Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்து தனது பாவங்களை கழுவுவதற்கு வத்திகான் வந்து சேர்ந்தது!

Featured Replies

r3920905732yw8.jpg

r1913676256cd6.jpg

r1142120992dg7.jpg

r833560254rw9.jpg

Pope Benedict XVI மேலே மகிந்துவுடன் படங்களில் காணப்படுகின்றார்.

படங்கள் மூலம்: Reuters, நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் குருதி மழை பெய்ய படையணிப்பிய (நேட்டோ) இத்தாலியின் பாவத்தை கழுவவே வத்திக்கானுக்கு வக்கில்ல.. அப்புறம் மகிந்தவின் பாவத்தை..! இறைமகன் ஜேசுவை வைச்சே பாவிகள் பிழைப்பு நடத்த வெளிக்கிட்டு விட்டார்கள்..! சர்வதேச மன்னிப்புச்சபையே சிறீலங்காவின் மனித உரிமைகள் மோசமடைந்துள்ளது என்று அறிக்கை தந்தும் வத்திக்கான் அந்நாட்டின் அதிபரை சந்தித்ததானது.. வத்திக்கானும் மனிதப்படுகொலைகளை கண்டு பாராமுகமா உள்ளது என்பதைத் தானே காட்டுகிறது..!

அண்மையில் அமெரிக்க கிறிஸ்தவ அமைப்பொன்று சிறீலங்காவில் கிறிஸ்தவர்களின் உரிமை மோசமாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்ததையும் இங்கு சுட்டிக்காட்டலாம்..! :lol::o:lol:

இத்தாலியில் வாழும் புலம்பெயர்ந்த தூங்கு தமிழர்கள் இன்னும் விழிச்செழும்பவில்லையா.. குறட்டை விட்டது காணும் எழும்புங்கோ..! ஒரு கறுப்புப்பட்டி போராட்டமாவது வத்திக்கானுக்கு வெளியில் நடத்தக் கூட நாதியில்லையா..??! :o:lol::D

http://www.persecution.org/suffering/count...try=Sri%20Lanka

Edited by nedukkalapoovan

... வத்திக்கானும் மனிதப்படுகொலைகளை கண்டு பாராமுகமா உள்ளது என்பதைத் தானே காட்டுகிறது..! :D:lol::lol:

அப்ப வத்திக்கானுக்கு நாங்கள் அனுப்பிய ஈமெயில் எல்லாம் வீணா ?

இரண்டு பேரும் ஒரே துணியில் சால்வை தைச்சுவேற போட்டிருக்கினம்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப வத்திக்கானுக்கு நாங்கள் அனுப்பிய ஈமெயில் எல்லாம் வீணா ?

இரண்டு பேரும் ஒரே துணியில் சால்வை தைச்சுவேற போட்டிருக்கினம்......

லிசான் அவர்களே,

உங்களது வார்த்தை சிரிப்பை வரவழைத்தாலும் பாப்பரசர், மகிந்தவை சந்திக்க மறுப்புத் தெரிவித்திருக்கலாம் என்பதே என் விருப்பமும்! கருத்தும்!

என்ன செய்ய! இயேசுபிரான் " இவர்கள் அறியாமல் பாவம் செய்கின்றார்கள் இவர்களை மன்னியும்" என்றே சொல்லி இருக்கின்றார். அதனால் சந்தித்திருப்பாரோ என்னவோ!.

ஆண்டவனிடத்தில் பாவிகள் பலரும் அப்பாவிகள் சிலரும் உள்ளனர்.அவர்களுடன் மகிந்தாவும் தான்,ஆண்டவன் யாரையும் பிறித்துப்பார்பதில்லை தானே அதுதான் என்னவோ!.மகிந்தா வத்திக்கான் வந்ததின் நோக்கமே பாவமன்னிப்பு கேட்கத்தான் கேட்டுவிட்டு போ! ஆனால் மீண்டும் பாவங்களை செய்யாதே.என்றாலும் வெட்கக்கேடு ஒரு பெளத்தராகிய நீ உன் சமயத்தில் நம்பிக்கையிழந்து ரோமன் கத்தோலிக்க மதத்தின் மேலுள்ள அபார நம்பிக்கையால் அவர்களின் புனிதபூமியாம் வத்திக்கானில் வந்து உன் பாவங்களை கழுவிச் செல்வதாவது எங்கேயோ உதைக்க வேண்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் ஜயா செய்த பாவம் கழியவேனும் என்றால் ஒரே ஒரு வழிதான் உண்டு, அதை வெளிப்படையாக சொல்ல முடியாது. இப்போதைக்கு அவர் எங்கே வேனுமென்றாலும் போய்வரட்டும், யாரை வேனுமென்றாலும் சந்தித்துவிட்டு வரட்டும் கதிர்காமர் போகாத இடமா? சந்திக்காத பிரபலங்களா? ஆடும் மட்டும் ஆடட்டும் எவ்வளவு காலத்திற்க்கு உந்த ஆட்டம்? பிணந்தின்னி கூட்டம்.

