Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் என் ஈழமும் 5

Featured Replies

நானும் என் ஈழமும் 5

nanum%20en%20eelamum5.jpg

கடந்த ஞாயிறு நடந்த நாட்டுப்பற்றாளர் தினம் மனதில் பல நினைவுகளை விதைத்து சென்றுவிட்டது. என் வாழ்வில் சந்தித்த சிலர் தம்மை பற்றி பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவிட்டு சென்றுவிடுவார்கள். இவர்களை பார்த்து பெருமைபடுவதா இல்லை வருத்தப்படுவதா?

"என்ன ஆனாலும் சரி பபா படிச்சு பெரிய ஆளா வரணும். அதை இந்த முகிலன் அண்ணா பார்க்கணும்" அடிக்கடி என் முகிலன் அண்ணா சொல்லும் வார்த்தை. முதன் முதலில் பட்டமளிப்பு விழாவிற்கு மேடையேறிய போது , என்னை அறியாமல் என் கண்கள் முகிலன் அண்ணா இருக்கின்றாரா என பார்வையாளர்களை பார்த்தது. இன்றுவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று.

எப்பொழுது நாங்கள் ஊருக்கு சென்றாலும் முகிலன் அண்ணாவை பார்க்காமல் வந்ததில்லை. நாங்கள் ஊருக்கு போகும் நாட்களில் தானும் விடுமுறை எடுத்து வந்துவிடுவார். முப்பதே நிமிட துவிச்சக்கர வண்டி பயணத்தில் இருக்கும் தங்கள் வீட்டில் தங்காமால் எங்களுடனேயே தங்கிவிடுவார்.

முகிலன் அண்ணாவிற்கு நான்கு சகோதரர்கள். இரண்டு அண்ணன்மாரும், ஒரு தம்பியும். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர்கள் வீட்டில் இரண்டு அண்ணன்களும் படங்களாக மட்டுமே. தமிழீழ பூ மலர அவர்கள் தங்கள் இன்னுயிரை விதைத்திருந்தார்கள்.

இரு மகன்களை விதைத்த வீட்டிலிருந்து வந்த முகிலன் அண்ணா போருக்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. என் நினைவிலேயே முகிலன் அண்ணா அடிக்கடி புலம்புவது இருக்கின்றது. போருக்கு செல்வதென்றால் அவர்களுக்கு பிறவிப்பயனாம்!

மூத்தவர் மூவரும் தாயகபணியில் ஒன்றிவிட, கடைக்குட்டி கமலன் அண்ணா மட்டும் உயர்பள்ளியில் கல்விபயின்று வந்தார். முகிலன் அண்ணாவுடன் நான் நெருக்கமாக இருப்பது கண்டு தனக்கு பொறாமையாக இருப்பதாக அடிக்கடி அம்மாவிடம் கூறுவாராம். அதற்கு காரணம் பிறந்ததில் இருந்து சகோதர பாசத்தை அனுபவிக்கும் பாக்கியத்தை இழந்தவன் நானென்பாராம்.

என் அம்மாவுடன் அதிகம் கதைப்பதை பார்த்து "பாவமடா தூயாம்மா அறுக்காதடா" என அடிக்கடி தம்பியை முகிலன் அண்ணா கிண்டலடிப்பாராம்.

பள்ளியில் முதல் மாணவனாக இருந்த கமலன் அண்ணாவுடனும் அவரின் நண்பர்களோடும் நான் துவிச்சக்கர வண்டியில் சுற்றாத இடமே எங்கள் ஊரில் இல்லை என சொல்லலாம். கமலன் அண்ணாவின் துவிச்சக்கர வண்டியின் முன்னுக்கு இருந்து கொண்டு வீதியில் போவோர்களை பார்க்கும் சுகத்திற்கு ஈடு ஏது? மறுபடி எனக்கு கிடைக்காமலே போன வரங்களில் இதுவும் சேர்ந்துகொண்டுவிட்டதே.

முகிலன் அண்ணா வரும் வரை கமலன் அண்ணாவுடன் சுற்றுவேனாம், பின்னர் அவரை திரும்பி கூட பார்க்க மாட்டேனாம். "துரோகி..இவர் எத்தனை நாட்களுக்கு நிற்பார், பிறகு கமலு என்று வந்தால் பல்லை உடைப்பேன்" என செல்லமாக என்னை மிரட்டி சிரிப்பாராம்.

முகிலன் அண்ணாவின் அம்மா, அப்பாவை பற்றி சொல்லும் போது என்னை மீறி "பெருமையுணர்வு" தோன்றுவதை மறுக்க முடியாது. நான்கு மகன்களை பெற்றதால், பெண்பிள்ளையாக அவர்கள் வீட்டில் ஓடிதிரிந்த என் மேல் பாசம் வைத்திருந்தது ஒன்றும் பெரிதில்லையே.

