Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா.. தா..

 

தற்செயலாக யூடுபில் பழைய பாடல்களை தேடியபோது இந்த அருமையான பாடல் கிடைத்தது. இதில் என்ன சிறப்பு என்றால் பாடலை ரசித்து சிரிக்கும் செயலலிதா அம்மணி தான்..

ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீது இருந்தாலும், இப்பொழுது இருப்பது மாதிரி தமிழகத்தை வடக்கை அண்டி இருக்க விட்டிருக்க மாட்டார் என்பது மட்டும் திண்ணம்..

அவர் இல்லாதது மனதில் லேசான நெருடலே..!

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ராசவன்னியன் said:

ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீது இருந்தாலும், இப்பொழுது இருப்பது மாதிரி தமிழகத்தை வடக்கை அண்டி இருக்க விட்டிருக்க மாட்டார் என்பது மட்டும் திண்ணம்..

உண்மைதான் அவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்......... எம்ஜிஆர் ஜெயலலிதா அரசியல் காலங்களில் வடக்கு அரசியலுக்கு இடமில்லாமல் தான் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

zikFO67ifRy3fqi6jqQBskzXnET.jpg

‘போன மாசம் ஒரு படம் பாத்தோமே... அது என்ன படம்?’ என்று படத்தின் பெயரையோ, நடிகரின் பெயரையோ, டைரக்டரின் பெயரையோ மறந்து கேட்போம். அப்படியெனில் கதையை? அதைவிட்டுத் தள்ளுங்கள்.

ஆனால் மொத்தக் கதையும் நமக்கு அத்துபடி.‘இந்தப் படம் பாத்துட்டீங்களா?’ என்று ஏதேனும் படம் குறித்துக் கேட்பதில் தவறில்லை. ஆனால் , ‘இந்தப் படத்தைப் பாத்திருக்கீங்களா?’ என்று கேட்டால் சுள்ளென்று கோபமாகிவிடுவார்கள். அந்தக் கேள்வியை அப்படிக் கேட்காமல், ‘எத்தனை தடவை பாத்தீங்க’ என்று கேளுங்கள். குதூகலமாகி, குஷியாக பதில் சொல்லுவார்கள். அந்தப் படம்... காதலிக்க நேரமில்லை.

1964ம் ஆண்டில் வந்த படம். கிட்டத்தட்ட, 55 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் இன்றைக்கும் புத்தம் புதிய காப்பியாக, நம் மனசுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது காதலிக்க நேரமில்லை.

1957ம் வருடம் கல்யாணப் பரிசு படத்தை முதன் முதலாக இயக்கிய ஸ்ரீதர், 60ம் வருடத்தில் மீண்ட சொர்க்கத்தையும் விடிவெள்ளியையும் இயக்கினார். 61ம் வருடம் தேன் நிலவு படத்தைத் தந்தார்.  62ம் வருடத்தில், நெஞ்சில் ஓர் ஆலயத்தையும் போலீஸ்காரன் மகளையும் வழங்கினார். 63ம் ஆண்டு நெஞ்சம் மறப்பதில்லை படத்தைக் கொடுத்தார்.  64ம் வருடத்தில், கல்யாணப்பரிசு, விடிவெள்ளி, மீண்ட சொர்க்கம், தேன்நிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் எப்படியான வெற்றிகளை அவருக்குத் தந்ததோ... அதையெல்லாம் விட பன்மடங்கு வெற்றியை, வசூலை, பெயரை, புகழை, ரசிகர்களை அவருக்குக்கொடுத்த படத்தைத் தந்தார். அதுதான் காதலிக்க நேரமில்லை.

