் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்று ஒன்று இரண்டு இராணுவத்தை சுட்டோ அல்லது கண்ணிவெடி வைத்து தாக்குகிறார்கள்???????

பின்னர் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு ஊர் உலகை கூட்டி நியாயம் கேட்டு என்ன பிரயோசனம்??????

குழந்தை பிள்ளை கூட சொல்லும் அண்ணா மார் சுட்டதால் தான் இராணுவம் சுட்டுது என்று

பொறுத்திருந்து பார்க்கலாம் ஆனால் ஒவ்வொரு நாளும் 10 அல்ல்து 15 பெருக்கு மேல் இறந்து கொண்டிருக்கிறார்கள்.......................

Edited by nedukkalapoovan

ஆரம்ப காலத்தில் புலிகள் மறைந்திருந்து தாக்கிவிட்டு ஒடி விடுவார்கள்

அப்பொழுது நடந்த ராணுவ அட்டூளியத்தை எல்லாரும் இது தான் ஆரம்பம் என்று ஏற்றுக்கொன்டோம்

ஆனால் இப்பொழுது விமானத்தில் குண்டு போடும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்

இன்னும் ஏன் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்று ஒன்று இரண்டு இராணுவத்தை சுட்டோ அல்லது கண்ணிவெடி வைத்து தாக்குகிறார்கள்???????

*********

மாற்று கருத்துக்களை வரவேற்கிறேன். ஆனால் இது போண்ற விசம பிரச்சாரங்களை வன்மையாக கண்டிக்கிறேன். புலிகள் தன் கண்ணெதிரில் அனைத்து உறவுகளையும் பழிகொடுத்துவிட்டு உருவானவர்கள். உமது கூற்று படி புலிகள் இலங்கை இராணுவத்தைதான் தாக்குகிறார்கள், மக்களை அல்ல. அதுவும் தற்காப்பு தாக்குதலெ.

நீர் யார்(சிங்கலன்) என்றாலும் சரி கேட்டுக்கொள்ளும் "தமிழர்களை ஒரு ஓரத்தில் இருந்து அருவடை செய்கிறது அரசு. புலிகள் இல்லை என்றால் எப்போதோ முழு அருவடையும் முடிந்திருக்கும்." :angry: :angry:

மோகன் அண்ணாவிர்க்கு, நீங்கள் ஏன் இந்த வில்லன் மைந்தனையும் அவரது கருத்துக்களையும் நீக்க கூடாது. <_<:lol:

Edited by வெங்கட்

கருணை நிழல்,

போராட்ட சூழலில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் உறவுகளின் ஆதங்கங்களையும் மனக்குமுறல்களையும் உள்ளடக்கிய கருத்துக்கள் நிச்சயமாக வரவேற்புக்குரியன. உயிராபத்துக்கும் மத்தியில் வாழ்ந்துகொண்டு விடுதலைத்தீயை அணையாது காப்பதென்பது விடுதலைப் போரில் போராளிகளின் அளப்பரிய சேவைக்கு ஒப்பானது.

இன்று எதிரியின் போர்த் தந்திரோபாயங்கள் பன்முகப்படுத்தப்பட்டுள்ளதை தமிழீழ தேசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதில் ஒன்று தான் ஆயுத அடக்குமுறைக்குச் சமாந்திரமாக உளநிலை தாக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்தும் எதிரியின் இந்த உத்திகள். நீங்கள் குறிப்பிட்டெழுதிய அந்த 10 விடயங்களும் அழிப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதிலும் பார்க்க சீரழிவுகளையும் நீண்ட காலத்துக்கு இன்னல்களையும் ஏற்படுத்துவதுடன் நில்லாது தமிழ் மக்களுக்கு போராட்டத்தின் மேலுள்ள உறுதியை அத்திவாரத்துடன் தகர்த்தெறிவதற்கென்றே எதிரியால் கட்டவிழ்ந்து விடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமாகும்.

