Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டைகர் வானொலியின் வெள்ளி மாலை பேட்டி பக்கம்

Featured Replies

தொடரும்..............

சிறிய இடைவேளைக்கு பின் பேட்டி தொடரும்.

பேட்டிக்கு பிரதான அநுசரணையாளர் -

1)யாழ்கவி ஓடியோ அன்ட் வீடியோ

2)சோனா பியூட்டி பாலர்

3)குட்டிதம்பி நகைகடை

4)யாழ்ரவி சைபர் கவே

5) சகி தங்கமாளிகை

6)மாப்பிள்ளை புத்தககடை

7)நிலா துணிகடை

8)ஜனனி சுரித்தாகடை

9)குமாரசுவாமி வயின்சொப்

10)பொன்னி ஸ்பைஸ்

பேட்டிக்கு இணை அணுசரணை

1)யானைவில் குளிர்பானம்

2)சித்து பூகடை

3)இவர்களுடன் ஆத்மீக ஒளிகிடைக்க நாடவேண்டிய ஒரெ இடம் சத்திஞானந்த குருஜி

புத்து

மக்கள் தொடர்பாடல் 1)விசால்

2)லீசன்

ஊடக அநுசரனை

1)நெடுக்ஸ்வானொலி

பேட்டி எடுத்தவருக்கு மேக்கப்

1)சோனாபியூட்டிபாலர்

பேட்டிக்கு பிரதான ஊடக அனுசரனை வழங்குவோர்

டைகர் வானொலியின் உத்தியோக பூர்வ இணையத்தளம்

http://www.yarltigerfm.tk

இடைவேளையின் பின் பேட்டி மீண்டும் தொடர்கிறது

  • Replies 160
  • Views 16.6k
  • Created
  • Last Reply

11)காதலை பற்றி எல்லாரும் என்னவோ கதைக்கீனம்(ஜம்மு பேபியை தவிர)காதலை பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன?யாரையாவது காதலித்த அநுபவம் இருந்தா எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கபட்ட திருமணமா?இது வரை உங்களுக்கு எத்தனை பேர் காதல் கடிதம் தந்தவை என்பதையும் எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?எத்தனை பேரிடம் காதலை வெளிபடுத்த போய் ஏச்சு வாங்கின அநுபவம் இருக்கா(நான் யாழை கேட்கவில்லை) தனிபட்ட வாழ்கையில்?(பச்சையா கேட்டா எத்தனை பேர் செருப்பு தூக்கி காட்டினவை) :P

12)தற்போது நீங்கள் புலத்தில் இருக்கிறீங்க உங்களை கேட்டா இருக்கும் நாடு நல்லதா அல்லது சொந்த மண் நல்லதா என்று கேட்டா உங்கள் பதில் என்ன?வெளிநாட்டுக்கு வந்த புதிதில் எவ்வகையான மனநிலையில் நீங்கள் இருந்தனீங்க?பின் எவ்வாறு அந்த நாட்டு சூழலுக்கு இசைவாக்கபட்டனீங்க?இங்கே நீங்கள் செய்யும் குழப்படிகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கோ?

13)நீங்கள் ஈழத்தில் பிறந்தனீங்கள் என்று நினைக்கிறேன் அதை பற்றிய அநுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?உங்கள் பள்ளி நாட்கள்?உங்கள் பள்ளி காதல்?மற்றும் அப்பா,அம்மாட்ட வாங்கிய திட்டு,அடி என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?அத்துடன் திருட்டு தம் அடித்து பிடிபட்ட சந்தர்ப்பம் ஏதாவது இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கோ?

14)அடுத்து ஒரு கேள்வி அதாவது யாழின் மட்டுநுறுத்தினராக நீங்க தெரிவு செய்ய படுகிறீர்கள் என்று வைத்து கொண்டா உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?எதை நீங்க வெட்டுவீங்கள் எதை நீங்க வெட்டமாட்டீங்க?யாருக்கு எச்சரிக்கை வழங்குவீங்கள்?

15)அடுத்து ஜம்முவின் பாணியில் ஒரு லொள்ளு கேள்வி :P அதாவது எழுத்தாளனுக்கு எழுத்து பிழை முக்கியமா கரு பொருள் முக்கியமா? :P அறிவிப்பாளனுக்கு குரல் முக்கியமா அல்லது கருத்து முக்கியமா?ஒரு சிறந்த படைபாளி தேசியம் சம்பந்தமான படைப்பை படைப்பது நல்லதா அல்லது கலை உணர்வுகளும் பொழுது போக்கு அம்சங்களும் முக்கியமானது?

இவர்கள் பற்றி

1)வானவில்-

2)இன்னிசை-

3)புத்தன் -

4)கானபிரபா-

5)கலைஞன் -

6)வெண்ணிலா -

7)டங்கு -

8)அனிதா -

9)பிரியசகி-

10)தூயா -

11)ஜன்னி-

12)சின்னப்பு-

13)இனியவள் -

14)கறுப்பி -

15)யாழ்பிரியா-

16)ரசிகை-

17)சிநேகிதி -

18)ஆதிவாசி-

19)குமாரசுவாமி-

20)ஜம்முபேபி-

ஒரு வரி பதில்கள்

1)யாழில் சேர்ந்திருப்பது?

2)யாழின் கிளசுகள்?

3)யாழின் இளசுகள்?

4)யாழின் பலம்?

5)யாழின்பலவீனம்?

6)யாழில் கடலை?

7)யாழில் தாயகபறவை?

8)யாழில் மறக்கமுடியாதவர்?

9)சிட்னி வானொலி :P ?

10)யாழில் சுண்டல்?

11)ஆசைக்கு?

12)அறிவுக்கு?

சுண்டல் இன்னும் கொஞ்ச நேரத்தில் கலையகத்துக்கு வந்து பேட்டி அளிப்பார் காணதவறாதீர்கள்

இங்கே இடம்பெறும் பேட்டிகளை டைகர்வானொலி மற்றும் டைகர்குடும்பத்தின் அனுமதி இன்றி பிரயோகிப்பது சட்டத்துக்கு எதிரானது,அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும்.

டைகர் குடும்பத்தின் டைகர் வானொலியின் வெளியீடே இது.

:P :D :P

  • கருத்துக்கள உறவுகள்

]1)யாழில் நீங்கள் எவ்வாறு இணைந்தீர்கள் என்பதையும்?யார் உங்களை இதில் இணைக்க தூண்டியவர் என்பதையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?சுண்டல் என்ற திருநாமத்தை உங்களின் திருநாமமாக இட ஏதாவது காரணங்கள் இருந்தால் எங்களுடன் பகிர்து கொள்ள முடியுமா?

உண்மையில் யாழ் களத்தில் என்னை இனைத்து கொண்டதில் கானா பிரபா அண்ணா அவர்கள் தான் காரணம் அடிக்கடி அவர் தன்னுடைய நிகழ்சிகளிலே யாழை பற்றி கூறுவார் அதில் கேட்டு தான் இங்கு வந்து இங்கு நடைபெறுகின்ற கருத்து விவாதங்களை கண்டு என்னையும் இனைத்து கொண்டேன் குறிப்பாக சின்னப்பு முகத்தார் டன் குறுவிகள் போன்றோரின் கருத்துக்களால் என்று கூட கூறலாம்..

இந்த பெயரை வைக்க தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை நாங்கள் வந்து என்ன ஒழுங்கா கருத்தா எழுத போறம் அரட்டை தானே அடிக்க போறோம் என்ற தீர்க்க தரிசன பார்வையால் வைக்கப்பட்ட பெயர்தான் இது...

2) யாழில் நீங்கள் ஒரு பழைய உறுப்பினர் என்ற வகையில் புதிய உறுப்பினர்களின் வருகையை நீங்கள் எவ்வாறு ஏற்று கொள்கீறீர்கள்?யாழில் தற்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?இது ஆரோக்கிய வளர்ச்சியா இல்லையா பற்றி சில வரிகள்?

யாழில் பழைய உறுப்பினர்கள் வெயியேறுகின்ற போதும் சரி யாழ் சற்று தொய்வாக போய்கொண்டு இருக்கின்ற காலகட்டங்களிலும் சரி யாழை ஒரு விறு விறுப்பான களமாக கொண்டு செல்பவர்கள் புதிய உறுப்பினர்களே அதுமட்டும் அல்லாமல் பல்வேறு திறமை உள்ள உறுப்பினர்களும் புதிதாக இனைந்து கொள்கின்றார்கள் ஆகவே இது வரவேற்கதக்கதே இன்னும் யாழ் களத்தின் பார்வையாளர்களாக இருப்பவர்கள் தங்களை இணைந்து கொள்ள வேண்டும்..புதிய உறுப்பினர்கள் அனைவரையும் நான் எப்போதும் யாழ் குடும்ப உறுப்பினாகளாகதான் பாத்தது உண்டு.. யாழின் தற்பொதைய வளச்சியும் மாற்றங்களும் யாழ் இனையதளம் வெற்றி படிகளில் ஏறிக்கொண்டு இரு;பதையே காட்டுகின்றது..ஆகவே இவைகள் ஆரோக்கியமான வளர்சியே...

3)அடுத்த முக்கிய விடயம் யாழில் அரட்டை பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை சிலர் சுமத்தி அரட்டையை தடை செய்ய வேண்டும் என்று அரட்டை அடிக்கிறார்கள் இவர்களுக்கு உங்கள் பதில்?அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அவதாரில் சினிமா கலைஞர்களின் படம் போடகூடாது என்று நீக்கியது சிறந்தக்டு என்று நினைக்கிறீங்களா இதை பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறோம்?அத்துடன் டைகர்பமிலியை பற்றி பல விமர்சனங்கள் இந்த பமிலியை பற்றிய உங்கள் கருத்து என்ன?

மீண்டும் மீண்டும் நான் சொல்லும் கருத்து அரட்டை இல்லாத யாழ் களத்தை நினைத்து கூட பார்க் முடியாது வாய்விட்டு சிரிpப்பதற்கும் கருத்துக்களை எடுத்து செல்லவும் அரட்டை என்கின்றது உதவுகிறது..ஆகவே அரட்டையை தடைசெய்ய வேண்டும் என்று கூறுகின்றவர்கள் மனிதர்களாக கருதமுடியாது..அதற்காக அரட்டைகளால் அந்த பகுதியை நிறப்ப கூடாது என்பதும் என் கருத்து..நடிகர்களுடைய படங்களை போட்டு வருவதென்;பது ஒவ்வொருவருடைய விருப்பம் இதை எதற்காக தடை செய்தாகள் என்ற தெரியவில்லை வழுவான காரணங்கள் இருப்பின் அதை நான் ஆதரிக்கின்றேன்..றோயல் பமிலி விட்டுச்சென்ற சமுதாய பணிகளை மனித நேயபணிகளை தொடர்நது முன்னெடுப்து டைகர் பமிலி என்கின்றபோது மகிழ்சியாக இருக்னிறது தொடரட்டும் உங்கள் பணி உங்கள் சேவை..

