Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி : போதைப்பொருள் குறித்து தகவல் வழங்கியமைக்காக அச்சுறுத்தலுக்குள்ளான மாணவன் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 51039963_373573846770382_369306538222813

தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை செய்யப்படும் தகவல் வழங்கிய மாணவன் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த நிலையில் தற்போது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். .

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

ஜனாதிபதியின் பணிக்கு அமைய தேசிய போதை பொருள் ஒழிப்ப வாரம் பாடசாலைகள் தோறும் கடந்த 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இடம்பெற்று வந்தது. இதன் போது பாடசாலைகள் இந்த ஐந்து நாட்களும் துறைசார்ந்தவர்களை அழைத்து போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்க வேண்டும்.

அதனடிப்படையில் கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தில் தரம் எட்டில் கல்வி கற்கின்ற மாணவன் ஒருவர் காவல்துறையினரிடம் தனது பிரதேசமான கோணாவில் கிழக்கு பிரதேசத்தில் கஞ்சா விற்பனை இடம்பெறுகிறது என்ற தகவலை வழங்கியிருந்தார்.

இந்த தகவல் கஞ்சா விற்பனை செய்கின்றவர்களின் காதுகளுக்கு சென்றடைய அவர்கள் குறித்த மாணவனை அச்சுறுத்தியதோடு, தாக்குவதற்கும் முயற்சித்திருந்தனர். அத்தோடு மாணவனின் குடும்பமும் அவர்களின் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருந்தது. இது தொடர்பான செய்திகள் சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளிவந்தன.

இதனையடுத்து நேற்று(28-01-2019) மாலை எழு முப்பது மணியளவில் குறித்த மாணவன் வீட்டிற்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போது உந்துருளியில் வந்த மூவர் மாணவனை மோதி தள்ளிவிட்டு ‘ நீ. செத்தாயடா’ என்று கூறியவாறு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதனால் காலில் பாதிக்கப்பட்ட மாணவன் அவசரநோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மாணவனுக்கு காலில் முறிவு ஏற்பட்டு அதற்கான சிகிசை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தமது மகனுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து பெற்றோர் பாடசாலைக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அத்தோடு மாணவனை பாடசாலையிலிருந்து இடை நிறுத்துவதற்கும் தீர்மானித்திருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அச்சுறுத்தலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் மாணவனின் தந்தை ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 1984 அழைப்பினை மேற்கொண்டு அறிவித்தும் கிளிநொச்சி காவல்நிலைய பிரிவின் பெண்கள் சிறுவர் பிரிவில் முறைப்பாடு செய்தும் மாவட்டத்தில் சிறுவர்களின் நலன்களை பாதுகாக்கின்ற பல அமைப்புகள் இருந்தும் இச் சம்பவம் தொடர்பில் எவரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. என்பது கவலைக்கும் கண்டத்திற்கும் உரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்

50846578_406239826793947_320594409002998

 

தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை செய்யப்படும் தகவல் வழங்கிய மாணவன் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த நிலையில் தற்போது தாக்குதலுக்கு ள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
 
ஜனாதிபதியின் பணிக்கு அமைய தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பாடசாலைகள் தோறும் கடந்த 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இடம்பெற்று வந்தது. இதன் போது பாடசாலைகள் இந்த ஐந்து நாட்களும் துறைசார்ந்தவர்களை அழைத்து போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்க வேண்டும். 
 
அதனடிப்படையில் கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் தரம் 8ல் கல்வி கற்கின்ற மாணவன் ஒருவன் பொலிஸாரிடம்  தனது பிரதேசமான கோணாவில் கிழ க்கு பிரதேசத்தில்  கஞ்சா விற்பனை இடம்பெறுகிறது என்ற தகவலை
வழங்கியிருந்தான்.
 
இந்த தகவல் கஞ்சா விற்பனை செய்கின்றவர்களின் காதுகளுக்கு சென்றடைய அவர்கள் குறித்த மாணவனை அச்சுறுத்தியதோடு, தாக்குவதற்கும் முயற்சித்திருந்தனர். அத்தோடு மாணவனின் குடும்பமும்  அவர்களின் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருந்தது. இது தொடர்பான செய்திகள் சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளிவந்தன.
 
இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை 7.30 மணியளவில் குறித்த மாணவன்  வீட்டிற்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போது உந்துருளியில் வந்த மூவர் மாணவனை மோதி தள்ளிவிட்டு “நீ செத்தாயடா” என்று கூறியவாறு தப்பிச்சென்றுவிட்டனர்.
 
இதனால் காலில் பாதிக்கப்பட்ட மாணவன்  அவசரநோயாளர் காவு வண்டி மூலம்  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளான். தற்போது மாணவனுக்கு காலில் முறிவு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமது மகனுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து பெற்றோர் பாடசாலைக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். 
 
அத்தோடு மாணவனை பாடசாலையிலிருந்து இடைநிறுத்துவதற்கும்  தீர்மானித்திருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அச்சுறுத்தல் சம்பவம்  தொடர்பில்  மாணவனின் தந்தை  ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 1984 அழைப்பினை மேற்கொண்டு அறிவித்தும், கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் பெண்கள் சிறுவர்  பிரிவில் முறைப்பாடு செய்தும் மாவட்டத்தில் சிறுவர்களின் நலன்களை பாதுகாக்கின்ற பல அமைப்புகள் இருந்தும் இச்சம்பவம் தொடர்பில் எவரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. என்பது கவலைக்கும் கண்டனத்துக்கும் உரியது என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.                 
 
