Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைவம்

Featured Replies

  • தொடங்கியவர்

35. எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்கள் எவை?

1. தேவர் -11,00,000 யோனி பேதம்

2. மனிதர்- 9,00,000 யோனி பேதம்

3. நாற்கால் விலங்கு -10,00,000 யோனி பேதம்

4. பறவை -10,00,000 யோனி பேதம்

5. ஊர்வன -15,00,000 யோனி பேதம்

6. நீர்வாழ்வன -10,00,000 யோனி பேதம்

7. தாவரம் -19,00,000 யோனி பேதம்

ஆக மொத்தம் 84,00,000 யோனி பேதம்

36. ஆன்மாக்கள் வினைகளைச் செய்தற்கும் வினைப் பயன்களை அநுபவித்தற்கும் இடம் எவை?

இருவினைகளைச் செய்தற்கும் இருவினைப் பயன்களை அநுபவித்தற்கும் இடம் பூமி; நல்வினைப் பயனை அநுபவித்தற்கு இடஞ் சுவர்க்க முதலிய மேலுலங்கள்; தீவினைப் பயனை அநுபவித்தற்கு இடம் இருபத்தெட்டுக் கோடி நரகங்கள்.

37. பூமியிலே பிறந்த ஆன்மாக்கள் சரீரத்தை விட்டவுடனே யாது செய்யும்?

நல்வினை செய்த ஆன்மாக்கள், தூல சரீரத்தை விட்டவுடனே, சூக்கும சரீரத்தோடு பூதசார சரீரமாகிய தேவ சரீரத்தை எடுத்துக்கொண்டு, சுவர்க்கத்திலே போய் அந்நல்வினைப் பயனாகிய இன்பத்தை அநுபவிக்கும் தீவினை செய்த ஆன்மாக்கள், தூல சரீரத்தை விட்டவுடனேயே, சூக்கும சரீரத்தோடு பூத சரீரமாகிய யாதனா சரீரத்தை எடுத்துக்கொண்டு, நரகத்திலே போய் அத்தீவினைப் பயனாகிய துன்பத்தை அநுபவிக்கும். இப்படியன்றி, ஒரு தூல சரீரத்தை விட்டவுடனே பூமியிலே தானே ஒரு யோனி வாய்ப்பட்டு, மற்றொரு தூல சரீரத்தை எடுப்பதும் உண்டு.

38. சுவர்க்கத்திலே இன்பம் அநுபவித்த ஆன்மாக்கள் பின் யாது செய்யும்?

தொலையாது எஞ்சி நின்ற கன்ம சேடத்தினாலே திரும்பப் பூமியில் வந்து மனிதர்களாய்ப் பிறக்கும்.

39. நரகத்திலே துன்பம் அநுபவித்த ஆன்மாக்கள் பின்பு யாது செய்யும்?

தொலையாது எஞ்சி நின்ற கன்ம சேடத்தினாலே திரும்பப் பூமியில் வந்து முன்பு தாவரங்களையும் பின்பு நீர்வாழ்வனவாயும், பின்பு ஊர்வனவாயும், பின்பு பறவைகளாயும், பின்பு விலங்குகளாயும் பிறந்து, பின்பு முன் செய்த நல்வினை வந்து பொருந்த மனிதர்களாய்ப் பிறக்கும்.

40. எழுவகைப் பிறப்பினுள்ளும் எந்தப் பிறப்பு அருமையுடையது?

பசுபதியாகிய சிவபெருமானை அறிந்து வழிபட்டு முத்தியின்பம் பெற்றுய்தற்குக் கருவியாதலால் மனிதப் பிறப்பே மிக அருமையுடையது.

41. மனிதப் பிறப்பை எடுத்த ஆன்மாக்களுக்கு எப்பொழுது அம்முத்தி சித்திக்கும்?

அவர்கள், தங்கள் தங்கள் பக்குவத்துக்கு ஏற்பப் படிமுறையினாலே, பிறவிதோறும் பெளத்தம் முதலிய புறச்சமயங்களில் ஏறி, ஏறி, அவ்வச் சமயத்துக்கு உரிய நூல்களில் விதிக்கப்பட்ட புண்ணியங்களைச் செய்வார்கள்; பின்பு அப்புண்ணிய மேலீட்டினாலே வைதிக நெறியை அடைந்து, வேதத்தில் விதிக்கப்பட்ட புண்ணியங்களைச் செய்வார்கள்; பின்பு அப்புண்ணிய மேலீட்டினாலே சைவ சமயத்தை அடைவர்கள்; சைவ சமயத்தை அடைந்து, சிவாகமத்தில் விதிக்கப்பட்ட சரியை கிரியை யோகங்களை விதிப்படி மெய்யன்போடு அநுட்டித்தவருக்குச் சிவபெருமான் ஞானாசாரியரை அதிட்டித்து வந்து சிவஞானம் வாயிலாக உண்மை முத்தியைக் கொடுத்தருளுவர்.

42. புறச்சமயங்களின் வழியே ஒழுகினவர்களுக்கு யாவர் பலங் கொடுப்பார்?

புறச்சமயிகளுக்கு, அவ்வவரால் உத்தேசித்து வழிபடப் படுந் தெய்வத்தைச் சிவபெருமானே தமது சத்தியினாலே அதிட்டித்து நின்று, அவ்வவ் வழிபாடு கண்டு, பலங் கொடுப்பார்.

43. சரியையாவது யாது?

சிவாலயத்துக்குஞ் சிவனடியார்களுக்குந் தொண்டு செய்தல்.

44. கிரியையாவது யாது?

சிவலிங்கப் பெருமானை அகத்தும் புறத்தும் பூசித்தல்.

45. யோகமாவது யாது?

விடயங்களின் வழியே போகாவண்ணம் மனத்தை நிறுத்திச், சிவத்தைத் தியானித்துப், பின்பு தியானிப் போனாகிய தானுந் தியானமுந் தோன்றாது தியானப் பொருளாகிய சிவம் ஒன்றே விளங்கப் பெறுதல்.

46. ஞானமாவது யாது?

பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் இலக்கணங்களை அறிவிக்கும் ஞான நூல்களைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடல்.

47. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கினாலும் அடையும் பலங்கள் யாவை?

சரியையினால் அடையும் பலஞ் சிவசாலோக்கியமும், கிரியையினால் அடையும் பலஞ் சிவசாமீப்பியமும், யோகத்தினால் அடையும் பலஞ் சிவசாரூப்பியமுமாம். இம்மூன்றும் பதமுத்தி; ஞானத்தினால் அடையும் பலஞ் சிவசாயுச்சியமாகிய பரமுத்தி.

திருச்சிற்றம்பலம்.

  • Replies 479
  • Views 68.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Rudra Pasupathi Naayanaar - உருத்திர பசுபதி நாயனார்.

Click here to download Life History of Rudra Pasupathi Naayanaar

http://www.megaupload.com/?d=I6OVN2DT

Aanaaya Naayanar - ஆனாய நாயனார்

Click this to download

http://www.megaupload.com/?d=0FB4S0DI

  • தொடங்கியவர்

3. பாசவியல்

48. பாசமாவன யாவை?

ஆன்மாக்களைப் பந்தித்து நிற்பவைகளாம். (பந்தித்தல் - கட்டுதல், பாசம், மலம் என்பவை ஒருபொருட் சொற்கள்.)

49. பாசம் எத்தனை வகைப்படும்?

ஆணவம், கன்மம், மாயை என மூவகைப்படும். இம்மூன்றோடு, மாயேயம், திரோதயி என இரண்டுங் கூட்டிப் பாசம் ஐந்து என்று கொள்வதும் உண்டு.

50. ஆணவமாவது யாது?

செம்பிற் களிம்புபோல ஆன்மாக்களின் அநாதியே உடன்கலந்து நிற்பதாய், ஒன்றேயாய், ஆன்மாக்கள் தோறும் வெவ்வேறாகி அவைகளுடைய அறிவையுந் தொழிலையும் மறைத்து நின்று தத்தங்கால வெல்லையிலே நீங்கும் அநேக சக்திகளையுடையதாய்ச், சடமாய் இருப்பது.

51. கன்மமாவன யாது?

ஆன்மாக்கள் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலே செய்த புண்ணிய பாவங்கள், இவை, எடுத்த பிறப்பிலே செய்யப்பட்ட பொழுது, ஆகாமியம் எனப் பெயர் பெறும். பிறவி தோறும் இப்படி ஈட்டப் பட்டுப் பக்குவப்படும் வரையும் புத்தித்தத்துவம் பற்றுக்கோடாக மாயையிலே கிடக்கும் பொழுது சஞ்சிதம் எனப் பெயர் பெறும். இச்சஞ்சித கன்மங்களுள்ளே பக்குவப்பட்டவை, மேல் எடுக்கும் உடம்பையும் அது கொண்டு அநுபவிக்கப்படும் இன்ப துன்பங்களையுந் தந்து பயன்படும் பொழுது, பிராரத்தம் எனப் பெயர் பெறும்.

52. மாயை எத்தனை வகைப்படும்?

சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை என மூன்று வகைப்படும். இவைகளுள்ளே, சுத்தமாயை அசுத்தமாயை இரண்டும் நித்தியம்; பிரகிருதிமாயை அசுத்த மாயையினின்றுந் தோன்றியதாதலால் அநித்தியம்.

53. சுத்தமாயையாவது யாது?

நித்தியமாய், வியாபகமாய், அருவமாய்ச், சடமாய்ச் சொல்வடிவமுஞ் சுத்தமாகிய பொருள் வடிவுந் தோன்றுதற்கு முதற்காரணமாய், மயக்கஞ் செய்யாததாய் இருப்பது.

54. அசுத்தமாயையாவது யாது?

நித்தியமாய், வியாபகமாய், அருவமாய்ச், சடமாய்ப், பிரளய காலத்திலே ஆன்மாக்களுடைய கன்மங்களுக்கு உறைவிடமாய், ஆன்மாக்களுக்குச் சுத்தா சுத்தமும் அசுத்தமுமாகிய தனு கரண புவன போகங்கள் தோன்றுதற்கு முதற் காரணமாய், மயக்கஞ் செய்வதாய் இருப்பது.

55. மாயேயமாவன யாவை?

மாயையால் ஆகிய தத்துவங்களும், அவைகளால் ஆகிய தனு கரண புவன போகங்களுமாம்.

56. திரோதாயியாவது யாவை?

ஆணவங் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையுந் தொழிற்படுத்திப் பாசம் வருவிக்குஞ் சிவசக்தி. இது மலத்தைச் செலுத்துதலினாலே, மலம் என உபசரிக்கப்பட்டது

57. மாயாகாரியமாகிய தனு கரண புவன போகங்களைச் சிவபெருமான் ஆன்மாக்களுக்குக் கொடுப்பது எதன் பொருட்டு?

ஆன்மாக்களைப் பந்தித்த ஆணவ மலமுங் கன்ம மலமுமாகிய நோய்களைத் தீர்த்துச் சிவானந்தப் பெரும் பேற்றைக் கொடுக்கும் பொருட்டு.

58. தனு கரண முதலியவைகளும் மலமன்றோ? மலமென்பது அழுக்கன்றோ? ஆணவமாகிய அழுக்கை, மாயா மலமாகிய அழுக்கினாலே எப்படிப் போக்கலாம்?

வண்ணான், கோடிப் புடவையிலே சாணியையும் உவர் மண்ணையும் பிசிறி, மிகக் கறுத்தது என்னும்படி செய்து, முன்னையதாகிய அழுக்கோடு பின்னையதாகிய அழுக்கையும் போக்கி, அப்புடைவையை மிக வெண்மையுடையதாகச் செய்வன்; அது போலவே சிவபெருமான் ஆன்மாவினிடத்தே மாயா மலத்தைக் கூட்டி, அநாதி பந்தமாகிய ஆணவ மலத்தோடு ஆதிபந்தமாகிய மாயா மலத்தையும் போக்கி, அவ்வான்மாவைச் சிவமாந்தன்மைப் பெருவாழ்வுடையதாகச் செய்வார்.

திருச்சிற்றம்பலம்.

  • தொடங்கியவர்

Arivaataya Naayanaar - அரிவாட்டாய நாயனார்

Click below to download

http://www.megaupload.com/?d=TTD98U1V

  • தொடங்கியவர்

4. வேதாகமவியல்

59. சிவபெருமான் ஆன்மாக்கள் பொருட்டு அருளிச் செய்த முதனூல்கள் எவை?

வேதம், சிவாகமம் என்னும் இரண்டுமாம். வேதத்தின் பெயர் சுருதி, நிகமம். ஆகமத்தின் பெயர் தந்திரம், மந்திரம், சித்தாந்தம்.

60. வேதம் எத்தனை?

இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என நான்காம்.

61. சிவாகமம் எத்தனை?

காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், ரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞாநம், முகவிம்பம், புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம் என இருபத்தெட்டாம்.

62. வேதம் நான்கும் எங்கே தோன்றின?

சதாசிவமூர்த்தியுடைய தற்புருட முகத்தினின்றும் இருக்கு வேதமும், அகோர முகத்தினின்றும் யசுர் வேதமும் வாமதேவ முகத்தினின்றுஞ் சாம வேதமும், சத்தியோசாத முகத்தினின்றும் அதர்வ வேதமுந் தோன்றின.

63. சிவாகம மிருபத்தெட்டும் எங்கே தோன்றின?

சதாசிவமூர்த்தியுடைய உச்சி முகமாகிய ஈசானத்தினின்றும் தோன்றின.

64. வேதம் நான்கும் எத்தனை சாகை யுடையன?

இருக்கு வேதம் இருபத்தொரு சாகையும், யசுர்வேதம் நூறு சாகையும், சாமவேதம் ஆயிரஞ் சாகையும் அதர்வவேதம் ஒன்பது சாகையும் உடையன (சாகை பிரிவு)

65. வேதம் நான்கும் தனித்தனி எத்தனை காண்டமுடையன?

பிரமகாண்டமும், பிரமகாண்டத்துக்கு நிமித்தமாகிய கருமகாண்டமும், என இரண்டு காண்டமுடையன. பிரமகாண்டத்தின் பெயர் பிரபல் சுருதி, வேதாந்தம், வேதசிரசு, உபநிடதம், கரும காண்டத்தின் பெயர் அற்பகருதி.

66. வேதத்துக்கு அங்கமாகிய நூல்கள் எவை?

சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம் என்னும் ஆறுமாம்.

67. சிக்ஷையாவது யாது?

வேதங்களை உதாத்தம் அநுதாத்தம் முதலிய சுர வேறுபாட்டினால் உச்சரிக்கும் முறைமையை அறிவிப்பது.

68. கற்பமாவது யாது?

வேதங்களில் விதிக்கப்பட்ட கருமங்களை அநுட்டிக்கும் முறைமையை அறிவிப்பது.

69. வியாகரணமாவது யாது?

வேதங்களில் எழுத்துச் சொற் பொருளிலக்கணங்களை அறிவிப்பது.

70. நிருத்தமாவது யாது?

வேதங்களின் சொற்களுடைய பொருளை அறிவிப்பது.

71. சந்தோவிசிதியாவது யாது?

வேதமந்திரங்களிற் காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரையும் அவ்வவைகளுக்கு எழுத்து இவ்வள வென்பதையும் அறிவிப்பது.

72. சோதிடமாவது யாது?

வேதத்தில் விதிக்கப்பட்ட கருமங்களைச் செய்தற்கு உரிய கால விசேஷங்களை அறிவிப்பது.

73. வேதத்துக்கு உபாங்கமாகிய நூல்கள் எவை?

புராணம், நியாயம், மீமாஞ்சை, மிருதி என்னும் நான்குமாம்.

74. புராணமாவது யாது?

