Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத்துல அதிகமாக பயன்படுத்தற இமோஜி எது தெரியுமா ? அதோட அர்த்தங்கள் என்ன தெரியுமா.?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உலகத்துல அதிகமாக பயன்படுத்தற இமோஜி எது தெரியுமா ? அதோட அர்த்தங்கள் என்ன தெரியுமா.?
 
cover-1564133340.jpg

வாட்ஸ்அப் ஆக இருக்கட்டும்; ஃபேஸ்புக்காக இருக்கட்டும், இமாஜி பயன்படுத்தப்படாத உரையாடலே இல்லை எனலாம். ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் செய்திகளில் உணர்வை வெளிப்படுத்த பல்வேறு இமோஜிகளை உபயோகிக்கிறோம். ஜூலை மாதம் 17ம் தேதி, உலக இமோஜி தினம்
கொண்டாடப்படுகிறது.

தெரியுமா ?
 
உலகத்துல அதிகமாக பயன்படுத்தற இமோஜி எது தெரியுமா? அதோட அர்த்தங்கள் என்ன தெரியுமா? நாம் பயன்படுத்தும் இமோஜிகளுக்கு என்ன அர்த்தம் என்பது குறித்து தான் இந்த கட்டுரையில் உங்களிடம் பட்டியலிட்டுக் காட்டுகிறோம். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
 

இவர்தான் உருவாக்கினார்

இமோஜியை முதன்முதலாக யாஹூ மெசஞ்ஜர் தான் பயன்படுத்தியது. 2010ம் ஆண்டுதான் மொபைல் போன்களில் இமோஜி பிரபலமானது. ஜப்பானிய அலைபேசி சேவை நிறுவனமான என்டிடி டொமோக்காவில் பணியாற்றிய ஷிமேடாகா குரிடா என்ற எஞ்ஜினியர்தான் 1998ம் ஆண்டில் இமோஜிகளை உருவாக்கினார்.

இமோஜியும் அனுமதியும்
 
ஆண்டுதோறும் யூனிகோடு கான்சார்ட்டியம் என்ற அமைப்பு அனுமதிக்கப்பட்ட இமோஜிகள் அடங்கிய பட்டியலை வெளியிடுகிறது. அனுமதிக்கப்பட்ட இமோஜிகளை ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற இயங்குதளங்கள் தங்கள் பயன்பாட்டில் அறிமுகம் செய்கின்றன. ஆப்பிள், ஃபேஸ்புக், கூகுள், டிவிட்டர், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் டின்டர் உள்ளிட்ட நிறுவனங்களின் உறுப்பினர்கள் யூனிகோடு கான்சார்டியத்தில் உள்ளனர். அவர்கள் அளிக்கும் வாக்குகளின்பேரிலே இமோஜிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
 
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் இமோஜி
 
இந்தியாவில் முத்தத்தை ஊதிவிடும் இமோஜியும் ஆனந்த கண்ணீர் விடும் இமோஜியும் ஸ்மார்ட்போன் உரையாடல்களில் அதிக பிரபலம் என்று பாப்பில் ஏஐ அறிக்கை கூறுகிறது. டிவிட்டர்களில் பயன்படுத்தப்படும் இமோஜிகளை இமோஜிடிரக்கர் கண்காணிக்கிறது.

அதிகம் பயன்படுத்தப்படும் 10 இமோஜிகள்:

 
1. ஆனந்த கண்ணீர் விடும் முகம் :
😂
கண்களில் கண்ணிர் வர படுபயங்கரமாக சிரிக்கும் இமோஜி, யாராவது வேடிக்கையானவற்றை, சங்கடமானவற்றை செய்யும்போது அல்லது கூறும்போது வியப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
 
2. இதயங்களை கண்களாக்கி புன்னகைக்கும் முகம் :
😍
கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் இதயங்கள் இருக்கும்; வாய் சிரித்துக்கொண்டிருக்கும். இந்த இமோஜி அன்பு, வாஞ்சை, மதிப்பு ஆகியவற்றை தெரிவிக்க பயன்படுகிறது.

