Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்!

Featured Replies

2 minutes ago, கிருபன் said:

எனக்கு கண்ட கண்ட புராணங்களை வாசித்து மூளையைப் பழுதாக்க விருப்பமில்லை😂🤣

வேத வியாசர் எழுதிய 18 புராணங்களில் ஒன்று தான் பத்ம புராணம்.

அதில் வரும் அசோக சுந்தரி பற்றிய பகுதியை சுட்டிக்காட்டியே அச்செய்தி பகிரப்பட்டிருந்தது.

எனவே பத்மபுராணத்தில் உள்ளது என்றே நினைக்கிறேன்.

  • Replies 80
  • Views 7.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Lara said:

வேத வியாசர் எழுதிய 18 புராணங்களில் ஒன்று தான் பத்ம புராணம்.

 வேத வியாசர் என்று ஒருவர் இருந்திருக்கவில்லை.

வியாசர் என்றால் தொகுப்பாளன் என்று பொருள். மகா பாரதத்தையும் வியாசர்தானே எழுதினார். அதில் அவரும் ஒரு பாத்திரமாக வருகின்றார். 

ஆதி காலத்தில் சூதர்களின் பாடல்களினூடாக கதைகள், புராணங்கள் தலைமுறை தலைமுறையாகப் பரவின. யாராவது ஒரு சூதன் கிடைக்கும் வெகுமதிக்கும், கள்ளுக்கும் அசோக சுந்தரியைப் பற்றிப் பாடியிருப்பான். அவனின் கற்பனையில் உதித்ததை பின்னர் வந்த வியாசன் ஒருவன் தொகுத்திருப்பான்.  இப்படியே நூறாண்டுகள் கழிய தெய்வங்களாகி இருப்பர். 

8 minutes ago, கிருபன் said:

வேத வியாசர் என்று ஒருவர் இருந்திருக்கவில்லை.

வியாசர் என்றால் தொகுப்பாளன் என்று பொருள். மகா பாரதத்தையும் வியாசர்தானே எழுதினார். அதில் அவரும் ஒரு பாத்திரமாக வருகின்றார். 

வேதங்களை தொகுத்து வழங்கியதால் “வேத வியாசர்” என்ற பெயரும் அவருக்கு உண்டு. 😊

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Lara said:

வேதங்களை தொகுத்து வழங்கியதால் “வேத வியாசர்” என்ற பெயரும் அவருக்கு உண்டு. 😊

அகத்தியர், வியாசர் என்ற பெயரில் பலர் இருந்திருக்கின்றார்கள். தனி ஓர் ஆளாக இருக்கவில்லை.

அனந்த சயனராக இருக்கும் அத்திவரதரையும், அம்சவல்லியாக இருக்கும் அசோக சுந்தரியையும் முழுமுதற் கடவுளராக ஏற்றுக்கொண்டால்தான் லாரா பாப்பாவிடம் இருந்து விடுதலை மோட்சம் கிடைக்கும் போலுள்ளது😜

52 minutes ago, கிருபன் said:

அகத்தியர், வியாசர் என்ற பெயரில் பலர் இருந்திருக்கின்றார்கள். தனி ஓர் ஆளாக இருக்கவில்லை.

அனந்த சயனராக இருக்கும் அத்திவரதரையும், அம்சவல்லியாக இருக்கும் அசோக சுந்தரியையும் முழுமுதற் கடவுளராக ஏற்றுக்கொண்டால்தான் லாரா பாப்பாவிடம் இருந்து விடுதலை மோட்சம் கிடைக்கும் போலுள்ளது😜

பராசரரின் மகனான வியாசருக்கு தான் “வேத வியாசர்” என்ற பெயரும். அந்த ஒருவரை பற்றி தான் நான் எழுதியுள்ளேன்.

அத்திவரதரையும் அசோகசுந்தரியையும் முழுமுதற்கடவுளாக ஏற்கும் படி நான் யாருக்கும் பிரச்சாரம் செய்யவில்லையே. 😀

  • கருத்துக்கள உறவுகள்

காவலருக்கு ஆப்ஸ்..☺️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

HC refuses to extend Athi Varadar darsianam

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.

ஆக. 16ஆம் தேதியுடன் நிறைவு!