பரமசிவன் உலகத்தைப் படைத்தல், அழித்தல் முதலியவைகளைக் கூறும் வேத வாக்கியப் பொருள்களை வலியுறுத்தி விரித்து அறிவிப்பது. உலகத்தினது தோற்றமும், ஒடுக்கமும், பாரம்பரியங்களும் மனுவந்தரங்களும், பாரம்பரியக் கதைகளுமாகிய இவ்வைந்தையும் கூறுதலால், புராணம் பஞ்சலக்கணம் எனவும் பெயர் பெறும். இதிகாசமும் புராணத்துள் அடங்கும்.

75. நியாயமாவது யாது?

வேதப் பொருளை நிச்சயித்தற்கு அநுகூலமாகிய பிரமாணம் முதலியவைகளை அறிவிப்பது.

76. மீமாஞ்சையாவது யாது?

வேதப் பொருளினுடைய தாற்பரியத்தை அறிதற்கு அநுகூலமாகிய நியாயங்களை ஆராய்ச்சி செய்து அறிவிப்பது. அது பூருவமீமாஞ்சை, உத்திர மீமாஞ்சை என இரண்டு வகைப்படும். பூருவ மீமாஞ்சையின் பெயர் கருமமீமாஞ்சை, உத்திர மீமாஞ்சையின் பெயர் பிரமமீமாஞ்சை, வேதாந்த சூத்திரம்.

77. மிருதியாவது யாது?

அவ்வவ் வருணங்களுக்கும் ஆச்சிரமங்களுக்கு உரிய தருமங்களை அறிவிப்பது.

78. உபவேதங்கள் எவை?

ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தருவ வேதம் அருத்தவேதம் என்னும் நான்குமாம்.

79. ஆயுர்வேதமாவது யாது?

எல்லாவற்றையும் அநுட்டித்தற்குச் சாதனமாகிய சரீரத்தை நோயின்றி நிலைபெறச் செய்தற்கு வேண்டப்படுபவைகளை அறிவிப்பது.

80. தனுர்வேதமாவது யாது?

பகைவர்களாலே நலியாது உலகத்தைக் காத்தற்கு வேண்டப்படும் படைக்கலப் பயிற்சியை அறிவிப்பது.

திருச்சிற்றம்பலம்

  • தொடங்கியவர்

5. சைவபேதவியல்

108. சிவபெருமானைச் சிவாகம விதிப்படி வழிபடுதற்கு யோக்கியதையைப் பிறப்பிப்பது யாது?

சிவ தீக்ஷை.

109. சிவ தீக்ஷை பெற்ற பின் ஆவசியமாக அநுட்டிக்கப்படும் கருமங்கள் எவை?

இயமநியமங்களும், சந்தியாவந்தனம் சிவலிங்க பூசை, தேவார திருவாசக பாராயணம், சிவாலய கைங்கரியம், சிவாலய தரிசனம், குருவாக்கிய பரிபாலனம், இயன்றமட்டும் மாகேசுர பூசை முதலியவைகளுமாம். (கைங்கரியம் = தொண்டு)

110. இயமம் என்பன யாவை?

கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் மனைவியரையும் பொதுமகளிரையும் விரும்பாமையாகிய ஆண்டகைமை, இரக்கம், வஞ்சனையில்லாமை, பொறையுடைமை, மனங் கலங்காமை, அற்பாகாரம், சுசியுடைமை என்னும் பத்துமாம்.

111. நியமம் என்பன எவை?

தவம், மனமுவந்திருத்தல், கடவுள் உண்டென்னும் விசுவாசம், பாவத்துக்குப் பயந்து தேடிய பொருளைச் சற்பாத்திரமா யுள்ளவருக்குக் கொடுத்தல், தன்னின் மூத்தோரை வழிபடுதல், உயிர்க்கு உறுதி பயக்கும் உண்மை நூல்களைக் கேட்டல், குலஞ்செல்வம் அதிகாரம் முதலியவைகளினாலே கெருவம் இன்றி அடங்கி யொழுகுதல், தக்கனவுந் தகாதனவும் பகுத்தறிதல், செபம், விரதம் என்னும் பத்துமாம்.

112. அநுட்டிக்கலாகாத கருமங்கள் எவை?

சிவநிந்தை, குருநிந்தை, சிவனடியார் நிந்தை, சிவசாத்திரநிந்தை, தேவத்திரவியங்களை உபயோகஞ் செய்தல், உயிர்க்கொலை முதலியவைகளாம்.

113. அநுட்டானத்தில் வழுகிய பாவங்கள் எப்படி நீங்கும்?

அறியப்பட்ட பாவங்கள் பிராயச்சித்தங்களினாலே நீங்கும்; அறியப்படாத பாவங்கள் அந்தியேட்டிக் கிரியையினாலே நீங்கும்.

114. தீக்ஷை பெற்றுந் தத்தமக்கு விதிக்கப்பட்ட சைவாசாரங்களை அநுட்டியாது விடுத்தவர் யாது பெறுவர்?

பைசாச புவனத்திற் பிசாசுகளாய் அங்குள்ள போகங்களை அநுபவிப்பர்.

115. சிவதீக்ஷை பெற்றுச் சிவபெருமானை வழிபடுவோர்கள் யாது பெயர் பெறுவார்கள்?

சைவர் என்னும் பெயர் பெறுவார்கள்.

116. சைவர்கள் சாதிபேதத்தினால் எத்தனை வகைப்படுவார்கள்?

ஆதிசைவர்; மகாசைவர்; அநுசைவர்; அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்தியசைவர் என அறு வகைப்படுவார்கள்.

117. ஆதிசைவராவார் யாவர்?

அநாதிசைவராகிய சதாசிவமூர்த்தியுடைய ஐந்து திருமுகங்களினுந் தீக்ஷிக்கப்பட்ட இருடிகளுடைய கோத்திரங்களிற் பிறந்தவராகிய சிவப்பிராமணர். (இருடி = முனிவர்)

118. மகாசைவராவர் யாவர்?

பிரமாவினுடைய முகங்களிற் றோன்றிய இருடிகளுடைய கோத்திரங்களிற் பிறந்தவராகிய வைதிகப் பிராமணருள்ளே சிவதீக்ஷை பெற்றவர்.

119. அநுசைவராவார் யாவர்?

சிவதீக்ஷை பெற்ற க்ஷத்திரியரும், வைசியரும்.

120. அவாந்தரசைவராவார் யாவர்?

சிவதீக்ஷை பெற்ற சூத்திரர்.

121. பிரவரசைவராவார் யாவர்?

சிவதீக்ஷை பெற்ற அநுலோமர்.

122. அந்நியசைவராவார் யாவர்?

சிவதீக்ஷை பெற்ற பிரதிலோமர் முதலிய மற்றைச் சாதியார்.

123. சைவர்கள் தீக்ஷா பேதத்தினால் எத்தனை வகைப்படுவார்கள்?

சமய தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர், நிருவாண தீக்ஷிதர், ஆசாரியர் என நால்வகைப்படுவார்கள்.

124. சமயதீக்ஷிதராவார் யாவர்?

சமய தீக்ஷை பெற்றுக்கொண்டு, சந்தியாவந்தனத்தை மாத்திரமேனும், சந்தியாவந்தனம் சிவாலயப் பணி என்னும் இரண்டுமேனும் அநுட்டிப்பவர்.

125. சந்தியாவந்தனம் மாத்திரம் அநுட்டிக்குஞ் சமயிகள் யாது பெயர் பெறுவர்?

சந்தியோபாஸ்திபரர் என்னும் பெயர் பெறுவர். (உபாஸ்தி = வழிபாடு)

126. சந்தியாவந்தனம், சிவாலயப் பணி என்னும் இரண்டும் அநுட்டிக் குஞ்சமயிகள் யாது பெயர் பெறுவர்?

சிவகர்மரதர் என்னும் பெயர் பெறுவர்

(ரதர் = விருப்பமுடையவர்)

127. விசேஷ தீக்ஷிதராவார் யாவர்?

சமய தீக்ஷை, விசேஷ தீக்ஷை, என்னும் இரண்டும் பெற்றுக்கொண்டு, சந்தியாவந்தனம், சிவலிங்க பூசை என்னும் இரண்டும் அநுட்டிப்பவர்.

128. நிருவாண தீக்ஷிதராவார் யாவர்?

சமய தீக்ஷை, விசேக்ஷ தீக்ஷை, நிருவாண தீக்ஷை என்னும் மூன்றும் பெற்றுக்கொண்டு, சந்தியா வந்தனம், சிவலிங்க பூசை என்னும் இரண்டனோடு ஞான பூசையும் அநுட்டிப்பவர்.

129. ஞானபூசை யென்பது என்ன?

ஞான நூல்களாகிய சைவ சித்தாந்த சாத்திரங்களை விதிப்படியே ஓதல், ஓதுவித்தல், அவைகளின் பொருளைக் கேட்டல், கேட்பித்தல், கேட்டதைச் சிந்தித்தல் என்னும் ஐந்துமாம்.

130. ஆசாரியராவார் யாவர்?

சமய தீக்ஷை, விசேஷ தீக்ஷை, நிருவாண தீக்ஷை, ஆசாரியபிஷேகம் என்னும் நான்கும் பெற்றுக் கொண்டு, நித்திய கருமங்களோடு தீக்ஷை, பிரதிட்டை முதலிய கிரியைகளுஞ் செய்பவர்.

131. ஆசாரியராதற்கு யோக்கியர் யாவர்?

பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருள்ளும், மனக்குற்றங்களும், உடற்குற்றங்களும் இல்லாதவராய், நிகண்டு கற்று, இலக்கியவாராய்ச்சி செய்து இலக்கணமுந் தருக்கமும், நீதிநூல்களுஞ் சிவபுராணங்களும் படித்தறிந்தவராய், தேவார திருவாசங்களைப் பண்ணோடு ஓதினவராய், சைவாகமங்களை ஓதி அவைகளால் உணர்த்தப்படும் நான்கு பாதங்களையும் அறிந்தவராய், சீடர்களுக்கு நல்லொழுக்கத்தையுஞ் சைவ சமயத்தையும் போதித்தலின்கண் அதிசமர்த்தராய் உள்ளவர்.

132. ஆசாரியராதற்கு யோக்கியரல்லாதவர் யாவர்?

நான்கு வருணத்துக்குட்படாதவன், கணவன் இருக்கக் கள்ளக் கணவனுக்குப் பிறந்தவனாகிய குண்டகன், கணவன் இறந்தபின் கள்ளக் கணவனுக்கு விதவையிடத்துப் பிறந்தவனாகிய கோளகன், வியபிசாரஞ் செய்த மனைவியை விலக்காதவன், குருடன், ஒற்றைக்கண்ணன், செவிடன், முடவன், சொத்திக் கையன், உறுப்புக் குறைந்தவன், உறுப்பு மிகுந்தவன், தீரா வியாதியாளன், பதினாறு வயசுக்கு உட்பட்டவன் எழுபது வயசுக்கு மேற்பட்டவன், கொலை களவு முதலிய தீயொழுக்க முடையவன், சைவாகமவுணர்ச்சியில்லாதவன் முதலானவர். (சொத்தி = ஊனம்).

133. இக்குற்றமுடைய ஆசாரியரைக் கொண்டு தீக்ஷை பிரதிட்டை முதலியன செய்வித்தவர் யாது பெறுவர்?

அவைகளால் ஆகும் பயனை இழந்து, நரகத்தில் வீழ்ந்து வருந்துவர். ஆதலினாலே, குருலக்கணங்கள் அமையப் பெற்ற ஆசாரியரைக் கொண்டே தீக்ஷை, பிரதிட்டை முதலியன செய்வித்துக் கொள்ளல் வேண்டும்.

134. இன்ன இன்ன வருணத்தார் இன்ன இன்ன வருணத்தாருக்கு ஆசாரியராகலாம் என்னும் நியமம் உண்டோ?

ஆம்; பிராமணர், பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருக்கும், க்ஷத்திரியர், க்ஷத்திரியர் முதலிய மூன்று வருணத்தாருக்கும், வைசியர், வைசியர் முதலிய இரண்டு வருணத்தாருக்கும், சூத்திரர், சூத்திரருக்குஞ் சங்கரசாதியருக்கும் ஆசாரியராகலாம். இந்நியமங் கிரியாகாண்டத்தின் மாத்திரமேயாம்; ஞான காண்டத்திலோ வெனின், நான்கு வருணத்துள்ளும் உயர்ந்த வருணத்தாருக்குத் தாழ்ந்த வருணத்தாரும் ஆசாரியராகலாம்.

135. சிவஞானத்தை அடைய விரும்பி சீடன் தான் அடைந்த ஆசாரியரிடத்தே சிவஞானம் இல்லையாயின், யாது செய்தல் வேண்டும்?

வண்டானது தான் அடைந்த பூவினிடத்தே தேன் இல்லையாயின், அதனை விட்டுத் தேன் உள்ள பூவைத் தேடி அடைவது போலச், சீடன் தான் அடைந்த ஆசாரியரிடத்தே சிவஞானம் இல்லையாயின், அவரை விட்டுச் சிவஞானம் உள்ள ஆசாரியரைத் தேடியடையலாம்; அடையினும், மூன்று சந்தியினும், கிரியை உபதேசித்த முந்திய ஆசாரியரைத் தியானஞ் செய்து கொண்டே, ஞானம் உபதேசித்த பிந்திய ஆசாரியரைத் தியானஞ் செய்தல் வேண்டும்.

136. இன்ன இன்ன வருணத்தார் இன்ன இன்ன தீக்ஷை பெறுதற்கு யோக்கியர் என்னும் நியமம் உண்டோ?

ஆம்; நான்கு வருணத்தாரும், அநுலோமர் அறுவரும் ஆகிய பத்துச் சாதியாரும் ஒளத்திரி தீக்ஷை பெறுதற்கு யோக்கியர். மற்றைச் சாதியார் ஒளத்திரி தீக்ஷைக்கு யோக்கியரல்லர். ஒளத்திரி தீக்ஷைக்கு அங்கமாகிய நயன தீக்ஷை, பரிச தீக்ஷை, வாசக தீக்ஷை, மானச தீக்ஷை, சாத்திர தீக்ஷை, யோக தீக்ஷை என்னும் ஆறனுள்ளுந் தத்தஞ் சாதிக்கும் பரிபக்குவத்துக்கும் ஏற்ற தீக்ஷை பெறுதற்கு யோக்கியர். ஆசாரியர் தமது பாதோதகத்தைக் கொடுத்தலும் ஒரு தீக்ஷையாம்; சீடர் அதனைச் சிரத்தையோடும் ஏற்றுச் சிரசின் மீது புரோக்ஷித்து ஆசமனஞ் செய்யக் கடவர்.

137. ஒளத்திரி தீக்ஷையாவது யாது?

ஓமத்தோடு கூடச் செய்யப்படும் தீக்ஷை. (ஹோத்திரம் = ஓமம்)

138. ஒளத்திரி தீக்ஷை எத்தனை வகைப்படும்?

ஞானவதி, கிரியாவதி என இரண்டு வகைப்படும்.

139. ஞானவதியாவது யாது?

குண்டம், மண்டலம், அக்கினி, நெய், சுருக்குச்சுருவ முதலியவைகளெல்லாம் மனத்தாற் கற்பித்துக் கொண்டு, விதிப்படி அகத்தே ஆகுதி முதலிய கிரியை செய்து, சீடனது பாசத்தைக் கெடுக்குந் தீக்ஷையாம். இது சத்தி தீக்ஷை எனவும் பெயர் பெறும்.

140. கிரியாவதியாவது யாது?

குண்ட மண்டலங்களைப் புறத்தேயிட்டு விதிப்படி புறம்பே ஆகுதி முதலிய கிரியை செய்து, சீடனது பாசத்தைக் கெடுக்குந் தீக்ஷையாம். இது மாந்திரி தீக்ஷை எனவும் பெயர் பெறும்.