மகிந்தர் ஜயா செய்த பாவம் கழியவேனும் என்றால் ஒரே ஒரு வழிதான் உண்டு, அதை வெளிப்படையாக சொல்ல முடியாது. இப்போதைக்கு அவர் எங்கே வேனுமென்றாலும் போய்வரட்டும், யாரை வேனுமென்றாலும் சந்தித்துவிட்டு வரட்டும் கதிர்காமர் போகாத இடமா? சந்திக்காத பிரபலங்களா? ஆடும் மட்டும் ஆடட்டும் எவ்வளவு காலத்திற்க்கு உந்த ஆட்டம்? பிணந்தின்னி கூட்டம்.

போய்விட்டார் :lol:

பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு மகிந்தவிடம் போப் ஆண்டவர் கோரிக்கை.

சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்த போப் ஆண்டவர் பெனடிக், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டிய தேவை மற்றும் அண்மையில் அதிகரித்துள்ள மோதல்களை நிறுத்தி மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்து உரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் இராணுவ வளங்களை அழிக்கப்போவதாக கூறிக்கொண்டு போரை நடத்தி வரும் பெரும்பான்மை சிங்கள மக்களின் அரசாங்கத்தை போப் ஆண்டவர் மற்றும் வத்திக்கானின் வெளிவிவகாரத்துறை செயலாளர் கார்டினல் ராசிசிஓ பேர்ரோன் ஆகியோர் சந்தித்ததாக வத்திக்கான் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மனித உரிமைகள் மதிக்கப்படுவதும், மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிப்பதும் தான் நாட்டில் இடம்பெற்று வரும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரே வழியாகும் என இந்த சந்திப்பில் போப் ஆண்டவர் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில வாரங்களாக போப் ஆண்டவர் சிறிலங்கா தொடர்பாக மீண்டும் மீண்டும் பேசி வருவதும், யேசுபிரான் உயிர்த்தெழுந்த நாளின் போது அவர் வெளியிட்ட செய்தியில் 'சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சுக்களே ஒரே வழி' என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் குருதி மழை பெய்ய படையணிப்பிய (நேட்டோ) இத்தாலியின் பாவத்தை கழுவவே வத்திக்கானுக்கு வக்கில்ல.. அப்புறம் மகிந்தவின் பாவத்தை..! இறைமகன் ஜேசுவை வைச்சே பாவிகள் பிழைப்பு நடத்த வெளிக்கிட்டு விட்டார்கள்..! சர்வதேச மன்னிப்புச்சபையே சிறீலங்காவின் மனித உரிமைகள் மோசமடைந்துள்ளது என்று அறிக்கை தந்தும் வத்திக்கான் அந்நாட்டின் அதிபரை சந்தித்ததானது.. வத்திக்கானும் மனிதப்படுகொலைகளை கண்டு பாராமுகமா உள்ளது என்பதைத் தானே காட்டுகிறது..!

அண்மையில் அமெரிக்க கிறிஸ்தவ அமைப்பொன்று சிறீலங்காவில் கிறிஸ்தவர்களின் உரிமை மோசமாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்ததையும் இங்கு சுட்டிக்காட்டலாம்..! :lol::o:lol:

இத்தாலியில் வாழும் புலம்பெயர்ந்த தூங்கு தமிழர்கள் இன்னும் விழிச்செழும்பவில்லையா.. குறட்டை விட்டது காணும் எழும்புங்கோ..! ஒரு கறுப்புப்பட்டி போராட்டமாவது வத்திக்கானுக்கு வெளியில் நடத்தக் கூட நாதியில்லையா..??! :o:lol::D.

http://www.persecution.org/suffering/count...try=Sri%20Lanka

என்ன செய்வது, அவரே அழைத்து விட்டு சந்திக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது அல்லவா? ஆனாலும் தமிழ் மக்கள் படும் பாடுகளைப் பற்றிப் பேசியிருக்கலாம் என்ற ஆதங்கம் எமக்கு

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது

கதைக்காமல் விடுவதைவிட கூப்பிட்டு விடயத்தை சொல்லிவிடுவது நல்லதா???

அல்லது

கூப்பிட்டு விட்டு கதைக்காமல் விடுவது நல்லதா???

அல்லது

கூப்பிடாமலே விடுவது நல்லதா???

எது நன்மை தரும் தமிழனுக்கு???

என்னைப்பொறுத்தவரை

அவர் வத்திக்கான் வந்தபடியால்தானே எம்மால் சிறுஎதிர்ப்பென்றாலும் காட்டமுடிந்தது......