ஈழத் தமிழினம் அனுபவிக்கும் கொடுமைகளும் உயிரிழப்புகளும் என்றும் நிரந்தரமானதாகி விடாது. விரைவில் எமக்கோர் விடிவுகாலம் பிறக்கும்

Edited by Norwegian

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவிர்க்கு, நீங்கள் ஏன் இந்த வில்லன் மைந்தனையும் அவரது கருத்துக்களையும் நீக்க கூடாது.

இது நியாயத்தை கொண்டிராதவர்கள் செய்ய வேண்டிய காரியம். மக்கள் மத்தியில் பல தெளிவற்ற நிலைகள் இருக்கின்றன. அவற்றை வெளி வர அனுமதித்து அதில் உள்ள நியாயமற்ற தன்மைகளை சுட்டிக்காட்டி நியாயங்களை அடையாளப்படுத்தும் போது கேள்வி கேட்பவர்கள் புரிகிறார்களோ இல்லையோ கேள்வி கேட்கப் பயந்து நியாயம் என்று அவற்றைக் கட்டிக் கொண்டிருப்பவர்களாவது தங்கள் எண்ணங்களின் தவறுகளை உணர்ந்து மாற்றிக் கொள்ள முனையலாம்..!

நீங்கள் கோருவது பலவீனமான அணுகுமுறை. அவர்களின் கேள்விகளுக்கு அவர்களா ஒரு காரணம் வவத்திருக்கும் போது அதை தடை செய்வதன் மூலம் அது நியாயமா இருக்குமோ என்ற பெறுமதியை அதற்கு அளிக்கும்..! இதன் மூலம் நியாயத்தன்மைகள் கூட மறைந்து அநியாயமான விளக்கங்கள் காரணங்கள் சமூகத்தில் இவ்வகைக் கருத்துக்கள் மூலம் வேரூன்றி விடுகின்றன.

மோகன் சாரும் உங்களைப் போலத்தான் கருத்துக்களை எதிர்கொள்ள தயங்குகிறார் அல்லது அவை பெரிய தாக்கங்களை உண்டு பண்ணிடும் என்று நினைக்கிறார் போலும். எதுஎப்படியோ மோகன் சாரின் அணுகுமுறைகள் சில மாற்றுக்கருத்து அல்லது எதிர்க்கருத்துக் கொண்டு அலைபவர்களுக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கிறது. காரணம் சரியான விளக்கம்.. அல்லது கலந்துரையாடல்களுக்கான சந்தர்ப்பங்கள் நிராகரிக்கப்படும் போது.. அவர்களின் நிலையைப்பாட்டை அவர்கள் நியாயம் சாதனை என்று நினைக்கவும் காட்டவும் தூண்டுவதால்..! <_<

Edited by nedukkalapoovan

யதார்த்தமான வினவல்.. ஆனால் இந்த யதார்தத்திற்குப் பின்னால் புலிகள் மட்டும் குற்றவாளிகளாக.. உண்மை..??!

உதாரணத்துக்கு......

.......

.......

.......இராணுவம் மக்களைத் திருப்பித் தாக்கும் என்பதால் மக்கள் தான் தம்மை பாதுகாக்க காத்திரமான பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக அடிக்கடி தாக்குதல் இலக்காகக் கூடிய இராணுவ நிலைகளுக்கு அருகில் வாழாமல் வெளியேற வேண்டும். தாக்குதல் நடக்கக் கூடிய சந்தர்ப்ப காலங்களில் மக்கள் தூர விலகி இருக்க வேண்டும். இராணுவம் திருப்தி பழிவாங்கல் தாக்குதல்களை மக்கள் மீது செய்யும் போது அதை நீதிக்கும் , வெளி உலகுக்கும் ஆதாரங்களோடு காட்டி அரச படைகளின் அட்டூழியங்களை ஊடகத்தினரும் மக்களும் புலிகளும் வெளிவரச் செய்ய வேண்டும்.......

........

சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனின் பதிலைக் கேட்ட வேதாளம் மீண்டும்.......!!!

  • கருத்துக்கள உறவுகள்

சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனின் பதிலைக் கேட்ட வேதாளம் மீண்டும்.......!!!

