Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சஹ்ரான் ஹாசிம் குடும்பத்தினரின் சடலங்கள் தோண்டியெடுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
சாய்ந்தமருது

இலங்கையின் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள பொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்டத்தில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து பலியான, சஹ்ரான் ஹாசிம் குழுவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் சில சடலங்கள் இன்று வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டன.

அம்பாறை நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களின் மூளையாக இருந்து செயல்பட்ட சஹ்ரான் தற்கொலை தாக்குதல் நடத்தியபோது உயிரிழந்தார் என்று இலங்கை அரசு கூறுகிறது.

மேற்படி நபர்களின் உடல் பாகங்களை மரபணு பகுப்பாய்வுக்கு (டி.என்.ஏ) அனுப்பி வைப்பதற்காகவே சடலங்கள் இவ்வாறு தோண்டியெடுக்கப்பட்டன.

அம்பாறை பிரதான நீதவான் அசங்க ஹெட்டிவத்த மற்றும் அம்பாறை வைத்தியசாலையின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீர ஆகியோர் முன்னிலையில் குறித்த சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

ஏப்ரல் 26ம் தேதி சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியிலுள்ள வீடொன்றில், சஹ்ரான் குழுவினரும் அவர்களின் குடும்பத்தினரும் தங்கியிருந்த நிலையில், அவர்களை படையினர் சுற்றி வளைத்தனர்.

சஹ்ரான் குழுவினரின் சடலங்கள் தோண்டியெடுப்பு

இதனையடுத்து நடந்த துப்பாக்கிச் சண்டையிலும், தற்கொலைக் குண்டுகளை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தமையின் காரணமாகவும் அந்த வீட்டில் தங்கியிருந்த 15 பேர் உயிழரிந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் சஹ்ரானின் இரண்டு சகோரரர்களும் தந்தையும் அடங்குவர்.

எவ்வாறாயினும், தற்கொலைக் குண்டுகள் வெடித்த வீட்டிலிருந்து, சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் காயப்பட்ட நிலையில் தப்பித்தமை நினைவுகொள்ளத்ததக்கது.

இதன் பின்னர், உயிரிழந்த பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களின் சடலங்களை பொறுப்பேற்பதற்கு முஸ்லிம்கள் முன்வராமை காரணமாக, இஸ்லாமிய மதச் சடங்குகளின்றி, அந்த சடலங்கள் அம்பாறையில் புதைக்கப்பட்டன.

இருந்தபோதும், அந்தக் குண்டு வெடிப்பின்போது பலியான சஹ்ரான் தரப்பினரின் குழந்தைகளின் உடல்கள் மட்டும், இஸ்லாமிய மதச் சடங்களுடன் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அனர்த்தத்தில் 06 குழந்தைகள் பலியாகியிருந்தனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48554299

  • கருத்துக்கள உறவுகள்

முதலே மரபணுவை எடுத்திருக்கலாம் தானே இப்ப திருப்பி தோண்டி சும்மா சீன் போடுறாங்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, putthan said:

முதலே மரபணுவை எடுத்திருக்கலாம் தானே இப்ப திருப்பி தோண்டி சும்மா சீன் போடுறாங்கள்.....

இஸ்லாமிய மதத்தில்,  புதைத்த ஒருவரின்... உடலை,  
மீண்டும் தோண்டி... எடுப்பது,  மன்னிக்க முடியாத குற்றம்.

அதனை... சிங்களம்  செய்கின்றது. 
இனி... எங்களுக்கு,  நல்ல விளையாட்டு இருக்கு.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

அதனை... சிங்களம்  செய்கின்றது. 
இனி... எங்களுக்கு,  நல்ல விளையாட்டு இருக்கு.  :grin:

மனம்   ஜாலி ஜாலி ஜாலி என சந்தோசப்படுகின்றது..... ஆனால்

சில யாழ்கள மூத்த உறுப்பினர்களின் முற்போக்கு சிந்தனைக்காக இப்படி எழுதவேண்டியிருக்கு ......அவர்கள் தமிழ் பேசும் மக்கள் ,வடக்கு கிழக்கின் பூர்வீக குடிகள் ,சிறுலங்காவின் மற்றோர் சிறுபான்மையினத்தினர்.....அவர்களை அரவணைத்தால் தான் எமக்கு விடுதலை....🤣😄

  • கருத்துக்கள உறவுகள்

சஹ்ரானின் சகாக்கள் நால்வரின் சடலங்கள் தோண்டியெடுப்பு

sainthamaruthu-bodies-300x190.jpgஅம்பாறை – சாய்ந்தமருதில், கடந்த ஏப்ரல் 26ஆம் நாள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் நால்வரின், சடலங்கள் இன்று மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டன.

ஐஎஸ். தீவிரவாதிகளான, தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரானின் குடும்பத்தினர் 16 பேர், சாய்ந்தமருதில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த போது, அதனைப் படையினர் முற்றுகையிட்டனர். இதையடுத்து, அவர்கள், குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்தனர்.

கொல்லப்பட்ட 16 பேரில், குழந்தைகள் தவிர ஏனையோரின் சடலங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில், தனியாக புதைக்கப்பட்டன.

நடைபெற்று வரும் விசாரணைக்குத் தேவையான, பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக அம்பாறை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நான்கு ஐ.எஸ் தீவிரவாதிகளின் சடலங்கள் இன்று தோண்டியெடுக்கப்பட்டன.

http://www.puthinappalakai.net/2019/06/07/news/38390

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.