4)யாழில் நீங்கள் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?எனியும் யாரை சந்திக்க ஆவல்படுகிறீர்கள்?யாழில் நெருங்கிய உறவு என்று சொல்ல கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்?எத்தனை பேர் தற்போது கோபமகா இருக்கிறார்கள் என்று எங்களுக்கு கூறமுடியுமா?

ஜம்மு பேபி,கந்தப்பு, அரவிந்தன், புத்தன் ,கானாபிரபா, ஈழவன் போன்ற உறவுகளை சந்தித்த இருக்கினறேன் யாழ் களத்தின் அனைத்து உறுப்பினர்களை சந்திப்பதற்கு ஆவல்..கோபம் என்று சொன்னால் யாரும் இல்லை என்ற நம்புகின்றேன்..

5)அண்மையில் ஒரு கள உறவால் யாழில் பெண்கள் புறகணிக்கபடுகிறார்கள் என்று ஒரு தலைப்பு ஆரம்பிக்கபட்டு அது பலதரபட்ட விமர்சனங்களுக்கு உள்ளானது(பெண்களுக்காக குரல் கொடுப்பவர் என்ற வகையில்) இதற்கு உங்களி பதில் என்ன?இதை போல் இன்னொருவர் தலைப்பு அதாவது ஆண்கள் புறகணிக்கபடுகிறார்கள் என்று தொடங்கி சிறிது நேரத்தில் அத் தலைப்பு அகற்றபட்டது அதை பற்றிய உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக இருகிறோம்?

சுவராசியமான விவாதங்களை கொண்டு செல்வதற்க இப்படியான தலைப்புகள் உதவுமே தவிர யாழில் யாரும் யாரையும் புறக்கனிக்கவில்லை என்பது என்கருத்து..

6)யாழில் தற்சமயம் ஒரு குறை அதாவது பலர் சமய பிரச்சினைகளுக்குஅ தங்கள் சமயத்தை வளர்பதிலும் அக்கறை காட்டுகிறார்கள் இவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?அடுத்ததாக பலமுகங்களிள் தற்போது ஒருவர் வந்து கருத்து வைப்பது ஒரு நாகரீகமாக மாறி வருகிறது யாழில் அதை பற்றிய உங்கள் கருத்து?

மக்கஐடய நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் கருத்தகளை வைக்காமல் மதங்களில் இரக்கும் குறைகளை சுட்டி காட்டுவது ஆரோக்கிமானதே..இன்னும் ஒருவர் மீது வேற்றுமத்தை தினித்து வளர்க்க நினைபதும் கண்டிக்க தக்கதே... ஒரு பெயரில் கூற முடியாத கருத்துகளை மற்ற பெயரை பாவித்த கூறுகின்றார்கள் சுண்டல்க்கு அன்றில் இருற்து இன்றுவரை ஒரு முகமே...

7)சில வாரங்களுக்கு முன் மட்டுநுறுத்தினர்கள் சக உறவுகளுடன் கருத்தாட வேண்டும் என்று ஒரு தலைப்பு தொடங்கபட்டு பலதரபட்ட பிரச்சினைகளுக்கு அத் தலைப்பு இட்டவர்கள் முகம் கொடுத்து இறுதியில் ஒரு சுமூகமாக அந்த பிரச்சினை தீர்விற்கு வந்தது யாவரும் அறிந்ததே இதை பற்றிய உங்கள் பார்வையில்?

மட்டுறுத்தினர்கள் கள உறவுகளுடன் சுழூகமான உறவை வைப்பதற்கு இப்படியான செயல்பாடுகள் உதவும்..

8)இப்பொழுது யாழில் வெற்றிகரமாக பல பக்கங்களை தாண்டி வெற்றி நடை போடும் சிவாஜி புறகணிப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?புறகணிப்பவர்களுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?

புறக்கனிச்சவர்கள் எல்லாம் பிள்ளையழுக்கும் மனைவி மாருக்கும் டிக்கெட் எடுத்து கொடுத்ததாகவும் அவர்கள் டிவிடில போட்டு பாத்தாகவும் கேள்வி..இனியாவது பறகணிப்பவர்கள் இபடி பேசி ழூக்குடைபட கூடாது புலம் பெயர் நாடுகளில் சிவாஜி போற போக்கபாத்து புரின்சுகனும்..

9)அடுத்து பலதரபட்ட விமர்சனதிற்கு உள்ளான நட்பாஇகாதலா என்ற தலைப்பு பற்றிய உங்கள் சிந்தனையோட்டம் என்ன?உங்கள் பார்வையில் நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பது நட்புக்கா அல்லது காதலிற்கா?உங்கள் பார்வையை அறிய ஆசை?உங்கள் பார்வையில் நண்பியின் தோளிள் சாய்வது பற்றிய உங்கள் கருத்து?

காதல் வருவதற்கு முன்பு நட்பு வந்தது ஆகவே கண்டிப்பா நட்பு தான் காதல்....நண்பியின் தோள்ள சாய்வதில தப்பில்ல செருப்ப தூக்காட்டி..

10)நீங்கள் போடும் செய்திகள் அநேகமானவை வித்தியாசமாக இருகிறது அதாவது 70 பெரிசு பண்ணும் லொள்ளுஇஇதாண்டா தமிழ் நாட்டு பொலிஸ் என வித்தியாசமான செய்திகளை இடுவீங்கள் ஆனால்........தமிழ் தேசிய செய்திகளை விட இந்த செய்திகள் பல பக்கம் தாண்டி வெற்றி நடை போடும் இதன் இரகசியம் தான் என்ன என்பதை எங்களுக்கு சொல்ல முடியுமா?

முக்கியமான செய்திகள் பலவற்றை இனைபதற்க இங'கு பலர் இருக்கின்றார்கள் அவகைள் பெரும்பாலும் சீரியசான செய்திகளாக இருப்துண்டு

அவற்றை தாண்டி சழூகத்தில் நடை பெறுகின்ன விந்தையான நகைச்சவையான செற்திகளை கொடுத்து கல கலப்பாகவும் யாழ் உறுப்பின்களை வைத்த இருபத்ற்காக அப்படியான செய்திளை போடுவதுண்டு..

11)காதலை பற்றி எல்லாரும் என்னவோ கதைக்கீனம்(ஜம்மு பேபியை தவிர)காதலை பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன?யாரையாவது காதலித்த அநுபவம் இருந்தா எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கபட்ட திருமணமா?இது வரை உங்களுக்கு எத்தனை பேர் காதல் கடிதம் தந்தவை என்பதையும் எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?எத்தனை பேரிடம் காதலை வெளிபடுத்த போய் ஏச்சு வாங்கின அநுபவம் இருக்கா(நான் யாழை கேட்கவில்லை) தனிபட்ட வாழ்கையில்?(பச்சையா கேட்டா எத்தனை பேர் செருப்பு தூக்கி காட்டினவை)

பேச்ச எல்லாம் நிறைய வாங்கி இருக்கின்றேன் இதை எல்லாம் உடணுக்குடன் மற்திடனும் காதல் திருமணமா இல்லை நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்று காலம் தான் பதில் சொல்லவே;டும் அதை காலத்திடமும் இறைவனிடமும் விட்டு விடுவோம்..

12)தற்போது நீங்கள் புலத்தில் இருக்கிறீங்க உங்களை கேட்டா இருக்கும் நாடு நல்லதா அல்லது சொந்த மண் நல்லதா என்று கேட்டா உங்கள் பதில் என்ன?வெளிநாட்டுக்கு வந்த புதிதில் எவ்வகையான மனநிலையில் நீங்கள் இருந்தனீங்க?பின் எவ்வாறு அந்த நாட்டு சூழலுக்கு இசைவாக்கபட்டனீங்க?இங்கே நீங்கள் செய்யும் குழப்படிகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கோ?

சொந்த நாடு என்றாலே சொர்க்கபுரிதான் அதை சொல்லி சொல்லி பாடுவது நம்ம பணிதான் என்ற அந்த பாடலை அதிகமாக முனுமுனுப்பவன் நான்....அதிகமாக தமிழ் நண்பர்கள் ருப்பதால் சூழலை ஒரளவே மாற்றிக்கொள்ள அவசியம் வந்தது....குழப்படியா அப்படி ஒன்றும் பெரிசா இல்ல ஜம்முவோட சேர்மு சைட் அடிக்கிறது தான்...

13)நீங்கள் ஈழத்தில் பிறந்தனீங்கள் என்று நினைக்கிறேன் அதை பற்றிய அநுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?உங்கள் பள்ளி நாட்கள்?உங்கள் பள்ளி காதல்?மற்றும் அப்பாஇஅம்மாட்ட வாங்கிய திட்டுஇஅடி என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?அத்துடன் திருட்டு தம் அடித்து பிடிபட்ட சந்தர்ப்பம் ஏதாவது இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கோ?

எல்லாருக்கும் இருந்ததை போல பள்ளிநாட்கள் பள்ளி காதல் எல்லாம் எனக்கம் இரு;ததுண்டுஇஇஅது ஒரு அழகிய கணா காலம்...அடி எண்டு வாங்கிணது இல்லை திட்டு நிறையவே எதை எண்டு சொல்ல...தம் அடிச்சு பிடிபட்டதே இல்லை பிடிபடுற மாதிரி அடிச்சாதானே..

14)அடுத்து ஒரு கேள்வி அதாவது யாழின் மட்டுநுறுத்தினராக நீங்க தெரிவு செய்ய படுகிறீர்கள் என்று வைத்து கொண்டா உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?எதை நீங்க வெட்டுவீங்கள் எதை நீங்க வெட்டமாட்டீங்க?யாருக்கு எச்சரிக்கை வழங்குவீங்கள்?

அந்த ஆசையே இல்லையே...

15)அடுத்து ஜம்முவின் பாணியில் ஒரு லொள்ளு கேள்வி அதாவது எழுத்தாளனுக்கு எழுத்து பிழை முக்கியமா கரு பொருள் முக்கியமா?அறிவிப்பாளனுக்கு குரல் முக்கியமா அல்லது கருத்து முக்கியமா?ஒரு சிறந்த படைபாளி தேசியம் சம்பந்தமான படைப்பை படைப்பது நல்லதா அல்லது கலை உணர்வுகளும் பொழுது போக்கு அம்சங்களும் முக்கியமானது?

எல்லாமே முக்கியம் தான் பட் அது இருந்தா இது இல்ல இத இருந்தா அதுத இல்ல இது இருந்தா அது இல்லை இரண்டும் இருந்தா அவனால ஒன்றும் ஆக முடியாதுஎங்கள் போராட்ட வாழ்கையை மையமாக கொண்டு எழுதும் படைப்பு தான் இன்றைய காலகட்டதிற்கு சிறந்தது.......

