Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவிற்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கியது இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவிற்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கியது இந்தியா

பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்குவதில்லை என்ற உறுதிமொழிகளை மீறி சிறிலங்காவிற்கு இந்திய மத்திய அரசாங்கம் உயர் ரக வெடிமருந்து மற்றும் ரிபிரி வகை 40 மி.மீ எறிகணை செலுத்திகளுக்குரிய குண்டுகள் உட்பட பெரும் தொகையான பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை வழங்கியுள்ளது.

மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கோரிக்கைகளையும் மத்திய அரசாங்கம் இதன் மூலம் புறக்கணித்துள்ளது.

சிறிலங்காவிற்கு ஆபத்துக்கள் அற்ற தற்பாதுகாப்பு உபகரணங்களையே வழங்குவது என்ற உறுதிமொழிகளில் இருந்து மீறிய மத்திய அரசாங்கம் பின்வரும் நாசகார ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளது.

அந்த ஆயுதங்களின் விபரம்:

கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்கள் - 30

'வாரகா' என்ற கரையோர ரோந்துக் கப்பல் - 01

40 மி.மீ எறிகணை செலுத்திக்கான குண்டுகள்

உயர் ரக வெடிபொருட்கள் - 60

பாதுகாப்பு உடைகள் - 2,000

குண்டுதுளைக்காத உடற்கவசம் - 4500

பிளாக் உடைகள் - 2,800

பாதுகாப்பு தலைக்கவசங்கள் - 3,245

குண்டுப் பாதுகாப்பு வாகனங்கள் - 10

25 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உறைநிலை கொள்கலன்கள்

சிறிய உளவு இயந்திரங்கள்

குண்டு துளைக்காத வாகனங்கள் - 10

இரவுப்பார்வைச் சாதனங்கள் - 400

கண்ணிவெடிப் பாதுகாப்பு வாகனங்கள் - 50

3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தொலைத்தொடர்பு சாதனங்கள் இவற்றில் இன்ரெல் பி -4 கணணிகள், அவற்றுடனான யுஎஸ்பி 200

உயர் அலைவரிசை கொண்ட தொடர்பு சாதனங்கள் - 35

மின் நிறுத்த பலகைகள் - 25

பாதுகாப்பான தளங்கள் - 35,

யுஎச்எஃப் கையடக்க சாதனங்கள் - 350 என்பன இதில் அடங்கும்.

பொறியியல் சாதனங்களை கொண்ட 1.2 மில்லியன் டொலர் பொருட்களும், 4.4 மில்லியன் டொலர் பெறுமதியான உடைகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 8,550 குண்டுதுளைக்காத உடற்கவசங்கள், 12,300 பிளாக் உடைகள், 22,733 பாதுகாப்பு தலைக்கவசங்கள் என்பன வழங்கப்பட்டன.

இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டிக்கு நாசகார ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கத்துக்கு வழங்கி அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிறிலங்காவினால் நடத்தப்பட்டு வரும் கொடூரமான போரை உக்கிவித்து வருவது மிகவும் வருந்தத்தக்கது என அவதானிகள் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.

- புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவிற்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கியது இந்தியா

பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்குவதில்லை என்ற உறுதிமொழிகளை மீறி சிறிலங்காவிற்கு இந்திய மத்திய அரசாங்கம் உயர் ரக வெடிமருந்து மற்றும் ரிபிரி வகை 40 மி.மீ எறிகணை செலுத்திகளுக்குரிய குண்டுகள் உட்பட பெரும் தொகையான பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை வழங்கியுள்ளது.

மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கோரிக்கைகளையும் மத்திய அரசாங்கம் இதன் மூலம் புறக்கணித்துள்ளது.

சிறிலங்காவிற்கு ஆபத்துக்கள் அற்ற தற்பாதுகாப்பு உபகரணங்களையே வழங்குவது என்ற உறுதிமொழிகளில் இருந்து மீறிய மத்திய அரசாங்கம் பின்வரும் நாசகார ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளது.

