Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

ஒவ்வொருவருக்கும் திரைப்பட நடிகர்களின் நடிப்பு ஒருவிதத்தில் வசீகரிக்கும், எனக்கு பிடித்த நடிகர் எஸ்.வி.ரங்காராவ் தான்..!

தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவராயினும், தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் இவரின் ஆளுமை தனித்தன்மையானது.

இன்றுவரை இவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாரும் நிரப்பவில்லை.

    ஆரவாரமில்லாத ஆழிப்பேரலை நடிப்பு! - எஸ்.வி.ரங்காராவ்

svr.png

 

அது ஒரு நிலாக்காலம்..!

அப்போதெல்லாம் சினிமா மட்டுமே மக்களுக்கான ஒரே பொழுதுபோக்கு. திரை நட்சத்திரங்கள் எளிதில் மனத்துக்கு நெருக்கமானவர்களாக மாறிவிடுவார்கள். டெண்ட் கொட்டாயில் சினிமா பார்த்த அனுபவங்களை வீட்டுப் பெரியவர்கள் பகிர்ந்து கொள்ள, சுற்றி அமர்ந்திருக்கும் சிறுவர்கள் வாய் பிளந்தபடி ஒரு கற்பனை உலகை உருவாக்கிக் கொள்வார்கள். தியாகராஜ பாகவதர் முதல் விஜய் சேதுபதி வரை தமிழ் திரையுலகம் பல அற்புத கலைஞர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் ஒரு சகாப்தம். அவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்து தமிழ்த் திரையுலகம் உள்ளவரை அவர்களுடைய கீர்த்தி நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு அபூர்வ நடிகர்களைப் பற்றிய தொகுப்புதான் இது.

கண்ணியமான தோற்றம். பாசமான தந்தை. அலட்டல் இல்லாத நடிப்பு. கணீர் குரல், அஜானுபாகுவான உருவச் சிறப்பு இவையெல்லாம் ஒருங்கே பெற்ற நடிகர் ஒருவர் உண்டென்றால் அவர் எஸ்.வி.ரங்காராவாகத்தான் இருக்க முடியும். எஸ்.வி.ஆர் என திரைத்துறையினரால் அன்புடன் அழைக்கப்பட்ட ரங்காராவ் பன்முகத் திறமை வாய்ந்தவர். 

