Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக ஊழல் நாடுகள் பட்டியல்

Featured Replies

இந்தியாவில் மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அதுபோல் பல மாநிலங்களில் எந்த மாநிலக் கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், அந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் ஒரே குற்றச்சாட்டு ஊழல் என்பதுதான். அப்படிப்பட்ட ஊழல், இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கக்கூடிய ஒன்றாகிவிட்டது.

அந்த வகையில், 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசுசாரா அமைப்பு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஒரு நாட்டின் நிர்வாக வெளிப்படைத்தன்மை, அந்த நாட்டில் லஞ்சம், ஊழல் மற்றும் நடைபெறும் முறைகேடுகள் போன்றவற்றைக் காரணிகளாகக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆய்வின் மதிப்பீடுகளை வைத்து ஊழல் அதிகம் உள்ள நாடுகளை அந்த அமைப்பு பட்டியலாக வெளியிடுகிறது.

மேற்கொள்ளப்படும் ஆய்வின் அடிப்படையில் 100 மதிப்பெண்ணைப் பெறும் நாடு ஊழலற்ற நாடு என்றும், மதிப்பெண் எதுவும் பெறாமல் இருக்கும் நாடு ஊழல் அதிகமுள்ள நாடு என்றும் வரிசைப்படுத்தப்படுகின்றன. 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், உலக நாடுகளின் ஊழல்கள் தரவரிசைப் பட்டியலை இந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது.

88 மதிப்பெண்ணைப் பெற்று டென்மார்க் மிகவும் ஊழல் குறைந்த நாடு என்ற பெருமையுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 87 மதிப்பெண்ணைப் பெற்றுள்ள நியூசிலாந்து இரண்டாவது இடத்தையும், தலா 85 மதிப்பெண்ணுடன் பின்லாந்து, சிங்கப்பூர், ஸ்வீடன் ஆகிய நாடுகள் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

கனடா ஒன்பதாவது இடத்திலும், அமெரிக்கா 22-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான், இந்தப் பட்டியலில் 117-வது இடத்தைப் பிடித்துள்ளது. மற்றோர் அண்டை நாடான சீனா, இந்தியாவைவிடப் பின்தங்கி ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலில் 87-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. வெறும் 10 மதிப்பெண்ணை மட்டுமே பெற்ற சோமாலியா, கடைசி இடத்தில் உள்ளது.

அதன்படி, இந்தியாவைப் பொறுத்தவரை 2016-ம் ஆண்டில் 40 மதிப்பெண்ணைப் பெற்று 79-வது இடத்திலும், 2017-ல் அதே 40 மதிப்பெண்ணைப் பெற்றிருந்தபோதிலும், 81-வது இடத்தைப் பிடித்து, பின்தங்கியது. தற்போது 2018-ம் ஆண்டு 41 மதிப்பெண்ணுடன் ஊழல்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா 78-வது இடத்தைப் பெற்றுள்ளது.

vikatan%2F2019-07%2F9b4400c8-7d79-4f9f-9ec9-6d07c53e7602%2Fcorruption__Info_Final.jpg?w=200&auto=format%2Ccompress

மொத்தம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 180 நாடுகளில், 20 நாடுகள் ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருப்பதாகவும், அதே நேரத்தில் 16 நாடுகள் ஊழல்களில் தொடர்ந்து திளைத்துக்கொண்டிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எந்த ஒரு நாடும் முழு அளவிலான மதிப்பெண்ணைப் பெறாமல் இருக்கக் காரணம், அந்த நாட்டில் ஊழலும், முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றாலும் வெளிநாடுகளில் தொழில் செய்யும் அந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. அரசு எந்திரங்கள் அனைத்துமே ஊழலில் திளைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இந்தியா' என்ற நிறுவனம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடத்திய ஆய்வின்படி, தமிழகத்தில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ லஞ்சம் அல்லது நன்கொடை கொடுத்தே தங்களின் வேலைகளை முடித்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

பத்திரப்பதிவு துறையில் 44 சதவிகிதம், காவல் துறையில் 17 சதவிகிதம், உள்ளாட்சி அமைப்புகளில் 15 சதவிகிதம் மற்றும் மின்வாரியம், போக்குவரத்து, வருவாய்த் துறை போன்ற துறைகளில் 25 சதவிகிதம் அளவுக்கு லஞ்சம் புழக்கத்தில் உள்ளது என அந்த ஆய்வு தெரிவிக்கிறது

வெளிப்படையான அரசு நிர்வாகம் இருந்தால் மட்டுமே, ஊழலற்ற ஒரு நாட்டைக் கட்டமைக்க முடியும்.

அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளால் மட்டுமே சாத்தியம் என்பதுடன் குடிமக்கள் அனைவருக்கும் அதுபோன்ற ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் பெரும் பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

https://www.vikatan.com/government-and-politics/corruption/do-you-know-where-india-is-in-the-list-of-world-corrupted-countries

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில்... செலவழித்த பணத்தை,  பதவிக்கு வந்தவுடன்.. ஊழல் செய்து சம்பாதிக்கின்றார்கள்.
அதிலும்... இந்தியா போன்ற ஆசிய நாடுகளில், பல கிரிமினல் குற்றம் செய்தவர்களே அரசியல்வாதிகளாக, கட்சிகளால்  தெரிவு செய்யப் படுவது கவலையான விடயம்.

  • தொடங்கியவர்
15 hours ago, தமிழ் சிறி said:

தேர்தலில்... செலவழித்த பணத்தை,  பதவிக்கு வந்தவுடன்.. ஊழல் செய்து சம்பாதிக்கின்றார்கள்.
அதிலும்... இந்தியா போன்ற ஆசிய நாடுகளில், பல கிரிமினல் குற்றம் செய்தவர்களே அரசியல்வாதிகளாக, கட்சிகளால்  தெரிவு செய்யப் படுவது கவலையான விடயம்.

உண்மை. ஆனால், வாக்களிக்கும் மக்கள் தான் விழிப்பாக இருக்கவேண்டும்.


இதைத்தான் ஒபாமாவும் செய்தார், சொன்னார்.

இன்று சீமான் அவர்களும் சொல்லுகிறார். காசையும் வேண்டி விட்டு அரசியல் வாதிகளையும் குறை செயல்வது சரியாக தெரியவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.