Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல்போனவர்களை தேடும் பெண்களிற்கு நேர்ந்த அவலம்- அமெரிக்க அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போனவர்களை தேடும் பெண்களிற்கு நேர்ந்த அவலம்- அமெரிக்க அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

 

காணாமல்போன தங்கள் கணவன்மார்கள் குறித்து தகவல்களை கோரிய மனைவிமார் அரசாங்க அதிகாரிகளாலும்  பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகளாலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்கா  தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள் 2018 இல் உலக நாடுகளின் மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நீண்ட அறிக்கையை முன்வைத்துள்ள அமெரிக்கா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

யுத்தத்தில் கொல்லப்பட்ட படையினரின் மனைவிமார் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதிஉதவியை  பெறமுயலும்வேளை பாலியல் துஸ்பிரயோகங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.  

அரசாங்கமோ அல்லது அதன் முகவர்களோ சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டனர் என தகவல்கள் கிடைத்துள்ளளன என அமெரிக்காவின் அறிக்கையி;ல் தெரிவிக்கப்பட்டுள்ளது

யுத்தத்தி;ன் போதும் அதன் பின்னரும் காணாமல்போதல் என்பது இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினையாக காணப்படுகின்றது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போகச்செய்யப்பட்டமை தொடர்பில் வருட இறுதிவரை அதிகாரிகள் எவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரவதை உட்பட ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தண்டனைகளை இலங்கையின் அரசமைப்பும் சட்டமும் தடை செய்துள்ள போதிலும் அதிகாரிகள் அதனை தொடர்ந்து பின்பற்றுக்கின்றனர் என அமெரி;க்கா தனது மனித உரிமை அறி;க்கையில் தெரிவித்துள்ளது.

குற்றங்கள் தொடர்பான வாக்குமூலங்களை பெறுவதற்காக காவல்துறையினர் பொதுமக்களை சித்திரவதை செய்வதுடன் பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்குகின்றனர் எனவும்  அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 2017 இல் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்வதை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்த போதிலும் எனினும் கடந்த வருடம் இலங்கை அரசாங்கம் ஆகக்குறைந்தது நான்கு பேரையாவது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் சித்திரவதைகளை வழமையான நடைமுறையாக நாடுமுழுவதும் பின்பற்றுகின்றனர் என தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணையகம் கடந்த யூன் மாதம் வரை உடல்உள சித்திரவதைகள் குறித்து 193 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது எனவும் அமெரிக்காவி;ன அறிக்கை தெரிவித்துள்ளது

மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வின் போது இலங்கை முழுவதும் சித்திரவதைகள் பரவலாக பின்பற்றப்படுவது தெரியவந்துள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களை போன்று யுத்தம் முடிவடைந்த பின்னரும்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் நபர்கள் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பலவந்தமாக வாக்குமூலம் தங்களிடமிருந்து பெறப்பட்டதாகவும்,சட்டத்தரணிகளையும் குடும்பத்தவர்களையும் பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர் என அமெரிக்க அறிக்கை தெரிவித்துள்ளது

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பாலியல் துன்புறுத்தல்கள் உட்பட சித்திரவதைகள் மோசமாக நடத்தப்படுதல் போன்றவற்றை புனர்வாழ்வு முகாம்களிலும் விடுதலையின் பின்னரும் தாங்கள் அனுபவித்ததாக குறிப்பிட்டுள்ளனர் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pompeooo.jpg

பொதுமக்களிற்கு எதிராக படையினரும் பொலிஸாரும் அளவுக்கதிகமான வன்முறைகளை பயன்படுத்துவதும் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது

காணாமல்போன தங்கள் கணவன்மார்கள் குறித்து தகவல்களை கோரிய மனைவிமார் அரசாங்க அதிகாரிகளாலும் மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகளாலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் அமெரிக்காவின் மனித உரிமை அறிக்கை தெரிவித்துள்ளது

யுத்தத்தில் கொல்லப்பட்ட படையினரின் மனைவிமார் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதிஉதவியை  பெறமுயலும்வேளை பாலியல் துஸ்பிரயோகங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும், சிறீலங்காவும் செய்யும் குறும்புகள் எங்களுக்குத் தெரியும். செரிந்தாலும் நாங்கள் அவர்களைத் தண்டிக்கமாட்டோம், ஏனெனில் அவர்கள் எங்கள் செல்லப் பிள்ளைகள்.

- இப்படிக்கு அமெரிக்கா. 😲

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

mic-720x450.jpg

உறவுகளை தேடும் பெண்கள் அரச அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்தோடு இலங்கை பொலிஸார் தொடர்ச்சியாக சித்திரவதைகளில் ஈடுபட்டு வருகின்றனரென்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள் அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையினை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பம்பியோ நேற்று முன்தினம் (புதன்கிழமை) வெளியிட்டார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களில் சித்திரவதைகள், ஏனைய கொடூரமான மனிதத்தன்மையற்ற மோசமான நடத்தைகள் மற்றும் தண்டனைகள் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் அவற்றைத் தொடர்ந்தும் பயன்படுத்துகின்றனர்.

பொதுவாக சிவில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்புப் படைகள் இருந்தாலும், இராணுவம் மற்றும் பொலிஸ் என்பன, பொதுமக்களைத் துன்புறுத்துகின்றன. அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலையும் தொடர்கிறது.

உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக இலங்கை படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இதுவரையில் உருவாக்கப்படவில்லை

எனினும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகளுக்கு எதிராக, விசாரணை செய்வதற்கும், சட்டத்தின் முன் நிறுத்தவும், தண்டனை விதிக்கவும், கடந்த ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்துக்கு புறம்பான கொலைகள், சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், அரசாங்கப் படைகளால் தன்னிச்சையாக தடுத்து வைத்தல், இணைய முடக்கம், ஊழல் உள்ளிட்ட மனித உரிமை பிரச்சினைகள் தொடர்கின்றன.

காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்’என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://athavannews.com/காணாமலாக்கப்பட்ட-உறவுகள/

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் தொடரும் மனித உரிமை மீறல்கள்- அமெரிக்கா குற்றச்சாட்டு

 

Mike-Pompeo-300x200.jpgஉள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள் அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சித்திரவதைகள், ஏனைய கொடூரமான மனிதத்தன்மையற்ற மோசமான நடத்தைகள் மற்றும் தண்டனைகள் சிறிலங்காவில் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக சிவில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்புப் படைகள் இருந்தாலும்,  சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறை என்பன, பொதுமக்களைத் துன்புறுத்துகின்றன. அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலையும் தொடர்கிறது.

உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை

எனினும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகளுக்கு எதிராக, விசாரணை செய்வதற்கும், சட்டத்தின் முன் நிறுத்தவும், தண்டனை விதிக்கவும், கடந்த ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்துக்கு புறம்பான கொலைகள், சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், அரசாங்கப் படைகளால் தன்னிச்சையாக தடுத்து வைத்தல், இணைய முடக்கம், ஊழல் உள்ளிட்ட மனித உரிமை பிரச்சினைகள் சிறிலங்காவில் தொடருகின்றன.

காணாமல் ஆக்கப்பட்ட தமது கணவன் பற்றிய தகவலை தேடும் பெண்களும், கணவனை இழந்த பெண்கள் நன்மைகளைப் பெற முனையும் போதும், சிறிலங்கா பாதுகாப்புத் துறை அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

சிறிலங்கா காவல்துறை தொடர்ச்சியாக சித்திரவதைகளில் ஈடுபட்டு வருகிறது.” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பம்பியோ நேற்று முன்தினம் வெளியிட்டார்.

http://www.puthinappalakai.net/2019/03/15/news/36890

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.