Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிய ஆண­ழகன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ராஜகுமார்

Featured Replies

சீனாவில் இடம்பெற்ற “ஆசிய ஆண­ழகன் சாம்பியன்ஷிப்  2019” போட்டியில் மலையக இளைஞர் மாதவன் ராஜகுமார் மூன்றாம் இடத்தைப்பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.

67512641_2264507043633573_61282342375910

53 வது ஆசிய ஆண­ழகன் சாம்பியன்ஷிப்  போட்டியில் இலங்கை சார்பில் பாங்கேற்ற நுவரெலியா கொண்டகளை தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் இறுதிப் போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை தனதாக்கிக் கொண்டார்.

ஆரம்பம் முதலே தனது கடுமையான முயற்சிகளுடன் பயணித்துவந்த ராஜகுமாருக்கு ஏராளமானோர் உதவி செய்துவந்தனர். இந்நிலையில் தனது விடாமுயற்சியில் 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

கடந்த ஆண்டு நேபா­ளத்தின் தலை­நகர் காத்­மண்­டுவில் நடை­பெற்ற தெற்­கா­சிய உடற்­கட்­ட­ழகர் போட்­டியில் மலையகத்தின் ராஜ­கு­மாரன் தங்கப் பதக்­கத்தை வென்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/61416

 

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் ராஜகுமார்.....!  👍

  • தொடங்கியவர்

Mr World இராஜேந்திரன் மணி

வறுமையை வென்று, தோல்விகளைக் கடந்து விடாமுயற்சியுடன் உழைத்துத் தமிழனின் வீரப் பெருமையை உலகம் அறியச் செய்த Mr World இராஜேந்திரன் மணி அவர்களின் எழுச்சிமிக்க சாதனைப் பயணம். ஒரு சாதரணக் குடும்பத்தில் பிறந்து, வறுமையின் பிடியில் வளர்ந்த இராஜேந்திரன் மணி, சாதிக்கும் கனவுடன் சிறு வயதிலேயே தனது முழு முயற்சியுடன் ஈடுபடத் தொடங்கினார். பல இன்னல்கள் மத்தியிலும் சாதிக்கும் கனவை மட்டும் கைவிடாது, சாதனைப் பயணத்தைத் தொடங்கினார். பல மாநிலங்கள் கடந்து இந்திய விமானப் படையில் தனது பணியைத் தொடங்கினார். தனது விடாமுயற்சியின் விளைவாக Mr. World, Mr. Asia, Mr. India, Indian Services Champion ஆகிய பட்டங்களைத் தட்டிச் சென்றார். இக்காணொளியில் இராஜேந்திரன் மணி தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் எல்லாத் துறையினரும் விடாமுயற்சி இருந்தால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார். கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

30 நாடுகளை சேர்ந்தவர்களுடன், சீனாவில் போட்டியிட்டு...
வெண்கலப் பதக்கத்தை வென்ற, ராஜ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

ராஜகுமாரனுக்கு கௌரவிப்பு நிகழ்வு

 

image_54eb225493.jpg53ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் வெங்கல பதக்கத்தை வெற்றிக்கொண்ட மலையக இளைஞன் ராஜகுமாரனை கௌரவிக்கும் நிகழ்வு  சி.எல்.எப் வளாகத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், ராஜகுமாரன் மாலை மற்றும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கௌவிக்கப்பட்டார்.

இதன்போது, நவம்பர் மாதம் 11ஆம் திகதி உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்கவுள்ள ராஜகுமாரன், டுபாய் செல்வதற்கான அனைத்து செலவுகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜா, பிரதி பொதுச்செயலாளர் ஜுவன் தொண்டமான், பரத் அருள்சாமி, கொட்டக்கலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் இ.தொ.கா உறுப்பினர்கள் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

சீனாவின் ஏப் இன் நகரில் நடைபெற்ற 53 ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் 60 கிலோகிராம் எடை பிரிவில் ராஜகுமாரன் வெண்கல பதக்கத்தை அண்மையில் பெற்றுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், டுபாயில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச ஆணழகன் போட்டியில் பங்குப்பற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilmirror.lk/மலையகம்/ராஜகுமாரனுக்கு-கௌரவிப்பு-நிகழ்வு/76-236234

  • கருத்துக்கள உறவுகள்

rajkumar.jpg

உதவி செய்தால் நிச்சயம் உலகிலும் சாதித்து காட்டுவேன் – ஆணழகன் ராஜ்குமார்

உலக உடற்கட்டழகு போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதிலும் பதக்கம் வென்று இலங்கைக்கும், மலையகத்துக்கும் பெருமையை தேடிக் கொடுப்பேன் என ஆசிய ஆணழகன் போட்டியில் வெண்லகப் பதக்கத்தை வென்ற மாதவன் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அங்கு செல்வதற்கு யாராவது முன்வந்து உதவி செய்தால் நிச்சயம் நான் சாதித்து காட்டுவேன் என்றும் அவர் கூறினார்.

53ஆவது ஆசிய ஆணழகன் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெற்ற வெற்றிக் குறித்து ராஜ்குமார் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இவ்வருட இறுதியில் டுபாயில் நடைபெறவுள்ள உலக உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதிலும் பதக்கமொன்றை வென்று இலங்கைக்கும், மலையகத்துக்கும் பெருமையை தேடிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு. ஆனால், அதற்கான செலவுகளை செய்வதற்கு என்னிடம் பணம் இல்லை. அதற்கு யாராவது முன்வந்து உதவி செய்தால் நிச்சயம் நான் சாதித்து காட்டுவேன்.