அந்த ஆயுதங்களின் விபரம்:

கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்கள் - 30

'வாரகா' என்ற கரையோர ரோந்துக் கப்பல் - 01

40 மி.மீ எறிகணை செலுத்திக்கான குண்டுகள்

உயர் ரக வெடிபொருட்கள் - 60

பாதுகாப்பு உடைகள் - 2,000

குண்டுதுளைக்காத உடற்கவசம் - 4500

பிளாக் உடைகள் - 2,800

பாதுகாப்பு தலைக்கவசங்கள் - 3,245

குண்டுப் பாதுகாப்பு வாகனங்கள் - 10

25 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உறைநிலை கொள்கலன்கள்

சிறிய உளவு இயந்திரங்கள்

குண்டு துளைக்காத வாகனங்கள் - 10

இரவுப்பார்வைச் சாதனங்கள் - 400

கண்ணிவெடிப் பாதுகாப்பு வாகனங்கள் - 50

3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தொலைத்தொடர்பு சாதனங்கள் இவற்றில் இன்ரெல் பி -4 கணணிகள், அவற்றுடனான யுஎஸ்பி 200

உயர் அலைவரிசை கொண்ட தொடர்பு சாதனங்கள் - 35

மின் நிறுத்த பலகைகள் - 25

பாதுகாப்பான தளங்கள் - 35,

யுஎச்எஃப் கையடக்க சாதனங்கள் - 350 என்பன இதில் அடங்கும்.

பொறியியல் சாதனங்களை கொண்ட 1.2 மில்லியன் டொலர் பொருட்களும், 4.4 மில்லியன் டொலர் பெறுமதியான உடைகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 8,550 குண்டுதுளைக்காத உடற்கவசங்கள், 12,300 பிளாக் உடைகள், 22,733 பாதுகாப்பு தலைக்கவசங்கள் என்பன வழங்கப்பட்டன.

இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டிக்கு நாசகார ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கத்துக்கு வழங்கி அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிறிலங்காவினால் நடத்தப்பட்டு வரும் கொடூரமான போரை உக்கிவித்து வருவது மிகவும் வருந்தத்தக்கது என அவதானிகள் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.

- புதினம்

அட ராமா! இவ்வளவும் எங்களுக்கா? தம்பி மார், பெரிய கொன்ரய்னறாகத் தயார் பண்ணுங்கோ!

அட ராமா! இவ்வளவும் எங்களுக்கா? தம்பி மார், பெரிய கொன்ரய்னறாகத் தயார் பண்ணுங்கோ!

அதேதான் இதில பாதியையச்சும் எங்ககிட்டத்தானே கொடுப்பாங்கள்

அப்போ பாத்துக்கலாம் ஆபத்தானத இல்லைய எண்டு அவன் மேலையே போட்டு :mellow:

ஜஸ்ரின் உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு

மத்திய அரசாங்கம் த்ன் நாட்டு மக்களின் கோரிக்கையையே கொச்சைபடுத்திவிட்டது

சிறிலங்காவுக்கு பேரழிவு ஆயுதங்கள்: இந்திய அரசுக்கு மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம்.

சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் பேரழிவு ஆயுதங்களை வழங்கியுள்ளமைக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராணுவ தாக்குதல்களை நிறுத்துங்கள்; மனித உரிமைகளை மதித்து நடங்கள்; ஈழத் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளை வழங்குவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் முதல் போப் ஆண்டவர் வரையில் உலகத் தலைவர்கள் எல்லோரும் இலங்கை அரசை வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நாள்தோறும் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிங்கள இனவாத அரசு மேலும் மேலும் தன்னுடைய ராணுவத் தாக்குதல்களுக்காகத் தளவாடங்களை வாங்கிக் குவித்துக் கொண்டு வருகிறது. இலங்கையில் தமிழர்களை பூண்டோடு அழித்துவிட வேண்டும்; தமிழ் இனமே அங்கே இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வரும் இலங்கை அரசுக்கு இந்தியாவும் பேரழிவு ஆயுதங்களை வழங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி உலகத் தமிழர்களையெல்லாம் திடுக்கிட வைத்திருக்கிறது.

