Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை-கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை நம்பிக்கொண்டு புலிகளின் போராட்டம் எப்போதும் இருந்ததில்லை. தமிழ்விரோத போக்கு கொண்டவர்களின் ஆட்சியில் இருந்ததைவிட கலைஞர் ஆட்சியில் தமிழீழ எதிர்ப்பாளர்களின் வலிமை குறைந்தே இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. கலைஞர் ஆட்சியில் இருப்பது ஸ்ரீலங்கா அரசுக்கும், இந்திய ரோ விற்கும் இனிப்பான விடயம் அல்ல.

ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும். அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துக் கட்ட முன்வர வேண்டும்.-தேசியத்தலைவர்-

தலைவர் சொன்னது போல எமது போராட்டத்தை நாங்கள் தான் செய்ய வேண்டும். 3ம் மனிதனை எதிர்பார்த்து நிற்பது அறிவிலித்தனம். அவ்வாறு 3ம் மனிதன் எதிர்த்தால் அவனை நம் வழிக்கு கொண்டு வரவேண்டியதே தேவை. ஏனென்றால் எமக்குத் தான் நாடு தேவை. அவனுக்கல்ல. எனவே எம் சார்பாக அவனை மாற்றுவதில் தான் எம் வெற்றி தங்கியிருக்கின்றது.

  • Replies 53
  • Views 8k
  • Created
  • Last Reply

படுக்க இடம் கொடுத்த தின்னை வளைத்துவிடுவார்கள் . இவர்களை தூரத்தில் வைத்தே பார்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

படுக்க இடம் கொடுத்த தின்னை வளைத்துவிடுவார்கள் . இவர்களை தூரத்தில் வைத்தே பார்க்கவேண்டும்.

நன்றி.

ஆனால் உங்களின் முயற்சி பலிக்காது. அதற்கு ஏமாறுகின்ற பழக்கம் போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ம் இந்த கலைஞ்சரின் கருத்தில் நெகிழ்சி போக்க்கை கடைபிடித்திருகிரார்

அவர் ஒரு பலமில்லாத அரசியல்வாதி அல்ல வல்வை மைந்தன் மத்திய அரசை தஞ்சாவூர் பொம்மை போல ஆட்டும் சக்தி அவ்ருக்கு இருக்குது அதுதான் 40 பா.உ நிச்சயம் பேரம் பேசும் சக்தி அவருக்கு அதிகளாவில் இருக்குது அவர் அண்மையில் ஆயுதக்கொடுப்பனவு சம்பந்தமான பிர்ரச்சினைக்கு தன்ணியூற்ரி அணைத்திருகிறார் சட்ட மன்றத்தில்.நிச்சயம் அவர் காலத்தில் தமிழீழம் உருவாகினால் அவருக்கும் பெருமை

*********************

எனது கணிப்பின்படி கலைஞர் கூட்டுக்களின்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்திருந்தால் என்னும் அதிகமாக எதிர்பார்த்திருக்கலாம் என்பதைத்தான் பலமாக இல்லை என்று குறிப்பிட்டிருந்தேன்.

நன்றி.

ஆனால் உங்களின் முயற்சி பலிக்காது. அதற்கு ஏமாறுகின்ற பழக்கம் போய்விட்டது.

எமாறுபவர்களும் எமாற்றபடுபவர்களும் இந்திய தமிழர்கள். இனி எப்போதுமே தமிழகத்தில் இடம் கிடையாது.

படுக்க இடம் கொடுத்த தின்னை வளைத்துவிடுவார்கள் . இவர்களை தூரத்தில் வைத்தே பார்க்கவேண்டும்.

நன்றி.

ஆனால் உங்களின் முயற்சி பலிக்காது. அதற்கு ஏமாறுகின்ற பழக்கம் போய்விட்டது.

தூயவன் இவர் என்ன சொல்ல வாறார் உங்களுக்கு ஏதும் புரியுதா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி தமிழக, தமிழீழ மக்களைச் சீண்டி விடுகின்ற செயலை இவர் செய்து வருகின்றவர். கருணாநிதி விடயத்திலும், இப்படி எழுதுவதன் மூலம், நாங்கள் திருப்பி கருணாநிதியையோ, இந்தியாவையோ திட்டுவோம் என்று எதிர்பார்க்கின்றார். அது தான் அந்த முயற்சி பலிக்காது என்றேன்.