அத்திவரதர் தரசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அத்திவரதர் சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து எடுத்து, 48 நாட்கள் தரிசனத்திற்கு வைக்க வேண்டும் என எந்த ஆகம விதிகளும் இல்லாத நிலையில், அத்திவரதர் தரிசன உற்சவத்தை நீட்டிக்க கோரியும், தரிசன கால அளவை நீட்டிக்காமல் இருப்பது பக்தர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதி மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணை வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், 1703 ம் ஆண்டு கோவில் நிர்வாகிகள், குளத்தை சுத்தப்படுத்திய போது, அத்திவரதர் சிலை கண்டெடுக்கப்பட்டது. அதன்பின், 1937 ம் ஆண்டு சிலை எடுக்கப்பட்டு, 40 நாட்கள் பூஜை செய்யப்பட்டது. 42 ஆண்டுகளுக்கு பின், 1979ல் மீண்டும் சிலை எடுக்கப்பட்ட போது, 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், தரிசன நாட்கள் 40ல் இருந்து 48 ஆக அதிகரிக்கப்பட்டது.

தற்போது, ஒரு நாளைக்கு 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். எந்த ஒரு ஆகம விதியும் இல்லாத நிலையில், தரிசன நாட்களை நீட்டிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது.

அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, அரசு தரப்பில் பதில் மனுக்களை தாக்கல் செய்தார். அதில் கோவில் ஆகம விதி, நடைமுறைப்படி 48 நாட்களுக்கு பின் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறது. அத்திவரதர் தரசனத்தை மேலும் நீட்டிக்க அரசை மனுதாரர்கள் நிர்பந்திக்க முடியாது என அரசு தரப்பு வாதம் வைக்கப்பட்டது.

இதை ஏற்றக் கொண்ட நீதிபதிகள்,கோவில் மரபு, வழிபாட்டு நடைமுறைகளில் தலையிட முடியாது எனவும் கோவில் நிர்வாகமும், அரசும் தான் அத்திவரதர் தரிசன கால அளவு நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என கூறி வழக்கு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/hc-refuses-to-extend-athi-varadar-darsianam-360273.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆயர்பாடி  முதல் எடப்பாடி வரை..😊

நெஞ்சங்களையெல்லாம் அள்ளிக் கொண்டு,நீர்மஞ்சத்தில் நித்திரை செய்வீராக ! அனந்தசரசை 48 நாள் கடைந்ததற்கே நாடு தாங்கவில்லையே.பாற்கடலை மீண்டும் கடைந்தால் ?

குளத்தை கடைந்ததால் நீ வெளி வந்தாய் குளம் கடையப்பட்ட அதே நேரத்தில் மனித மனங்களும் கடையப்பட்டு ஆழத்தில் இருந்த பக்தியும் வெளிப்பட்டது வேரறுப்பேன் என்று வெறுத்ததவனும் வந்தான். கோட்பாடில்லா கொடியவரும் வந்தனர். பேட்டை தாதாவும் வந்தான்.தள்ளாடும் தாத்தாவும் வந்தார். கலைத்துறையும் வந்தது. ரகளை துறையும் வந்தது.சுக ஜனனமும் உன் சந்நிதியில் நிகழ்ந்தது.மரணமும் உன் எல்லையில் நடந்தது..

முதல் தீர்த்தகாரரும், டாஸ்மாக் தீர்ததக்காரரும் ஒரே வரிசையில் நின்றனர்.அத்தி அத்தி என்று உலகம் முழுவதும் இத்திக்கில் திரும்பி நோக்க வைத்துவிட்டு கண் வளர இதோ புறப்பட்டு விட்டாய் ! உன்னை கண்டவர் குதூகலிக்க காணாதவர் கலங்கி நிற்கின்றனர். தண்ணீரின் அடியில் இருந்து நீ அன்றாடம் அவர்களை நோக்க போகின்றாய் என்பதை அறியாதவரே கலங்குவர்..

மவுரியம், குப்தம், சதவாகனம், பல்லவம்,வாதாபி,சோழம், பாண்டியம், சேரம்,சாளுக்கியம், கங்கம், ஹோயசலம், முகலாயம்,கோல்கொண்டா, விஜயநகரம், ஆங்கில பேரரசு என்று ஆயர் பாடி காலம் முதல் எடப்பாடி காலம் வரை அனைத்தையும் பார்த்து விட்டாய்,மாற்றங்கள் அனைத்தையும் சந்தித்து விட்டு இன்று காஷ்மீர் மாற்றத்தையும் செய்து விட்டு, மீண்டும் நீரடியில் சென்று புது கணக்கை துவக்க போகிறாய் சென்று வா அத்திவரதா !