நகைச்சுவைக்காகவே எடுக்கப்பட்ட  முதல்படம் இதுதான் என்பார்கள். நகைச்சுவையும் காதலும் சேர்த்துச் செய்த கலவையாக வந்த படமும் இதுவே என்பார்கள். ஒரு நகைச்சுவை ப்ளஸ் காதல் படம் ஈஸ்ட்மென் கலரில் வெளியான முதல் படமும் இதுதான் என்பார்கள். இந்த நிமிடம் வரை, தமிழ் சினிமாவின்  முதன்மையான நகைச்சுவைப் படம் என்று கொண்டாடிக்கொண்டிருப்பதும் இந்தப் படத்தைத்தான்.

எல்லோருக்கும் தெரிந்த முத்துராமன் இருக்கிறார். எல்லோருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக ரவிச்சந்திரனை அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர். எல்லோர் இதயங்களிலும் நெருங்கியிருக்கும் நாகேஷ் ... சொல்லவா வேண்டும். ஆனால் படத்தின் டைட்டிலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா? டி.எஸ்.பாலையா. நடிப்பில் மகா அசுரனான பாலையாவை, ஸ்ரீதர் அளவுக்கு சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இயக்குநர்கள் மிகவும் குறைவுதான் என்றுதான் சொல்லவேண்டும்.

கலர் படம். அப்படியொரு கலர் படம். டைட்டில் முடிந்ததும் வருகிற என்ன பார்வை... உந்தன் பார்வை... பாடலில், கேமிராவின் பார்வையே நம்மை பிரமிக்க வைக்கும். அந்தக் கால மெரீனாவும் டிரைவர் சீட்டுக்கு எதிரில் முத்துராமனின் முகமும்  தெரியும்படியான காட்சி அமைத்தல் கனகச்சிதம். அப்படித்தான், உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா பாட்டிலும் கூட, காரின் சக்கரத்தில், காஞ்சனாவும் ராஜஸ்ரீயும் தெரிவார்கள். ஸ்ரீதரின் வலதுகரமாகவும் இந்தியாவின் மிக முக்கிய ஒளிப்பதிவு மேதையுமான ஏ.வின்செண்ட்டின் கண் ஜாலம், கை காலம் அவையெல்லாம்!

பாலையா, காஞ்சனா, ராஜஸ்ரீ, நாகேஷ், ரவிச்சந்திரன், அவரின் தந்தை, முத்துராமன், அவரின் தந்தை (வி.எஸ்.ராகவன்), அவரின் தாயார், பாலையாவின் மேனேஜர், மேனேஜரின் மகள் சச்சு, ஆழியாறு, பொள்ளாச்சி, ஊட்டி... அவ்வளவுதான் கதாபாத்திரங்கள். அவர்களைக் கொண்டுதான் அதைக்கொண்டுதான் மொத்த ஆட்டமும் போட்டிருப்பார் ஸ்ரீதர்.

விஸ்வநாதன் வேலை வேண்டும் பாட்டு, அந்தக் கால ஸ்டைலின் ஆரம்பம். தங்கப்பன் மாஸ்டர்தான் டான்ஸ். அப்போது அவருக்கு உதவியாளர் சுந்தரம் மாஸ்டர். பிறகு பல வருடங்கள் கழித்து, தங்கப்பன் மாஸ்டருக்கு  அஸிஸ்டெண்டாக சேர்ந்தவர் கமல் என்பது கொசுறுத் தகவல்.

பாடல் மொத்தமும் கண்ணதாசன். ஒரு பாட்டு தேன், இன்னொரு பாட்டு அல்வா, அடுத்த பாட்டு மைசூர்பா, இன்னொரு பாட்டு பாஸந்தி. எல்லாப் பாட்டுகளும் ஹிட்டு. விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் மெல்லிசை மன்னர்களானது இந்தப் படத்தில் இருந்துதான் என்று சொல்லுவார்கள். டைட்டிலிலும் அப்படித்தான் வரும். பிறகு படத்தின் சில்வர் ஜூப்ளிக்குப் பிறகு விழா எடுத்த போது, அவர்களுக்கு மெல்லிசை மன்னர்கள் பட்டத்தை வழங்கியதாகச் சொல்வார்கள்.