ntr-ranga-rao-savithri-647x450.jpg

1918-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி ராஜமுந்திரியில் உள்ள தெளலேஸ்வரம் என்ற ஊரில் பிறந்தார் சமார்ல வெங்கட ரங்கா ராவ். பிரஸிடென்ஸி கல்லூரியில் பட்டப் படிப்பை (பி.எஸ்.ஸி) முடித்த இவர் டாடா நிறுவனத்தில் பணியில் அமர்ந்தார். ஆனால் அவருடைய கலைத்தாகம் அவரை திரைத்துறைக்கு அழைத்து வந்தது. மெதட் ஆக்டிங் என்ற வகையில் அவரது நடிப்பு ஆரம்பத்தில் இருந்தாலும், பிறகு தன் நடிப்புப் பாங்கை மாற்றிக் கொண்டு, அதற்கேற்ற உடல்மொழியுடன் மெருகேற்றிக் கொண்டார். எந்த படத்தில் நடித்தாலும், அந்தக் கதாபாத்திரமாகவே உருமாறும் திறன் கொண்ட அற்புத நடிகர் அவர். உதாரணமாகச் சொல்ல ஒன்றா இரண்டா? அவருடைய எல்லா படங்களையும்தான் குறிப்பிட வேண்டும். என்றாலும் அனைவரையும் கவரிந்த ஒரு சில படங்களில் காட்சிகளைப் பார்க்கலாம்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஏவிஎம் ராஜன், எம்.ஆர்.ராதா விஜயகுமாரி மற்றும் எஸ்.வி.ரங்காராவ் நடிப்பில் வெளியான படம் 'நானும் ஒரு பெண்ஏவிவிஎம் தயாரிப்பில் (முருகன் பிரதர்ஸ்) உருவான இப்படத்தை இயக்கியவர் ஏ.சி.திரிலோகசந்தர். 1963-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் தூணாக விளங்கியவர் எஸ்.வி.ரங்காராவ். ஜமீன்தாரராக அவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மருமகள் அழகியாகவும் அறிவானவளாகவும் வர வேண்டும் என்று நினைத்திருந்தவருக்கு கறுப்பான மருமகள் கல்யாணி (விஜயகுமாரி) வந்ததும், அவளை வெறுத்தார். கணவரின் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) அன்பும் இல்லாமல் மாமனாரின் வெறுப்பிலும் துவண்டுவிடாமல் அன்பினால் அவர்கள் இதயத்தை வெல்கிறாள். ஆனால் ஒரு கட்டத்தில் பெரியவர் அவள் மீது சந்தேகப்படும் விதமாக சூழல்கள் ஏற்பட, அவளை வீட்டை விட்டு வெளியேற்றுகிறாள். இறுதியில் இதற்கெல்லாம் காரணம் மைத்துனர் சபாபதி (எம்.ஆர்.ராதான்) என்ற உண்மையை கல்யாணி மூலமாக அறிகிறார். மருமகளின் திறமையாலும் அறிவாலும்தான் சொத்துக்கள் காப்பாற்றப்பட்டது என்பதை அறிந்து மன்னிப்பு கேட்பார். அப்போது கல்யாணி ''நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை மாமா, உங்களை விட்டுச் சென்ற நாங்கள் தான் தவறு செய்து விட்டோம்' என்று உருக்கமாகக் கூற அதற்கு அவர், ‘உன் பெருந்தன்மை என்ற ரம்பத்தால் என் இருதயத்தை அறுக்காதே கல்யாணி...நான் பாவிஎன்று வருத்தத்துடன் கூறி குற்றவுணர்வு மிக கட்டிலில் அமர்ந்து கண்ணீர் விடுவார். எத்தகைய இதயமானாலும் அந்தக் காட்சியில் உடைந்து போகும் அளவிற்கு இருக்கும் அவரது நடிப்பு. 

maxresdefault-2-1.jpg

பிழியப் பிழிய அழ வைக்கும் காட்சியாக இருந்தாலும் சரி, பணச் செருக்குடன் மிதப்பாக நடக்கும் காட்சியாக இருந்தாலும் சரி அவரை மிஞ்ச அப்போது மட்டுமல்ல இப்போதும் ஆளில்லை. ரங்காராவுக்கு நிகர் ரங்காராவ் மட்டுமே. இன்னொரு மெய் சிலிர்க்கும் காட்சி மாயாபஜார் திரைப்படத்தில் கடோத்கஜனாக அவர் அறிமுகம் ஆகும் காட்சி. கதாயுதத்துடன் கம்பீரமாக அவர் தோன்றி கல்யாண சாப்பாடு மொத்தத்தையும் கபளீகரம் செய்யும் காட்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து மகிழும்படி இருக்கும். அண்டா குண்டாவில் இருக்கும் அத்தனை பண்டங்களையும் சாப்பிட்டுவிட்டு ஸ்டைலாக தண்ணீர் குடத்தின் மூடியைத் தட்டிவிட்டு அப்படியே அதை அலாக்காக தூக்கி நீர் பருகும் காட்சி இப்போது நினைத்தாலும் சிரிக்க வைத்துவிடும். கல்யாண சமையல் சாதம் என்ற பாடல் காலத்தால் அழிக்க முடியாத புகழைப் பெற்றது ரங்காராவ் மற்றும் நடிகையர் திலகம் சாவித்ரியால் என்றால் மிகையில்லை. அந்தப் பாடல் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.  மேலும் அது நம் நினைவலைகளை மீட்டி குழந்தைப் பருவத்திற்கு நம்மை அறியாமல் அழைத்துச் செல்லும்.

