Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக்கட்சி அரசியலில் இருந்து ஒதுங்கவேண்டுமெனக்கோரி போராட்டம்!

Featured Replies

தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் தலைமை அலுவலகத்தில் போராட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டம் தமிழரசுக் கட்சி அரசியலிலிருந்து ஒதுங்குமாறு கோரிய பதாதைகளை தாங்கியவாறு இடம்பெற்றது.

போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.மேலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினரும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சாட்டினர்.இலங்கை அரசின் சுக போக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோடி ரூபாய் பணத்துக்கு விலை போய்விட்டனர்.இவர்கள் மக்கள் நலனில் எவ்வித அக்கறையும் காடடவில்லை.எனவே இவர்கள் பதவிகளை துறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தப் போராடடத்தில் ஈடுபட்டவர்கள் "காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கத்துடன் கதைக்க ஏன் தயங்குகின்றீர்கள்?","உங்களால் தீர்வு பெற இயலாது என்றால் புதிய தலைமுறைக்கு வழிவிடுங்கள்", "ஏன் போர்க்குற்றவாளிகளை பாதுகாத்து கால அவகாசம் கொடுத்தீர்கள்" போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் கட்சிக்கூட்டம் இடம்பெற்ற நிலையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/121186?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

 

Quellbild anzeigen

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, போல் said:

தமிழரசுக் கட்சி அரசியலிலிருந்து ஒதுங்குமாறு கோரிய பதாதைகளை தாங்கியவாறு இடம்பெற்றது.

சரியான போராட்டம். தமிழரசு கட்சி... தமிழர்களுக்கு பிரயோசனம் இல்லாத கட்சி. 
இதனை... கலைத்து  விடுவதே... சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வாவினால் மலேசியாவில் உள்ள அவரின்  பூர்வீக சொத்து ரப்பர் தொட்டம்களை விற்று அதில் வந்த பணத்தில் உருவாக்கிய கட்சி இந்த தமிழரசு கட்சி அதன் இப்போதைய தலிவர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் சம்பந்தன் சுமத்திரன் போன்றவர்கள் சிங்கள அரசால் எறியப்படும் எலும்புத்துண்டு கொழும்பு மாடமாளிகைக்களுக்கு சோரம் போவதை என்னவெண்று  சொல்வது ?

  • தொடங்கியவர்

இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் வந்தாலும் எமக்கு தீர்வு கிடைக்காது உறவுகள் விசனம்!

Missing-people-strruggle-720x450.jpg

இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் பதவியேற்றாலும் தமக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லையென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் 8 மாவட்டங்களுக்கான தலைவர், செயலாளர் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே கிளிநொச்சி மாவட்ட செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் ஜனாதிபதியாக யார் வந்தாலும் தமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தமது உறவுகளை கண்டறிந்து தருவாரென தமிழ் தலைமைகள் கூறியதாலும் தமக்கிருந்த நப்பாசையினாலுமே அவருக்கு வாக்களித்ததாக தெரிவித்தார்.

எனினும் ஆட்சிக்கு வந்தததன் பின்னர் அவரும் தம்மை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தார்.

அதேபோலவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த விடயத்தை மறப்போம் மன்னிப்போமென தெரிவித்து விட்டதாகவும் இதனால் இனிமேல் சிங்கள தலைவர்கள் மாத்திரமல்ல தமிழர்கள் ஜனாதிபதியாக வந்தாலும் அவர்களை நம்ப தாம் தயாராக இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/இலங்கையின்-ஜனாதிபதியாக-த/

  • தொடங்கியவர்

சுயநிர்ணய உரிமையை விலைநிர்ணயம் செய்யாதே!- தமிழரசுக்கட்சி அலுவலகம் மக்களால் முற்றுகை

 

