Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா - அமெரிக்கா இரகசிய ஆய்வின் அடிப்படையில் இராணுவ நடவடிக்கைகள்

Featured Replies

சிறீலங்கா - அமெரிக்கா இரகசிய ஆய்வின் அடிப்படையில் இராணுவ நடவடிக்கைகள்

சிறீலங்கா அரசாங்கமும், அமெரிக்க அரசாங்கமும் இணைந்து 2002 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் அடிப்படையிலேயே தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரியில் விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட பின்னர், அதே ஆண்டு ஒக்டோபரில் சிறீலங்கா அரசாங்கமும், அமெரிக்க அரசாங்கமும் இணைந்து விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக ஆழமான ஆய்வொன்றை மேற்கொண்டதாக அந்த ஊடகம் தெரிவிக்கின்றது.

விடுதலைப் புலிகளால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் ஆபத்துக்கள் குறித்து இந்த ஆய்வில் முறையாக இனங்கண்டிருந்ததாகவும், இத்தகைய ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கான தந்திரோபாயங்களை சிறீலங்கா அரசாங்கம் வகுத்துக் கொள்வதற்கு உதவும் வகையிலேயே அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்தச் செய்தி தெரிவித்துள்ளது.

2002 ஜுலை மாதம் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஸ்ஸ{ம் செய்துகொண்ட உடன்படிக்கை ஒன்றின் பிரகாரமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்புலத்தில் சிறீலங்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே ரணிலின் நோக்கமாக இருந்தது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பதவி வகித்த, போர் நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பாரிய சதி வலைப் பின்னல்கள் இடம்பெற்றதாக, விடுதலைப் புலிகள் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.pathivu.com/

அமெரிக்கா அரசாங்கம் சிறீ லங்கா பேரினவாத அரசாங்கத்திற்கு புலிகளுடன் போரிடுவது எப்படி என பயிற்சி கொடுக்கின்றார்களா அல்லது, விடுதலைப் படையுடன் போரிடுவது எப்படி என புலிகளிடம் பயிற்சி எடுக்கின்றார்களா? அல்லது டூ இன் ஒன் ஆ? அதாவது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்?

  • கருத்துக்கள உறவுகள்

உவை தானே அனையிறவில் இராணுவத்தினருக்கு முன்பு நல்லாப் பயிற்சி கொடுத்து , அனையிறவை இனி புலிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி ஒரு மாதத்துக்குள் அனையிரவு புலிகளின் வசம் வந்தது இப்பொழுது யாபகத்தில் வருகிறது

ஆனையிறவை புலிகளிடமிருந்து மறுபடி கைப்பற்றுவதற்காக அமெரிக்காவால் (ஆப்கானிஸ்தான் பாணியில்) தயாரிக்கப்பட்ட அக்னி கீல போர் நடவடிக்கையில், விமானங்கள், ஆட்டிலறி மூலம் தொடர்ச்சியாக 3 நாகளில் சுமார் 60 000 குண்டுகளை ஆனையிறவை நோக்கிப் பொழிந்துவிட்டு, முன்னேற முனைந்து பலத்த அடியை வாங்கிக் கொண்டு சிங்கள இராணுவம் பின்வாங்கியது.

இத்தனை குண்டுவீச்சிக்கு மத்தியில் புலிகளால் எப்படி தாக்குப் பிடிக்க முடிந்தது என்பது அமெரிக்காவுக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

அவங்க செய்மதிய நம்பி தான் இந்த மேற்கதய நாடுகள் இருகிறாங்க அவங்கழுக்கு தெரியாது புலிகளின் மன உறுதிய பற்றி, அமெரிக்கா மறுபடியும் மண் கௌவ போகுது ,உண்மை ஒரு போதும் தோற்பதில்லை.

ஆணையிறவில் ஆய்வு செய்து ஆய்வறிக்கையை ரொயிலட் ரிசு ஆக்கினார்கள்.இப்போ அடுத்த ஆய்வாம் நடக்கட்டும் கோவணத்தை பறிகொடுத்திட்டு அழாட்டால் சரி

  • கருத்துக்கள உறவுகள்

உது புதுவருச சாத்திரப்படி அரசியல் மாற்றத்தைக் கொண்டு வாறதுக்கான எதிர்க்கட்சியின் உரிமை கோரல். இதில கனக்க உடான்சுகள் இருக்குது. மற்றும்படி அமெரிக்க ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி ஆரெண்டு கேட்டால் இண்டைக்கும் தெரியாது. காரியதரிசியிட்டக் கேட்டு அல்லது தன்ர கொம்பியூட்டரில லிஸ்டப்பாத்துத்தான் அவருக்குப் பேர் சொல்லக் கூடியதாயிருக்கும். வெள்ளை மாளிகையில இதுக்கெல்லாம் கிளாக்குமார் இருக்கிறாங்க. பெரிய அளவுல இதைப்பற்றிச் சிந்தியாதையுங்கோ. ஏதோ ராணுவ ஒத்துழைப்புகள் பைலில உள்ள டொக்குயுமென்ற்றுகளுக்குத் தக்கமாதிரி நடந்திருக்கலாம். அவ்வளவுதான்.

அமெரிக்கர்கள் தங்கள் முழு புலனாய்வு மூளையையும் பயன்படுத்தி ஈராக் போரை துவக்கினார்கள் .அதில் அவர்கள் போட்ட கணக்கு சின்னாபின்னமானது உலகம் அறிந்த விஷயம்........ காகிதங்களில் கணக்கு போடுவது எளிது களத்தில் போடும் கணக்கு தான் முக்கியம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.