Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்லூரானின் வருடாந்த உற்சவம் 6ஆம் திகதி ஆரம்பம்

Featured Replies

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம், செவ்வாய்க்கிழமை (6) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

உற்சவகால முன்னாயத்தமாக, திங்கட்கிழமை (5) மதியத்திலிருந்து 01 ஆம் திகதி நள்ளிரவு வரை, வீதி தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக, யாழ்ப்பாண மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அறிவுறுத்தியுள்ளார்.

வீதித்தடையின் போது, வாகனப் போக்குவரத்துக்கான மாற்று பாதை ஒழுங்குகள், கடந்த ஆண்டுகளைப் போல இம்முறையும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், உற்சவ காலத்தில், சாதாரண காவடிகள், பிரதான வீதிகள் ஊடாக உட்செல்ல அனுமதிக்கப்படும் என்றும் தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள் என்பன, பருத்தித்துறை வீதியூடாக மாத்திரமே உட்செல்ல அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு என்பது முற்றிலும் பாதுகாப்புப் பிரிவோடு சம்பந்தப்பட்டமையால், பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப அடியார்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்கி நல்லூரானின் வருடாந்த உற்சவத்தை சீராகவும் சிறப்பாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/நல்லூரானின்-வருடாந்த-உற்சவம்-6ஆம்-திகதி-ஆரம்பம்/71-236228

  • தொடங்கியவர்
On 8/2/2019 at 3:50 PM, ampanai said:

தேசிய பாதுகாப்பு என்பது முற்றிலும் பாதுகாப்புப் பிரிவோடு சம்பந்தப்பட்டமையால், பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப அடியார்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்கி நல்லூரானின் வருடாந்த உற்சவத்தை சீராகவும் சிறப்பாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

DSC_5494.jpg

Tight security for religious and cultural festivals

Thousands of military and police personnel have been deployed to provide tight security for a series of religious and cultural festivals being held this month.

The move came as the United States embassy issued a fresh security warning to US citizens to take precautions.

An intelligence source said yesterday that the security measures were essentially precautionary and not based on inputs pointing to specific plans or activity.

http://www.sundaytimes.lk/190804/news/tight-security-for-religious-and-cultural-festivals-361483.html

 

  • கருத்துக்கள உறவுகள்

DSC_5357.jpg

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

இதற்கமைய, யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு காலை 9.30 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.

அங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

46720336_Unknown-640x480.jpg

46720416_Unknown-640x480.jpg

46720592_Unknown-640x480.jpg

 

46720720_Unknown-640x480.jpg

46720992_Unknown-640x480.jpg

67601803_3465803746778616_5106919644854222848_n-640x480.jpg

67679502_379234582766730_6730537803819515904_n-640x480.jpg

DSC_5264-720x480.jpg

DSC_5280-720x480.jpg

DSC_5295-720x480.jpg

DSC_5317-720x480.jpg

DSC_5352-720x480.jpg

http://athavannews.com/நல்லூர்-கந்தசுவாமி-ஆலயத்/

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டம் அலைமோது என்று பார்த்தால் பொலிஸ்காரங்கள் செக்கிங் பொயின்ட் தான் அதிகமாக இருக்கும் போல் தெரிகிறது 

  • தொடங்கியவர்

109 நாய்கள் வேட்டை

நல்லூர் கோவில் சூழலில், கடந்த 3 நாள்களில், 109 கட்டாக்காலி நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.

image_8b6258b839.jpg

இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்களுக்கு, ஊசி ஏற்றப்பட்டப் பின்னர், இயக்கச்சியில் உள்ள நாய்கள் சரணாலயத்துக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும், அவர்கள் கூறினர்.

நல்லூர் கோவிலின் வருடாந்த திருவிழா, நாளை (06) ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் கோவில் சூழல் உள்ளிட்ட பகுதிகளில், யாழ்ப்பாணம் மாநகர சபையால் சனிக்கிழமை (03) கட்டாகாலி நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கை ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/109-நாய்கள்-வேட்டை/71-236311

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.