1 hour ago, பிரபாதாசன் said:
பொலிஸாரிடம்  தனது பிரதேசமான கோணாவில் கிழ க்கு பிரதேசத்தில்  கஞ்சா விற்பனை இடம்பெறுகிறது என்ற தகவலைவழங்கியிருந்தான்.
1 hour ago, பிரபாதாசன் said:
இந்த தகவல் கஞ்சா விற்பனை செய்கின்றவர்களின் காதுகளுக்கு சென்றடைய அவர்கள் குறித்த மாணவனை அச்சுறுத்தியதோடு, தாக்குவதற்கும் முயற்சித்திருந்தனர். அத்தோடு மாணவனின் குடும்பமும்  அவர்களின் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருந்தது. இது தொடர்பான செய்திகள் சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளிவந்தன.
 
இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை 7.30 மணியளவில் குறித்த மாணவன்  வீட்டிற்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போது உந்துருளியில் வந்த மூவர் மாணவனை மோதி தள்ளிவிட்டு “நீ செத்தாயடா” என்று கூறியவாறு தப்பிச்சென்றுவிட்டனர்.

வன்னியின் உட் பிரதேசங்களில் சகல சட்டவிரோத செயல்களும் சிங்கள-பௌத்த போலீஸ் மற்றும் முப்படை கும்பல்களின் பின்புலத்துடனே நடைபெறுகிறது.

மைத்திரி மக்களை ஏமாற்ற போதை ஒழிப்பு என்று போலி நாடகமாடுகிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

 

இப்படித்தான் கஞ்சா முகவர் ஒருவரை சுமந்திரன் எடுத்து விட்டார் , அதேமாதிரி இந்த மாணவனை தாக்கியவர் இவர்களின் பின்னணி ஆக கூட இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபுறம் தமிழர் பிரதேசசங்களில் பாேதைப்பாெருள் விநியாேகம் மறுபுறம் ஒழிப்பு பிரச்சாரம், இப்படியெல்லாம் நடிக்க பிலிப்பின் வரைபாேய் படித்து வந்திருக்கிறார் மாத்தையா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலுக்குள்ளான மாணவனின் விடயத்தில் களமிறங்கிய மனித உரிமைகள் ஆணைக்குழு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

51351670_1740741546026045_55339466093452

தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது போதைப்பொருள் கஞ்சா விற்பனை தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய பின் அச்சுறுத்தலுக்குள்ளாகி பின் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிசைப்பெற்று வரும் மாணவன் விடயத்தில் இலங்கை மனித உரிமைகள ஆணைக்குழுவும் களத்தில் இறங்கியுள்ளது.

இன்றைய தினம் 31-01-2019 கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் மாணவனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய ஆணையாளர் ரி. கனகராஜ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதோடு, சம்பவ விடயங்களையும் கேட்டறிந்துகொண்டனர்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கனகராஜ் மாணவன் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் காவல்துறையினரின் இதுவரையான நடவடிக்கை பற்றிய அறிக்கை ஒன்றை கோரவுள்ளதாகவும், தமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த விடயத்தில் காவல்துறையினரின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் எனவே தாம் காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து அறிக்கையினை பெறுவதோடு, மாணவனின் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் அவதானித்து வருவோம் என்றும் குறிப்பிட்டார்.

 51562076_1976978535754465_67819056771041

 

இது போன்ற துணிவான இளைஞர்களை பாதுகாக்க தமிழ் சமூகம், தமிழ் அமைப்புக்கள் பகிரங்கமாக முன்னுக்கு வரவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

போதை பொருளை தடுக்க முயலும் மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

January 31, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

51039963_373573846770382_369306538222813

மாணவர்கள் போதை பொருளை தடுக்க முயற்சிகளை முன்னெடுக்கின்றமையினரால் அவ்வாறான மாணவர்களை பாதுகாக்க காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

போதை பொருள் வியாபாரிகள் மாணவ சமூகத்தை அழிப்பதனை நோக்காக கொண்டே தொழிற்படுகின்றனர். மாணவர்கள் மத்தியில் போதை பொருள் பாவணையை ஊக்குவிக்கின்றார்கள்.

அந்த நிலையில் போதை பொருளை ஒழிப்பதற்கு மாணவ சமூகம் மற்றும் இளையோர் முன்வந்து அதற்கு எதிராக செயற்படுகின்றனர்.

அவ்வாறு கிளிநொச்சியில் போதை பொருள் வியாபாரிகள் பற்றிய தகவல் வழங்கிய மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் முறையிட்ட போது உரிய நடவடிக்கை எடுக்க தவறிய நிலையிலையே மாணவன் தாக்கப்பட்டுள்ளார்.

போதை பொருளுக்கு எதிராக செயற்படுவோர்களை, போதை பொருள் வியாபாரங்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களை பாதுகாக்க பொலிஸார் தவறும் பட்சத்தில் போதை பொருளை ஒழிக்க முடியாது.

எனவே மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாகவே போதை பொருள் பற்றிய தகவல்கள் வழங்குவோர் தாமாக முன்வந்து தகவல்களை வழங்குவார்கள் அதற்கு காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/2019/111766/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.