வியட்நாமிய மக்கள் எதிர்கொண்ட அமெரிக்க வல்லரசின் கொடூரங்களோடு ஒப்பிடும் போது.. கியூப மக்கள் இன்று வரை அமெரிக்க வல்லாதிக உலகின் இராணுவ பொருளாதார அரசியல் நெருக்கடிகள் மத்தியில் செல்வச் செழிப்பின்றி வாழும் நிலையிலும்.. காஸ்ரோவின் வழியில் நிற்பதோடு ஒப்பிடும் போது.. ஆரம்பித்த போராட்டத்தையே கைவிட்டு ஒட நினைக்கும்... எதிரியின் அடாவடித்தனங்களுக்கு அடிபணிந்து சரணாகதி அடைய நினைக்கும் நிலையும்..எம்மவர்கள் இழந்தவற்றிற்கு.. இழக்கப்போவதற்கும்... புலி எதிர்ப்பு டக்கீளஸ் கருணா வரதராஜப் பெருமாள்கள் எடுபிடி அரசியல் நடத்தியதைத் தவிர.. வேதாளம் சொல்லக் கூடிய நல்ல பதில் என்ன ஒவ்வொரு தடவையும் விக்கிரமாதித்தனிடம் கேள்வி கேட்கும் வேதாளம் இம்முறை விக்கரமாதித்தனின் தலை வெடிக்குதோ இல்லையோ அவனின் கேள்விக்கு வேதாளம் பதில் சொல்லாட்டி.. ஏற முடியாது.. முருங்கை மரம்..! :P :lol:<_<

ஆகா நெடுக்ஸ் அற்புதமான் கண்ணோட்டம். அதே நேரம் சாணக்கியன் என்ன பதில் சொல்லப்போகிறீங்க.

நான் இயக்கத்தால் சுட்டுக்கொள்ளப்பட போஸ்டில் கட்டப்பட்டு உயிர்பிழைத்தவன். முகத்தில் சலம் அடித்து ஈபியினால் கேவலப்படுத்தப்பட்டவன். யோகன் என்று அழைக்கப்படும் ஆரியகுளம் பகுதியில் வசித்த xxx ஆளால் வேதனையை அனுபவித்து என் காதுகள் கேட்கமுடியாதவகையில் கை மொளியினால் குத்தப்பட்டு 90 வீதம் உயிர் போகுமட்டும் சித்திரவதை செய்யப்பட்டவன். எனது அம்மா என் கண்முன்னால் சித்திடவதை செய்யப்பட்டா, என் வீட்டு பெண் உதவியாள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாள், எங்களுடன் வேலை செய்த 8 இந்திய தமிழரின் நகம்கள் பிடுங்கப்பட்டன, மிளகாய் தூள் ஆண் உறுப்புகளில் பூசப்பட்டன.

இதல்லாம் நடந்தது எனது அப்பர் xx காசு கொடுத்த ஒரே காரணத்துக்காக...

கொழும்பு வந்தேன் லொட்ஜ் லொட்ஜ் ஆக ஏறி இறங்கி எனக்கு அடித்தவனையே xxxxx நான். எனக்கு எல்லாம் விளங்கும் என்ன நடக்கின்றது அங்கே என்று. கண்டதுகள் xxxxx தணிக்கை....

கந்த சஸ்டி கவசம் பாடி அது அற்புதமோ இல்லையோ சுடாமல் என்னை விட்டு விட்டு போனார்கள். இது நடந்தது 1989ல் நான் கொழும்பில் இருந்து அப்பர கூட்டிவர யாழ்ப்பாணம் போன போது. இன்றும் யாராவது ஈபி என்றால் நிலை குலைந்து அடித்துப்போடுவேன். :angry:

யாழ் கள அன்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்,

உங்கள் கருத்துகளில் நீங்கள் பயன்படுத்தும் சில பொதுவான சொற்பதங்களை மிகுந்த கவனத்துடன் கையாளும்போது தான் நீங்கள் எதிர்பார்த்த விளக்கம் வாசகர்களைச் சென்றடையும் என்ற எனது தாழ்மையான கருத்தை இங்கு முன்வைக்க விழைகின்றேன். நாம் அன்றாடம் தமிழ் தேசியம் தழுவிய சொற்பதங்களாக நாடு, இயக்கம், அமைப்பு, தலைவர், ஊர், தமிழர் போன்ற பல வாசகங்களை அனேகமாக எல்லாவித சந்தர்ப்பங்களிலும் பொதுவாகப் பயன்படுத்திவருகின்றோம்.