காஞ்சனாவுக்கு அறிமுகப்படம். அவரைக் காதலிக்கும் முத்துராமன், அவருடைய நண்பன் ரவிச்சந்திரன், பாலையாவின் மற்றொரு மகளான ராஜஸ்ரீயைக் காதலிக்க, நண்பனின் காதலுக்காக அப்பா வேஷம், பணக்கார வேஷம் போடுகிறார் முத்துராமன். பணக்காரர், எஸ்டேட் முதலாளி பாலையாவைத் தவிர, வேறு யாரும் இந்தக் கேரக்டரைச் செய்திருக்கவே முடியாது. காதலிக்க நேரமில்லை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்ததற்கு, பாலையாவின் நடிப்பும் பலம் சேர்த்தது.

* இங்கிலீஷ் படம் மட்டும்தான் பாப்போம்.

*பணத்திமிர். இந்தப் பணக்கார வர்க்கத் திமிரை ஒடுக்கறதுக்காகவே ஒரு படம் எடுக்கிறேன்.

* பெட்ரோலுக்கு காசு வாங்கிட்டு, கம்பெனி கார்ல வரக்கூடாது.

* கம்பெனி டிரஸ்ஸை எடுத்துட்டு வீட்டுக்குப் போகக் கூடாது.

*யார் கேட்டாலும் படிச்சது அஞ்சாவதுன்னு சொல்லக்கூடாது. கான்வெண்ட்டுன்னு சொல்லணும், அப்பதான் கம்பெனிக்கு மரியாதை.

* பணம் இருக்கட்டும் சார். கலைக்காக சேவை செய்ய ஆசைப்படுறேன்.

* அதை இப்ப சொல்லாதே. உன்னை வைச்சு படம் எடுத்து ஓட்டாண்டியாகி, அடுத்த படம் எடுக்க உங்கிட்ட வருவான் பாரு. அப்ப சொல்லு.

* அசோகர்... உங்க  மகருங்களா..?

அடேங்கப்பா... இன்னும் சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

முத்துராமன் போனில் பேசிச் சிரிப்பார். போனை வைப்பார். பக்கத்தில் உள்ள பாலையாவும் சிரிப்பார். சம்பந்தி எதுக்குச் சிரிச்சீங்க என்பார். அவரு ஹாஸ்யமா ஏதோ சொன்னார் என்பார் முத்துராமன். ஹாஸ்யமாவா... என்று இன்னும் பலமாகச் சிரிப்பார் பாலையா. பலேய்யா!

இயக்குநர் தாதா மிராஸி தெரியும்தானே. புதிய பறவையெல்லாம் இயக்கினாரே. அவர் கதை சொல்லும் ஸ்டைலை வைத்துதான், பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் சீன் எடுக்கப்பட்டது என்பார்கள். அந்தக் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் சிரிக்கலாம். ரசிக்கலாம். வியக்கலாம்.

இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது முடியாது என்று சொல்லிவிட்டாராம் சச்சு. கதாநாயகியாக நடிப்பதுதான் லட்சியம். நகைச்சுவை நடிகையாக வேண்டாமே என்றாராம். ஆனால் ஸ்ரீதர், கதை குறித்தும் கேரக்டர் குறித்தும் விவரமாகச் சொல்லவே ஒத்துக்கொண்டார். ‘நான் நடிக்க ஒத்துக்கிட்டதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. இதுதான் நான் நடிச்ச முதல் கலர்படம்’ என்று சொல்லிப் பூரிக்கிறார் சச்சு.

ஸ்ரீதரும் கோபுவும் இணைந்து கதை வசனம் பண்ணியிருப்பார்கள். காமெடி படத்துல லாஜிக்கெல்லாம் பாக்கக்கூடாது என்று இன்றைக்கு சப்பைக்கட்டு கட்டுகிறோம். ஆனால், ஓர் காமெடிக்கதைதான் என்றபோதிலும் லாஜிக்கை எந்த இடத்திலும் மீறியிருக்க மாட்டார் ஸ்ரீதர்.