இவர்கள் பற்றி

1)வானவில்-7 நிறம் டைகர் பமிலி

2)இன்னிசை-துள்ளாத மனமும் துள்ளும்

3)புத்தன் - சிட்னி கோசிப்

4)கானபிரபா-அறிவுக்களஞ்சியம்...

5)கலைஞன் -செல்வன்

6)வெண்ணிலா -சுட்டி

7)டங்கு -புலநாய்....

8)அனிதா -என் கேள்விக்குஎன்ன பதில்

9)பிரியசகி-பிரியமான சகி..

10)தூயா -சமையல்...

11)ஜன்னி-தோழி

12)சின்னப்பு-மப்பு

13)இனியவள் -இனிமையானவள்..

14)கறுப்பி -செய்தி பெட்டகம்..

15)யாழ்பிரியா-மட்டுஸ்.......

16)ரசிகை-கனடா.....

17)சிநேகிதி -சிறுகதைகள்....

18)ஆதிவாசி-வால்...

19)குமாரசுவாமி-கள்ளு போத்தல்...

20)ஜம்முபேபி- லொலிபொப்...

ஒரு வரி பதில்கள்

1)யாழில் சேர்ந்திருப்பது?மகிழ்சி

2)யாழின் கிளசுகள்?சூப்பர் ஜோக்கர்கள்.

3)யாழின் இளசுகள்?சூப்பர் ஹீரோக்கள்

4)யாழின் பலம்?அரட்டை

5)யாழின்பலவீனம்?வெட்டல்கள்

6)யாழில் கடலை?தேவை

7)யாழில் தாயகபறவை?பெண்களின் தன்மானம்

8)யாழில் மறக்கமுடியாதவர்?எல்லாரும்

9)சிட்னி வானொலி: அறிவிப்பாளர்கள்

10)யாழில் சுண்டல்? என்னத்த சொல்ல

11)ஆசைக்கு?ஜம்மு

12)அறிவுக்கு?சுண்டல்[/color

எமக்காக தனது பொன்னான நேரத்தை ஒதுக்கி மிகவும் சுவாரசியமான பேட்டியை தந்த சுண்டலுக்கு டைகர்பமிலி மற்றும் டைகர் வானொலி சார்பாக நன்றிகளை தெரிவித்து கொண்டு...........

இதுவரை நடந்த பேட்டியை கண்டு இரசித்திருபிபீர்கள் என்று நினைகிறேன் மீண்டும் அடுத்த வெள்ளி பல புதுமைகளுடன் பல வித்தியாசமான முறையில் பேட்டிகளை கொண்டு வரும் நோக்கில் இதற்கு முழு ஆதரவையும் தந்த வலைஞன் அண்ணாவிற்கும் ;) நன்றிகளை தெரிவித்து கொண்டு,டைகர்பமிலி சார்பாக உங்களிடம் இருந்து விடைபெறுபவர்கள் வானவில்லுடன் என்றும் உங்கள் ஜம்மு பேபி வணக்கம் நேயர்களே........

:D

தயவு செய்து இப்படியான கோமாளித்தனமான கருத்துக்களை கவனத்தில் எடுக்காது புறக்கணிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். அவை முடிந்தளவு வேகமாக நிர்வாகத்துக்குள் நகர்த்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே உங்கள் எழுத்துக்களையும், நேரத்தையும் வீணாக்கி இப்படியான கருத்துக்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம். அனைவரையும் ஒத்துழைக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

வலைஞன் அண்ணாவின் கருத்து

:)

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=311870

Edited by Jamuna

நேயர்கள் எல்லாருக்கும் வணக்கம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட மணிவாசகன் அண்ணா மற்றும் ரசிகை அக்காவிற்கு வாழ்த்துகளை டைகர் வானொலி மற்றும் டைகர் பமிலி தெரிவித்து கொண்டு.................பேட்டிக்கு செல்வோமா..............

இன்று பேட்டி காணபோகும் நபர் யார் தெரியுமா........அவர் தான் பெண்களின் நாயகன் யாழிற்கு ஒரு மைந்தன் வீர மைந்தன் யார் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா அவர் தான் வல்வைமைந்தன் அவருடன் தான் இன்று பேட்டிக்கு............பேட்டி செல்வோமா.........நான் ரேடி.....நீங்கள் ரெடியா!!!!!!!!!

av3611ag8.gif

:)

Edited by Jamuna

வணக்கம் வல்வைமைந்தன் அண்ணா பலசிரமங்கள்,வேலைபளுகளுக்கு மத்தியில் எங்கள் அழைப்பை ஏற்று வந்ததிற்கு டைகர்வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாக நன்றிகளை தெறிவித்து கொண்டு பேட்டிக்கு போவோமா ...................

*உங்களை யாழில் எல்லாருக்கும் தெரிந்திருக்க கூடும் இருந்தும் தெரியாதவர்களுக்காக ஒரு எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா...............

1)யாழில் நீங்கள் எவ்வாறு இணைந்தீர்கள் என்பதையும் வல்வை மைந்தன் என்பது உங்களின் சொந்த பெயரா அல்லது அதை நீங்கள் விரும்பி வைக்கா ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?உங்களை யாழில் இணைய தூண்டிய காரணம் ஏதாவது இருந்தா எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

2)யாழில் நீங்கள் இணைந்த போதிலும் பார்க்க தற்போதைய பல மாற்றங்கள்,புது நபர்கள் என பலதரபட்ட மாற்றங்கள் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?யாழில் எற்பட்ட மாற்றம் ஆரோக்கியம் வளர்ச்சியா இல்லையா என்பதை பற்றிய உங்கள் கருத்து என்ன?யாழை இன்னும் மெருகூற்ற என்ன செய்யலாம்?

3)அடுத்த முக்கிய விடயம் யாழில் அரடை பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை சிலர் சுமத்தி அரட்டையை தடை செய்ய வேண்டும் என்று அரட்டை அடிக்கிறார்கள் இவர்களுக்கு உங்கள் பதில்?அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அத்துடன் டைகர்பமிலியை பற்றி பல விமர்சனங்கள் இந்த பமிலியை பற்றிய உங்கள் கருத்து என்ன?யாழில் புதிதாக நடைமுறைக்கு வந்திருக்கும் எச்சரிக்கை வழங்கள் என்பது சிறந்ததா அல்லது தேவை அற்றதா என்பது பற்றிய உங்கள் கருத்து?

4)யாழில் நீங்கள் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?எனியும் யாரை சந்திக்க ஆவல்படுகிறீர்கள்?யாழில் நெருங்கிய உறவு என்று சொல்ல கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்?உங்களுடன் முதன்முதலிம் உரையாடிவர் யார் என்று உங்களுக்கு ஞாபகம் இருந்தா அவரை பற்றிய சில வரிகள்?யாழில் யாருடனும் மனகசப்பு ஏற்பட்டதா அவ்வாறாயின் அதை எவ்வாறு ஏற்று கொண்டீர்கள்?

5)யாழில் நீங்கள் பல கவிதைகளை எழுதி வருகிறீர்கள் அனைத்தும் இரசிக்க கூடியதாக இருகிறது ஆனால் இறுதியாக எழுதிய "வாழவிடு" என்ற கவிதையில் ஏதோ ஏக்கம் தெரிந்தது அந்த கவிதையை எழுதும் போது எத்தகைய மனநிலையில் எழுதுனீங்கள்?அவ்வாறான ஏக்கம் உங்கள் மனநிலையில் ஏற்பட காரணம் என்னவென்று எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?தற்போது நீங்கள் எவ்வாறு இருகிறீர்கள் என்னும் அந்த மனகவலை இருகிறதா?

6)யாழில் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்று அண்மையில் நண்பர் ஒருவர் தலைபிலிட்டு ஒரு பதிவை மேற்கொண்டார் அது பல சர்சைகளிள் சிக்கியது.........உங்கள் பார்வையில் யாழில் பெண்களிற்கு சம உரிமை உள்ளதா இல்லையா......ஆமாம் என்றா அதற்குரிய விளக்கமும் இல்லை என்றா அதற்குரிய விளக்கமும் தரமுடியுமா?யாழில் பெண்கள் எவ்வாறு உங்களுடன் பழகிறார்கள் ஆண்கள் உங்களுடன் எவ்வாறு பழகுகிறார்கள் என்பதை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

7)அண்மையில் யாழ்கள உறவுகள் இருவர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள் என்பது சகலரதும் அறிந்தது அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?இணைய மூலம் காதல் பரிமாற்றபடுவது பற்றிய உங்கள் கருத்து என்ன?

8)காதலை பற்றி எல்லாரும் என்னவோ கதைக்கீனம்(ஜம்மு பேபியை தவிர)காதலை பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன?யாரையாவது காதலித்த அநுபவம் இருந்தா எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?யார் அந்த புண்ணியவாள் என்று எங்களுக்கு சொல்லலாமே?உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கபட்ட திருமணமா?இது வரை உங்களுக்கு எத்தனை பேர் காதல் கடிதம் தந்தவை என்பதையும் எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?உங்கள் முதல் காதலி யார்?

9)யாழ் உலக செய்திகளை பார்த்தால் கணவண் குடி போதையில் மனைவியை கொள்ளுதல்......அல்லது மனைவி கணவனை கொள்ளுதல் போன்று வரும் அதில் சில பெண்கள் குறிபிட்டிருந்தார்கள் மனைவி கணவனை அடித்தால் பல பக்கங்கள் தாண்டி போகும்..........ஆனால் கணவன் துன்புறுத்தினா அந்த செய்தி பல பக்கங்கள் போவதில்லை என்று.........இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?இவ்வாறான செய்திகள் உலக செய்தி பகுதியில் முக்கியம் என நினைகிறீர்களா?

10)நீங்கள் தமீழிழத்தில் பிறந்ததனீங்க என்று நினைக்கிறேன் தமீழிழத்தில் உங்களைம் இகவும் கவர்ந்தது என்ன?கொடிய யுத்தம் காரணமாக உங்களை மிகவும் பாதித்த சந்தர்ப்பம் என்று சொல்லுமளவிற்கு ஏதாவது விசேடமாக இருக்குதா?தற்போது நீங்கள் தமீழத்தில் தான் இருகிறீங்களா அல்லது வேறோரு நாட்டில் இருகின்றீர்களா?எவ்வாறு புலம் பெயர் நாடு உள்ளது உங்கள் மனநிலையில்?மறுபடி சமாதானம் ஏற்படும் பட்சத்தில் தாயகதிற்கு செல்லுவீர்களா அல்லது புலத்தில் இருக்க ஆசைபடுவீர்களா?

Edited by Jamuna

தொடரும்..............

