Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு – இவர்களின் கருத்து

Featured Replies

நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அரசியதழ் அறிவிப்பு, சட்டவிரோதமானது என்று, உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு குறித்து, இந்த வழக்கில் முன்னிலையான சட்டவாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

 

இரா.சம்பந்தனின் சட்டவாளர் கனகஈஸ்வரன்

ஒரு மனதாக அளிக்கப்பட்ட தீர்ப்பையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் இந்த தீர்ப்பை மதித்து, அதன்படி செயற்படுவார்கள் என்று நம்புகிறோம்

 

எம்.ஏ.சுமந்திரன்

உச்சநீதிமன்றம் குறுகிய நாட்களில் விசாரித்து இந்த வரலாற்றுத் தீர்ப்பை ஒருமனதாக அறிவித்துள்ளது. இது சிறிலங்காவின் வரலாற்றில் அளிக்கப்பட்ட மிக முக்கியமான தீர்ப்பு.

 

தி இந்து ஆசிரியர் என்.ராம்

அரசியலமைப்புக்கு எதிரான சர்வாதிகாரத்துக்கு கொடுக்கப்பட்ட பாரிய அடி இது.

 

சட்டவாளர்  சாலிய பீரிஸ்

எமது நாடு இன்னமும் நம்பிக்கையின் நிலமாக இருக்கிறது என்பதை, உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு காட்டுகிறது. ஒரு சுதந்திரமான நீதித்துறை ஒரு நாட்டுக்கு எதைச் செய்யலாம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

 

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்

எமது அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மேலாதிக்கம் வெற்றி பெற்றுள்ளது. வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியவர்களுக்கு இப்போது என்ன நடக்கப் போகிறது?

 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச

எமது கருத்துக்கு மாறான தீர்ப்பை அளித்திருந்தாலும்உச்சநீதிமன்றத்தின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடும் நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருப்போம். ஏனெனநாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படாமல், உண்மையான நீதி மக்களுக்கு கிடைக்காது.

 

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க

சிறிலங்கா அதிபர் நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக மதித்துச் செயற்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம். நாடாளுமன்றம், நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம் என்பன ஜனநாயகத்தின் தூண்களாகும்.நாட்டு மக்களின் இறைமையை உறுதிப்படுத்துவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

 

அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர் அலன் கீனன்

முக்கியமான மற்றும் வரவேற்கத்தக்க முடிவு. ஆனால், இந்த தீர்ப்பினால் பிரச்சினையை தீர்க்க முடியாது. மகிந்த ராஜபக்சவை பிரதமராகச் செயற்படத் தடைவிதித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை இடைநிறுத்தி நாளை மற்றொரு மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிடக் கூடும். பேச்சுக்கள் மூலமான தீர்வு காத்திருக்கிறது.

http://www.puthinappalakai.net/2018/12/13/news/35300

Edited by போல்

  • தொடங்கியவர்

பாராளுமன்ற தேர்தலே அவசியம்- நாமல்

நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம் என நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து எங்களிற்கு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளபோதிலும் நாங்கள்  தீர்ப்பை மதிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

பாராளுமன்ற தேர்தல் அவசியம் என குரல் கொடுப்பவர்களின் பக்கமே நாங்கள் தொடர்ந்து நிற்போம் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச பாராளுமன்ற தேர்தல் இல்லாமல்  மக்களிற்கு உண்மையான நீதி கிடைக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/46320

  • தொடங்கியவர்

தீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து!

ranil.jpg

ஜனாதிபதி நீதியரசர்களின் தீர்ப்பிற்கு உரிய மதிப்பை வெளியிட்டு அதனை ஏற்றுக்கொள்வார் என ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்

சட்டம் நீதி உள்ளிட்ட மூன்று துறைகளும் ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்களாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மை அவசியமாகும். ஆனால் விஷேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென பாராளுமன்றத்தை கலைத்தமை ஊடாக மக்கள் ஆணை மீறப்பட்டிருந்தது. 

