Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணீருடன் கல்லடி பாலத்தில் கூடிய காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ; ஸ்தம்பித்தது மட்டக்களப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீருடன் கல்லடி பாலத்தில் கூடிய காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ; ஸ்தம்பித்தது மட்டக்களப்பு

தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தாலும், கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் இன்று செவ்வாய்க்கிழமை (19) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

batti__1_.jpg

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த கவனஈர்ப்பு பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், ஞா. சிறிநேசன், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி. விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சி செயலாளருமான கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு தமிழ் இளைஞர்கள் சமூக அமைப்பும் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணி உள்ளிட்ட ஏனைய அமைப்புகளும், பொது அமைப்புக்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

batti__3_.jpg

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை தாங்கியதாக பேரணி காந்தி பூங்கா வரையில் சென்றது.  காந்தி பூங்காவினை பேரணி சென்றடைந்ததும் அங்கு கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

batti__4_.jpg

போராட்டங்களை நடத்தி செல்லும் போது அது தொடர்பாக கவனம் செலுத்தாத ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் தமது பிரச்சினையை உள்ளூர் பொறிமுறையில் தீர்க்கப்போவதாக தெரிவித்திருப்பதானது தமக்கு பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் குடும்பசங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

batti__5_.jpg

தமக்கான நீதியை இந்த அரசாங்கம் வழங்கும் என்ற நம்பிக்கை தங்களிடம் தற்போது சிறிதும் இல்லை எனவும் தமக்கான தீர்வினை சர்வதேசம் தலையீடு செய்வதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

batti__6_.jpg

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமது பிள்ளைகள் வாழ்ந்து வருவதாகவும் தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் எவ்வாறாயினும் தமக்கு நீதி கிடைக்கும் வரையில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

batti__7_.jpg

மட்டு.நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் இன்றைய ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவை தெரிவித்து தங்களது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

batti__11_.jpg

batti__12_.jpg

 

http://www.virakesari.lk/article/52245

 

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஒலித்த அழுகுரல்கள்

 
March 19, 2019

IMG_2172.jpg?resize=800%2C600

ஐநாவில் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதனையும் சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி இன்று (19.03.2019) செவ்வாய்க்கிழமை கிழக்கில் மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

 

இதன் போது கல்லடி பாலத்தில் இருந்து குறித்த பேரணி ஆரம்பமாகி பின்னர் ரயில் நிலைய வீதி ஊடாக கடந்து காந்தி பூங்கா வரை சென்றடைந்தது.

தொடர்ந்து அங்கு ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மக்கள் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு தத்தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அதிகளவான பொதுநிறுவனங்கள் வர்த்தக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டிருந்தன.எனினும் பொதுபோக்குவரத்து வழமை போன்று இயங்கியதை காண முடிந்தது.ஆனால் திருகோணமலை அம்பாறை மாவட்டங்கள் வழமை போன்று இயல்பு நிலையில் இயங்கியதுடன் பொது நிறுவனங்கள் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.

IMG_2185.jpg?resize=800%2C600IMG_2188.jpg?resize=800%2C600IMG_2192.jpg?resize=800%2C600IMG_2198.jpg?resize=800%2C600IMG_2204.jpg?resize=800%2C600IMG_2262.jpg?resize=800%2C600IMG_2280.jpg?resize=800%2C600IMG_2296.jpg?resize=800%2C600IMG_2302.jpg?resize=800%2C600IMG_2307.jpg?resize=800%2C600

பாறுக் ஷிஹான்

http://globaltamilnews.net/2019/116421/

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்களின் அவலங்கள் அபிவிருத்தியினாலும், சுமூக வாழ்வினாலும் குறைந்துவிடப்போவதில்லை. புலம்பேர் புலிவால்களின் தூண்டுதல் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன, அவர்களின் இந்தப் போராட்டம் தொடரத்தான் போகிறது. 

இப்போராட்டங்களைப் புலம்பேர் புலிவால்களின் கைங்கரியம் என்று போர்வையிட்டுத் தட்டுக்கழிப்பவர்களின் நோக்கம் ஈடேறுவது நடக்கப்போவதில்லை.

அபிவிருத்தியும் சுமூக வாழ்வும் முற்றான ஆக்கிரமிப்பில் வாழ்ந்துகொண்டு , தமது உறவுகளைத் தொலைத்துவிட்டு இன்றுவரை அவர்களைத் தேடும் மக்களின் காதுகளில் ஏறப்போவதில்லை.

யாவும் நலம் என்று தமக்குத்தாமே சொல்லிக்கொண்டு வாழ எத்தனிக்கும் கனவான்களுக்கு இந்த மக்களின் அவலம் புரியப்போவதுமில்லை, அதற்கான தேவையுமில்லை. ஏனென்றால், இம்மக்களின் இந்த ஓயாத அவலக்குரலே இன்றிருக்கும் அமைதியைச் சீர்குலைத்துவிடும், யுத்தமென்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள், இது உலகத்தில் நடக்காததா? ஆகவே, இதெல்லாவற்றையும் தூரத்தே எறிந்துவிட்டு, வேலையைப் பார்ப்பீர்களா? என்று அவர்கள் கேட்கிறார்கள். இம்மக்களின் இந்த புலம்பேர் புலிவால்த் தூண்டுதல்ப் போராட்டங்கள் சிங்களவர்களின் மனதைக் காயப்படுத்தி, அவர்களைக் கோபப்படுத்திவிடும் என்று இந்தக் கனவான்கள் அஞ்சுகிறார்கள். ஆகவே, இந்த போராட்டங்களுக்கெல்லாம் காரணமான அந்த "புலம்பேர் புலிவால்கள்" மீது இக்கனவான்களுக்கு கட்டுக்கடங்காத கோபம் வருவதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.

17 hours ago, கிருபன் said:

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி. விக்னேஸ்வரன்,

இவர் ஒரு கட்சியின் தலைவராக கிழக்கு மாகாணம் சென்று மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டதை பாராட்டலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.