Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுணதீவு பொலீசார் படுகொலை: அதிரவைக்கும் விசாரணைத் தகவல்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுணதீவு பொலீசார் படுகொலை: அதிரவைக்கும் விசாரணைத் தகவல்கள்!

_17888_1544425512_F2CFEDBA-530C-4DDB-B3E

மட்டக்களப்பு வவுணதீவு பொலீசார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியபடி உள்ளது.

குறிப்பாக பொலீசார் கொலை செய்யப்பட்ட விதம் தொடர்பாக சில திடுக்கிடும் தகவல்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் மூலம் வெளியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

அதாவது படுகொலை செய்யப்பட்ட தினேஸ் என்ற தமிழ் பொலீஸ் உத்தியோகத்தரை கொலையாளிகள் சுட்டுப்படுகொலை செய்ததன் பின்னரே கைகளை பின்னால் கட்டி குப்புரப் படுக்கப் போட்டு தலையில் சுட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கொலையாளிகள் இறுதி யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளை இராணுவம் கைகளை பின்னால் கட்டி தலையில் சுட்டுக்கொன்றதைப் போன்றே குறித்த பொலீசார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற காட்சிகளை ஏற்படுத்தும் நோக்கில் இவை செய்யப்பட்டதா என்ற கேள்விகளை பொலீசார் கொலைசெய்யப்பட்ட விதம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பொலீஸ் உத்தியோகத்தரின் நகங்களுக்குள் இருந்த இரத்த படிவுகள் யாருடயவை?

இதே நேரம் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பொலீஸ் உத்தியோகத்தரின் நகங்களுக்குள் இருந்த கொலையாளிகளின் இரத்த படிவங்களின் துகள்கள் மரபணு பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைகள் நிறைவடைய மூன்று மாதங்கள் தேவைபடுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதாவது மூன்று மாதங்களுக்கு பின்னரே அனுப்பப்பட்ட இரத்த படிவங்களின் மரபணு சந்தேக நபர்களின் மரபணுக்களுடன் ஒத்துப்போகின்றதா என்ற உண்மைகளை கண்டறிய முடியம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மரபணு பரிசோதனைகளை ஐரோப்பிய நாடுகளில் நான்கு நாட்களில் மேற்கொள்ள முடியுமென கூறப்படும் நிலையில் இலங்கையில் அதனை மேற்கொள்வதற்கு மூன்று மாதங்கள் தேவைப்படுவது என்பது விசாரணைகளில் தேக்கநிலையை உருவாக்கியுள்ளது என கூறப்படுகிறது.

குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலீசார்!

இதேநேரம் வவுணதீவு பொலீசார் படுகொலையுடன் தொடர்புடையவர்களைகண்டுபிடிப்பதற்கு பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகள் பொலிஸாருக்குஉதவவேண்டும் என கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கபிலஜயசேகர தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச பொலிஸ் ஆலோசனைசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது இதனை தெரிவித்துள்ளார்.

இதில் மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் சி.சந்திரபால மட்டக்களப்பு மாவட்டத்தில் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் முக்கிய பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர அவர்களின் கருத்துப்படி பார்க்கும்போது வவுணதீவு சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதுடன் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவரும் சந்தேக நபர்கள் குற்றவாளிகள் இல்லை என்பதையும் ஓரளவுக்கு ஊகிக்க கூடியதாக உள்ளது.

அதாவது வவுணதீவு சம்பவம் தொடர்பான குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் விடயத்தில் பொலீசாருக்கு தகுந்த ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்பதுடன் குற்றவாளிகளை இன்றுவரை பாதுகாப்பு தரப்பினருக்கு நெருங்கமுடியாது போயுள்ளதா? என்ற கேள்விகளை தோற்றுவித்துள்ளது.

உடனடியாக இந்த கொலையுடன் மாவீரர் தினத்தை நடாத்திய முன்னாள் போராளிகளை முடிச்சுப்போட்டு அவர்களை துருவி துருவி விசாரணை செய்த பாதுகாப்பு தரப்பினரால் கொலைக்காண எந்தவித ஆதாரங்களையும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

எனவே இதுவரை எந்த ஆதாரங்களும் சிக்காத நிலையில் விசாரணையின் கோணத்தை மாற்றவேண்டிய நிலைக்கு பாதுகாப்பு தரப்பினர் தள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது

 

http://www.battinaatham.net/description.php?art=17888

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

மரபணு சோதனைக்கு 3 மாதங்கள் தேவைப்படுகின்றது.

"நோட் திஸ் பொயின்ட் யுவரானர்"

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

அதாவது வவுணதீவு சம்பவம் தொடர்பான குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் விடயத்தில் பொலீசாருக்கு தகுந்த ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்பதுடன் குற்றவாளிகளை இன்றுவரை பாதுகாப்பு தரப்பினருக்கு நெருங்கமுடியாது போயுள்ளதா? என்ற கேள்விகளை தோற்றுவித்துள்ளது.

ஏற்கனவே ஒரு ஆள் பிடிபட்டுட்டார்.இன்னொராள் சரணடைந்திட்டார் என்றதெல்லாம் பொய்யா?

யார் மேல பழியைப் போடலாம் என்று முடிவு பண்ணல்லையோ?

18 minutes ago, MEERA said:

மரபணு சோதனைக்கு 3 மாதங்கள் தேவைப்படுகின்றது.

"நோட் திஸ் பொயின்ட் யுவரானர்"

ஆறிய கஞ்சி பழம் கஞ்சி.
மூன்று வருடமானாலும் ஆச்சரியபட எதுவுமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை இதில் காேர்த்துவிட ராஜபக்ச குடும்பத்தினர் துடிப்பதிலிருந்து குற்றவாளிகள் யாரென்று தெளிவாகிறது.  இருப்பினும் சம்பந்தர் அவசரமாக செய்யவேண்டியதாென்றுள்ளது. சர்வதேசப் பாெலிசார் விசாரணை செய்யக்கேட்கலாம். இறையாண்மை, எங்கட பாெலிசார் விசாரணை என்றெல்லாம் ஊளையிடுவினம். காதில வாங்காமல் உங்கட யூகவிசாரணையில எங்களுக்கு நம்பிக்கையில்லை சர்வதேச பாெலிசார் வரட்டும் கருணாவில இருந்து விசாரணை ஆரம்பிக்கட்டும் என்று விடாப்பிடியாக நிற்பதாேடு, சர்வதேசத்திற்கு தமிழரின் நிலையை தெளிவுபடுத்தவேணும். செய்வாரா? நேரம் இருக்குமா?  செய்யிறதெல்லாம் செய்து தமிழனை அழிக்கிறது, பிறகு தாங்கள் செய்த தவறுக்கும் தமிழினை தண்டிக்கிறது. தட்டிக் கேட்க எங்கடையளுக்கு வக்கில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.