அதனை பாதுகாப்பதற்கு முன்வந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். இதிலிருந்து நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்தை அமைக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளோம். எனவே அரசாங்கத்தை அமைத்து அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்கொண்டுத்து செல்ல வேண்டும் என அழைப்பு விடுத்தார். 

http://www.virakesari.lk/article/46321

நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள் - சஜித்

உயர் நீதிமன்றின் இத் தீர்ப்புக்கு ஜனாதிபதி மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

sajith-premadasa.jpg

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் ஜனநாயகம் உறுதியானது எனவும் அரசியலமைப்பு பலமானது எனவும், இந்த வெற்றியை நாங்கள் அமைதியாக கொண்டாட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேவையற்ற ஆலோசனைகளை கேட்டு இனிமேலும் செயற்படாது, நாட்டை பற்றி நினையுங்கள் எனவும் வலியுறுத்தினார்

http://www.virakesari.lk/article/46322

  • தொடங்கியவர்

ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளதுரவி

Ravikarunanyaka-720x450.png

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் அரசியலமைப்பிற்கு முரணானதென உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றின் ஏழு நீதியரசர்கள் அடங்கிய குழாம் இத்தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற கலைப்பு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றின் நீதியரசர்கள் குழாம் குறிப்பிட்டு இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஆட்சியமைக்கப்பட்டு நான்கரை வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தை கலைக்க முடியாதென நீதியரசர்கள் குழாம் குறிப்பிட்டுள்ளது. அதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டுமென நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் ஜனநாயகம், நீதித்துறை, அரசியலமைப்பு என்பன பாதுகாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/ஜனநாயகம்-பாதுகாக்கப்பட்/

  • தொடங்கியவர்

ரணில் இன்றே பிரதமராக பதவியேற்பார்: ஹக்கீம்

ranil-wickremesinghe4155-1522895368-600x450.jpg

ரணில் விக்ரமசிங்க இன்றைய தினமே பிரதமராக பதவி ஏற்பார் என, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்த அவர், இதன்போது ரணிலை பிரதமராக நியமிப்பது தொடர்பாக ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, ரணிலை பிரதமராக நியமிக்கப்  போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்து வருகின்றமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த ஹக்கீம், ரணிலை பிரதமராக நியமிப்பது மாத்திரமே ஒரே தீர்வு எனத் தொிவித்தார்.

http://athavannews.com/ரணில்-இன்றே-பிரதமராக-பதவ/

  • கருத்துக்கள உறவுகள்

news.jpg

வெற்றிகொண்டாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள்!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் அரசியலமைப்பிற்கு முரணானதென உயர்நீதிமன்றம் வரலாற்று தீர்ப்ப்பை வழங்கியுள்ள நிலையில், நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளடங்களாக, உயர்நீதிமன்றின் ஏழு நீதியரசர்கள் அடங்கிய குழாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற கலைப்பு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றின் நீதியரசர்கள் குழாம் குறிப்பிட்டு இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் கூக்குரலிட்டு ஆரவாரம் செய்துள்ளனர்.

http://athavannews.com/வெற்றிகொண்டாட்டத்தில்-ஐ/

  • தொடங்கியவர்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு : மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு ஆபத்தில்லை

625.200.560.350.160.300.053.800.300.160.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பானது மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவிக்கு எந்தவொரு ஆபத்தினையும் ஏற்படுத்தாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்திருக்கின்றது.

சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இன்றைய தினம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவலைத் தெரிவித்திருந்தார்.

அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்தி வருவதால், நாட்டில் மீண்டும் இரத்த ஆறு பெருக்கெடுக்கும் என்றும் டிலான் பெரேரா எச்சரிக்கையும் விடுத்திருக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை கலைப்பதாக வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தர்ப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பினை ஸ்ரீலங்கா உச்ச நீதிமன்றம் இன்று மாலை வழங்கியது.

அதற்கு முன்னதாக கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, நீதிமன்ற தீர்ப்பு எதுவென்றாலும் அது மஹிந்தவின் பிரதமர் பதவிக்கான அச்சுறுத்தலாக அமையாது என்று கூறியிருக்கின்றார்.

(நாடு முழுவதும் உச்ச நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அது பிரதமர் மற்றும் அமைச்சரவையை மாற்றுவது தொடர்பான தீரப்பு அல்ல. உச்ச நீதிமன்றம் அது தொடர்பில் தீர்ப்பு வழங்காது. பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுமா என்று நாட்டு மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். அவ்வாறு நடைபெறாது. நாடாளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் மாத்திரமே இந்த தீர்ப்பின் ஊடாக முடிவு எடுக்கப்படும். தேர்தலுக்கு பயந்து, பல்வேறு ஒப்பந்தகளை செய்துகொண்டு, அதன்பின்னர், இல்லை அரசாங்கத்தை அமைக்க உதவப் போவதில்லை நாங்கள் எதிர்கட்சியிலேயே இருப்போம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்ற உத்தியோகப்பற்றற்ற சந்திப்புக்களில் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பிரகாரம் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது”.)