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் மாறி மாறி நடித்த ரங்கா ராவுக்கு, தெலுங்கு திரை ரசிகர்கள் விஸ்வநட சக்ரவர்த்தி (உலகின் தலைசிறந்த நடிகர்) என்றொரு பட்டத்தை சூட்டி  மகிழ்ந்தனர். இளம் வயதில் நாடக மேடையில் ஆங்கில நாடங்களில் நடித்த பெருமையும் உடையவர் அவர். குறிப்பாக ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதன் பின் 1952-ம் ஆண்டு வெளியான பெல்லி செஸ்ஸி சூடு என்ற தெலுங்குப் படத்தில் ஜமீன்தாராக நடித்தார். அதற்கு முன் சிறு சிறு கதாபாத்திரங்களில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பெல்லி செஸ்ஸி சூடு என்ற திரைப்படத்தின் மூலம்தான் அவர் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். அத்திரைப்படம் தமிழில் கல்யாணம் பண்ணிப் பார் என்ற பெயரில் வெளியானது. அதில் நடிகை சாவித்திரியின் தந்தையாக 60 வயது தோற்றத்தில் திரையில் தோன்றினார். ஆனால் அவருக்கு அப்போது 34 வயதுதான். தன் மீதான நம்பிக்கை அபரிதமாக இருந்த ரங்காராவுக்கு அதைப் பற்றி சிறிதும் கவலை இல்லை. தான் நடிக்க முன் வந்த கதாபாத்திரத்துக்கு அச்சு அசலாக உயிரூட்டினார் ரங்காராவ். அன்று முதல் பல படங்களில் அப்பா கதாபாத்திரம் என்றால் எஸ்.வி.ஆரை கூப்பிடுங்கள் என்று கூறுமளவிற்கு நித்ய புகழ் பெற்று விளங்கினார். 

ரங்காராவ் ஒரே காட்சியில் நடிந்திருந்தாலும் கூட திரை முழுவதும் அவரே நடிப்பில் நிறைந்திருப்பார்.  30 ஆண்டு திரை வாழ்க்கையில் மொத்தம் 163 படங்களில் நடித்துள்ளார் ரங்காராவ். (தமிழ் படங்கள் 53 தெலுங்குப் படங்கள் 109) நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என திரைதுறையில் ஜொலித்தவர். மிஸ்ஸியம்மா, எங்க வீட்டுப்பிள்ளை, படிக்காத மேதை, மாயா பஜார், பக்த பிரகலாதா, அன்பு சகோதரர்கள், சர்வர் சுந்திரம், நம் நாடு, சபாஷ் மீனா எனப் பல தமிழ் படங்களில் நடித்த ரங்கா ராவ், அன்னை, சாரதா, நானும் ஒரு பெண், கற்பகம், நர்த்தன சாலா ஆகிய படங்களுக்கு குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றார். 1968-ம் ஆண்டு பந்தவ்யலு, 1967-ம் ஆண்டு சடாரங்கம் என இரண்டு தெலுங்குப் படங்களை இயக்கியுள்ளார் ரங்காராவ். இரண்டு படங்களுக்கும் நந்தி விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நர்த்தனசாலா படத்தில் கீசகன் பாத்திரத்துக்காக ஆப்பிரிக்க ஆசிய சர்வதேசப் பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். அவரது உருவம் பதித்த அஞ்சல் தலையை 2013-ம் ஆண்டு வெளியிட்டு சிறப்பு செய்தது அரசு.

 

19VZVIJREG1SVR.jpg

விஜயவாடாவில் ரங்காராவுக்கு மார்பளவு சிலையை திறந்து வைத்தார்  நடிகர் சிரஞ்சிவி.

1974 பிப்ரவரி மாதம் ஹைதராபாத்தில் அவருக்கு இதய வலி ஏற்பட்டு ஓஸ்மானியா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ராவ். ஆனால் மீண்டும் மாரடைப்பு ஏற்படவே, ஜூலை 1974 மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு முன்பே இயற்கை எய்தினார். அவரது உடல் மறைந்தாலும், திரையில் மட்டுமல்ல இன்றளவும் பல ரசிகர்களின் நினைவில் வாழ்கிறார் எஸ்.வி.ரங்காராவ். காலம் சில கலைஞர்களுக்கு பொற்கம்பளத்தை விரித்து வைத்து அதில் அழகிய நட்சத்திரமாக ஒரு சிலரை போற்றிப் பாதுகாத்து வைத்துவிடும். அதிலொரு துருவ நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரங்காராவ்.

