Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் பௌத்த மதகுருவை கொலை செய்துவிட்டு அவரது கணவரும் தற்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

pikku4-720x450.jpg

பெண் பௌத்த மதகுருவை கொலை செய்துவிட்டு அவரது கணவரும் தற்கொலை

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா கும்புக்கடவள பிரதேசத்தில் பெண் பௌத்த மதகுரு கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இந்த கொலையைச் செய்ததாக கூறப்படும் அவரின் கணவரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் கடந்த மாதம் 4ஆம் திகதி பௌத்த மதகுருவாகியுள்ளார்.

இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) அவருக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக, அவரது கணவர் மறைத்து வைத்திருந்த கூறிய ஆயுதத்தினால் குறித்த பென் பௌத்த மதகுருவை குத்தி படுகாயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதன்போது அதிகளவு இரத்தம் வெளியேறிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை 60 வயதுடைய அவரது கணவரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், புத்தளம் மாவட்ட நீதவான் சம்பவம் இடம்பெற்ற இடத்தையும்  நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக முந்தல் பொலிஸாரும் புத்தளம் மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரனகளை மேற்கொண்டு வருகின்றனர்.

pikku4.jpg

pikku.jpg

pikku3.jpg

http://athavannews.com/பெண்-பௌத்த-மதகுருவை-கொலை/

பெண் பௌத்த மதகுருவா?  அல்லது 

பிக்குணியா?

பிக்குணிக்கு கலியாணம் செய்ய முடியாதல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் கட்டிணாப்பொறவும் பிக்கம்மாவா வரேலாதோ, துள்சி?

Edited by Nathamuni

15 minutes ago, Nathamuni said:

கல்யாணம் கட்டிணாப்பொறவும் பிக்கம்மாவா வரேலாதோ, துள்சி?

வரலாம்.

ஆனால், இல்லறத்தில் ஈடுபட முடியாது.

அப்படி அவர்களின் சட்டம் சொல்லுது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

வரலாம்.

ஆனால், இல்லறத்தில் ஈடுபட முடியாது.

அப்படி அவர்களின் சட்டம் சொல்லுது!

கடந்த மாதம் நாலாம் திகதி தான் பிக்குணியாயிருக்கிறா. புருசன்காரருக்கு பிடிக்கல்லை போல...

11 minutes ago, Nathamuni said:

கடந்த மாதம் நாலாம் திகதி தான் பிக்குணியாயிருக்கிறா. புருசன்காரருக்கு பிடிக்கல்லை போல...

இந்த பிக்குணி, வேறு ஆண் புத்த பிக்குகளுடன் தொடர்பு இருந்ததாக கதை அடிபடுகுது - சிங்கள ஊடகங்களில் 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, thulasie said:

இந்த பிக்குணி, வேறு ஆண் புத்த பிக்குகளுடன் தொடர்பு இருந்ததாக கதை அடிபடுகுது - சிங்கள ஊடகங்களில் 

58 years 🤔

48 minutes ago, Nathamuni said:

58 years 🤔

Of Course!

Even in 58 years, no one can prevent desires!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

கல்யாணம் கட்டிணாப்பொறவும் பிக்கம்மாவா வரேலாதோ, துள்சி?

9 hours ago, thulasie said:

வரலாம்.

ஆனால், இல்லறத்தில் ஈடுபட முடியாது.

அப்படி அவர்களின் சட்டம் சொல்லுது!

7 hours ago, thulasie said:

இந்த பிக்குணி, வேறு ஆண் புத்த பிக்குகளுடன் தொடர்பு இருந்ததாக கதை அடிபடுகுது - சிங்கள ஊடகங்களில் 

7 hours ago, Nathamuni said:

58 years 🤔

6 hours ago, thulasie said:

Of Course!
Even in 58 years, no one can prevent desires! 

