Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கட்சியிலிருந்து விலகவில்லை: தவராசா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thawarasa-720x450.png

நான் கட்சியிலிருந்து விலகவில்லை: தவராசா

ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியிலிருந்து நான் விலகவும் இல்லை. என்னைக் கட்சி விலக்கவும் இல்லையென வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் அக்கட்சியின் முக்கியஸ்தருமான எஸ்.தவராசா தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று (வியாழக்கிழமை) ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போது ஊடகவியலாளர்கள், ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியிலிருந்து ஒதுங்கியிருக்கின்ற நீங்கள் மீளவும் அக்கட்சியில் இணைந்து செயற்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில்  எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“ஈழ மக்கள் ஐநயாகக் கட்சியிலிருந்து மாகாண சபைக்கு வந்து, அக்கட்சி உறுப்பினராகச் செயற்பட்டுக் கொண்டிருந்த நிலையில், கட்சி செயற்பாடுகளில் முன்னரைப் போன்று கூடுதலாகச் செயற்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அதற்கு பல காரணங்ள் உள்ளன.

அதற்காக  நான் கட்சியிலிருந்து விலகியதாகவோ அல்லது கட்சி என்னை விலக்கியதாகவோ அர்த்தம் இல்லை.

மேலும்  கட்சியின் செயலாளர் நாயகம் தற்போது மீள்குடியேற்ற இந்து கலாசார வடக்கு அபிவிருத்தி அமைச்சைப் பொறுப்பெடுத்திருக்கும் நிலையில், வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் அமைச்சின் செயற்பாட்டை உத்வேகத்துடன் கொண்டு செல்வதற்கு என்னுடைய பங்களிப்பை அல்லது ஆலோசனை வழங்குமாறு என்னிடம் விடுத்த கோரிக்கைகையை  நான் நிராகரிக்கவில்லை.

மாகாணத்தின் அபிவிருத்திக்காக நானும் என்னாலான சேவைகளைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கமைய என்னுடைய முடிவுகள் அமையலாம்.

ஆகவே, ஐனாதிபதியின் தீபாவளிப் பண்டிகை நிகழ்வில் நானும் கட்சித் தலைமையும் கலந்து கொண்டிருந்ததை இணைந்துவிட்டோமென செய்திகள் வந்திருக்கலாம். அதற்காக பிரிந்திருந்தவர்கள் மீளவும் சேர்ந்து விட்டோமென அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது.

இருவருக்கும் குறித்த நிகழ்வுக்கான அழைப்பு வந்தது அதற்கமைய சென்று நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கின்றோம்” என தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/நான்-கட்சியிலிருந்து-வில/

  • கருத்துக்கள உறவுகள்

தவமின்றி கிடைத்த ராசாவே.... 

11 hours ago, தமிழ் சிறி said:

ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியிலிருந்து நான் விலகவும் இல்லை. என்னைக் கட்சி விலக்கவும் இல்லை

ஒரு இடத்தில் எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி முடிந்துவிட்டதால் மறு இடத்தில் எலும்புத் துண்டுகளைப் பொறுக்க தவராசா தயார்!

ஆனால் இவரே எலும்பாக மாறிவிடுவாரோ தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

உவரை துரத்தி விட்டு உவரின் தலைவர் ஊடக அறிக்கை வழங்கினதும்.. உவருக்கு மறந்து போச்சு. இவர் எல்லாம் ஒரு முன்னாள் எதிர்கட்சி தலைவர். நாட்டு நிலவரம் அப்படி. ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.