Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாய்ந்தமருது துப்பாக்கிச்சூடு – குழந்தைகள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாய்ந்தமருது துப்பாக்கிச்சூடு – குழந்தைகள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

 

 

கல்முனை- சாய்ந்தமருதில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் ஆறு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 தீவிரவாதிகள் உள்ளடங்குவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகத்திற்குரிய குழுவினருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் அங்கிகள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தபோது துப்பாக்கி பிரயோகம் நடத்த நேரிட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

மேலும் குறித்த பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், குறித்த பகுதி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/சாய்ந்தமருது-துப்பாக்கி/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்கிறது பயங்கரம் : சிறுவர்கள், பெண்கள் உட்பட 15 சடலங்கள் மீட்பு !  - படங்கள் இணைப்பு

கல்முனை - சாய்ந்தமருதுப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

 

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சடலங்களில் 6 ஆண்களுடையது எனவும் 3 பெண்களுடையது எனவும் 6 சிறுவர்களுடையதெனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்துள்ள பெண்ணொருவரும் சிறு பிள்ளையொருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எவ்வித உயிர்ச்சேதங்களோ ஏற்படவில்லையென் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட சடலங்கள் கல்முனை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார்.

D5IRu1CXoAEvinz.jpg

D5IRtWrXoAEae93.jpg

D5IRriuWsAIcJza.jpg

D5IRN3iXsAET0in.jpg

6403416505844794111.jpg

4701497168509703192.jpg

D5IRMPGWkAAbGlC.jpg

D5IRKp0WsAE1I4B.jpg

D5IRJbTW0AAJLMD.jpg

D5IBRwxXkAABPdu.jpg

 

 

http://www.virakesari.lk/article/54783

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களைத் தேடி வேட்டையாடச் சிங்களவர்கள் வந்தபோது முஸ்லீம்கள் வாய்திறக்கவில்லை. சிங்களவர்களின் துணையோடு, அவர்களுக்கு நிகராக தாங்களும் தமிழர்கள் மீது அட்டூழியம் புரிந்தனர். கொல்லப்பட்ட தமிழர்கள் அனைவரும் புலிகள் என்று சத்தியம் செய்தனர்.

இன்றோ, அவர்களைத் தேடிச் சிங்களம் வருகிறது. ஏனென்று கேட்க ஆட்களில்லை. நடப்பது முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கெதிரான தாக்குதலென்றாலும்கூட அப்பாவிகளும் கொல்லப்படுகிறார்கள். எதுவும் கேட்கமுடியாது.

திருடனுக்குத் தேள் கொட்டியது போல!

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரஞ்சித் said:

தமிழர்களைத் தேடி வேட்டையாடச் சிங்களவர்கள் வந்தபோது முஸ்லீம்கள் வாய்திறக்கவில்லை. சிங்களவர்களின் துணையோடு, அவர்களுக்கு நிகராக தாங்களும் தமிழர்கள் மீது அட்டூழியம் புரிந்தனர். கொல்லப்பட்ட தமிழர்கள் அனைவரும் புலிகள் என்று சத்தியம் செய்தனர்.

இன்றோ, அவர்களைத் தேடிச் சிங்களம் வருகிறது. ஏனென்று கேட்க ஆட்களில்லை. நடப்பது முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கெதிரான தாக்குதலென்றாலும்கூட அப்பாவிகளும் கொல்லப்படுகிறார்கள். எதுவும் கேட்கமுடியாது.

திருடனுக்குத் தேள் கொட்டியது போல!

முஸ்லீம் பொலிசார் அதிகமாக கடமை புரியும் இடம் கல்முனை என நினைக்கிறேன்...இவ்வளவு நடந்திருக்கு ஒருத்தருக்கும் தெரியவில்லையா?

இலங்கை கல்முனை குண்டுவெடிப்பு: 15 சடலங்கள் கண்டெடுப்பு - இதில் 6 பேர் தற்கொலை குண்டுதாரிகள்

இலங்கை சாய்ந்தமருதுவில் நேற்று இரவு நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் 15 சடலங்களை கண்டெடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஆறு பேர் தற்கொலை குண்டுதாரிகள் என போலீஸ் உடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆறு பேரில், மூன்று பேர் தங்களது குடும்பத்துடன் இறந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினரால் நேற்று இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

நேற்று, சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியதாகவும் பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

_106615002_whatsappimage2019-04-27at9.39

கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சவலக்கடை பகுதிகளில் போலீஸ் ஊரடங்கு நிலைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர சோதனைகளில் மேலும் 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாய்ந்தமருது மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தற்போது பாரிய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், வெடி சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த இடத்துக்கு அருகே வசித்து வந்த மக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள பள்ளி ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். தற்போது அப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

_106615005_whatsappimage2019-04-27at10.0

சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அந்த மருத்துவமனை தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48069152

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனாய் இரு அல்லது சிங்களவனா போ என்றம் கேட்க்கலை மாறாக இல்லை நாங்கள் அரபி என்று உங்களுக்கு நீங்களே கூவினீர்கள்  நாம் சொன்னம் ஆசியாவின் இரண்டாவது ரோஹிங்கிய முஸ்லிம்கள் என்று கேட்கலை  இப்ப சிங்களத்தின் கருவறுக்கும் வேட்டை ஆரம்பமாகி விட்டுது  எங்கு போய் ஓடி ஒழிய போகிறீர்கள் ?

ஆனால் நாங்க  பழைய காலத்தை மறக்க மாட்டோம் .

"முஸ்லிம்கள் இல்லாவிடின் யுத்தத்தை முடித்திருக்க முடியாது : பாதுகாப்பு படைகளின்  பிரதானி"                                 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.