Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தற்கொலைதாரி! மட்டக்களப்பு குண்டு வெடிப்பு குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்!!

Featured Replies

மட்டக்களப்பில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவமானது, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக இஸ்லாமியத் தீவிரவாதக் குழு ஒன்றுக்கும் இந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கும் தொடர்பிருக்கலாமா என்கின்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதும், இந்த தாக்குதல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்று ஆங்காங்கு முஸ்லிம் இனத்தவர்களே கைதுசெய்யப்பட்டு வருவதும், இந்தச் சம்பவத்தை முஸ்லிம் குழு ஒன்றை நோக்கிய நிலையில் பார்த்தேயாகவேண்டிய நிர்ப்பந்தத்தை அனைவருக்கும் ஏற்படுத்தி வருகின்றது.

மட்டக்களப்பு தற்கொலைத்தாக்குதல் நடைபெறுவதற்கு சரியாக ஒரு வாரம் முன்பு காத்தான்குடி பாலமுனை பகுதியில் ஒரு பாரிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

கடந்த ஏப்ரல் 13ம் திகதி இரவு பாலமுனை கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்து குண்டு ஒன்றை இனந்தெரியாத நபர்கள் சிலர் பரீட்சித்து பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

காத்தான்குடி பாலமுனை பகுதியில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று தொடர்பில் சி.ஐ.டி பொலிஸார் இரகசிய விசாரணைகளை கடந்த 16ம் திகதி ஆரம்பித்திருந்ததாக உயர்மட்ட பாதுகாப்பு தகவல்கள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் தற்போது மட்டக்களப்பிலும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதானது, இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்புள்ளதா என்கின்ற கேள்வியை இயல்பாகவே ஏற்படுத்தி நிற்கின்றது.

கடந்த 13ஆம் திகரி இரவு 11 மணியளவில் கடும் மழைக்கு மத்தியில் இந்த வெடிப்புச் சம்பவம் பாரிய சத்தத்துடன் இடம்பெற்றிருந்தது.

ஸ்கூட்டி பைக் ஒன்றில் வெடிபொருட்களை வைத்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த மோட்டார் சைக்கில் சிதறிக்கிடந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஆனால் இது வெடிகுண்டு ஒன்றை பரிசோதிக்க நடத்தப்பட்ட ஒத்திகை நடவடிக்கையா என்று விசேட பொலிஸ் குழு தடங்களையும் சேகரித்து ஆராய்ந்து வந்த நிலையிலேயே நாடு முழுவதும் இந்த வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

ரிமோட் கண்ட்ரோல் ஒன்றின் உதவியுடன் பாலமுனை வெடிப்பு சம்பவம் நடந்திருக்கலாமென கருதும் பொலிஸார், குறித்த பைக் வேறு ஒருவர் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதையும் கண்டறிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து சிறிலங்கா ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து இது தொடர்பில் விசேட விசாரணைகளை நடத்துமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனெவிரத்னவுக்கு ஜனாதிபதி ஏற்கனவே பணிப்புரை விடுத்திருந்தார்.

ஆனால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு நான்கு நாட்களுக்குள் இந்த நாட்டில் வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று விட்டது.

அதாவது மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலை நடத்தி குழுவினரே கடந்த 13 திகதி தாழங்குடா பாலமுனை பகுதியில் த‌ங்களது வெடிபொருட்களை பரீட்சித்து பார்த்திருக்கலாம் என;ற சந்தேகம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

தற்கொலை குண்டு தாரி ஓட்டமாவடியைச் சேர்ந்த உமரா?

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலை நடத்திவர் ஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தேவாலயத்திற்கு முன் நின்ற நபர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தோலில் பை ஒன்றைச் சுமந்து வந்த வாலிபர் ஒருவர் தேவாலயத்திற்கு முன் நின்று கொண்டு அங்கிருந்தவர்களிடம் எப்போது ஆராதணை நடைபெறும் என்று கேட்டுள்ளார்.

அப்போது சிலர் அவரை உள்ளே அழைத்துள்ளனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த குறித்த நபர் எனக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வரும் அதன்பின்னர் தான் நான் உள்ளே வருவேன் என்று கூறியுள்ளார்.

அதேநேரம் அவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சிலர் அவரை விசாரணை செய்துள்ளனர்.

அப்போது தானனுடை பெயர் உமர் என்றும் தான் ஓட்டமாவடியில் இருந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே பல முஸ்லிம்கள் குறித்த தேவாலயத்திற்கு வருகை தருவதால் இவர் குறித்து பெரிதும் சந்தேகப்படாத பாஸ்டர் ஒருவர்.

