Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் பதவி விலகத் தயார்: வியாழேந்திரன் சவால்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் பதவி விலகத் தயார்: வியாழேந்திரன் சவால்!

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் நானும் நடுநிலைமை வகிக்கத்தயார் என கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை தமிழ் மக்கள் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான தீர்வுகளையும் பெற்றுக்கொள்ளவில்லை.

எனவே தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாட்டிலேயே கூட்டமைப்பு ஈடுபடுகின்றது. இவர்களுடன் இணைந்திருந்தால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது.

முடிந்தால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் எவருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலைமை வகிக்கட்டும். நானும் பதவியை விட்டு நடுநிலைமை வகிக்கின்றேன்.

எனக்கு நிச்சயமாகத் தெரியும் இவ்வளவு காலமும் எதையுமே சாதிக்காத கூட்டமைப்பு இனிமேலும் எதையும் செய்யப்போவதில்லை. அதுவும் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கண்டிப்பாக செய்யப்போவதில்லை.

எனவே இவர்களுடன் இருந்து எமது காலத்தை வீணடிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.எவ்வளவு குறுகிய காலமாக இருந்தாலும் எமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி எமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/கூட்டமைப்பு-நடுநிலைமை-வக/

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

முடிந்தால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் எவருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலைமை வகிக்கட்டும். நானும் பதவியை விட்டு நடுநிலைமை வகிக்கின்றேன்.

ஏங்கோ தெரியாமல்த்தான் கேக்கிறேன் பேரம் பேசி, விளம்பரத்துக்கு போஸ் குடுக்கேக்கை இவையளை கேட்டே செய்தனீங்கள்? இப்ப என்ன சவால் வேண்டிக் கிடக்கு? பணம் கைக்கு வர வேண்டும் என்றால் இவர்களின் தயவு வேண்டு மில்ல உமக்கு மட்டுமில்ல இந்த நாட்டின் அரசியல் தலை விதியே அங்க தான் நிக்குது இதுதெரியாத நீர் ,இருந்தும் பயனில்லை பிரிந்தும் பயனில்லை தமிழருக்கு. அரசனை நம்பி புருசனை கை விட்டகதைமாதிரி தெரியுதில்ல

இனியென்ன எங்காவது கிடைப்பதைப் பெறுவதே நேக்கம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவேன் – வியாழேந்திரன் சூளுரை

 

 

11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டதாக எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

அந்த கோரிக்கைகளில் 30 சதவீதம் நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிலிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த 11 அம்ச கோரிக்கைகளில் 30 விகிதம் கூட நிறையவேற்றப்படவில்லை என்றால் இந்த அரசாங்கத்தை கூட விமர்சிப்பேன் என்றும் கூறினார்.

இந்த ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேசும் பங்கேற்று, தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/தனது-கோரிக்கைகளை-நிறைவேற/

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அந்த கோரிக்கைகளில் 30 சதவீதம் நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் கூறினார்.

சீ..... சீ இந்தப்பழம் புளிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இவர் சில விடயங்களைச் சொல்கிறார்,

முதலாவது, துரோகி என்பதற்கான விளக்கம். தான் ஆயுதக் குழுவொன்றிலிருந்து வரவில்லையென்பதும், ஆயுத இயக்கங்களின் பின்னணனியைக் கொண்டிருக்கவில்லையென்பதும். ஆனால், துரோகியென்பதற்கான விளக்கமே, தனது இனத்தை, தனது அமைப்பை, தனது மக்களை தனது சொந்தத் தேவைகளுக்காக விலைபேசுவது அல்லது அந்த மக்களின் நலன்களை தனது நலனுக்காக இழக்கவும் விரும்புவது. ஒருவர் துரோகியாவதற்கு கட்டாயம் அவர் ஒரு ஆயுதக்குழுவிலிருந்தோ அல்லது ஆயுதக் கலாசாரப் பின்னணியிலிருந்தோ வரவேண்டும் என்கிற நியதி கிடையாது. 

அடுத்ததாக, இவர் கூறுவதுபோலவே, தான் ஒரு ஆயுதக்குழுவிலிருந்து வரவில்லையென்றால், தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இவருக்குமிடையிலான தொடர்பென்ன? இவரை ஒரு ஆயுதக் குழுவின் தலைவர் ஏன் தனது அமைப்பினூடாக அரசியலுக்குக் கொண்டுவரவேண்டும்?  தானே நேரடியாக அரசியலில் இறங்கியிருக்கலாம் தானே? 

ஆக, இவர் துரோகியொருவருக்கான சிறப்பம்சங்களென்று குறிப்பிட்டு, தான் அப்படியில்லை என்று நிறுவ முற்படும்பொழுது, தானாகவே தன்னைத் துரோகியென்று நிறுவியிருக்கிறார் என்பது வெளிப்படை.