பிழைத்து கிடக்க மாட்டேன் என்பது தெரிந்திருந்தும் சம்பிரதாய வார்த்தையை கூறுகிறேன். பிழைத்து கிடந்தால் 2059-இல் சந்திப்போம்...!

https://tamil.oneindia.com/news/kancheepuram/here-is-a-poem-for-athivaradhar-360349.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

24 நாà®à¯à®à®³à¯ நினà¯à®± à®à¯à®²à®®à¯

16 நாகங்கள் காவல் காக்க.. அனந்தசரஸ் குளத்துக்கு செல்கிறார் அத்திவரதர்..

2059-இல் சந்திப்போமா?

காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனம் முடிவடைந்ததால் இன்று அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறார்.

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் பள்ளிக் கொண்டுள்ளார். இவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சியளிக்கிறார்.

அந்த வகையில் கடைசியாக 1979-ஆம் ஆண்டு காட்சியளித்த அவர் 40 ஆண்டுகள் கழித்து இந்த 2019-இல் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் காட்சியளித்து வந்தார். மொத்தம் 48 நாட்கள் காட்சிளித்தார்.

இதில் 24 நாட்கள் சயன கோலத்திலும் மீதமுள்ள 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சியளித்து வந்தார். இவரை காண வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரண்டனர். கடந்த 48 நாட்களில் அத்திவரதரை 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தரிசனம் செய்தனர். இந்த 48 நாட்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தும், கூட்ட நெரிசலால் வீடு திரும்பியும் உள்ளனர்.

பà®à¯à®¤à®°à¯à®à®³à¯

இந்த நிலையில் இன்று முடிவடைய வேண்டிய அத்திவரதர் தரிசனம் கடும் கூட்டநெரிசல் காரணமாக நேற்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காத கூட்டம் அதிகரித்தது. மேலும் திருப்பதி போல் காத்திருப்பு அறைகளை உருவாக்கி அதில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு அனுப்பப்பட்டு வந்தனர்.

2059-à®à®®à¯ à®à®£à¯à®à¯ à®®à¯à®£à¯à®à¯à®®à¯

அத்திவரதரை மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யாததால் அவரது வைபவத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வழக்கு தொடர்ந்த நிலையில் அதற்கு அரசு மறுப்பு தெரிவித்ததால் நேற்றுடன் அத்திவரதர் தரிசனம் முடிவடைந்துவிட்டது. இத்தோடு 2059-ஆம் ஆண்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அத்திவரதரை மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யாததால் அவரது வைபவத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வழக்கு தொடர்ந்த நிலையில் அதற்கு அரசு மறுப்பு தெரிவித்ததால் நேற்றுடன் அத்திவரதர் தரிசனம் முடிவடைந்துவிட்டது. இத்தோடு 2059-ஆம் ஆண்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

à®à®©à®¨à¯à®¤à®à®°à®¸à¯ à®à¯à®³à®®à¯

இன்று இரவு 10 மணி முதல் 11 மணிக்குள்ளாக அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று அதிகாலை அத்திவரதருக்கான பரிகார பூஜைகள் தொடங்கியுள்ளன. அந்த சிலை அடுத்த 40 ஆண்டுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தைலங்கள் பூசப்பட்டு குளத்தில் வைக்கப்பட்டு பின்னர் நீர் நிரப்பப்படும்.

5 தல௠நாà®à®à¯à®à®³à¯

அத்திவரதர் கட்டையால் ஆன கட்டிலில் சயன கோலத்தில் வைக்கப்பட்டு அவரது சிரசு பகுதியில் 5 தலை நாகத்தின் சிலை வைக்கப்படுகிறது. அவரை சுற்றி 16 ஐந்து தலை நாகங்கள் காவல் காப்பது போல் சிலைகள் வைக்கப்படும்.

Read more at: https://tamil.oneindia.com/news/kancheepuram/athivaradhar-is-to-be-kept-in-ananthasaras-pool-360347.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பà®à¯à®¤à®°à¯à®à®³à¯ à®à¯à®µà®¿à®¨à¯à®¤à®©à®°à¯

அத்தி வரதர் வைபவம்.. தரிசனம் செய்தது எத்தனை பேர், வசூலான காணிக்கை பணம் எவ்வளவு?

