Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகில் மிகவும் பலமுள்ள இராணுவப் படை விடுதலைப் புலிகள் வசம் உள்ளது : ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் மிகவும் பலமுள்ள இராணுவப் படை விடுதலைப் புலிகள் வசம் உள்ளது : ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே

Written by Pandara Vanniyan - Apr 25, 2007 at 12:04 PM

தமிழீழ விடுதலைப் புலிகளால் முடியுமானால் பகல்வேளையில் வான்தாக்குதல் நடத்தட்டும். அதனை எவ்வாறு? முறியடிப்பது என நாங்கள் காட்டுகின்றோம் என்று சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிறப்பு பணிப்புரையின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். பலாலி கூட்டுப்படைத்தளத்துக்குச் சென்று, விடுதலைப் புலிகள் வான்தாக்குதல்கள் நடத்திய இடங்களை பார்வையிட்டார்.

நேற்று கொழும்பு திரும்பிய அவர், பிபிசி தமிழோசைக்கு நேற்று இரவு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது: அரசாங்கம் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், கிழக்கிலும் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்நிலையில் விடுதலைப் புலிகள் வான்தாக்குதல்களை நடத்துவது ஆச்சரியப்படும் விடயமல்ல.

உலகில் மிகவும் பலமுள்ள இராணுவப் படை விடுதலைப் புலிகள் வசம் உள்ளது என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்நிலையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவார்கள். அதனை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் கிளர்ச்சி அமைப்பு அல்ல. மாறாக பயங்கரவாத அமைப்பு. எனவே விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவது புதுமையல்ல. ஆனால் விடுதலைப் புலிகள் இரவு நேரங்களிலேயே தாக்குதல் நடத்துகின்றனர். முடியுமானால் விடுதலைப் புலிகள் பகல்வேளையில் வான்தாக்குதல் மேற்கொள்ளட்டும். அதனை எவ்வாறு?முறியடிப்பது என்று நாங்கள் காட்டுகின்றோம்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆராய நானும் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இன்னும் சில அமைச்சர்களும் யாழ்ப்பாணம் சென்றோம். அங்கு நிலைமைகளை ஆராய்ந்து அரச தலைவருக்கு நிலைமைகளை தெரிவிவித்துள்ளோம் என்றார் அவர்

sankathi

விடுதலைப் புலிகளை அழிக்கும் திட்டத்தைக் கைவிட்டு, அவர்கள் தாக்குதலை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு சிங்கள இராணுவம் தள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கையும் எலோரும் மறந்துவிட்டனர்.

முடியுமானால் விடுதலைப் புலிகள் பகல்வேளையில் வான்தாக்குதல் மேற்கொள்ளட்டும். அதனை எவ்வாறு?முறியடிப்பது என்று நாங்கள் காட்டுகின்றோம்

விட்டால் பீரங்கிக்கு முன்னால, 1 மணித்தியாலம் ஒரிடத்திலேயே பறந்து கொண்டிருங்கோ சுட்டுக்காட்டுறம் என்டு கேப்பார் போல :P

விடுதலைப்புலிகளின் படையணிகளின் பலத்தின் ஒரு பகுதியைக் கண்டு கலங்கும் புள்ளே மிகுதிப் பலத்தையும் கண்ட பின்பு தன்னை ஒரு தமிழரென்று ஒத்துக்கொள்வார். அதற்கு முன்பு புலிகளின் பலத்தை இன்னமும் புரிந்தும் புரியாமலிருக்கும் தோத்தபாயவுக்குத் தெரிவிக்கவும்.

உலகில் மிகவும் பலமுள்ள இராணுவப் படை விடுதலைப் புலிகள் வசம் உள்ளது : ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே

ஆஹா........1/2 சிங்களவன் உசாராகி விட்டான் :P :P இந்த உண்மை 1/2 சிங்களவன் ஆன பெர்னாண்டோ புள்ளேகு புரியுது ஏனெண்டால் 50% தமிழ் இரத்தமல்லே.

