Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்புக் கடவை அமைக்கக் கோரி -கிளிநொச்சி மக்கள் போராட்டம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்புக் கடவை அமைக்குமாறு கோரி, கிளிநொச்சி 155 ஆம் கட்டை சந்தியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவைக்கு முன்பாக பிரதேச மக்களால் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Protest-4to-22.png?zoom=0.90249998867511Protest-4to-1.png?zoom=0.902499988675117Protest-4to-15.png?zoom=0.90249998867511Protest-4to-16.png?zoom=0.90249998867511Protest-4to-19.png?zoom=0.90249998867511

இதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து சுமார் 1 மணிநேரம் தாமதித்தே பயணத்தைத் தொடர வேண்டி ஏற்பட்டது.

போராட்டத்தை மேற்கொண்ட மக்களை கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றம் தொடருந்துத் திணைக்கள அதிகாரிகள் சந்தித்தனர்.

ஒலியுடன் கூடிய பாதுகாப்பு வெளிச்சத்தை அமைத்து பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொண்டு தருவதாக கூறியதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

மின்னால் இயங்கும் பாதுகாப்புக் கடவையை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். குறித்த கோரிக்கையை எழுத்து மூலமாக வழங்குமாறும், தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தொடருந்துது் திணைக்கள அதிகாரிகள் கூறினர். வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட மக்கள் அதன் பின்னர் தமது போராட்டத்தை கைவிட்டனர்.

https://newuthayan.com/story/09/பாதுகாப்புக்-கடவை-அமைக்க.html

 

  • கருத்துக்கள உறவுகள்

அநியாய உயிரழப்புகள் தடுக்கப்படவேண்டும்.
மக்களின் போராட்டம் வெற்றி பெறவேண்டும், விரைவில் பாதுகாப்பு கடவை அமையட்டும்.

5 hours ago, பிழம்பு said:

.

மின்னால் இயங்கும் பாதுகாப்புக் கடவையை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். குறித்த கோரிக்கையை எழுத்து மூலமாக வழங்குமாறும், தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தொடருந்துது் திணைக்கள அதிகாரிகள் கூறினர். வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட மக்கள் அதன் பின்னர் தமது போராட்டத்தை கைவிட்டனர்.

https://newuthayan.com/story/09/பாதுகாப்புக்-கடவை-அமைக்க.html

 

மின்னால் இயங்கும் பாதுகாப்பு கடவை என்றால் என்ன? தானியங்கி கடவையா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

.மின்னால் இயங்கும் பாதுகாப்புக் கடவையை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். குறித்த கோரிக்கையை எழுத்து மூலமாக வழங்குமாறும், தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் தொடருந்துது் திணைக்கள அதிகாரிகள் கூறினர். வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட மக்கள் அதன் பின்னர் தமது போராட்டத்தை கைவிட்டனர்.

https://newuthayan.com/story/09/பாதுகாப்புக்-கடவை-அமைக்க.html

 

தானியங்கி கடவையை இயக்க எவரும் தேவையில்லை. மனிதர் இயக்கும் கடவையை இயக்கும் இருவருக்கு கிடைக்க கூடிய வேலை வாய்ப்பு இல்லாமல் போகிறது. மின்சாரம் தடைப்படும் நாட்களில் கடவை திறந்து இருக்கும். அதை நம்பி இரயில் வராது என்று கடப்பவர்கள் இறப்பது நிச்சயம். மனிதர் இயக்கும் கடவையை இந்த ஆர்ப்பாட்டம் செய்தவர்களே செய்து பூட்ட முடியும். நாளைக்கு கூட கடவை அமைக்க படலாம். மின்சார கடவைக்கு இனி அனுமதி கிடைத்து பணம் ஒதுக்கி, ரெண்டர் கோரி, கடவை செய்து கொண்டுவர எவ்வளவு நாளாகும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.