Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதமும் மனிதர்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதமும்  மனிதர்களும்
_____________________

உங்கள் நலன்களுக்கு அப்பால் எப்பொழுது மானிடம் பற்றி நீங்கள்  சிந்திக்கிறீர்களோ அப்பொழுது தான் இந்த இரத்த களரியை இல்லாமல் ஆக்க முடியும் மதத்தின் பெயராலும் சொந்த நலத்தின் பெயராலும் உலகம் பிளவுபட்டு கிடக்கும் வரை மிஞ்சி இருக்கப்போவது இரத்தமும் சாம்பலும் தான் மத அடிப்படைவாதிகளினாலும் சொந்த நல பொருளாதார சுரண்டல் காரர்களினாலும் சிரியாவும் ஈராக்கும் இன்று மனிதம் புதைந்த ஒரு சாம்பல் மேடுகளாக மாறி இருக்கிறது .

 

இன முரண்பாடுகளும் மத முரண்பாடுகளும் மீண்டும் மீண்டும் தொடருவதற்கு அந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் அதிதீவிர மதவாதிகளுமே காரணமாகிறார்கள் .சிறு பான்மை இனத்தின் இருப்புகள் அதன் உரிமைகள் அடையாளங்கள் எல்லாம் வன்முறை மூலம் அளிக்கப்பட்ட வரலாறுகளே தொடர்கின்றன .ஒரு கையில் ஜனநாயக்கதோடும் மறு கையில் ஆயுதங்களாக வியாபார உலகமாக 
இருக்கும் போது மனிதம் வாழுவதற்கு இடமேது .

 

ஒரு வன்முறைக்கு இன்னும் ஒரு வன்முறை தீர்வாகாது ஒரு பிழைக்குஇன்னும்ஒருபிழையைசுட்டிக்காட்டுவது குழந்தைத்தனமானது .மனித குலத்துக்கு எதிரான எல்லாவன்முறைகளுமேகண்டிக்கத்தக்கவை . முதலாளித்துவத்தின் சுரண்டல்காரர்களின் பெயரால் மதத்தின் பெயரால் நடாத்தப்படுகின்ற எல்லா வன்முறைகளும் மனித மானிட தர்மங்களுக்கு எதிரானவையே .

 

மதம் என்பது ஒரு மனிதனை வன்முறை இல்லாதவனாக ஒழுக்கமான ஒரு 
சமூகத்தை உருவாக்க முனையும் ஒரு சமூக காரணியாகும்.(social fact).
ஆதி கால மனிதன் வன்முறையும் கொலையுமாக சமூக அரசியல் பொருளாதார 
எந்த கட்டமைப்பும் இன்றி தமக்குள் மோதி இறந்தனர் .பல பரிணாமம் கடந்து மக்கள்  அரசனோடு ஒரு ஒப்பந்தம் செய்து அவனிடம் அனைத்து அதிகாரங்களையும் ஒப்படைத்து ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்கினான் .பின்பு மறுமலர்ச்சி (Renaissance period)காலங்களோடு சமுக அரசியல் ஜனநாயக பண்புகள் உடன்  படி படியாக உலக நாகரீகம்  வளர்ச்சி கண்டது .

 

அரசியல் சமூக கலாச்சார பொருளாதார ஸ்தாபனங்கள் வளர்ச்சி கண்டு சமூக இயக்கத்துக்கு காரணமாக அமைந்தன .மதம் என்பதும் இதன் அடிப்படையில் ஆனதே .சமூகவியலாளர் கார்ல் மார்க்ஸ் கூடி மதத்தை எதிர்க்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை ,மதம் என்பது அவின் போன்றது என்று மதமும் பொருளாதாரமும் என்ற தனது ஆய்வுகளில் குறிப்பிட்டு இருந்தார் .