141. ஞானவதி, கிரியாவதி என்னும் இரண்டுந் தனித்தனி எத்தனை வகைப்படும்?

சமய தீக்ஷை, விசேஷ தீக்ஷை, நிருவாண தீக்ஷை என மூன்று வகைப்படும்.

திருச்சிற்றம்பலம்

  • தொடங்கியவர்

தில்லைவாழந்தணர் புராண சூசனம்

1. சிதம்பரத்தினது மகிமை

சாந்தோக்கியோப நிடதத்திலே பிரமபுரத்திலுள்ள தகரமாகிய புண்டரீக வீட்டினுள்ளே இருக்கும் ஆகாசமத்தியில் விளங்கும் அதிசூக்குமசித்தை அறிதல் வேண்டுமென்று தகரவித்தை சொல்லப்பட்டது. இங்கே பிரமபுரமென்றது இச்சரீரத்தையும், புண்டரீகவீடென்றது இருதயகமலத்தையும், ஆகாசமென்றது பராசக்தியையும், அதிசூக்கும சித்தென்றது பரப்பிரமமாகிய சிவத்தையு மென்றறிக. புறத்தும், இப்படியே இப்பிரமாண்டம் பிரமபரமெனவும், இப்பிரமாண்டத்தினுள்ளே இருக்கும் தில்லைவனம் புண்டரீக வீடெனவும், தில்லைவனத்திலிருக்கும் ஆகாசம் பராசத்தியாகிய திருச்சிற்றம்பலமெனவும், அத்திருச்சிற்றம்பலத்திலே நிருத்தஞ்செய்யும் பரப்பிரமசிவம் அதிசூக்குமசித்தெனவும் சொல்லப்படும். இவ்வாகாசம் பூதாகாசம்போற் சடமாகாது சித்தேயாம், ஆதலால் சிதம்பரமெனப்படும். இச்சிதம்பரம் எந்நாளும் நீக்கமின்றி விளங்குந்தானமாதலால், தில்லைவனமும் சிதம்பரமெனப் பெயர் பெறும்.

இத்தகரவித்தையை உபாசிக்கும் முறைமை கைவல்லி யோபநிடதத்தில் சிவனது தகரோபாசனாவிதிப்பிரகரணத்தில

  • தொடங்கியவர்

6.விபூதி இயல்

1. சைவசமயிகள் ஆவசியமாகச் சரீரத்திலே தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் யாது?

விபூதி, உத்திராக்ஷம் என்னும் இரண்டுமாம்.

2. விபூதியாவது யாது?

பசுவின் சாணத்தை அக்கினியாலே தகித்தலால் உண்டாகிய திருநீறு, விபூதியின் பெயர்: பசிதம், பசுமம், க்ஷரம், இரக்ஷை

3. எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?

வெண்ணிற விபூதியே தரிக்கத் தகும்; கருநிற விபூதியும், செந்நிற விபூதியும், புகைநிற விபூதியும், பொன்னிற விபூதியுந் தரிக்கலாகாது.

4. விபூதியை எப்படி எடுத்து வைத்துக்கொள்ளல் வேண்டும்?

புது வஸ்திரத்தினாலே வடித்தெடுத்துப் புதுப் பாண்டத்தினுள்ளே இட்டு, மல்லிகை, முல்லை, பாதிரி, சிறுசண்பகம் முதலிய சுகந்த புஷ்பங்களை எடுத்து அதனுள்ளே போட்டுப், புது வஸ்திரத்தினாலே அதன் வாயைக் கட்டி வைத்துக்கொள்ளல் வேண்டும்.

5. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்?

பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும், வில்வக் குடுக்கையிலேனும், சுரைக் குடுக்கையிலேனும் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும். குடுக்கைகளினன்றிப் பிறவற்றில் உள்ள விபூதியைத் தரிக்கலாகாது.

6. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்?

வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்

7. விபூதியை எப்படி தரித்தல் வேண்டும்?

நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும். இப்படியன்றி, நடுவிரல் ஆழிவிரல்களினால் இடப்பக்கந் தொடுத் திழுத்துப் பெருவிரலிரலினால் வலப் பக்கந் தொடுத் திழுத்துத் தரித்தலுமாம். வாய்ங்காந்து கொண்டும், தலை நடுங்கிக் கொண்டும், கவிழ்ந்து கொண்டுந் தரிக்கலாகாது. ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனுந் தரிக்கலாகாது.

8. விபூதி நிலத்திலே சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?

சிந்திய விபூதியை எடுத்து விட்டு, அந்தத் தலத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.

9. எவ்வெவர் முன் எவ்வெப்பொழுது விபூதி தரிக்கலாகாது?

சண்டாளர் முன்னும், பாவிகண் முன்னும், அசுத்த நிலத்தும், வழிநடக்கும் போதும், கிடக்கும் போதுந் தரிக்கலாகாது.

10. எவ்வெக் காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்?

சந்தியாகால மூன்றினும், சூரியோதயத்தினும், சூரியாஸ்தமயனத்தினும், ஸ்நானஞ் செய்தவுடனும், பூசைக்கு முன்னும் பின்னும், போசனத்துக்கு முன்னும் பின்னும், நித்திரைக்கு முன்னும் பின்னும், மலசல மோசனஞ் செய்து செளசம் பண்ணி ஆசமித்த பின்னும், தீ¨க்ஷ யில்லாதவர் தீண்டிய போதும், பூனை, கொக்கு, எலி முதலியன தீண்டிய போதும், விபூதி ஆவசியமாகத் தரித்தல் வேண்டும்.

11. விபூதி தரியாதவருடைய முகம் எதற்குச் சமமாகும்?

சுடுகாட்டுக்குச் சமமாகும்; ஆதலினால் விபூதி தரித்துக்கொண்டே புறத்திற் புறப்படல் வேண்டும்.

12. ஆசாரியராயினும், சிவனடியாராயினும் விபூதி தந்தால், எப்படி வாங்கித் தரித்தல் வேண்டும்?

மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கித் தரித்துக்கொண்டு, முன்போல மீட்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.

13. எப்படிப்பட்ட விபூதி தரிக்கலாகாது?

ஒரு கையால் வாங்கிய விபூதியும், விலைக்குக் கொண்ட விபூதியும், சிவதீ¨க்ஷயில்லாதார் தந்த விபூதியுந் தரிக்கலாகாது.

14. சுவாமி முன்னும், சிவாக்கினி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?

முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.

15. சுவாமிக்குச் சாத்தப்பட்ட விபூதிப் பிரசாதம் யாவராயினுங் கொண்டுவரின், யாது செய்தல் வேண்டும்?

கொண்டு வந்தவர் தீக்ஷை முதலியவற்றினாலே தம்மின் உயர்ந்தவராயின், அவரை நமஸ்கரித்து வாங்கித் தரித்தல் வேண்டும்; அப்படிபட்டவரல்லராயின், அவ்விபூதிப் பிரசாதத்தை ஒரு பாத்திரத்தில் வைப்பித்து, அதனைப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து நமஸ்கரித்து எடுத்துத் தரித்தல் வேண்டும்.

16. விபூதிதாரணம் எத்தனை வகைப்படும்?

உத்தூளனம், திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.

( உத்தூளனம் = திருநீறுபூசுதல்)

17. திரிபுண்டரமாவது யாது?

வளையாமலும், இடையறாமலும், ஒன்றை ஒன்று தீண்டாமலும், மிக அகலாமலும், இடைவெளி ஒவ்வோரங்குல வளவினாதாகத் தரித்தல் வேண்டும்.

18. திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?

சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப் புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.

இவைகளுள், விலாப் புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிரண்டு தானங் கொள்வதும் உண்டு.

19. திரிபுண்டரந் தரிக்குமிடத்து இன்ன இன்ன தானங்களில் இவ்வளவு இவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும் என்னும் நியமம் உண்டோ?

ஆம்; நெற்றியில் இரண்டு கடைப்புருவ வெல்லை நீளமும், மார்ப்பிலும் புயங்களிலும் அவ்வாறங்குல நீளமும், மற்றைத் தானங்களில் ஒவ்வொரங்குல நீளமும் பொருந்தத் தரித்தல் வேண்டும். இவ்வெல்லையிற் கூடினும் குறையினுங் குற்றமாம்.

20. எல்லோரும் எப்பொழுதும் விபூதியைச் சலத்திற் குழைத்துத் தரிக்கலாமா?

திக்ஷையுடையவர் சந்தியாகால மூன்றினுஞ் சலத்திற் குழைத்துத் தரிக்கலாம்; மற்றைக் காலங்களிற் சலத்திற் குழையாமலே தரித்தல் வேண்டும். திக்ஷை இல்லாதவர் மத்தியானத்துக்குப் பின் சலத்திற் குழையாமலே தரித்தல் வேண்டும்.

21. விபூதிதாரணம் எதற்கு அறிகுறி?

ஞானாக்கினியினாலே தகிக்கப்பட்ட பசுமல நீக்கத்தில் விளங்குஞ் சிவத்துவப் பேற்றிற்கு அறிகுறி.

திருச்சிற்றம்பலம்

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

தாவரமாகிய அண்டமும் சங்கமமாகிய பிண்டமும் சமமாதலால், பிண்டமாகிய சரீரத்தில் இடைக்கும் பிங்கலைக்கும் நடுவிலுள்ள சுழுமுனாநாடியும், பிரமாண்டத்திலுள்ள இப்பரதகண்டத்திலே இலங்கைக்கும் இமயமலைக்கும் நடுவிலுள்ள தில்லையும், கருணாநிதியாகிய சிவன் ஆனந்த நிருத்தஞ் செய்யும் ஸ்தானமாம். அது "வலங்கைமான் மழுவோன் போற்றும் வாளர வரசை நோக்கி - யலைந்திடும் பிண்ட மண்ட மவைசம மாதலாலே - யிலங்கைநே ரிடைபோ மற்றை யிலங்குபிங் கலையாநாடி - நலங்கிள ரிமய நேர்போ நடுவுபோஞ் சுழுனை நாடி." "நாடரு நடுவி னாடி நலங்கிளர்தில்லை நேர்போய்க் - கூடுமங் கதனின்மூலக் குறியுள ததற்குத் தென்னர் - மாடுறு மறைகள் காணா மன்னுமம் பலமொன்றுண்டங் - காடுது மென்று மென்றா னென்னையாளுடையவையன்" என்னுங் கோயிற் புராணச் செய்யுள்களாலும், "இடம்படு முடம்பின் மூலத் தெழுந்தநற் சுழுனைநாடி - யுடன்கிள ரொளியேயாகி யொளியிலஞ் செழுத்து மொன்றாய் - நெடுங்குழ லோசை யாகி நிலவு மவ்வோசை போயங் - கடங்கிய விடமே யென்று மாடுமம் பலமதாகும்." "எண்டரு பூத மைந்து மெய்திய நாடி மூன்று - மண்டல மூன்றுமாகி மன்னிய புணர்ப்பினாலே - பிண்டமு மண்டமாகும் பிரமனோ டைவராகக் - கண்டவர் நின்றவாறு மிரண்டினுங் காணலாகும்.", "ஆதலா லிந்த வண்டத்தறிவரும் பொருளா யென்றுந் - தீதிலா மூல நாடிற் றிகழ் சிவலிங்க மேனி - மீதிலா மந்த நாத வெளியின்மேலொளிமன் றங்குக் - காதலான் மடவாள் காணக் கருத்துற நிருத்தஞ் செய்வோம்" என்னுந் திருவாதவூரடிகள் புராணச் செய்யுள்களாலும் அறிக.

இத்திருநிருத்தமாவது பஞ்சகிருத்தியமேமாம். அது "இருவகை யிவைகடந்த வியல்புநம் மொளியா ஞான - வுருவமா னந்த மான வுயிரியாம் பெயரெமக்குப் - பரபதம் பரம ஞானம் பராற்பர மிலது காத்த - றிருமலி யிச்சை செய்தி திகழ்நட மாகு மன்றே." என்று கோயிற் புராணத்திலும். "அந்தநன் னடமே தென்னி லைந்தொழிடைத்தலாகும் - பந்தம தகற்று மிந்தப் படிவமு மதுவேயாகும் - வந்துலகத்தில் யாருங் காண்பரேல் வழுவா முத்தி - தந்தருளளிக்குந் தெய்வத் தலமுமத் தலமே யாகும்." என்னுந் திருவாதவூரடிகள் புராணத்திலும், "ஐந்து - நலமிகு தொழில்க ளோடு நாடக நடிப்ப னாதன்," என்று சிவஞான சித்தியாரிலும், "தோற்றந் துடியதனிற் றோயுந் திதிய்மைப்பிற் - சாற்றியிடு மங்கியிலே சங்கார - மூற்றமா - யூன்று மலர்ப்பதத்தேயுற்ற திரோதமுத்தி - நான்ற மலர்ப்பதத்தே நாடு." "மாயைதனையுதறி வல்வினையைச் சுட்டுமலஞ் - சாய வமுக்கியரு டானெடுத்து - நேயத்தா - லானந்தவாரிதியி லான்மாவைத் தானழுத்த - றானெந்தை யார்பரதந் தான்." என்று உண்மை விளக்கத்திலும், "மன்று ணிறைந்து பிறவி வழக்கறுக்க - நின்ற நிருத்த நிலைபோற்றி." என்று போற்றிப்பஃறொடையிலும், "நீங்கலரும் பவத் தொடர்ச்சி நீங்கமன்று ணின்றிமையோர் துதிசெய்ய நிருத்தஞ்செய்யும்." என்று சிவப்பிரகாசத்திலும் கூறியவாற்றாற் காண்க. இந்நிருத்தத்தைத் தரிசித்தலால் விளளயும் ஆனந்தம். "புளிக்கண்டவர்க்குப் புனலூறு மாபோற் - களிக்குந் திருக்கூத்துக் கண்டவர்க்கெல்லாந் - துளிக்குங்கண்ணீருடன் சோருநெஞ் சத்திரு - ளொளிக்கு மானந்த வமுதூறு முள்ளத்தே." என்னுந் திருமந்திரத் தாலும். "தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றே ணுண்ணாதே - நினைந்தொறுங் காண்டொறும் பேசுந் தோறு மெப்போது - மனைத்தெலும் புண்ணெகவானந்தத் தேன்சொரியுங் - குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ." என்னுந் திருவாசகத்தாலும் உணர்க.

  • தொடங்கியவர்

2. தில்லைவாழந்தணர்களது மகிமை.