#######################   ##########################

(நிச்சயமாக... 58 வயது , என்றாலும், ஆசைகளை யாரும், தடுக்க முடியாது.) (மொழி பெயர்க்கப் பட்டது)

உங்களது உரையாடல்.... பயங்கர  சிரிப்பை வரவழைத்து விட்டது. :grin: :grin:
சின்ன ஒரு கேள்வி... ஆண்  பிக்கு,  பெண்களுடன்  உறவு  கொள்ள, புத்த மதம் அனுமதிக்கின்றதா? 😝

18 minutes ago, தமிழ் சிறி said:

உங்களது உரையாடல்.... பயங்கர  சிரிப்பை வரவழைத்து விட்டது. :grin: :grin:
சின்ன ஒரு கேள்வி... ஆண்  பிக்கு,  பெண்களுடன்  உறவு  கொள்ள, புத்த மதம் அனுமதிக்கின்றதா? 😝

ஆசையைத் துறந்தவர்கள், நிராசையாகி விடுவதில்லை - அந்த விடயத்தில் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, thulasie said:

ஆசையைத் துறந்தவர்கள், நிராசையாகி விடுவதில்லை - அந்த விடயத்தில் 

சாமியார்கள், பாதிரியார்கள், பிக்குகள் எல்லாம்... ஒரே குட்டையில்  ஊறிய மட்டைகள்.
ஆனால்... மௌலவிகள் மட்டும், "சுத்தமானவர்கள்"  என நினைக்கின்றேன்.

ஏனென்றால்... அவர்கள், பெண்கள் விடயத்தில்... தப்பு செய்ததாக, வந்த செய்திகளை... நான்,  இன்னும் கேள்விப் படவில்லை. 😎

Edited by தமிழ் சிறி

31 minutes ago, தமிழ் சிறி said:

சாமியார்கள், பாதிரியார்கள், பிக்குகள் எல்லாம்... ஒரே குட்டையில்  ஊறிய மட்டைகள்.
ஆனால்... மௌலவிகள் மட்டும், "சுத்தமானவர்கள்"  என நினைக்கின்றேன்.

ஏனென்றால்... அவர்கள், பெண்கள் விடயத்தில்... தப்பு செய்ததாக, வந்த செய்திகளை... நான்,  இன்னும் கேள்விப் படவில்லை. 😎

நாலு வரை கட்டலாம் என்றால், தவறு செய்வது குறைவுதான்.

அதனால் தவறே செய்யமாட்டார்கள் என்று எண்ண  கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

சாமியார்கள், பாதிரியார்கள், பிக்குகள் எல்லாம்... ஒரே குட்டையில்  ஊறிய மட்டைகள்.
ஆனால்... மௌலவிகள் மட்டும், "சுத்தமானவர்கள்"  என நினைக்கின்றேன்.

ஏனென்றால்... அவர்கள், பெண்கள் விடயத்தில்... தப்பு செய்ததாக, வந்த செய்திகளை... நான்,  இன்னும் கேள்விப் படவில்லை. 😎

அதுக்கு பெயர் தப்பு இல்லை. 7 தடவைகள் அலோவ் பண்ணி இறுக்கி....

6 minutes ago, Nathamuni said:

அதுக்கு பெயர் தப்பு இல்லை. 7 தடவைகள் அலோவ் பண்ணி இறுக்கி....

ஓமோம், மனிஷிமாரை விட்டுவிட்டு, வேறு இடத்தில் செய்வதுதான் தப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

pikku.jpg

அந்த வீட்டு முற்றத்தில் காயப்  போட்டிருந்த... செத்தல் மிளகாயும், தேங்காய் கொப்பரையும்.... 
இன்னும் கண்டு பிடிக்க முடியாத... சில சமையல் பொருட்களை, 
சூரிய ஒளியில்  காய வைத்து,குளிர் காலத்தில் பாவிக்க வேண்டும் என்ற, 
குடும்ப சூழ் முறையை உணர்ந்த,  பெண்மணியின்... வாழ்க்கையில்...
ஆமத்துறு...  ரூபத்தில், விதி விளையாடியதை நினைக்க, கவலையாக உள்ளது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரோ ஒரு ஆமத்துரு ஆமை ஓட்டோடை தண்டலுக்குப்போன இடத்திலை சில்லெடுப்பு நடந்திருக்கு.....😎

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேரும் இறந்ததால் கொலை சமப்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்லி கடந்திட வேண்டியதுதான் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.