என்னை கண்டாலே "வாடா ராசாத்தி, இப்ப தான் இந்த முகிலம்மாவை பார்க்க நினைவு வந்ததா?" என கட்டிக்கொள்ளும் முகிலம்மா மேல் எனக்கு ஒரு பாட்டியிடம் இருக்கும் பிரியம் எப்பொழுதும் உண்டு. முகிலன் அண்ணாவை பற்றி அம்மாவிடம் சொல்லி கவலைப்படுவா. அந்த நேரங்களில் அம்மாவின் மடியில் படுத்திருந்த எனக்கு சிலது நினைவில் இருக்கு.

முகிலன் அண்ணா என்றாலே எனக்கு நினைவில் வருவது அவரின் உந்துருளியும், கையில் எப்பொழுதும் இருக்கும் துப்பாக்கியும் தான். அந்த கம்பீரத்தை இதுவரை நான் யாரிடமும் கண்டதில்லை.

நான் படிக்க வேண்டும் என்பதில் அதிகம் ஆசைவைத்தவர் என்றால் முகிலன் அண்ணா தான். எப்பொழுது என்னை பார்க்க வந்தாலும் படிப்புக்கு வேண்டியதை தான் கொண்டுவருவார்.

"வெளிநாட்டுக்காரிக்கு எங்கட பென்சில் எதுக்கு?" என கேட்பவர்களுக்கு சிரிப்பை மட்டும் பதிலாக குடுப்பாராம்.

அது போல ஊருக்கு போகும் போது வருடம் முழுவதும் கிடைத்த அனைத்து சிறப்பு தேர்ச்சி ஆவணங்களை [merit certificates] எடுத்து சென்று முகிலன் அண்ணாவிடம் காட்டிவிடுவேன்.

"முகிலு"

"என்ன பபா?"

"பாபா உங்க வீட்டுக்கு வாறன், முகிலு எப்போ பபா வீட்டுக்கு வரும்?"

அடிக்கடி ஒஸ்திரேலியாவில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு வர சொல்லி கேட்கும் போது, என்னுடைய பட்டமளிப்புவிழாவுக்கு கட்டாயம் வருவேன் என சொல்லுவார்.

அப்படி சொன்னவர் தான் விபத்தாக தொடங்கிய ஒரு சண்டையில் (எதிரியுடன் தான்) அங்கிருந்த அனைவரையும் சுட்டுவிட்டு தானும் மண்ணில் தன்னை விதைத்துக் கொண்டாராம். அதே சண்டையில் காயம்பட்ட அண்ணன் ஒருவர் சொல்லுவார் "எத்தனையோ களத்திற்கு போயிருக்கன் முகிலனை போல ஒரு போராளியை கண்டதில்லை"

முகிலன் அண்ணா மாவீரர் ஆன போது இங்கிருந்து ஊருக்கு செல்ல முடியாத நிலை. நிலமை சரியாகி நான் சென்று பார்த்த போது அமைதியாய் துயிலும் இல்லத்தில் உறங்கி கொண்டிருக்கின்றார். அண்ணா சேர்ட்டிபிக்கட் கொண்டுவந்திருக்கேன்..பாருங்க

சோகமான உண்மைக் கதை.... :unsure: :unsure: :unsure:

வாசிக்க, கேட்க கவலையாய் இருக்கின்றது.... :(:lol: :lol:

இப்படி தமிழீழத்தில் எத்தனை ஆயிரம் முகிலன் அண்ணாக்கள் மாவீரராகி உள்ளார்கள்....

எத்தனை ஆயிரம் கமலன் அண்ணாக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன....

ஆனாலும், நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக நெஞ்சுகளில் சுமக்கும் இந்த நினைவுகள், எமக்கு சோகத்தை, துயரத்தை தந்தாலும் என்றோ ஒரு நாள் தமிழீழம் கிடைக்கும் போது அவை சுகமான சுமைகளாகும்...

சொந்தக் கதையை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி!

உங்கள் உண்மைக் கதையை வாசித்து மனதிலுள்ள சோகத்தை அறிய முடிகிறது.

உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

அருமையான கோர்வையாக எழுதப்பட்ட சோகக்கதை நன்றிகள் துயா

Edited by ஈழவன்85

கதையை வாசித்து முடிக்கும் போது எனக்கே இப்படியா என இருந்தது அப்ப உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்,எங்களுடன் கதையை பகிர்ந்து கொண்டமைகு நன்றி

  • தொடங்கியவர்

ஆனாலும், நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக நெஞ்சுகளில் சுமக்கும் இந்த நினைவுகள், எமக்கு சோகத்தை, துயரத்தை தந்தாலும் என்றோ ஒரு நாள் தமிழீழம் கிடைக்கும் போது அவை சுகமான சுமைகளாகும்...

இதை தான் நானும் "பெருமைபடுவதா? வருந்துவாதா?" என தெரியவில்லை என கூறினேன்...இருந்தாலும் இன்றுவரை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை:o

உங்கள் உண்மைக் கதையை வாசித்து மனதிலுள்ள சோகத்தை அறிய முடிகிறது.

உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

நன்றி. மற்றவர்களும் இப்படியான சோகங்களை எழுத்தில் கொண்டுவர வேண்டும் என நினைத்தே நான் எழுதுகின்றேன்.

அருமையான கோர்வையாக எழுதப்பட்ட சோகக்கதை நன்றிகள் துயா

ஈழவன், இந்த கதையின் நிஜம் பற்றி உங்களுக்கு கொஞ்சம் அதிகமாக தெரியும் தானே! நேற்று என்னால் உறங்கவே முடியவில்லை.

கதையை வாசித்து முடிக்கும் போது எனக்கே இப்படியா என இருந்தது அப்ப உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்,எங்களுடன் கதையை பகிர்ந்து கொண்டமைகு நன்றி

யம்மு என் நிலையில் இருந்து சிந்தித்து பார்த்தமைக்கு நன்றிகள்..என்னை பெரிதும் பாதித்த நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. இப்படியெல்லாம் நடக்கும் என தெரிந்திருந்தால் ஊருக்கே சென்றிருக்க மாட்டோமே என்னவோ

  • கருத்துக்கள உறவுகள்

"எல்லாத்தையும் குடுத்திட்டம், நாட்டையும் பார்த்திட்டு கண்ணை மூடினா சரி" என கூறும் இவர்களை விடவா ஒரு நாட்டுபற்றாளார் இருக்க முடியும்!

உண்மைதான் தூயா. எத்தனை தியாகம், நினைக்க முடியாத சாதனை. இவர்களை நினைக்கும் போது என்னைப் பார்க்கவே அருவெருப்பாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா அக்கா சோகத்தை மற்றவர்களுடன் பகிரும் பொது அது குறையும் என்று சொல்வார்கள் அதே மாதிரி உங்களுடைய சோகமும் எங்களுடன் பகிர்ந்ததால் சிறிதளவாவது குறைந்திருக்கும் என்று நம்புகிறேன்.

உங்களுடைய நிலமையில் இருந்து பார்க்கும் போது உங்கள்க்கு வரும் கோபமும் நியாயமானதாகவே தெரிகிறது

கவலை படாதீர்கள் அக்கா இந்த மாவீரர்களின் தியாகங்கள் எல்லாம் எமக்கு நிச்சயம் விடுதலையை வேண்டித்தரும்

வாசிக்கவே ரொம்ப கஸ்டமாயிருந்திச்சு, :)

எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..!

அவருடைய ஆசீர்வாதம் எப்பபொழுதும் உங்களுக்கு இருக்கும் ..!

நிங்கள் எழுதியதை வாசிக்க மிகவும் மனதுக்கு சோகமான இருக்கின்றது.

உங்களின் கதைமாதிரி எத்தனை எத்தனை மனங்களில் சோகங்கள் நிறம்பி உள்ளனா....

மிகவும் என்னையும் எனது என்னங்களையும் பாதித்துவிட்டீர்கள்.

நிசமாகவே அவர்கள் துயிலவில்லை.

எம்மவர் எண்ணங்களில் அவர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.

இன்றோ அல்லது நாளையோ வெளிப்படுவார்கள் அன்று ஆயிரம் முகிலர்களை இந்த உலகம் காணூம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதை உருக்கும் நல்ல ஒரு கதை தூயா.

எல்லோர் மனதில் இருக்கிறதையும் நீங்க எழுத்தில அழகா எழுதி இருக்கிறீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் திடமாக இருந்தால் அவர்கள் எண்ணங்களில் தொடர்ந்து பயணிக்க முடியும்.வெறும் கவலைகளோடு நின்றுவிடாமல் விடுதலைக்காக பாடுபடுங்கள்.

உங்களால் முடியும்.

  • தொடங்கியவர்

இதுவரை என் எழுத்தை படித்து உணர்வுகளை பகிர்ந்து கொண்ட கள உறவுகளுக்கு நன் நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் ஒரு உருக்கமான பதிவு.

தனது நான்கு பிள்ளைகளையும் பறி கொடுத்து விட்டு தமிழீழக் கனவுடன் வாழ்ந்து வரும் அந்தத் தாயை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கிறது.

  • தொடங்கியவர்

வணக்கம் இளங்கோ, முகிலம்மாவை பற்றி நினைத்தாலே எனக்கு அழுகை வரும்...ஆனால் அவர் இன்னமும் தைரியமாக இருக்கின்றார்

தூயா'உங்கள் கதையின் நிஜம் இதயவலியுடன் மிண்டும் ஈழத்திற்கு

அழைத்துச்சென்றது பலரின்புதைந்துபோன நிஜங்கள் உங்கள்வலிகளை

காலம் மாற்றட்டும் நிஜங்களை மிண்டும் கதையாய் தொடருங்கள்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

வணக்கம் கஜந்தி..தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.. வலிகள் எங்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு விடயமாகி போய்விட்டதே :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.