ஈழ விடுதலைப் போராட்டம் சம்பந்தமான கருத்தாடல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது ஒருவர் தனியே "இயக்கம்" என்று குறிப்பிட்டெழுதினால் அதை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான அர்த்தத்துடன் விளங்கிக்கொண்டு கருத்தாடலின் போக்கையே வேறுதிசைக்குத் திருப்பிவிடவும் அல்லது சிலவேளைகளில் ஒத்த கருத்துடையவர்களே ஒருவரை ஒருவர் மறுதலித்து எதிர்மறையாக கருத்தெழுதவும் வாய்ப்புகள் உள்ளன. இதை நான் பலமுறை யாழ்களத்தில் அவதானித்ததன் காரணத்தினாலேயே இப் பிரச்சினையை இங்கு முன்வைக்கவேண்டிய அவசியம் உருவாகிற்று.

தமிழ் தேசிய ஆதரவாளர்கள் மத்தியில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கான சில உதாரணங்களையும் அதன் பொருளையும் நான் இங்கு தருகிறேன்.

இயக்கம், அமைப்பு - தமிழீழ விடுதலைப் புலிகள்

நாடு - தமிழீழம்

ஊர் - தமிழீழம், அல்லது அதன் ஒரு பிரதேசம், பகுதி

தலைவர் - தமிழீழத் தேசியத் தலைவர்

கொடி - தமிழீழ தேசியக் கொடி

தமிழர் - ஈழத் தமிழர்(புலத்திலுள்ள, புலம் பெயர்ந்த)

பொடியள் - தமிழீழ விடுதலைப் புலி போராளிகள்

இது போல இன்னும் பல சொற்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாங்கள் மிகுந்த கவனத்துடன் இச் சொற்களைக் பயன்படுத்த வேண்டும் அல்லது இதற்காக ஒரு ஒழுங்குமுறையை உருவாக்குதல் வேண்டும் என்று கேட்டுக்கொண்டு கள நண்பர்களும் உங்கள் அபிப்பிராயங்களையும் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

விலான் மைந்தா போராட்ட காலங்களில் இவைகள் நடப்பதுண்டு.என் உறவுகள் எல்லோரும் யாழில் தான் இருக்கிறார்கள்.மனதிற்கு கஸ்டம் தான் என்ன செய்வது.அதற்காக வார்த்தைகளை அள்ளி வீசாதீர்கள்.இந்தப்படத்தில் இருப்பவர் பூனையாகவும் அப்பாவிகள் எலிகளாகவும் உள்ளார்கள்.கேட்டால் யுத்தமே உங்களுக்காகத்தான் என்பார்கள்.நாங்கள் பாதிக்கப்படுவது கூடுதலாக எதிரியிடம் இருந்தல்ல துரோகிகளிடமிருந்துதான்.உலகந

post-2821-1176121077_thumb.jpg

வணக்கம் மருதங்கேர்ணி

உங்கள் கருத்துப்படிப் பிறந்தவர் எல்லாரும் சாவது வழமை தான் ஆனால் தன் பிள்ளை அனியாய சாவு சாவதை எந்த தாயும் ஏர்க்க மாட்டாள் தெரிந்தால் கர்ப்பிலும் அளிக்க தயங்க மாட்டாள்..

இங்கு நான் சொல்ல வந்தது ஏர்கனவெ பட்டினியால் வாடுபவர்களை மேலும் துன்பத்துக்குள்ளாக்குவதை தான்..