 

முதலாளித்துவ சுரண்டலுக்கு மதம் முக்கியமானது இதனால் மதம் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் வேறு வேறு பாத்திரங்களில் தோவையாக இருந்தது .முதலாளித்துவ சுரண்டலாலும் தொழிலாளர் தனிமை(alienation) அடைவதால் மதத்தை தொழிலாளி நாடி போக வேண்டி இருந்ததாக கார்ல் மார்க்ஸ்சின் சோஷலிச தத்துவம் விபரிக்கின்றது ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் துன்பங்களின் நிமித்தம் மதத்தை நாடுவதும் ஆண்டவனை வேண்டுவதுக்கும் அடிப்படையாக அமைந்தது முதலாளித்துவ வர்க்க சுரண்டலாகும் .அதே வேளை குடும்பங்களை பிரிந்து இயந்திர வாழ்வோடு மனிதன் இருப்பதால் அமைதி வேண்டி ஆண்டவனை நாடுவது அவர்களுக்கு ஒரு மன அமைதியை தருவதாகவே தொழிலாளர் கருதினர் .இதயம் இல்லாத உலகில் இதயம் போன்றதே மதம் என்று மார்க்ஸ் கூறினார் .

ஆகவே மதம் என்பது அமைதியை தேடுவதற்கும் மனிதனை நல்வழிபடுத்தி வன்முறை இல்லாத ஒரு சமுதாயமாக இருபதற்கு ஆன ஒரு மார்க்கமே அன்றி வன்முறைக்கும் மனித அழிவுகளுக்கும் மதம் காரணமாக இருப்பது நாகரிகமான விஞ்ஞான பூர்வமான சிந்தனைக்கு அப்பால் ஆனது .class of civilisation நாகரீகங்களுக்கு இடையிலான யுத்தம் என்ற தனது நூலிலே சாமுவேல் ஹன்டிண்டன் என்ற அமரிக்கா அரசியல் அறிஞர் மிகவும் தொளிவாக விபரிக்கின்றார் அதாவது யூதர்கள் தங்கள் நாகரிகமும் மதமுமே முதன்மையானதென்றும் தமது கடவுளை விட வேறு கடவுள் இல்லை என்றும் இதே போலவே இஸ்லாமியர்கள் தமது நாகரிகத்தையும் கடவுளையும் விட வேறு கடவுள் இல்லை எனவும் இதே போலவே ஏனைய மதத்தவர்களும் மத ரீதியாகவும் இன ரீதியாகவும் பிளவு பட்டு நாகரீகங்களுக்கு இடையிலான மோதல்களாகவே உலகம் ஒரு வன்முறை கலாச்சாரத்தை நேக்கி நகரும் என்றார் .

 

 

மனிதனின் பாதுகாப்பு நிச்சயா தன்மை இல்லாது இருப்பின் அந்த மனிதர்களின் கலாச்சாரமும் நாகரிகமும் முன்னேற்ரமான பாதையை நோக்கி நகர முடியாது.
Civilization and culture cannot make progress where human life is unsafe And insecure.ஆகவே மனிதர்கள் பாதுகாப்புடன் வாழவேண்டிய அனைத்து பாதுகாப்பையும் உறுதி படுத்துவது அந்த நாட்டின் நல் ஆட்சியின் கடமையாகும் .ஒரு மனிதன் மத நம்பிக்கையுடனோ அல்லது மத நம்பிக்கை இல்லாது இருப்பதும் அவனது உரிமை சார்ந்ததாகும்.எந்த மதத்தையும் அவர் அவர் நம்பிக்கையுடன் பின் பற்ற
யாரும் தடை போட முடியாது .இருப்பினும் மனித வாழ்வுக்கு எதிராக மதத்தின் பெயரால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் நிறுத்த படவேண்டும்.

முற்போக்கு சிந்தனை உடைய மனிதர்கள்,கல்விஅறிவுடைய சமூகத்தினர் இணைந்து மதங்களின் பெயரால் கட்டு அவிழ்த்து விடப்படும் வன்முறைகளை நிறுத்தி  புதியதொரு நாகரீக சமுதாயம் ஒன்றை நோக்கி நகர இவர்கள் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.மனிதர்கள் பாதுகாப்புடன் வாழக்கூடிய புதியதோர் உலக ஒழுங்கை உலக தலைவர்களும் மதகுருமார்களும் இணைந்து முன் நோக்கி நகர்த்துவார்களா .

