Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 18 - 2019 காட்சிகளும் படங்களும் கருத்துக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே 18 - 2019 காட்சிகளும்  படங்களும் கருத்துக்களும்

 

 

 

60405656-2529164497116857-12746776341056

60542017-10219674685041462-6737598558255

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

2.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3.jpg

4.jpg

5.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

6.jpg

7.jpg

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி விசுகு.

  • 2 weeks later...
வைத்தியர் வரதராஜாவின் ‘பொய்யா விளக்கு’ திரைப்பட அறிமுகம் மற்றும் ஆங்கில நூல் வெளியீடு
 
பத்தாண்டுகள் பறந்தோடிவிட்ட நிலையில் இறுதிப்போரின் ஒரு முக்கிய சாட்சியாக இருக்கும் வைத்தியர் வரதராஜா அவர்களின் ‘A Note from No Fire Zone’ என்ற நூல் வெளிவந்துள்ளது. வைத்தியரின் கதையினை அவர் வாயிலாகக் கேட்டு Kass Ghayouri என்ற தென்னாபிரிக்க்காவினைப் பூர்வீகமாகக் கொண்ட எழுத்தாளர் எழுதியுள்ளார். அவரைப் பற்றி அறியும் நோக்கில் இணையத்தினை அணுகினால், பல விருதுகள் வென்ற ஒரு பிரபலமான எழுத்தாளர் என்று அறிய முடிந்தது.
அதிகமான புத்தக வெளியீட்டு விழாக்கள் சில பத்து மக்களின் முன்னேயே நிகழ்வதாக இருக்கின்ற நிலையில் புத்தக வெளியீட்டு விழா எனும் போதிலும் அரங்கில் நிறைய மக்கள்கூடியிருந்தது மகிழ்வாயிருந்தது.
புத்தக வெளியீடு, திரைப்படம் இரண்டையும் முன்னெடுத்திருந்த வெண்சங்கு கலைக்கூடத்தினர் பாராட்டப்பட வேண்டியவர்கள். வைத்தியர் வரதராஜா தனது உரையில் சொல்லியது போலவே பத்தாண்டுகளாக பலரை அணுகியும் அவரது நூல் சம்பந்தமாக எதுவித உதவியும் கிடைக்காத நிலையில், இவர்கள் இதனை முன்னின்று நடத்தி முடித்திருப்பது வரவேற்கத்தக்கதே. ஆவணப்படுத்துதல் என்பது எவ்வளவு முக்கியம் என்பதனை இந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் தெரிவித்திருந்தனர். இந்த நூல்‘வாழ்வின் அர்த்தப்படுத்தலுக்கான மனிதனின் தேடல்’ என்ற விக்டர் பிராங்கின் நாவலைப் போன்று நல்லதொரு படைப்பாக இருக்கும் என்றுஎதிர்பார்க்கிறோம்.
 
புத்தக வெளியீட்டில் மருத்துவர் வரதராஜா தனது உரையில் தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்த நாட்களின் முக்கிய தருணங்களை மற்றும் அங்கு சேவையாற்றிய மருத்துவர் குழுவின்அர்ப்பணிப்பையும் நினைகூர்ந்தார். நூலாசிரியர் Kass Ghayouri தமது உரையில் தாம் மருத்துவருடன் நூலுக்கான கதைகளை எடுக்க நீண்ட நேர உரையாடல் பற்றியும் அந்த கதைகளின் ஆழமான துயரம் கலந்த நிகழ்வுகள் தம்மை பாதித்த விடயங்கள் பற்றியும் தமிழர் இனப்படுகொலை பற்றியும் கூறினார்.
கனடிய நாடுளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, ஒண்டாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜய் தணிகாசலம், லோகன் கணபதி ஆகியோர் உரைகளை நிகழ்த்தினார்.கனடிய பாராளுமன்ற உறுப்பினர் MP Shaun Chen அவர்களின் வாழ்த்துரையும் பகிரப்பட்ட்து. எதிர் கால கனடிய சந்ததியினர் தமிழர் . இனப்படுகொலை பற்றி அறிய ஒண்டாரியோ மாகாண பாராளுமன்றில் கல்வி வாரம் ஒன்றை உருவாக்கும் சட்ட வரைபு பற்றியம் அதில் இப்படியான நாவல்களின் தேவை இருக்கும் என்றும் MPP விஜய் தெரிவித்திருந்தார்.
 
முதல் நான்கு நூல்களையும் முள்ளிவாய்க்காலில் சேவையாற்றி தமிழின அழிப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்களில் நால்வர் பெற்றுக்கொண்டனர் மருத்துவர் கல்யாணி மற்றும் மருத்துவ அணியில் பணியாற்றிய கந்தசாமி அம்மா. முள்ளிவாய்க்கால் நாள்களில் ஊடகதுறையில் பணியாற்றிய இளமாறன் மற்றும் சுரேன் ஆகியோர் நூல்களை பெற்று கொண்டது நெகிழ்வான நிகழ்வாக இருந்தது.
 
