Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண ஆளுநர் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டத்துக்கு முரணாகும் : வாசுதேவ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

வடமாகாண ஆளுநர் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டத்துக்கு முரணாகும்.அவர்களை பயங்கரவாத சட்டத்துக்கு கீழ் கைதுசெய்யவே நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

vasudewa.jpg

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பைத்தொடர்ந்து ஊடகவியலாளர் ஒருவர், வடமாகாண ஆளுனர், யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவை தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளமை தொடர்பில் கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவாகுழு என்பது ஆயுத குழுவாகும்.அரசியல் கட்சி அல்ல. ஆயுதக்குழுவை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு முரணாகும். 

ஏனெனில் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் மூலம் அவர்களுக்கு அங்கிகாரம் கிடைத்ததுபோலாகும். சாதாரணமாக செயற்பட்டுவந்த இவர்கள் இதன் பின்னர் தீவிரமாக செயற்படலாம். ஆளுநரின் நடவடிக்கையானது அவர்களை மேலும் பலமடையசெய்வதாகும். இதனை அவர் செய்யக்கூடாது.

எனவே ஆயுத குழுவான ஆவாகுழுவை பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு கீழ் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். 

அதன் மூலமே பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தலாம். மாறாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுப்பதானது மேலும் அவர்களை பலப்படுத்தவதாக அமையும் என்றார்.

https://www.virakesari.lk/article/58432

2 hours ago, பிழம்பு said:

யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவாகுழு என்பது ஆயுத குழுவாகும்.அரசியல் கட்சி அல்ல. ஆயுதக்குழுவை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு முரணாகும். 

இந்தக்குழுவை தமது தேவைக்கு வளர்த்து, பாதுகாத்து வருபவர்கள் இப்படு கூறுவது இலங்கையில் மட்டும்தான். இதை மறுதலித்து கேள்வி கேட்கும் நிலையில் இந்த நாட்டின் பத்திரிகை தூரம் இல்லாததும் இந்த நாட்டின் எதிர்காலம் அழிவுகள் நிறைந்ததாகவே தொடரும் என்பதை காட்டுகின்றது.   

  • கருத்துக்கள உறவுகள்

ஆவா குழு வெறும் கூலிப்படை மட்டும்தான் அவர்களின் எஜமானர்களை கண்டறிந்து கைதுசெய்யுங்கள் பிரச்சினை தீரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்போன்ற ஒரு கேவலம் இதுவரை எங்கேயும் நடந்ததில்லை. கத்தி வாள் பொல்லுகளுடன் எந்தவித குறிக்கோளும் இல்லாது வன்முறை விதைக்கும் ஒரு காடையர் கூட்டத்தை அழைத்துப் பேசுகிறேன் பேர்வளி என யார் கூறுகிறார் என்றால் நிறைவேற்று அதிகாரம்கொண்ட சிறீலங்காவின் அதிபரால் நேரடியாக நியமிக்கப்பட்ட வடமாகாணம் முழுமையிலுமுள்ள சட்டம் ஒழுங்கினை கவனிக்கக்கூடிய காவல்துறையையும் அதனுடன் இணைந்த நீதித்துறையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய வடமாகாணத்தின் மிகப்பெரிய பொறுப்பிலுள்ள அதிகாரி.

இப்படியான அதிகாரம் எனக்கு இருக்குமாக இருந்தால் எண்ணி நாற்பத்தி எட்டு மணி நேரத்தில் இந்த வன்முறைக்கும்பலை இல்லாதொழிப்பேன் 

முதலில் இவர் செய்யவேண்டியது 

முப்படைகள் போக்குவரத்து இலாகா உதவியுடன் யாழ்குடாநாட்டில் மூலை முடுக்குகள் எல்ல்லாவற்றிலும் அதிகாலையிலிருந்து மாலைவரை வாகனச்சேதனை செய்து வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் இல்லாதவர்கள் வரி மற்றும் காப்புறுதி இல்லாதவர்கள் கெல்மட் இல்லாதவர்கள் தண்ணியடிச்சுப்போட்டு வாகனம் ஓட்டுவோர்  ஆகியோரை இனம்கண்டு அவர்களது வாகனங்களைப் பறிமுதல்செய்து முத்தவெளியில் நிரப்பினால் முதலாவது படிநிலையின் முன்னேற்றம் 

யாழ் சிறையில் நடக்கும் கஞ்சா பவுடர் சாராயம் வினியோகத்தை இல்லாதொழித்தால் அடுத்த முன்னேற்றம் 

காவாலிகளுக்காக நீதிமன்றில் வாதாடும் சட்டவாளர்களை சரியான முறையில் கவனித்தால் இன்னும் முன்னேற்றம் 

இவற்றுக்கும் அடங்காதுவிடின் இராணுவப்புலனாய்வை இறக்கி இவர்களை மண்டையிலபோட்டால் அதைவிட முன்னேற்றம்

இணையத்தளங்களில் அதாவது முகநூலில் கணக்குத்திறந்து அட்டகாசம் செய்யும் காவாலிகள் யார் எனகண்டுபிடித்தால் இன்னுமொரு முன்னேற்றம்

அதற்குசமாந்தரமாக வெளிநாடுகளில் ஆவா சைபர் குறூப் என முகநூல் திறந்து வாளுகள் கத்திகள் ஆகியவைகளை படம்போட்டு பயம்காட்டும் காவாலிக்கூட்டங்களைக் கண்டுபிடித்து ஊருக்குத் திருப்பி அனுப்பினால் அடேங்கப்பா முன்னேற்றம்.

இப்படியான பொறுக்கிகளது உறவினர்க்கு அரசாங்க வேலையோ அன்றேல் எந்தவித சலுகைகளோ இல்லை என அறிவித்தால் மிகவும் முன்னேற்றம்.

எல்லொரையும் அள்ளிக்கொண்டுபோய் கண்காணாத சிங்கள நாடுகளில் சங்கிலியால் கட்டிப்போட்டால் அடடா முன்னேற்றம் 

இவை அனைத்துக்கும் நாற்பத்தியெட்டு மணி நேரம் போதும்.

அனால் ஒரு பிரச்சனை இவைகளைக் கடந்தகாலங்களில் செய்தவர்களை இனிமேல் தேடிப்பிடிக்கவேண்டும்.

இன்னுமொரு விடையம் யாழ் குடாநாடு இப்படிச் சிக்கிச் சீரழிவதையே நான் மிகவும் விரும்புகிறேன். 

ஆவா குழுவே நீ வாழ்க இன்னமும் பலமாக வளர்வாயாக.

சஹாரான் குழுவை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் சிங்கள-பௌத்த முப்படைப் புலனாய்வுப் பயங்கரவாதிகள் ஊடாக ஊக்குவித்து, சம்பளம் கொடுத்து எப்படி ஒரு முஸ்லீம் பயங்கரவாதக் குழுவாக கட்டியெழுப்பினார்களோ, அதே பாணியில் வடக்கில் காடையர்களை குழுக்களாக ஒன்றிணைத்து "ஆவா", "தனு", "ரொக்" போன்ற பெயர்களில் வாள்வெட்டு கும்பல்களை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் சிங்கள-பௌத்த முப்படைப் புலனாய்வுப் பயங்கரவாதிகள் ஊடாக உருவாக்கி இயக்கி வருகிறார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.