இத்துணைப் பெருஞ்சிறப்பினதாகிய சிதம்பர ஸ்தலத்தில் வியாக்கிரபாதமுனிவர் பதஞ்சலிமுனிவர் என்பவர்களோடு, இத்தில்லைவாழந்தணர் மூவாயிரரும், பராசத்தியால் அதிட்டிக்கப்பட்ட சுத்தமாயாமயமாகிய கனகசபையின்கண்ணே பரமகாருண்ணிய சமுத்திரமாகிய சிவன் செய்தருளும். ஆனந்த தாண்டவத்தைத் தரிசனஞ் செய்து பேரானந்தம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது; பிரமாவானவர் கங்கா தீரத்தில் உள்ள அந்தர் வேதியிலே தாம் தொடங்கிய யாகத்தின் பொருட்டு, இச்சிதம்பரத்தில் வந்து வியாக்கிரபாத முனிவரது அநுமதியினாலே இவர்களை அழைத்துக் கொண்டு போயினார்; பின்பு அம்முனிவரது ஏவலினாலே, இரணியவன்மச்சக்கிர வர்த்தியானவர் அந்தர்வேதியிற் சென்று, இவ்வந்தணர் மூவாயிரரையும் வணங்கி, தேர்களில் ஏற்றி அழைத்துக் கொண்டு, சிதம்பரத்தை அடைந்தார். உடனே இவர்கள் சிதம்பரத்துக்கு வடமேற்றிசையிலே தேர்களை நிறுத்தி, இப்பாலே வந்து, தங்களை எதிர் கொண்ட வியாக்கிரபாத முனிவருக்குத் தங்களை எண்ணிக் காட்டினார்கள். அப்பொழுது, அம்மூவாயிரர்களுள், ஒருவரைக் காணாமல். இரணியவன்மச் சக்கிரவர்த்தி மனந்திகைத்துநிற்ப; அடியார்க்கெளியராகிய பரமசிவன், தேவர்கள் முதலிய யாவருங் கேட்ப இவ்விருடிகளெல்லாரும் எமக்கு ஒப்பாவர்கள்; நாமும் இவ்விருடிகளுக்கு ஒப்பாவோம்; ஆதலால், நம்மை இவர்களுள் ஒருவராகக் கைக்கொள் என்று திருவாய் மலர்ந்தருளினார். இத்திருவாக்கைக் கேட்ட சக்கிரவர்த்தியானவர், சபாநாதரே இவ்விருடிகளில் நாம் ஒருவரென்று சொல்லத்தக்க பெருமையையுடையவர்கள் இவர்கள் என்று மனம் நடுங்கி, இவர்களை நமஸ்கரித்தார். இவ்வந்தணர்கள் இத்திருவாக்கைக் கேட்டவுடனே, மிக அஞ்சி, பூமியிலே தண்டாகாரமாய் வீழ்ந்து; மீள எழுந்து வாழ்வு பெற்று, உன்மத்தராகி, ஸ்தோத்திரம் பண்ணி, "சுவாமீ! சிறியேங்களை அகத்தடிமைகளாகக் கொண்டருளும்" என்று பிரார்த்தித்து, கூத்தாடினார்கள். இச்சரித்திரம் கோயிற் புராணத்தில் விரித்துரைக்கப்பட்டது.

இவ்வந்தணர்கள் வேதாகமங்களை விதிப்படி ஓதி, அவற்றின் உண்மைப்பொருளை ஐயந்திரிபற உணர்ந்து, அவைகளில் விதித்தவழி வழுவாது ஒழுகும் மெய்யன்பர்கள். ஆதலால் இவர்கள் தம்பால் வைத்த அன்பின் பெருமையையும், அவ்வன்புக்கு எளிவந்த தமது பெருங்கருணையையும், சருவான்மாக்களும் தெளிந்து தம்மேலும் தமதன்பர்களாகிய இவர்கள் மேலும் பத்திசெய்து முத்தி பெற்றுய்தற் பொருட்டே, நடேசர் இவ்வாறு அருளிச் செய்தார்.

3. வேதவுணர்ச்சி

வேதம், இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என நான்காம். அவற்றுள், இருக்கு வேதம் இருபத்தொரு சாகையும், யசுர் வேதம் நூற்றொரு சாகையும், சாமவேதம் ஆயிரஞ் சாகையும், அதர்வவேதம் ஒன்பது சாகையும் உடையனவாம். இவை அற்பச்சுருதிவாக்கியம், பிரபலச்சுருதிவாக்கியம் என இருபகுதிப்படும். அவற்றுள், அற்பச்சுருதிவாக்கியம் கர்மானுட்டானக்கிரமங்களைச் சொல்லும். பிரபலச் சுருதிவாக்கியம் அத்தியான்மகஞானத்தைச் சொல்லும். இது முப்பத்திரண்டு உபநிஷத்தாய் இருக்கும். வேதம் என்னுஞ்சொல் அறிதற்கருவி எனப் பொருள்படும். இவ்வேதத்துக்கு அங்கங்கள் சிட்சை, வியாகரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தோவிசிதி என ஆறாம். அவற்றுள், சிட்சையாவது வேதத்தின் உச்சாரணலக்ஷணத்தை உணர்த்துவதாம். வியாகரணமாவது வேதத்தின் பதலக்ஷணத்தை விவரிப்பதாம். நிருத்தமாவது வேதத்தின் பதங்களுக்கு விவரணங் கூறுவதாம். சோதிடமாவது இலக்கினம், திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் முதலியவற்றால் வைதிக கருமங்களுக்குக் காலம் அறிவிப்பதாம், கற்பமாவது ஆசுவலாயநீயம், போதாயநீயம், ஆபஸ்தம்பம் முதலிய சூத்திர ரூபத்திருந்து, வைதிக கருமங்களைப் பிரயோகிக்கும் முறைமையைக் கற்பிப்பதாம். சந்தோவிசிதியாவது வேதத்தில் உக்தை முதலிய சந்தோபேதங்களுக்கு அக்ஷரசங்கிய கற்பிப்பதாம். இவ்வாறும் உணராக்கால், வேதங்களை ஓதுதலும், அவற்றின் பொருளை உணர்தலும், அவைகளில் விதித்த வழி ஒழுகுதலும் ஏலாவாம். ஆதலால், இவை ஒருதலையாக உணர்தற்பாலனவாம்.

இத்தில்லைவாழந்தணர்கள் இவ்வேத வேதாங்கங்களை ஓதி உணர்ந்தோர்களென்பது இங்கே "அருமறை நான்கினோடா றங்கமும் பயின்று வல்லார்" என்பதனால் உணர்த்தப்பட்டது. வேதங்களை ஓதி உணர்ந்தவழியும், அவற்றுள் விதித்த ஒழுக்கம் இவ்வழிப் பயனில்லை ஆதலால்; இவர்கள் அவ்வொழுக்கத்திற் சிறிதும் வழுவாமை, இங்கே "வருமுறை யெரிமூன் றோம்பி மன்னுயி ரருளான் மல்கத் - தருமமே பொருளாகக் கொண்டு.", "மறுவிலா மரபின் வந்து மாறிலா வொழுக்கம் பூண்டா - ரறுதொ甎ி லாட்சியாலே யருங்கலி நீக்கி யுள்ளார்.", "தானமுந் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தா - ரூனமே லொன்றுமில்லா ருலகெலாம் புகழ்ந்து போற்று - மானமும் பொறையுந் தாங்கி மனையறம் புரிந்து வாழ்வார்." என்பனவற்றால் உணர்த்தப்பட்டது. திருஞானசம்பந்தமூர்த்திநாயன

  • தொடங்கியவர்

உருத்திராக்ஷவியல்

1. உருத்திராக்ஷமாவது யாது?

தேவர்கள் திரிபுரத்தசுரர்களாலே தங்களுக்கு நிகழ்ந்த துன்பத்தை விண்ணப்பஞ் செய்து கொண்ட பொழுது, திருக்கைலாசபதியுடைய மூன்று திருக்கண்களினின்றும் பொழிந்த நீரிற்றோன்றிய மணியாம்.

2. உருத்திராக்ஷந் தரித்தற்கு யோக்கியர் யாவர்?

மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசார முடையவராய் உள்ளவர்.

3. உருத்திராக்ஷந் தரித்துக்கொண்டு மதுபானம் மாமிச போசனம் முதலியவை செய்தவர் யாது பெறுவர்?

தப்பாது நரகத்தில் வீழ்ந்து, துன்பத்தை அநுபவிப்பர்.

4. எவ்வெக் காலங்களில் உருத்திராக்ஷம் ஆவசியமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்?

சந்தியாவந்தம், சிவமந்திரசெபம், சிவபூசை, சிவத்தியானம், சிவாலயதரிசனம், சிவபுராணம் படித்தல், சிவபுராணங் கேட்டல், சிராத்தம் முதலியவை செய்யுங் காலங்களில் ஆவசியகமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்; தரித்துக்கொள்ளாது இவை செய்தவருக்குப் பலம் அற்பம்.

5. ஸ்நான காலத்தில் உருத்திராக்ஷதாரணங் கூடாதா?

கூடும்; ஸ்நானஞ் செய்யும் பொழுது உருத்திராக்ஷ மணியிற் பட்டு வடியுஞ் சலம் கங்கா சலத்துக்குச் சமமாகும்.

6. உருத்திராக்ஷத்தில் எத்தனை முகமணி முதல் எத்தனை முகமணி வரையும் உண்டு?

ஒருமுக மணி முதற் பதினாறுமுக மணி வரையும் உண்டு.

7. உருத்திராக்ஷ மணியை எப்படிக் கோர்த்துத் தரித்தல் வேண்டும்?

பொன்னாயினும், வெள்ளியாயினும், தாமிரமாயினும் முத்தாயினும், பவளமாயினும், பளிங்காயினும் இடையிடையே இட்டு, முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்தக் கோர்த்துத் தரித்தல் வேண்டும்.

8. உருத்திராக்ஷந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?

குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள், பூணூல் என்பவைகளாம்.

9. இன்ன இன்ன தானங்களில் இத்தனை இத்தனை மணி தரித்தல் வேண்டும் என்னும் நியமம் உண்டோ?

ஆம்; குடுமியிலும் பூணூலிலும் ஒவ்வொரு மணியும், தலையிலே இருபத்திரண்டு மணியும், காதுகளிலே ஒவ்வொரு மணி அல்லது அவ்வாறு மணியும், கழுத்திலே முப்பத்திரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறு மணியும், மார்பிலே நூற்றெட்டு மணியும் தரித்தல் வேண்டும். குடுமியும் பூணூலும் ஒழித்த மற்றைத் தானங்களிலே அவ்வத்தானங் கொண்ட அளவு மணி தரித்தலும் ஆகும்.

10. இந்தத் தானஙக ளெல்லாவற்றிலும் எப்போதும் உருத்திராக்ஷந் தரித்துக்கொள்ளலாமா?

குடுமியிலும், காதுகளிலும், பூணுலிலும் எப்போதுந் தரித்துக்கொள்ளலாம்; மற்றைத் தானங்களிலோ வெனின், சயனத்திலும் மலசல மோசனத்திலும், நோயினும், சனனாசெளச மரணாசெளசங்களிலுந் தரித்துக்கொள்ளலாகாது..

11. உருத்திராக்ஷதாரணம் எதற்கு அறிகுறி?

சிவபெருமானுடைய திருக்கண்ணிற் றோன்றுந் திருவருட்பேற்றிற்கு அறிகுறி.

திருச்சிற்றம்பலம்

Ganesha.jpg

Edited by ArumugaNavalar

நீங்கள் கடவுளே இல்லை என்கிறீர்களா இல்லை மதம் என்பதும் அது சொல்லும் விளக்கம் என்பதும்தான் பிழை என்கிறீர்களா.? என்பதிலை எனக்கு குழப்பம் உள்ளது..! எனக்காக அதை ஒரு முறை தீர்க்கமாக சொல்லிவிடுங்கள்...!

கீழே இருக்கும் வாழ்த்து நல்ல தமிழில் சைவத்தின் குறியை நன்கு சுட்டி நிக்கிறது....

வான் முகில் வளாது பெய்க

[நெல்]மணிவளம் சிறக்க மன்னர்

கோன் முறை அரசு செய்க

குறைவிலாது யிர்கள் வாழ்க

நான் மறை அறங்களோங்க

மேன்மை கொள் "சைவநீதி"

விளங்குக உலகமெல்லாம்...!

சுருக்கமாக சைவம் என்ன சொல்ல வருகிறது என்பதுக்கு எடுத்து கொள்ள கூடிய ஒரு வாழ்த்து பாடல் அது.. இங்கை ஆறுமுகநாவலர் சொல்வதன் அர்த்தமும் அதுதான் நெறியோடு வாழ எல்லாருக்குமான ஒரு ஒழுக்க நெறியாக கூட அதை எடுத்து கொள்ளலாம்... அதாவது ஒழுக்கத்தோடு ஒரு நெறி முறைக்குள் வாழும் ஒருவனால் அல்லது ஒருத்தியால் மற்றையோருக்கு தீங்கு செய்ய விளைய மாட்டார்கள் என்கிறது சைவ நீதி...!

அதையும் தாண்டி ஒவ்வொரு விடயத்துக்கும் விஞ்ஞான விளக்கம் இருக்கிறது... நீங்கள் சின்ன வயசிலை புளிய மரத்துக்கு கீழ படுக்காதை பேய் அடிச்சிடும் எண்டு பாட்டாவோ பாட்டியோ சொல்லி இருப்பினம் ( இதுக்கும் சைவத்துக்கும் சம்பந்தம் இல்லை) அப்ப விளங்காதை விடையம் காலப்போக்கில விஞ்ஞான பாடம் படிக்கேக்கை உங்களுக்கு விளங்கி இருக்கும்... அது போலத்தான் சைவ நீதிகளும் எல்லா விடயங்களும் கற்பனை செய்யப்பட கூடியதுதான் , கற்பனை செய்யப்படும் விடயங்கள் மட்டும்தான் செயலாக்க பட முடியும்... அதுதானே அறிவியலில் ஆரம்பமே....!

1) கடவுள் இருக்கிறார இல்லையா எங்கிற கேள்வியை விட , இல்லாத ஒன்று இருக்கிறதா இல்லையா என்பது பயனற்ற விவாதம் என்பது தான் எனது கருத்து.இருக்கிறது என்று நிறுவப்படாதா ஒன்று பற்றி எப்படி விவாதிக்க முடியும்? முதலில் இருக்கிறது என்று நீங்கள் நிறுவுங்கள் அதன் பின் இல்லை என்று நாம் அதனை மறுதலிக்கலாம்.இதுவரை இருக்கிறது என்று எனக்கு எவரும் நிறுவியது கிடையாது.

2)மதம் மனிதனைக் கொல்லும் ஒரு நோய், அதனால் மனித குலத்திற்கு தீமைகளே அதிகம்.மதத்தின் பேரால் தான் உலகில் அதிக அளவிலானவர்கள் கொல்லப் பட்டுள்ளார்கள்.ஒரு மனிதனை நல் வழிப் படுத்த அறம் சார்ந்த நூல்களே போதும்.அதற்கு எமக்கு திருக்குறள் ஒன்றே போதும்.

//அதாவது ஒழுக்கத்தோடு ஒரு நெறி முறைக்குள் வாழும் ஒருவனால் அல்லது ஒருத்தியால் மற்றையோருக்கு தீங்கு செய்ய விளைய மாட்டார்கள் என்கிறது சைவ நீதி...! //

நல்ல கொள்கை தான் ஆனால் இங்கே ' நல் ஒழுக்கம்; என்பது என்ன? அங்கே தானே பிரச்சினை உருவெடுக்கிறது, நாவலர் சொல்கிறார் ஈசுவர துரோகம் ஒரு துர் நடத்தை என்று.இசூலாமிய நூல்களில் சொல்வார்கள் இசுலாமியர்கள் இல்லாத மற்றவெரும் நல் ஒழுக்கம் அற்றவர்கள் என்று.கிருத்துவத்தில் சொல்வார்கள் நீங்கள் ஒவ்வொரு நாளும் ஜெபிப்பது தான் நல் ஒழுக்கம் என்று.

எனக்கு எது அறம் என நான் உணருகிறேனோ அதன் படி நடத்தலே அற வழி என நினைத்து அதன் படி நடக்க எனக்கு எந்த மதமும் அவசியம் இல்லை.ஆகவே நல் வழி என நான் கருதும் அற வழி நடக்க எனக்கு எந்த மதமும் அவசியம் இல்லை.