காஞ்சிபுரத்தில், அத்தி வரதர் வைபவம் நடைபெற்ற தினத்தில் எத்தனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்? எவ்வளவு காணிக்கை வசூலிக்கப்பட்டது? என்ற தகவலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ஜூலை 1ம் தேதி அத்தி வரதர் வைபவம் துவங்கியது. 40 ஆண்டுகளுக்கு பிறகு அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து வெளிப்பட்ட அத்திவரதர், ஜூலை 1 ஆம் தேதி முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள் பாலித்தார்.

à®à¯à®±à¯à®±à¯à®à¯à®à¯à®´à®²à¯ பணிà®à®³à¯

அத்தி வரதர் வைபவம் மொத்தம் 48 நாட்கள் நடைபெற்று, ஆகஸ்ட் 17ம் தேதி, சனிக்கிழமையான இன்று நிறைவு பெறுகிறது. மீண்டும் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்திற்குள் பள்ளி கொள்ள செல்கிறார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெருமாள் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று நிருபர்களிடம் கூறுகையில், அத்தி வரதர் வைபவம் சிறப்பாக நடைபெற உதவிய காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பà®à¯à®¤à®°à¯à®à®³à¯

மொத்தம் 1 கோடியே 7,500 பேர் இதுவரை அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். இதுவரை எண்ணப்பட்ட பட்ட அளவில், ரூ.7 கோடி அளவிற்கு காணிக்கை வசூலாகியுள்ளது.

பக்தர்களின் வருகை காரணமாக, காஞ்சிபுரம் நகரில் குப்பைகள் அதிகம் சேர்வது வழக்கமாக இருந்தது தினமும் சுமார் 25 டன் அளவு குப்பையை அகற்றும் பணி நடைபெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/more-than-one-crore-devotees-worship-athi-varadar-kanchipuram-collector/articlecontent-pf394646-360360.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

Bild

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 8 people, people smiling, text

Image may contain: 8 people, people smiling, text

Image may contain: 2 people, people standing

Image may contain: 8 people

Edited by தமிழ் சிறி

25 minutes ago, குமாரசாமி said:

Bild

Bild

நயன்தாரா தெலுங்கில் ஒரு படத்தில் சீதையாக நடித்திருந்தார். அதனால் சீதா தேவியே வந்து விட்டதாக நினைத்து விட்டார்களோ தெரியேல்லை. 😂

73be6bd6-2e73-485e-a04d-79bd1f10cd68_S_s

3DDF6C0C-A562-476A-AA14-2118A0841A30.jpg

Edited by Lara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சி: அத்திவரதர் தரிசனம்... ஊழல் பின்னணி?

அத்திவரதர் வைபவத்தில் ரூ.1,000 கோடி 'வேட்டை'... சுருட்டல் நடந்தது எப்படி?

ஒரு நாளைக்கு பாஸ் விநியோகத்தில் மட்டுமே சுமார் 25 கோடி ரூபாய்க்கும் குறையாமல் சம்பாதித்துள்ளனர் என்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர்.

athi varadar

athi varadar

அத்திவரதர் தரிசனம்... அப்பாவி பக்தர்களின் பக்தியைப் பயன்படுத்தி, பல்வேறு தரப்புகளிலும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்கிற விவரம் அறிந்தவர்கள் மூலம் கிடைத்த தகவல்கள்: https://bit.ly/2N9AWqt

"இரண்டாவது வாரத்திலிருந்துதான் கூட்டம் அதிகரித்தது. ஆனால், அதற்கேற்ற கழிவறை வசதியோ, குடிநீர் வசதியோகூட ஏற்படுத்தப்படவில்லை. இந்த வைபவத்துக்காக அரசு ஒதுக்கிய 29 கோடி ரூபாயில் மாவட்ட நிர்வாகம் என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. காஞ்சிபுரம் விடுதிகள் அனைத்தையும் கணக்கிட்டால், மொத்தம் 3,000 அறைகள் இருக்கின்றன. அறை வாடகை 10,000 ரூபாய்க்கு குறைவாக எங்குமே கிடைக்கவில்லை. மூன்று முன்னணி ஜவுளி நிறுவனங்கள்தான் வி.ஐ.பி பாஸ்களை ஆயிரக்கணக்கில் விற்றுத் தீர்த்தன. '10,000 ரூபாய்க்கு புடவை வாங்கினால், பாஸ் இலவசம்' என்ற மறைமுகச் சலுகையால், இந்த 47 நாளில் மட்டுமே 200 கோடிக்கும் குறையாமல் மூன்று நிறுவனங்களும் லாபம் பார்த்துவிட்டன. தனியார் நிறுவனங்களின்வசம் பாஸ் சென்றது எப்படி? 