அடுத்ததாக, அபிவிருத்தியென்பதும் உரிமைதான் என்று இவர் சொல்லும் புதிய அரசியல். ஒரு சாதாரண மனிதனின் அடிப்படை உரிமைகளுக்கும் அவனது பிரதேச அபிவிருத்திக்குமிடையே ஒரு வேறுபாட்டை காணமுடியாத ஒருவர் எப்படி அம்மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தரப் போகிறார்? ஒருவேளை, அபிவிருத்தியடைந்தாலே போதும், உரிமையெதுவும் தேவையில்லை என்கிற முடிவில் இருக்கிறாரோ என்னவோ? 

முடிவாக, தான் பணம் பெற்றூக்கொண்டுதான் கட்சி தாவினேன் என்பதற்கு ஆதாரங்களைக் காட்டமுடியுமா என்று சவால் விடுகிறார். தான் கைய்யால் ஒரு சதத்தையும்கூட வாங்கவில்லையென்று சத்தியம் செய்கிறார். எங்காவது ஒருவர், தனது இனத்தினருக்கெதிராக, அவர்களை அழித்தவர்களுடன் கூட்டுச் சேரும்பொழுது, தனக்குக் கிடைக்கும் சன்மானங்களை, வெளிப்படையாக, ஆயிரம் பேர் பார்க்கும்படி இதுவரையில் தமது கைகளால் வாங்கியிருக்கிறார்களா? அப்படியிருக்க, இவர் பெற்றுக்கொண்ட பணத்திற்கான சாட்சியத்தை எப்படி ஒருவரால் நிறுவ முடியும்? முடியாதென்கிற தைரியத்தினால்த்தானே இப்படியொரு சவால்?

திரு வியாழேந்திரன் அவர்களே, பணத்திற்காகவோ அல்லது உங்களுக்கு மிகவும் பெறுமதியான இன்னொரு காரணத்திற்காகவோ இன்று மகிந்த அணியில் சேர்ந்துவிட்டீர்கள். நீங்கள் சொல்வதுப்பொலவே, உரிமையில்லாவிட்டாலும்கூட, அபிவிருத்தியாவது உங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மக்கள் அனுபவிக்கட்டும். ஆனால், உங்களின் வசதி மட்டுமே போதும், மக்களாவது மண்ணாவது என்று மற்றைய தமிழ் - பேரினவாத அரசியல்வாதிகளைப்போல மாறிவிடாதீர்கள்.

ஆனால், ஒரேயொரு கவலை, வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்பதனை தேவையற்றது என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறீர்கள் பாருங்கள், அங்கே தெரிகிறது உங்களின் சுயரூபம் !

  • கருத்துக்கள உறவுகள்

இவரைக் கண்டவுடன் அள்ளிஇறைக்க மகிந்த ஒண்டும் முட்டாள் இல்லை, இந்த தூண்டிலைக் காட்டி மிச்ச மீனையும் பிடிக்க அவசர அவசரமாய் ஒரு பதவியைக் குடுத்து பாேட்டாே பிடிச்சு வெளியிட்டிருப்பார், காசு.. தான் பிரதமராய் பாராளுமன்றம்  ஏற்றபின் என்றிருப்பார், அவரே உள்ளே பாேவேனாே என்று தெரியாமல் முளிக்கிறார், மக்களும் இவரை வேண்டாமென கைகழுவியாச்சு, கட்சியும் தலைமுழுகியாச்சு,விழுந்தாலும் மீசையிலை மண் ஒட்டேலைஎண்டு சாெல்லுது ஆள்.போட்டோவை சுவரிலமாட்டி அழகு பாக்க வேண்டயதுதான் 

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேந்திரனைப்  பற்றி.. அதிகம் அறியவில்லை என்றாலும்,
இவர் கட்சி மாறிய போது....  ஆரம்பத்தில்  இவர் பேசிய காணொளிகளை கேட்டேன்.
நல்ல பேச்சாற்றலுடன், அவர் கூறிய காரணங்களும் நியாயமாகவே பட்டது.
அத்துடன் தமிழ் தேசியக் கூ ட் டமைப்பின் ஒத்துழைப்பு இல்லாமல், தனது தொண்டர்களுடன்  ஊருக்கு நல்லதும் செய்துள்ளார்.

கட்சி மாறுவது என்பது, அரசியல்  தற் கொலைக்கு சமமானது என்பதால்...
கொஞ்சம் பொறுமை காத்து, நிலைமையை அவதானித்து தனது முடிவை எடுத்து  இருக்கலாம்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.