//கற்பனை செய்யப்படும் விடயங்கள் மட்டும்தான் செயலாக்க பட முடியும்... அதுதானே அறிவியலில் ஆரம்பமே....!//

கற்பனைகள் எல்லாமுமே உண்மையாகி விடுவதில்லை,அதனைத் தான் முன்னரும் சொல்லி இருக்கிறேன்.உண்மை எது என்பதை அறிவியல் ஆராச்சி தான் சொல்ல முடியும்.உண்மைகளைக் கண்டறிவதே அறிவியல் முறமை எனப் படுகிறது.ஆகவே வெறும் கற்பனைகளை உண்மை என்று நம்புவதை விட, அறிவியல் மூலம் உண்மை என்று நிருபீக்கப்பட்டவற்றயே நான் உண்மை என்று நம்புகிறேன்.அது வரை கற்பனைகள் எல்லாம் கற்பனைகளே.எனக்குக் கற்பனையான ஒரு கடவுளும் அதனைப் போதிக்கும் கற்பனைகளால் ஆன மதமும் அவசியம் இல்லை.உண்மைகளைக் கண்டறியும் அறிவியலே போதும்.

ஆறுமுகத்தார் சும்மா பழைய குப்பைகளை வெட்டி ஒட்டிக் கொண்டு மற்றவை சொல்லும் கருதுக்களுக்கு சிங் சக் போட்டுக்கொண்டிருக்காம சொந்தமா எதாவது சொல்ல முடியும் அல்லது கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கோ, அப்பத் தான் இங்கே உங்களுக்கு விவாதிக்கச் மண்டைக்க சரக்கு இருக்கா என்று தெரிய வரும். :lol:

  • தொடங்கியவர்

8. பஞ்சாக்ஷரவியல்

175. சைவசமயிகள் நியமமாகச் செபியக்கற்பாலதாகிய சிவமூலமந்திரம் யாது?

ஸ்ரீபஞ்சாக்ஷரம்.(திரு ஐந்து எழுத்து).

176. ஸ்ரீபஞ்சாக்ஷர செபஞ் செய்தற்கு யோக்கியர் ஆவார் யாவர்?

மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய், சிவதீ¨க்ஷ பெற்றவராய் உள்ளவர்.

177. ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை எப்படிப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்?

தத்தம் வருணத்துக்கும் ஆச்சிரமத்துக்குந் தீ¨க்ஷக்கும் ஏற்பக் குருமுகமாகவே பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

178. மந்திரோபதேசம் பெற்றவர் குருவுக்கு யாது செய்து கொண்டு செபித்தல் வேண்டும்?

குருவை வழிபட்டு, அவருக்கு வருடந்தோறும் இயன்ற தக்ஷணை கொடுத்துக்கொண்டே செபித்தல் வேண்டும்.

179. ஸ்ரீபஞ்சாக்ஷரத்திலே நியமமாக ஒரு காலத்துக்கு எத்தனை உருச் செபித்தல் வேண்டும்?

நூற்றெட்டுருவாயினும், ஐம்பதுருவாயினும், இருபத்தைந்துருவாயினும், பத்துருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.

180. செபத்துக்கு எதைக் கொண்டு உரு எண்ணல் வேண்டும்?

செபமாலையைக் கொண்டாயினும், வலக்கை விரலிறையைக் கொண்டாயினும் உரு எண்ணல் வேண்டும். (விரலிறை=கட்டைவிரல்)

181. செபமாலையை என்ன மணி கொண்டு செய்வது உத்தமம்?

உருத்திராக்ஷமணி கொண்டு செய்வது உத்தமம்.

182. செபமாலைக்கு எத்தனை மணி கொள்ளத் தகும்?

இல்வாழ்வான் இருபத்தேழு மணியும், துறவி இருபத்தைந்து மணியுங் கொள்ளத் தகும். இல்வாழ்வான் நூற்றெட்டுமணி ஐம்பத்து நான்கு மணிகளாலுஞ் சபமாலை செய்து கொள்ளலாம்.

183. செபமாலைக்கு எல்லா முகமணியும் ஆகுமா?

இரண்டு முக மணியும், மூன்று முக மணியும், பன்னிரண்டுமுக மணியும், பதின்மூன்று முக மணியுஞ் செபமாலைக்கு ஆகாவாம்; அன்றியும், எல்லாமணியும் ஒரே விதமாகிய முகங்களையுடையனவாகவே கொள்ளல் வேண்டும்; பல விதமாகிய முகமணிகளையுங் கலந்து கோத்த செபமாலை குற்றமுடைத்து.

184. செபமணிகளை எதினாலே கோத்தல் வேண்டும்?

வெண்பட்டிலேனும் பருத்தியிலேனும் இருபத்தேழிழையினா லாக்கிய கயிற்றினாலே கோத்தல் வேண்டும்.

185. செபமாலையை எப்படிச் செய்தல் வேண்டும்?

முகத்தோடு முகமும் அடியோடு அடியும் பொருந்தக் கோர்த்து, ஒன்றை ஒன்று தீண்டா வண்ணம் இடையிடையே நாகபாசம், பிரமக்கிரந்தி, சாவித்திரி என்பவைகளுள் இயன்றதொரு முடிச்சை இட்டு, வடநுனி இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதிலே நாயகமணியை ஏறிட்டுக் கோத்து, முடிந்து கொள்ளல் வேண்டும். நாயகமணிக்கு மேரு என்றும் பெயர்.

186. செபமாவது யாது?

தியானிக்கப்படும் பொருளை எதிர்முக மாக்கும் பொருட்டு அதனை உணர்த்தும் மந்திரத்தை உச்சரித்தலாம்.

187. மந்திரம் என்பதற்குப் பொருள் யாது?

நினைப்பவனைக் காப்பது என்பது பொருள். ஆகவே, மந்திரம் என்னும் பெயர், நினைப்பவனைக் காக்கும் இயல்புடைய வாச்சியமாகிய சிவத்துக்குஞ் சிவசத்திக்குமே செல்லும்; ஆயினும், வாச்சியத்துக்கும் வாசகத்துக்கும் பேதமில்லாமை பற்றி, உபசாரத்தால் வாசகத்துக்குஞ் செல்லும்; எனவே, மந்திரம் வாச்சிய மந்திரம், வாசகமந்திரம் என இரு திறப்படும் என்ற படியாயிற்று. [மந்=நினைப்பவன்; திர=காப்பது]

188. மந்திரசெபம் எத்தனை வகைப்படும்?

மானசம், உபாஞ்சு, வாசகம் என மூவகைப்படும்.

189. மானசமாவது யாது?

நா நுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை பொருத்தி மனசினாலே செபித்தலாம்.

190. உபாஞ்சுவாவது யாது?

தன் செவிக்கு மாத்திரங் கேட்கும்படி, நா நுனி உதட்டைத் தீண்ட மெல்லச் செபித்தலாம். இதற்கு மந்தம் என்றும் பெயர்.

191. வாசகமாவது யாது?

அருகிலிருக்கும் பிறர் செவிக்குங் கேட்கும்படி செபித்தலாம். இதற்குப் பாஷ்யம் என்றும் பெயர்.

192. இம்மூவகைச் செபமும் பலத்தினால் ஏற்றக்குறைவு உடையனவா?

ஆம்; வாசகம் நூறு மடங்கு பலமும், உபாஞ்சு பதினாயிர மடங்கு பலமும், மானசங் கோடி மடங்கு பலமுந் தரும்.

193. எந்தத் திக்கு முகமாக எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?

வடக்குமுக மாகவேனும் கிழக்குமுக மாகவேனும், மரப்பலகை, வஸ்திரம், இரத்தின கம்பளம், மான்றோல், புலித்தோல், தருப்பை என்னும் ஆசனங்களுள் இயன்ற தொன்றிலே, முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத் தொடையினுள்ளே வலப் புறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்த்திருந்து கொண்டு, செபித்தல் வேண்டும்.

194. எப்படி இருந்து செபிக்க லாகாது?

சட்டையிட்டுக் கொண்டும், சிரசில் வேட்டி கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் கொண்டும், கெளபீனந் தரியாதும், வேட்டி தரியாதும், விரலிலே பவித்திரந் தரியாதும், பேசிக் கொண்டும், இருளில் இருந்து கொண்டும், நாய், கழுதை, பன்றி முதலியவற்றையும், புலையர் முதலாயினோரையும் பார்த்துக் கொண்டுஞ் செபிக்கலாகாது. செபஞ் செய்யும் போது, கோபம், களிப்பு, கொட்டாவி, தும்பல், நித்திரை, சோம்பல், வாதம் முதலியவை ஆகாவாம்.

195. செபமாலை கொண்டு எப்படி செபித்தல் வேண்டும்?

பிறர் கண்ணுக்குப் புலப்படா வண்ணம் பரிவட்டத்தினால் மூடப்பட்ட செபமாலையை, வாசகமாகக் செபிக்கிற் சுட்டுவிரலிலும், மந்தமாகச் செபிக்கின் நடுவிரலிலும், மானசமாகச் செபிக்கின் ஆழிவிரலிலும் வைத்து, சிவபெருமானுடைய திருவடிகளை மனசிலே தியானித்துக் கொண்டு, பெருவிரலினாலே நாயக மணிக்கு அடுத்த முகமேனோக்கிய மணியை முதலாகத் தொட்டு, ஒவ்வொரு மணியாகப் போகத்தின் பொருட்டுக் கீழ்நோக்கித் தள்ளியும் முத்தியின் பொருட்டு மேனோக்கித் தள்ளியுஞ் செபித்து, பின்பு நாயகமணி கைப்பட்டதாயின், அதனைக் கடவாது திரும்ப மறித்து வாங்கி, அதனைத் திரும்பக் கையில் ஏறிட்டுச் செபித்தல் வேண்டும். செபிக்கும் போது, செபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஓசைப்படிற் பாவமுண்டாம்.

196. இன்ன இன்ன பொழுது செபித்தவர் போக மோக்ஷங்களுள் இன்னது இன்னது பெறுவர் என்னும் நியமம் உண்டோ?

ஆம்; பிராணவாயுவானது இடப்பக்க நாடியாகிய இடையிலே நடக்கும் போது செபித்தவர் போகத்தையும், வலப்பக்க நாடியாகிய பிங்கலையிலே நடக்கும் போது செபித்தவர் மோக்ஷத்தையும், நடுநிற்கு நாடியாகிய கழுமுனையிலே நடக்கும் போது செபித்தவர் போகம் மோக்ஷம் என்னும் இரண்டையும் பெறுவர்.

197. ஸ்ரீ பஞ்சாக்ஷர செபம் எவ்வெக் காலங்களிலே விசேஷமாகச் செய்யத் தக்கது?

அட்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, விதிபாதயோகம், பன்னிரண்டு மாதப்பிறப்பு, கிரகணம், சிவராத்திரி, அர்த்தோதயம், மகோதயம் முதலாகிய புண்ணிய காலங்களிலே புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்து, தியானஞ் செபம் முதலியன விசேஷமாகச் செய்தல் வேண்டும். சித்திரை, ஐப்பசி என்னும் இவ்விரண்டு மாதப் பிறப்பும் விஷ¤ எனப்படும்; இவைகளிலே, மாதம் பிறத்தற்கு முன்னெட்டு நாழிகையும் பின்னெட்டு நாழிகையும் புண்ணிய காலம். ஆடி மாதப் பிறப்பு, தக்ஷ¢ணாயனம் எனப்படும்.

இதிலே மாதம் பிறக்கு முன் பதினாறு நாழிகை புண்ணிய காலம். தை மாதப்பிறப்பு உத்தராயணம் எனப்படும்; இதிலே, மாதம் பிறந்த பின் பதினாறு நாழிகை புண்ணிய காலம். கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி என்னும் இந்நான்கு மாதப் பிறப்பும் விட்டுணுபதி எனப்படும்; இவைகளிலே மாதம் பிறக்கு முன் பதினாறு நாழிகை புண்ணிய காலம். ஆனி, புரட்டாதி, மார்கழி, பங்குனி என்னும் இந்நான்கு மாதப்பிறப்பும் சடசீதிமுகம் எனப்படும்; இவைகளிலே, மாதம் பிறந்த பின் பதினாறு நாழிகை புண்ணிய காலம். சூரிய கிரகணத்திலே பரிசகாலம் புண்ணிய காலம்; சந்திர கிரகணத்திலே விமோசன காலம் புண்ணிய காலம். அர்த்தோதயமாவது தை மாதத்திலே ஞாயிற்றுக் கிழமை அமாவாசையுந் திருவோண நக்ஷத்திரமும் விதிபாத யோகமுங் கூடிய காலம். மகோதயமாவது தை மாதத்திலே திங்கட்கிழமையும் அமாவாசையுந் திருவோண நக்ஷத்திரமும், விதிபாத யோகமுங் கூடிய காலம்.

198. ஸ்ரீ பஞ்சாக்ஷர செபத்தாற் பயன் என்னை?

ஸ்ரீ பஞ்டாக்ஷரத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னும் முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின், விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தற் போல, ஆன்மாவினிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நிங்கும்படி ஞானானந்தத்தைப் பிரசாதித் தருளுவர்.

திருச்சிற்றம்பலம்

Edited by ArumugaNavalar

1) கடவுள் இருக்கிறார இல்லையா எங்கிற கேள்வியை விட , இல்லாத ஒன்று இருக்கிறதா இல்லையா என்பது பயனற்ற விவாதம் என்பது தான் எனது கருத்து.இருக்கிறது என்று நிறுவப்படாதா ஒன்று பற்றி எப்படி விவாதிக்க முடியும்? முதலில் இருக்கிறது என்று நீங்கள் நிறுவுங்கள் அதன் பின் இல்லை என்று நாம் அதனை மறுதலிக்கலாம்.இதுவரை இருக்கிறது என்று எனக்கு எவரும் நிறுவியது கிடையாது..

காற்று இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொண்டீர்கள்...??? அது அசையும் போது ஏற்பட்ட உடல் உணர்வுகளால் எண்று நான் பதில் சொல்வேன்.. நீங்கள் எப்படி ...??? விஞ்ஞானிகள் வந்து விளக்கமாக சொன்னதின் பின்னால்த்தான் எண்டு சொல்வீர்களா..???

2)மதம் மனிதனைக் கொல்லும் ஒரு நோய், அதனால் மனித குலத்திற்கு தீமைகளே அதிகம்.மதத்தின் பேரால் தான் உலகில் அதிக அளவிலானவர்கள் கொல்லப் பட்டுள்ளார்கள்.ஒரு மனிதனை நல் வழிப் படுத்த அறம் சார்ந்த நூல்களே போதும்.அதற்கு எமக்கு திருக்குறள் ஒன்றே போதும். ..

மதம் இல்லாத நாடு எண்று எதுவுமே இல்லைத்தான்.. ஆனால் மதம் மறுப்பு செய்யும் சீனாவிலும், முன்னாள் சோவியற் யூனியனிலும்( வோசோ கூட்டமைப்பு நாடுகளில்) மனித உரிமைகள் அதிகமாக மீறப்படுகின்றன, மீறப்பட்டன...

கற்பனைகள் எல்லாமுமே உண்மையாகி விடுவதில்லை,அதனைத் தான் முன்னரும் சொல்லி இருக்கிறேன்.உண்மை எது என்பதை அறிவியல் ஆராச்சி தான் சொல்ல முடியும்.உண்மைகளைக் கண்டறிவதே அறிவியல் முறமை எனப் படுகிறது.ஆகவே வெறும் கற்பனைகளை உண்மை என்று நம்புவதை விட, அறிவியல் மூலம் உண்மை என்று நிருபீக்கப்பட்டவற்றயே நான் உண்மை என்று நம்புகிறேன்.அது வரை கற்பனைகள் எல்லாம் கற்பனைகளே.எனக்குக் கற்பனையான ஒரு கடவுளும் அதனைப் போதிக்கும் கற்பனைகளால் ஆன மதமும் அவசியம் இல்லை.உண்மைகளைக் கண்டறியும் அறிவியலே போதும்.

ஆனால் கற்பனை செய்யாதது எதுவுமே உண்மை ஆகிவிடுவதும் இல்லை....!