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பி யும் இரகசிய ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டிய டிலான் பெரேரா எனினும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதில்லை என கூறி இரண்டு தரப்பினரும் மக்களை ஏமாற்றி வருவதாக சாடியுள்ளார்.

( நேற்று நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கரு ஜயசூரி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானித்ததை போன்று வாக்களித்துவிட்டு, ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் தாங்கள் அங்கம் வகிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது. எதிர்கட்சியாகவே இருப்போம் என்று கூறுகின்றனர். அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கபோவதில்லை என்றால், ரணில் விக்கிரமசிங்க பிரதமராவதற்கு எவ்வாறு ஆதரவு வழங்க முடியும். அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினால் எதிர்கட்சித் தலைவராக சம்பந்தன் இருக்க முடியாது. எதிர்கட்சியில் இருந்துகொண்டு நிபந்தனை அடிப்படையில் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறுவது சிங்கள மக்களை மாத்திரமல்லாமல் தமிழ் மக்களையும் ஏமாற்றும் நடவடிக்கை ஆகும்”.)

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வழிகாட்டலின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அண்மைக்காலமாக மேற்கொண்டுவரும் செய்பாடுகளால் சிங்கள - தமிழ் மக்களுக்கு இடையிலான விரிசலை பெரிதாக்கி நாட்டில் மீண்டுமொரு இரத்தம் ஆறு பெருக்கெடுக்க வழிவகுக்கும் என்றும் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை மேற்கத்தேய நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் பிடிக்குள் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிக்கியுள்ளதாகவும் டிலான் பெரேரா புதிய தகவலொன்றை வெளியிட்டிருக்கின்றார்.

(“நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மாவை சேனாதிராசா மற்றும் சித்தார்தன் ஆகியோர்களது கருத்துக்களை செவிமெடுத்தால் நாங்கள் நிபந்தனையுடன் கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு வந்துள்ளோம். நாங்கள் எதிர்கட்சியிலேயே இருப்போம். ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அங்கமாக இருக்க மாட்டோம் என்று கூறுகின்றனர். எனினும் சுமந்திரன் நிபந்தனை எதுவும் இல்லை என்கிறார். இவர்களின் கருத்துக்களில் பரஸ்பர விரோதம் காணப்படுகின்றது.

தமிழ் பேசும் மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றால், இரண்டு கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலை வகித்து பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அந்த நடவடிக்கையின் மூலம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க சரியான முறையில் கூட்டமைப்பு செயற்பட்டதாக கூறலாம்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்று கருத்து தெரிவிப்பவர்கள் உள்ளனர். அவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக செயற்படுகின்றதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அல்லது சுமந்திரன் ஊடாக வரும் மேற்கத்தேய நாடுகளின் விருப்பத்துக்கு அமையவும் சர்வதேச அமைப்புகளின் விருபத்துக்கு அமைய நாட்டை இரண்டாக பிளவுபடுத்தி சிஙகள - தமிழ் மக்களுக்கு இடையிலான விரிசலை பெரிதாக்கி மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்க வைக்கும் நிலைக்கு நாட்டை உட்படுத்த முயற்சிக்கினரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது கிடைத்த தகவல்களின் படி அதற்கு எங்களுடன் உள்ளவர்களுக்கு உதவி செய்யவதாக தெரிகின்றது. சுமந்திரன் மற்றும் அவரின் பிடியில் சிக்கியிருக்கும் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களின் செயற்பாடுகளை பார்க்கும்போது, தமிழ் மக்களுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் இல்லை என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது”.)

https://www.ibctamil.com/srilanka/80/110751

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, போல் said:

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு : மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு ஆபத்தில்லை

625.200.560.350.160.300.053.800.300.160.

 

 

 டிலான் பெரேரா... இன்னும் செய்தியை.. வடிவாக வாசிக்கவில்லை  போலுள்ளது. :grin:

  • தொடங்கியவர்

ஜனநாயகத்துக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றி - சுமந்திரன்  

sumanthiran.jpg

வரலாற்று சிறப்பு மிக்க இன்றைய தீர்ப்பானது ஜனநாயகத்துக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றியே என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தின் ஆட்சிக்கும் மேற்பட்டவர் இல்லை என்பதை உயர் நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டார். 

பாராளுமன்ற கலைப்பு தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட மனு தொடர்பான  தீர்ப்புக்கு ஆஜராகியிருந்த போதே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் அங்கு கூறுகையில், 

உயர் நீதிமன்றினால் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பானது ஜனநாயகத்துக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றியே. நீதிமன்றம் சுயாதீனமாக தான் செயற்படுகின்றது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. அவற்றுடன் சட்டத்தின் முன் அனைவரும் சமமே. 