இதுகுறித்து பலர் புகார் அளித்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு நாளைக்கு நான்கு லட்சத்துக்கும் குறையாமல் பக்தர்கள் வந்தனர். வி.ஐ.பி பாஸ் மூலம் மட்டுமே சுமார் 50,000 பேர் தரிசிக்கிறார்கள். இந்த பாஸ்கள், பெரும்பாலும் கள்ளச்சந்தையில் 8,000 ரூபாய்க்குக் குறையாமல் விற்கப்பட்டவை. கணக்குப்போட்டால், தொகை தலைசுற்ற வைக்கிறது.

அத்திவரதர் கழுத்தில் உள்ள மாலைக்கு 20,000 ரூபாய், போட்டோ எடுத்துக்கொள்ள 10,000 ரூபாய் என, எல்லாவற்றிலும் வசூல் வேட்டையாடியதாக குற்றச்சாட்டு

பொது தரிசன வழியைவிட்டால், '50 ரூபாய் சிறப்புக் கட்டண டிக்கெட்' என்று முதலில் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. பிறகு விரைவு தரிசன டிக்கெட்டாக மாற்றி, முதலில் 500 பேருக்கும், இறுதியாக 2,000 பேர் வரையிலும் வழங்கினர். நான்கு லட்சம் பேர் கூடும் வைபவத்துக்கு, வெறும் 2,000 பேருக்கு மட்டும் விரைவு தரிசன டிக்கெட் வரைமுறை ஏன் நிர்ணயிக்கப்பட்டது? ஆன்லைன் மூலமாகப் பதியப்படும் இந்த டிக்கெட்டுகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. பொதுதரிசனத்தைவிட்டால், கள்ளச்சந்தையில்தான் பாஸ் வாங்க வேண்டும் என்கிற நிலைமையை, மாவட்ட நிர்வாகம் வேண்டுமென்றே உருவாக்கியது. இதுதான் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு அஸ்திவாரம்.

ஒரு நாளைக்கு பாஸ் விநியோகத்தில் மட்டுமே சுமார் 25 கோடி ரூபாய்க்கும் குறையாமல் சம்பாதித்துள்ளனர் என்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர். மொத்தம் 47 நாள்களையும் கணக்கிட்டால், 1,175 கோடி ரூபாய் பாஸ் விற்றதிலேயே வருமானம் ஈட்டியுள்ளனர் என்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்ட தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரே பணி, வி.ஐ.பி-களை கவனிப்பதுதான். இவர்கள்தான் கொள்ளையடிக்கிறார்கள் என்றால், கோயிலுக்கு உள்ளே சில பட்டர்கள், இந்து அறநிலையத் துறை அதிகாரிகளின் ஆட்டம் இன்னும் அதிகம். அத்திவரதருக்கு முன்னே அமரவைப்பதற்கு 50,000 ரூபாய், நிற்பதற்கு 30,000 ரூபாய், அத்திவரதர் கழுத்தில் உள்ள மாலைக்கு 20,000 ரூபாய், போட்டோ எடுத்துக்கொள்ள 10,000 ரூபாய் என, எல்லாவற்றிலும் வசூல் வேட்டையாடியதாக குற்றச்சாட்டு உள்ளது. 

athi varadar
 
athi varadar

"பக்தர்கள் செல்லும் வரிசையில், போதிய அளவில் உண்டியல்கள் வைக்கப்படவில்லை. இதனால், காணிக்கையை பட்டர்கள் வைத்திருக்கும் தட்டில் மட்டுமே செலுத்தும்படி பார்த்துக் கொண்டார்கள். காணிக்கையாக 100 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரையில் தாராளமாகச் செலுத்தப்பட்டது. பல பக்தர்கள், நகைகளை வழங்கினர். அவையெல்லாம் பெருமாளுக்குச் சென்றனவா அல்லது பட்டர்களும் அதிகாரிகளும் பங்கு பிரித்துக்கொண்டார்களா?" என்று பொங்கினார் ஒரு நகரவாசி. இதுகுறித்தெல்லாம் விளக்கமறிய, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னய்யாவை தொடர்புகொண்டோம். "சார், அத்திவரதர் வைபவத்தில் பிஸியாக இருப்பதால், இப்போது பேச முடியாது'' என்று அவரது அலுவலகத்திலிருந்து பதில் வந்தது.

www.vikadan.com

உழைக்கும்  மக்கள்  பணத்தை கோடி கோடியாக கொள்ளையடித்துள்ளார்கள். அந்த கொள்ளையர்களின் மூலதனம் மக்களின்  முட்டாள்த்தனம் என்பதே  நான் வைத்த முதல் கருத்து இப்போது நிரூபணம் ஆகியுள்ளது.   