தூயவன் இவர் என்ன சொல்ல வாறார் உங்களுக்கு ஏதும் புரியுதா? :unsure:

சிண்டு முடியும் வேலையை விட்டு விட்டு, D.G பொன்னம்பலம் என்பவர் யார் அவர் இந்தியத்தமிழர்களுக்கு என்ன செய்தார் என்பதை கூற முடியுமா????

அடிக்கடி தமிழக, தமிழீழ மக்களைச் சீண்டி விடுகின்ற செயலை இவர் செய்து வருகின்றவர். கருணாநிதி விடயத்திலும், இப்படி எழுதுவதன் மூலம், நாங்கள் திருப்பி கருணாநிதியையோ, இந்தியாவையோ திட்டுவோம் என்று எதிர்பார்க்கின்றார். அது தான் அந்த முயற்சி பலிக்காது என்றேன்.

அதற்காக இலங்கை அரசு இல்லை இந்திய மத்திய அரசு இல்லை றோவிடமிருந்து ஏதும் சன்மானம் ஏதும் வாங்கிறாரா...........? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சிண்டு முடியும் வேலையை விட்டு விட்டு, D.G பொன்னம்பலம் என்பவர் யார் அவர் இந்தியத்தமிழர்களுக்கு என்ன செய்தார் என்பதை கூற முடியுமா????

D.G பொன்னம்பலம் அப்படி யார் இருந்தார்கள்?? ஜி.ஜி பொன்னம்பலம் என்று தான் இருந்தார்.

அவர்கள் ஒழுங்காக அன்று சிந்திக்காததால் தான் நமக்கே இத்தனை பிரச்சனை! அதுக்குள்ள இந்தியத் தமிழர்களுக்கு என்ன செய்தார் என்று நாங்கள் எப்படிச் சொல்ல?

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக இலங்கை அரசு இல்லை இந்திய மத்திய அரசு இல்லை றோவிடமிருந்து ஏதும் சன்மானம் ஏதும் வாங்கிறாரா...........? :lol:

***********************

ஓ விவாதம் தடம்புரளுகிறதா?

நாங்கள் மாற்ற வில்லை ஒருத்தர் மாற்ற முயற்ச்சிக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

ஜி.ஜி. பொன்னம்பலம் இலங்கைக்கான சுதந்திரத்தை வழங்கும் நோக்கில் சோல்பரிப் பிரபுவை ஓர் அரசியல் அமைப்பினை ஏற்படுத்துவதற்காக பிரிட்டன் இலங்கைக்கு அனுப்பியபோது இலங்கைத் தமிழருக்கும் சிங்களவருக்கும் ஐம்பதுக்கு ஐம்பது வீதம் சமமான பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் இருக்கவேண்டுமென முரண்டுப்பிடி பிடித்தார். சோல்பரி அதற்கு இணங்காமல் ஓரளவு குறைத்து தமிழருக்கு நாற்பது வீதம் கொடுக்கலாமென்று விரும்பினார். ஆனால் ஜிஜி உடன்படாததால் வயதுவந்த எல்லோருக்கும் வாக்குரிமையென்னும் சர்வசனவாக்கெடுப்பு முறையைச் சோல்பரி சிபாரிசு செய்துவிட்டுப் போய்விட்டார். இதனால் தமிழர்கள் பெரும்பான்மைச் சிங்களவர்களின் அரசியல் அதிகாரத்திற்குள் உட்பட்டுப் போய்விட்டனர். நாற்பதுக்கு ஐம்பது வீதத்தை ஒத்துக்கொண்டு ஏனைய பங்கை மற்றைய சிறுபான்மையினருக்குக் கொடுத்திருந்தால் அரசியல் அமைப்பைச் சிங்களவர்கள் தமக்கு விரும்பிய மாதிரியெல்லாம் மாற்றி இருக்கமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்

கடற்புலிகள் மீது தமிழக காவல்துறை குற்றச்சாட்டு

தமிழோசை

தமிழக மீனவர்களின் கொலைக்கு விடுதலைப்புலிகளே காரணம் என்கிறார் தமிழக காவல்துறைத் தலைவர்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்இ தமிழக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகளே காரணம் என்று தமிழக காவல்துறையின் தலைவர் டி. முகர்ஜி அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில்இ கடந்த 11 ஆம் திகதி இந்தியக் கடற்பரப்பில் பிடிக்கப்பட்ட இலங்கைப் படகு ஒன்றில் வந்தவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 'மரியா' என்று எழுதப்பட்ட படகில் வந்தவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் என்றும்இ இதே போன்று மரியா என்று எழுதப்பட்ட படகே தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்தது என்றும் அவர் கூறுகிறார்.