ஓம் ஓம் மதுகா அவரும் உம்மட மொழியில சொல்லுற தெண்டால் உந்த அரைவாசி முழுவாசி முக்கா வாசி எனக்குத் தெரியாது ஓண்டும் மட்டும் தெரியும் ஆனாலும் அதுவும் உம்மட மொழி தான் என்ண்டு யோசிக்கிறிரோ?

" நாடோடித்தமிழர் தான் அதுமட்டுமல்ல சிங்களவருக்கு அதாவது உம்மட நாடோடியற்ற இனத்திற்கு கேவலமான தொண்டு செய்யிற நாய்தான் "

தங்கச்சி நாடோடித்தமிழர் என்று குறிப்பிட்ட இனம் தான் நேற்றைக்கு விமானத்தால அடித்தது அதுமட்டுமல்ல புலம்பெயர்ந்த மக்களின் பெரும் பங்கு அதில் இருக்கலாம்னியாவது புரிஞ்சால் சரி

வரட்டடடடடடடடாhhhhhh

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விட்டால் பீரங்கிக்கு முன்னால, 1 மணித்தியாலம் ஒரிடத்திலேயே பறந்து கொண்டிருங்கோ சுட்டுக்காட்டுறம் என்டு கேப்பார் போல :P

அவருக்கான் பதில்:

ஐயா நாங்கள் விரைவில சுப்பர் சொனிக் விமானத்தைக் கொள்வனவு செய்ய இருக்கிறம். அது வந்துசேர்ந்தவுடனே பகல்நேரத்தில அதுவும் உங்கட வீட்டுக்கே கொண்டுவந்து போடுறம். போதுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா........1/2 சிங்களவன் உசாராகி விட்டான் :P :P இந்த உண்மை 1/2 சிங்களவன் ஆன பெர்னாண்டோ புள்ளேகு புரியுது ஏனெண்டால் 50% தமிழ் இரத்தமல்லே.

***********************

என்ன தளச்செய்தியாளரே நீண்ட நாட்களாக காணவில்லையே?......

போக்குவரத்து அமைச்சருக்கு தரையிலுள்ள போக்குவரத்தையே சரியாக கவனிக்கத் தெரியல்லை, விமானத்தாக்குதலைப் பற்றிக்கதைக்க வந்திட்டாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

பண்ண***டை பிள்ளை மன்னிக்கவும், பெர்னாண்டோ புள்ளே, சிவனே எண்டு வேலியில பேசாமல் போன ஓணானை பிடிச்சு தண்ட வேட்டிக்குள்ள விட்டாலும் பறவாயில்லை, இழிச்சவாய் மகிந்தற்ற வேட்டியுக்குள்ள எல்லோ விட்டுட்டான். :):lol: :P

அய்யோ டங்க்ளாஸ்! அவனுகள் கட்டுறது வேட்டி இல்ல. வெள்ளைச்சாரம். வேட்டி எங்கட டக்ளஸ் தேவாங்கும் அறுந்த சங்கரியும் தான் கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ டங்க்ளாஸ்! அவனுகள் கட்டுறது வேட்டி இல்ல. வெள்ளைச்சாரம். வேட்டி எங்கட டக்ளஸ் தேவாங்கும் அறுந்த சங்கரியும் தான் கட்டும்.