இரண்டு நடன நிகழ்வுகள் கலைக்கோவில் குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. தமிழர்கள் தமது தமிழீழ அரசில் தன்மானத்துடன் மகிழ்வுடன் வாழ்ந்த காலத்தை நினைவு படுத்தி பின்னர் அவர்கள் எப்படி இனஅழிப்புக்கு ஆளாகினர் பின்னர் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதை மிக கலை நயத்துடன் செய்திருந்தனர்.
 
இதனைத் தொடர்ந்து நிகழ்வு இரண்டாவது பாகத்துள் நுழைந்தது. மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருளான அரங்கில் இரு சிறுமியர் அரிக்கன்(hurricane lamps) விளக்குகளை ஏந்தியவாறு மெல்ல அரங்கினுள் நுழைந்தனர். இந்த அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் மருத்துவசேவைகளை மருத்துவர் வரதராஜா வழங்கியிருந்ததை நினைவுகூருமுகமாகவும், இதனை பொய்யா விளக்கு என்ற திரைப்படத்துக்கான குறியீடாகவும் அதனை அழகாகச் சொல்லும் முகமாகவும் இந்த விளக்குகள் எடுத்துவரப்பட்டிருந்தன.. இந்த வித்தியாசமானஅறிமுகத்துடன் பொய்யா விளக்கு திரைப்படத்தின் trailer காணொளி காட்டப்பட்டது.
 
முதற்காட்சியிலேயே கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஒருவர் குழந்தைக்கு திருநீறு அணிவிக்கும் காட்சி வித்தியாசமாகவும், ஈழத் தமிழர்களிடையே கிறிஸ்தவர்களுக்கும் சைவர்களுக்குமான நெருக்கத்தினையும் கூறுவதாகப்பட்டது. வைத்தியர் வரதராஜா ஒரு காட்டுப் பகுதியில்முள்ளுக்கம்பிகளாலான கூண்டுக்கள் படுத்திருப்பதும், அந்த கூண்டின்வெளியே மின் விளக்கு ஒன்று கூண்டினுள் இருப்பதும் அழகான குறியீடாக இருந்தது. காட்சிகள் சிறிது வேகமாக்கப்பட்டிருந்தன. சிறையினுள் வைத்தியர் விசாரணைக்குட்படுத்தப்படுதலையும் கைதியொருவர் சித்திரவதை செய்யப்படுவதையும் காட்சிப் படுத்தியிருந்தார்கள். குண்டுகளில்லாத இடமேஇல்லையா அப்பா? என வைத்தியரின் மகள் கேட்பதுமனதை உறுத்துவதாக இருந்தது. மிகவும் கவனமாக காட்சிகளை அமைத்திருந்தார்கள். பொய்யா விளக்கு தரமானதொரு படைப்பாக இருக்கும்.
 
அதன் பின்னரான அறிமுகத்தில் இயக்குனர் தனேஸ் கோபால், அம்புலி கலைக்கூடம் மற்றும் வெண்சங்கு கலைக்கூடத்தினைச் சேர்ந்தவர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர். வெண்சங்கு கலைக்கூடம் சார்பில் சிவாஜி அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தது. பின்னர் மருத்துவர் வரதராஜா மற்றும் நூலாசிரியர் Kass Ghayouri புத்தகத்தில் வருகை தந்தவர்களுக்கு ஒப்பம் இட்டு கொடுத்திருந்தனர். முழுநிகழ்வுகளையும் ராகவன் சிறப்பாக தொகுத்து வழங்கிஇருந்தார்.
 
தமிழர்களின் கனவுகள் சிதைக்கப்பட்டு, உறவுகள் குதறப்பட்டு எமக்காக நாமே அன்றி வேறொருவருமில்லை என்று உணர வைத்த முள்ளிவாய்க்கால் அனர்த்தங்கள் நிகழ்ந்து பத்து ஆண்டுகள் ஓடிச் சென்று விட்டன. முள்ளிவாய்க்கால் அனர்தங்களின் போது ஆயிரமாயிரம் துயர் கதைகள் எம்மவர்களுக்கு நிகழ்ந்தன. அவற்றினை உலக அரங்கினில் வெளிக்கொணர வேண்டிய பாரிய பொறுப்பு தமிழர்களுக்கு உண்டு. இந்த வகையில் ஊடகங்களுக்கும் கலை இலக்கியம் சார்ந்து செயல்படுகின்ற படைப்பாளிகளுக்கும் பொறுப்பும் கடமையும் நிறையவே உண்டு. இரண்டாம் உலகப் போரின்போது, யூதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அறுபது ஆண்டுகள் கழிந்தும் இன்னமும் உலக சினிமாவில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த அறுபது ஆண்டுகளிலும் சொல்லித் தீராத கதை அவர்களது. அந்தக் கொடுமைகளைப் போலவே, ஈழ தமிழர் மண்ணில் நிகழ்ந்த சோகங்களும் சொல்லப்பட வேண்டியவை. Channel 4 Callum Macrae இன் No Fire Zone போன்ற ஆவணப்படங்கள் ஐநாவிற்கு கொடுத்த அழுத்தங்களை தமிழர்கள் நன்கு அறிவர்.
 