ஜனாதிபதி சட்டத்தின் ஆட்சிக்கு மேம்பட்டவர் அல்ல என்பதையும் நீதிமன்றம் தீர்ப்பு இன்று உறுதிப்படுத்துகின்றது. மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பே கிடைக்கப்பெற்றுள்ளது. இனியாவது ஜனாதிபதி அரசியலமைப்புக்கும் சட்டத்தினையும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/46326

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, போல் said:

ஜனநாயகத்துக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றி - சுமந்திரன்  

sumanthiran.jpg

வழக்குப் போட்டு வாதாடினது... அகில உலகப் புகழ் பெற்ற வக்கீல் சுமந்திரன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அது சரி... இனி எப்ப.. தமிழ் மக்களின் பிரச்சினைக்காக.. நீதி மன்றத்தை  அணுகப் போக்கின்றீர்கள்?

  • தொடங்கியவர்

"அரசில் இருந்து விலக தாங்கள் தயார்": மகிந்த தரப்பின் அதிரடி முடிவு

thumb_gambanbila.jpg

அரசில் இருந்து விலக தாங்கள் தயாராக இருப்பதாக மகிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றம் சற்று முன்னர் வழங்கிய தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதியுடன் பேசிய பின்னரே, தாங்கள் அடுத்த முடிவினை எடுக்க தீர்மானிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/46327

  • தொடங்கியவர்

சற்றுமுன்னர் மைத்திரி அதிரடிக் கருத்து! அதிர்ச்சியில் ரணில்!!

“நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கக் கடமைப்பட்டுள்ளேன். ஆனால் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டை பாதுகாக்க நான் எடுத்த முடிவில் மாற்றம் செய்ய மாட்டேன்..”

இவ்வாறு ஜனாதிபதி செயலகத்தில் நடந்த - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் சற்று முன் கூறினார் ஜனாதிபதி மைத்ரி.

நாளை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் மஹிந்த தரப்பின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதென்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம்..!

https://www.ibctamil.com/srilanka/80/110756?ref=bre-news

  • தொடங்கியவர்

சட்டம் கடமையை சரியாகச் செய்துள்ளது : ரிஷாட்

நாட்டில்எந்தவொரு பிரஜையும் , அரசியலமைப்பைமீறமுடியாது என்பதை இன்றைய வரலாற்று முக்கியத்துவமிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்புநிரூபித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன்தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்குமாற்றமான முறையில் ஜனாதிபதி செயற்பட தொடங்கியதிலிருந்து, அதுபிழையென நிரூபிக்கும் வகையில், நீதிமன்றத்தின்ஊடாக மேற்கொண்ட முயற்சிகளுக்கு இன்று உரிய பலன் கிடைத்துள்ளது. சட்டம் தனது கடமையைமிகச் சரியாக செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்

கடந்தநவம்பர். 12ஆம்திகதி உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிராக வழங்கிய இடைக்காலதடையுத்தரவு மூலம் ஜனநாயகத்தை விரும்பும் மக்களுக்கு ஓரளவு நிவாரணமும் நிம்மதியும்கிடைத்தது.

அதன்தொடர்ச்சியாக இன்றைய சரித்திரம் வாய்ந்த தீர்ப்பானது ஜனநாயகத்திற்கான பூரணவெற்றியெனவே நாம் கருதுகின்றோம். நீதிமன்றத்தில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸும் ஜனநாயக வெற்றிக்காகவும் நீதிக்காவும் போராடியது. அந்தவகையில் அரசியலமைப்புச் சட்டமானது நீதிமன்றத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்புகிடைத்துள்ளதாகவே நாம் உறுதியாக நம்புகின்றோம்.

நாடாளுமன்றத்தில்பெரும்பான்மைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இனியும் காலம்தாழ்த்தாது ஐ.தே. கட்சியின் தலைவர் ரணில் விகரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கி,ஒக்டோபர். 26ஆம் திகதிக்கு முன்னரான நிலையைஉருவாக்கி தற்போதைய அரசியல் நெருக்கடிக்கும் உடனடியாக தீர்வை காண வேண்டும்.