சிறீலங்கா தலைமை அமைச்சர் ரணிலின் மடிச்சூட்டின் கதகதப்பில் சொக்கிக்கிடந்து காசு கறக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமையை விலைநிர்ணயம் செய்வதாகவும், தேர்தல்களின் போது வடக்கு கிழக்கு இணைப்புக்கு தமிழ் மக்களிடம் ஆணை பெற்றுவிட்டு இப்போது வடக்கு கிழக்கு பிரிப்பை ஏற்றுக்கொண்டு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்து தமிழர்களின் பூர்வீக நிலத்தை சிங்கள மயமாக்குவதாகவும் தெரிவித்து, யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் 833 நாட்களாக சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினரால் 01.06.2019 சனிக்கிழமை அன்று நடத்தப்பட்ட இப்போராட்டத்தில்...

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையை காணாமல் ஆக்க 'கம்பெரலிய' உமக்கு வழங்கப்பட்ட இலஞ்சமா?, சுதந்திர பசியோடு இருக்கும் மக்களை சோற்றுப்பசிக்கு மடை மாற்ற 'பனை நிதியம்' உங்களுக்கு மற்றுமொரு கையூட்டுத்தானே?,

தமிழ் அரசுக்கட்சியா? இல்லை 'ஏக்கிய ராஜ்ஜிய' கட்சியா?,

ரணிலின் திருட்டு அரசைக் காப்பாற்ற 'இரண்டு கோடி ரூபாய்' இலஞ்சப்பணம் வாங்கிய கூட்டுக்களவாணிகளே தமிழ் மக்களை அரசியல் நீக்கம் செய்யாதே!,
உங்கள் இருவருக்கும் இடையிலான 'கணக்கு வழக்குகளை – கொடுக்கல் வாங்கல்களை' ரணில் வேண்டுமானால் மறக்கட்டும். மன்னிக்கட்டும். ஆனால் உங்கள் தமிழினத் துரோகத்தை தமிழ் மக்கள் மறக்கார்! மன்னிக்கார்!,

தமிழ் அரசுக்கட்சியா? இல்லை கொழும்புக்கு ஒரு முகமும் வடக்கு கிழக்குக்கு மறுமுகமும் காட்டும் 'டபுள் அரசு' கட்சியா?,

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நீங்கள் அடித்த மற்றுமொரு ஆப்புத்தானே அவசரகாலச் சட்டம்!, இன்னும் இன்னும் தமிழ் இளையோரை சிறை தள்ளவா அவசரகாலச் சட்டத்துக்கு கைகளைத் தூக்கினீர்?,
ஏன் போர்க்குற்றவாளிகளை பாதுகாத்து கால அவகாசம் கொடுத்தீர்கள்?, ஏன் சர்வதேச விசாரணையை உள்நாட்டு விசாரணையாக மாற்றினீர்கள்?,

ஏன் எஸ்.டி.எவ் பாதுகாப்போடு தமிழ் பிரதேசங்களுக்கு விசிட் அடிக்கிறீர்கள். நீங்கள் தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்ட சிங்கள முகவர்களா?, உங்களால் இயலாது என்று காட்டி விட்டீர்கள். புதிய தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்குங்கள்.,  

உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு தாயகத்தாய்மார் தமது பலத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தனர். இப்போராட்டத்தின் போது மக்களை உள்நுழைய விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் தமிழரசுக்கட்சியின் அலுவலக முகப்பு வாயில் கதவை கட்சி உறுப்பினர்கள் இழுத்துப்பூட்ட முனைந்ததால் அங்கு முறுகல்நிலை ஏற்பட்டது.

சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற இப்போராட்டத்தினையடுத்து மக்கள் கலைந்து செல்லும் தருணத்தில், இலங்கை தமிழரசு கட்சியினரால் யாழ்.நகர பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு 40க்கும் மேற்பட்ட பொலிஸார் பேரூந்தில் வரவழைக்கப்பட்ட போதிலும் அவ்விடத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்று தெரியவருகின்றது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.