இலங்கைக்கு எத்தகைய ராணுவ உதவிகளையும் வழங்க மாட்டோம் என்று அளித்த உறுதிமொழி இதன் மூலம் மீறப்பட்டிருக்கிறது. இந்தியா வழங்கியுள்ளதாக வெளிவந்திருக்கும் இந்த ஆயுத உதவி இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவாத அரசின் கொடிய போரை மேலும் ஊக்குவிக்கும். செஞ்சோலை கொடுமைகள் தொடரும்; அகதி முகாம்கள் குண்டு வீசி அழிக்கப்படும்; ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே குடியிருக்க இடமில்லாமல் அலறி ஓடு அவலம் பெருகும்.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ராணுவ உதவிகள், பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் அல்ல என்றும், பாதுகாப்புத் தேவைக்கான தளவாடங்கள் மட்டுமே என்றும் இந்திய அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளிவந்திருக்கிறது. இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆயுதங்கள் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களா அல்லது பாதுகாப்புத் தேவைக்கான தளவாடங்களா என்பது பிரச்சினை அல்ல.

ஈழத் தமிழர்களோடு பேச்சுவார்த்தை நடத்த மறுத்து மூர்க்கத்தனமாக அவர்கள் மீது ராணுவத் தாக்குதலை நடத்தி வரும் சிங்கள இனவாத அரசுக்கு எத்தகைய ராணுவ உதவிகளையும் வழங்க கூடாது. இது ஒட்டுமொத்த இந்தியத் தமிழர்களின் கோரிக்கையாகும். இங்குள்ள ஆறரைக் கோடி தமிழர்களின் கோரிக்கையையும், அவர்களது உணர்வுகளையும் இந்திய அரசு உதாசீனப்படுத்த விடக்கூடாது.

இந்தியாவை பகை நாடாகக் கருதும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவில் ஆயுதங்களையும், போர் விமானங்களையும் வாங்கிக் குவித்து வரும் இலங்கைக்கு இந்தியாவும் ராணுவ உதவிகளை வழங்கும் செயலைத் தமிழ் இனத்திற்கே எதிரான நடவடிக்கை என்று தான் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கருதுவார்கள்.

இந்தப் பழி இந்தியாவின் தலையில் விழுந்து விடக் கூடாது.

இலங்கைக்கு எத்தகைய ராணுவ உதவியையும் வழங்க மாட்டோம் என்று அளித்திருக்கும் வாக்குறுதியை இந்திய அரசு தொடர்ந்து காப்பாற்றி வர வேண்டும்.

அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவோம் என்ற உறுதியை இந்திய அரசிடமிருந்து பெறத் தாய்த் தமிழகத்துத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் தமிழகத்தின் ஆழ்ந்த நித்திரையும், தமிழகத் தலைவர்களின் மவுனமும் கலைய வேண்டும். அதற்கான தருணம் வந்துவிட்டது. இந்தத் தருணத்தைத் தவறவிட்டால் இலங்கையில் நம்முடைய சகோதரர்களான ஈழத் தமிழர்கள் அடியோடு அழிக்கப்பட்டு விடுவார்கள். அதன் பிறகு அவர்களுக்காக ஒரு அனுதாபக் கூட்டம் நடத்துவதில் எந்தப் பயனுமில்லை.

எனவே இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த இங்குள்ள ஆறரைக் கோடி தமிழர்களும், அவர்களை வழி நடத்துகிற அரசியல் இயக்கங்களும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்குப் பிரதிநிதித்துவம் வகிக்கும் தமிழக அரசும், அதனை வழி நடத்துகின்ற முதல்-அமைச்சர் கருணாநிதியும் காலம் தாழ்த்தாமல் ஈழத் தமிழர்களை காக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

அன்றாடம் செத்து மடிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் இங்குள்ள தாயகத்துத் தமிழர்களைத் தான் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது நம்பிக்கையை சிதறடித்து விடக்கூடாது. இங்குள்ள தமிழர்கள் செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். ஈழத் தமிழர்களைக் காப்போம்.