ஜோவ்வ் என்ன நக்கலா? அதற்காக நம்ம முன்னோர் வேலை வெட்டி இல்லாமல் கஸ்ரப்பட்டு கண்டுபிடிச்ச பழமொழியையே மாற்றசொல்லுறீரா?? :angry: :angry:

சப்போஸ் ஜோர்ஜ்.புஸ் இதை செய்திருந்தாலும், அப்படித்தான்ளே சொல்லுவா.... :)

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் ஜயாவே மன்னிக்கவும் டங்கிளஸ் அவர்களே நாங்கள் புதுயுகத்தில் இருப்பதாக சொல்லுகிறாங்கள். நீங்கள் பழமொழியைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீங்கள். உதாரணத்திற்கு எங்க தலைவரைப் பாருங்களேன் துவிச்சக்கரவண்டியிலை ஓடித்திரிந்தவர் இன்று விமானத்தையே பறக்கவிடுகிறார்

அய்யோ அய்யோ அவர் கதைக்கிறது கேட்க சின்னபிள்ளை தனமா இருக்கு. இவர் எல்லாம் ஒரு அமைச்சர்??????? இவருக்கெல்லாம் அரசியல் யார்செல்லுகுடுத்தது??? :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோவ்வ் என்ன நக்கலா? அதற்காக நம்ம முன்னோர் வேலை வெட்டி இல்லாமல் கஸ்ரப்பட்டு கண்டுபிடிச்ச பழமொழியையே மாற்றசொல்லுறீரா?? :angry: :angry:

சப்போஸ் ஜோர்ஜ்.புஸ் இதை செய்திருந்தாலும், அப்படித்தான்ளே சொல்லுவா.... :)

காலத்துக்கு ஏற்றாற் போல் பழமொழியை மாத்தினாலும் தப்பேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் ஜயாவே மன்னிக்கவும் டங்கிளஸ் அவர்களே நாங்கள் புதுயுகத்தில் இருப்பதாக சொல்லுகிறாங்கள். நீங்கள் பழமொழியைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீங்கள். உதாரணத்திற்கு எங்க தலைவரைப் பாருங்களேன் துவிச்சக்கரவண்டியிலை ஓடித்திரிந்தவர் இன்று விமானத்தையே பறக்கவிடுகிறார்

என்னய்யா களைக்கிறீர் சா கதைக்கிறீர், தலைவர் துவிச்சரக்கரவண்டி ஓடினவர், இப்ப பிளைட் ஓடுறார் அது அவர்ட விடா முயற்சி, கொள்கையால கிடைச்சது அதை விடுங்க, 1940 இல சின்னப்பு சின்னாச்சியை கலியாணம் கட்டக்கையும் சீதனத்தை வாங்கித்தான் கட்டினவர், 2007ம் ஆண்டு நம்ம மாப்பிள்ளை கலியாணம் கட்டக்கையும் சீதனத்தைத்தான் வாங்கிதான்ளேய் கட்டினவர், அதைவிடுங்கோ, 1901ம் ஆண்டில நம்ம குஞ்சாச்சிக்கும் பூப்புர்னித விழா செய்தவயள், 2006ம் ஆண்டு நம்ம யாழ்கள ஜமுனாவுக்கும் அதைத்தான்ளேய் செய்தவையள், இப்ப கேள்வி என்னெண்டால்...............

காலத்துக்கு ஏற்ப மாத்தமாட்டியளோ??? :):lol: :angry: :angry:

Edited by Danklas

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

24/4/2007 அன்று ஒலிபரப்பாகிய (வான் தாக்குதல்) பிபிசி தமிழோசையின் ஒலிப்பதிவு உள்ளவர்கள் தந்துதவ முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

24/4/2007 அன்று ஒலிபரப்பாகிய (வான் தாக்குதல்) பிபிசி தமிழோசையின் ஒலிப்பதிவு உள்ளவர்கள் தந்துதவ முடியுமா?

ஏன் ராகவா திருப்ப அடிக்கப்போறியளோ?? :lol::)

சிறிலங்கா அரசு கூறிவந்த பொய்களை உடைத்த விடுதலைப் புலிகள்: ரணில் விக்கிரமசிங்க [புதன்கிழமை, 25 ஏப்ரல் 2007, 06:50 ஈழம்] [ந.ரகுராம்]

பாதுகாப்பு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கூறிவந்த பொய்கள் நேற்றைய தினம் விடுதலைப் புலிகள் நடத்திய வான்தாக்குதலால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் முடக்கப்படுவது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள அனைத்துலக ஊடக நிலையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியியுள்ளார்.

