Jump to content

இனிமையான சங்கீதப் பாடல்கள்.


Recommended Posts

  • Replies 250
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக் கெட்டவர் எவர் ஐயா-உமை
நாயகனைத் திருமயிலையின் இறைவனை (நம்பிக்)

அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன் 
அன்பர் மனம் வளர் சம்பு கபாலியை (நம்பிக்)

ஒன்றுமே பயன் இல்லையென்று
உணர்ந்தபின்பவர் உண்டென்பார்

ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை
எய்துவதுறுதி இதை மறந்தார்

அன்று செயலழிந்தல மருபொழுது
சிவன் பெயர் நாவில் வாராதே

ஆதலினால் மனமே

ஆதலினால் மனமே இன்றே 
சிவ நாமம் சொல்லிப்பழகு

ஆதலினால் மனமே இன்றே 
சிவ நாமம் சொல்லிப்பழகு அன்புடன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிமகிரி தனையே - ஸுத்த தன்யாஸி
 - ஆதி - முத்தையா பாகவதர் 
பல்லவி 
ஹிமகிரி தனையே ஹேமலதே 
அம்ப ஈஸ்வரி ஸ்ரீ லலிதே மாமவ
அனுபல்லவி
ரமா வாணி சம்சேவித ஸகலே 
ராஜராஜேஸ்வரி ராம ஸகோதரி
சரணம் 
பாசாங்குசேஷு தண்டகரே 
அம்ப பராத்பரே நிஜ பக்தபரே
ஆசாம்பர ஹரிகேஷ விலாஸே 
ஆனந்த ரூபே அமித ப்ரதாபே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லவி:
வரலட்சுமி நீயே வந்தருல்வயே
மங்களமே தாரம் பங்கஜாமேல் வரம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி
தேவன் ராமன் எத்தனை ராமனடி


REPORT THIS AD

கல்யாண கோலம் கொண்ட கல்யாணராமன்
காதலித்த தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தரராமன் (ராமன்)

தாயே என் தெய்வம் என்ற கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீ ஜெயராமன் (ராமன்)

வம்சத்துக்கொருவன் ரகுராமன்
மனங்களை இணைப்பவன் ஸ்ரீராமன்
மூர்த்திக்கொருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்தராமன்

ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்

ராம் ராம் ராம் ராம்.. ராம் ராம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, உடையார் said:

ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி
தேவன் ராமன் எத்தனை ராமனடி

இன்று... அயோத்தியில், ராமர் கோவிலுக்கு... அடிக்கல் நாட்டும் விழாவை முன்னிட்டு,
உடையார்.... இந்தப் பாடலை, ஒளி பரப்பியுள்ளார் போலுள்ளது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே

நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா
என் மனம் அலைபாயுதே

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என இரு புருவம் நெறியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கதித்த மனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கதறி மனமுருகி நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?
குழலூதிடும் பொழுது ஆடிகும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு
அலைபாயுதே

On 5/8/2020 at 12:54, தமிழ் சிறி said:

இன்று... அயோத்தியில், ராமர் கோவிலுக்கு... அடிக்கல் நாட்டும் விழாவை முன்னிட்டு,
உடையார்.... இந்தப் பாடலை, ஒளி பரப்பியுள்ளார் போலுள்ளது. :grin:

😄👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராகம் : ஜோன்புரி 
இயற்றியவர் : கோபாலக்ருஷ்ண   பாரதியார் 

எப்போ வருவாரோ எந்தன்கலி  தீர 
அப்பர் முதல் மூவரும் ஆளுடை அடிகளும் 
செப்பிய தில்லை சிதம்பரநாதன் ||

நற்பருவம் வந்து நாதனை தேடும் 
கற்பனைகள் முற்ற காட்சி தந்தால் ||

அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன் 
போற்பதத்தை காணேன் பொன்னம்பலவாணன் 
(கோ)பாலக்ருஷ்ணன் போற்றி பணிந்திடும் ஈசன் மேலே 
காதல் கொண்டேன் வெளிப்படக்கானேன் ||

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம்
   கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
   ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம்!     (கண்ணன் மனநிலையை..)

கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் -- நாங்கள் 
    காலங்கள் கழிப்பமடி தங்கமே தங்கம் 
அன்னிய  மன்னர் மக்கள்  பூமியிலுண்டாம்--என்னும் 
     அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம்     (கண்ணன் மனநிலையை..)


ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை
   அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்றே 
    சொல்லி வருவையடி தங்கமே தங்கம்!       (கண்ணன் மனநிலையை..)


நேர முழுதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம்
   நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்
   பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்!  (கண்ணன் மனநிலையை..)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மகாகவியின் வார்த்தைகளுக்கு அழகான இசை !!அற்புதம்!!! -  கண்ணம்மா என் காதலி - 
(பின் வந்து நின்று கண் மறைத்தல்) 

நாதநாமக்கிரியை - ஆதிதாளம் 
சிருங்கார ரசம்

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே 
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்; 
மூலைக் கடலினையவ் வான வளையம் 
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்; 
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி, 
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே 
சாலப் பலபல நற் பகற்கனவில் 
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். ... 1 

ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே, 
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே, 
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன். 
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன், 
ஓங்கிவரு முவகை யூற்றி லறிந்தேன்; 
ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்; 
''வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா! 
மாய மெவரிடத்தில்?'' என்று மொழிந்தேன். . ... 2 

சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே 
திருமித் தழுவி ''என்ன செய்தி சொல்'' என்றேன்; 
''நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்? 
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்? 
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்? 
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே 
பெற்ற நலங்கள் என்ன? பேசுதி'' என்றாள். ... 3 

''நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்; 
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்; 
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்; 
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்; 
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே 
பெற்றுதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை; 
சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்''. ... 4 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகனைக் காண..... ஆயிரம் கண் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி

ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய தென்றுநாளும்

ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன தென்றுமோதும்

ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு மென்சொலாதோ

நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை தந்தவேளே

நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும டங்கல்வேலா

சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி அண்டகூடஞ்

சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக தம்பிரானே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு மாய

அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய முடிவை
அடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய அணுவையணுவினின்
மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு காலம்

நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு மானும்

நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய நினதுவழி
அயடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் வாயே

தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
குதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ

தனதனன தனதனன தந்தந்த னத்ததன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
ரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி யாவும்

மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு கோடி

முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த பெருமாளே

நினதுவழி யடிமையும்வி ளங்கும் படி
இனிது ணர்த்தியருள் வாயே அரச ளித்த பெருமாளே . . .
இந்தி ரற்கரச ளித்த பெருமாளே . . 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்  

பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொலி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோஹன கீதம்
நெஞ்சினிலே---நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி  நினைவழிக்கும் கீதம்

சுனை வண்டுடன் சோலைக்குயிலும் மனம் குவிந்திடவும் 
வானவெளிதனில் தாரா கணங்கள்  தயங்கி நின்றிடவும் 
ஆ--- என் சொல்வேன் மாயப்பிள்ளை வேய்ங்குழல் பொழி கீதம்


நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் – 
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான் 
காலமெல்லாம்—காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமே** என் உள்ளம்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.