கன்னியாகுமரி மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களும்இ தமது கடற்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களே என்று தற்போது கைது செய்யப்பட்டவர்கள் கூறியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் கொல்லம் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்று இதுவரை திரும்பாத 12 மீனவர்கள்இ தற்போது விடுதலைப்புலிகளின் பிடியில் இருப்பதாகவும் இப்போது கைதானவர்கள் கூறியிருக்கிறார்கள் என்றும் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்த விடுதலைப்புலிகளின் கருத்தை உடனடியாகப் பெறமுடியவில்லை.

நன்றி:-தமிழோசை

மீணடும் கலைஞர் அவர்களைத்தொழும் நபர்களைப்பார்த்து கேட்கின்றேன்

இவ்வாறான பொறுப்பற்ற அறிக்கைகள் கூட கலைஞர் அவர்கட்குத்தெரியாமல்தான் தயாரிக்கப்படுகின்றன என்கின்றீர்களா???

நம்புவதற்கும்

ஏமாற்றுவதற்கும்

ஏன் ஏமாறுவதற்கும்

கூட ஒரு அளவு

காலம்

நேரம்

உண்டுங்கோ???

உண்மை விரைவில் தெறியும் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை விரைவில் தெறியும் பார்க்கலாம்.

தெரிந்த உண்மையைக் கூட முகர்ஜி மறைத்தால் எப்படியாம் தெரியும்?

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான பொறுப்பற்ற அறிக்கைகள் கூட கலைஞர் அவர்கட்குத்தெரியாமல்தான் தயாரிக்கப்படுகின்றன என்கின்றீர்களா???

நம்புவதற்கும்

ஏமாற்றுவதற்கும்

ஏன் ஏமாறுவதற்கும்

கூட ஒரு அளவு

காலம்

நேரம்

உண்டுங்கோ???

ஓம் குகா. என்ன ஆனாலும் தமிழகம் தாய் நாடு தமிழக முதல்வர் உலகத் தமிழ் தலைவர் என்று நினைப்போர் பேசுவோர் எல்லா மட்டங்களிலும் உண்டு.ஈழவேந்தன் பா.உ நல்ல உதாரணம். தமிழ்நாட்டில் வசித்து, பின் ஈழத்திற்கு வந்த அவரை ஒரு ஈழத்தமிழர் பிரதிநிதியாக இந்தியாவுக்குள் நுழைகையில், சென்னை விமான நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பினார்கள். இலங்கை வந்திறங்கிய மனிதர் "இந்தியா என் தாய் நாடு, நான் மீண்டும் போவேன்" என அளப்பரிய விசுவாசம் காட்டியிருந்தார்.இப்படி சுயமரியாதையும் இனமரியாதையும் இல்லாதவர்களைத் தேசியப் பட்டியல் கொடுத்து வைத்திருக்கிறார்களே எனப் பெரிய வேதனையாக இருந்தது. தலைவரும் தமிழ்ச்செல்வன் அவர்களும் யாராவது கேள்வி கேட்கும் போது மட்டும் இந்தியா எமது எதிரியல்ல என்று சொல்வார்கள், அத்தோடு நிறுத்திக் கொள்வார்கள்.எனக்குப் புரியாத விடயம் ஏன் சாதாரண தமிழ்க்குடி மக்கள் இப்படித் தமிழக அரசியல்வாதிகளைப் பரணி பாடிக் கொண்டாடுகிறார்கள் என்பது தான். தலைவர் காலத்தினுள் தமிழ் ஈழம் காண்போம் என்பதையே இப்போது நீட்டித்து தமிழக முதல்வர் காலத்தினுள் ஈழம் காணுதல் சிறப்பு என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.ஈழம

Edited by Justin

நடப்பவை மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது................. நயவஞ்சகர்கள் நாசமாக போகட்டும்.

தமிழர்களுக்குள் பிரிவு வேண்டாம்....

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டா வாதத்தில் ஈடுபடுகின்றவர்களே !

