Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் காத்தான்குடியில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிரதான முகாம் காத்தான்குடியில்....

 

 

பாணந்துறைல இருந்த பிரதான முகாம், சாய்ந்தமருதுக்கு இடம்மாறி இப்ப காத்தான்குடில வந்து நிக்குது! நாளைக்கு எங்கையோ தெரியல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

 

இவை இந்த கூலி படையின் இராணுவ முகாம்கள். 

Screen+Shot+2019-05-05+at+13.40.31.png

Screen+Shot+2019-05-05+at+13.39.01.png

Screen+Shot+2019-05-05+at+13.39.59.png

20190505_160220.jpg

FB_IMG_1557055923485.jpg


அரசாங்கம் ஒன்றின் ஆதரவு இல்லாமல் இப்படியான இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவது சாத்தியம் இல்லை. விடுதலை புலிகள் அரசாங்கமாக இயங்கிய காலத்தில் இவ்வாறான முகாம்களை கொண்டு இருந்தார்கள். அவர்களின் ஆட்சி இல்லாத காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடனேயே இவ்வாறான முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கும் சாத்தியம் உள்ளது.

Edited by Jude

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடியில் ஐஎஸ் பயிற்சி முகாம் முற்றுகை

 

Kaththankudi-training-camp-1-300x185.jpgமட்டக்களப்பு- காத்தான்குடி எல்லையில் உள்ள ஒல்லிக்குளத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளின் பயிற்சி முகாமை சிறிலங்கா படையினர் நேற்று கண்டுபிடித்து முற்றுகையிட்டனர்.

நகரப் பகுதிக்கும், காட்டுப் பகுதிக்கும் நடுவே 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்த முகாம் குறிப்பிடத்தக்களவு காலம் இயங்கியமைக்கான தடயங்கள் தென்படுவதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தவ்ஹீத் ஜமாத் இஸ்லாம் அமைப்பினால் பயன்படுத்தப்பட்டது என்று கருதப்படும் இந்த பயிற்சி முகாமில், ஜிகாதிகளுக்கான பயிற்சி வசதிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஈஸ்டர்  ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமே இந்தப் பயிற்சி முகாமை உருவாக்கியுள்ளார்.

அவரது சகோதரரும், சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தவருமான ரில்வான் காசிம் இந்த பயிற்சி முகாமுக்கு பொறுப்பாக செயற்பட்டுள்ளார்.

இந்தப் பயிற்சி முகாமில் 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட வெடி விபத்து ஒன்றிலேயே ரில்வான் காசிம் தனது ஒரு கண்ணையும், இரண்டு கைவிரல்களையும் இழந்துள்ளார்.

இந்த பயிற்சி முகாமில் இருந்தே குண்டுத் தாக்குதல்களுக்குத் தேவையான வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட எஸ்-லோன் குழாய்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட 6 அடி நீள குழாயில் தயாரிக்கப்பட்ட குண்டும் இங்கேயே தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த முகாமுக்குள் எவரும் இலகுவில் நுழைய முடியாத படியும், நுழைபவர்களை இலகுவாக அடையாளம் காணும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், இரகசியமாக வெளியேறுவதற்கான வழிகளும் உள்ளமை தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Kaththankudi-training-camp-1.jpgKaththankudi-training-camp-2.jpgKaththankudi-training-camp-3.jpgKaththankudi-training-camp-4.jpghttp://www.puthinappalakai.net/2019/05/06/news/37817

  • கருத்துக்கள உறவுகள்

Kaththankudi-training-camp-2.jpg

கண்காணிப்பு கோபுரம் என்பதை...இலகுவில் கண்டு பிடிக்காமல் இருப்பதற்காக...
அதற்கு மேல்... தண்ணீர் தாங்கி  மாதிரி, வடிவமைத்துள்ளார்கள்.
நிச்சயம்  இவை எல்லாம், முஸ்லீம் அரசியல் தலைவர்களுக்கு தெரிந்திராமல், நடக்க வாய்ப்பில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.