3. சிந்திக்கும் முகம் :

🤔

ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோன்ற இமோஜி, யாரையாவது அல்லது எதையாவது குறித்து வினா எழுப்பும் தருணத்தில் பயன்படுத்தப்படுகிறது.
 
4. குவிந்த கரங்கள் :
🙏
பிரார்த்தனை செய்வது போன்று இருகரம் கூப்பிய இமோஜி, ஜப்பானிய பண்பாட்டின்படி தயவுகூர்ந்து என வேண்டுவதற்கும், நன்றி தெரிவிக்கவும் பயன்படுகிறது.
 
5. தட்டும் கைகள் :
👏

வெற்றியை, திறமையை அல்லது சாதனையை பாராட்டும்படியாக கை தட்டல் இமோஜி பகிரப்படுகிறது.

6. முத்தத்தை ஊதிவிடுதல்:
😘
முத்தமிடுவதுபோல உதடுகளை குவித்து, இதயமொன்றை ஊதிவிடும் ரொமான்ஸ் இமோஜி, பெரும்பாலும் காதலை தெரிவிக்க பயன்படுகிறது.

7. கட்டைவிரல் உயர்த்துதல் :
👍
ஆமாம்' என்பதை குறிக்கும் வண்ணம் கட்டை விரல் உயர்த்தி காட்டும் இமோஜி பொதுவாக 'திருப்திகரம்' என்பதை தெரிவிக்க பயன்படுகிறது.

8. கூலிங்கிளாஸ் அணிந்து புன்னகைத்தல் :
😎

கறுப்பு நிற கண்ணாடி அணிந்து புன்னகைக்கும் முகமாகிய இமோஜி, 'நலமே' என்பதை காட்டும் டேக் இட் ஈஸி முகமாகும்.

9. நாணும் முகம் :
☺️
சிரிக்கும் கண்கள், புன்னகைக்கும் முகம், கன்னங்களில் இளஞ்சிவப்பு (ரோஜா வண்ணம்) கொண்டிருக்கும் இமோஜி, சந்தோஷம் போன்ற நேர்மறை எண்ணங்களை குறிப்பதாகும்.
 
10. எதிர்பாராத வியப்பை காட்டும் முகம் :
😯
எதிர்பாராத வண்ணம் 'நல்லது' அல்லது 'கெட்டது' நடைபெற்று விட்டது என்பதை காட்டுவதற்கு வியப்பு அல்லது ஆச்சரியத்தை வெளிக்காட்டும் முகமான இமோஜி பயன்படுத்தப்படுகிறது.

 https://tamil.boldsky.com/insync/pulse/the-most-popular-emojis-and-their-meanings/articlecontent-pf190572-025926.html
 

டிஸ்கி :

DjHF4BbUwAAZJj-.jpg

தமிழ் நல் உலகிற்காக கழுவி ஊத்துற ஸ்மைலி சேர்த்து விட்டால் வசதியாக இருக்கும்.. 😄

memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9zZW5


 என்னுடைய சிந்திக்கும் படத்தை பார்த்துதான் சிந்திக்கும் ஸ்மைலி உருவானதாக  பகிடி துணை தலைவர்  செந்தில் ஒரு பேட்டியில் கூறி இருந்தமை குறிப்பிடதக்கது. !🤔🤔


 

 
 

 
  • கருத்துக்கள உறவுகள்
On 7/27/2019 at 8:33 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:
6. முத்தத்தை ஊதிவிடுதல்:
😘
முத்தமிடுவதுபோல உதடுகளை குவித்து, இதயமொன்றை ஊதிவிடும் ரொமான்ஸ் இமோஜி, பெரும்பாலும் காதலை தெரிவிக்க பயன்படுகிறது.