ஸ்ரீதர் வந்த பிறகுதான் டைரக்டர்கள் பக்கம் ரசிகர்களின் கவனம் போயிற்று. ஸ்ரீதர் வந்த பிறகுதான், முக்கோணக் காதல் கதை என்பது உருவாயிற்று. ஸ்ரீதர் வந்த பிறகுதான், பேச்சு வழக்கு ஸ்டைலில், தமிழ் சினிமாவின் வசனங்கள் வரத்தொடங்கின.  அதில் முழு முதல் கலர் காமெடி, காதல் காதலிக்க நேரமில்லைக்கு வெகு நிச்சயமாக தனித்த இடம் உண்டு.

பல முறை பார்த்திருக்கிறேன். பதினெட்டு வருடங்களுக்கு முன்பு புத்தம் புதிய காப்பி என்று வெளியிட்ட போது, முதல் நாள் இரவுக்காட்சி, அடுத்த நாள் இரவுக்காட்சி, மூன்றாம் நாள் இரவுக்காட்சி என்று பார்த்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. டிவியில் ஒளிபரப்பும் போதெல்லாம் வேறு எந்தவேலையோ போன் பேசுவதோ இல்லாமல், ரசித்துச் சிரித்து, பார்க்கிறவர்கள் எத்தனையோ பேர் உண்டு.

கதை, கதையை விரிவாக்குகிற திரைக்கதை, அந்தத் திரைக்கதைக்கு வலு சேர்க்கிற வசனங்கள், பாடல்கள், பாலையாவும் நாகேஷூம் உடல்மொழியாலும் வசன உச்சரிப்புகளாலும் தனிக்கவனம் ஈர்த்த அசகாயத்தனம், முத்துராமனின் யதார்த்த நடிப்பு, காஞ்சனா, ராஜஸ்ரீயின் அழகு ப்ளஸ் நடிப்பு, அந்த சச்சுவின் அப்பாவின் அப்பாவித்தனம் (நாளைக்கே கல்யாணமா? எனக்குப் பட்டுச்சட்டை வாங்கணும், வேட்டி வாங்கணும்), ரவிச்சந்திரனின் இளமைத்துள்ளல், சச்சுவின் அழகு, கேமிரா, இசை, இயக்கம் என்று இன்னும் எத்தனை நூற்றாண்டுளானாலும் காதலிக்க நேரமில்லையை... நெஞ்சம் மறக்கவே மறக்காது!

ஆமாம்... காதலிக்க நேரமில்லை படத்தை நீங்கள் எத்தனை முறை பார்த்திருக்கிறீர்கள், ஞாபகம் இருக்கிறதா?

காமதேனு

 

('நான் ஒரு ஐம்பது தடவைக்கு மேல் பார்த்திருப்பேன்..! இப்படத்தின் வசனங்கள் அனைத்தும் அத்துபடி'  -  ராசவன்னியன்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் ஒரு தடவைகூடப் பார்க்கவில்லை.

 

நேற்று காதலிக்க நேரமில்லை படத்தைப் பற்றிய குறிப்பை  நானும் வெட்டி ஒட்டியிருந்தேன்.😀

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
53 minutes ago, கிருபன் said:

இன்னும் ஒரு தடவைகூடப் பார்க்கவில்லை.

முதல்ல அந்தப் படத்தை பாருங்கள்.. ஐயா..!

எந்தவித விரசமுமில்லாத, மிக இனிமையான பாடல்களைக் கொண்ட படத்தை பார்க்காதவர்கள், இன்றைய தலைமுறை ஆட்களாகத்தான் இருப்பார்கள்!