சிறிய இடைவேளைக்கு பின் பேட்டி தொடரும்.

பேட்டிக்கு பிரதான அநுசரணையாளர் -

1)யாழ்கவி ஓடியோ அன்ட் வீடியோ

2)சோனா பியூட்டி பாலர்

3)குட்டிதம்பி நகைகடை

4)யாழ்ரவி சைபர் கவே

5) சகி தங்கமாளிகை

6)மாப்பிள்ளை புத்தககடை

7)நிலா துணிகடை

8)ஜனனி சுரித்தாகடை

9)குமாரசுவாமி வயின்சொப்

10)பொன்னி ஸ்பைஸ்

பேட்டிக்கு இணை அணுசரணை

1)யானைவில் குளிர்பானம்

2)சித்து பூகடை

3)இவர்களுடன் ஆத்மீக ஒளிகிடைக்க நாடவேண்டிய ஒரெ இடம் சத்திஞானந்த குருஜி

புத்து

மக்கள் தொடர்பாடல் 1)விசால்

2)லீசன்

ஊடக அநுசரனை

1)நெடுக்ஸ்வானொலி

பேட்டி எடுத்தவருக்கு மேக்கப்

1)சோனாபியூட்டிபாலர்

பேட்டிக்கு பிரதான ஊடக அனுசரனை வழங்குவோர்

டைகர் வானொலியின் உத்தியோக பூர்வ இணையத்தளம்

http://www.yarltigerfm.tk

இடைவேளையின் பின் பேட்டி மீண்டும் தொடர்கிறது

Edited by Jamuna

11)வெளிநாட்டுக்கு வந்த புதிதில் எவ்வகையான மனநிலையில் நீங்கள் இருந்தனீங்க?பின் எவ்வாறு அந்த நாட்டு சூழலுக்கு இசைவாக்கபட்டனீங்க?புலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து செய்த குழப்படிகள் மற்றும் வேடிக்கைகளை என்பவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?

12)உங்கள் பள்ளி நாட்கள்?உங்கள் பள்ளி காதல்?மற்றும் அப்பா,அம்மாட்ட வாங்கிய திட்டு,அடி என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?அத்துடன் திருட்டு தம் அடித்து பிடிபட்ட சந்தர்ப்பம் ஏதாவது இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கோ?பெண்கள் பற்றிய உங்கள் இளம் பருவத்தில்?

13)நேற்று குடும்பிமலையை சிறிலங்கா இராணுவம் ஆகிரமித்தது அதே நேரம் எம் வான்படைசிறிலங்கா கீபீர் விமானத்தை சுட்டு விழுத்தியது என்பது நீங்கள் அறிந்தது இந்த இரு சம்பவங்கள் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் மனநிலை இரண்டின் போது என்பதை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

14)அடுத்து ஒரு கேள்வி அதாவது யாழின் புலபகுதியில் நண்பர் ஒருவர் இணைத்த முஸ்லீம் சிறுமியை காப்பாற்ற சொல்லி அது பல தரபட்ட விமர்சனதிற்கு உள்ளானது அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அதே பகுதியில் சிட்னியில் தமிழர் ஒருவர் கைது செய்யபட்டது என்று வந்தது ஆனால் அதை பற்றி பலரும் கண்டு கொள்ளவில்லை ஒரு முஸ்லீம் சிறுமிக்கு காட்டும் ஆதரவு நமக்கா இன்று சிறை சென்று இருக்கும் நம் உறவிற்கு இல்லையா இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

15)அடுத்து ஜம்முவின் பாணியில் ஒரு லொள்ளு கேள்வி யாழில் உங்களை ஒருவா பின் தொடர்கிறா என்பது யாழில் புதிய கோசிப் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?இந்த பேட்டி வாயிலா நீங்கள் குறிபிட்ட உறவுக்கு சொல்ல விரும்புவது என்ன?

இவர்கள் பற்றி

1)வானவில்-

2)இன்னிசை-

3)இனியவள்-

4)டங்கு-

5)கலைஞன் -

6)வெண்ணிலா -

7)ஈரநிலா-

8)அனிதா -

9)பிரியசகி-

10)தூயா -

11)ஜன்னி-

12)விதுஷா-

13)கஜந்தி-

14)கறுப்பி -

15)நெடுக்ஸ்-

16)ரசிகை-

17)சிநேகிதி -

18)யாழ்வினோ-

19)தமிழ்தங்கை-

20)ஜம்முபேபி-

21)இவள்-

ஒரு வரி பதில்கள்

1)யாழில் சேர்ந்திருப்பது?

2)யாழின் பெண்கள்?

3)யாழின் இளசுகள்?

4)யாழின் பலம்?

5)யாழின்பலவீனம்?

6)யாழின் வெற்றி?

7)யாழில் நாயகி?

8)யாழில் மறக்கமுடியாதவர்?

9)யாழில் காதல் ?

10)யாழில் திருமணம்?

11)ஆசைக்கு?

12)அறிவுக்கு?

av3611ag8.gif

வல்வை மைந்தன் அண்ணா இன்னும் கொஞ்ச நேரத்தில் கலையகத்துக்கு வந்து பேட்டி அளிப்பார் காணதவறாதீர்கள்

இங்கே இடம்பெறும் பேட்டிகளை டைகர்வானொலி மற்றும் டைகர்குடும்பத்தின் அனுமதி இன்றி பிரயோகிப்பது சட்டத்துக்கு எதிரானது,அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும்.

டைகர் குடும்பத்தின் டைகர் வானொலியின் வெளியீடே இது.

:P :lol: :P

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வல்வைமைந்தன் அண்ணா பலசிரமங்கள்இவேலைபளுகளுக்கு மத்தியில் எங்கள் அழைப்பை ஏற்று வந்ததிற்கு டைகர்வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாக நன்றிகளை தெறிவித்து கொண்டு பேட்டிக்கு போவோமா ...................

------

ஜமுனா உட்பட டைகர் வானொலி கலைஞர்கள், நேயர்கள் உட்பட அனைத்து தமிழ் நெஞ்சங்களிற்கும் எனது முதல்கண் வணக்கம்.

அடுத்து இந்த வானொலியில் எனக்கு மதிப்பளித்து சந்தர்ப்பம் தந்தமைக்காக இதைச்சார்ந்த அனைவருக்கும் எனது நன்றியையும் தெரிவித்து உங்கள் கேள்விக்கான பதிலுக்கு நகர விரும்புகின்றேன்.

____

1)யாழில் நீங்கள் எவ்வாறு இணைந்தீர்கள் என்பதையும் வல்வை மைந்தன் என்பது உங்களின் சொந்த பெயரா அல்லது அதை நீங்கள் விரும்பி வைக்கா ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?உங்களை யாழில் இணைய தூண்டிய காரணம் ஏதாவது இருந்தா எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

நான் வந்துபாருங்க யாழின் ஒரு நெடுநாள் வாசகன், ஒரு நாள் தமிழ்த்தங்கை என்ற ஒரு தங்கையின் புரட்சிக்கவிதையைப் பார்த்ததும் ஒரு பதில் கருத்துப் பதியவேண்டும் என்ற ஆர்வம் என்னைத் தூண்டியது ஆகவே நானும் ஒரு உறுப்பினர் ஆகினேன்.

வல்வை மைந்தன் என்ற பெயர் புனைபெயர், வல்வை என்ற எனது ஊருடன் மைந்தனை சேர்த்துள்ளேன், அவ்வளவுதான்.

________

2)யாழில் நீங்கள் இணைந்த போதிலும் பார்க்க தற்போதைய பல மாற்றங்கள்இபுது நபர்கள் என பலதரபட்ட மாற்றங்கள் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?யாழில் எற்பட்ட மாற்றம் ஆரோக்கியம் வளர்ச்சியா இல்லையா என்பதை பற்றிய உங்கள் கருத்து என்ன?யாழை இன்னும் மெருகூற்ற என்ன செய்யலாம்?

முக்கியமான கேள்வி..இதை நாம் இரண்டுவிதமாக நோக்கலாம் பாருங்க, பல மாற்றங்கள் இவை வரவேற்கத்தக்கவை , புது நபர்களின் வருகை முக்கியமாக வெளிநாடுகளிளேயே பிறந்து தமிழ் கற்று ஆக்கங்களை பதிவு செய்ய முயற்சி செய்கிறார்கள் என்றால், இவர்களுக்கு நாம் முன்னிடம் கொடுக்கவேண்டும். அவர்கள் விடும் சிறு சிறு பிழைகளை நாம் பெரிசு படுத்தாமல் ஊக்குவிக்கவேண்டும், அதாவது யாழுக்கு இவர்களைப் போன்றோரின் வருகையை அதிகரிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவர்களின் வருகையால் யாழுக்கு ஆரோக்கியமான வளர்ச்சி என்பது தான் எனது கருத்து.

_________

3)அடுத்த முக்கிய விடயம் யாழில் அரடை பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை சிலர் சுமத்தி அரட்டையை தடை செய்ய வேண்டும் என்று அரட்டை அடிக்கிறார்கள் இவர்களுக்கு உங்கள் பதில்?அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அத்துடன் டைகர்பமிலியை பற்றி பல விமர்சனங்கள் இந்த பமிலியை பற்றிய உங்கள் கருத்து என்ன?யாழில் புதிதாக நடைமுறைக்கு வந்திருக்கும் எச்சரிக்கை வழங்கள் என்பது சிறந்ததா அல்லது தேவை அற்றதா என்பது பற்றிய உங்கள் கருத்து?

அரட்டையை வேண்டாம் என்று நான் சொல்லவில்லை இருந்தாலும் சில நேரங்களில் எல்லையை மீறுகின்றன, அதை கருத்தில் கொண்டோம் என்றால் போதும்.

அடுத்ததாக உங்க கேள்வி டைகர் பமிலியைப் பற்றியது, இது ஒரு குடும்பம் இதில் இணையவேண்டும் என்பது பலரின் விருப்பம்..இந்த குடும்பத்தில் இருப்போர் அனைவரும் அன்பாக பழகக்கூடியவர்கள்.

புதிதாக நடைமுறைக்கு வந்திருக்கும் எச்சரிக்கை வழங்கள் என்பது கட்டாய தேவை என்பது எனது கருத்து.

___________

4)யாழில் நீங்கள் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?எனியும் யாரை சந்திக்க ஆவல்படுகிறீர்கள்?யாழில் நெருங்கிய உறவு என்று சொல்ல கூடிய வகையில் யார் இருக்கிறார்கள்?உங்களுடன் முதன்முதலிம் உரையாடிவர் யார் என்று உங்களுக்கு ஞாபகம் இருந்தா அவரை பற்றிய சில வரிகள்?யாழில் யாருடனும் மனகசப்பு ஏற்பட்டதா அவ்வாறாயின் அதை எவ்வாறு ஏற்று கொண்டீர்கள்?