தமிழீழ ஆதரவாளன் என்று கூறிக்கொள்பவன் எல்லாம் உண்மையான ஆதரவாளனுமில்லை, விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் தானில்லை என்று சொல்பவன் எல்லாம் எதிரிகளும் இல்லை.

ஜயா இந்தக்கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ இன்றைய நடைமுறைச் சூழ்நிலை அப்படித்தான். தமிழ்த்தேசியத்தில் உண்மையான பற்றிருந்தால் சில வேஷங்களை நாம் போட்டுத்தான் ஆகவேண்டும்.

இறுதியாக வெளிவந்த ஈழமுரசு பத்திரிகையில் " ஸ்ரீலங்காவின் புலனாய்வுக் கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு" என்ற தலைப்பின் கீழ் ஒரு கட்டுரை வந்துள்ளது அதன்படி அந்தத்துறையில் செயல்படும் பெண்கள் விபச்சாரத்திலும் ஈடுபடவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுவதாகவும், அதை தாங்கள் நாட்டுக்காக தியாக மனப்பான்மையுடன் தான் செய்வதாகவும் கருத்துப்பட எழுதப்பட்டுள்ளது.

அதாவது எதிரிகள் நாட்டுக்காக என்னென்ன வேஷமெல்லாம் போடுகிறார்கள், இதைவிட பெரிய வேஷத்தையா கலைஞர் போடுகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாவிவாதம்இல்லையுங்கோ

யாரையும் புண்படுத்தும் நோக்கமும் எமக்கில்லை

நாடில்லலாத

கேட்க யாரும்மில்லாத நாடோடி நாம்

இவர்களை புண்படுத்த முடியுமா???

ஆசியக்கண்டத்தின் இராசாக்கள் இவர்கள்

எமது ஆதங்கம் என்னவெனில்

நாம் இன்னும் எத்தனை நாளைக்கு இந்தியாவையும் தமிழ்நாட்டுத்தலைவர்களையும் முக்கியமாக கலைஞர் அவர்களையும் நம்பி ஏமாறப்போகின்றோம் என்பதுதான்.

அதைவிட முக்கயமானது

இவர்கள் எம்மை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை

உபத்திரவம் செய்யாதிருந்தாலே போதும் அல்லவா???

ஆனால் நாம் முக்கியகாலகட்டத்தில் வந்து நிற்கும்போது நிச்சயம் இவர்கள் எமக்கு வில்லங்கமாக மாறுவார்கள்

1987 இல் இதுதான் நடந்தது.....

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் கருணாநிதிஇ முகர்ஜியின் தகவலை உறுதிப்படுத்தியதுடன்இ இச்செய்தி தனக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் கூறினார்.

செய்தி--பிபிசி

  • கருத்துக்கள உறவுகள்

1. வேண்டா விவாதம்? உங்கள் அபிப்பிராயம் அது. விவாதங்களின் நோக்கம், தெளிவில்லாமல் அல்லது நடு நிலையில் நிற்பவர்களுக்கு அவர்கள் ஒரு பக்கத்தைத் தேர்ந்து கொள்ளத் தேவையான தகவல்களை வழங்குவது.

2. விபச்சார உளவாளிகள்: அரச புலனாய்வுக் கட்டமைப்பில் பல பிரிவினரும் இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளனர். முச்சக்கர வண்டிக்காரர்கள், பஸ் நடத்துனர்கள், தபால் உத்தியோகத்தர்கள் எனப் பலருமுண்டு. பாலியல் தொழில் புரியும் பெரும்பான்மையினப் பெண்கள் இணைக்கப் பட்டது அதிசயமில்லை. ஆனால் புலனாய்வுப் பிரிவில் இணைந்த பின்னர் அதற்காக விபச்சாரம் செய்து நாட்டைக் காக்கிறார்கள் என்பது நம்பக் கூடியதாயில்லை. இதை அவர்களே சொல்லும் போது அதன் நம்பகத்தன்மை இன்னும் குறைகிறது.