தனது ஊழியர்களிடம் இவரை அழைத்துச் சென்று கதைக்குமாறு கூறி விட்டு உள்ளே சென்றுள்ளார்.

பின்னர் உள்ளே செல்ல முயற்சித்த குறித்த நபருடன் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில்தான் குறித்த நபர் குண்டை வெடிக்க வைத்திருக்கலாம் என்று சம்பவ இடத்தில் நின்ற சிலர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தற்கொலைதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தேவாலயத்திற்குள் செல்லும் சீ.சீ.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளதன. அதில் தோல் பையுடன் தலையில் தோப்பி அணிந்து இளைஞர் ஒருவர் தேவாலயத்திற்குள் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

https://www.ibctamil.com/articles/80/118309?ref=home-imp-flag

Edited by போல்

  • தொடங்கியவர்

தற்கொலைதாரிகளின் உடலில் பச்சை குத்தப்பட்டிருந்த வாசகம்; பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!!

கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபையின் விசேட கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன – முப்படைத் தளபதிகள் – பொலிஸ் மா அதிபர் அரச புலனாய்வுத் துறைத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட உறுப்பினர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்று பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் – சிலரின் உடம்பில் ‘மாஷா அல்லாஹ்’ என்று அரபு ( tatoo )மொழியில் எழுதப்பட்டிருந்தமையால் அவர்கள் வெளிநாடு ஒன்றில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கலாமென பாதுகாப்பு தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

தெமட்டகொடையில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவர் அரசியல் கட்சியொன்றின் ஆதரவாளர் ஒருவர் என்றும் அவரின் இரு மகன்கள் அடிப்படைவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் இன்றைய பாதுகாப்புச் சபை கூட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து முன்னர் வந்த எச்சரிக்கைகள் பற்றியும் இங்கு பேசப்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் மற்றும்முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் கொண்ட குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.முக்கியமான கேந்திர நிலையங்கள் மற்றும் வணக்கஸ்தலங்கள் மீதான பாதுகாப்பை அதிகரிக்க இங்கு தீர்மானிக்கப்பட்டது.

கொல்லப்பட்ட – காயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்கவும் மரணமடைந்தோர் இறுதிக்கிரியைகளுக்கு அரச உதவிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

https://www.ibctamil.com/srilanka/80/118301?ref=home-imp-flag

  • கருத்துக்கள உறவுகள்

 இலங்கையில் தமிழரையும் இஸ்லாமியரையும் பிரித்து,  இஸ்லாமியரை தமிழருக்கு எதிராக பயன்படுத்தியதன் பலனை சிங்கள பேரினவாதம் அனுபவிக்கத் தொடஙங்கியிருக்கு.

இலங்கை சோனகரை  இலங்கைத் தமிழரைக் கொண்டு முகாமைத்துவம் செய்த்ருக்க வேண்டும் இலங்கை என்ற நாட்டுக்கு அது தான் உகந்ததாகத் இருந்திருக்கும்.  இப்ப எல்லாமே கை மீறிப் போய் விட்டதொரு நிலைமை ।
அவங்கள் மோடயா இல்லை என்று 2009 இன் பின் எம்மவர் சிலர் சொல்லித் திரிந்தனர்.

அவர்கள் அதே தான் .

தமிழ் நாட்டவர் இதில் மிகவும் விழிப்பாகக் இருக்கின்றனர் அங்கேயே தமிழர் சோனகர் கூட்டுறவை மத்தியில் இருப்பவர்களும் ஆமோதித்திருக்கின்றனர்  ஒரு தலை வலி மிச்சம்   

இன்று இரு வேறு நிலைமைகளை கையாள வேண்டிய சூழ்நிலை ।  உடனடி தீர்வாக தமிழரை இசுலாமியரை முகாமைத்துவம் செய்ய மோடயா கூட்டம் அழைக்கும். 

 


 
 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, சாமானியன் said:

 இலங்கையில் தமிழரையும் இஸ்லாமியரையும் பிரித்து,  இஸ்லாமியரை தமிழருக்கு எதிராக பயன்படுத்தியதன் பலனை சிங்கள பேரினவாதம் அனுபவிக்கத் தொடஙங்கியிருக்கு.

இலங்கை சோனகரை  இலங்கைத் தமிழரைக் கொண்டு முகாமைத்துவம் செய்த்ருக்க வேண்டும் இலங்கை என்ற நாட்டுக்கு அது தான் உகந்ததாகத் இருந்திருக்கும்.  இப்ப எல்லாமே கை மீறிப் போய் விட்டதொரு நிலைமை ।
அவங்கள் மோடயா இல்லை என்று 2009 இன் பின் எம்மவர் சிலர் சொல்லித் திரிந்தனர்.