யாழில் நான் இதுவரை ஒருத்தரையுமே சந்திக்கவில்லை, எல்லோரையும் ஒன்றாக சந்திக்கவேண்டும் என்ற ஆசை நிறைய உண்டு. யாழில் நெருங்கிய உறவு என்று சொல்லக்கூடிய வகையில் எல்லா உறுப்பினர்களையுமே சொல்லலாம்.

என்னுடன் முதல் முதல் உரையாடியவர்கள் யார் என்று ஞாபகமில்லை...அடுத்ததாக யாழில் இதுவரை யாருடனும் மனக்கசப்பு ஏற்பட்ட அனுபவம் இல்லை.

_____________

5)யாழில் நீங்கள் பல கவிதைகளை எழுதி வருகிறீர்கள் அனைத்தும் இரசிக்க கூடியதாக இருகிறது ஆனால் இறுதியாக எழுதிய "வாழவிடு" என்ற கவிதையில் ஏதோ ஏக்கம் தெரிந்தது அந்த கவிதையை எழுதும் போது எத்தகைய மனநிலையில் எழுதுனீங்கள்?அவ்வாறான ஏக்கம் உங்கள் மனநிலையில் ஏற்பட காரணம் என்னவென்று எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?தற்போது நீங்கள் எவ்வாறு இருகிறீர்கள் என்னும் அந்த மனகவலை இருகிறதா?

மன்னிக்கவேண்டும் யாழில் நானாக எந்த கவிதையும் எழுதவில்லை...ஆனால் கவிதையை ரசிப்பேன், பிடித்த கவிதைகளுக்கு விமர்சனம் எழுதுவது தான் வழமை.

வாழவிடு என்பது கவிதையில்லை என்று அப்போதே சொல்லிவிட்டேனே.

உங்களால் குறிப்பிடும் அந்த வரிகளில் ஏக்கம் உள்ளது உண்மைதான்..நானும் ஒரு

சர்வசாதாரண மனிதன் தானே?

மனக்கவலை என்பது இப்போதென்றில்லை உயிருள்ளவரை இருக்கத்தான் செய்யும்.

இந்தக் கட்டத்தில் நீங்கள் கேட்காத ஒரு கேள்விக்கு பதில் சொல்ல விரும்புகின்றேன்

என்னை மிகவும் பாதித்த கவிதைகள் சில யாழில் இப்போதும் கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருக்கின்றன.

இருப்பினும் அதைபதிவு செய்தவர் ஏனோ யாழில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்கின்றார்.

_______

6)யாழில் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்று அண்மையில் நண்பர் ஒருவர் தலைபிலிட்டு ஒரு பதிவை மேற்கொண்டார் அது பல சர்சைகளிள் சிக்கியது.........உங்கள் பார்வையில் யாழில் பெண்களிற்கு சம உரிமை உள்ளதா இல்லையா......ஆமாம் என்றா அதற்குரிய விளக்கமும் இல்லை என்றா அதற்குரிய விளக்கமும் தரமுடியுமா?யாழில் பெண்கள் எவ்வாறு உங்களுடன் பழகிறார்கள் ஆண்கள் உங்களுடன் எவ்வாறு பழகுகிறார்கள் என்பதை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

யாழில் என்னைப் பொறுத்தவரை உறுப்பினர்கள் என்றுதான் பார்க்வேனுமே ஒழிய, ஆண் ,பெண் என்று பிரித்து பார்க்க்கூடாது...இங்கு எல்லோருக்கும் சமஉரிமை இருக்கின்றது என்பதுதான் உண்மை.

இங்குள்ள பல உறுப்பினர்களுடன் எனக்கு தனிமடலில் தொடர்பு இருக்கின்றது அதன்படி நான் என்ன சொல்ல விரும்புகின்றேன் என்றால் எல்லோரும் நல்லவர்கள்,பண்பானவர்கள்.

__________

7)அண்மையில் யாழ்கள உறவுகள் இருவர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள் என்பது சகலரதும் அறிந்தது அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?இணைய மூலம் காதல் பரிமாற்றபடுவது பற்றிய உங்கள் கருத்து என்ன?

இவை பாராட்டப்படவேண்டியவை, காதல் என்பது எங்கே?எப்போது?எப்படி வரவேண்டும் என்ற விதிமுறை இருக்கா என்ன?

________

8)காதலை பற்றி எல்லாரும் என்னவோ கதைக்கீனம்(ஜம்மு பேபியை தவிர)காதலை பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன?யாரையாவது காதலித்த அநுபவம் இருந்தா எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?யார் அந்த புண்ணியவாள் என்று எங்களுக்கு சொல்லலாமே?உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கபட்ட திருமணமா?இது வரை உங்களுக்கு எத்தனை பேர் காதல் கடிதம் தந்தவை என்பதையும் எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?உங்கள் முதல் காதலி யார்?

நீங்க அறிய ஆசைப்படுகின்றீங்க, சொல்லியே ஆகவேண்டும்..

எனக்கு எத்தனைகாதல் கடிதங்கள் வந்தன என்பது முக்கியமல்ல, நான் யாருக்கு கொடுத்தேன் என்பதுதான் முக்கியம்...அதாவது ஒரு பெண் வாழ்க்கையில் சந்திக்கக்கூடாத இழப்புக்களை எல்லாம் சந்தித்த ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுக்கலாம் என நினைத்துள்ளேன்..அதாவது மறுவாழ்வு..ஆனால் அந்த பெண் தப்பாக நினைத்து எனது நட்பை துண்டித்து விடுவாரோ என்ற பயத்தில் எதுவித முடிவும் எடுக்க முடியாது உள்ளேன்.

காதலி என்றால் எனது முதல் காதலியும் அவர் தான்.

____________

9)யாழ் உலக செய்திகளை பார்த்தால் கணவண் குடி போதையில் மனைவியை கொள்ளுதல்......அல்லது மனைவி கணவனை கொள்ளுதல் போன்று வரும் அதில் சில பெண்கள் குறிபிட்டிருந்தார்கள் மனைவி கணவனை அடித்தால் பல பக்கங்கள் தாண்டி போகும்..........ஆனால் கணவன் துன்புறுத்தினா அந்த செய்தி பல பக்கங்கள் போவதில்லை என்று.........இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?இவ்வாறான செய்திகள் உலக செய்தி பகுதியில் முக்கியம் என நினைகிறீர்களா?

உலகத்திலை இவை மட்டுமா செய்திகள்?

______________

10)நீங்கள் தமீழிழத்தில் பிறந்ததனீங்க என்று நினைக்கிறேன் தமீழிழத்தில் உங்களைம் இகவும் கவர்ந்தது என்ன?கொடிய யுத்தம் காரணமாக உங்களை மிகவும் பாதித்த சந்தர்ப்பம் என்று சொல்லுமளவிற்கு ஏதாவது விசேடமாக இருக்குதா?தற்போது நீங்கள் தமீழத்தில் தான் இருகிறீங்களா அல்லது வேறோரு நாட்டில் இருகின்றீர்களா?எவ்வாறு புலம் பெயர் நாடு உள்ளது உங்கள் மனநிலையில்?

தமிழீழத்தில் தான் நான் பிறந்தேன்...தமிழீழத்தில் எல்லாமே என்னை கவர்ந்துள்ளன, கொடிய யுத்தத்தில் பாதித்தவை நிறைய உண்டு, நான் நேரடியாக பாதிக்கப்பட்டது குடும்ப அங்கத்தவர்கள் பலபேரை இழந்துள்ளேன்.

நான் கனடாவில் இருக்கின்றேன்..பெரும்பாலும் அடிக்கடி தாயகம் சென்று வருவதுண்டு, ஏன்? எப்படி? என்று கேளாதீர்கள்.

புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரை எமது தாயக விடுதலைப்போராட்டத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றன, அதாவது எமது மக்கள்.

நாம் இங்கிருந்தாலும் எமது மனம் அங்கேதான் என்பது உண்மை.-

-----

மறுபடி சமாதானம் ஏற்படும் பட்சத்தில் தாயகதிற்கு செல்லுவீர்களா அல்லது புலத்தில் இருக்க ஆசைபடுவீர்களா?

இந்தக்கேள்வி ஆத்திரத்தை தூண்டுகின்றன இருந்தாலும் வானொலி என்றபடியினால் அடக்குகின்றேன்.

தொடரும்...

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மிகுதி பதிலுடன் உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

__________________

11)வெளிநாட்டுக்கு வந்த புதிதில் எவ்வகையான மனநிலையில் நீங்கள் இருந்தனீங்க?பின் எவ்வாறு அந்த நாட்டு சூழலுக்கு இசைவாக்கபட்டனீங்க?புலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து செய்த குழப்படிகள் மற்றும் வேடிக்கைகளை என்பவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?

நான் வெளிநாட்டிற்கு வந்த புதிதில் எனது மனநிலையைப்பற்றி எனக்கு ஞாபகமில்லையெங்க..அது பற்றி சொல்லப்போனால் பல பிரச்சினைகளை நான் சந்திக்கவேண்டி வரும்.

வந்த காலத்தில் இருந்தே எனது பாதை கொஞ்சம் வித்தியாசம்..அதைப்பற்றி கூறி சுயவிளம்பரம் தேட விருப்பமில்லையெங்க..

______________

13)நேற்று குடும்பிமலையை சிறிலங்கா இராணுவம் ஆகிரமித்தது அதே நேரம் எம் வான்படைசிறிலங்கா கீபீர் விமானத்தை சுட்டு விழுத்தியது என்பது நீங்கள் அறிந்தது இந்த இரு சம்பவங்கள் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் மனநிலை இரண்டின் போது என்பதை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

இதுபற்றிய கருத்துக்களை இங்கே நான் கூறவிரும்பவில்லையெங்க..

________________

14)அடுத்து ஒரு கேள்வி அதாவது யாழின் புலபகுதியில் நண்பர் ஒருவர் இணைத்த முஸ்லீம் சிறுமியை காப்பாற்ற சொல்லி அது பல தரபட்ட விமர்சனதிற்கு உள்ளானது அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?அதே பகுதியில் சிட்னியில் தமிழர் ஒருவர் கைது செய்யபட்டது என்று வந்தது ஆனால் அதை பற்றி பலரும் கண்டு கொள்ளவில்லை ஒரு முஸ்லீம் சிறுமிக்கு காட்டும் ஆதரவு நமக்கா இன்று சிறை சென்று இருக்கும் நம் உறவிற்கு இல்லையா இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

இதற்கும் கருத்து கூறவிரும்பவில்லை...

_____________

15)அடுத்து ஜம்முவின் பாணியில் ஒரு லொள்ளு கேள்வி யாழில் உங்களை ஒருவா பின் தொடர்கிறா என்பது யாழில் புதிய கோசிப் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?இந்த பேட்டி வாயிலா நீங்கள் குறிபிட்ட உறவுக்கு சொல்ல விரும்புவது என்ன?