சைவம் சொன்ன தியானம், மன அமைதி, மனோவசியம் என்பவற்றை விஞ்ஞானம் ஹிப்னாட்டிசம், மெடிட்டேசன் எண்று சொல்லி விட்டு விட்டுது... இது சம்பந்தமாய் மனிதன் மூளை சம்பந்தமாய் விஞ்ஞானம் சொன்ன வற்றைத்தான் இப்போதும் நம்புகிறீர்கள்..?

  • தொடங்கியவர்

9.சிவலிங்கவியல்

1. சிவபெருமானை ஆன்மாக்கள் வழிபடும் இடங்கள் எவை?

சிவபெருமான், புறத்தே சிவலிங்கம் முதலிய திருமேனிகளும் குருவுஞ் சங்கமமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், ஆன்மாக்கள் அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம். சிவத்துக்குப் பெயராகிய இலிங்கம் என்னும் பதம், உபசாரத்தால், அச்சிவம் விளங்கப் பெறும் ஆதாரமாகிய சைல முதலியவற்றிற்கும் வழங்கும். [சைலம்=சிலையாலாகியது]

2. சிவபெருமான் இவ்விடங்களில் நிற்பர் என்றது அவர், எங்கும் வியாபகர் என்றதனோடு மாறுபடுமன்றோ?

மாறுபடாது; சிவபெருமான், எங்கும் வியாபகமாய் நிற்பினும், இவ்விடங்களில் மாத்திரமே தயிரில் நெய் போல விளங்கி நிற்பர்; மற்றை இடங்களிலெல்லாம் பாலில் நெய் போல வெளிப்படாது நிற்பர்.

3. சிவலிங்கம் எத்தனை வகைப்படும்?

பரார்த்த லிங்கம், இட்ட லிங்கம் இருவகைப்படும்.

4. பரார்த்த லிங்கமாவது யாது?

சிவபெருமான் சங்கார காலம் வரையுஞ் சாந்நித்தியராய் இருந்து ஆன்மாக்களுக்கு அநுக்கிரக்கப் பெறும் இலிங்கமாம். இது, தாவரலிங்கம் எனவும் பெயர் பெறும். சாந்நித்யம்=அண்மை, அடுத்தல், வெளிப்படுத்தல், தாவரம் எனினும், திரம் எனினும், நிலையியற் பொருள் எனினும் பொருந்தும்.

  • தொடங்கியவர்

5. பரார்த்த லிங்கம் எத்தனை வகைப்படும்?

சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுட லிங்கம் என ஐவகைப்படும். இவைகளுள்ளே, சுயம்பு லிங்கமாவது தானே தோன்றியது. காண லிங்கமாவது விநாயகர், சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே தாபிக்கப்பட்டது. தைவிக லிங்கமாவது விட்டுணு முதலிய தேவர்களாலே தாபிக்கப்பட்டது. ஆரிட லிங்கமாவது இருடிகளாற் றாபிக்கப்பட்டது. அசுரர், இராக்கதர் முதலாயினாற் றாபிக்கப்பட்டதும் அது. மானுடலிங்கமாவது மனிதராற் றாபிக்கப்பட்டது.

6. இவ்வைவகை யிலிங்கங்களும் ஏற்றக்குறைவு உடையனவா?

ஆம்; மானுட லிங்கத்தின் உயர்ந்தது ஆரிட லிங்கம்; அதனின் உயர்ந்தது தைவிக லிங்கம்; அதனின் உயர்ந்தது காணலிங்கம்; அதனின் உயர்ந்தது சுயம்பு லிங்கம்.

7. பரார்த்த லிங்கப் பிரதிட்டை, பரார்த்த பூஜை, உற்சவம் முதலியவை செய்தற்கு அதிகாரிகள் யாவர்?

ஆதிசைவர்களுக்குள்ளே, சமயதீக்ஷை, விசேஷதீக்ஷை, நிருவாணதீக்ஷை, ஆசாரியாபிஷேகம் என்னும் நான்கும் பெற்றவர்களாய்ச் சைவாகமங்களிலே மகாபாண்டித்திய முடையவர்களாய் உள்ளவர்கள்.

8. திருக்கோயிலுள் ளிருக்குஞ் சிவலிங்கம் முதலிய திருமேனிகள் எல்லாரலுமே வழிபடற் பாலானவா?

ஆம்; சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கும் மார்க்கத்தாராலும் வழிபடற் பாலனவேயாம்; ஆயினும், அவ்வழிபாடு அவரவர் கருத்து வகையால் வேறுபடும்; படவே, அவருக்குச் சிவபெருமான் அருள் செய்யும் முறைமையும் வேறுபடும்.

9. சிவலிங்கம் முதலிய திருமேனிகளைச் சரியையாளர்கள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

சரியையாளர்கள் பகுத்தறித லில்லாது சிவலிங்கம் முதலிய திருமேனியே சிவமெனக் கண்டு வழிபடுவர்கள்; அவர்களுக்குச் சிவபெருமான் அங்கே வெளிப்படாது நின்று அருள் செய்வர்.

10. கிரியையாளர்கள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

கிரியையாளர்கள் அருவப் பொருளாகிய சிவபிரான் ஈசானம் முதலிய மந்திரங்களினாலே சிவலிங்க முதலிய திருவுருக் கொண்டார் என்று தெளிந்து, மந்திர நியாசத்தினால் வழிபடுவர்கள்; அவர்களுக்குச் சிவபெருமான், கடைந்த பொழுது தோன்றும் அக்கினிபோல, அவ்வம் மந்திரங்களினாலும் அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது தோன்றி நின்று, அருள் செய்வர்.

11. யோகிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

யோகிகள், யோகிகளுடைய இருதய மெங்கும் இருக்குஞ் சிவபெருமான் இந்தத் திருமேனியிலும் இருந்து பூசை கொண்டருளுவர் என்று தெளிந்து, சாத்திய மந்திரங்களினால் வழிபடுவார்கள்; அவர்களுக்குச் சிவபெருமான், கறந்த பொழுது தோன்றும் பால் போல, அவ்வம் மந்திரங்களினால் அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது தோன்றி நின்று அருள் செய்வர்.

12. ஞானிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்/ அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

ஞானிகள் மேலே சொல்லப்பட்ட முத்திறத்தாரும் போல ஓரிடமாகக் குறியாது, அன்பு மாத்திரத்தால் அங்கே வழிபடுவார்கள். அவர்களுக்குச் சிவபெருமான், கன்றை நினைந்த தலையீற்றுப் பசுவின் முலைப்பால் போலக், கருணை மிகுதியினால் அவ்வன்பே தாமாகி, எப்பொழுதும் வெளிப்பட்டு நின்று அங்கே அருள் செய்வர்.

13. சிவபெருமானுடைய திருவுருவஞ் சிவசக்தி வடிவம் என்று முன் செல்லப்பட்ட தன்றோ: இங்கே அவர் திருவுருவம் மந்திர வடிவம் என்றது என்னை?

சிவபெருமானுக்கு வாச்சிய மந்திரமாகிய சிவசத்தியே உண்மை வடிவம்; அச்சிவசத்தி, கரியினிடத்தே அக்கினி போல வாசக மந்திரத்தினிடத்தே நின்று சாதகருக்குப் பயன் கொடுக்கும். ஆதலினாலே, சிவபெருமானுக்குச், சிவசத்தியினால், வாசக மந்திரத்தோடு சம்பந்தம் உண்டு. அச்சம்பந்தம் பற்றி வாசக மந்திரஞ் சிவபெருமானுக்கு உபசார வடிவமாம்.

14. மந்திரநியாசம் என்றது என்ன?

வாச்சிய மந்திரங்களாகிய சிவசக்தி பேதங்களை உள்ளத்தில் சிந்தித்து, அவைகளை அறிவிக்கும் வாசக மந்திரங்களை உபசரித்துச், சிவபெருமானுக்கு உபசார வடிவத்தை அம்மந்திரங்களினாலே சிர முதலாக அமைத்தலாம். [நியசித்தல்=வைத்தல், பதித்தல்]

15. இட்டலிங்கமாவது யாது?

ஆசாரியர் விஷேதீக்ஷையைப் பண்ணி, சீடனைப் பார்த்து, "நீ உள்ளளவுங் கைவிடாது இவரை நாடோறும் பூசி" என்று அநுமதி செய்து, "அடியேன் இச்சரீரம் உள்ளவரையுஞ் சிவபூசை செய்தன்றி ஒன்றும் உட்கொள்ளேன்" என்று பிரதிஞ்ஞை செய்வித்துக்கொண்டு கொடுக்க, அவன் வாங்கிப் பூசிக்கும் இலிங்கமாம். இது ஆன்மார்த்த லிங்கம் எனவும், சல லிங்கம் எனவும் பெயர் பெறும்.

சர்வாதிகார ஆட்சி நடக்கின்ற சீனா போன்ற நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதில் ஆச்சரியம் இல்லை.

ஆனால் மதம் என்பது அன்பைப் போதிக்கின்றது என்று சொல்கிறார்கள். அந்த மதத்தின் பெயரால் அழிவுகளை ஏற்படுத்துகிறார்கள். ஆகவே இந்த மதங்கள் தவறானவை என்று சொல்கிறோம். மதங்கள் சரியானவையாகவும், அவைகள் கடவுளால் உருவாக்கப்பட்டவையாகவும் இருந்தால், மதங்கள் இந்த நிலையில் இருக்காது.

சர்வாதிகார ஆட்சி நடக்கின்ற சீனா போன்ற நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதில் ஆச்சரியம் இல்லை.

ஆனால் மதம் என்பது அன்பைப் போதிக்கின்றது என்று சொல்கிறார்கள். அந்த மதத்தின் பெயரால் அழிவுகளை ஏற்படுத்துகிறார்கள். ஆகவே இந்த மதங்கள் தவறானவை என்று சொல்கிறோம். மதங்கள் சரியானவையாகவும், அவைகள் கடவுளால் உருவாக்கப்பட்டவையாகவும் இருந்தால், மதங்கள் இந்த நிலையில் இருக்காது.

அப்ப மனித உரிமை மீறல்களுக்கு மதம் காரணம் இல்லை எண்டதையும் ஒத்து கொள்ளுறீங்கள்.... சிலர் மதத்தை தவறாக பயன் படுத்துறதை பார்த்து அந்த மதமே தவறு என்பதுக்கும் வித்தியாசம் இருக்கு...!

அப்ப மனித உரிமை மீறல்களுக்கு மதம் காரணம் இல்லை எண்டதையும் ஒத்து கொள்ளுறீங்கள்.... சிலர் மதத்தை தவறாக பயன் படுத்துறதை பார்த்து அந்த மதமே தவறு என்பதுக்கும் வித்தியாசம் இருக்கு...!

என்னால் இதை ஒத்துக்கொள்ள முடியாது அதே நேரம் நிராகரிக்கவும் முடியாது, பல அரபு நாடுகளில் மனித உரிமை மீறல்களுக்கு மதம் காரணமாக உள்ளது

  • தொடங்கியவர்

16. இட்டலிங்கம் எத்தனை வகைப்படும்?

வாண லிங்கம், படிக லிங்கம், இரத்தின லிங்கம், லோகஜ லிங்கம், சைல லிங்கம், க்ஷணிக லிங்கம், எனப் பலவகைப்படும்.

17. இட்டலிங்கம் பூசைக்கு அதிகாரிகள் யாவர்?

பிராமணர் முதலிய நான்கு வருணத்தாரும் அநுலோமர் அறுவருமாகிய பத்துச் சாதியாருள்ளும், அங்ககீன ரல்லாதவர்கள் இட்டலிங்க பூசைக்கு அதிகாரிகள்; இவர்களுள்ளும், பிணியில்லாதவராய், இடம் பொருளேவல்கள் உடையவராய்ச், சிவபூசா விதி, பிராயச்சித்த விதி, மார்கழி மாதத்துக் கிருதாபி§க்ஷகம் முதலாகப் பன்னிரண்டு மாதமுஞ் செய்யப்படும் மாதபூசாவிதி, சாம்பவற்சரிகப் பிராயச் சித்தமாகச் சாத்தப்படும் பவித்தர விதி முதலியவைகளை நன்றாக அறிந்தவராய், அறிந்தபடியே அநுட்டிக்க வல்லவராய் உள்ளவர் மாத்திரமே, வாண முதலிய சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொண்டு பூசை பண்ணலாம். மற்றவரெல்லாரும் க்ஷணிக லிங்க பூசையே பண்ணக் கடவர். அவர் குளிக்கப் புகுந்து சேறு பூசிக்கொள்வது போலச் சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்துக் கொள்ளப் புகுந்து பாவந் தேடிக்கொள்வது புத்தி யன்று.

18. எவ்வகைப்பட்ட சிவலிங்கம் பிரதிட்டை செய்வித்துக் கொள்ளல் வேண்டும்?

சிவாகம விதிவிலக்குகளை ஆராய்ந்து, சிவலிங்கங்களைப் பரீ¨க்ஷ செய்து, யாதொரு குற்றமும் இல்லாததாய் நல்லிலக்கணங்கள் அமையப்பெற்றதாய் உள்ள சிவலிங்கத்தையே பிரதிட்டை செய்வித்துக் கொள்ளல் வேண்டும்.

19. க்ஷணிக லிங்கமாவது யாது?

பூசித்தவுடன் விடப்படும் இலிங்கமாம்.

20. க்ஷணிக லிங்கம் எத்தனை வகைப்படும்?

மண், அரிசி, அன்னம், ஆற்றுமணல், கோமயம், வெண்ணெய், உருத்திராக்ஷம், சந்தனம், கூர்ச்சம், புஷ்பமாலை, சருக்கரை, மா எனப் பன்னிரண்டு வகைப்படும்.

காற்று இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொண்டீர்கள்...??? அது அசையும் போது ஏற்பட்ட உடல் உணர்வுகளால் எண்று நான் பதில் சொல்வேன்.. நீங்கள் எப்படி ...??? விஞ்ஞானிகள் வந்து விளக்கமாக சொன்னதின் பின்னால்த்தான் எண்டு சொல்வீர்களா..???

ஆமாம் அப்படித் தான்.காற்று என்றால் என்ன அதில் என்ன இருக்கிறது அதன் குண இயல்புகள் என்ன அதில் என்ன என்ன மூலங்கள் இருக்கின்றன.அதனைப் பரிசோதிப்பதற்கான பரிசோதனைகள் என்ன என்ன.அவை பல தடவைகள் பரிசோதிக்கப்பட்டதா அதனை எல்லா அறிவியளாளரும் ஏற்றுக் கொள்கின்றனரா.அது சம்பந்தமான பரிசோதனைகள் சரியானவையா என பல நூறு பேரால் ஆரயப் பட்டே அறிவியல் ரீதியாக நிருபணமாகிறது.அப்படி நிரூபிக்கபடும் போது நானும் கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்வேன் , அதுவரை கடவுள் என்பது கற்பனையே.

மதம் இல்லாத நாடு எண்று எதுவுமே இல்லைத்தான்.. ஆனால் மதம் மறுப்பு செய்யும் சீனாவிலும், முன்னாள் சோவியற் யூனியனிலும்( வோசோ கூட்டமைப்பு நாடுகளில்) மனித உரிமைகள் அதிகமாக மீறப்படுகின்றன, மீறப்பட்டன...

ஆனால் கற்பனை செய்யாதது எதுவுமே உண்மை ஆகிவிடுவதும் இல்லை....!

சைவம் சொன்ன தியானம், மன அமைதி, மனோவசியம் என்பவற்றை விஞ்ஞானம் ஹிப்னாட்டிசம், மெடிட்டேசன் எண்று சொல்லி விட்டு விட்டுது... இது சம்பந்தமாய் மனிதன் மூளை சம்பந்தமாய் விஞ்ஞானம் சொன்ன வற்றைத்தான் இப்போதும் நம்புகிறீர்கள்..?