தினமணி

 

Edited by ராசவன்னியன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு ரங்கராவ்வை தெரிந்ததே இந்த பாடல் மூலம் தான்...
நல்லதொரு நடிகர்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, குமாரசாமி said:

எனக்கு ரங்கராவ்வை தெரிந்ததே இந்த பாடல் மூலம் தான்...
நல்லதொரு நடிகர்.

 

இந்தப் பாடலை, கேட்கும்  போது, அழுகை வரும்.
ஈழப்போர் நடந்த கால கட் டத்தில், எனது கடைசி தம்பியை... பறி கொடுத்த போது,
இந்தப் பாடலை கேட்டு, கலங்கிய நாட்கள், அதிகம்.

Edited by தமிழ் சிறி
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

"படிக்காத மேதை"  படத்தில் ரங்காராவின் நடிப்பும், சிவாஜியின் நடிப்பும் ஒருவருக்கொருவர் மிஞ்சி நிற்கும்..

குறிப்பாக இருவரும் பாசத்துடன் மோதிக்கொள்ளும் காட்சிகள் மிக அபாரம்..

இன்றுவரை பலமுறை பார்த்து ரசித்த காட்சிகள் இவை.

நேரமிருந்தால் இப்படத்தை பாருங்கள், கண் கலங்குவீர்கள்.. அற்புதமான படைப்பு..

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

இந்தப் பாடலை, கேட்கும்  போது, அழுகை வரும்.
ஈழப்போர் நடந்த கால கட் டத்தில், எனது கடைசி தம்பியை... பறி கொடுத்த போது,
இந்தப் பாடலை கேட்டு, கலங்கிய நாட்கள், அதிகம்.

வணக்கம் சிறி
உங்கள் தம்பியை பறி கொடுத்ததாக எழுதுயிருக்கிறீர்கள்.இதுவரை இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை.உங்களுக்கு விருப்பமிருந்தால் எம்மோடு பகிர்ந்து கொள்ளலாம்.

2 hours ago, ராசவன்னியன் said:

படிக்காத மேதை"  படத்தில் ரங்காராவின் நடிப்பும், சிவாஜியின் நடிப்பும் ஒருவருக்கொருவர் மிஞ்சி நிற்கும்..

குறிப்பாக இருவரும் பாசத்துடன் மோதிக்கொள்ளும் காட்சிகள் மிக அபாரம்..

இன்றுவரை பலமுறை பார்த்து ரசித்த காட்சிகள் இவை.

நேரமிருந்தால் இப்படத்தை பாருங்கள், கண் கலங்குவீர்கள்.. அற்புதமான படைப்பு..

நீண்ட காலத்திற்கு முன் பார்த்தது.
நேரம் கிடைக்கும் போது முயற்சி செய்கிறேன்.
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

நீண்ட காலத்திற்கு முன் பார்த்தது.
நேரம் கிடைக்கும் போது முயற்சி செய்கிறேன்..