Edited by tulpen

5 hours ago, tulpen said:

உழைக்கும்  மக்கள்  பணத்தை கோடி கோடியாக கொள்ளையடித்துள்ளார்கள். அந்த கொள்ளையர்களின் மூலதனம் மக்களின்  முட்டாள்த்தனம் என்பதே  நான் வைத்த முதல் கருத்து இப்போது நிரூபணம் ஆகியுள்ளது.   

இந்தியாவில் பல கோவில்கள் சுற்றுலாத்தலமாக இருப்பன. சாதாரண நாட்களில் செல்லும் போதே விரைவு தரிசனத்துக்கு 50 (இந்திய) ரூபா என போட்டிருப்பார்கள். விரும்பியவர்கள் அவ்வாறு சென்று தரிசிப்பார்கள். அத்திவரதர் 40 வருடத்துக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்படுவதால் அதற்கு மக்கள் கூட்டமாக கூடுவார்கள் என்பது பலருக்கும் தெரியும் என்பதால் அதை business மயமாக கையாள தான் பார்ப்பார்கள். பலருக்கு அது தெரிந்தே இருக்கும்.

கோவிலுக்கு செல்லும் அனைவரும் பணம் கொடுத்திருக்க/உண்டியலில் போட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் கொடுத்தால் அது அவர்கள் விருப்பம்.

எனவே கோவிலுக்கு செல்வோரை முட்டாள் கூட்டம் என்று மட்டம் தட்டி நீங்கள் எழுதியிருக்க தேவையில்லை. 

5 hours ago, tulpen said:

பொது தரிசன வழியைவிட்டால், '50 ரூபாய் சிறப்புக் கட்டண டிக்கெட்' என்று முதலில் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. பிறகு விரைவு தரிசன டிக்கெட்டாக மாற்றி, முதலில் 500 பேருக்கும், இறுதியாக 2,000 பேர் வரையிலும் வழங்கினர். நான்கு லட்சம் பேர் கூடும் வைபவத்துக்கு, வெறும் 2,000 பேருக்கு மட்டும் விரைவு தரிசன டிக்கெட் வரைமுறை ஏன் நிர்ணயிக்கப்பட்டது? ஆன்லைன் மூலமாகப் பதியப்படும் இந்த டிக்கெட்டுகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. பொதுதரிசனத்தைவிட்டால், கள்ளச்சந்தையில்தான் பாஸ் வாங்க வேண்டும் என்கிற நிலைமையை, மாவட்ட நிர்வாகம் வேண்டுமென்றே உருவாக்கியது. இதுதான் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு அஸ்திவாரம்.

இது மாவட்ட நிர்வாகத்தில் பிழை.

இந்தியாவில் கிரிக்கட் போட்டிகளை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுகளும் இப்படி கள்ளச்சந்தையில் விற்கப்படுவதுண்டு.

Edited by Lara

49 minutes ago, Lara said:

இந்தியாவில் பல கோவில்கள் சுற்றுலாத்தலமாக இருப்பன. சாதாரண நாட்களில் செல்லும் போதே விரைவு தரிசனத்துக்கு 50 (இந்திய) ரூபா என போட்டிருப்பார்கள். விரும்பியவர்கள் அவ்வாறு சென்று தரிசிப்பார்கள். அத்திவரதர் 40 வருடத்துக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்படுவதால் அதற்கு மக்கள் கூட்டமாக கூடுவார்கள் என்பது பலருக்கும் தெரியும் என்பதால் அதை business மயமாக கையாள தான் பார்ப்பார்கள். பலருக்கு அது தெரிந்தே இருக்கும்.

கோவிலுக்கு செல்லும் அனைவரும் பணம் கொடுத்திருக்க/உண்டியலில் போட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் கொடுத்தால் அது அவர்கள் விருப்பம்.

எனவே கோவிலுக்கு செல்வோரை முட்டாள் கூட்டம் என்று மட்டம் தட்டி நீங்கள் எழுதியிருக்க தேவையில்லை. 

