Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனுக்கு பின்..B.B.C தமிழ் சேவைக்காக ..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனுக்குப் பின் : இலங்கையில் ஈழ தமிழர்கள் நிலை ?

சாத்திரி முந்தைய நாள் போராளி
  • 28 நிமிடங்களுக்கு முன்னர்

படத்தின் காப்புரிமை Getty Images Image caption வேலுப்பிள்ளை பிரபாகன்

(இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்தே; பிபிசியின் கருத்துக்கள் அல்ல.- ஆசிரியர்)

இலங்கை, இந்தியா மட்டுமல்ல உலகமே உற்று நோக்கும் பிரபாகரனின் மாவீரர் தின உரை மட்டுமல்ல, பிரபாகரனே இல்லாத ஒன்பதாவது ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகள் ஈழத்திலும் இந்தியாவிலும் புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஏற்பாடாகி கொண்டிருக்கின்றது .

பிரபாகரன் இல்லையென்றே தெரிந்தும் மீண்டும் வருவாரென கருத்து சொல்லிக்கொண்டிருந்த தமிழ் தலைவர்களும் அவர் இருக்கிறாரா இல்லையா என்று குழப்பத்திலிருந்த மக்களுக்கும் அவர் இல்லை என்பது இப்போ தெளிவாகி விட்டிருக்கலாம் ,இல்லை அவர் வருவார் என சொல்லிக்கொண்டிருப்பவர்களை அப்படியே கடந்துபோக வேண்டிய நிலைஏனெனில் அவர்களின் தேவைகள் வேறானவை.

இவற்றையெல்லாம் விட்டு விடுவோம் ,அவர் இல்லாத இத்தனையாண்டுகள் ஈழ தமிழர் மத்தியில் எப்படியிருக்கின்றது . சொல்லப்போனால் யுத்தம் இல்லை, இழப்புகள் இல்லை, யுத்த சத்தம் ஓய்ந்து விட்டிருக்கின்றது . ஆனால் மக்கள் மனதில் நிம்மதியிருக்கின்றதா என்றால் சிலர் எதோ நிம்மதியாக வாழ்கிறோம் என்கிறார்கள், யுத்தம் இல்லைதான் ஆனால் நிம்மதியில்லாத வாழ்வு என்கிறார்கள் சிலர், யுத்தம் இல்லாத வாழ்வு நிம்மதியாகத்தானே இருக்க வேண்டும். ஏன் நிம்மதியில்லை ?

யுத்தம் இருந்த போது வெளியில் இருந்து பயமிருந்தது. அதனை எப்படியும் புலிகள் தடுத்து விடுவார்கள் என்கிற நிம்மதியும் இருந்தது அல்லது அதற்கு மாற்றாக ஏதாவது செய்வார்கள் என்கிற நம்பிக்கையிருந்தது. இப்போ பயம் உள்ளேயிருக்கிறது , யுத்த காலம் முடிவடைந்த பின்னர் ஊரில் நடந்த பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், பெருகிவிட்ட போதைப்பொருள் பாவனை, அதனால் நடக்கும் அன்றாட வன்முறைகள், நிர்வாக சீர்கேடு.

இவை எதையும் வெளியிலிருந்து யாரும் வந்து செய்யவில்லை அனைத்துமே உள்ளூரில் இருப்பவர்களால்தான் நடக்கின்றது இப்படியொரு தரப்பு. யுத்தம் நடந்துகொண்டிருந்தால் எங்கள் பிள்ளைகள் யுத்தத்துக்காக கொண்டு செல்லப்பட்டிருப்பார்கள், அவர்கள் அப்படி கொண்டு செல்லப்பட்டு இறந்து போவதை விட எங்களோடு எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும் என்கிறது மறு தரப்பு.

  படத்தின் காப்புரிமை Getty Images

இது இப்படியென்றால் அரசியல் பற்றி பார்த்தால் புலிகளுக்கு அரசியல் தெரியாது அல்லது அவர்கள் அரசியலே செய்யவில்லை என்கிற ஒரு குற்றச்சாட்டு உண்டு .