இதில் ஒரு நாளைக் கூட வீணடிக்கக் கூடாது. வீணடிக்கும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்கள் செத்து மடியும் ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்து அனைவரும் செயல்படுவோம் என்று மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

-Puthinam-

சிறீலங்காவிற்கு ஆயுதம் வழங்கக்கூடாது - மருத்துவர் ராமதாஸ்

சிறீலங்கா அரசிற்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை, இந்திய மத்திய அரசு அலட்சியம் செய்யக்கூடாது என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறீலங்கா அரசிற்கு இந்திய அரசாங்கம் மீண்டும் ஆயுதங்கள் வழங்கியிருப்பதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியான நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டு வருவதால், சிறீலங்கா அரசிற்கு ஆயுதம் வழங்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை இந்திய மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் பேச மறுக்கும் சிறீலங்கா அரசாங்கம், தமிழ் மக்கள் மீது மோசமான ஆக்கிரமிப்புத் தாக்குதலை மேற்கொண்டு வருவதால், தமிழ்நாடு, மற்றும் தமிழீழ மக்களுக்கு இடையிலுள்ள உறவையும், ஆயுதம் வழங்கக் கூடாது என்ற தமது கோரிக்கையையும் மத்திய அரசு உதாசீனம் செய்யக் கூடாது எனவும் ராமதாஸ் கேட்டுள்ளார்.

நன்றி பதிவு

இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதில்லையென

மத்திய அரசு உடனடியாக உத்தரவாதம் தரவேண்டும்

பாட்டாளி மக்கள் கட்சி இராமதாஸ் கோரிக்கை

சென்னை,ஏப்.22

இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கு வதில்லை என்று மத்திய அரசு உத் தரவாதம் வழங்க வேண்டும். தமிழ கத் தமிழர்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் மத்திய அரசு அலட்சிப்படுத்தக் கூடாது; புறந்தள்ளிவிடக் கூடாது.

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் புது டில்லி மத்திய அரசின் பங்காளிக் கட்சி யான பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்தாப கர் எஸ்.இராமதாஸ்.

இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா பேரழிவு ஆயுதங்களை வழங்குவதாக வெளிவந்த செய்தி உலகம் எங்கணும் பரந்து வாழும் தமிழர்களை அதிர்ச்சியுற வைத்துள்ளது. இத்தகைய நடவடிக்கை கள் இலங்கை அரசின் இன அழிப்புப் போரை ஊக்குவிப்பதுடன், இலங்கைத் தமிழர்களை அகதிகளாக மாற்றுவதற்கே உதவும் என்றும் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் திருக்கிறார்.

இலங்கை அரசுக்கு இந்தியா பேரழிவு ஆயுத உதவி செய்வது தமிழர் விரோதச் செயற்பாடு என்றே எல்லாத் தமிழர்களும் கருதுகிறார்கள். தமிழகத் தலைவர்கள் தங் கள் மௌனத்தைக் கலைத்து, இலங்கைத் தமிழர்களின் இன அழிப்புக்கு உதவும் இந்தியாவின் ஆயுத விநியோகத்துக்கு எதி ராகக் குரல் கொடுக்கவேண்டும். இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்குமாறு முதல்வர் கருணாநிதி மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளவேண்டும்

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் புனித பாப்பரசர் போன்ற உலகத் தலைவர்கள் தமிழர்களுக்கு எதிரான இராணுவத் தாக்கு தல்களை நிறுத்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்குமாறு கேட்டுக்கொண்ட போதிலும், இலங்கை அரசு தனது இராணு வத் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின் றது

தமிழகத்து மக்களும் தலைவர்களும் இவ் விடயத்தில் உடனடியாகச் செயற்படா விடின், இலங்கையில் வாழும் தமிழகச் சகோதரர்கள் இன ஒழிப்புக்கு ஆளாகுவர். அதன் பின்னர் இரங்கல் கூட்டங்கள் நடத்து வதால் பலனில்லை என்றும் டாக்டர் இராமதாஸ் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டி உள்ளார்.

உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவிற்கு இந்தியா ஆயுத உதவி - உலகத்தமிழர்களை திடுக்கிட வைக்கிறது - ராமதாஸ் Written by Ramanan - Apr 22, 2007 at 10:21 AM

இலங்கை அரசுக்கு இந்தியாவும் பேரழிவு ஆயுதங்களை வழங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி உலகத் தமிழர்களையெல்லாம் திடுக்கிட வைத்திருக்கிறது. இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சி்ங்கள அரசிற்கு போராயுதங்களை இந்தியா வழங்கியுள்ளமை தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:

இராணுவ தாக்குதல்களை நிறுத்துங்கள், மனித உரிமைகளை மதித்து நடங்கள், ஈழத் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளை வழங்குவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் முதல் போப் ஆண்டவர் வரையில் உலகத் தலைவர்கள் எல்லோரும் இலங்கை அரசை வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் நாள்தோறும் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிங்கள இனவாத அரசு மேலும் மேலும் தன்னுடைய இராணுவத் தாக்குதல்களுக்காகத் தளவாடங்களை வாங்கிக் குவித்துக் கொண்டு வருகிறது.

இலங்கையில் தமிழர்களை பூண்டோடு அழித்துவிட வேண்டும் தமிழ் இனமே அங்கே இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வரும் இலங்கை அரசுக்கு இந்தியாவும் பேரழிவு ஆயுதங்களை வழங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி உலகத் தமிழர்களையெல்லாம் திடுக்கிட வைத்திருக்கிறது.

இலங்கைக்கு எத்தகைய இராணுவ உதவிகளையும் வழங்க மாட்டோம் என்று அளித்த உறுதிமொழி இதன் மூலம் மீறப்பட்டிருக்கிறது. இந்தியா வழங்கியுள்ளதாக வெளிவந்திருக்கும் இந்த ஆயுத உதவி இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவாத அரசின் கொடிய போரை மேலும் ஊக்குவிக்கும். செஞ்சோலை கொடுமைகள் தொடரும் அகதி முகாம்கள் குண்டு வீசி அழிக்கப்படும் ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே குடியிருக்க இடமில்லாமல் அலறி ஓடு அவலம் பெருகும்.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ உதவிகள், பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் அல்ல என்றும், பாதுகாப்புத் தேவைக்கான தளவாடங்கள் மட்டுமே என்றும் இந்திய அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளிவந்திருக்கிறது. இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆயுதங்கள் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களா அல்லது பாதுகாப்புத் தேவைக்கான தளவாடங்களா என்பது பிரச்சினை அல்ல.

ஈழத் தமிழர்களோடு பேச்சுவார்த்தை நடத்த மறுத்து மூர்க்கத்தனமாக அவர்கள் மீது இராணுவத் தாக்குதலை நடத்தி வரும் சிங்கள இனவாத அரசுக்கு எத்தகைய இராணுவ உதவிகளையும் வழங்க கூடாது. இது ஒட்டுமொத்த இந்தியத் தமிழர்களின் கோரிக்கையாகும். இங்குள்ள ஆறரைக் கோடி தமிழர்களின் கோரிக்கையையும், அவர்களது உணர்வுகளையும் இந்திய அரசு உதாசீனப்படுத்த விடக்கூடாது.

இந்தியாவை பகை நாடாகக் கருதும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவில் ஆயுதங்களையும், போர் விமானங்களையும் வாங்கிக் குவித்து வரும் இலங்கைக்கு இந்தியாவும் இராணுவ உதவிகளை வழங்கும் செயலைத் தமிழ் இனத்திற்கே எதிரான நடவடிக்கை என்று தான் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கருதுவார்கள்.

இந்தப் பழி இந்தியாவின் தலையில் விழுந்து விடக்கூடாது.