நல்ல கேள்வி...நீங்கள் குறிப்படுவது உண்மையாக இருந்தால் அதில் எந்தவிதமான தப்பும் இருப்பதாக எனக்குப் படவில்லை......ஆனால் ஒருவரின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை முதலில் அறிந்த பின்பே அடுத்த நடவடிக்கைக்கு நகரவேண்டும் என்பது எனது கருத்து.

________________

தொடரும்!

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் பற்றி

1)வானவில்

ஏழு நிறங்களை கொண்டவர், அதே மனதையும் கொண்டவர்

2)இன்னிசை

இவரது பெயரிலையே இனிமையான இசை அடங்கியுள்ளது..இசைப்பிரியனோ?

3)இனியவள்

கவிதையில் பிரியம் கொண்டவள்.

4)டங்கு

பெயரில் தான் அப்படி இப்படி ஆனால் நல்லவர்.

5)கலைஞன்

இவர் ஒரு கலைஞன், கொள்கையில் இவருக்கும் எனக்கும் நல்லாக ஒத்துப்போகும்.

6)வெண்ணிலா

பெண்களிற்காக தனித்து நின்றே வாதிடக்கூடியவர்..

7)ஈரநிலா-

ஈரநிலாவா? ஈழநிலாவா? பெயரில் ஒரு சந்தேகம்...ஈழநிலா என்றால் எதிலும் வேகமானவர்..வெளிப்படையாக பேசக்கூடியவர்.

8)அனிதா

நட்பிற்கு மறுபெயர் அனிதா.

9)பிரியசகி

இவவும் வெளிப்படையாக பேசக்கூடியவர.

10)தூயா

கொள்கையில் இறுக்கமானவர்..

11)ஜன்னி

சிறுமி அப்படித்தானே?

12)விதுஷா

அமைதியானவர்

13)கஜந்தி-

தரமான கவிதைகளை படைப்பவர்களில் ஒருவர்...மறக்க முடியாத ஒரு இலக்கியவாதியும் கூட..

14)கறுப்பி -

யாழில் செய்தி என்றாலே நினைவுக்கு வரும் பெயர்..பண்பானவர்,யாரினதும் மனதை புண்படுத்த தெரியாதவர்.

15)நெடுக்ஸ்

இவரைப்பற்றி கருத்து சொல்ல எனக்கு தகுதி போதாது.சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை, தகுந்த ஆதாரங்களுடன் வழங்கிவரும் ஒரு நல்ல அறிவாளி.

16)ரசிகை

ரசனை தெரிந்த ஒரு நல்ல ரசிகை.

17)சிநேகிதி -

இவர் எனக்கும் ஒரு புதிய சிநேகிதி.

18)யாழ்வினோ

யாழில் ஒரு வினோதமானவர்...நட்பாக பழக தெரிந்தவர்

19)தமிழ்தங்கை-

யாழில் புரட்சிக்கவிதைகளை வழங்குவதில் கைதேர்ந்தவர்...

20)ஜம்முபேபி-

யாழின் முதுகெலும்பு...

21)இவள்-

இனிமையானவள்...அமைதியானவள்...

___________

தொடரும்!

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் பதிலுடன் உங்களுடன்!

____________

ஒரு வரி பதில்கள்

1)யாழில் சேர்ந்திருப்பது?இன்பம்

2)யாழின் பெண்கள்?மங்களகரமானது.

3)யாழின் இளசுகள்?அட்டகாசம்.

4)யாழின் பலம்?உறுப்பினர்கள்.

5)யாழின்பலவீனம்?விதிமுறையில் இறுக்கம் போதாதது.

6)யாழின் வெற்றி?நிர்வாகத்தின் திறமை.

7)யாழில் நாயகி?வேண்டாம் வம்பு.

8)யாழில் மறக்கமுடியாதவர்?என்னைப்பொறுத்த வரை ஆதிவாசி.

9)யாழில் காதல் ?விரும்பத்தக்கது.

10)யாழில் திருமணம்?வரவேற்கவேண்டியது.

11)ஆசைக்கு?நீங்க

12)அறிவுக்கு? நானெங்க.

___________

எனக்கு இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்த டைகர் வானொலி கலைஞர்கள் மற்றும் பொறுமையுடன் செவிமடுத்த நேயர்கள், யாழ் விருந்தினர்கள்,யாழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிப்பதுடன், எனது பதில்கள் யாரினதும் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பையும் கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்....

நன்றி

Edited by Valvai Mainthan

எமக்காக தனது பொன்னான நேரத்தை ஓதுக்கி தந்து மிகவும் சுவாரசியமாக பேட்டியை தந்த வல்வைமைந்தன் அவர்களுக்கு டைகர் வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாக நன்றிகளையும்,வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறோம்................

இது வரை நடந்த பேட்டியை நேயர்கள் கண்டு இரசித்து இருப்பீர்கள் என்று நினைகிறேன்...............மீண்டும் அடுத்த வெள்ளி பல புதுமைகளுடன் யாழில் பவனி வரும் நோக்கில் உங்களிடன் இருந்து டைகர்குடும்பம் சார்பாக விடைபெறும் நான் என்றும் உங்களின் ஜம்மு பேபி...............வணக்கம் நேயர்களே.........

நன்றி வணக்கம்.

டைகர் குடும்பம்

டைகர் வானொலி

Edited by Jamuna

நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் தவிர்க்கமுடியாத காரணத்தால் இன்றைய பேட்டி நாளை இடம்பெறும் என்பதை நேயர்களுக்கு அறியதருகிறோம்.

தடங்கலுக்கு வருந்துகிறோம்.

நன்றி

டைகர் வானொலி மற்றும் டைகர் குடும்பம்

:unsure:

  • 2 weeks later...

தவிர்க்க முடியாத சில காரணங்களாள் நடைபெறாம இருந்த டைகர்வானொலியின் வெள்ளிமாலை பேட்டி நாளை மிகவும் வித்தியாசமகா முறையில்...........நடைபெற இருகிறது காணதவறாதீர்கள்.......நாளை பேட்டி காணபடும் நபர் கூட.............சற்று வித்தியாசமானவரே...........நாளை காணதவறாதிர்கள்.......... :D

நன்றி

டைகர் குடும்பம்

&

டைகர்வானொலி

நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் மீண்டும் டைகர்வெள்ளிமாலை பேட்டியினூடாக சனிகிழமை சந்திபதில் மிக்க மகிழ்ச்சி,இன்று பேட்டி காணபோகும் நபர் யார் என்று அறிய எல்லாரும் ஆவலாக இருப்பீர்கள் உங்கள் ஆவலை பூர்த்தி செய்யும் டைகர்வானொலி மற்றும் டைகர் குடும்பம் இன்று பேட்டி காணபோகும் நபர்................. :mellow:

ஈழத்து இளைய படைப்பாளி யாழில் தமிழ்வாணண் என்ற பெயரில் படைப்புகளை தந்து கொண்டிருக்கும் வசீகரன் அண்ணா.............அவருடன் தான் இன்று பேட்டி சற்று நேரத்தில் இடம்பெறும்....... :D

gsemultipart65636pq4.jpg

Edited by Jamuna

நேர்காணலை வாசிக்க இங்கே அழுத்தவும்

வணக்கம் நேயர்களே............. :huh:

பல வேலைகளுக்கும் மத்தியிலும் நாம் கேட்டு கொண்டதிற்கிணங்க மகிழ்ச்சியாக வந்து பேட்டி தர ஓப்பு கொண்டு மிகவும் சுவாரசியாமான முறையில் பேட்டியை தந்த தமிழ்வாணண் என்று யாழில் அழைக்கபடும் ஈழத்துபடைபாளியான சீ.வசீகரன் அண்ணாவிற்கு நன்றிகளை டைஅக்ர்வானொலி மற்றும் டைகர் குடும்பத்தின் சார்பாக தெரிவித்து கொண்டு..........இன்னும் பல படைப்புகளை அவர் எம் மக்களிற்காக தரவேண்டும் ..........எம்மவர்களும் எம் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது யாழ்கள சார்பாக நாங்கள் கேட்டுகொள்வது............. :lol:

இதுவரை நேரமும் நடந்த பேட்டியை கண்டு இரசித்து இருப்பீர்கள் என்று நினைகிறேன் மீண்டு மற்றுமொரு வெள்ளிமாலை பொழுதில் பல சுவைகளை தாங்கி உங்கள் முன் வருவோம் என்று கூறி விடை பெறும் நான் என்றும் உங்கள் ஜம்முபேபி..........

பி.கு- டைகர்பமிலி என்றைக்கு பேச்சளவில் எதுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது யாவருக்கும் தெரியும் ஆகவே...........வெறும் வாயால் மட்டும் கலைஞர்களை அது செய்யவில்லை என்று முக்கியத்துவம் கொடுக்காம........எம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பது நாங்கள் சொல்லி கொள்ள விரும்புவது..........

நன்றி :)

டைகர் பமிலி

&

டைகர்வானொலி

  • 3 weeks later...

வணக்கம் நேயர்களே பல நாட்களாக வராமல் இருந்த டைகர் பேட்டி புது பொலிவுடன் எனி உங்கள் இல்லம் தேடி வருவாள்.....................புயலிற்கு முன் அமைதி அது போல் எங்கள் அமைதியில் பல விடயங்களை செய்து கொண்டிருந்தோம்...............இனி வரும் காலங்களிள் புது பொலிவுடன் பவணி வருவாள் டைகர் வெள்ளிமாலை......... :D

தொடர்ந்து வரும் பேட்டிகள் யாழ் உறவுகளும் மற்றும் அந்தந்த நாடுகளிள் இருக்கும் படைப்பாளிகளுடனும் பவனி வர இருகிறோம் அந்த வகையில் அவுஸ்ரெலியா படைபாளிகள் மற்றும் ஏனைதுறை சாந்தவர்களை ஜம்மு பேபியும்,சுண்டல் அண்ணாவும் சேர்ந்து வழங்குவோம்............... B)

கனடாவை பொறுத்தவரை இதனை வல்வை அண்ணா தொகுத்து வழங்குவார் என்று உறுதி அளித்துள்ளார்............ :D

அந்த வகையில் இன்று நாம் தர இருக்கும் பேட்டி நேற்று எங்கள் கலையகத்தில் நடந்த அவுஸ்ரெலிய தமிழ் பத்திரிகையாளர் ஒருவருடனான பேட்டி இதனை நானும்,சுண்டல் அண்ணாவும் நேரடிய முதல் முதல் கண்டிருதோம் யாழ்சார்பாக..........இனி வரும் காலங்களிள் நேரடியாக கண்டு தருவோம் முதன் முதலில் நாங்கள் எழுத்து மூலம் கண்டு இங்கே இணைக்கிறோம் வரும் காலங்களிள் குரல் வடிவிலும் வரும் என்பதை எங்கள் நேயர்களிற்கு அறிய தருகிறோம்.............. :)

எமது கலையகதிற்கு பல வேலைபளுவிற்கிடையிலும் சமூகமளித்து யாழ் இணையம் சார்பாக பேட்டி எடுக்க என்றவுடன் முழுமனதுடன் ஏற்று............பேட்டி கண்ட எம்மையும் உற்சாகபடுத்தி எம்மையும் பாராட்டி இடைகிடை சிறந்த பேட்டியை தந்த............