 svr2b.thumb.jpg.5e2cc200ff5ff6cd27c00761214b8599.jpg

நேரமிருக்கும்போது, எஸ்.வி.ரங்காராவ் முத்திரை பதித்த சில படங்களின் காணொளிகளை வெட்டி எடுத்து தொகுத்து இணைக்கிறேன்..! 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறி ஜயா குரூப் சொல்கிறது கஞ்சா, கசிப்பை ஒழிக்க Bar ஓகேயாம்…இது பார் லைசன்ஸ்க்கு சிபாரிசு கொடுத்ததை நியாயப்படுத்த சொன்ன வார்த்தைகள்.. அதை உங்களைப்போல் பார்சிறி விசிறிகள் ஆமோதித்து நியாயப்படுத்துகினம்.. இது விபச்சாரத்தை ஒழிக்க மசாஜ் சென்ரருக்கு அனுமதிகொடுத்திருக்கிறம் என்று சொல்வதைப்பொன்றது.. பார் வந்ததால் கசிப்பு எங்க குறைஞ்சிருக்கு......? தேர்தலுக்கு முன்னர் பார் சிபாரிசு கடிதம் கொடுக்கவில்லை என்ற சில அல்லக்கைகளள தற்போது சிபாசு யார் செய்தார் என்ற உண்மை வரப்போகுது என்ற அச்சத்தில் அவரின் சில அடிவருடிகள் இப்பவே கூவ வெளிக்கிட்டாங்கள்… சிறி ஐயா விடம் வேலை வாய்ப்பு பெற்று தரும்படி யாரும் சென்றால் ஐயா கூறுவாராம் நாட்டின் நிலமை உங்களுக்கு விளங்கவில்லையா நாங்கள் இப்போ  முக்கிய விடயங்களை பற்றி தான் பேசுகிறோம் தேசிய பிரச்சினை எவ்வளவு இருக்கிறது இந்த நேரத்தில் அவங்களிடம் வேலைவாய்ப்பு கேட்டால் ஒன்றும் நடக்காது என்று கூற கொஞ்சம் பொறுங்கோ பார்ப்போம் என்று அனுப்பி விடுவாராம்… ஆனால் அவர்களிடம் bar போமீற்கள் வாங்கி பல கோடிக்கு விற்பனை செய்யலாம் அது பரவாயில்லை.. அடிப்படை தொழில் கேட்டு தனது வாழ்வாதாரம் நிமித்தம் போனவர்களுக்கு தேசியம் தன்னாட்சி சுயநிர்ணய உரிமை…  தமிழ்த் தேசியத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் கூட்டத்தாரிடம் மக்கள் நலன்களை எதிர்பார்க்க முடியாது... தன்மானம் விற்று வயிறு வளர்க்கும் கூட்டம்... இனியென்ன அடுத்துவரும் 5 வருடங்களுக்கு நம்மை அசைக்க முடியாது என்ற ஆணவத்தில் ஆடுவார்கள்… ஜயாவோட அடுத்த பேர்மிற் விபச்சார விடுதிகளுக்காகத்தான் இருக்கும்.. உங்கள் ஏமாற்றுக்கு மக்கள் முற்று புள்ளி வைத்துவிட்டார்கள் இனி என்றாலும் ஏமாற்று வித்தையை நிறுத்துங்கள் பார் சிறி….  
    • ஐயோ, மாத்தையாவை தோற்கடித்து வரலாற்றுதுரோகத்தை செய்து, வாழ்நாள் முழுவதும் பழியை சுமக்காதீர்கள். 
    • ஐயோ.... எனக்கு சிங்களம் தெரியாது, ஆளை விடுங்கோ! அதனாற்தான் சிங்களம் தெரிந்த கள உறவுகளை நெடுநாளாக வேண்டுகிறேன்.    
    • இதென்ன புதுக்கதை? மைத்திரியை அரியணை ஏற்றியது நாமேதான். அப்போ, சந்திரிகா உடன்படிக்கை எழுத சொல்ல, நாம்தானே எழுதவெல்லாம் வேண்டாம், நமக்கு உங்கள்மேல் நம்பிக்கை இருக்கிறது என்று நல்லெண்ண  சமிக்ஞை கொடுத்தோம். பிறகெதற்கு அவகாசம்? கோத்தாவை நாங்கள் தேர்ந்தெடுக்கவுமில்லை, விரட்டவுமில்லை. அவரின் பதவியேற்பில் நாங்கள் பங்காளிகளுமில்லை, தப்பியோட்டத்தில் பங்குதாரருமில்லை. அவர் சரியாக உடுத்தவே அவகாசம் கொடுக்கப்படவில்லை அவருக்கு? ரணில் ஓடிவந்து குந்தியவர், அவருக்கு கிடைத்த காலமே