இலங்கைக்கு எத்தகைய இராணுவ உதவியையும் வழங்க மாட்டோம் என்று அளித்திருக்கும் வாக்குறுதியை இந்திய அரசு தொடர்ந்து காப்பாற்றி வர வேண்டும்.

அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவோம் என்ற உறுதியை இந்திய அரசிடமிருந்து பெறத் தாய்த் தமிழகத்துத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் தமிழகத்தின் ஆழ்ந்த நித்திரையும், தமிழகத் தலைவர்களின் மவுனமும் கலைய வேண்டும். அதற்கான தருணம் வந்துவிட்டது. இந்தத் தருணத்தைத் தவறவிட்டால் இலங்கையில் நம்முடைய சகோதரர்களான ஈழத் தமிழர்கள் அடியோடு அழிக்கப்பட்டு விடுவார்கள். அதன் பிறகு அவர்களுக்காக ஒரு அனுதாபக் கூட்டம் நடத்துவதில் எந்தப் பயனுமில்லை.

எனவே இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த இங்குள்ள ஆறரைக் கோடி தமிழர்களும், அவர்களை வழி நடத்துகிற அரசியல் இயக்கங்களும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்குப் பிரதிநிதித்துவம் வகிக்கும் தமிழக அரசும், அதனை வழி நடத்துகின்ற முதலமைச்சர் கருணாநிதியும் காலம் தாழ்த்தாமல் ஈழத் தமிழர்களை காக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

அன்றாடம் செத்து மடிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் இங்குள்ள தாயகத்துத் தமிழர்களைத் தான் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது நம்பிக்கையை சிதறடித்து விடக்கூடாது. இங்குள்ள தமிழர்கள் செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். ஈழத் தமிழர்களைக் காப்போம்.

இதில் ஒரு நாளைக் கூட வீணடிக்கக் கூடாது. வீணடிக்கும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்கள் செத்து மடியும் ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்து அனைவரும் செயல்படுவோம்

சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவுக்கு இந்தியாவால் ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளையடுத்து ராமதாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்

ஸ்ரீலங்கா அரசிற்கு இந்தியா ஆயுதங்களை வழங்கி இருப்பதாக வெளியான செய்திகளையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தமிழர்களை அடியோடு அழித்துவிட வேண்டும்;, தமிழ் இனமே அங்கு இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஸ்ரீலங்காவுக்கு -இந்தியா, பேரழிவு ஆயுதங்களை வழங்கியிருப்பதாகச் செய்தி வெளிவந்துள்ளது.

இதன்மூலம், ஏற்படும் ஆபத்தைத் தடுத்து நிறுத்தவும், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றவும், காலம் தாழ்த்தாமல் மத்திய அரசை முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு எத்தகைய ராணுவ உதவிகளையும் வழங்க மாட்டோம் என்று மத்திய அரசு அளித்த உறுதிமொழி இதன்மூலம் மீறப்பட்டுள்ளது.

இந்தியா வழங்கியுள்ளதாக வெளிவந்திருக்கும் இந்த ஆயுத உதவி, இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவாத அரசின் கொடிய போரை மேலும் ஊக்குவிக்கும் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆயுதங்கள் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களா அல்லது பாதுகாப்புத் தளபாடங்களா என்பது பிரச்சினை அல்ல.

ஈழத் தமிழர்களோடு பேச்சுவார்த்தை நடத்த மறுத்து மூர்க்கத்தனமாக அவர்கள் மீது இராணுவத் தாக்குதலை நடத்தி வரும் சிங்கள இனவாத அரசுக்கு எத்தகைய இராணுவ உதவிகளையும் வழங்கக் கூடாது என ராமதாஸ் மேலும் கூறியுள்ளார்.

- தமிழ் கனேடியன்

நல்ல தொட்டிலயும் ஆட்டி பிள்ளையும் ஆட்டுங்கோ பாப்பம் எதுவரைக்கும் உந்த ஆட்டுற வேலையள் எண்டு

இததான் ஆதியிலருந்து நாங்க சொல்லிக்கிட்டு இருக்கோம்.