அவுஸ்ரெலிய "உதய சூரியன் "ஆசிரியர்,சக எழுத்தாளர்,பதிபாளர் N. G ரத்தினம் அவர்களிற்கு மனமார்ந்த நன்றிகள்.................... :D

இன்று நீங்கள் கண்டு களிக்க போகும் பேட்டி அவுஸ்ரெலிய பிரபல தமிழ் பத்திரிகையான உதய சூரியன் பத்த்திரிகை ஆசிரியர்,சக எழுத்தாளர்,பதிபாளர் N.G ரத்தினம் அவர்களுடன் நேரடியாக கண்ட நேர்காணல்.......... :)

Edited by Jamuna

எமது அழைப்பை ஏற்று எமது கலையகதிற்கு பல நேரசிக்கலிற்கும் மத்தியிலும் வருகை தந்த அவுஸ்ரெலியாவில் பலரின் உள்ளம் கொள்ளை கொண்ட பத்திரிகையான உதயசூரியன் பத்திரிகை ஆசிரியர் அவர்களிற்கு நன்றிகளை தெரிவித்து கொண்டு பேட்டிக்கு செல்வோமா............. :)

1)உங்களை பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை எமது யாழ் இணையதள நேயர்களுக்காக தரமுடியுமா ரத்தினம் அவர்களே?

நான் கிழகிலங்கையை சேர்ந்த ஒரு தமிழன்,நான் பாடசலையில் படித்து கொண்டிருக்கும் போது முதன்முதலா சிந்தாமணி பத்திரிகையில் பிரவேசம் ஆனேன் எனது சிறுகதைதொகுப்பு அதில் பிரசுரமாகி கொண்டிருந்தது இந்த சமயத்தில் நானும் பத்திரிகை ஆரம்பிக்க கூடாதா அதில் எனது ஆக்கங்களை இடலாம் என்ற ஒரு சிந்தனையின் வெளிபாடு தான் "இளைஞன்" என்ற பத்திரிகையை தாயகத்தில் ஆரம்பித்தேன் ஆரம்பகாலங்களிள் கைஎழுத்து பிரதியாக வெளியிட்டு 1966 அச்சு பிரதியாக தொடர்ந்து 3ஆண்டுகள் வெளியிட்டு வந்தேன் தொடர வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சில தடைகளாள் அது கைவிடபட்டது என்பது என் மனவருத்தம்.........

2)தற்சமயம் நீங்கள் புலதிற்கு இடம்பெயர்துள்ளீர்கள் எப்போது புலம் பெயர்ந்தீர்கள் அவுஸ்ரெலியாவிற்கு உங்கள் பார்வையில தாய் நாடு சிறப்பா அல்லது புலம் பெயர் இவ் மண் சிறப்பா இதை பற்றிய உங்கள் பார்வை என்ன?

நான் 1996 ஆம் ஆண்டு இங்கு புலம் பெயர்ந்து வந்தவன்..............

என்ன தான் வசதிகள் வாய்புகள் இருந்தாலும் தாயை பிரிந்த சேயை போல் தாய் நாட்டை பற்றிய கவலையுடன் வாழ்ந்து கொண்டிருகிறேன்.....

3)எமது தமிழ் சமூகத்தில் பல பிரச்சினைகள் குறைகள் நிகழ்கிறதை நாம் அவதானிகிறோம் ஆனால் எம் பத்திரிகையாளர்கள் பலர் என்று குறிபிடலாம் ஒரு பக்க சார்பான செய்திகளை தருவதை அவதானிக்க கூடியதாக இருகிறது இதை பற்றைய உங்கள் கருத்து என்ன பத்திரிகையாளர் என்ற முறையில்?வளர்ந்து வரும் இளம் தமிழ் பத்திரிகயாளர்களிற்கு நீங்க சொல்ல விரும்புவது?

ஒரு பத்திரிகையாளனோ அல்லது படைபாளியோ நமது சமூகத்தில் நடைபெறுகின்ற குறை,நிறைகளை எடுத்து கூறுவதாகவே அமைய வேண்டும் என்பதே என் கருத்து,இதில் பாகுபாடு கருதாது கட்சி பேதங்களை மறந்து உண்மையாக எது சரி எது பிழை என்பதை வெளிசதிற்கு கொண்டுவரவேண்டும்,இதை தான் வளரும் இளைய பத்திரிகையாளர்க்கும் கூறுவதோடு தனது கருத்தை வெளிபடுத்துவதால் என்ன நடக்கும் என்று பயப்பிட கூடாது அப்படி பட்டவர்கள் இந்த துறைக்கு வரவும் கூடாது,அத்தோடு நீங்கள் கேட்ட கேள்வி மாதிரி இதை கேட்க கூடிய ஒருத்தராக இருப்பது அது மிகவும் முக்கியமான விடயம் பாரட்டுகள்.... :D

4)"தமிழீழம்" என்ற கோட்பாட்டில் நம்மவர்கள் உயிரை துச்சமாக மதித்து போராடுகிறார்கள் இவர்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?இதை வழி நடத்தி செல்லும் எம் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபகரன் பற்றிய உங்கள் பார்வையில்?

உரிமைக்காக போராடுவதில் எந்த தவறும் இல்லை அது முறையானதாக நடைபெற வேண்டும் என்பது தான் எனது விருப்பம்,தமிழ் மகன் என்ற வகையில் நானும் தமிழீழத்தை தான் விரும்புகிறேன்.

தமிழர் தலை நிமிர்ந்து வாழ போராடி கொண்டிருக்கு ஒர் உன்னதமான தலைவர்.

5)தற்போது பிரதேசவாதம் முக்கியமாக நம் தமிழ் மக்களிடம் பேசபடும் விடயம் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

தமிழர் என்பது ஒரு குடும்பமாக இருக்க வேண்டும் என்பது தான் என் கருத்து இதில் எந்தவொரு வேற்றுமையும் நான் விரும்பவில்லை இது தான் என் கருத்து.. :)

6)பத்திரிகையாளர் என்ற ரீதியில் உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை கூறமுடியுமா?

முடிந்தவரை எமது இளம் சந்தநியருக்கு எமது மொழி சிறப்பு பற்றியும் பாரம்பரிய கலாச்சாரத்தை பற்றியும் புலத்தில் வளரும் இளையவர்களிற்கு அவர்களின் விருப்படி கொண்டு செல்வது என்பது ஆகும்.எமது தமிழ் மொழியை காப்பாற்றுவது அதில் எனது முயற்சியை செய்து கொண்டிருகிறேன் என்னால் முடிந்தவரை.

7)தமிழ் மொழி மோசமாக பின்னடைந்து செல்கிறது இதை பற்றிய உங்கள் பார்வை அத்துடன் இளையவர்கள் முன் வந்து ஆக்கங்கள் மற்றும் பலதரபட்ட விடயங்களை மேற்கொள்ளும் போது சிலர் தமிழை அதிகம் பயின்றவர்கள் என்றே சொல்லலாம் அவர்கள் இவர்களிடம் பிழை பிடித்து உதாசீனம் செய்யும் சந்தர்பங்கள் அதிகம் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

எனது பார்வையில் தமிழ்மொழி பேசுவது தலைகுறைவாக சிலர் வழமைபடுத்தி வருகிறார்கள் அது மிகவும் மனமருத்தமான விடயமாகும் தமிழ் ஆர்வம் என்பது இங்கு குறிப்பாக புலத்தில் குறைவாக இருகிறது என் கருத்து,தமிழ் மொழி இன்றைய நிலை தொடருமானல் என்னும் சிறிது காலத்தில் தமிழ் மொழி மறைந்து போகும் என்பது என் கருத்து... :D

யார் யாரிடம் திறமை இருக்குதோ அவர்கள் தங்கள் திறமைகளை கொண்டு வரும் உரிமை இருக்கு அதை யார் குறை சொன்னாலும் விரும்பினாலும் உண்மையை எடுத்து காட்ட வளரும் எழுதாளர்கள் தயக்கம் காட்ட கூடாது............

8)அடுத்து முக்கிய குறை பாடாக எமது சமூகத்தில் நிலவி வருகிறது அதாவது தென்னிந்திய நட்சத்திரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் கெளரவங்களை எமது ஈழத்து படைபாளிகளுக்கு கொடுபது மிகவும் அரிது இதை பற்றிய உங்கள் பார்வை?

எம்மிடையே தரம்மிக்க பல கலைஞர்கள் பலதுறை வல்லுநர்கள் வசிகின்றனர் இலைமறை காய் போல் போல் எம் கலைஞர்கள் எம் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள் இவர்களின் படைப்புகளை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும்,முதலுரிமையும் அவர்களிற்கு தான் கொடுக்க வேண்டும் தவிர வெறும் புகழிற்காக அயல் நாட்டு கலைஞர்களை கெளரவிப்பது மிகவும் வேதனைகுரிய ஒரு விடயமாகும் தமிழக கலைஞர்களை விட தலைசிறந்த பல கலைஞர்கள் எம்மிடையே வாழ்ந்து கொண்டிருகின்றனர் என்பது கடந்த ஒருவருடமாக எனகே புரிந்தது எனது பத்திரிகையில் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.

9)அவுஸ்ரெலியாவில் "உதயசூரியன்" பத்திரிகையை ஆரம்பிக்க உந்துலாக இருந்த காரணி எது என்பதை கூறமுடியுமா?

எமது இளம் சமுதாயம் பேசுகின்ற அரைகுறை தமிழ் மொழியை பல இடங்களிளும் பலமுறை கேட்டும் பல பெற்றோர்கள் வீட்டிலே தங்கள் குழந்தைகளுடன் ஆங்கில மொழியில் பேசுவதையும் கண்ணுற்று நான் என்னால் முடிந்த வகை எமது இனிய தமிழிமொழி மறையாது இருக்கு சிறுவழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இதனை ஆரம்பித்தேன்,எம்மில் உள்ள பல கலைஞர்களை ஊக்குவிக்கும் ஆர்வத்துடன் தான் இதை ஆரம்பித்தேன்.

