Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு :

February 16, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் கருங்கண்டல் ம.வி பாடசாலையில் உயர் தர வகுப்பு மாணவரான ஜே.நிர்மலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த மாணவன் வழமை போல் நேற்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

மீண்டும் வீட்டில் இருந்து பாடசாலை சீருடையுடன் வெளியில் சென்ற மாணவன் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் தேடிய போதே குறித்த மாணவன் மணல் காடு பகுதியில் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு சென்ற அடம்பன் காவல்துறையினர் சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG-5f4fce2647da26f777fd3866609b296c-V.j

 

http://globaltamilnews.net/2019/113482/

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் தற்கொலைகள் மட்டும் அதிகரித்து நேற்று மட்டு கல்லடி கடற்கரையில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் ஒரு கிழமைக்கு முன்னர் ஒருவர் பாலத்த்லிருந்து குதித்தும் தற்கொலை செய்து கொண்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை சீருடையுடன் மாணவன் தூக்கிட்டமைக்கான காரணம் வெளியானது :

February 18, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
student-death-2.jpg?resize=600%2C800மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை(15) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

கருங்கண்டல் ம.வி பாடசாலையில் உயர் தர வகுப்பில் கல்வி கற்கும் ஜே.நிர்மலன் எனும் மாணவனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்

குறித்த மாணவன் வழமை போல் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்குச் சென்ற போது பாடசாலையின் அதிபர் காலை குறித்த மாணவனை அழைத்து உடனடியாக வீட்டிற்குச் சென்று உரிய முறையில் முகச் சவரம் செய்து விட்டு பாடசாலைக்கு வருமாறு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து  வீட்டுக்குச் சென்ற மாணவன் மீண்டும் வீட்டில் இருந்து பாடசாலை சீருடையுடன் வெளியில் சென்ற நிலையில் மணல் காடு பகுதியில் தூங்கில் தொங்கிய நிலையில் அன்றிரவே சடலமாக மீட்கப்பட்டார்.

சக மாணவர்கள் முன்னிலையில் பாடசாலை அதிபர் மாணவனை அழைத்து கூறியமையினால் மனமுடைந்து குறித்த முடிவை எடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த மாணவன் பல் துறைகளிலும் ஆற்றல் மிக்கவர் என தெரிவிக்கப்படுகின்றது

 

.student-death-11.jpg?resize=600%2C800student-death-31.jpg?resize=600%2C800

 

 

http://globaltamilnews.net/2019/113646/

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்ததெற்கெல்லாம் தற்கொலை செய்யம் அளவிற்கு பலவீனமாய் போய் விட்டார்கள்...வட ,கிழக்கில் உள்ள மக்களுக்கு உள ரீதியான சிகிச்சை கொடுக்க வேண்டும் 
 

14 hours ago, கிருபன் said:

சக மாணவர்கள் முன்னிலையில் பாடசாலை அதிபர் மாணவனை அழைத்து கூறியமையினால் மனமுடைந்து குறித்த முடிவை எடுத்திருக்கலாம்

இது போன்ற மனநிலை உடையவர்கள் வாழ்ந்தும் ஒரு பயனும் இல்லை என்ற எண்ணமே ஏற்படுகின்றது!

இது போன்ற கோழைத்தனங்களுக்கு எந்தவித அனுதாபங்களும் காட்ட முடியாது!

இது போன்ற கோழைத்தனங்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்! இது போன்றவர்களின் பெற்றோர்களும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.