3. அவர்கள் எப்படி இருந்தாலும் நாங்கள் விவாதிக்கிற சூழ்நிலைக்குப் பொருந்த மாட்டார்கள். புலனாய்வு அதிகாரி, அது எங்கள் ஆளோ சிங்களவரோ, வேசம் போடுவது இறுதி இலக்குக்கு மிகவும் தேவை.செல்வாக்குச் செலுத்தக் கூடிய அரசியல் வாதிகளின் வேசம் இறுதி இலக்குக் குறித்தா அல்லது தப்பி வாழ்தல் கருதியா? "இப்படி வேசம் போட்டு நான் அரசியலில் இருந்தால் தான் உனக்கு நீண்ட கால நன்மை" என்று மறை முகமாகச் சொல்லப் படுகிறதா? அப்படியானால் ஆறுமுகனாலும் சந்திரசேகரனாலும் மலையக சகோதரர்களுக்குக் கிடைத்த நீண்ட கால நன்மைகள் எவை?

விட்டலாச்சார்யாவின் படம் பார்த்தது போல் இருக்கிறது திரு.முகர்ஜியின் புனை கதை.

அண்ட புளுகனுக்கு மேலாம் ஆகாச புளுகன்! அவனையும் வென்ற புளுகனுக்கு பேராம் முகர்ஜி.

இது எங்கள் தமிழக மீனவ சகோதரர்களை விடுதலை புலிகளுக்கு எதிராக திருப்பி விட இந்திய புலனாய்வு துறையினர் செய்யும் திட்டமிட்ட சதி.

இந்திய ஒருமைப்பாடு என்ற பெயரில் இன்னும் எத்தனை அப்பாவி தமிழக மீனவர்களின் உயிரை இந்திய புலனாய்வுத்துறை பலி எடுத்து விட்டு, அந்த பழியை விடுதலை புலிகள் மேல் போடப் போகிறது.

வேலியே பயிரை மேய்கிறது என்பது இதை தான்!

மேலும் பல அப்பாவி தமிழக மீனவர்களின் உயிர்களை தங்கள் அரசியல் சித்து விளையாட்டுக்கு இந்திய புலனாய்வுத்துறையும் ரோவும் பலியிடும் சதியை தடுக்க தமிழக மக்களும் தமிழ் உணர்வாளர்களும் விரைந்து செயற்பட வேண்டிய தருணம் இது.

இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சுட்டு கொல்லும் பயங்கரவாதம் இன்று நேற்றல்ல, விடுதலை புலிகள் இயக்கம் தோன்ற முன்பே, 70 களில் கச்சதீவை சிங்கள அரசுக்கு தாரை வார்த்து கொடுத்த காலங்களிலேயே ஆரம்பமாகிவிட்டது. இது இந்த புலனாய்வுத்துறை மேதைகளுக்கு தெரியாததல்ல. இது தமிழக மீனவர்களுக்கும் தெரியாததல்ல.

தன் சொந்த மக்களையே முட்டாள்களாக நினைத்து இப்படியான புனைகதைகளை அவிழ்த்து விடுவது, இந்திய ஒருமைப்பாட்டை கேலிக்கூத்தாக்கவும், இந்திய புலனாய்வுத்துறையின் நம்பகத்தன்மையை நாசப்படுத்தவும் தான் உதவும்.

kiya ji Mukerjee aap ithna jute bol rah hai. Dharma will win Mr.Mukerjee, not your white lies.

"Dharma samsthaaban-aarthaaya sambavaami yuke yuke"

Dont forget those lines from Geetha Mr.Mukerjee.

முகர்ஜி யின் பொய்யை தமிழக மக்கள் நம்பப்போவதில்லை இது உளவுத்துறையின் திட்டமிட்ட சதி..... கருணா நிதி உலக தமிழர்களுக்கெல்லாம் தலைவர் அல்ல....

முகர்ஜி பொய்யை சரியாக சோடிக்கத்தெரியாமல் உளறியுள்ளார்........... புலிகள் தமிழக மீனவர்கள் தங்கள் படகை எட்டிப்பார்த்ததால் சுட்டதாக தெரிவிக்கிறார்.... அப்படியானால் சிலர் மட்டுமே சுடப்பட்டுள்ளுனர்.... இப்படியா செய்வார்கள்??? அது மட்டுமல்ல பாதிக்கப்பட்ட மீனவர்களே தங்களை தாக்கியது இந்த படகல்ல என்று கூறிய பிறகும் ..இந்த படகு தான் என்று நம்ப வைக்கிறார்.... ஆனால் பாவம் அவர்கள் முயற்சி தோற்கும்.... தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.