இந்தியா அரசாங்கத்திர்க்கு இதெல்லாம் சகசமம்ப்பா.

யார நம்பினாலும் அரசியல்வாதிகள நம்பாதிங்க,

  • கருத்துக்கள உறவுகள்

நாய் வாலை நிமிர்த்த முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தாய்த்தமிழகத் தமிழர்கள் இதை எதிர்க்காமல் இல்லை. ஆனால் பதவியிலிருக்கும் தமிழகத் தலைவர்கள் தான் வேறு திட்டம் வைத்திருப்பதாகத் தெரிகிறது. ஒரு வேளை சிங்கள இராணுவம் புலிகளை வென்று விட்டால் அவர்களால் தமிழகத்தில் அடிக்கடி உருவாகும் தமிழின உணர்வுகள் அடங்கி மக்களை மந்தைகள் போல் ஆட்சி செய்ய வழி பிறக்கும் என நினைக்கிறார்களோ என்னவோ!இல்லா விட்டால் தமிழக முதல்வர் தனது மாநில மக்களே கொல்லப்படும்போதும் பிரதமருக்குக் காதல் மடல் வரைந்து கொண்டிருப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா இதில் ஒரு சந்தேகம் அதாவது தமிழ் நாட்டு அரசை மத்திய அரசு ஏமாற்றுகிறதா? அல்லது தமிழ் நாட்டரசும் சேர்ந்து எல்லோருக்கும் காதில் பூ வைக்கிறதா? இது எனது தனிப்பட்ட சந்தேகம்.

ஜயா இதில் ஒரு சந்தேகம் அதாவது தமிழ் நாட்டு அரசை மத்திய அரசு ஏமாற்றுகிறதா? அல்லது தமிழ் நாட்டரசும் சேர்ந்து எல்லோருக்கும் காதில் பூ வைக்கிறதா? இது எனது தனிப்பட்ட சந்தேகம்.

யோசிக்க வேண்டிய விடயம் .

இந்தியாவுக்கு மிக்க நன்றிகள், உங்கள் பிரச்சனை விளங்குகிறது...

இலங்கையின் நமச்சல் தாங்கமுடியாமல் இருக்கிறது, ஒரு விதமாக பயப்படுத்துகிறான்..

நீ இல்லாட்டால் பாகிஸ்தான் அல்லது சீனாவிட்ட போவேன் என்கிறான், வெருட்டுகிறான்...

இன்னொரு பக்கம் தமிழ்னாடுக்கு பயம்...

ஒரு வழியாக புலிகளிடம் கொடுக்க வெட்கப்பட்டு...

இலங்கை மூலம் புலிகளுக்கு கிடைக்கும் என உறுதிபடுத்தி கொடுத்துள்ளாய்....

எதுக்கும் வாழ்த்துக்கள் உனது சமனிலை போக்கிற்கு>>> :P :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரை நம்பினாலும் வடக்கத்தியானை நம்பக்கூடாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

for all this only indian brahmins are responsible--they want to rule always,if we destroy ramarbridge

then this people will be quiet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரை நம்பினாலும் வடக்கத்தியானை நம்பக்கூடாது

இந்த இனவாத வசனம் தேவையா? நீங்கள் முதலில் திருந்துங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இனவாத வசனம் தேவையா? நீங்கள் முதலில் திருந்துங்கள்.

இது தேவைதான் நான் ஹிந்தியன்களை(வட இந்தியர்களை) தான் கோவிச்சுக்கிறேன் தமிழர்கள் என் சகோதரர்கள்தான். மன்மோகன் சிங் வட இந்தியன் என்பதால் தான் சிங்களத்துக்கு உதவுகிறான். சோனியா இத்தாலிக்காரி என்பதால் எம் பிரச்சனையில் அவருக்கு அக்கறை இல்லை. இவர்களுக்கு ஆமாம் போட சில பார்ப்பணர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.