இது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

மனித உரிமை மீறல், ஊடக சுதந்திரப் பாதுகாப்பு, பாதுகாப்பு விடயங்களை அரசாங்கம் பொய்களைக் கூறி தொடர்ந்தும் உண்மைகளை மூடி மறைக்கப்பார்க்கின்றது.

ஆனால் உண்மைகளை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது. பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் கூறிவந்த பொய்கள் நேற்றைய தினம் விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கட்டுநாயக்க தாக்குதலின்போது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியதை சுட்டிக்காட்டிய நாம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தினோம்.

இதற்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுத்தோம். ஆனாலும் நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை எனக்கூறிய அரசாங்கம், இனி விடுதலைப் புலிகள் வான் தாக்குதலுக்கு எத்தனித்தால் அவர்களின் வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்படும் எனவும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியது.

ஆனால் நேற்றைய தினம் என்ன நடந்தது.

விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்திலுள்ள முக்கிய இராணுவத்தளம் மீது தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக திரும்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் ஒன்றே அரசாங்கம் கூறிவரும் தொடர் பொய்களுக்கு சிறந்த சான்றாகும்.

எனவே, இவற்றுக்கு எதிராக போராட ஐக்கிய தேசியக் கட்சி களத்தில் இறங்கியுள்ளது. இதற்காக நாங்கள் மக்களோடு இணைந்து போராடவுள்ளோம்.

ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக போராடுவதற்கு எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார் அவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் ராகவா திருப்ப அடிக்கப்போறியளோ?? :lol::)

எனது நண்பன் பீ பீ சி யை பொதுவாக கேட்பதில்லை. நான் அந்தப் பன்*டை சின்னப்புள்ளத்தனமா நீ அடிச்சா அவன் அடிப்பான் நான் அடிச்சா இவன் அடிப்பான் எண்டு குரைச்ச கதையை சொன்னபோது அதை கேட்கவேண்டும் என்று அவா. அதான்.

என்னய்யா களைக்கிறீர் சா கதைக்கிறீர், தலைவர் துவிச்சரக்கரவண்டி ஓடினவர், இப்ப பிளைட் ஓடுறார் அது அவர்ட விடா முயற்சி, கொள்கையால கிடைச்சது அதை விடுங்க, 1940 இல சின்னப்பு சின்னாச்சியை கலியாணம் கட்டக்கையும் சீதனத்தை வாங்கித்தான் கட்டினவர், 2007ம் ஆண்டு நம்ம மாப்பிள்ளை கலியாணம் கட்டக்கையும் சீதனத்தைத்தான் வாங்கிதான்ளேய் கட்டினவர், அதைவிடுங்கோ, 1901ம் ஆண்டில நம்ம குஞ்சாச்சிக்கும் பூப்புர்னித விழா செய்தவயள், 2006ம் ஆண்டு நம்ம யாழ்கள ஜமுனாவுக்கும் அதைத்தான்ளேய் செய்தவையள், இப்ப கேள்வி என்னெண்டால்...............

காலத்துக்கு ஏற்ப மாத்தமாட்டியளோ??? :):lol: :angry: :angry:

டங்கு உமக்கு விசயம் தெறியாது குஞ்சாசிக்கு செய்யும் போது அவான்ட கொஞ்ச சொந்தகாரர்கள் வந்து தான் வீட்டில செய்தவை ஆனால் யம்முவுக்கு சிட்னியில இருக்கிற எல்லாரையும் கூப்பிட்டு பெறிய கோல் எடுத்து செய்தவை அது பத்தாது என்று வந்தவைக்கு எல்லாம் சீலை கொடுத்தவை இது எல்லம் குஞ்சாச்சிக்கு செய்ய இல்லை என்று குஞ்சாச்சிக்கு இப்பவும் வருத்தம் தான்,பிறக்லு ஜம்முவை எத்தனை ஆங்கிளில படம் எடுத்தவை அது மட்டுமா இன்விசேசன் எல்லா அடித்து அதில் நோ பொஸ் கிவ்ஸ்ட் என்று எல்லாம் போட்டவர் என்ற அப்பா,குஞ்சாச்சு பாவம அவாவுக்கும் ஒன்றும் செய்ய இல்லை ஆகவே இதுவும் மாற்றம் தானே டங்கு

என்னய்யா களைக்கிறீர் சா கதைக்கிறீர், தலைவர் துவிச்சரக்கரவண்டி ஓடினவர், இப்ப பிளைட் ஓடுறார் அது அவர்ட விடா முயற்சி, கொள்கையால கிடைச்சது அதை விடுங்க, 1940 இல சின்னப்பு சின்னாச்சியை கலியாணம் கட்டக்கையும் சீதனத்தை வாங்கித்தான் கட்டினவர், 2007ம் ஆண்டு நம்ம மாப்பிள்ளை கலியாணம் கட்டக்கையும் சீதனத்தைத்தான் வாங்கிதான்ளேய் கட்டினவர், அதைவிடுங்கோ, 1901ம் ஆண்டில நம்ம குஞ்சாச்சிக்கும் பூப்புர்னித விழா செய்தவயள், 2006ம் ஆண்டு நம்ம யாழ்கள ஜமுனாவுக்கும் அதைத்தான்ளேய் செய்தவையள், இப்ப கேள்வி என்னெண்டால்...............

காலத்துக்கு ஏற்ப மாத்தமாட்டியளோ??? :lol:<_< :angry: :angry:

டங்கிள் 1946ல குப்பாஜியக் கட்டேக்குளையும் தாலி கட்டித்தான் கல்யாணம் பண்ணிணாரு இண்டைக்கு டங்குட பேரம் கல்யாணத்துக்கும் தாலிதான் கட்டுறாங்களாக்கும் :lol:

ஆகா !!! சூப்பர் சோனிக் விமானங்களையும் புலிகள் வாங்கி வைத்திருக்க வேண்டும்..... அவைகளை வைத்து சிங்கள இனவெறியை கருவறுக்க வேண்டும்.... கனவு பலிக்க வேண்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா களைக்கிறீர் சா கதைக்கிறீர், தலைவர் துவிச்சரக்கரவண்டி ஓடினவர், இப்ப பிளைட் ஓடுறார் அது அவர்ட விடா முயற்சி, கொள்கையால கிடைச்சது அதை விடுங்க, 1940 இல சின்னப்பு சின்னாச்சியை கலியாணம் கட்டக்கையும் சீதனத்தை வாங்கித்தான் கட்டினவர், 2007ம் ஆண்டு நம்ம மாப்பிள்ளை கலியாணம் கட்டக்கையும் சீதனத்தைத்தான் வாங்கிதான்ளேய் கட்டினவர், அதைவிடுங்கோ, 1901ம் ஆண்டில நம்ம குஞ்சாச்சிக்கும் பூப்புர்னித விழா செய்தவயள், 2006ம் ஆண்டு நம்ம யாழ்கள ஜமுனாவுக்கும் அதைத்தான்ளேய் செய்தவையள், இப்ப கேள்வி என்னெண்டால்...............

காலத்துக்கு ஏற்ப மாத்தமாட்டியளோ??? :lol::lol: :angry: :angry:

*******************

டங்கய்யா அவர்களே உங்கள் ஆதங்கம் புரிகிறது, இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது அதாவது நான் என்னைத் திருத்துகிறேன் என்று நாம் தீர்மானித்துவிட்டால் பிரச்சினை முடிந்துவிடும் அல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.