மத அடிப்படைவாத நாடுகளான நேபாளம்,சவுதி அராபிய மற்றும் ஆப்கானில் தான் அடிப்படை மனித உரிமைகள் அதிகம் மீறப்பட்டன.மத நம்பிக்கை அதிகம் இல்லாத மேற்குலகில் தான் மனித உரிமைகள் அதிகம் பாதுகாக்கப்படு வருகின்றன.சிங்கள பவுத்தம் தலை விரித்தாடும் சிறிலங்காவில் இருந்து நீங்கள் அனுபவிக்காத மனித உரிமை மீறல்களா? ஆகவே மதம் என்பது மனித உரிமைகளை மறுப்பதை நாங்கள் நாவலரின் ஈசுவரத் துரோகிகளின் சித்திரவதைகளில் இருந்து வெகு தெளிவாகக் காணலாம்.சோவியத் யூனியனிலும் சீனாவிலும் நடந்தவைக்கு மத நம்பிக்கையின்மை காரணம் அல்ல.அவை பற்றியும் தனியாக இன்னொரு தலைப்பில் கருத்தாடலாம்.

மூளைக்கு ஓய்வு கொடுத்தல் உடல் உழைப்புக்கு ஓய்வு கொடுத்தல் என்பதைத் தெரிந்து கொள்ள மதம் அவசியம் இல்லை. நான் நித்திரை கொள்ளலாம், கண்ணை மூடி நல்ல பாட்டைக் கேட்டுக் கொண்டிருக்கலாம், இப்படி பல மனதுக்கு அமைதியைத் தரும் விடயங்கள் இருக்கு.மூளை சம்பந்தமாக அறிவியல் என்ன சொல்கிறதோ அதனையே நான் நம்புகிறேன்.இவை பற்றி தனியாக இன்னொரு தலைப்பில் உரையாடலாம்.

  • தொடங்கியவர்

21. மேலே சொல்லப்பட்ட பத்துச் சாதியாருள் அங்ககீனரும் மற்றைச் சாதியாருஞ் சிவபூசை பண்ண லாகாதா?

தங்கள் தங்கள் அதிகாரத்திற் கேற்ப ஆசாரியர் பண்ணிய தீ¨க்ஷயைப் பெற்றுத் தூல லிங்கமாகிய தூபியையேனுந் திருக்கோபுரத்தையேனும் பத்திர புஷ்பங்களால் அருச்சித்துத் தோத்திரஞ் செய்து நமஸ்கரிப்பதே அவர்களுக்குச் சிவபூசை; சூரிய விம்பத்தின் நடுவே சதாசிவமூர்த்தி அநவரதமும் எழுந்தருளி யிருப்பர் என்று நினைந்து அவருக்கு எதிராகப் புட்பங்களைத் தூவித் தோத்திரஞ் செய்து நமஸ்கரிப்பதும் அவர்களுக்குச் சிவபூசை.

22. சிவபூசை எழுந்தருளப் பண்ணிக் கொண்டவர் பூசை பண்ணாது புசிக்கின் என்னை?

பூசை பண்ணாது புசிப்பது பெருங் கொடும் பாவம். அப்படிப் புசிக்கும் அன்னம் புழுவுக்கும், பிணத்துக்கும், மலத்துக்குஞ் சமம்; அப்படிப் புசித்தவனைத் தீண்டல் காண்டல்களும் பாவம். ஆதலால், ஒரோவிடத்துப் பூசை பண்ணாது புசித்தவன், ஆசாரியரை அடைந்து அதற்குப் பிராயச்சித்தஞ் செய்து கொள்ளல் வேண்டும்.

23. ஞானநிட்டை யுடைவர் சிவபூசை முதலிய நியமங்களைச் செய்யாது நீக்கிவிடலாமா?

நித்திரை செய்வோர் கையிற் பொருள் அவர் அறியாமற்றானே நீங்குதல் போல, ஞானநிட்டையுடையவருக்குச் சிவபூசை முதலிய நியமங்கள் தாமே நீங்கிற் குற்றமில்லை; அப்படி யன்றி அவர் தாமே அவைகளை நீக்குவாராயின், நரகத்து வீழ்தல் தப்பாது.

24. சிவபூசை எழுந்தருளப் பண்ணிக்கொண்டவர் சனன மரணா செளசங்களில் யாது செய்தல் வேண்டும்?

திடபத்தி யுடையவர் ஸ்நானஞ் செய்து, ஈர வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டு, தாமே சிவபூசை பண்ணலாம்; ஸ்நானஞ் செய்தமை முதற், பூசை முடிவுவரையுந் தாமரையிலையில் நீர் போல அவரை ஆசெளசஞ் சாராது. திடபத்தி யில்லாதவர், ஆசெளசம் நீங்கும் வரையும் தம்முடைய ஆசாரியரைக் கொண்டாயினும் தம்மோடு ஒத்தாரைக் கொண்டாயினும் தம்முடைய பூசையைச் செய்வித்துத், தாம் அந்தரியாகஞ் செய்துகொண்டு, அப்பூசை முடிவிலே புறமண்டபத்தி னின்று புட்பாஞ்சலித்திரயஞ் செய்து, நமஸ்காரம் பண்ணல் வேண்டும். (அந்தரியாகம்-உட்பூசை)

25. வியாதினாலே தங் கைகால்கள் தம் வசமாகாதிருப்பின் யாது செய்தல் வேண்டும்?

தம்முடைய ஆசாரியரைக் கொண்டாயினும் தம்மோடு ஒத்தாரைக் கொண்டாயினும் தம்முடைய பூசையைச் செய்வித்துத், தாம் அந்தரியாகஞ் செய்தல் வேண்டும்.

26. சிவபூசை யெழுந்தருளப் பண்ணிக்கொண்ட பெண்கள் பூப்பு வந்தபோது யாது செய்தல் வேண்டும்?

மூன்று நாளும் பிறர் தண்ணீர் தர ஸ்நானஞ் செய்து கொண்டு, அந்தரியாகஞ் செய்தல் வேண்டும்; நான்காம் நாள் ஸ்நானஞ் செய்து, பஞ்ச கவ்வியமேனும், பாலேனும் உட்கொண்டு; மீட்டும் ஸ்நானஞ் செய்து, சிவபூசை செய்தல் வேண்டும், அம்மூன்று நாளும் அந்தரியாகஞ் செய்யாதொழியின், அக்குற்றம் போம்படி அகோரத்தை ஆயிரம் உருச் செபித்தல் வேண்டும்.

27. பெண்கள், தாம் பிரசவித்த சூதகம் தமக்குரியார் இறந்த ஆசெளசம், வியாதி இவைகள் வரின், யாது செய்தல் வேண்டும்?

வருணத்தாலுந் தீ¨க்ஷயாலுந் தம்மோ டொத்தவரைக் கொண்டு பூசை செய்வித்தல் வேண்டும்.

28. ஆசெளசம், வியாதி முதலியவை வந்தபோது பிறரைக் கொண்டு பூசை செய்வித்தவர் யாவரும், ஆசெளச முதலியவை நீங்கிய பின் யாது செய்தல் வேண்டும்?

பிராயசித்தத்தின் பொருட்டு அகோரத்தை முந்நூறுருச் செபித்துத் தாம் பூசை செய்தல் வேண்டும்.

29. சிவலிங்க காணாவிடத்து யாது செய்தல் வேண்டும்?

அந்தரியாக பூசை செய்து, பால் பழம், முதலியவற்றை உண்டு, நாற்பது நாள் இருத்தல் வேண்டும் அவ்விலிங்கம் வாராதொழியின் வேறொருலிங்கத்தை ஆசாரியர் பிரதிட்டை செய்துதரக் கைக்கொண்டு, பூசை செய்தல் வேண்டும். அதன்பின் வந்ததாயின் அவ்விலிங்கத்தையும் விடாது பூசை செய்தல் வேண்டும்.

30. சிவலிங்கப் பெருமானுக்கு விசேஷபூசை செய்யத்தக்க காலங்கள் எவை?

பஞ்சாக்ஷரவியலிலே சொல்லப்பட்டவை முதலிய புண்ணிய காலங்களுஞ் சென்மத்திரயங்களுமாம். இன்னும் மார்கழி மாச முழுதினும் நாடோறும் நித்திய பூசையே யன்றி அதற்குமுன் உஷக்கால பூசையும் பண்ணல் வேண்டும். சிவராத்திரி தினத்திலே பகலில் நித்திய பூசையேயன்றி இராத்திரியில் நான்கு யாம பூசையும் பண்ணல் வேண்டும் (சென்மத்திரயங்களாவன; பிறந்த நக்ஷத்திரமும் அதற்குப் பத்தா நக்ஷத்திர்மும், அதற்குப் பத்தா நக்ஷத்திரமுமாம்.)

31. சென்மத்திரய பூசையால் வரும் விசேஷ பலம் என்னை?

சென்மத்திரயந்தோறும் சிவலிங்கப்பெருமானூக்குப் பதமந்திரங்கொண்டு பாலினாலும் சர்க்கரையினாலும் விசேஷமாக அபிஷேகஞ் செய்து, சுகந்தத் திரவியங்கள் கலந்த சந்தனக் குழம்பு சாத்திப் பாயச முதலியன நிவேதனஞ் செய்துகொண்டுவரின், உற்பாதங்களும், பயங்கரமாகிய கிரக பிடைகளும், சகல வியாதிகளும் நீங்கும்.

திருச்சிற்றம்பலம்

அப்ப மனித உரிமை மீறல்களுக்கு மதம் காரணம் இல்லை எண்டதையும் ஒத்து கொள்ளுறீங்கள்.... சிலர் மதத்தை தவறாக பயன் படுத்துறதை பார்த்து அந்த மதமே தவறு என்பதுக்கும் வித்தியாசம் இருக்கு...!

மதத்தின் அடிப்படைகளே தவறாக இருக்கும் போது அதன் பிரயோகமும் தவறாக இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.உதாரணத்திர்க்கு நாவலரின் ஈசுவரத் துரோகிகளுக்கான் சித்திரவதைகளையே உதாரணாமாக் காட்டலாம்.அதாவது மற்றைய மதங்களைப்பின் பற்றுபவர்களை கடவுள் சித்திரவதை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணானது.அதனையே சைவத்தின் பெயரால் கடவுளின் பேரால் கழுவில் ஏற்றிச் சமண சமயத்தவரைக் கொன்றதன் மூலம் நிறை வேற்றினார்கள் சைவத் தொண்டர்கள்.அய்ரோப்பாவில் நிகழ்ந்த சிலுவை யுத்தத்தின் போதும் அதுவே பல் ஆயிரம் உயிர்களை குடித்தது.குஜராத்தில் பிஜேபியினால் நிகழ்த்தப்பட்ட கலவரங்களால் பல்லாயிரம் இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர்.

சாதியத்தை முன் நிறுத்தும் நாவலர் கடவுளின் பெயரால் கீழ் சாதிகள் சமபந்தி போசனம் அருந்த முடியாது என்று கூறுவது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல்.இங்கே சைவம் கூறும் வருணாச்சிரமக் கோட்பாட்டில் இருந்து தான் இந்த மனித உரிமை மீறல் பிறக்கிறது.ஆகவே சமயக் கோட்பாடுகளில் இருக்கும் மனித உரிமை மீறல்களே செயல் வடிவம் பெறுகின்றன.

  • தொடங்கியவர்

10. நித்தியகருமவியல்

230. நாடோறும் நியமமாக எந்த நேரத்திலே நித்திரை விட்டெழுதல் வேண்டும்?

சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன் நித்திரை விட்டெழுவது உத்தமம்; மூன்றேமுக்கால் நாழிகைக்கு முன் எழுவது மத்திமம்; உதயத்தில் எழுவது அதமம்.

சிவத்தியானாதி

231. நித்திரை விட்டெழுந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

சலம் வாயிற்கொண்டு இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கை கால்களையுங் கழுவி, ஆசமனம் பண்ணி, வடக்கு முகமாகவேனும் கிழக்கு முகமாக வேனும் இருந்து, விபூதி தரித்துக் கொண்டு, குரு உபதேசித்த பிரகாரஞ் சிவபெருமானைத் தியானித்துச் சிவமூலமந்திரத்தை இயன்றமட்டுஞ் செபித்து, அருட்பாக்களினாலே உச்ச விசையோடு தோத்திரஞ் செய்தல் வேண்டும்.

232. சிவத்தியான முதலியவை செய்த பின் செய்யத் தக்கவை யாவை?

அவசியகருமம், செளசம், தந்ததாவனம், ஸ்நானம், சந்தியாவந்தனம், சிவபூசை, சிவாலய தரிசனம், சிவசாத்திர பாராயணம், தேவார திருவாசக பாராயணம், மத்தியான சந்தியாவந்தனம், போசனம், சிவசாத்திர படனம், சாயங்கால சந்தியாவந்தனம், சிவாலய தரிசனம், சிவபுராண சிரவணம், சயனம் என்பவைகளாம்.

அவசிய கருமம்

233. மலசலமோசனஞ் செய்யத் தக்க இடம் யாது?

திருக்கோயிலெல்லைக்கு நானூறு முழ தூரத்தின தாய் ஈசானதிக்கொழிந்த திக்கினிடத்ததாய் உள்ள தனியிடமாம்.

234. மலசலமோசனஞ் செய்யத் தகாத இடங்கள் எவை?

வழி, குழி, நீர்நிலை, நீர்க்கரை, கோமயம் உள்ள இடம், சாம்பர் உள்ள இடம், சுடுகாடு, பூந்தோட்டம், மரநிழல், உழுத நிலம், அறுகம்புல்லுள்ள பூமி, பசுமந்தை நிற்கும் இடம், இடி வீழிடம், காற்றுச் சுழலிடம், புற்று, அருவி பாயும் இடம், மலை என்பவைகளாம்.

235. மலசலமோசனம் எப்படிச் செய்தல் வேண்டும்?

மெளனம் பொருந்திப், பூணூலை வலக்காதிலே சேர்த்துத் தலையையும், காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றிப், பகலிலும் இரண்டு சந்தியா காலங்களிலும் வடக்கு முகமாகவும், இரவிலே தெற்கு முகமாகவும், நாசி நுனியைப் பார்த்துக் கொண்டிருந்து, மலசல மோசித்தல் வேண்டும். சந்தியாகாலம் இரண்டாவன; இராக்காலத்தின் இறுதிமுகூர்த்தமும், பகற் காலத்தின் இறுதி முகூர்த்தமுமாம். (முகூர்த்தம் - இரண்டு நாழிகை)

  • தொடங்கியவர்

4. சைவாகமவுணர்ச்சி

ஆகமமானது காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், ரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞாநம், முகவிம்பம், புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம் என இருபத்தெட்டாம். இவ்வாகமங்கள் மாந்திரமெனவும், தந்திரம் எனவும், சித்தாந்தம் எனவும் பெயர்பெறும். இவ்விருபத்தெட்டுச் சிவாகமங்களுக்கும் ஒவ்வொன்றுக்குக் கோடி கிரந்தமாக இருபத்தெட்டுக் கோடி கிரந்தங்களாம். இவை ஞானபாதம், யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் என்று தனித்தனி நான்கு பாதங்கள் உடையனவா யிருக்கும். இவற்றுள் ஞானபாதம் பதிபசுபாசம் என்னுந் திரிபதார்த்தங்களின் ஸ்வரூபத்தையும், யோகபாதம் பிராணாயாமம் முதலிய அங்கங்களோடும் கூடிய சிவயோகத்தையும், கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரம் சந்தியாவந்தனம் பூசை செபம் ஓமம் என்பனவற்றையும், சமய விசேஷ நிருவாண ஆசாரியாபிஷேகங்களையும், சரியாபாதம் சமயாசாரங்களையும் உபதேசிக்கும். ஆகமம் என்பது (பரமாப்தரினின்றும்) வந்தது எனப் பொருள்படும். இன்னும், ஆ என்பது பாசம் எனவும், க என்பது பசு எனவும், ம என்பது பதி எனவும் பொருள் படுதலால், ஆகமம் என்பதற்குத் திரிபதார்த்த லக்ஷணத்தை உணர்த்தும் நூல் என்பதே சிறந்த பொருளென்க. ஆ என்பது சிவஞானமும், க என்பது மோக்ஷமும், ம என்பது மலநாசமுமாம் ஆதலால் ஆன்மாக்களுக்கு மலத்தை நாசம் பண்ணி, சிவஞானத்தை உதிப்பித்து, மோக்ஷத்தைக் கொடுத்தல் பற்றி, ஆகமமெனப் பெயராயிற்றென்று கூறுதலும் ஒன்று. இவ்வாகங்களுக்கு வழிநூல் நாரசிங்கம் முதல் விசுவான்மகம் ஈறாகிய உபாகமங்கள் இருநூற்றேழாம்.

