Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

Featured Replies

எமது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கா விட்டால் ஆட்சியைக் கலைப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று வவுனியா பெரிய கோமரசங்குளம் பரலோக மாதா ஆலய மண்டபத்தில் அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ் தலைமையில் மக்களின் நீண்ட நாள் பிரச்சனையாக இருந்து வரும் கற்குவாரி பிரச்சனை தொடர்பாக இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

“தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுடைய அபிலாசைகளுக்கு ஏற்றவகையில் செயற்படும் ஒர் கட்சி. அந்த வகையில் நாம் வெறும் கையோடு அல்லது வெறுமையான ஒர் ஆதரவை தெரிவித்திருக்க மாட்டோம் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு காரியத்தை சாதிக்க வேண்டுமானால் அதனை இராஜதந்திர முறையில் அணுக வேண்டும். கோழி முட்டையை இட்டுவிட்டு முட்டையிட்டு விட்டேன் என கொக்கரித்தால் அது முட்டைக்கு ஆபத்தாக முடியும்.

எங்களது நாட்டிலே குறிப்பாக வடக்கு கிழக்கிலே எங்களுடைய மக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதற்கும் அப்பால் அரசியல் தீர்வை மேற்கொள்ள வேண்டும் என்பது எமக்கு பிரதான தேவையாக இருக்கின்றது. அத்துடன் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு என்பன எங்களது பிரதேசங்களில் மக்கள் கோரிக்கையாக எழுந்திருக்கின்றது. வெறுமனவே பிரதமராக வருகின்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்து. கையை கட்டிக்கொண்டு இருக்கின்ற ஒரு நிலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் இருக்காது.

ஒப்பந்தம் இருக்கா இல்லையா என்பதை விட குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும். தற்போதைய நிலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருக்கின்றது. புதிய அரசாங்கம் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக ஆதரவு வழங்க வேண்டும். எனினும் இந்த அரசாங்கம் எமது மக்களுடைய கோரிக்கையை கவனத்தில் கொள்ளவில்லையாயின் இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் கொடுக்கின்ற ஆதரவை விலத்திக்கொள்கின்ற போது இந்த அரசாங்கம் கலைகின்ற அல்லது இல்லாமல் போகின்ற நிலைமை காணப்படும். அந்த சந்தர்ப்பத்தை நாமும் சரியாக பயன்படுத்தாமல் போனால் எமது மக்களுடைய பிரதிநிதிகளாகவோ எமது மக்களுடைய அபிலாசைகளை தீர்க்கின்ற அமைப்பாகவோ இருக்க முடியாது என்பதனையும் குறிப்பிட விரும்புகின்றேன்” என தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர் து.நடராஜசிங்கம், மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் சந்திரகுலசிங்கம், உத்தரியநாதன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

https://www.ibctamil.com/srilanka/80/110910?ref=bre-news

  • கருத்துக்கள உறவுகள்

ஓநாயைக் காட்டிலும் நரியை சமாளிக்கலாம் என்று... சம் பச்சோந்தி நினைக்கிறது போலும். ஆனால் எல்லாமே.. ஒரே வகை தான்.. என்பது மிக விரைவில் தெரிய வரும். எதுஎப்படியோ.. இப்போதைக்கு.. நரியை சமாளிப்பதே சிறந்தது. ஓநாய் மிக மோசமானது. 🤣

  • தொடங்கியவர்

கை கட்டி நிற்க மாட்டோமாம்; ரணில் தொடர்பில் டெலோவின் சூளுரை!

625.200.560.350.160.300.053.800.300.160.

ஸ்ரீலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்கிவிட்டு கை கட்டி நிற்கும் செயற்பாட்டை செய்யமாட்டோம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோ சூளுரைத்துள்ளது.

தெனன்னிலங்கை அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும், அதற்காகவே ரணிலுக்கு ஆதரவு வழங்கியதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், டொலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், வவுனியா - கோமரசங்குளம் பிரதேச மக்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எதற்காக கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தது என்பதை தெளிவபடுத்தினார்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளாது உதாசீனமாக ரணில் தலைமையிலான புதிய அரசாங்கம் செயற்படுமாக இருந்தால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை மீளப்பெற்றுக்கொள்ளும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய ஒருவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இருக்கும் நிலையில், தமிழ்த் தேசிய கூட்டைமைப்பு மஹிந்தவுக்கு எந்த விதத்திலும் ஆதரவு வழங்காது என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/110915

8 hours ago, போல் said:

கை கட்டி நிற்க மாட்டோமாம்; ரணில் தொடர்பில் டெலோவின் சூளுரை!

கை நீட்டி இலஞ்சம் வாங்கப் போகிறியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

கல்குவாரி பிரச்சினையை பற்றி பேசஎன்று போனால் செல்லம் அதைமட்டும்தான் நீங்க கதைக்சிட்டு வந்திருக்கணும்.
அதைவிட்டு  குழம்பின குட்டையில் மீன்பிடிப்போம் என்று வீரவசனம் பேச வெளிக்கிட்டால்  நீங்களும் குட்டையிலை ஊறினமட்டையாதான் மாறணும்.
முட்டையை இட்டதை நீங்களே சொல்லி கொக்கரிச்சு போண்டிங்களே கோபால் கொக்கரிச்சு போட்டிங்ளே.

  • கருத்துக்கள உறவுகள்

"நீர் வாயை  வைத்துக்கொண்டு சும்மா இரும்"  என சம்பந்தர்  இராஜதந்திரமாக திருவாய் மலர்ந்தருளுவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.