அதேபோல, என்னுடைய இலக்கு மிஸ்டர் ஒலிம்பியாட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றுவதாகும். அந்த இலக்கையும் என்னால் அடைய முடியும் என்ற நம்பிக்கை உண்டு. அதற்கு பணம் தான் தேவை. எனவே, இந்த விளையாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு எனக்கு அனுசரணையாளர்கள் கிடைத்தால் நிச்சயம் சாதிப்பேன்.

எனது பெற்றோரின் தொழில் மற்றும் வருமானத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விளையாட்டு. ஆனாலும், மலையகத்தில் பிறந்த ஒரு தமிழனாக நிச்சயம் சாதித்து காட்டுவேன்” என கூறினார்.

தனது 15ஆவது வயதில் இருந்து உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றி வருகின்ற ராஜகுமார், நுவரெலியா மாவட்டம், லபுக்கலை தோட்டம் கொண்டகலை பிரிவை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். 23 வயது கொண்ட இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

தற்போது இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருகின்ற இவர், கடந்த வருடம் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய உடற்கட்டழகர் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

மேலும், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

அதன்பிறகு, தேசிய மட்டத்தில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட உடற்கட்டழகர் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்ற அவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய உடற்கட்டழகர் போட்டியில் 55 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதனைத்தொடர்ந்து 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கனிஷ்ட மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டியில் சம்பியனாகவும் தெரிவானார்.

இந்நிலையில் சீனாவின் ஹேர்பின் நகரில் கடந்த 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெற்ற 53ஆவது ஆசிய ஆணழகன் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் மூன்றாவது நாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவிலும், 23 வயதுக்குட்பட்ட கனிஷ்ட சம்பியன்ஷிப் போட்டிப் பிரிவிலும் களமிறங்கிய ராஜ்குமார், பலத்த போட்டிக்கு மத்தியில் மூன்றாவது இடத்தைப் பெற்று இலங்கைக்கான முதலாவது பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

இறுதிப் போட்டியில் 30இற்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றியிருந்ததுடன், பலத்த போட்டியைக் கொடுத்து அவர் இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/உதவி-செய்தால்-நிச்சயம்-உ/

  • கருத்துக்கள உறவுகள்

பதக்கம் வென்­று நாடு திரும்பிய ராஜ்­குமாரிற்கு தேநீர் கோப்­பையை பரி­ச­ளித்­த விளையாட்டுத்துறை அமைச்சு

சீனாவில் இடம்­பெற்ற 53 ஆவது ஆசிய ஆண­ழகர் போட்­டியில் இலங்­கையை பிர­தி­நி­தித்­துவம்  செய்து போட்­டி­களில் பங்­கு­பற்­றிய புசல்­லா­வைப்­ ப­கு­தி­யைச் சேர்ந்த மாதவன் ராஜ்­குமார் மூன்றாம் இடத்­தைப்­பெற்று வெண்­கலப் பதக்கம் வென்­றமை அனை­வரும் அறிந்­ததே.

67502674_2250925264956819_88489950835806

  சீனாவின் ஹேர்பின் நகரில் கடந்த 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடை­பெற்ற இப்­போட்­டியில்  கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற  ஆண்­க­ளுக்­கான 60 கிலோ எடைப் பிரி­விலும், 23 வய­துக்­குட்­பட்ட கனிஷ்ட சம்­பி­யன்ஷிப் போட்டிப் பிரி­விலும் கள­மி­றங்­கிய ராஜ்­குமார், பலத்த போட்­டிக்கு மத்­தியில் மூன்­றா­வது இடத்தைப் பெற்று இலங்­கைக்­கான முத­லா­வது பதக்­கத்தைப் பெற்றுக் கொடுத்தார். இப்­போட்­டியில் 30 நாடு­க­ளைச் சேர்ந்த வீரர்கள் பங்­கு­பற்­றி­யி­ருந்­தமையும் குறிப்­பி­டத்­தக்­கது. 

_____.jpg

இந்­நி­லையில் வெற்றி பதக்­கத்­துடன் நாடு திரும்­பிய ராஜ்­கு­மா­ருக்கு விமான நிலை­யத்­திலோ அல்­லது விளை­யாட்டு அமைச்­சிலோ உரிய வர­வேற்பு வழங்­கப்­ப­ட­வில்லை என விசனம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மட்­டு­மன்றி விளை­யாட்டு அமைச்சில் அவ­ருக்கு சாதா­ரண ஒரு தேநீர் கோப்­பையை பரி­ச­ளித்­தமை தமிழ் மக்­க­ளி­டையே கடும் விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

சிறுபான்மை இனத்தவர் என்பதாலா ராஜ்குமாருக்கு இந்த அநீதி என பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. 

https://www.virakesari.lk/article/61899

  • தொடங்கியவர்

"சிறுபான்மை இனத்தவர் என்பதாலா ராஜ்குமாருக்கு இந்த அநீதி என பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. "

இவர் மட்டும் ஒரு சிங்களவராக இல்லை முத்தையா முரளீதன் போன்று, "நாம் தமிழன் இல்லை" என கூறி இருந்தால் சிங்களம் தலையில் வைத்து ஆடி இருக்கும். விஜய் சேதுபதி ஒருநாள் கொலிவூட்டில் படமும் இவரைவைத்து எடுத்திருக்கும். 

"உதவி செய்தால் நிச்சயம் உலகிலும் சாதித்து காட்டுவேன் – ஆணழகன் ராஜ்குமார்"

இலங்கை சட்டங்களுக்கு அமைய இவர் தனக்கு உலகளாவிய ரீதியில் நிதி கேட்க வேண்டும். உதவிகள் கிட்டும். வெற்றிகள் குவியும்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.