இது மாவட்ட நிர்வாகத்தில் பிழை.

இந்தியாவில் கிரிக்கட் போட்டிகளை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுகளும் இப்படி கள்ளச்சந்தையில் விற்கப்படுவதுண்டு.

கடவுளை வைத்து பிசினஸ் பண்ணுகிறார்கள் என்று நீங்களே குறிப்பிடுகின்றீர்கள்.  மக்கள் தாங்களாக பணம் கொடுத்தால் அது அவர்கள் விருப்பம் என்றும் கூறுகின்றீர்கள். அப்படி  என்றால் ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதும் அவர்கள் விருப்பம்  என்று அங்கீகரிக்க வேண்டியதுதானே. 

21 minutes ago, tulpen said:

கடவுளை வைத்து பிசினஸ் பண்ணுகிறார்கள் என்று நீங்களே குறிப்பிடுகின்றீர்கள்.  மக்கள் தாங்களாக பணம் கொடுத்தால் அது அவர்கள் விருப்பம் என்றும் கூறுகின்றீர்கள். அப்படி  என்றால் ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதும் அவர்கள் விருப்பம்  என்று அங்கீகரிக்க வேண்டியதுதானே. 

கோவிலுக்கு செல்வோர் பணம் கொடுக்க/உண்டியலில் போட வேண்டிய கட்டாயமில்லை. அவர்கள் விரும்பினால் அதை செய்யலாம் விரும்பாவிட்டால் விடலாம். ஒருவர் பணம் போடுவதால் மற்றவரை அது பாதிக்கப்போவதில்லை. 

ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவது என்பது அரசியல் நிலை சார்ந்தது. அவ்வாறான தெரிவு ஏனையோரை அரசியல் சார்ந்து பாதிக்கும் என்பதால் அதற்கெதிராக பலர் குரல் கொடுப்பதுண்டு. நான் இதுவரை அதுபற்றி கருத்து ஏதும் எழுதியதில்லை.

Edited by Lara

6 minutes ago, Lara said:

கடவுளை வைத்து பிசினஸ் பண்ணும்போது அதற்காக உழைக்கும் மக்கள் கோடி கோடியாக கொடுப்பது அவர்களுக்கு  பாதிப்பு இல்லை என்று கூறும் அளவுக்கு இருக்கிறது உங்கள் பொருளாதார அறிவு. 

1 minute ago, tulpen said:

கடவுளை வைத்து பிசினஸ் பண்ணும்போது அதற்காக உழைக்கும் மக்கள் கோடி கோடியாக கொடுப்பது அவர்களுக்கு  பாதிப்பு இல்லை என்று கூறும் அளவுக்கு இருக்கிறது உங்கள் பொருளாதார அறிவு. 

நான் கூறியது ஒருவர் கொடுக்கும் பணம் இன்னொருவரை பாதிக்காது என்று. கொடுப்பது/விடுவது அவரவர் தெரிவு.

வெளிநாடுகளிலும் business நடப்பது பற்றி இத்திரியிலேயே எழுதியுள்ளேன். அதற்காக தேவாலயங்களுக்கு செல்லும் மக்களை முட்டாள் கூட்டம் என யாரும் கூறுவதில்லை.

46 minutes ago, Lara said:

நான் கூறியது ஒருவர் கொடுக்கும் பணம் இன்னொருவரை பாதிக்காது என்று. கொடுப்பது/விடுவது அவரவர் தெரிவு.

வெளிநாடுகளிலும் business நடப்பது பற்றி இத்திரியிலேயே எழுதியுள்ளேன். அதற்காக தேவாலயங்களுக்கு செல்லும் மக்களை முட்டாள் கூட்டம் என யாரும் கூறுவதில்லை.

உழைக்கும் மக்கள் பணத்தினை  தேவையில்லாமல் விரயமாக்குவது மற்றவரை பாதிக்காது என்று சொல்வது அறிவீனம்.. எனது வீட்டில் தண்ணீரை வீணாக்குவது எப்படி சமூகத்தை பாதிக்கிறதோ அதை போல தான் இதுவும் எனபது பொருளாதாத்தில்  பால பாடம். 

