Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் திருமணம் செய்த மகளுக்காக... கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டிய அப்பா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Father put Tribute Poster to her daughter due to love marriage near Ambur

லவ் மேரேஜ்.. மகளுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டிய அப்பா!

தன் பேச்சையும் மீறி, மகள் லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டதால், ஆத்திரம் அடைந்த அப்பா கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி விட்டார்.

ஆம்பூர் அடுத்துள்ள பகுதி குப்பராஜபாளையம். இங்கு வசித்து வருபவர் சரவணன். இவருக்கு 21 வயதில் அர்ச்சனா என்ற மகள் இருக்கிறார். மகள் மீது சரவணனுக்கு கொள்ளை ஆசை.

கடந்த சில வருடங்களாகவே மகள், சுப்பிரமணி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகம் என்று சொல்லப்படுகிறது. காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததும், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சுப்பிரமணி வேறு சாதி என்பதால் மேலும் எதிர்ப்பு கூடியது.

எப்படியும் இவர்கள் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்று நினைத்த இந்த ஜோடி, வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டனர். இந்த விஷயம் சரவணனுக்கு தெரியவந்ததும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார்.

எப்போது தன் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்தாரோ, அப்போதோ அவர் தனது மகள் இல்லை, இறந்துவிட்டார் என்று சரவணன் முடிவெடுத்தார். இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அடித்து ஊரெல்லாம் ஒட்டிவிட்டார்.

அந்த போஸ்டரில் மகளின் போட்டோ உள்ளது. மேலும், "அன்புமகள் அகால மரணமடைந்துவிட்டாள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம், அவளது உடல் இன்று மாலை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது"என்று எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் ஊருக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

Read more at: https://tamil.oneindia.com/news/vellore/father-put-tribute-poster-to-her-daughter-due-to-love-marriage-near-ambur-353670.html

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையை கையிலெடுத்துக்காது 
என்ன கோதாரியாவது செய்து தொலையுங்கோ. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்பிடியான சம்பவம் ஜெர்மனியிலையும் நடந்திருக்கு....என்ன ஒண்டு போஸ்டர் அடிக்கேல்லையே தவிர மற்றும் படி  தலைமுழுகிறம் எண்டு தலையிலை தண்ணி தெளிச்ச  விசயங்கள் எக்கச்சக்கம்...

  • கருத்துக்கள உறவுகள்

இவராணி....

சாதியத்துக்கு அப்பால்.... (ஒரே சாதியாக இருந்தாலும் கூட) ஊரு, உலகம், சொந்தம் விட்டு ஓடுபவர்கள், இந்தியா போன்ற நாடுகளில், நல்ல பொருளாதார வளம் இல்லாதவர்கள், நிம்மதியாக வாழ முடியும் என்று தோன்றவில்லை.

வீடு வாடைக்கு எடுப்பதில் இருந்து, மளிகை பொருள் வாங்குவதில் இருந்து, ஊர் ஒத்துழைக்காது.

 

52 minutes ago, குமாரசாமி said:

உப்பிடியான சம்பவம் ஜெர்மனியிலையும் நடந்திருக்கு....என்ன ஒண்டு போஸ்டர் அடிக்கேல்லையே தவிர மற்றும் படி  தலைமுழுகிறம் எண்டு தலையிலை தண்ணி தெளிச்ச  விசயங்கள் எக்கச்சக்கம்...

ஜெர்மனியில், அவர்கள் தம்மை இலகுவாக பொருளாதார வளமிக்கவராக மாத்திக் கொள்ள முடியும்.

கனடாவில் கூட, சாதிய வேறுபாடு காரணமாக, மகளின் கணவரை வான் எத்திக் கொல்ல ஒருவர் முயன்று சிறை சென்றார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Nathamuni said:

இவராணி....

சாதியத்துக்கு அப்பால்.... (ஒரே சாதியாக இருந்தாலும் கூட) ஊரு, உலகம், சொந்தம் விட்டு ஓடுபவர்கள், இந்தியா போன்ற நாடுகளில், நல்ல பொருளாதார வளம் இல்லாதவர்கள், நிம்மதியாக வாழ முடியும் என்று தோன்றவில்லை.