இந்த சிமைலியை  தவிர, மிச்ச  எல்லா சிமைலிகளையும்  நான் பாவித்து இருக்கின்றேன். :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/27/2019 at 8:33 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:
6. முத்தத்தை ஊதிவிடுதல்:
😘
முத்தமிடுவதுபோல உதடுகளை குவித்து, இதயமொன்றை ஊதிவிடும் ரொமான்ஸ் இமோஜி, பெரும்பாலும் காதலை தெரிவிக்க பயன்படுகிறது.

  கோதாரி விழ நான் உந்த ஸ்மைலியின்ரை விசயம் தெரியாமல் இஞ்சை ஒராளுக்கு அனுப்பிவிட்டன்.அதுக்குப்பிறகு என்னை திரும்பியும் பாக்கிறேல்லை.கலோவும் சொல்லுறேல்லை...😙

  • 4 weeks later...
On 8/3/2019 at 4:02 PM, தமிழ் சிறி said:

இந்த சிமைலியை  தவிர, மிச்ச  எல்லா சிமைலிகளையும்  நான் பாவித்து இருக்கின்றேன். :grin:

சிறி இந்த 😘முத்தத்தை ஊதிவிடுவதில் உங்களைப்போல்  எனக்கும் ஆர்வம் இல்லை. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

நேரில் முத்தமிட தயங்குபவர்களுக்காகத்தான் அந்த சிமைலி........!   😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

சிறி இந்த 😘முத்தத்தை ஊதிவிடுவதில் உங்களைப்போல்  எனக்கும் ஆர்வம் இல்லை. 

உண்மைதான்... ருல்பன், நேரில் கட்டிப் பிடித்து, இரண்டு கன்னத்திலிலும்....
எச்சில் பட... முத்தம் கொடுப்பதில்,  உள்ள இன்பம்... அலாதியானது.     :grin:

சும்மா.... தூர  இருந்து கொண்டு, இந்த ð  முத்தம் கொடுப்பது, மினக்கெட்ட வேலை. 🤑
அப்படியான...  கொள்கையில், நீங்களும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 🤣

Edited by தமிழ் சிறி

  • 10 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமோஜிக்களுக்கு அளவே இல்லையென்றாலும் அர்த்தம் வேண்டாமா?

960x0.jpg

2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் எழுதிவிட்டு சென்ற வரியை இப்போது நினைத்து பார்த்தாலும் ஆச்சிரியம் தருகிறது. ”கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனு மில” இதுதான் இன்றைய தொழில்நுட்ப உலகின் நிலை.

பார்வையே போதும் வாய்மொழி வேண்டாம் என்ற காலம் போய், எமோஜியே போதும் என்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். காதலை சொல்ல, வேண்டாம் என மறுக்க, சாப்பிட்டாச்சா என கேட்க, ‘மிஸ் யூ’வில் ஆரம்பித்து ‘கிஸ் யூ’ வரை, எல்லாமே தற்போது எமோஜி மயம் தான். எமோஷன்களுக்கும், வார்த்தைகளுக்கும் எமோஜி மட்டும் தான் பதில்.

எமோஜிகள் வருவதற்கு முன்னர், கீபோர்டில் இருக்கும் குறிகளே நமக்கு கைக் கொடுத்து கொண்டிருந்தனர். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டில் முதன்முதலாக மொபைல்களில் எமோஜி யூசேஜ் அறிமுகப்படுத்தப்பட்டது.

கண்ணில் பட்டவையெல்லாம் சினிமாவாக மாற்றும் ஹாலிவுட்டின் கைகளில் இருந்து எமோஜிக்களும் தப்பவில்லை. எமோஜிக்களை வைத்து திரைப்படம் ஒன்றையே வெளியிட்டு இருக்கிறார்கள்.