அவர்களுக்கு அரசியல் தெரியாதேன்றோ செய்யவில்லை என்றோ சொல்லிவிட முடியாது. அவர்கள் செய்த அரசியலானது ஒவ்வொரு தடவையும் பேச்சுவார்த்தை காலங்களில் எதிர் தரப்பை ஏமாற்ற மட்டுமே பயன்படுத்தினார்கள். அதனால் பல தடவை வெற்றி பெற்றாலும் அதில் மாற்றங்கள் கொண்டு வராமல் விட்டதால் அதே ஏமாற்று அரசியலால் தோற்கடிக்கப் பட்டார்கள்.

சனநாயக அரசியல் மூலம் தமிழீழத்தை பெற்றுவிட முடியாதென்பதை பிரபாகரன் உறுதியாக நம்பினார். அப்போ ஆயுதப்போராட்டம் மூலமே ஈழத்தை பெற்றுவிடலாமென அவர் இறுதிவரை நம்பினாரா என்றால் இறுதி யுத்த முடிவுகளின் அனுபவங்களூடாக பார்க்கும்போது அதுவுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும் .

கொண்ட கொள்கைக்காக உயிரை விலையாக கொடுத்தாலும் எந்தவித சமரசத்தையும் செய்துகொள்ள விரும்பவில்லை. ஒரு மக்கள் தலைவனாக அந்த மக்களையும் அவர்களையும் பாதுகாக்கும் பொறுப்புள்ள ஒரு தலைவனாக உலக உள்ளூர் அரசியலுக்குள் உள்ள நெளிவு சுளிவுகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து மக்களை காப்பாற்றி அவர்களின் தேவைகளை ஓரளவுக்கேனும் நிறைவேற்றுபவனே உண்மையான மக்கள் தலைவன். அந்த விடயத்தில் பிரபாகரன் தவறிழைத்து விட்டார் என்கிற கருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே .

ஆனாலும் அவர்கள் தமிழர்களுக்கு எந்த அரசியல் வழிகாட்டலையும் செய்து விடாமல் போகவில்லை, 2001-ஆம் ஆண்டு தமிழர்களுக்கு ஒரு பலமான அரசியல் தளம் வேண்டுமென்கிற நோக்கோடு கிழக்குப்பத்திரிகையாளர் சங்கத்தின் முயற்சியால் நான்கு கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை 2002-ஆம் ஆண்டு உள்வாங்கிய புலிகள் அமைப்பு சன நாயக அரசியல் ஒன்றை ஈழத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டி விட்டே சென்றுள்ளார்கள்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இன்று இலங்கையில் எதிர் கட்சியாக அமர்ந்திருந்தாலும் தமிழர் பகுதிகளில் புனரமைப்பு புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தாமையால் வேலை வாய்ப்பின்மை அபிவிருத்தி என்று எதுவும் பெரியளவில் நடக்காதது மட்டுமல்ல தமிழருக்கான தீர்வுத்திட்டத்தை பெற்றுக்கொள முடியாமல் கால விரயம் செய்கிறார்கள் என்று அவர்கள் மீது காட்டமான விமர்சனங்களும் கோபமும் இருந்தாலும் இன்றுவரை மக்கள் தொடர்ந்தும் அவர்களுக்கே ஆதரவளிப்பது புலிகளால் கை காட்டி விடப்பட்ட அமைப்பு என்கிறதும் முக்கிய காரணம் .

ஆனாலும் இலங்கை தீவில் இறுக்கமான மக்கள் எப்போதும் அச்சத்துடனும் யுத்தத்தில் இறந்துபோன மக்களுக்கோ மாவீரர்களுக்கோ பகிரங்கமாக ஒரு அஞ்சலி கூட செலுத்தமுடியாத மகிந்த ராஜபக்சவின் அரசை மாற்றியமைத்து மக்கள் மனங்களிலிருந்த அச்சத்தை போக்கியத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்கு முக்கியமானது என்பதை யாரும் மறுத்து விடவும் முடியாது.

முப்பதாண்டு கால கொடிய யுத்தத்தால் இரண்டு நாடுகளாக பிரிந்து கிடந்த தேசத்தில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து தீர்வுகளை பெற்றுக்கொள்ள கால அவகாசம் எடுக்கும் என்கிற யதார்த்தத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் .