வீடு வாடைக்கு எடுப்பதில் இருந்து, மளிகை பொருள் வாங்குவதில் இருந்து, ஊர் ஒத்துழைக்காது.

 

ஜெர்மனியில், அவர்கள் தம்மை இலகுவாக பொருளாதார வளமிக்கவராக மாத்திக் கொள்ள முடியும்.

கனடாவில் கூட, சாதிய வேறுபாடு காரணமாக, மகளின் கணவரை வான் எத்திக் கொள்ள ஒருவர் முயன்று சிறை சென்றார்.

நீங்கள் கூறிய மூன்று கருத்துக்களும் சிறந்த கருத்துக்கள். எனினும் எனக்கு சார்ந்ததை எடுத்து மீள்கருத்து கூறுகின்றேன்.
இடம் வலம் மாறி அதாவது சாதி மாறி மணம் /கரம் பிடித்தவள் நல்லாய் இருக்கிறாள் என்று மனதுக்குள் சந்தோசம் பொங்கி வழிந்தாலும்....அந்த பெற்றோரால் அந்த பொன் மகளை தங்களுடன் இணைதுக்கொள்ள முடியவில்லை. காரணம் அந்த பெற்றோர்களை சொந்த இனசனம் சேர்த்துக்கொள்ளாது என்ற பயம்.....அத்துடன் அவர்களுக்கு இன்னும் இரு பெண்பிள்ளைகள் இருக்கின்றார்கள். கலியாண பேச்சுக்கால் என்று வரும் போது  ஆதி அந்தம் எல்லாம் விசாரிப்பார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

உப்பிடியான சம்பவம் ஜெர்மனியிலையும் நடந்திருக்கு....என்ன ஒண்டு போஸ்டர் அடிக்கேல்லையே தவிர மற்றும் படி  தலைமுழுகிறம் எண்டு தலையிலை தண்ணி தெளிச்ச  விசயங்கள் எக்கச்சக்கம்...

ஜெர்மன் என்ன ஊரிலேயே நடந்து இருக்கு இந்தியன் ஆமி காலத்தில் வலிகாமம்  பொறுப்புள்ள ஆள் காதல் என்று இயக்கத்தில் இருந்து சுய விருப்பு என்று நினைகிறன் விலகி மன்சள் கயிறு கட்டி விட்டார் பெண்ணின் தாய் வீட்டுக்கு போகும்போது உடன் நாங்களும் சென்றோம் அங்கு பெண்ணின் தாயார் பெண்ணின் போட்டோக்களை எரித்துவிட்டு எட்டு செய்து கொண்டு இருக்கிறா வெறுத்து போய் திரும்பி சைக்கிளில் வந்தம் காலம் பொல்லாதது முள்ளிவாய்க்கால் அழிவில் இருந்து தப்பி அந்த குடும்பம் சுவிசில் வாழ்கின்றனர் என கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டணில் கூட மகளை காதலித்த, கறுப்பு இளைஞனை, பார்க்குக்கு பேச வருமாறு அழைத்த வெள்ளை தந்தை, பெற்றோல் ஊத்தி எரித்த கதை நடந்திருக்கின்றது. 

  • 4 weeks later...
On 6/11/2019 at 4:48 AM, Nathamuni said:

லண்டணில் கூட மகளை காதலித்த, கறுப்பு இளைஞனை, பார்க்குக்கு பேச வருமாறு அழைத்த வெள்ளை தந்தை, பெற்றோல் ஊத்தி எரித்த கதை நடந்திருக்கின்றது. 

எப்பொழுது நடந்தது அதரம் கூடுகள் ஐயா 

  • கருத்துக்கள உறவுகள்

சாதி என்பது முன்னெப்போதும் இல்லாதவாறு தற்சமயம் கனடாவில் உச்சியில் ஏறி நிற்கிறது. சாதி என்பதை அறியாத பிள்ளைகள் பெற்றோர்கள் பேசும் சாதியத் திருமணங்களால் மனமுடைந்து போகிறார்கள் அல்லது திருமணம் செய்ய மறுக்கிறார்கள். நிலைத்தகவல் (உவகை மணமக்கள் இணைப்பு)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.