கணக்கிட்டு பாருங்கள் ஒருநாளைக்கு நீங்கள் சராசரியாக எத்தனை எமோஜிக்களை உங்கள் உள்ளம் கவர்ந்தவர்களுடன் பகிறீர்கள். காதலி, ஃப்ரண்ட்ஸ், அம்மா, அப்பா, பாஸ், அலுவல குரூப் என நீங்கள் பயன்படுத்தும் எமோஜிக்களுக்கு அளவே இல்லையென்றாலும் அர்த்தம் வேண்டாமா?

இன்று நாடு முழுவதும் உலக எமோஜி தினம் கொண்டாடப்படுகிறது அந்த வகையில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் எமோஜிக்களின் அர்த்தங்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

love.png

காதலனுக்கோ, காதலிக்கோ வைரத்தை பரிசாக அளிக்க வேண்டாம். வைரம் பதித்த இந்த இதயத்தை அனுப்பினாலே போதும்.

Angry-300x300.png

கடும் கோபம். உங்களை கோவப்பட வைத்த எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இந்த எமோஜி பயனளிக்கும்.

 laugh-128x128.png

அழறப்போ மட்டும்தான் கண்ணுல தண்ணி வருமா? செம ஜோக் ஒண்ணைக் கேட்கும்போதுகூட சிரிச்சு சிரிச்சு கண்ணீர் வரும்ல… அப்போ தட்டுங்க இந்த எமோஜியை!

shock-128x128.png

எந்த ஒரு விஷய்த்தையும் பிளான் பண்ணி பண்ணனும் அப்படி பண்ணியும் சொதப்பிச்சுனா இப்படி தான் ஷாக் ரியாக்‌ஷனை தட்ட வேண்டும்.

face-palm-300x300.png

‘என்ன கொடுமை சார் இது?’ என்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டுமா? உங்களுக்காகவே இந்த எமோஜி. அடக் கண்றாவியே என்றுக் கூட தலையில் அடித்துக்கொள்ளலாம் அது உங்கள் விருப்பம்.

shy.png

வெட்கம். உங்களை யாராவது வெட்கப்பட வைத்தால் அல்லது காதலில் வெட்கப்பட்டு கன்னம் சிவந்தால், அவர்களுக்கு இந்த எமோஜி கொண்டு பதில் கூறுங்கள்.

fed-up.png

‘சும்மா கடுப்ப கிளப்பாத’ என்று சொல்லாமல் சொல்லும் எமோஜி இது. நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தால் செம்ம கடுப்பில் இருந்தால் இந்த எமோஜி போட்டு மெச்சேஜ் அனுப்புங்கள்.

https://tamil.indianexpress.com/lifestyle/emoji-day-world-emoji-day-emoji-meaning/

டிஸ்கி :

இன்று சர்வதேச இமோஜி தினம்..👍 உங்களில் யார் யாழ் கள இமோஜிக்களை முழுவதும் பயன்படுத்தியது.. ரெல்..மீ..!😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
On ‎04‎-‎08‎-‎2019 at 00:19, குமாரசாமி said:

  கோதாரி விழ நான் உந்த ஸ்மைலியின்ரை விசயம் தெரியாமல் இஞ்சை ஒராளுக்கு அனுப்பிவிட்டன்.அதுக்குப்பிறகு என்னை திரும்பியும் பாக்கிறேல்லை.கலோவும் சொல்லுறேல்லை...😙

அது யாராய் இருக்கும்🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

அது யாராய் இருக்கும்🤔

பேரை நான் சொல்ல அது வேறை பிரச்சனையாய் போயிடும்.சோலி வேண்டாம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

அது யாராய் இருக்கும்🤔

குமாரசாமி... அண்ணருக்கு, 
பரிமளம் தான்... கண்ணுக்குள்ளை நிக்கிற ஆள்.... ரதி.😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி... அண்ணருக்கு, 
பரிமளம் தான்... கண்ணுக்குள்ளை நிக்கிற ஆள்.... ரதி.😃

Vadivelu Feeling GIF - Vadivelu Feeling FeelingIt - Discover ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.