எது எப்படியோஇந்த வருடமும் பிரபாகரனோ அவரது மாவீரர் தின உரையோ வரப்போவதில்லை என அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அவரை மக்கள் மனது தேடிக்கொண்டேயிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயமாக அது இன்னொரு ஆயுதப்போராட்டதுக்காக அல்ல... சுயநலமில்லாத கொண்ட கொள்கைக்காக இறுதிவரை போராடும் நல்லவொரு தலைமை வேண்டுமென்பதற்காக.

https://www.bbc.com/tamil/india-46342731?fbclid=IwAR3iaVihf51n_uwdEx7uup3zHb8KSur1vq8qgHwnMQveSEiPZ6QATLiVRV8

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, sathiri said:

கொண்ட கொள்கைக்காக உயிரை விலையாக கொடுத்தாலும் எந்தவித சமரசத்தையும் செய்துகொள்ள விரும்பவில்லை. ஒரு மக்கள் தலைவனாக அந்த மக்களையும் அவர்களையும் பாதுகாக்கும் பொறுப்புள்ள ஒரு தலைவனாக உலக உள்ளூர் அரசியலுக்குள் உள்ள நெளிவு சுளிவுகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து மக்களை காப்பாற்றி அவர்களின் தேவைகளை ஓரளவுக்கேனும் நிறைவேற்றுபவனே உண்மையான மக்கள் தலைவன். அந்த விடயத்தில் பிரபாகரன் தவறிழைத்து விட்டார் என்கிற கருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே .

பிரபாகரனைப் பற்றிய விமர்ச்சனங்கள் ஏராளமாக உண்டு. அவற்றில் நல்லவை கெட்டவை, உண்மைகள் பொய்கள், உணர்ச்சிகள் காழ்ப்புணர்ச்சிகள் என்று பலவகை உண்டு. இவற்றில் கெட்டவை, பொய்கள், காழ்ப்புணர்சிகள் என்பவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் பிரபாகரனை ஒரு மனிதம் நிறைந்த மனிதனாக, தலைவனாக, வீரனாகவே பார்க்கமுடியும். தவறு செய்யாத மனிதன் என்று உலகில் யாருமில்லை என்ற உண்மை..... உண்மைக்குள் புதைந்து கிடப்பதையும் புறம்தள்ளிவிட முடியாது. இருந்தும் இன்றைய நூற்றாண்டில் தமிழன் என்றால் யாரென்று, 'நான் தமிழன்' என்று சொல்பவனுக்கே தெரியாத நிலையில், தமிழனை உலகத்துக்கே அறியத்தந்தவரைப் போற்றித் துதிப்பதில் எந்தத் தவறும் இல்லை.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

அதில் மாற்றுக்கருத்தில்லை

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை புலிநீக்கம் செய்துவிட்டார்கள். ஆனால் வாக்கு வேட்டைக்கு மட்டும் புலிகளைப் பாவிப்பார்கள்.

இவர்களை விடுத்து உரிமைகளை அரசியல் ரீதியாக வென்றெடுக்கக்கூடிய தலைமைகள் உருவாகவேண்டும். அப்படி உருவாகி மக்கள் மனநிறைவுடன் வாழும் நிலை வருமா என்பது கேள்விக்குறியே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இப்போதைக்கு அவர்களை விட்டால் வேறு தெரிவு இல்லை ..இனிவரும் காலங்களில் அப்படியான ஒரு தலைமை உருவாகுமா என்பதும் கேள்விக்குறி ..கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை ..ஒரு சிலர் இருக்கிறார்கள் அவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தலைமை தாங்கும் நிலைக்கு வருவார்களா என்பது காலம்தான் ..

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, sathiri said:

ஆனாலும் இலங்கை தீவில் இறுக்கமான மக்கள் எப்போதும் அச்சத்துடனும் யுத்தத்தில் இறந்துபோன மக்களுக்கோ மாவீரர்களுக்கோ பகிரங்கமாக ஒரு அஞ்சலி கூட செலுத்தமுடியாத மகிந்த ராஜபக்சவின் அரசை மாற்றியமைத்து மக்கள் மனங்களிலிருந்த அச்சத்தை போக்கியத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்கு முக்கியமானது என்பதை யாரும் மறுத்து விடவும் முடியாது.