இதன் மற்றுமொரு பரிணாமமாக, மருத்துவர் வரதராஜாவின் A Note from the No Fire Zone எனும் ஆங்கில நாவல் வெளீ நிகழ்வும் பொய்யா விளக்கு அறிமுக நிகழ்வும் அமைந்திருந்தது.
 
காணொளி, சமூக வலைத்தள இணைப்புகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு,
  • 3 weeks later...

முள்ளிவாய்க்காலின் அழகிய இயற்கை தோற்றம் - கடற்கரை பிரதேசத்தின் கதை

à®®à¯à®³à¯à®³à®¿à®µà®¾à®¯à¯à®à¯à®à®¾à®²à¯

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் என்பது தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ஒரு இடம்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி பல லட்சக்கணக்காக தமிழர்கள் கொல்லப்பட்ட ஒரு இடமாக முள்ளிவாய்க்கால் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

முள்ளிவாய்க்கால் என்றாலே அங்கு இரத்த கறைகள் மாத்திரமே மக்கள் மத்தியில் நினைவுக்கு வருகின்றது.

கறுப்பு சரித்திரமாக பதிவாகியுள்ள முள்ளிவாய்க்காலின் இன்றும் பெரும்பாலானோர் அறியாத அழகிய இடங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் கடற்கரையை அண்மித்த ஓர் அழகிய கிராமமாகும்.

கறுப்பு சரித்திரம் படைத்த முள்ளிவாய்க்காலில் மறைந்திருக்கும் அழகிய இயற்கை தோற்றம்

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், அந்த பகுதி இன்றும், ஆள்; நடமாட்டமற்ற பகுதியாகவே காணப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கடற்கரையை நோக்கி செல்லும் மணல் வீதி... தூரத்தில் இரு மருங்கிலும் பனை மரங்கள்... பனை மரங்களுக்கு இடை நடுவில் கடற்கரை தென்படும் அழகிய காட்சி.

கடற்கரையை நோக்கி சென்றால், அங்கு ஆள் நடமாட்டம் என்பதை எம்மால் காண முடியவில்லை.

சிறிய ரக மீன்பிடி படகுகள் மாத்திரம் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், கடற்றொழிலாளர்களையும் எம்மால் காண முடியவில்லை.

கறுப்பு சரித்திரம் படைத்த முள்ளிவாய்க்காலில் மறைந்திருக்கும் அழகிய இயற்கை தோற்றம்

எந்தவித அசுத்தமும் இன்றி, மிகவும் சுத்தமாக இந்த கடற்கரை காணப்படுவதை பார்த்த எமக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

பல கிலோமீற்றர் தொலைவிற்கு நேரான கடற்கரையை கொண்ட இந்த அழகிய முள்ளிவாய்க்கால் கடற்கரை, இன்றும் எந்தவொரு அதிகாரியின் கவனத்திற்கும் செல்லவில்லை.

குறிப்பாக சுற்றுலாத்துறையை இலங்கை பெயர் பெற்றுள்ள பின்னணியில், இவ்வாறான கடற்கரைகளை பிரசித்திப்படுத்துவதன் ஊடாக மேலும் சுற்றுலாத்துறையை வளர்ச்சி அடைய செய்ய முடியும்.

கறுப்பு சரித்திரம் படைத்த முள்ளிவாய்க்காலில் மறைந்திருக்கும் அழகிய இயற்கை தோற்றம்

இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதியோ என்னவோ, அரசாங்கம் இந்த அழகிய கடற்கரையை வெளிகொணராது இருக்கின்றது.

முல்லைத்தீவு இலங்கையின் மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படுகின்ற பின்னணியில், குறித்த கடற்கரை சுற்றுலாத்துறைக்கான திறக்கப்படும் பட்சத்தில், அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னோற்றுவதற்கான இயலுமை கிடைக்கும் என அந்த பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியை மக்கள் பாவனைக்கு வழங்க முன்பாக, அந்த பகுதியில் பாதுகாப்பு பிரிவினரால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்ச நிலைமையை தீர்க்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48697130

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.