  • கருத்துக்கள உறவுகள்

தாயகம்- எமது நாடு

புலம் - வெளிநாடு

கிளிநொச்சி - தலைமைச்செயலகம்

இது நியாயத்தை கொண்டிராதவர்கள் செய்ய வேண்டிய காரியம். மக்கள் மத்தியில் பல தெளிவற்ற நிலைகள் இருக்கின்றன. அவற்றை வெளி வர அனுமதித்து அதில் உள்ள நியாயமற்ற தன்மைகளை சுட்டிக்காட்டி நியாயங்களை அடையாளப்படுத்தும் போது கேள்வி கேட்பவர்கள் புரிகிறார்களோ இல்லையோ கேள்வி கேட்கப் பயந்து நியாயம் என்று அவற்றைக் கட்டிக் கொண்டிருப்பவர்களாவது தங்கள் எண்ணங்களின் தவறுகளை உணர்ந்து மாற்றிக் கொள்ள முனையலாம்..!

நீங்கள் கோருவது பலவீனமான அணுகுமுறை. அவர்களின் கேள்விகளுக்கு அவர்களா ஒரு காரணம் வவத்திருக்கும் போது அதை தடை செய்வதன் மூலம் அது நியாயமா இருக்குமோ என்ற பெறுமதியை அதற்கு அளிக்கும்..! இதன் மூலம் நியாயத்தன்மைகள் கூட மறைந்து அநியாயமான விளக்கங்கள் காரணங்கள் சமூகத்தில் இவ்வகைக் கருத்துக்கள் மூலம் வேரூன்றி விடுகின்றன.

மோகன் சாரும் உங்களைப் போலத்தான் கருத்துக்களை எதிர்கொள்ள தயங்குகிறார் அல்லது அவை பெரிய தாக்கங்களை உண்டு பண்ணிடும் என்று நினைக்கிறார் போலும். எதுஎப்படியோ மோகன் சாரின் அணுகுமுறைகள் சில மாற்றுக்கருத்து அல்லது எதிர்க்கருத்துக் கொண்டு அலைபவர்களுக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கிறது. காரணம் சரியான விளக்கம்.. அல்லது கலந்துரையாடல்களுக்கான சந்தர்ப்பங்கள் நிராகரிக்கப்படும் போது.. அவர்களின் நிலையைப்பாட்டை அவர்கள் நியாயம் சாதனை என்று நினைக்கவும் காட்டவும் தூண்டுவதால்..! <_<

ஆனால் அனைத்து கருத்துகளையும் ஏற்றுக்கொள்வதில் சிக்கல் உண்டு. உதாரணமாக விளானின் கருத்துக்களில் பாதிப்பில் ஏற்பட்ட வலியை விட இராணுவத்தின் சார்பில் பலிவங்கும் வேட்கையே அதிகமாக தெரிகிறது.அதானாலேயே, சற்று உச்ணமாகவெ எழுதிவிட்டேன். அடுத்தமுறை கண்டிப்பாக நிதானத்துடனே எழுதுகிறேன். :lol:

விளானின் கருத்தில் தற்காத்துக் கொள்தலை மிகபெரிய பாவாமாக எழுதியுள்ளதையும் இராணுவத்தின் அரக்கதண்மையை சரி என்று எழுதியுள்ளதையும் படிக்கும்போது மிகுந்த வேதனையை தந்தது இது போண்ற கருத்துக்கள் இனி தொடராது என்றெ நம்புகின்றென். :lol:

நன்றி

Edited by வெங்கட்

  • கருத்துக்கள உறவுகள்

துன்பத்தின் போது அதற்கேற்பத் தாக்கமடையும் மனநிலை எல்லோருக்கும் பொதுவானதுதான். உண்மையில் அங்கு பெருத்த அவலமே நடைபெறுகிறது. இதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணமென்பது எவ்வாறு பொருந்தும். அது விடுதலைப் புலிகளின் பிரதேசமாக இருப்பின் நாம் மட்டுமல்ல மற்றைய உலக நாடுகளும் கேள்விகளை எழுப்பியிருக்கும். ஆனால் இவை நடப்பதெல்லாம் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில். அதுவும் இராணுவத்திற்குத் துணைபோகும் ஒட்டுக்குழுக்களே இவ்வாறான செயல்களுக்கு வழிகாட்டுகின்றன. இதிலிருந்து தமிழர்களைக் காப்பதற்கு உள்ள ஒரேயொரு தரப்பு விடுதலைப்புலிகள் மட்டுந்தான். அவர்கள் நாடியுள்ள உபாயங்கள் எவ்வாறானதாக அமையப் போகின்றதென்பதைப் பொறுமையுடனும் காத்திருப்புகளுடனும் எதிர்பார்த்திருக்கத்தான் வேண்டும்.

***********************************************

இங்கு பதிவு செய்யப்பட்ட இந்த சம்பவங்களை விட மிக மோசமான நிகழ்வுகள் வெளிவராமல் இருக்கின்றன. நான் தனிப்பட்ட முறையில் சேகரிக்கப்பட்ட சம்பவங்கள் பல, பெற்ற தகப்பனையே மகளுடன்.......ஆயுத முனையில் வற்புறித்திய சம்பவங்கள் உட்பட..இங்கு சொல்ல முடியாத துயரங்கள் ஒன்றா இரண்டா? தமிழீழத்தின் சரித்திரத்திலேயே நடவாத அட்டூழியங்கள் இதில் வெட்கப் படக்கூடிய விடயம் என்னவென்றால் கூடுதலானவை தமிழ் ஒட்டுக் குழுக்களினாலேயே செய்யப்படுகின்றன. இதனால் தான் " தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கட்கு ஓர் பகிரங்க வேண்டுகோள்'' என்ற ஒரு ஆக்கத்தை இங்கு பதிவு செய்திருந்தேன். அதையும் இதையும் ஒப்பிட்டுப் பார்த்தீர்கள் என்றால் என்னுடைய எதிர் பார்ப்பு புரிந்திருக்கும். பொறுத்த நேரத்தில் முக்கிய செய்தியை பதிவு செய்த உங்களுக்கு எனது நண்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் பதில் கருத்துப் பதிவு செய்பவர்களுக்கு ஒரு பணிவன்பான வேண்டுகோள். அதாவது இந்த ஆக்கத்தில் விமர்சிக்கத் தக்க செய்தி எதுவும் கிடையாது ஆனால் உங்களால் பதிவு செய்யப் படும் கருத்துக்கள் பாதிக்கப் பட்டவர்களுக்கு அனுதாபமாகவும், இதை எப்படி அணுகலாம் என்ற ஆலோசனையாகவும் இருந்தால் இந்த செய்தியைப் பதிந்தவருக்கு ஒரு வெற்றியாக இருக்கும் என்பது எனது கருத்து.

இங்கு நடக்கும் எந்த உரையாடலும் தடைசெய்யப்பட வேண்டியது அல்ல. ஒரே ஒரு ஆசை, அழைப்பு மணி எங்களது வீடுகளில் ஒலிக்கும் போது, "போனமுறை இது தான் இறுதி என்று ..." என்றோ, "யாழை பிடித்து விட்டு ...." என்றோ தலையைச் சொறியாது, கடமையைச் செய்துவிட்டு, இங்கு தாராளமாய் விவாதிப்போம். உடல் ஆரோக்கியம் போன்றே மன ஆரோக்கியமும் எமது வாழ்விற்கு அவசியம். உள்ளே குமைகின்ற விடயங்களைக் கொட்டித் தீர்த்துக் கதைப்பதில் கேடில்லை. தனியே எமக்குப் புரியாதன, ஒரு வேளை சேர்ந்து உரையாடும் போது புரியலாம். நாம் சிந்திக்கத் தவறிய சில திசைகள் வெளிக்கலாம். எனவே உரையாடல் தவறில்லை. ஆனால் saline ப் புடுங்கிப் போட்டுத் தான் வைத்தியரோடு மல்லுக்கட்டுவேன் என நாம் அடம்பிடிக்காது இருப்பது அவசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.