அவர்கள் அதே தான் .

தமிழ் நாட்டவர் இதில் மிகவும் விழிப்பாகக் இருக்கின்றனர் அங்கேயே தமிழர் சோனகர் கூட்டுறவை மத்தியில் இருப்பவர்களும் ஆமோதித்திருக்கின்றனர்  ஒரு தலை வலி மிச்சம்   

இன்று இரு வேறு நிலைமைகளை கையாள வேண்டிய சூழ்நிலை ।  உடனடி தீர்வாக தமிழரை இசுலாமியரை முகாமைத்துவம் செய்ய மோடயா கூட்டம் அழைக்கும். 

 


 
 

மோடையா கூட்டம் என்று செல்லகூடாது...😀

சிங்கள அரசியல்வாதிகள் உண்மையிலயே தேசப்பற்றாளர்களாக இருந்திருந்தால் இலங்கை எப்பவோ சிங்கப்பூர் ஆக மாறியிருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

மோடையா கூட்டம் என்று செல்லகூடாது...😀

சிங்கள அரசியல்வாதிகள் உண்மையிலயே தேசப்பற்றாளர்களாக இருந்திருந்தால் இலங்கை எப்பவோ சிங்கப்பூர் ஆக மாறியிருக்கும்...

இணைக்கப்பட்டுள்ள செய்தியை நம்ப முடியவில்லை! ,  உது மோடயாக் கூட்டம் இல்லாமல் வேறென்ன !! 

http://www.dailymirror.lk/breaking_news/Int’l-authorities-warned-of-Easter-Sunday-attacks:-Govt-/108-165748

excerpts from the above !

Heath Minister Dr. Rajitha Senaratne told a press conference that foreign intelligence authorities alerted the local defence agencies even ten minutes before attacks.

“These intelligence authorities have informed, from time to time, starting from April 4, 48 hours before the attacks and finally ten minutes before tragedy struck. They gave warnings about a possible attack on April 4 for the first time. Thereafter, National Intelligence Chief Sisira Mendis, on behalf of the Defence Secretary, had informed the Inspector General Police (IGP) about the imminent attacks. He had actually informed that an organisation called ‘Thowheed Jamath’ planned suicide attacks and had even mentioned their names.

அடுத்து அந்த  செகிரேட்டரி காமெடியன் சொல்லுறான்,  முன்னமே தெரியும் தானாம்;  ஆனால் இந்த லெவல் இல நடக்கும் எண்டு நினைச்சிருக்கேலையாம்’-  இது எப்படி இருக்கு  

 

  • தொடங்கியவர்

 

தற்கொலை தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் பார்க்கப்பட்ட ஒத்திகை! வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

உயிர்ப்பு ஞாயிறு தினமான கடந்த 20ஆம் திகதி கிழக்கு உட்பட இலங்கையின் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

தற்கொலை தாக்குதல் நடைபெற ஓரிரு தினங்களுக்கு முன்னர் காத்தான்குடியை அண்டிய பகுதியில் தற்கொலைதாரி மோட்டார் சைக்கிளொன்றை வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

உயிர்ப்பு ஞாயிறு தினமான கடந்த 20ஆம் திகதி கிழக்கு உட்பட இலங்கையின் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு ஒத்திகை பார்க்கும் வகையிலேயே காத்தான்குடியில் மோட்டார் சைக்கிளொன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கிழக்கு மாகாண ஆளுநரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் முக்கிய கேந்திர நிலையமான காத்தான்குடியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள போதும் இதற்கு அவர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

பாதுகாப்பு தரப்பினரும் கூட இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அவ்வாறெனில் பல உயிர்களை காவு கொண்ட குறித்த சம்பவத்திற்கு முழு காரணமும் யார்?

அத்தோடு தற்போதைய ஆளுநரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கடந்த காலங்களில் நாடாளுமன்றில் உரையாற்றும் போது வெளிப்படையாகவே இரத்த ஆறு ஓடும் என கூறியிருந்தார்.

அப்படியெனில் அவர் ஓடுவதாக கூறிய இரத்த ஆறு இலங்கையில் ஈஸ்டர் தினமன்று இடம்பெற்ற குறித்த சம்பவங்களா?

எனினும் ஹிஸ்புல்லா இரத்த ஆறு ஓடும் என கூறிய போது, பொறுப்போடு செயற்பட வேண்டியவர்கள் இனக்கலரத்தை ஏற்படுத்த கூடாது என கூறி, அவரின் கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/118555

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.