இலங்கை ஜனாதிபதி புனித பாப்பரசரை சந்தித்தார்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று வாத்திகனில் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட் அவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். மேலும் கார்டினல் செயலரையும் இலங்கை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக வாத்திகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சந்திப்பின் போது, இலங்கையில் தற்போது நிலவும் சூழலில், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற செய்தி வலியுறுத்தப்பட்டதாகவும், பேச்சுவார்த்தையும், சமரச முயற்சிகளும்தான் இலங்கையில் நடக்கும் வன்செயல்களை முற்றாக நிறுத்த ஒரே வழி என்று கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கைச் சமூகத்தில் குறிப்பிடத்தக்க பங்கையளித்து வரும் கத்தோலிக்கத் திருச்சபை, எல்லோருக்கும் நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கிலும், அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்காக ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான, தான் மேற்கொண்டுவரும் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் வாத்திகனின் அறிக்கை கூறியுள்ளது.

தன்னார்வக் குழுக்கள் சில இலங்கைப் பிரச்சினை குறித்து வெளியிட்ட கவலைகளுக்குப் பிறகு இலங்கை ஜனாதிபதிக்கும் – பாப்பரசருக்கும் இடையேயான இந்தச் சந்திப்பு நிகழந்துள்ளது.

____B.B.C____

உந்தப்பாவிக்கும் பாவ மன்னிப்பு இருக்கோ :rolleyes:

திருவாளர் மகிந்த வத்திக்கானில் இருந்து திரும்பிவந்து

post-3418-1177122621_thumb.jpg

மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதோடு பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதே தீர்வுக்கான ஒரே மார்க்கம்

ஜனாதிபதி மஹிந்தவிடம் பாப்பரசர் வலியுறுத்து

வத்திக்கான், ஏப்ரல் 21

மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதோடு, பேச்சுவார்த்தைக்கு மீண்டும் திரும்புவதன் மூலம் மட்டுமே, இலங்கையில் இரத்தக் களரியை உண்டாக்கும் வன்செயல்களை முடிவுக்குக் கொண்டு வரமுடியும். இவ்வாறு தம்மைச் சந்தித்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார் புனித பாப்பரசர் பெனடிக்ற் ஆண்டகை.

எல்லோருக்கும் நன்மை விளைவிக்கும் நோக்குடன், சகல தரப்புகளின் மத்தியிலும் சமாதானத்தை உருவாக்குவதற்கும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும் கத்தோலிக்கத் திருச்சபை இலங்கையின் இப்போது ஆற்றிவரும் தனது பணியை மேலும் வலுப்படுத்தும் என்றும் பாப்பரசர் தெரிவித்தார்.

பாப்பரசரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இருபது நிமிட நேரம் தனிமையில் சந்தித்து உரையாடியதாக வத்திக்கானில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

வத்திக்கானின் ராஜாங்கச் செயலர் ராஸிக்கோ பேர்ட்டோனையும் இலங்கை ஜனாதிபதி சந்தித்துப் பேசினார்.

சமாதானத்தையும் அமைதியையும் இலங்கையில் கொண்டுவருவதற்கான உணர்வை அந்நாட்டு மக்களிடத்தில் உண் டாக்கும் பொருட்டு, திருச்சபை இப்போது ஆற்றிவரும் பணி மேலும் வலுப்படுத்தப்படும் என்று வத்திக்கான் அறிக்கை தெரிவித்தது.

பௌத்தரான இலங்கை ஜனாதிபதி மஹந்தவுடன், கத்தோலிக்கரான அவரது மனைவி சிறானியும் மகன் நால் மற்றும் கத்தோலிக்கர்களான மூன்று அமைச்சர் களும் பல அரச அதிகாரிகளும் கூட வந்தி ருந்தனர்.

இலங்கையிலிருந்து வந்திருந்த பிர முகர்கள் தமது தேசிய உடையான வெள்ளை

நிற உடுப்புடன் வந்திருந்தனர். திருமதி ராஜ பக்ஷ நீல நிறைச் சேலை அணிந்து காணப் பட்டார்.

இதேவேளை நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைக் கொண்டுவரும் பொருட்டு தாம் அயராது பாடுபட்டு வருவதை பாப் பரசர் நன்கு உணர்ந்துகொள்வார் என்று ஜனாதிபதி நம்புகிறார். அமைதி வழித் தீர்வு ஒன்றைக் காண்பதே அரசாங்கத்தின் இறுதி இலக்காகும் என்று மஹிந்த ராஜபக்ஷ வின் ஊடக ஆலோசகர் லூசியன் கருணா நாயக்க தெரிவித்தார். (அ)

உதயன்

  • தொடங்கியவர்

ஸோ,,,, டையேர்ட்!

dogtiredpo4.jpg

:rolleyes::D:)

என்ன அருமையாய் தூங்குது பாவம் இந்த ஊட்டுக்குள்ள நரிவந்து புகமால் விட்டால் சரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.