20 minutes ago, tulpen said:

உழைக்கும் மக்கள் பணத்தினை  தேவையில்லாமல் விரயமாக்குவது மற்றவரை பாதிக்காது என்று சொல்வது அறிவீனம்.. எனது வீட்டில் தண்ணீரை வீணாக்குவது எப்படி சமூகத்தை பாதிக்கிறதோ அதை போல தான் இதுவும் எனபது பொருளாதாத்தில்  பால பாடம். 

பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதுடன் ஒப்பிட்டு கேட்ட உங்களுக்கு இரண்டுக்குமான வித்தியாசத்தை விளக்கினேன். இப்ப தனியே இதைப்பிடித்துக்கொண்டு வாதாடுகிறீர்கள். 

கோவிலுக்கோ தேவாலயத்துக்கோ பணம் கொடுக்குமாறு நான் கூறவில்லையே.

மக்கள் எத்தனையோ விதத்தில் பணத்தை தேவையில்லாமல் விரயமாக்குகிறார்கள். நீங்கள் கோவில்களுடன் சுற்றி திரிகிறீர்கள்.

Edited by Lara

3 minutes ago, Lara said:

பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதுடன் ஒப்பிட்டு கேட்ட உங்களுக்கு இரண்டுக்குமான வித்தியாசத்தை விளக்கினேன். இப்ப தனியே இதைப்பிடித்துக்கொண்டு வாதாடுகிறீர்கள். 

கோவிலுக்கோ தேவாலயத்துக்கோ பணம் கொடுக்குமாறு நான் கூறவில்லையே.

மக்கள் எத்தனையோ விதத்தில் பணத்தை தேவையில்லாமல் விரயமாக்குகிறார்கள். நீங்கள் கோவில்களுடன் சுற்றி திரிகிறீர்கள்.

பணம் கொடுப்பது அவ‍ரவர் விருப்பம். அதனால் மற்றவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற உங்கள் கூற்றுக்கு தான் பதில் கொடுத்தேன்.  உழைக்கும் மக்கள் எப்படி பணத்தை விரயமாக்கினாலும்  அது அவர்களையும் அவர,களை சார்ந்தவர்களையும் பாதிக்கும்.  அதனால் தான் கடவுளை வைத்து பிசினஸ் புரிபவர்களிடம் ஏமாறாதீர்கள்.  என்று உங்களை போல இந்து சமய பெரியோர்கள் மக்களுக்கு அறிவுரை செய்ய வேண்டும். 

பணம் கொடுப்பது அவரவர் விருப்பம். கோவிலுக்கு கொடுக்காவிட்டால் அதை தூக்கி மற்றவர்களுக்கு யாரும் கொடுக்கப்போவதில்லை. 

கோவிலுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு அது தேவையில்லாத செலவாக இருக்காது. எப்போதாவது இருந்திட்டு தான் கோவிலுக்கு போகிறார்கள். அதற்கு இவ்வளவு கதைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

தேவாலயங்களில் காசு போட்டு விட்டு மெழுகு திரி கொழுத்தும் முறையை நிறுத்தி விட்டு வாருங்கள். அதன் பின் இங்கு பாடமெடுக்கலாம்.

8 minutes ago, Lara said:

பணம் கொடுப்பது அவரவர் விருப்பம். கோவிலுக்கு கொடுக்காவிட்டால் அதை தூக்கி மற்றவர்களுக்கு யாரும் கொடுக்கப்போவதில்லை. (மற்றவர்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும் )

கோவிலுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு அது தேவையில்லாத செலவாக இருக்காது. எப்போதாவது இருந்திட்டு தான் கோவிலுக்கு போகிறார்கள். அதற்கு இவ்வளவு கதைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

தேவாலயங்களில் காசு போட்டு விட்டு மெழுகு திரி கொழுத்தும் முறையை நிறுத்தி விட்டு வாருங்கள். அதன் பின் இங்கு பாடமெடுக்கலாம்.

சாதாரண உழைப்பாளிகள் தாம் உழைத்த பணத்தை  தாம் அனுபவித்து வாழ வேண்டும் என்பதையே அனைவரும் விரும்புவர்.  கோவிலுக்கு கொடுக்காமல் விட்டால் அதை அவ‍ர்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஏன் எதிர் பார்க்கிறீர்கள். அவர்கள் உழைத்த பணத்தை அவர்கள் அனுபவத்து விட்டு போகட்டுமே.  பாமர மக்களை அத்தி வரதர் என்ற  பொம்மையை காட்டி ஏமாற்றிய திருட்டு பாப்பனக் கூட்டத்திற்காக வாதாடுறின்றீர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.