ஜனநாயகத்தைவெற்றிகொள்வதற்கான இந்த போராட்டத்திற்கு ஒத்துழைத்தவர்களுக்கும், எமது வேண்டுகோளை ஏற்று இறைபிரார்த்தனையில் ஈடுபட்டவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கின்றேன்என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/110749

  • தொடங்கியவர்

மூவின மக்களுக்கும் ஜனாதிபதி துரோகமளித்துவிட்டார்விஜயகலா

 

 

நாட்டில் உள்ள மூவின மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகமிழைத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஓரிரு நாட்களில் மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்பார் என்றும் அவர் கூறியிருந்தார்.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் அரசியலமைப்பிற்கு முரணானதென உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றின் ஏழு நீதியரசர்கள் அடங்கிய குழாம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற கலைப்பு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றின் நீதியரசர்கள் குழாம் குறிப்பிட்டு இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஆட்சியமைக்கப்பட்டு நான்கரை வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தை கலைக்க முடியாதென நீதியரசர்கள் குழாம் குறிப்பிட்டுள்ளது. அதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டுமென நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.

குறித்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர்  ஆதவனுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

http://athavannews.com/மூவின-மக்களுக்கும்-ஜனாதி/

  • தொடங்கியவர்

நீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளதுசரத் பொன்சேகா

Sarath-720x450.png

இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இருப்பதை உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பிலான உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில அரசியலமைப்புக்கு முரணான முடிவுகளை நிறைவேற்ற முயற்சித்தார். ஆனால் உச்சநீதிமன்றம் அது அரசியலமைப்புக்கு உட்பட்டது இல்லை என தீர்ப்பளித்துள்ளது.

மேலும் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணி அதன் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. அத்தோடு பிரதமரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் அரசியலமைப்பை மீறி செயப்படுத்திய விடயங்களால் ஏற்படுத்தப்பட்ட விளைவுகளை ஜனாதிபதி எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்” எனவும் கூறினார்.

http://athavannews.com/நீதித்துறை-சுயாதீனமாக-இர/

  • தொடங்கியவர்

சூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளதுஅநுர

anurakumara-disanayake-720x450.jpg

மஹிந்த – மைத்திரியின் சூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உயர் நீதிமன்றத்தினால் கிடைக்கப்பெற்ற தீர்வினை கருத்தில் கொண்டு அரசியல் அமைப்பிற்கு அமைவான முறையில் ஜனாதிபதி அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.

கிடைக்கப்பெற்ற தீர்வினை கருத்தில் கொண்டு அரசியல் அமைப்பிற்கு அமைவான முறையிலான ஜனாதிபதி அரசியல் தீர்வை முன்னெடுக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் இத்தகைய ஜனாதிபதியில் அரசியல் அமைப்பு மீறலான செயலுக்கு சிறந்த தீர்வை மக்கள் பெற்றுக்கொடுப்பர்“ என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/சூழ்ச்சிக்கு-எதிராக-உயர்/

  • தொடங்கியவர்

மஹிந்த தானாகவே விலகினாலே அன்றி அவரை பதவியில் இருந்து நீக்கமுடியாதுடிலான் பெரேரா

Dilan-Perera.jpg

மஹிந்த ராஜபக்ஷ தானாக பிரதமர் பதவியில் இருந்து விலகினாலே தவிர அவரை பதிவில் இருந்து நீக்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பினாலேயோ அல்லது நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவந்தாலும் கூட மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பிலான உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சந்தித்து கலந்துரையாடியது.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தல் மற்றும் புதிய அமைச்சரவை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு 24 மணித்தியால காலக்கெடு வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும், நாளை மஹிந்தவின் மேன்முறையீடு மனு, விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதன் பின்னரே ஜனாதிபதியின் அடுத்த கட்ட நகர்வுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://athavannews.com/மஹிந்த-தானாகவே-விலகினாலே/

  • தொடங்கியவர்

உயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக  ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்

kanaga_eswaran.jpg

பாராளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்குப் புறம்பானது. எனவே அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதனூடாக ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தைக் கலைத்து கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீதான விசாரணைகள் உயர்நீதிமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், பாராளுமன்றக் கலைப்பு சட்டத்திற்கு முரணானது என இன்றைய தினம் நளின் பெரேரா தலைமையிலான ஏழு பேர் அடங்கிய நீதியரசர் குழாம் தீர்ப்பளித்தது. தெனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/46331

  • தொடங்கியவர்

"நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது "

saliya.jpg

பாராளுமன்றக் கலைப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது எமது நாட்டில் நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமையால் நாட்டில் ஏற்பட்ட அரசியல் சிக்கல் நிலையைத் தொடரந்து, பாராளுமன்றத்தைக் கலைத்து கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார். 

அரசியலமைப்பிற்கு முரணான பாராளுமன்றக் கலைப்பு எனக் குறிப்பிட்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/46335

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.