சாத்திரியாரின் இந்தக் கருத்துடன், எனக்கு உடன்பாடு இல்லை.
மாவீரருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளை மக்கள் தாமாகவே முன் எடுத்த்தார்கள்.
அதற்கு எந்த அரசியல் பின்புலமும் இருக்கவில்லை என்பதே உண்மை.

இராணுவ வீரர்களை கௌரவித்து நினைவு கூரும் பொப்பி மலருடன்... 
பாராளுமன்றம் சென்ற   சுமந்திரன் பற்றிய  செய்தி கீழே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார்,

விடுதலைப்புலிகளுக்காக போதைப்பொருள்களைக் சர்வதேசமெங்கும் கடத்தும் வலப்பின்னலில் அவர்கள் சார்பில் செயற்பட்டேன் எனும் பொருள்பட கடந்த சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் இந்திய செய்தி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றை நான் நினைவுபடுத்துகிறேன் அச்செவ்வியின் பதிப்பு உங்களாலோ வேறுயாராலோ யாழ் இணையத்தில் இணைக்கப்பட்டு அதி எனது கருத்தாக ,

நீங்கள் எந்த நோக்கத்திலும் போதை வஸ்து கடத்தலை மேற்கொண்டிருந்தால் நீங்கள் விசாரணைக்குப் பின்பு தண்டிக்க வேண்டிய குற்றவாளி திமிரும் தில்லுமிருந்தால் பிரான்ஸ் நாட்டிப் போலீசிலோ அல்லது சர்வதேச போதைப்பொருள் தடுப்புப்போலீசிடமோ சரணடைந்து தண்டனை பெருண்க்கள் எனக்கூறியிருந்தேன்.

அந்த வேண்டுகோள் இப்போதும் காலவதியாகாதிருக்கின்றது. 

அத்துடன் மேலதிகமாக இன்னுமொரு விண்ணப்பம்

 பரிதியைப்போட்டுத்தள்ளேக்க உங்களுக்குள்ள பங்கு பிரிப்புச் சண்டையில் ஈடுபடாதையுங்கோ ஒற்றுமையாகக் கதைச்சுப்பேசி செயல்படுங்கோ என இரண்டுபக்கத்துக்கும் கூறினனாம் ஆனால் கேதிறாங்கள் இல்லை எனக்கூறியிருந்தீர்கள். 

அப்போ முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு விடுதலைப்புலகளது சொத்துக்களை ஆட்டையப்போட்டவர்களது விபரங்களில் அனேகமானவைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நம்புகிறேன் அதையும் பொதுவெளியில் எடுத்துவிடுங்கோ

தவறு செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படவும் இச்சமூகத்திலிருந்து ஒதுக்கப்படவும் வேண்டும் 

ஆகவே முதலில் உங்கட பிரச்சனையை முடித்து நீங்கள் தூய்மையானவர்களாக மாறி அதற்குப்பின் விமர்சனம் அது இது என உங்கள் சமூக சேவையைத் தொடர்ந்து பிறந்த பயனை அடையுங்கள்.

அதற்காக நான் விடுதலைப்புலிகளைத் அதாவது தற்போதைய வலையமைப்பைத் தூக்கிப்பிடிக்கிறேன் என நினைக்கவேண்டாம் நேற்றைய அவர்களது மாவீரர் அறுக்கையைப் பார்த்தீர்கள்தானே தமிழர் விரோததேசம் இந்தியாவுக்குக் கழுவ நினைக்கினம் 

இதிலிருந்து நான் முற்றிலும் முரண்படுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/28/2018 at 11:57 AM, Elugnajiru said:

போய்  சரணடைஞ்சனான்  பாவம் வீட்ட போ  எண்டு அனுப்பி விட்டிட்டான்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, sathiri said:

போய்  சரணடைஞ்சனான்  பாவம் வீட்ட போ  எண்டு அனுப்பி விட்டிட்டான்கள்

நீங்கள் நல்லவரா கெட்டவரா?  உங்களுக்கு பிடிக்காத நேரம் தூள் கடத்தின புலி இப்ப ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.