கொஞ்சம். அவர் ஒன்றும் தேர்தெடுக்கப்பட்டவரல்லர். கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்சியேறியவர். அனுராவுக்கு அவகாசம் கொடுக்க நாம் யார்? அவர் அதிகப்பெரும்பான்மையோடு ஜனாதிபதியாகியவர். அவர் தனது காலம் மட்டும் இருக்கலாம், மீண்டும் ஜனாதிபதியாகலாம் மக்கள் விரும்பினால், இல்லை அவரே சட்டத்தை திரித்து மாற்றி ஜனாதிபதியாக தொடரலாம். எமக்கு காத்திருப்பதை விட வேறு வழியில்லை. இருந்தவர்கள் எதையும் தரவில்லை மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதும், இனிமேலும் சாத்தியமில்லை. இவர் ஒருவர் முதன் முதலாக ஆட்சிக்கு வந்துள்ளார், எமக்கு பிரச்சினை உள்ளதென ஏற்றுக்கொள்கிறார், அவராலேதான் முடிவு வரவேண்டும். அதை செய்வாரா என தெரிந்து கொள்வதற்கு ஐந்து வருடங்கள் ஆகவேண்டும், நாம் ஒரு முடிவுக்கு வருவதற்கு. அதை நீங்கள், நாங்கள் அனுராவுக்கு கொடுக்கும் அவகாசம் என்கிறீர்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. அது அவரில் உள்ள நம்பிக்கையல்ல, முன்னொருபோதும் ஆட்சிசெய்யாத ஒருவரிடம் எப்படி நம்பிக்கை வரும்? அவர் மேல் நானோ, என்போன்றோரோ கொண்டிருப்பது எதிர்பார்ப்பு. ஆனாலும் நாட்டில் முக்கிய பிரச்சினை பொருளாதாரப்பிரச்சனை, அதற்கே முன்னுரிமை அளிக்கப்போவதாகவும் அதன் பின் மற்றைய பிரச்சனைகளை ஆராய்ந்து உரிய தீர்வினை வழங்குவேன் என்று சொல்கிறார். வேறு என்ன உங்களால், என்னால் செய்ய முடியும்? சொல்லுங்கள். நீங்கள் என்னை வசை பாடலாம், நான் உங்களுக்கு எரிச்சல் மூட்டலாம் என்பதை தவிர. 
    • உண்மையில் பற்றாக்குறை உள்ளமையாலேயே இந்த பதுக்கல் ஏற்படுகிறது அது பற்றாக்குறையினை இரட்டிப்பாக்குகிறது, இந்த அத்தியாவசிய பொருள்களை வாங்கும் அளவு விலை மாற்றத்தினால் பெருமளவில் மாற்றம் ஏற்படுவதில்லை, இதனை ஒன்றிற்கு குறைவான விலை நெகிழ்ச்சி தன்மையுடைய பொருள்களிற்குள் அடக்குவார்கள். அதாவது எனது இரவு நேர உனவிற்கு அரை இறாத்தல் பாணை உண்கிறேன், பாணின் விலை திடீரென 2 ரூபாக அதிகரித்துவிட்டது என்பதற்காக அதனை உண்ணாமல் விட முடியாது ( பாண் விலை குறைந்த அடிப்படை உணவுப்பொருள்). நுகர்வோராக விலை அதிகரிப்பினால் பாதிப்பு ஏற்படுவது போல பாண் உற்பத்தியாளருக்கு அதன் விலை வீழ்ச்சி நட்டத்தினை ஏற்படுத்தும். இந்த விலை மாற்றம் கேள்வி மற்றும் வழங்கலுக்கிடையேயான ஒரு சமரச நிலை மூலம் உருவாகும், வழங்கல் குறைவாக இருக்கும் போது (அரை இறாத்தல் பாணிற்கு 10 பேர் போட்டியிட்டால்) விலை அதிகரிக்கும். இந்த தட்டுப்பாடுகளே ஏக போக சந்தைகளை உருவாக்குகிறது (Monopoly). இதற்கு குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் அரசே, வேறு யாருமல்ல, காரணம் அவர்கள் அடிப்படை பிரச்சினைகளை கவனித்து சரியான திட்டமிடலை செய்யாமையே காரணம். நிதி முகாமைத்துவம், நாட்டின் நாளாந்த நிர்வாக நடைமுறைகளில் இந்த புதிய அரசு மெத்தனமாக இருக்கிறதா அல்லது அனுபவமின்மையால் இப்படி எல்லாம் நிகழ்கிறதா என தெரியவில்லை.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.