இலங்கையில் பிறந்து இங்கு வாழ்கின்ற 15- 25 வயதுகுட்பட்ட ஆண்,பெண்கள் தங்களது பெற்றோரின் பெயரை கூட எழுதமுடியாமல் தவிர்திருப்பதை பார்த்திருகிறேன் இப்படியான பல காரணங்களாள் தான் இந்த பத்திரிகையை ஆரம்பித்தேன் என்றே கூறலாம்.

10) உதய சூரியன் பத்திரிகைக்கு அவுஸ்ரெலியாவை பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைத்திருகிறதா இதை பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

நான் எதிரிபார்ததை விட எனது பத்திரிகைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்,எனது முயற்சிக்கு வர்த்தக நிறுவனங்களும் உதவி வழங்குகின்றன,அவுஸ்ரெலியா மட்டுமல்லாது உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரிடம் உதயசூரியன் சென்றுவர வேண்டும் என்பது தான் அவா,ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும் தற்போது நன்றாக இருகிறது....... :)

11)தற்போது தமிழ் மொழி குன்றி போய் வருகிறது அதை வளர்கிறோம் என்ற் சொல்லி கொண்டு வாயால் வளர்கிறார்கள் பலர் ஆனால் நம் போராளிகள் உயிரை தியாகம் செய்து தமிழை அழிய விடாம பாதுகாக்கிறார்கள் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

வாய் சொல் வீரடி என்று பேச்சிற்காகவும்,கெளரவத்திற்?ாகவும் மொழி பற்றை வெளியிடாம தினமும் தங்களை அர்பணித்து கொண்டிருக்கும் எமது வீரர்களை போல் அனைவரும் இறங்கினால் நல்லது என்பது என்னுடைய கருத்து......

12)தற்போது சாதி,மதம் என்றும் புதிய சாமிமார்கள் உருவாகுவதும் புல தமிழ் மக்களிடயே பிரபலம் ஆகி வருகிறது இதனை பற்றிய உங்கள் கருத்து என்ன?

என்னை பொறுத்தவரையில் கடவுள் ஒன்று தான் அதை போல் படைப்புகளும் மனிதன் என்ற ஒரே இனம் தான்,இதற்குள் சாதி,மதம் இருப்பதாக தெரியவில்லை.தங்கள் வருமானதிற்காக மக்களை பிழையான வழியில் நடத்தி கொண்டிருகிறார்கள்.......

13)புலத்தில் ஒரு குறைபாடு இளைஞர்கள் தமிழில் நல்ல பல விடயங்களை செய்ய வந்தாலும் அதனை பெரியவர்கள் சிலர் அதை விடுவதில்லை என்றே கூறலாம்,அத்துடன் அவர்களை விழுத்த வேண்டும் என்று செயற்படுவார்கள் என்று கூறலாம் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

இது ஒரு பெரிய குறைபாடு என்னவென்றால் எமது சமுதாயதில் தனனிவிட யாரையும் ஏற விடுவதில்லை இதனால் இளம் சந்ததியின் அபார மூளைகள் பாதிக்கபடுகிறது.ஆக்கங்களிற்?ும்,படைப்புகளிற்கும் மற்றும் முயற்சிகளிற்கும் நாம் வரவேற்பு காட்டாத காரணத்தால் எத்தனையோ பல நல்ல இளம் படைப்பாளிகள் வராமல் சென்று விடுகின்றனர்,இதை எமது மக்கள் கற்று கொண்டு நல்லதை யார் செய்தாலும் அதை வரவேற்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்,இதில் வயது,படிப்பு,பட்டம் முக்கியமில்லை.

கம்பராமாயணம் இயற்றிய வால்மீகி ஒரு பயங்கர திருடனாக வாழ்ந்தவர் அவர் எமக்கு அன்று தந்த மகாகாவியத்தை இன்று நாம் அனைவரும் போற்றவில்லையா.........

14)காவியங்கள் பற்றி மேலே குறிபிட்டு இருந்தீர்கள் காவியங்கள் கற்பனைகுட்பட்ட விடயம் என்பது எனதும் சிலரினதும் கருத்து இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

காவியங்கள் கற்பனைகுரிய விடயங்கள் என்றாலும் அதில் காட்டபடுகின்ற கற்பனைகெட்டாத பல நல்ல விசயங்களை வாழ்கை முறை தத்துவங்களாக அதில் காட்டபடுவாதல் அதை ஏற்று கொள்வதில் எந்த தவறும் இல்லை,அவைகளிள் நல்லவற்றை எடுபோம் தீயவற்றை புறகணிபோம்.

15)பத்திரிகை துறை ஆரம்பித்து அதில் பல இறக்கங்களை கண்டு இன்று அவுஸ்ரெலியாவில் சிறந்த பத்திரிகையா உலா வருகிறது தற்போது ஏனையா நாடுகளிற்கும் பத்திரிகை செல்கிறது இது மிகவும் மகிழ்ச்சிகரமான விடயம் மற்றது 1 வருட பூர்த்தி பத்திரிகை ஆரம்பித்து இதுவரை நீங்கள் எதிரி கொண்ட பிரச்சினைகள் மற்றது வெற்றி என்பனவற்றை எங்களுக்கு கூறமுடியுமா?

பத்திரிகை ஆரம்பித்து அதன் வளர்ச்சிகாக சுமார் 6 மாதங்கள் பயங்கர கஷ்டம் இருந்தது ஆனால் முயற்சியை கைவிடவில்லை அத்தோடு வரவெற்பும் இருந்தது என்று சொல்லலாம் மறைமுக தாக்குதலும் இருந்தது அவை எல்லாம் 13 வெளியீட்டை வெளியிடும் இந்த வேளையில் மிகவும் மகிழ்ச்சியாக இருகிறது,எமதுஅனைத்து வாசகர்களிற்கும் மனபூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

16)பத்திரிகையளர் என்ற வகையில் உங்களிற்கு யாரை பிடிக்கும்?

எம் இனதிற்காக உண்மையாக சுயநலமில்லாம போராடுகின்ற அனைவரையும் பிடிக்கும்..........

17)"காதல்" இந்த வார்த்தை தற்போது தாரகமந்திரம் இதை பற்றி உங்கள் பார்வையில்?

காதல் என்பது கற்பை போல் புனிதமானது அதை காதலாக மட்டும் பாவிக்க வேண்டும் தவிர காமத்தை தீர்க்கும் ஆயுதமாக பாவிக்க கூடாது.......

18)"கற்பை" பற்றி குறிபிட்டு இருந்தீர்கள் ஆண்களிற்கும் கற்பு உண்டா இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

நிச்சயமாக பிறர் மனம் நோக்க ஆண்மை வேண்டும் இதை தான் வள்ளுவரும் கூறி இருகிறார் இது தான் ஆண்களின் கற்பு..........

19)நீங்கள் ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் பல விமர்சனங்களுக்கு உட்பட்டு இருப்பீர்கள் இதனை எவ்வாறு எடுத்து கொள்வீர்கள்?நம் சமூகத்தில் பலர் குறைவாக சொன்னா அதனை ஏற்று கொள்ளமாட்டார்கள் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

இது இரண்டையும் நாம் ஏற்று கொள்ளாவிட்டால் பொது சேவையில ஈடுபடமுடியாது எதிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு ஏற்று கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு......

20)யாழ் இணையதளம் பற்றி நீங்கள் கூற விரும்புவது?

தொடர்ந்து 9 ஆண்டுகள் அரிய சேவை செய்து தற்போது 10 வருடத்தை நோக்கி பயணித்து அரிய சேவை ஆற்றி வரும் இவ் இணைதளம் தொடர்ந்தும் எமது சமுதாயத்தில் உள்ள குறை,நிறைகளை பொது மக்களிற்கு எடுத்து கூறுவார்கள் என்று நம்புகிறேன் இந்த முயற்சிக்கு "உதயசூரியன் பத்திரிகை" சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.................. :)

*எனக்கும் எனது பத்திரிகைக்கும் மதிபளித்து யாழிணையம் சார்பாக பேட்டி கண்ட உங்களிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு இவர்களின் பணி மென்மேலும் தொடர வெற்றியடைய வாழ்த்துகள்.................. :)

Edited by Jamuna

வணக்கம் நேயர்களே....................

நம் அழைப்பை ஏற்று கொண்டு பல வேலை பளுவிற்கு மத்தியிலும் கலயதிற்கு வந்து மிகவும் சிந்திக்க கூடியவகையில் பேட்டி அளித்த அவுஸ்ரெலிய தமிழ் பத்திரிகையான உதயசூரியன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான ரத்தினம் அவர்களிற்கு டைகர் வானொலி மற்றும் டைகர்குடும்பம் சார்பாவும் யாழ்கள சார்பாகவும் நன்றிகளை தெரிவித்து கொண்டு.........இன்னும் பல இளம் படைப்பாளிகளை அவுஸ்ரெலியாவில் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் தமிழை அழியாது பாதுக்காக இவர் எடுத்த செயல் தன்மை ஆகியவற்றை பாராட்டுவதுடன் தொடர்ந்து பல நல்ல படைபாளிகளை இவர் உருவாக்கி தரவேண்டும்.......மென்மேலும் உதசூரியன் பத்திரிகை வளர்ச்சி அடைய யாழ்களம் சார்பாக வாழ்த்துகிறோம்.......... :)

அத்துடன் யாழ் இணையத்தின் அவுஸ்ரெலிய வளர்ச்சிக்கு உதயசூரியன் பத்திரிகை தன்னாள் ஆன அனைத்து உதவிகளையும் செய்வதோடு சிறந்த ஆக்கங்களை பத்திரிகையில் இணைப்பதாகவும் சிறந்த ஆக்கங்களை சுண்டல் அண்ணாவும் என்னையும் தெரிவு செய்து தரும்படி கேட்டு கொண்டார் அவரிற்கு மன்பூர்வமான நன்றிகள் யாழ் இணையம் சார்பாக........ :D

இதுவரை நேரமும் நடந்த பேட்டியை கண்டு இரசித்து இருபீர்கள் என்று நினைகிறேன்............மீண்டும் மற்றுமொரு வெள்ளிமாலை பேட்டியில் பல சுவையான அம்சங்களையும் தாங்கி எமது அன்பான கள உறவுகளின் பேட்டிகளையும்,அவுஸ்ரெலிய படைபாளிகளின் பேட்டியையும் சுமந்து வருவோம் என்று கூறி உங்களிடம் இருந்து விடை பெற்று செல்லும் நான் பேபியான ஜம்மு பேபி மற்றும்.சுண்டல் அண்ணா........ :P

பி.கு- அடுத்து வரும் பேட்டிகளின் போது தென்னிந்திய கலைஞர்களான் சின்னதிரை நட்சத்திரங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் பேட்டியும் இடம் பெறும் இதற்கான முயற்சி நடந்து கொண்டிருகிறது.............விரைவில் நீங்கள் கண்டு களிக்கலாம்............... :)

நன்றி :D

டைகர் பமிலி

&

டைகர்வானொலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.