இவ்வந்தணர்கள் சிவதீக்ஷை பெற்று, சைவாகமங்களை ஓதி உணர்ந்து, அவைகளால் உணர்த்தப்படும் நான்கு பாதங்களையும் அனுட்டிப்பவர்களாம். நான்கு பாதங்களையும் அனுட்டிப்பவர்களாம். அது இங்கே "ஞானமே முதலா நான்கு நவையறத் தெரிந்து மிக்கார்." என்பதனால் குறிப்பிக்கப்பட்டது. சிவதீக்ஷை பெற்றமையும் சைவாகமங்களை ஓதி உணர்ந்தமையும் இங்கே பெறப்பட்டில அன்றோவெனின்; அறியாது கூறினாய்; ஞான முதலிய நான்கு பாதப் பகுப்பிலக்கணம் சிவாகமங்களினன்றிப் பெறப்படாமையால் ஞான முதலிய நான்கும் உணர்ந்தோர்கள். எனவே, அவைகளை உணர்த்தும் சைவாகமங்களை ஓதினோர்கள் என்பதும், சிவதீக்ஷை பெற்ற பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருமே சைவாகமத்துக்கு அதிகாரிகள் என்பதும் சிவாகமம் செப்புதலால், சைவாகமங்களை ஓதினோர்கள். எனவே, அவ்வோதுகைக்குமுன் பெறற்பாலதாகிய சிவதீக்ஷை பெற்றோர்கள் என்பதும், தாமே பெறப்படும். இவர்கள் சிதம்பரலாயத்திற் சிவாகம விதிப்படியே நித்திய பூசை உற்சவம் முதலியன செய்தலானும் பரார்த்தலிங்கப் பிரதிஷ்டை, பரார்த்த பூசை, உற்சவம் முதலியனவற்றை விதிப்பன சிவாகமங்களேயன்றி வேதங்கள் மிருதிகளன்மை யானும், இவர்கள் சிவாகமவுணர்ச்சி யுடையார்களென்பதே சித்தம். சிவதீக்ஷை பெற்றே சிவாகமங்களை ஓதல் வேண்டும் என்பதற்குப் பிரமாணம் சுப்பிரபேதம். "இந்தச் சுத்த சைவாகமம் எல்லார்க்கும் கொடுக்கத்தக்கது மன்று. விளக்கத்தக்கதுமன்று; தீக்ஷை பெற்றனவாய், நிலையுடையோனாய், சிவபத்திமானாய் இருப்பவனுக்கே விளக்கத்தக்கது. ஏனையோர்க்கு விளக்கல் குற்றம் எனப்படும்" என்பதாம். அங்ஙனமாயினும், சிவாகமவிதிக்கு மாறுபட்டு, சிவதீக்ஷை பெறாமல் சிவாகமங்களை ஓதினோர்கள் எனக் கொள்ளலாகாதோ எனில்; "தெரிந்து மிக்கார்" என்பது தெரிந்தமையால் மிக்கோர்" எனப் பொருள்பட்டு, உண்டுபசிதீர்ந்தான் என்றாற்போலக் காரணகாரியப் பொருட்டாய் நிற்றலாலும், இவர்கள் சிவாகமவிதிக்கு மறுதலைப்பட்டுச் சிவதீக்ஷையின்றிச் சிவாகமங்களை ஓதி உணர்ந்தார்கள் எனக் கொளில், அவ்வுணர்ச்சியால் இவர்கட்கு மேன்மை கூறுதல் கூடாமையாலும், அது பொருந்தாதென்க. இன்னும், இவர்கள் சமயதீக்ஷை, விசேஷதீக்ஷை, நிருவாணதீக்ஷை, ஆசாரியாபிஷேகம் என்னும் நான்கும் பெற்றோர்கள் எனவும், மூலாகமங்களையும், உபாகமங்களையும் ஓதி உணர்ந்தோர்கள் எனவும், சிவரகசியத்து நவமாம்சிசத்தில் இருபத்தைந்தாம் அத்தியாயத்திலும் சிதம்பர மான்மியத்திலும் கூறப்படுதலால், யாம் கூறியதே பொருத்தம். சிவாகமத்தில் கூறிய தீக்ஷையின் உயர்ச்சி, வாயவ்வியசங்கிதையிலே "சைவ நூலிற் கூறப்பட்டதும் பாசம் மூன்றையும் தவிர்ப்பதும் மேலானதுமாகிய தீக்ஷையைத் தவிர வேறு யாதொரு ஆச்சிரமமும் இவ்வுலகத்திலே மாந்தருக்கு மேன்மை அன்று. ஆதலால், தீக்ஷையினாற்றான் மோக்ஷம்; ஆச்சிரமங்களினாலும் மற்றைக் கருமங்களினாலும் மோக்ஷம் இல்லை. அத்துவசுத்தியின்றி முத்தியை விரும்பும் மனிதர் கோலின்றி நடக்கத் தொடங்கிய குருடர் போல்வர்; தோணி இன்றிக் கடலைக் கடக்க விரும்பினவர் போல்வர்" என்று கூறுமாற்றால் அறிக. இனிச் சைவாகமப் பெருமை சிறிது கூறுவாம்.

ஆகமமென்பது ஆப்தவாக்கியம், ஆகமங்கள் லெளகிகம், வைதிகம், அத்தியான்மகம், அதிமார்க்கம், மாந்திரம் என ஐவகைப்படும். தற்காலத்திற் பயன்றருவது லெளகிகம்; காலாந்தரத்திற் பயன்றருவது வைதிகம்; ஆத்தும விசாரவியற்கையது அத்தியான்மகம்; யோகவியற்கையது அதிமார்க்கம்; சிவஞானவியற்கையது, மாந்திரம் எனப்படும். அவற்றுள், மாந்திரம் பிற நூல்களைப் பூருவ பக்ஷமாகக் கீழ்ப்படுத்தி, மேற்பட்டு விளங்கும் காமிகம் முதலிய சைவாகமங்கள், ஆகமாந்தம் என்னும் ஞானபாதப்பகுதி யோக ரூடிநாமமாகிய சித்தாந்தம் என்னும் பெயரை உடையது. அது இரத்தினத்திரயத்திலே "சித்தாந்தமே சித்தாந்தம், அவைக்கு வேறானவை பூருவபக்ஷங்கள்." என்றும், காந்தத்திலே "இந்த எல்லையில் சிவன் வெள்ளிமலையாகிய கைலாசத்திலே சனகர் முதலிய முநீந்திரர்களுக்குத் திரிபதார்த்தங்களினாலே சம்மிதமாகியும் இரகசியமாகியும் ஆகமாந்தம் என்னும் பெயர்த்தாகியும் உள்ள சித்தாந்தத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்" என்றும், காமிகத்திலே "இருக்கும் யசுர், சாமம், அதர்வம் என்பவை சிவனது மற்றை முகங்களிற் பிறந்தன; காமிகம் முதலிய சிவஞானம் ஊர்த்துவச் சுரோதோற்பவங்களாகி, மேன்முகத்திற் பிறந்தன. முன்கூறிய சகல நூல்களையும் பரமசிவன் பூர்வபட்சமாகச் சொன்னார்; அவற்றை எல்லாம் கீழ்ப்படுத்தி, பரமார்த்தமாகத் தவிரற்பாலனவும் கொள்ளற்பாலனவும் ஆகிய பொருள்களை நிச்சயிக்கும் சிவசித்தாந்தத்தைச் சொன்னார். சித்தாந்தமாவது காமிகம் முதலியனவாம். இதில் உயர்ந்தது பிறிதொன்றும் இல்லை. இந்தச் சைவ நூலே மூலமாம். சதுர்வேதங்களும் இதினின்றும் பிறந்தனவாம். சைவமே வைதிகம் எனப்படும்; வைதிகமே சைவம் எனவும் படும். சைவமானது வைதிகத்தில் அடங்கியும் அடங்காமலும் இருக்கும், வைதிகமும் சைவத்திற்றாழ்ந்து; முனிவரே, அற்றாயினும், சைவம் வேதப்பொருளோடு ஒற்றுமையாய் இருத்தலால், வைதிகம் என்றும் வேதசாரம் என்றும் கூறப்படும். சிவப்பிரகாசமாகிய சிவஞானம் பரஞானமாம்; பசுபாசபதார்த்த போதகமாகிய வேதம் முதலியன அபரஞானமாம். இராத்திரியில் மனிதரது கண்ணும் பூனையின் கண்ணும் விலக்ஷணமாய் இருப்பதுபோல, இந்தப் பரஞானமும் அபரஞானமும் விலக்ஷணமாய் இருக்கும்" என்று கூறுமாற்றால், அறிக. லெளகிகம் முதலிய ஐந்து சாஸ்திரங்களும் முறையே ஒன்றற்கொன்று ஏற்றமுடையன. காமிகத்திலே "சித்தாந்தம் மந்திர தந்திரமாகும்; அதிமார்க்கம் அதனிற் றாழ்ந்தது; அத்தியான்மகம் அதனிலுந்தாழ்ந்தது; அதிலும் தாழ்ந்தது வைதிகம்; வைதிகத்திலும் தாழ்ந்தது லெளகிகம்." என்று சொல்லப்பட்டது.

சைவாகமங்கள் வைதிகவாகியம் ஆதலில் அப்பிரமாணங்கள் என்று சில மூடர் கூறுவர். "வேதாந்த நிஷ்டை பெற்றுக் களங்கமற்ற ஞானிகளும், எனது சிவாகமத்திலே தற்பரர்களாகி ஞானபாதத்திலே நிலை நின்றோரும் ஆகிய இருவகையோரும், பெறற்கரிய சாயுச்சியம் பெறுவர்கள். கருமத்தையும் பிரமத்தையும் உணர்த்தும் வேதாகமம் என்று பிரசித்தம் பெற்ற இரண்டு மார்க்கங்களிலும் நில்லாத பாவிகள் சாத்திரத்திற் கூறிய நால்வகைத் தண்டங்களாலும் தண்டிக்கற்பாலர்கள்." என்னும் காந்தசம்பவ சிதம்பரமான்மியத்தில் சிவன் கூறிய பொருளை உடைய வியாசவாக்கியத்தினாலே, அது பேதைமையாம் என மறுக்க.

சைவாகமங்களுக்கு வேதவாகியத் தன்மை எந்த நியாயத்தினாலே கூறியது? வேதப்பொருளுக்கு விருத்தத் தன்மையே வேதவாகியத் தன்மை எனில்; அப்போது வேதத்திலும், கருமத்தையும் பிரமத்தையும் உணர்த்தும் பூருவோத்தர காண்டங்கட்கு விருத்தத்தன்மை உண்மையால், அந்தப் பிரசங்கம் உண்டாம். அங்கே இலக்கணையால் தாம் கருதிய பொருளில் முடிவுபெறுமெனில், அது எங்கும் ஒக்கும். வேதத்துக்கு வேறாய் இருக்குந் தன்மையே வாகியத்தன்மை. எனில், அப்போது மிருதிகளும் அப்பிரமாணம் எனக் கொள்ளப்படும். வேதத்தை மூலமாகக் கொள்ளாத தன்மை எனில், அப்போது வேதத்துக்கும் வேதத்தை மூலமாகக் கொள்ளாத தன்மை உண்மையால், வேதத்துக்கே அப்பிராமாண்ணியப் பிரசங்கம் வரும். ஆதலால், வேதப்பிராமாண்ணியத்திலே நித்தியத்துவமும் வேதத்தை மூலமாக உடைமையாதலும் முடிவல்ல; மற்றென்னெனில், ஆப்தவாக்கியத்துவமேயாம். வேதம் சுத்த சைவ சித்தாந்தம் என்பவை ஒருவாற்றால் ஒவ்வோரிடத்தில் விருத்தப் பொருளை உணர்த்துவனவாயினும், சாமானிய விசேஷத் தன்மையால் ஐக்கம் உள்ளனவாயேயிருக்கும். வியாகரணத்திலே, இகாரம் முதலியவற்றிற்கு ஆதேசமாக உயிர்வருவழி யகார முதலியன வரும் என்று பொதுச் சூத்திரத்தில் விதித்த விதி சிலவிடத்து அகார முதலியவற்றிற்குச் சவர்ணம் வரிற்றீர்க்கமாம் என்று சிறப்புச் சூத்திரத்தால் விதிக்கப்பட்ட விதியினாலே வாதிக்கப்பட்டதாயினும், இரு சூத்திரங்களுக்கும் அப்பிராமாண்ணியம் இல்லை. தருக்க சாஸ்திரத்திலும், பிரமைக்குக்கரணம் பிரமாணம் என்ற சாமானிய வாக்கியத்தாற் பெறப்பட்ட பிரமாணத் தன்மையை உடைய அனுமானம் முதலியன சாக்ஷாற் காரியப் பிரமைக்குக் கரணம் பிரத்தியக்ஷம் என்ற விசேஷ வாக்கியத்தால் வாதிக்கப்பட்டதாயினும், இருவாக்கியங்களுக்கும் அப்பிராமாண்ணியம் இல்லை. ஆதலின், வேதம் பொதுவாகவும் சிவாகமம் சிறப்பாகவும் இருத்தலால், இரண்டும் பிரமாணங்கள் என்றே துணியப்படும். ஆகமம் வேதவிசேஷமாய் இருத்தலால், அதற்கு வேதவாகியத் தன்மையும் இன்று. வேதவிசேஷம் என்று ஆலாசியமான்மியத்தும் சுப்பிரபேதத்தும் சொல்லப்பட்டது. மோக சூரோத்தரத்திலே "புராணம் வேதங்களாலும், வேதங்கள் ஆகமங்களாலும் வாதிக்கப்படும். அவை சாமானியமும் விசேஷமுமாம்; சைவமே மிகுவிசேஷமாம்." என்றும் விருத்தாசலமான்மியத்திலே "பரமசிவனுடைய இந்தத் திருவுருவங்களை விருத்தாசலத்துள்ள ஈசாலயத்தின் மண்டபத்தானங்களிலே வைத்து, சிவாகமத்திற் சொல்லிய விசேஷமார்க்கங்களாலே பூசித்தான்." என்றும், அருணாசல மான்மியத்திலே "சோணாசலத்தில் உயர்ந்த க்ஷேத்திரம் இல்லை. பஞ்சாக்ஷரத்தில் உயர்ந்த மந்திரம் இல்லை; மாகேச்சுர தருமத்தில் உயர்ந்த தருமம் இல்லை; சிவாகமத்தில் உயர்ந்த சாஸ்திரம் இல்லை." என்றும் வாயவ்வியசங்கிதையிலே "பிற நூல்களிற் கூறப்பட்டதெல்லாம் சிவாகமத்தில் இருக்கின்றது. சிவாகமத்திற் காணப்படாதது பிறிதோர் இடத்திலும் இல்லை" என்றும் சொல்லப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.