53 minutes ago, கிருபன் said:

நேற்று காதலிக்க நேரமில்லை படத்தைப் பற்றிய குறிப்பை  நானும் வெட்டி ஒட்டியிருந்தேன்.😀

 

நீங்கள் இணத்த பதிவை நான் பார்க்கவில்லை ஐயா, மன்னிக்கவும்.

Edited by ராசவன்னியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

முதல்ல அந்தப் படத்தை பாருங்கள்.. ஐயா..!

எந்தவித விரசமுமில்லாத, மிக இனிமையான பாடல்களைக் கொண்ட படத்தை பார்க்காதவர்கள், இன்றைய தலைமுறை ஆட்களாகத்தான் இருப்பார்கள்!

யூரியூப்பில் உள்ளதுதானே.  விரைவில் பார்க்கின்றேன்😀

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றும் ஒருமுறை முழுமையாக பார்த்து ரசித்தேன்.. பாடல்கள் அத்தனையும் இனிமை..!

அதிலும் "நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா.. தா.." இன்னமும் தாளம் போட்டு இதயத்தை வருடும் பாடல்..



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதேதான்... நொச்சி.  வந்த வேலையில்...பலதை  முடித்து விட்டார்.  இன்னும்  மிஞ்சி இருக்கிறதையும்... "வெட்டி சாய்ப்பம்" என்று புறப்பட்டு விட்டார். அண்மையில், யாழ்ப்பாணத்தில் சிறீதரனின் வீட்டில்...  கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், செல்வராஜா கஜேந்திரனும்  சந்தித்தித்தமையும்...  சுமந்திரனுக்கு... "வயிற்று எரிச்சலை" ஏற்படுத்தி இருக்கும்.  அதை குழப்ப வேண்டுமென்றால்... இப்போ மாகாணசபை மூலமாக உள்ளே வந்துதான்  ஆகவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார் போலுள்ளது.
    • மாடு உழும் என்பதெல்லாம் சரிதான். ஆனால் பழைய கலப்பையை வைத்து என்ன செய்வதாக உத்தேசம்?   😉
    • தமிழ்சிறியவர்களது கருத்தே இதற்கான பதிலாகப் பொருந்திப்போகிறது.  உலகவல்லாதிக்க சக்திகள் தமது இருப்பிற்காக மக்களைக்கொன்றொழித்து, வளங்களை சுரண்டிப்பெருத்துவருகின்றன. அணுஆயுதம் வைத்திருப்பதாகக் கூறி ஈராக்கினுள் புகுந்து எதைச்செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். குர்துகளைக் கொன்றதாக சதாமைத் தூக்கில்போட்ட இவர்களால், மகிந்தவையோ மற்றும் நெத்ன்யாகுவையோ அப்படிச் செய்ய முடியுமா? சீனாவில் சிறுபான்மைகள் நசுக்கப்படுவதாகக் கூப்பாடு. ஏன் காஸா அழிவைத் தடுக்காது பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பல தொடர்கள் உள்ளன. இதுவரை ஆதிக்கசக்திகளுக்குப் பயங்கரவாதிகளாகத் தெரிந்தோரை வைத்து மற்றொரு ஆதிக்கசக்தியை வீழ்த்தியுள்ளனர். இதிலே நாடு எப்படியாக வேண்டும் என்பது மக்களின் முடிவு.   நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கையில் மாற்றம்!   சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை திங்கட்கிழமை(9) முதல் இரண்டு லட்சமாக அதிகரிக்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான தென்னந்தோப்புக் காணிகளிலுள்ள தேங்காய்கள் சதொச ஊடாக விற்பனை செய்யப்படுவதாகவும், கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் சதொச நிறுவனத்திடமிருந்து தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிடுகிறது. (ச)     https://newuthayan.com/article/சதொச_ஊடாக_விற்பனை_செய்யப்படும்_தேங்காய்களின்_எண்ணிக்கையில்_மாற்றம்!  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.