B.Uthayakumar/Oslo

மனித குலத்துக்கு எதிரான அனைத்து வன்முறைகளும் கண்டிக்கத்தக்கவை. இங்கு குறுகிய எண்ணமுடையவர்களே மதகுருமார்களாகவும், தலைவர்களாகவும் உள்ளனர். 

நல்லதொரு பகிர்வு.

பதிவுக்கு நன்றி. 

உலகில் பெரிய மதமான கிறிஸ்தவம் உலகின் செல்வாக்கு மிக்க பணக்கார மதம். 
உலகின் அதிக மதமாற்றத்தை ' ஊக்குவித்ததும்' அவர்கள். 

இஸ்லாமிய மதத்தின் ஒரு பகுதியினர் இன்று அதன் கொள்கையை பழமைவாய்ந்த பகுதியை கையில் எடுத்து, உலகத்தையே ஆட்டுகின்றார்கள்.  

சோழர்கால ஆட்சியில் இந்து/சைவ வளர்ந்த மதம் பின்னர் அவர்களால் கைவிடப்பட்டது.
  
ஆரியம் மதவாதம் கொண்டது. 
திராவிடம் மதம் அற்றது. 

தற்பொழுது பலநாடுகளில், குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வளர்ந்து வருவது 'தேசியவாதம்'  என்ற 'மதம்'. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2019 at 3:06 PM, ampanai said:

பதிவுக்கு நன்றி. 

உலகில் பெரிய மதமான கிறிஸ்தவம் உலகின் செல்வாக்கு மிக்க பணக்கார மதம். 
உலகின் அதிக மதமாற்றத்தை ' ஊக்குவித்ததும்' அவர்கள். 

இஸ்லாமிய மதத்தின் ஒரு பகுதியினர் இன்று அதன் கொள்கையை பழமைவாய்ந்த பகுதியை கையில் எடுத்து, உலகத்தையே ஆட்டுகின்றார்கள்.  

சோழர்கால ஆட்சியில் இந்து/சைவ வளர்ந்த மதம் பின்னர் அவர்களால் கைவிடப்பட்டது.
  
ஆரியம் மதவாதம் கொண்டது. 
திராவிடம் மதம் அற்றது. 

தற்பொழுது பலநாடுகளில், குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வளர்ந்து வருவது 'தேசியவாதம்'  என்ற 'மதம்'. 

அருள்மொழிவர்மனுக்கும் அம்பானைகும் உங்கள் கருத்துக்கு நன்றிகள் 
உலகத்தின் இன்று சமத்துவம் இன்மையும் ஏற்றதாழ்வுகளும் அதி தீவிர வலது சாரி போக்கு உடையவர்களின் செல்வக்குமாக ஒரு உலக ஒழுங்கை நேக்கி நகர்வது மனித இருப்புக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன .

On 6/9/2019 at 2:28 PM, அருள்மொழிவர்மன் said:

மனித குலத்துக்கு எதிரான அனைத்து வன்முறைகளும் கண்டிக்கத்தக்கவை. இங்கு குறுகிய எண்ணமுடையவர்களே மதகுருமார்களாகவும், தலைவர்களாகவும் உள்ளனர். 

நல்லதொரு பகிர்வு.

அருள்மொழிவர்மனுக்கும் அம்பானைகும் உங்கள் கருத்துக்கு நன்றிகள் 
உலகத்தின் இன்று சமத்துவம் இன்மையும் ஏற்றதாழ்வுகளும் அதி தீவிர வலது சாரி போக்கு உடையவர்களின் செல்வக்குமாக ஒரு உலக ஒழுங்கை நேக்கி நகர்வது மனித இருப்புக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.